Wednesday, May 21, 2025

ELEVEN- லெவன் (2025) -தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் )

         

               

சுந்தர் சி இடம் அஸிஸ்டெண்ட் டைரக்டர் ஆக  கலகலப்பு (2018) , வந்தா ராஜாவாத்தான் வருவேன் ( 2019), ஆக்சன் (2019) ஆகிய படங்களில் பணி புரிந்த லோகேஷ்  அஜீஸ்  அறிமுக இயக்குனர்   ஆக இயக்கும்  முதல் படம் இது . தெலுங்கு , தமிழ் ஆகிய  இரு மொழிகளிலும்  வெளியாகி உள்ளது .திரைக்கதையை நம்பி களம் இறங்கி இருக்கும் இவர்  பரபரப்பான  க்ரைம் த்ரில்லர் படத்தைத்தந்திருக்கிறார் என்று  சொல்லலாம் 



ஷங்கர் இயக்கிய ஜீன்ஸ்  படம் தான்   தமிழ் சினிமா வில்  அதிக இரட்டையர்கள்  கதாப்பாத்திரங்களாக  வந்த படம் .நாசர் ,பிரசாந்த் ,ஐஸ்வர்யா ராய் என மூன்று பேர்  ட்வின்ஸ் ஆக  வந்தார்கள் . ஆனால்  இந்தக்கதையில் 11  பேர்  ட்வின்ஸ் ஆக வந்து   ஜீன்ஸ்   சாதனையை   முறியடித்து இருக்கிறது 

ஸ்பாய்லர்  அலெர்ட்


சென்னையில்  அடுத்தடுத்து ஆறு  கொலைகள்  ஒரே பேட்டர்னில் நடக்கிறது . ஆனால்  எந்த வித  தடயமும் இல்லை , சி சி டி வி  காட்சிகளும்  இல்லை .வில்லன்  கொலை செய்ய இடத்தைத் தேர்வு செய்யும்போதே அங்கே இருக்கும்  சி சி டி வி  கேமராவை முடித்துக்கட்டி விட்டுத் தான் ஆளை முடிக்கிறான் .இந்தக்கேஸை  விசாரிக்கும்  போலீஸ் ஆபீசர்  ஒரு  விபத்தில்  சிக்கி  கோமா ஸ்டேஜுக்குப்போகிறார் .


 நாயகன்  அஸிஸ்டெண்ட்  கமிஷனர் ஆப் போலீஸ் . சிங்கிள் ஆக இருக்கும் சிங்கம் .அவரிடம்  இந்தக்கேஸ்   வருகிறது .இதற்குப்பின்   நடக்கும் சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை 


வில்லன்  உடன்  பிறந்த  தம்பி  இருவரும் டிவின்ஸ்.வில்லன்  சிறுவனாக இருக்கும்போதே செஸ் சாம்பியன் . படிப்பில் இருவரும் சுட்டி . வில்லனின் தம்பி  கொஞ்சம் மன நிலை பாதிக்கப்பட்டவன்  . இருட் டைக்கண்டால் அலறுவான். பள்ளியி ல் வில்லனும் அவன்  தம்பியும் படிக்கும் வகுப்பில்  இருவருமே  நல்ல மார்க் எடுப்பதும் , ஆசிரியர்களிடம்  நல்ல பெயர் எடுப்பதும் மற்ற மாணவர்கள், மாணவிகளுக்குப்பிடிக்கவில்லை  . அவர்கள்  ஒரு நாள்   விளையாட்டாக  வில்லனின்   தம்பியை  பிசிக்ஸ்  லேபிள்  வைத்து  லைட் டை  ஆப்   பண்ணி  இருட் டாக்கி  விளையாடுகிறார்கள் , விளையாட்டு வினை ஆகி  அவன்  இறக்கிறான் .15  வருடங்கள்   கழித்து  தன தம்பி யின்  சாவுக்குக்காரணமானவர்களைப்பழி வாங்குகிறான்  வில்லன் 



 வில்லன் எப்படி  போலீசிடம் பிடிபடுகிறான் என்பது க்ளைமாக்ஸ் 


நாயகன்  ஆக      நவீன் சந்திரா  சிறப்பான  நடிப்பு .  இறுகிய முகம் , கடு கடு பேச்சு  என  அந்த கேரக்டருக்கு   நியாயம்  செய்து இருக்கிறார் .நாயகி  ஆக ரேயா  ஹரி ,முகப்பொலிவும்  இல்லை , நடிப்புத்திறமையும் இல்லை . மெயின் கதைக்கு இவர் தேவையே இல்லை  என   யாரும் சொல்லிவிடக்கூடாது என க்ளைமாக்சில் இயக்குனர்  நாயகியைக்கோர்த்து விடும் ஐடியா செம 


நாயகனுக்கு உதவி  ஆக திலீபன் கச்சிதம் ஆக நடித்து  இருக்கிறார் .  ஆனால்  ஹேர் ஸ்டைலை போலீஸ் கட்டிங்க்   ஆக   மாற்றாமல்   இருப்பது   ஏனோ ? ஹையர் ஆபீசர் ஆக வரும் நாயகன் பக்கா போலீஸ்  கட்டிங்க் 


வில்லன் படிக்கும் ஸ்கூல் உரிமையாளர் ஆக  அபிராமி  சிறப்பான நடிப்பு .நான் உங்களை   அம்மா   என  அழைக்கலாமா?  என வில்லன்  கேட் கும்போது , முகத்தில் வரும் பூரிப்பு  செம 


டி இமானின்  இசையில்  3 பாடல் கள்  பரவாயில்லை ரகம் , பின்னணி   இசை  செம்ம  த்ரில்லிங்க் கார்த்திக்  அசோகனின் ஒளிப்பதிவு கச்சிதம் . குறிப்பாக  வில்லனின்  கருப்புக்கார் வரும்  போதெல்லாம் ஒலிக்கும் பிஜிஎம் உடன்   கேமராவும்   சேர்ந்து பயமுறுத்துகிறது 

. ஸ்ரீகாந்த்தின்  எடிட்டிங்கில்  படம்  131   நிமிடங்கள்   ஓடுகிறது . முதல்   பாதியில்    திரைக்கதை . இன்னமும் க்ரிஸ்ப் ஆக ட்ரிம்  பண்ணி இருக்கலாம் 


திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர்  அறிமுக இயக்குனர் லோகேஷ்  அஜீஸ்  அறிமுக இயக்குனர்


சபாஷ்  டைரக்டர்

1   நாயகி தான்   தயாரிப்பாளர்  என்றதும்  மெயின் கதைக்கு சம்பந்தமே இல்லாமல் ஒரு கேரக்டரை உருவாக்கி  அதை  புத்திசாலித்தனமாக  க்ளைமாக்சில் முக்கிய கேரக்டர்   ஆக வடிவமைத்த சாமர்த்தியம் 


2  வில்லன்  ஆட்களைக்கொலை செய்யும்போது  நேரடியாகத் தான் கொல்லாமல்   உடன்பிறப்பை  வைத்துக்கொலை   செய்யும் யுக்தி  அபாரம் 


3   கொலையாளி   இவர் தான்  என ஆடியன்ஸை  நம்ப வைத்து  பின் க்ளைமாக்சில் ஒரு டிவிஸ்ட் கொடுத்த விதம்  



  ரசித்த  வசனங்கள் 


1 நாம  எல்லாரும் பிளான் ஏ ,பிளான் பி என 2 திட் ட்ங்கள்  வைத்திருப்போம் ,   ஆனா  அவன்  பிளான் ஏ ,பிளான் பி , ,பிளான்  சி   என  3 திட் ட்ங்கள்  வைத்திருப்பான் ,கேம்  முடியும்போதுதான் அது நமக்குத் தெரி யும் 


 2  யானைக்கு வேணா   அடி சறுக்கலாம், ஆனா எனக்கு இல்லை 


3   ஒரு  பொண்ணு        தானா முன்   வந்து   தன  ஆசையை சொன்னா அவ தப்பானவ இல்லை 


4   லிப்ட்   கேட்டீங்க ? 


 நீங்கன்னு தெரியாம கே ட்டுடடேன் 



 நீங்கன்னு தெரிந்துதான்  வண்டியை நான் நிறுத்தினேன் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1    நாயகன்   அறிமுகக்காட் சி , நாயகியுடன்  ஹோட் டலில்  இருக்கும்   இடம்  ஆகிய   இரு   சமயங்களில்  இரு சண்டைக்காட் சிகள்   தேவையே இல்லை 


2  அபாரமான   பின் பாதி  திரைக்கதையுடன்  ஒப்பிடும்போது    முதல் பாதி   ரொம்ப ஸ்லோ 


3    30பேர்  இருக்கும் ரவுடி கேங்கைப்பிடிக்கப்போகும் நாயகன் போலீஸ் பட் டாளத்துடன் போகாமல்  ஒத்தைல எதுக்குப்போறார்? பைட் போடவா? 


4 கேஸை  முதலில் விசாரித்த  போலீஸ்  ஆபீசர்  வீ ட்டுக்குப்போய்  அவர்     என்ன  தகவல்  சேகரித்திருக்கிறார் என்பதை அறிந்து இருக்கலாம். ஹாஸ்ப்பிடலில் மனைவியிடம் பார்மாலிட்டியாக விசாரிப்பது  வேஸ்ட்  


5  கேசில்  முதல் பிடிமானம்   ஆக  வரும்   ஆள்  தன்னுடைய    ட்வின்ஸ்    பாதத்தி ல்   ஆ க்சிடெண்ட் ஆகி     தழும்பு  இருப்பதால்   தன்னுடைய  காலில்      கத்தியால்  கிழித்து  காயம்    உண்டாக்குவது எதுக்கு ?   முகம் என்றால்   அடையாளம்  ஒரே மாதிரி  இருக்கணும் என்பதில்  ஓகே .காலில்  தானே ?   யார்  பார்க்கப்போறாங்க ?


6  வில்லனின்  தம்பியின்  மரணத்துக்குக்காரணமானவர்களைக்கொல்லா மல்   அவர்களின் ட்வின்ஸை  கொல் வது    என்ன  லாஜிக் ?அதற்கு   வில்லன் சொல்லும் சால்ஜாப்பு சரி இல்லை 


7 ஸ்கூல்  எரிந்தால்  இன்சூரன்ஸ்  க்ளெய்ம்  பண்ணலாமே?


8  அபிராமியின்  கணவரைக்கொன்றது   வில்லன் தான் எனக்காட்டி இருக்கலாம் 


9 க்ளைமாக்சில்   அஞ்சனா  கண்களை மூடிக்கொண்டு  சஞ்சனாவை ஷூட்     செய்வது   நம்ப முடியலை .வில்லனா? என  கன்பார்ம்  பண்ண  மாட் டாரா? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்- 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - முதல் பாதி  ஸ்லோ , பின் பாதி  செம விறு விறு ப்பு , க்ரைம் த்ரில்ல  ரசிகர் கள்  பார்க்கலாம் . விகடன்  மார்க் யூகம் 43 . ஆனா   அவங்க  போட்டிருப்பது 41 . ரேட்டிங்க்  3 / 5 


Eleven
Theatrical release poster
Directed byLokkesh Ajls
Written byLokkesh Ajls
Produced by
  • Ajmal Khan
  • Reyaa Hari
Starring
CinematographyKarthik Ashokan
Edited byN. B. Srikanth
Music byD. Imman
Production
company
AR Entertainment
Release date
  • 16 May 2025
Running time
135 minutes[1]
CountryIndia
LanguagesTamil
Telugu

0 comments: