Tuesday, May 20, 2025

மாமன் (2025) -தமிழ் - சினிமா விமர்சனம் ( பேமிலி டிராமா )

             


           ஜி வி  பிரகாஷ்  குமார் நடித்த புரூஸ்லீ ( 2017) , விமல் நடித்த விலங்கு (2022)  வெப் சீரிஸ்  இரண்டையும்  இயக்கிய  பிரசாந்த்  பாண்டியராஜ்  தான் இந்தப்படத்தை இயக்கி உள்ளார் .விடுதலை , கருடன் ,கொட்டுக்காளி  ஆகிய  படங்களில்;  கதையின் நாயகன் ஆக  நடித்த  புரோட்டா   சூரிதான்  படத்தின்  கதையை எழுதி  நாயகன் ஆக நடித்துள்ளார் .பெண்ககளின்  மனதை மிகவும்  கவரும்  இந்தப்படத்தின்  விமர்சனத்தைப்பார்ப்போம்  


ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகனுக்கு தன அக்கா என்றால் மிகவும் உயிர் .மிகவும் பாசம் வைத்து இருக்கிறார் . ஆனால் அக்காவுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகளாகியும்  குழந்தை இல்லை .இதனால்  அக்காவுக்கு மிகுந்த மன வேதனை , மன உளைச்சல் .மாமியார்  சொல்லடி ,உறவினர் தூற்றல்  அனைத்தையும் சகித்துக்கொண்டு வாழ்கிறாள் . ஒரு கட்டத்தில் அக்காவுக்குக்குழந்தை  பிறக்கிறது  . நாயகன்  அக்காவின் குழந்தை மீது  அக்காவை விட அதீத  பாசம் வைக்கிறான் 


 குழந்தை  வளர்ந்து  சிறுவன் ஆகிறான் .அவனும் மாமன் என்றால் அட் டாச்மெண்ட் ஆக இருக்கிறான் . ஸ்கூலுக்குப்போக வர மாமனின்  வண்டியில் தான் போகிறான் . நைட் படுக்கும்போது கூட மாமனுடன் தான் உறங்குகிறான் 


 நாயகனின் அக்காவுக்குப்பிரசவம்  பார்த்த   லேடி டாக்டர்  தான் நாயகி . அக்காவையும் , அக்கா மகனையும்  இந்தளவு தாங்குகிறான் என்றால் இவனைக்கல்யாணம் பண்ணிக்கிட் டா  நம்மை எப்படித்தாங்குவான் என நினைத்து நாயகி நாயகனை லவ்வுகிறாள்,  நாயகனும் தான் 


நாயகன் , நாயகி இருவருக்கும் திருமணம்  நடக்கிறது .முதல்  இரவு அறையில்  கட்டிலில்  நாயகன் , நாயகி இருவருக்கும் இடையே   அக்கா மகன்  வந்து  அட்டூழியம் செய்கிறான் .ஹனிமூன் போகலாம்  எனக்கிளம்பினால் நானும் உடன் வருவேன் என அடம் பிடிக்கிறான் 



இந்தக்கதையில்   வில்லன்   அக்கா மகன் தான் . அடிஷனல்   வில்லன்கள்  அவனை ஒழுங்காக வளர்த்தாத பெற்றோர் 


நாயகன் , நாயகி இருவரையும்   வில்லன் ஆன அக்கா பையன்  பிரிக்கிறான் . இருவரும் இணைந்தார்களா?இல்லையா?என்பது மீதி திரைக்கதை 


நாயகன்  ஆக   சூரி   அருமையாக நடித்து இருக்கிறார் . இதுவரை   அவர் கதையின் நாயகன் ஆக நடித்த  படங்களில் ஆண்களை மட்டும் தான் அதிகம் கவர்ந்திருப்பார் .   ஆனால்  இதில் அசால்ட்  ஆக  பெண்களின் கவனத்தைக்கவர்கிறார் . சோகம் ,பாசம் ,  காதல் , ஊடல்   என  எல்லா ஏரியாக்களிலும்  சிக்ஸர் அடிக்கிறார் 


  நாயகி ஆக  ஐஸ்வர்யா   லட் சுமி  அபாரமாக   நடித்து இருக்கிறார்  .ரொமான்ஸ்  சீன்களில்  , கோபம் வந்து  பொங்கும்  சீன்களில்   கலக்கி இருக்கிறார் 


நாயகனின்  அக்காவாக ஸ்வாசிகா  உணர்ச்சி  போங்க நடித்திருக்கிறார் . நாயகியை  விட இவருக்குத்தான் சீன்கள் அதிகம் , நாயகனை விட இவருக்குத்தான் க்ளோசப் ஷாட்கள் அதிகம் . பார்வையாலேயே நடித்து இருக்கிறார் 


நாயகனின் தாத்தா , பாடடி ஆக   ராஜ் கிரண் , விஜி    சந்திர  சேகர்  பாந்தமான   நடிப்பு 


நாயகனின்  அம்மாவாக  கீதா   கைலாசம்  கச்சிதம் நாயகனின்   நண்பன் ஆக    பால சரவணன்  அதிக வேலை இல்லை .கெஸ்ட்   ரோலில் விமல் 

  வில்லன் ஆக   வரும் சிறுவனின் நடிப்பு பரவாயில்லை ரகம் 


ஹிஷாம் அப்துல் வகாப் தான் இசை 6 பாடல்கள்   சுமார் ரகம்,  பின்னணி இசை பரவாயில்லை ரகம் தினேஷ்  புருஷோத்தமனின் ஒளிப்பதிவு அருமை , நாயகன் , நாயகி , நாயகனின் அக்கா   மூவரையும்  அழகாகக்காட்டி இருக்கிறார் .கணேஷ்   சிவாவின் எடிட்டிங்கில்  படம் 151  நிமிடங்கள்   ஓடுகின்றது . பின் பாதி அநியாய  இழுவை 

சூரியின் கதைக்கு  திரைக்கதை  அமைத்து   இயக்கி இருப்பவர்  பிரசாந்த்  பாண்டியராஜ் 


சபாஷ்  டைரக்டர்

1  நாயகன் , நாயகி   இருவரும்  திருமணம்  ஆன பின்பு  ஒரு பிரிவில் எஸ் எம் எஸ்   மூலம்  ஜாலி சண்டை போடும் சீன செம  ஜாலி 


2  நாயகன் , நாயகி   , நாயகனின் அக்கா   மூவரின்   நடிப்பும் அருமை .உடை வடிவமைப்பு கன  கச்சிதம் 


3  முதல்  பாதி திரைக்கதை   அனைவரையும் கவரும் வண்ணம் ஜனரஞ்சகமாக அமைத்த விதம் 


  ரசித்த  வசனங்கள் 


1 கல்யாணம் ஆன ஒரு ஆண்  எப்படி கலகலப்பாக இருக்க முடியும் ? 


2 ஒரு வீட்டில் ஆம்பளை  உடல் நிலை சரி இல்லாம படுத்துட் டா  வீடு   வீடா இருக்கும், ஆனா  ஒரு பொண்ணு உடல் நிலை சரி இல்லாம படுத்துட் டா  வீடு   வீடா இருக்காது 


3  யார்  யார் கிட் டயோ  எதெதுக்கோ  பணிந்து  போகிறோம் , மனைவி கிட் ட    பணிந்து  போனால்   என்ன ? 


4 சாமிக்கு அடுத்து பொண்டாட்டி  இல்லை , பொண்டாட்டியே   சாமி தான் 


5  பிள்ளை ( வாரிசு ) இல்லையா? என ஆம்பளையைப்பார்த்து  வாய் விட்டு யாரும் கேட்க மாட் டாங்க , ஆனா  ஒரு பார்வை பார்ப்பாங்க, நீ எல்லாம் ஒரு ஆம்பளையா? என அது கேட்கும் 


6 எப்போ  எப்போ எந்த விஷயம் நடக்கணுமோ அப்போ  அப்போ  அந்த விஷயம் நடக்கணும் 


7   தனியா   வாழும்போது   சேர்ந்து   வாழ  ஆசைப்படறீங்க , ஆனா  சேர்ந்து வாழ  ஆரம்பிக்கும்போது தனித்தனியா இருக்கீங்க 


8  ஏண்டி   மூஞ்சியை   உம்முனு வெச்சிருக்கே ?


 நீங்க  சிரிக்கும்போது நான் சிரிக்க , நீங்க சோகமா இருக்கும்போது நானு ம்  சோகமா  இருக்க பொம்மை இல்லை 



9 பாத்ரூம்ல  பல்லி க்குப்பயப்படுவதை இன்னமுமா இந்தபொம்பளைங்க விடலை ? 


10  பெண்களுக்கு மரியாதை தருவதில் இ ந்த உலகிலேயே என் அப்பா தான் முதல் இடம் , ஆனா நீ  அவரையும் தாண்டிட் டே 


11  நீங்க எப்போ  ஸ் வீட் தரப்போறீங்க ? 


 நீங்க ஓகே சொன்னா மூணே மாசத்துல 



12   குழந்தை  மாலை சுத்திப்பிறந்தா தாய் மாமனுக்கு ஆகாது    என சொல்றாங்களே? 



 டயட் ல இருக்கணும் , டெய்லி எக்சசைஸ் பண்ணனும்னு சொல்றோம் , யார் அதை பாலோ பன்றாங்க ?அது மாதிரி தான் 


13  யோவ் , தயவு செய்து   தொடையை  மட்டும் காட் டாத 


14  எல்லோருக்கும்   நல்லவனா   இருந்துட்டு   உனக்கு மட்டும்   சுயநலமா இருந்திருக்கேன் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   எட் டாம் கிளாஸ்  பெயில் ஆன பொண்ணுங்க கூட இப்போ கவர்மெண்ட் ஜாப் உள்ள மாப்பிளை வேணும் , சொந்த வீடு இருக்கணும்னு கேக்குதுங்க.கவர்மெண்ட்  ஹாஸ் பிடல்   டாக்டர்   ஆக  இருக்கும் நாயகி  வேலை வெட்டி இல்லாத , படிக்காத நாயகனை லவ்வுவது எப்படி ? 


2  வீட்டின் மொ ட்டை  மாடில நைட் டைம்ல சரக்கு அடிக்கும்போ து ராஜ்கிரண் எதுக்கு கூலிங்க் க்ளாஸ் போட்டிருக்காரு ? 



3 நாயகனின்   அக்கா  ஈகோ  உள்ளவர் என காட்டி விட்டு க்ளைமாக்சில்  திடீர் என அனைவரின் காலிலும் விழுவது  நாடகத்தனம் 


4  நாயகனின் தாத்தா ,பாட்டி கேரக்டர்கள்  மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லை .அந்த போர்சனை தூக்கி இருந்தால் 30 நிமிடங்கள்  மிச்சம் 


5 நாயகனின் அக்கா  செக்கப்புக்காக ஹாஸ் பிடல் வருகிறார் , உடன் கணவரும்  இருக்கிறார் . செக் பண்ண டாகடர்  முயலும்போது   தம்பி   ஆன நாயகன்  அக்காவின்  சேலையை இடையில்  இருந்து நகர்த்த   வருகிறார் , கணவர் அதை செய்ய மாட் டாரா?   நரஸ்   எதுக்கு இருக்காங்க ?ஓவர் அலப்பறை 


6   பின் பாதியில்   நாயகனின்    அக்கா மகனுக்கு   விபத்து நடப்பது ,  தாத்தா , பாட்டி     மரணம்  எல்லாம் 

வலியத்திணிக்கப்பட் ட சோகங்கள் 


7  படத்தில்   நாயகன் நாயகியை  இரு முறை பளார்  பளார்  கொடுக்கிறார் .நிஜ வாழ்வில்  டொமெஸ் டிக்  வயலன்ஸ் கேசில் உள்ளே  போக வேண்டி வரும் 


8 கதைப்படி  அக்கா மகன் தான் வில்லன், ஆனால் நாயகியை வில்லி போல காட்டுகிறார்கள்  


9  கவர்மெண்ட்  டாக் டர்  டிரான்ஸ்பர்  கேட் டால்   அடுத்த நாளே   கிடைக்காது .ஆறு மாதங்கள் ஆகும் 


10    வேலை   வெட் டி இல்லாத  மாப்பிள்ளையை  மாமனார்   மதிக்க மாட் டார் . ஆனால் இதில் பம்முகிறார் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - CLEAN U 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  அடிதடி , வெட் டு , குத்து , வன்முறை இல்லாத நல்ல   படம்   குடும்பத்துடன்  படம் பார்த்து நீண்ட நாள் ஆச்சு ,முதல் பாதி அருமை , பின் பாதி அழுகை + இழுவை . ஆனந்த   விகடன் மார்க்  யூகம்  42 . ரேட்டிங்க்   2.75 / 5 


Maaman
Theatrical release poster
Directed byPrasanth Pandiyaraj
Screenplay byPrasanth Pandiyaraj
Story bySoori
Produced byK. Kumar
Starring
CinematographyDinesh Purushothaman
Edited byGanesh Siva
Music byHesham Abdul Wahab
Production
company
Lark Studios
Distributed bySri Kumaran Films
Release date
  • 16 May 2025
Running time
151 minutes[1]
CountryIndia
LanguageTamil

0 comments: