Tuesday, May 13, 2025

CHITHAMBARAM (1985) - சிதம்பரம் -( மலையாளம் ) - சினிமா விமர்சனம்(மெலோ டிராமா) @ YOU TUBE ( தேசிய விருது பெற்ற படம் )




மலையாள இயக்குனர் ஜி அரவிந்தன்  இதற்கு முன்னெடுத்த படங்களெல்லாம்  விருது  பெற்றிருக்கின்றன .மக்களின் பாராட்டுதல்களை அள்ளிக்குவித்து இருக்கிறது .ஆனால் இதுதான் கமர்ஷியல் சக்ஸஸ் பெற்ற படம் . சிறந்த படத்துக்கான தேசிய விருது பெற்ற படம்.கேரளா  அரசின் மாநில விருதுகள்  நான்கினை  வென்ற  படம் . சிறந்த  படம் , சிறந்த இயக்குனர் , சிறந்த  நடிகர் , சிறந்த  இசை  அமைப்பாளர்   என நான்கு மாநில அரசின் விருதுகளை  வென்ற  படம் .


இந்தப்படம் பற்றி இதன் இயக்குனர் ஜி அரவிந்தன்  கூறுகையில்  "இது ஒரு சாதாரண  படம்   தான் .இதை என் மக்கள்  இந்த  அளவுக்குக்கொண்டாடினார்கள் என்பது தெரியவில்லை " என்கிறார் 


சி வி  ஸ்ரீராமன் எழுதிய  சிறுகதையை  மையமாக வைத்துத்திரைக்கதை அமைக்கப்பட்டது .இந்தக்கதையை  படமாக்க நினைத்ததும்  இதன்  இயக்குனர்  இதற்காக  பல தயாரிப்பாளர்களிடம் கதை  சொன்னார் . ஆனால் யாரும் தயாரிக்க முன் வரவில்லை .அதனால்  தானே  தயாரிக்க  முடிவு எடுத்தார் 


 ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  திருமண வயது கடந்த  பிரம்மச்சாரி . கேரளா - தமிழ் நாடு  பார்டரில்  உள்ள  அரசு பண்ணையில்  ஆபீஸ்  சூப்பிரண்ட்டண்ட்   ஆகப்பணி புரிகிறார் .வில்லன்  பீல்டு சூப்பர்வைசர்  ஆகப்பணிபுரிபவர் .வில்லனுக்கு எப்போதும்  வேலை வேலை  என  ஒர்க் அடிக்ட்  ஆக இருப்பவர் . தனக்குக்கீழ்  பணியாற்றும் பணியாளர்களிடம் கண்டிப்பாக இருப்பவர் . ஆனால்   நாயகன்  சகஜமாக எல்லோரிடமும்  பழகுபவர் 


இப்போது பண்ணையில்  வேலை செய்யும் சாதா பணியாள் முனியாண்டிக்கு திருமணம் நிச்சயம் ஆகி விட்டது . 15 நாட்கள் லீவ் கேட் கிறான் . நாயகன்  லீவ் தந்து விடுகிறார் .ஆனால்   வில்லன்  2  நாட்களில்  ட்யூட்டியில் ஜாயின் பண்ண வேண்டும் என ஸ்ட்ரிக்ட் ஆக சொல்கிறார் 



 திருமண  விழாவில் நாயகன் தான் ஸ்டில் போட்டோகிராபர் .,திருமணம்  ஆகி தன்  மனைவியுடன்  முனியாண்டி  வருகிறான் .. வில்லனுக்கு  அவள்  மேல் ஒரு கண் 



முனியாண்டி யின்   மனைவிக்கு  தனிமையில் இருக்க போர் அடிக்கிறது . தனக்கும் ஒரு வேலை  வேண்டும் என்கிறாள், ஆனால் கணவன் அவள் வேலைக்குப் போக சம்மதிக்கவில்லை 



முனியாண்டியின் மனைவிக்கு வில்லன் ஒரு வேலை  ரெடி பண்ணுகிறான் . ஆனால்   முனியாண்டி  நாசூக்காக வேண்டாம் என மறுத்து விடுகிறான் . இதனால் கடுப்பான வில்லன்  

முனியாண்டி க்கு இனிமேல் நைட்  ஷிப்ட்  ஒர்க் தான் என சொல்லி விடுகிறான் .


 வேறு வழி இல்லாமல்  நைட் ஷிப்ட்  பார்க்கும் முனியாண்டி ஒரு நாள்   நள்ளிரவில்  வில்லனின்   பைக்  சத்தம் கேட்டு  சந்தேகப்பட்டு  தன வீட்டுக்குப்போய்ப்பார்க்கிறான் 


அடுத்த நாள்  முனியாண்டி  தூக்குப்போட்டு   தற்கொலை   செய்த   நிலையில்   இருக்கிறான் 


 இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான் மீதி திரைக்கதை 

 முனியாண்டியாக   சீனிவாசன் நடித்திருக்கிறார் . ரஜினி நடித்த   குசேலன் (2008)  படத்தின்  ஒரிஜினல்  வீரன் ஆன கத பரயும்போழ் (2007) படத்தின்  கதாசிரியரும் , நாயகரும் இவரே . . அருமையான நடிப்பு .  பல  சீன்களில் அடக்கி வாசித்து இருக்கிறார் 


 நாயகன் ஆக பரத் கோபி   நடித்திருக்கிறார் .இவர் கேரளாவின் சிறந்த நடிகர்  மட்டும் அல்ல .இயக்குனர்   மற்றும் தயாரிப்பாளரும் கூட 


 நாயகி ஆக ஸ்மீதா படேல்  பிரமாதமாக நடித்திருக்கிறார் .இவர் ஒரு மராத்தி நடிகை 


வில்லன் ஆக   டாக்டர் மோகன் தாஸ்   நடித்திருக்கிறார் .இவருக்கு அதிக வாய்ப்பில்லை .சில சீன்கள் தான் வருகிறார் 

ஜி  தேவராஜன் இசையில் 6  பாடல்கள் , பெரும்பாலும் கோயில் களில்  வரும் பக்திப்பாடல்கள் தான் .பின்னணி இசை இதம் .ஆனால்  மாநில அரசின் விருது   வாங்கும் அளவுக்கு இசை இல்லை . ஒரு வேளை  அந்த ஆண்டின் ரிலீஸ்  படங்களில்  போட்டி இல்லையோ என்னவோ ? 


ஒளிப்பதிவு  ஷாஜி என் கருண்  ,பிரமாதம் .பாலு மகேந்திராவுக்கு இணையான தரம் .ஒவ்வொரு பிரேமும் கண்களில் ஒத்திக்கொள்ளலாம் போல  இருந்தது . எடிட்டிங்க்   ஓகே   ரகம் .டைம் டியூரேஷன்  100 நிமிடங்கள் .40 நிமிடங்களில்  முடிக்க வேண்டிய கதை ,இழுத்து விட் டார்கள் 


 திரைக்கதை   எழுதி   இயக்கி இருப்பவர் ஜி அரவிந்தன் 


சபாஷ்  டைரக்டர்

1  தமிழகம் - கேரளா பார்டரில்  கதை நடப்பதாலும் , கதைப்படி நாயகி தமிழச்சி   என்பதாலும் பெரும்பாலான வசனங்கள் தமிழில் தான் 


2  கதையில்   கள்ளக்காதல்  சம்பவம்  இருந்தாலும்  ஒரு சீன்  கூட நேரடியாக  அதைக்காட் டாமல்  குறிப்பால் உணர்த்திய விதம் 


3  கணவன் , நாயகி முகத்தில்  சூடு போட் டான்   என்பது   சிறுகதையில்  சொல்லப்பட்டிருக்கு , ஆனால் படத்தில்  நாம் தான்    யூகித்துக்கொள்ள வேண்டும் . பல இடங்கள் நாசூக்காயத்தான் சொல்லப்பட்டிருக்கு 


4  நாயகன் ,நாயகி இருவரது கேரக்ட்டர்  டிசைனும்  கனகச்சிதம் 


5  ஒரு மனிதன் செய்யும் தவறால் ஏற்படும் குற்ற உணர்ச்சி  அவன் சாகும் வரை அவனைத்துரத்திக்கொண்டே இருக்கும் என்பதுதான் கதையின் மைய இழை 

ரசித்த  வசனங்கள் 

1  சரக்கு அடிக்கும்போது  எல்லா மனிதர்களும் சமம் 


2 திருமணங்கள்   சொர்க்கத்தில்  நிச்சயிக்கப்படுகின்றன  என்பது அந்தக்காலம், இப்போது பணம் தான்  பிரதானம் 


3  உலகில்  அனைவருக்குமே அவங்கவங்க பண்ணுவதில் அவங்கவங்க நியாயங்கள் இருக்கும் 



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1     100 நிமிடங்கள்   ஓடும் படத்தில்  நாயகன் , வில்லன், கொலீக்ஸ்  அனைவரும் தண்ணி அடிக்கும் சீன்கள் , சரக்கில் தண்ணீர் மிக்ஸ் செய்யும் சீன்கள் , தம் அடிக்கும் சீன்கள் , இவற்றை  நீக்கி விட் டால்   25 நிமிடங்கள்   மிச்சம் ஆகும் 



2  நாயகியின்  கணவன்   தற்கொலை  செய்து கொண்டதும்  ஒழுக்கமான  கள்ளக்காதலன்  நாயகியை திருமணம் செய்திருப்பான் , விட்டு விட்டு ஓட  மாட் டான் 


3   சிவபெருமான்  சிதம்பரம் என்ற  ஊரில்  எப்படி எதற்கு வந்தார் என்ற ஸ்தல புராணம்  க்ளைமாக்சில்  நாயகன் - நாயகி இணைந்தார்களா?   என்பதன்  விளக்கம்  ஆகிய இரண்டுக்கும் தொடர்பு உண்டு என்பது ஏ செண்ட் டர்   ஆடியன்ஸுக்கு மட்டும் தான் புரியும் .இன்னமும் தெளிவாக சொல்லி இருக்கலாம் 


4 ஒரு கள்ளக்காதல் கதைக்கு தேசிய விருது ,மாநில விருது எல்லாம் கொடுத்தால்  ஆளாளுக்கு   அதே டைப் கதைகளை எடுக்க மாட் டார்களா? 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - CLEAN U 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  தேசிய விருது  பெற்ற  படம் என்ற  ஒரே  காரணத்துக்காகப்பார்த்தேன் .ரொம்பப்பொறுமை  வேண்டும் .மகேந்திரன் , பாலுமகேந்திரா  படங்கள்   பார்ப்பபவர்கள் பார்க்கலாம் . ரேட்டிங்  2/ 5 


Chidambaram
Promotional poster
Directed byG. Aravindan
Screenplay byG. Aravindan
Story byC. V. Sreeraman
Produced byG. Aravindan
StarringBharath Gopi
Smita Patil
Sreenivasan
Mohan Das
CinematographyShaji N. Karun
Music byG. Devarajan
Production
company
Sooryakanthi
Distributed bySaj Movies
Release date
  • 8 March 1985
Running time
100 min
CountryIndia
LanguageMalayalam

0 comments: