Sunday, May 11, 2025

EXTRA DECENT (2024) -( மலையாளம் ) - சினிமா விமர்சனம் ( டார்க் காமெடி சைக்கோ க்ரைம் த்ரில்லர் ) @ அமேசான் ப்ரைம் , மனோரமா மேக்ஸ் , சைனா பிளே






 த கிரேட்  இந்தியன் கிச்சன் , டிரைவிங்க்  லைசன்ஸ் உட்பட  பல படங்களில்  வித்தியாசமான  வேடங்களில்  நடித்த    சுராஜ் வெஞ்சாரமூடு வின் சொந்தப் படம் இது . கேரளாவில்  20/12/2024 அன்று திரை அரங்குகளில் வெளியாகி  ஏ சென்ட்டர்களில்  மட்டும்  ஓடிய படம் இது .அனைத்துத்தரப்பினரும் ரசிக்க  முடியும் என சொல்ல முடியாது .இப்போது அமேசான்  ப்ரைம் ,  மனோரமா  மேக்ஸ் , சைனா பிளே  ஆகிய  ஓ டி டி  தளங்களில்  தமிழ்  டப்பிங்கில் கிடைக்கிறது . மெலோ  டிராமா   தான் .மெதுவாகத்தான் படம் நகரும் .பெண்களும் , பெண்களைப்போல பொறுமை உள்ள ஆண்கள் மட்டும் பார்க்கலாம் 


அந்நியன்  படத்தில்  சீயான் விக்ரம் எப்படி   அம்பி , ரெமோ ,அந்நியன்  என  மூன்று   விதமான  கேரக்டர்களில்  நடித்துக்கலக்கினாரோ   அதே  போல இந்தப்படத்தின் நாயகனும் அப்பாவி ,சைக்கோ , கோமா ஸ்டேஜில் இருந்து மீள  விரும்புபவர்  என   மூன்று  மாறுபட் ட      கேரக்டர்களில்  கலக்கி இருக்கிறார் 


 ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  குடி இருக்கும் அபார்ட்மெண்ட்  செக்யூரிட்டி  வறுமையின் காரணமாக ஜெயிலுக்குப்போனால் ஓ சியில் வேளாவேளைக்கு  சாப்பிடலாம் என நினைத்து   நாயகனை  தாக்குகிறான் .இதனால் தலையில் அடிபட் ட நாயகன் கோமா நிலைக்குப்போய் விடுகிறான் . ஹாஸ்ப்பிடலில் அ ட்மிட ஆகிறான்  . அங்கே  நாயகனை விசாரிக்க போலீஸ் வருகிறது . நாயகனின்  அம்மா, அப்பா , தங்கை , தங்கையின்  வருங்காலக்கணவன்  நால்வரும்  ஹாஸ்ப்பிடலில்  இருந்தாலும் அவர்கள் நடவடிக்கை மர்மமாக இருக்கிறது . நாயகனுக்குப்பிசகிய நினைவுகள் திரும்பி வருவதை அவர்கள் யாரும் விரும்பவில்லை . இன்னமும் சொல்லப்போனால் நாயகனைக்கொலை செய்ய  நாயகனின் குடும்பமே  திட் டம்  தீட்டுகிறது 





நாயகன்     சிறுவனாக இருந்தபோது  நாயகனின் அண்ணன்  நாயகனுக்கு  சமைக்க  கேஸ்  அடுப்பைப்பற்ற  வைக்கையில் கேஸ்   சிலிண்டர்   வெடித்து  மரணம் அடைகிறான் . அந்த  மரணத்துக்கு தானும் ஒரு வகையில் காரணம் என்ற  குற்ற   உணர்வும் , மரணத்தை  அருகில் பார்த்த கோடூரமும்  சேர்ந்து நாயகனை மன ரீதியாக பாதிப்புக்கு உள்ளாக்குகிறது . யாரிடமும்  பழகாமல் ,பேசாமல்  மூடி டைப்பாகவே நாயகன் வளர்கிறான் . நாயகனின் அப்பா   நாயகனை எப்போதும்  கரித்துக்கொட்டிக்கொண்டே இருப்பார் . நாயகனுக்கு ஒரு தங்கை உண்டு .


 வளர்ந்து   பெரியவர்கள் ஆனதும்   நாயகனின் தங்கை அமேரிக்கா  போக இருப்பதாக சொல்கிறாள் . அப்போது  நாயகன் நானும் நன்றாகப்படித்திருந்தால் தங்கை போலவே அமெரிக்க போய் இருப்பேன் என்கிறான் . வழக்கம்  போல   நாயகனின் அப்பா   நாயகனை கிண்டல் செய்கிறார் . எப்போதும்   அமைதியாக இருக்கும் நாயகன் இந்த முறை  கோபம்  கிளம்ப  தன அப்பாவைப்பார்த்து  ஒரு பயங்கரமான கேள்வியைக்கேட்கிறான் 



அதைக்கேட்டு   நாயகனின்  அம்மாவும்  அப்பாவும்,  அதிர்ச்சி அடைகிறார்கள் . பொதுவாக யாருமே   தன்  பெற்றோரைப்பார்த்து   அப்படி  ஒரு கேள்வியைக்கேட்க மாட் டார்கள் . இதற்குப்பின் நாயகன்  தன பெற்றோரைத்துன்புறுத்தி அதில் இன்பம் காணும் சைக்கோவாக மாறி விடுகிறான் . உங்களைப்பற்றிய இந்த ரகசியத்தை தங்கையிடம் சொன்னால் அவள் தற்கொலை செய்து கொள்வாள். சொல்லவா? என மிரட்டுகிறான் .


நாயகனின்   நண்பன்   சின்ன வயதில் இருந்தே  நாயகனின் தங்கையை  காதலிக்கிறான் .  திருமணம் செய்ய   முடிவெடுத்தபோது  நாயகனுக்கு அதில் விருப்பம் இல்லை .வீடடை  விட்டு  தங்கையை அனுப்பி விடுகிறான் 


 இப்படிப்பட் ட   சூழ்நிலையில்   தான் நாயகனுக்கு  தலையில் அடிபட்டு  கோமா ஸ்டே ஜ்   நிலை . இப்போது நாயகனின்   குடும்பத்தார்   ஒன்று   நாயகனுக்குப்பழைய   நினைவுகள்   திரும்பக்கூடாது .அல்லது  அவனைக்கொலை செய்து  விட வேண்டும்  என   நினைக்கிறார்கள் . இது   தெரியாத   ஹாஸ்பிடல் நிர்வாகம்  நாயகனைக்காப்பாற்ற  நடவடிக்கைகள்  எடுக்கிறது 


 இதுவரை   நான் சொன்னவை எல்லாம் படத்தின் முதல் 20 நிமிடக்கதைதான் .இதற்குப்பின் நடக்கும்   காமெடி கலாட்டாக்கள் தான் மீதி திரைக்கதை 



நாயகன்   ஆக சுராஜ் வெஞ்சாரமூடு  கலக்கலாக   நடித்திருக்கிறார் , வழக்கமாக   அவரை   தாடி மீசையுடன்  பார்த்து விட்டு  கனம் கோர்டடார் அவர்களே  சத்யராஜ் கெட் டப்பில்  வித்தியாசமான   கண்ணாடி  யுடன்   தாடி மீசை இல்லாமல் பார்க்க என்னவோ போல் இருக்கிறது, பின் பழகி   விடுகிறது 


நாயகனின்   தங்கை ஆக  கிரேஸ்  ஆண்ட்டனி  அசால்ட்  ஆக நடித்திருக்கிறார் . இவர் ஒரு நாயகி மெட் டீரியல் . கொழுக்   மொழுக் கன்னங்கள் . ஆப்பிள்  உதடுகள் பிளஸ் 


நாயகனின்   அம்மாவாக   வினயா   பிரசாத்   முக்கியமான   ரோலில் வருகிறார் . இவர் சந்திர முகி  படத்தில் நாசரின் மனைவியாக வருபவர் .இவர்  கேரக் டர்  டிசைன்   சிக்கலானது . திறம்பட நடித்திருக்கிறார் 




நாயகனின்   அப்பாவாக   சுதீர்கரமானா  வருகிறார் .இவரது கேரக் டர்  டிசைன்     நல்லவரா?   கெட்டவரா? எனக் குழப்பி க்ளைமாக்சில்  ஓப்பன்   பண்ணும் விதம் அருமை 


நாயகனின்   தங்கையின்   காதலன்  ஆக  ஷ்யாம் மோகன்  கலகலப்பான நடிப்பு , பிரேமலு  படத்தில்  நடித்ததைப்போலவே இதிலும் காமெடி  நடிப்பு அருமை 


நாயகனின்  நண்பனாக  பின் பாதியில் வரும்  வினீத்   தட்டில்   டேவிட்   கலகலப்பான  ரோல் .இதெல்லாம் எனக்கு சர்வ சாதாரணம்   என அடிக்கடி   இவர் சொல்வது காமெடி 


அங்கித்   மேனனின்   இசையில்   இரு பாடல்கள்   ஓகே   ரகம் . பின்னணி   இசை ப ரவாயில்லை .இது மாதிரி சைக்கோ க்ரைம்  த்ரில்லர் படத்தில்   ஒளிப்பதிவு   டார்க்   டோனில்   இருக்கும், ஆனால்   இது காமெடி   டிராமா  என்பதால் ஸ்ரோன்  சீனிவாஸ்   தெள்ளத்தெளிவாக  பளிச்  ஒளிப்பதிவைத்தந்திருக்கிறார் .ஸ்ரீஜித்  சாரங்கின் எடிட்டிங்கில் படம்  125   நிமிடங்கள்   ஓடுகிறது .முதல்   பாதி நல்ல விறுவிறுப்பு ., பின் பாதி ரொம்ப ஸ்லோ 


 கதை , திரைக்கதை  ஆசிப் கக்கொடி , இயக்கம் அமீர்  பள்ளிக்கல் 


சபாஷ்  டைரக்டர்

1  நாயகன்  அப்பாவி  யிலிருந்து  சைக்கோ ஆக மாறும் டிரான்ஸ்பர்மேஷன் சீன்களிரண்டும் அருமை 


2  வழக்கமாக   அம்மா கேரக்ட்டர்  டிசைன் ஒரே   மாதிரி  உருவாக்கப்படும், இதில் மாறுபட்டு  இருந்தது 


3   நீ கொடுத்ததை நான்   திருப்பிக்கொடுப்பேன் 10 மடங்காக என நாயகன்  நடந்து கொள்ளும்  விதம் செம 


4  ஒளிப்பதிவு  அருமை 

 ரசித்த  வசனங்கள் 

1    என்னது ? யு கே ஜி ல  இருந்தே  என்   தங்கையை நீ லவ் பண்றியா? கின்னஸ் ல  வரும் போலயே? 


2  நீ    என்னோட  பிரெண்ட்  ஆனதே  என் சிஸ்ட்ரை  லவ்  பண்ணத்தான் போல 


3  வாரிசைப்பார்த்துக்கொள்வது மட்டும் தான் பெற்றோரின்  கடமையா? 


4  இது ஆடு ஜீவிதம் இல்லை , பட் டி ஜீவிதம் , நாய் வாழ்க்கை 


5   உலகில்  உள்ள அனைவரையும்  வழி நடத்துவது எது ?  


சின்சியாரிட்டி ? 


 நோ 

 லவ் ?


 நோ . பயம் தான்  எல்லாரையும்  வழி நடத்துது 



6  எனக்கு எல்லோரிடமும் நட் பு கொள்ள ,அன்பு   பாராட் டத்தெரியாது ,ஏன்   எனில் எனக்கு அவை கிடைக்கவில்லை 


7  பயம் தான்   அனைத்து உறவுகளையும்  ஒருங்கிணைக்குது 



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  நாயகனைக்கொலை செய்யும் அளவுக்கு அம்மா, அப்பாவுக்குப்போதிய காரணங்கள்  இல்லை .அனைத்த்து சொத்துக்களையும் நாயகன் தங்கை பெயரில் எழுதி வைத்து விடுகிறான் .அவனால்  பெரிய   பிரச்சனை இல்லை .சுலபமாக அவனை விட்டு விலகி இருக்கலாம் 


2  நாயகனின்   அம்மா கேரக்ட்டர்  டிசைன்  மாறுபட்டு  இருந்தாலும்   முழு   நிறைவு இல்லை . இன்னமும்  விளக்கி இருக்கலாம் 


3  நாயகி  அதாவது   நாயகனின் ஜோடி  சீன்கள்   எடிட்டிங்க்கில்  ட்ரிம் செய்யப்பட்டிருக்கலாம்.,. அவர் வரும் சீன்கள் ஒட் டவில்லை 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - 16+   aU/A



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்    மாறுபட்ட  திரைக்கதை  விரும்பிகள்  பார்க்கலாம் . வேகமான  திரைக்கதையில் உருவான ஜனரஞ்சசகமான படம் அல்ல . ரேட்டிங் 3 / 5 



Extra Decent
Theatrical release poster
Directed byAamir Pallikkal
Written byAshif Kakkodi
Produced byListin Stephen
Suraj Venjaramoodu
StarringSuraj Venjaramoodu
Grace Antony
Shyam Mohan
Sudheer Karamana
Vinaya Prasad
CinematographySharon Sreenivas
Edited bySreejith Sarang
Music byAnkit Menon
Production
companies
Magic Frames
Vilasini Cinemas
Distributed byMagic Frames
Release date
  • 20 December 2024
CountryIndia
LanguageMalayalam

0 comments: