திலீப் முதலில் மஞ்சு வாரியரைத்திருமணம் செய்தார் . இவரது சில விஷயங்களை நடிகை பாவனா மஞ்சு வாரியரிடம் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியதால் இவரை அவர் டைவர்ஸ் செய்து விட் டார் . இதனால் கடுப்பான திலீப் நடிகை பாவனாவை அடியாட்களை வைத்து பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ ஆக்கி வலைத்தளங்களில் பரப்பினார் என இவர் மீது இன்னமும் கேஸ் உண்டு . இவர் பிறகு நடிகை காவ்யா மாதவனை திருமணம் செய்து கொண்டார் . ஒரு நெகடிவ் இமேஜ் இருந்தாலும் சினி பீல்டில் ரசிகர்களின் தொடர் ஆதரவு உண்டு . ஜனப்பிரிய நாயகன் ( பாப்புலர் ஹீரோ ) என்ற பட்டப்பெயர் உண்டு. இவருக்கு இப்போது 57 வயது ஆகிறது
ஸ்பாய்லர் அலெர்ட்
திருமணப்பெண்கள் காஸ்ட்யூம் டிசைன் , டெ க்ரேஷன் ஆகியவற்றைக்கவனித்த்துக்கொள்ளும் நிறுவனம் ஒன்றை நாயகன் நடத்தி வருகிறார் . இவருக்கு இரண்டு தம்பிகள் உண்டு . இருவருக்கும் திருமணம் ஆகி விட்ட்து . ஆனால் இவருக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை . காரணம் இந்தப்பெண் சரி இல்லை , அந்தப்பெண்ணிடம் அந்தக்குறை உள்ளது என ஏதாவது குறை சொல்லியே வரன்களைத்தட்டிக்கழித்து வருகிறார்
நாயகனின் நிறுவனத்த்துக்கு எதிரே இருக்கும் ஒரு வங்கியில் ஓரு அழகிய பெண் புதிதாகப்பணிக்கு வருகிறார் .நாயகனுக்கு அவரை மிகவும் பிடித்து விடுகிறது . அந்தப்பெண்ணுக்கு அம்மா உண்டு , ஆனால் அப்பா இல்லை . நண்பனின் ஆலோசனைப்படி நாயகன் அந்தப்பெண்ணின் அம்மாவுக்கு பல உதவிகள் செய்ய நாயகன் அந்தப்பெண்ணைக்கரெக்ட் பண்ணுவதற்குப்பதிலாக அந்தப்பெண்ணின் அம்மா நாயகனைக்கரெக்ட் பண்ண முயல்கிறார் . இந்தக்காமெடி கலா ட்டாக்கள் முதல் பாதி திரைக்கதையை ஜாலியாகக்கொண்டு போகிறது
ஒருவழியாக அந்தப்பெண்ணைக்கடந்து மேட்ரிமோனியல் சைட் மூலம் நாயகனுக்கு நாயகியின் அறிமுகம் கிடைக்கிறது . நாயகி ஒரு சோசியல் மீடியா பைத்தியம் . அவரது வாழ்வில் எந்த நிகழ்வு நடந்தாலும் அதை லைவ் வீடியோ , ரீல்ஸ் போட்டு லைக்ஸ் வாங்குபவர் . பொதுவாக ஒரு ஆண் பதிவுகள் போட்டு லைக்ஸ் வாங்க அறிவுப்பூர்வமாக சிந்தித்து , மெனக்கெட்டு கட்டுரைகள் எழுத வேண்டும் . பெண்களுக்கு அந்த ரிஸ்க் எல்லாம் தேவை இல்லை . சும்மா செல்பி போட்டே லைக்ஸ் அள்ளி விடலாம் எல்லாப்பெண்களும் அப்படி இல்லை 95% பெண்கள் மட்டும் தான் அப்படி
நாயகன் - நாயகி இருவருக்கும் திருமணம் நடக்கிறது . லைவ் ரீல்ஸ் பைத்தியம் ஆன நாயகி நாயகனுக்கு என்ன எல்லாம் டார்ச்சர் கொடுத்தார் ? நாயகனின் குடும்பம் எப்படி எல்லாம் பாதிக்கப்பட்ட்து என்பதை காமெடியாகக்கொஞ்சம் சீரியசாகக்கொஞ்சம் காட்டுகிறார்கள். இறுதியில் அவர்களது மண வாழ்க்கை என்ன ஆனது என்பது க்ளைமாக்ஸ்
நாயகன் ஆக திலீப் . வழக்கமான காமெடி பாணியில் இவர் படம் முழுக்க அண்டர் பிளே ஆக்டிங்கில் அசத்தி இருக்கிறார் . நம்ம ஊர் பாக்யராஜ் , பாண்டியராஜன் பாணியில் இவரது நடிப்பு இருக்கும் . இவரது கேரக்ட்டர் மீது ஒரு பரிதாபத்தை ஏற்படுத்த்துகிற மாதிரி பார்த்துக்கொள்வார் . அந்த பார்முலா இதிலும் ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது
நாயகி ஆக புதுமுகம் ரணியா ராணா அட்டகாசமான நடிப்பு கதையைத்தாங்கி நிற்கிறது . அங்கங்கே ஜோதிகாத்தனம் கலந்த ஓவர் ஆக்டிங்காக இருந்தாலும் ரசிக்க வைக்கிறது
வங்கி அதிகாரியாக வரும் மீனாட் சி நல்ல அழகு . நடிப்பும் அருமை . அவரது அம்மா கேரக்ட்டரில் வரும் பெண் நாயகனிடம் வெட்கப்படும்போது தியேட் டரில் கைதட்டல் ஆரவாரம் அடங்க நெடு நேரம் ஆனது
நாயகனின் நண்பனாக வரும் இயக்குனர் ஜானி ஆண்டனி நடிப்பு அருமை .நாயகனின் அம்மா, அப்பாவாக பிந்து பணிக்கர் , சித்திக் நல்ல குணச்சித்திர நடிப்பு நாயகனின் தம்பியாக வரும் தியான் சீனிவாசன் எடுபடவில்லை . நாயகனின் அக்கா முறை யாக வரும் மஞ்சு பிள்ளை பிரமாதமான நடிப்பு . நல்ல முக வசீகரம் , ஒரு கேமியோ ரோலில் ஊர்வசி வருகிறார்
சணல் தேவின் இசையில் ஒரே ஒரு பாடல் சுமார் ரகம் பின்னணி இசை காமெடிக்கொண்டாட்டம் . ஒளிப்பதிவு ரனதேவ் . சோசியல் மீடியா ரீல்ஸ்களை நன்கு படமாக்கி உள்ளார் அறிமுக இயக்குனர் பின்ட் டோ ஜோசப் திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார் . குடும்பத்துடன் பார்க்கத்தகுந்த காமெடி மெலோ டிராமாவாகப்பிரசண்ட் செய்ததில் வெற்றி பெற்றிருக்கிறார்
சபாஷ் டைரக்டர்
1 நாயகன் தன் தம்பி யின் ஜாலி லைப்பைக்கண்டு கடுப்பாவது , பொறாமைப்படுவது , புலம்புவது எல்லாமே காமெடி கலாட்டாக்கள்
2 நாயகனின் அக்கா முறை ஆகும் பெண் உடைய ஹோட்டலை மட் டம் தட்டி நாயகி போஸ்ட் போடுவதும் , நாயகன் ஹோட்டலை பாராட்டி போஸ்ட் போடுவதும் அதனால் இருவருக்கும் ஈகோ கிளாஸ் ஏற்படுவதும் அழுத்தமான திரைக்கதை
3 நாயகி தான் கர்ப்பமாக இருப்பதாகப்பொய் சொல்லி நாயகனின் குடும்பத்தை ஏப்ரல் பூல் பண்ணுவதும் அதை போஸ்ட் ஆகப்போட்டு லைக்ஸ் தேத்துவதும் மனதைத்தொடும் செண்ட் டி மெண்ட் சீன்
4 ஒரு பெண்ணின் மரணத்துக்குத்தான் காரணம் என்பதை அறிந்து நாயகி அழுவது மனம் திருந்துவது , நாயகனிடம் மன்னிப்புக்கேட்பது மிக யதார்த்தமான காட் சிகள்
5 நாயகியின் சோசியல் மீடியா அடிக் ட் சீன்கள் கொஞ்ச்ம ஓவர் டோஸ் என்றாலும் அவரது நடிப்பு பிரமாதம்
6 படத்தின் முதல் பாதி காமெடி , பின் பாதியில் கடைசி 30 நிமிடங்கள் சென்ட்டிமென்ட் சீன்கள் என நன்கு ஒர்க் அவுட் ஆன திரைக்கதை
7 வங்கி அதிகாரியின் அம்மாவுடன் நாயகனின் காமெடி சீன்கள் தியே ட்டரில் ஆடியன்ஸிடம் நல்ல வரவேற்பு
8 சோசியல் மீடியா , நியூஸ் சேனல் பற்றி ஊர்வசி கொடுக்கும் க்ளைமாக்ஸ் லெக்சர் அருமை
ரசித்த வசனங்கள்
1 சி சி டி வி கேமரா முன் நின்று மேரேஜூக்கு இன்வைட் பண்றீங்களே? அது ஒர்க் ஆகாத சி சி டி வி கேமராவா இருந்தா என்ன ஆகும் ? எப்படி அவங்களுக்குத்தகவல் தெரியும் ?
அது அவங்க பிரச்சனை , நமக்கு என்ன போச்சு ? நம்ம கடமை முடிஞ்சுது
2 நான் பேஷன் டிசைனிங்க் படிச்சு முடிச்சிருக்கேன் , அதனால பிராடக்ட் ட எப்படி செலக்ட் பண்ணனும்னு எனக்குத்தெரியும்
ஓஹோ , பெண்பார்த்துக்கல்யாணம் செய்வது உனக்கு பிராடக்ட் மாதிரி இருக்கா?
3 அவ உனக்கு என்ன முறை ?
பிரண்டுக்கு மேல , லவ்வருக்குக் கீழே
4 ஒரு சந்தோஷமான விஷயம், உன் தம்பி அப்பா ஆகப்போறான்
ஓஹோ , யாருக்கு ?
சுத்தம், அவனோட குழந்தைக்கு
5 ஒரு முறை செய்த தப்பை மீண்டும் செய்யாதே
6 ஒரு பொண்ணைக்கரெக்ட் பண்ணனும்னா முதல்ல அவளோட மம்மியைக்கரெக்ட் பண்ணனும் , அப்போ தான் மகளைக் கரெக்ட் பண்ண முடியும்
7 நான் இன்னமும் அப்பா கூட ஆகலை , அதுக்குள்ளே என் தம்பி என்னை பெரியப்பா ஆக்க ட்ரை பண்ணிட்டு இருக்கான்
7 பிரின்ஸ் , ஜின்ஸ் , ட்வின்ஸ் எப்படி எதுகை மோனை ?
8 இந்தப்பக்கம் ,அம்மா , அந்தப்பக்கம் அப்பா மாத்தி மாத்தி குறட்டை விடறாங்க , இது வீடா? ஜுவா?
9 டிராபிக் போலீஸ் = ஹெல்மெட் எங்கே?
என் அண்ணன் கிட் டே இருக்கு
10 ஒரு பொண்ணு சோசியல் மீடியாவில் ப்ரொபைல் பிக்சரா பூ வெச்சிருந்தா அது பேக் ஐ டி இந்த ஜெனரல் நாலெட்ஜ் கூட உனக்கு இல்லை
11 என்னது ? பெட் ரூம்ல வீடியோ கேமரா இருக்கு ? முதல் இரவை லைவ் டெலிகேஸ்ட் பண்ணப்போறியா?
12 டியர் , நிஜமா என்ன லவ் பண்றியா?
என் மேக்கப் செலவு மாதம் ரூ25,000 , காஸ்ட்யூம் செலவு ரூ20,000 . அஸெஸரீஸ் செலவு ரூ 15,000 . ஆக மொத்தம் என் ஒரு மாத செலவு 60,000. இனி அந்த செலவு மிச்சம் , ஏன்னா நீங்கதானே இனி அந்த செலவை பண்ணப்போறீங்க ? எனக்கு எல்லாமே இலவசமாக்கிடைக்கப்போகுது
13 பிளடி சாப்ஸ்க்ரைபர்ஸ் என் முதல் இரவு பிளானை முடிச்சுக்கட்டிட்டாங்க
14 டியர் , 1,43,569 பேர் லைவ்ல இதை வாட்ச் பண்ணிட்டு இருக்காங்க
இவங்களுக்கு எல்லாம் வேற வேலையே இல்லையா?
15 புது ஆட்கள் களத்தில் இறங்கட்டும் , போட்டி உருவாகட்டும் . அப்போதான் நம்ம திறமை மேலும் வெளிப்படும் , ஜொலிக்கும்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 இயக்குனருக்கு சோசியல் மீடியாப்பெண்களிடம் என்ன கோபமோ போட்டு வெளுத்து வாங்கி இருக்கிறார் . ஆனால் கொஞ்ச்ம ஓவர் டோஸ்
2 நாயகி தனது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து தண்ணி அடிக்கும் காட் சிகள் தேவை இல்லாதது
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் -க்ளீன் யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - முதல் பாதி காமெடி , பின் பாதி பேமிலி சென்ட்டிமென்ட் சீன்கள் . பெண்களுக்கு மிகவும் பிடிக்கும் ரேட்டிங் 2.75 / 5
thanx - ANICHAM JUNE ISSUE
0 comments:
Post a Comment