Friday, May 23, 2025

FRED AND ROSE WEST : A BRITISH HORROR STORY (2025) -ஆங்கிலம் / தமிழ் - வெப் சீரிஸ் விமர்சனம் ( க்ரைம் டிராமா டாக்குமெண்டரி ) @ நெட் பிளிக்ஸ்

   

            1994 ல்   கைது  செய்யப்பட்ட  சீரியல்  மில்லரின்   கேஸ்  பற்றிய   டாக்குமெண்டரி  இது . தமிழ்  டப்பிங்கில் இருக்கு . 3 எபிசோடுகள் , ஒவ்வொரு எபிசோடும் 52 நிமிடங்கள் . ஒரு தமிழ்  சினிமா   டைம் டியூரேசன் தான் .இரண்டரை மணி நேரம் . இது ஒரு  யு  சர்ட்டிபிகேட்  படம் .அதனால் அனைவரும் பார்க்கலாம்         


ஸ்பாய்லர்  அலெர்ட்


வில்லன் 1941ல்  பிறந்தவன் . முதல்   மனைவி  யுடன் காதல்  திருமணம் . ஒரு மகள்  .  முதல்   மனைவி   இறந்த பிறகு  27 வயதான  வில்லன் 15 வயதான வில்லியை சந்திக்கிறான் . டீன்  ஏஜில் இருப்பதால் வில்லி க்கு எந்த விபரமும் தெரியாது  வில்லனின் ஆசை   வார்த்தைகளில்   மயங்கி   திருமணம்   செய்து  கொள்கிறாள் 



 இருவருக்கும் நல்ல அண்டர்ஸ்டேண்டிங்க் . இவர்கள்   காதல்   வாழ்க்கை நன்றாகப்போய்க்கொண்டு இருக்கிறது . ஒரு சின்ன திருட்டுக்கேஸில் வில்லன் ஜெயிலுக்குப்போகிறான் .அந்த   கால கட்டத்தில்   வில்லி   வில்லனின்   முதல்  தாரத்தின்  மகளை  அடிக்கடி  அடித்துத்துன்புறுத்துகிறாள் .அது பற்றி வில்லனுக்குக்கடிதமும் எழுதுகிறாள் . நான் ரிலீஸ்   ஆகி வரும் வரை    அவளை  சகித்துக்கொள். பார்த்துக்கொள் என பதில் கடிதம் எழுதுகிறான் வில்லன் 


வில்லன்   ரிலீஸ்   ஆகி வருகிறான் . வில்லியை  பணத்துக்காக   விலைமகள்   ஆக்குகிறான் .  வீட்டுக்கே   கஸ்ட்மர்ஸ்  வருகிறார்கள் .வில்லன் வில்லி   தம்பதிக்கு மொத்தம்   10 குழந்தைகள் .இந்த  பத்தில்  இவர்கள்   இருவருக்கும் பிறந்தது எத்தனை ? கஸ்ட்மர்சுக்குப்பிறந்தது எத்தனை ? என்ற  விபரம் ( அவர்களுக்கே ) தெரியவில்லை 


கிட்டத்தட் ட   20    வருடங்கள்  வில்லனும், வில்லியும்   எந்த பிரச்சனையிலும் சிக்காமல் வாழ்ந்து வருகின்றனர் . ஸ்கூலில்  இவர்களது  குழந்தைகள்   விளையாட்டாகப்பேசியது  மாட் ட   வைக்கிறது . அதாவது  நாம் எல்லோரும் அம்மா,அப்பா பேச்சைக்கேட்டு ஒழுங்காக நடந்துக்கணும் , இல்லை எனில்  ஹெதர் க்கு நடந்தது போல  நமக்கும் நடக்கும், நம்மைக்கொன்று   வீட்டுக்குள் புதைத்தது விடுவார்கள்   என பேசிக்கொள்கிறார்கள். இதைக்கேட்ட சக மாணவர்கள் வெளியில்  பரப்ப  போலீஸ்   வில்லனைக்கைது   செய்கிறது 



விசாரணையில்   ஆரம்பத்தில் வில்லன் வாயைத்திறக்கவில்லை . ஆனால்  7 வயதான குழந்தை  ஹெதரின்  டெட் பாடி கண்டெடுக்கப்படுகிறது . அதற்குப்பின்  கொஞ்சம்    கொஞ்சமாக உண்மைகளை வில்லன் வாக்குமூலமாகக்கொடுக்கிறான் 

 அந்தக்குழந்தை  போக   வேறு இரு டீன் ஏஜ் பெண்களின்  சடலங்கள்   கிடைக்கின்றன .. அதில் ஒரு பெண்  நிறை மாத கர்ப்பிணி  என்பது    தெரிய   வருகிறது .விசாரிக்கும்போது ஒரு பெண்ணை நானாகக்கரெக்ட்  பண்ணினேன் . இன்னொருத்தி   அவளின்   தோழி .  ஆரம்பத்தில் எனக்கு இணக்கமாக இருந்தார்கள் , என்னை எதிர்த்ததால் கொலை செய்து புதைத்து விடட்டேன்  என   கூலாக பதில்   சொல்கிறான் வில்லன் 

  போலீஸ்   உஷார்  ஆகி  அந்த ஏரியாவில்  மிஸ்ஸிங்க்  கேஸ்  யார் யார்  என  விசாரிக்கிறது ..மொத்தம்  9 பெண்கள்  மேலும்   சடலமாகக்கிடைக்கிறார்கள் .    ஆக  மொத்தம்  1+ 2+ 9 = 12   கொலைகள்   செய்து   இருக்கிறான் 

 இப்போது  போலீசுக்கு   சந்தேகம்   வந்து   முதல் மனைவி  , மகள்  இருவருக்கும் என்ன ஆனது என விசாரிக்கும்போது   வில்லன்  முதல் மனைவியைத்தான் தான் கொன்றதாக வாக்கு மூலம் தருகிறான் 

முதல்    மனைவியின்  மகளை   வில்லி தான் கொன்று   இருக்க வேண்டும் . ஆனால்   வில்லி அதை ஒத்துக்கொள்ளவில்லை . வில்லனும்   வில்லியைக்காப்பாற்ற   எல்லாக்கொலைகளையும் செய்தது நான் தான்  என சொல்கிறான் 

நாங்கள்   இருவரும் காரில் போவோம் .யாராவது   பெண்  லிப்ட் கேட் டால்   அவளை  காரில் ஏற்றிக்கொண்டு  வீட்டுக்கு அழைத்து வந்து பாலியல் வன் கொடுமை செய்து தொழிலுக்கு  யூஸ்   செய்வோம் . அடம் பிடித்தால்  கொலை தான்    என்கிறான் 

இவர்கள்    வீட்டில்   வேலைக்காரி ஆக  பணி  புரிந்த  பெண் தான்   சாட் சி .அவளையும்  விட்டு  வைக்க   வில்லை . பாலியல் வன்கொடுமைக்குப்பின் அவள்   தப்பி விடுகிறாள் 


வில்லியும்   கைது  செய்யபப்டுகிறாள் . விசாரணையில்   வில்லனைப்போல வில்லி ஒத்துக்கொள்ளவில்லை . இவர்களுக்கு எதிராக எந்த சாடசியும் இல்லை , தடயமும் இல்லை . தீர்ப்பு    என்ன ஆனது ? வில்லி   சிக்கினாளா ? தப்பினாளா ? என்பதை   நெட் பிளிக்சில் காண்க  

இந்த   வெப்  சீரிஸ்  ல நடிகர் நடிகைகள்   யாரும் கிடையாது .  கொலையாளிகள்  இருவர் , போலீஸ்  ஆபீசர்ஸ் , கொலை ஆனவர்களின் உறவினர்களின் பேட்டிகள்  தொகுப்புதான் 


சபாஷ்  டைரக்டர்


1     கொலைகள் ,பாலியல்  வன்கொடுமைகள்  நடந்திருந்தாலும்  அனைவரும் பார்க்கும் வண்ணம்  அடல்ட்  கண்ட் டென்ட்  இல்லாமல்   கண்ணியமாக  தந்த   விதம் 


2  டாகுமெண்டரி  பார்க்கும்   போர்   உணர்வே   இல்லாமல்   க்ரைம் த்ரில்லர்   பார்ப்பது போல ஒரு விறுவிறுப்பு , பரபரப்பு  கொண்டு   உருவாக்கிய விதம் 


3  சம்பவம் நடந்த லைவ் லொக்கேசன் , மீடியா ரிப்போர்ட்   எல்லாம் அருமை 


  ரசித்த  வசனங்கள் 


1 சாதாரண வழக்குகளில் ஆதாரங்களை குற்றவாளியிடம்  காட்டி  விளக்கம் கேட்போம் . ஆனால்   இந்தக்கேஸில் ஆதாரங்களை  இனி தான் சேகரிக்க வேண்டும் . ஆனால்   குற்றவாளியி டம்  உண்மைகளைக்கறக்க வேண்டும்., இது ஒரு சவால் 


2  லாயர்  லேங்க் வேஜில்  இதை பிஷ்ஸிங்க்  எக்சசைஸ் என சொல்வோம் 


3  ஒரு   வக்கீல்   கிளையண்ட் சொல்வதைத்தான் நம்ப முடியும் 



4  நாம்    நிறைய பி ஆபத்துக்களை எதிர்கொள்கிறோம் , ஆனால் அது நமக்குத்தெரிவதில்லை 


5  பதில்   சொல்றவங்களுக்கு எவ்ளோ பவர் கொடுக்கிறோம் என்பதுதான்   இன்டடர்வியூவுக்கான  வியூகம்.


6  க்ரைம்  இன்வெஸ்டிக்கேஷன்ல  ரொம்ப முக்கியம் சம்பவ இடத்துக்குப்போவது 


7 எல்லோருக்கும் முன்னால   கதையைக்கண்டுபிடிப்பது  பிரஸ் சோட வேலை .பிரத்யேகமா எதுனா கண்டுபிடிப்பாங்க 


8  ஆதாரங்களைக்கொடுப்பதால் ஏற்படும்  பயன்களை  க்ளையண்ட்டுக்கு  சொல்வது லாயரின் வேலை  ஆனா முடிவு எடுப்பது க்ளையண்ட்  தான் 



9 கேஸ்   நடந்துட்டு இருக்கும்போது  சாட் சிக்குப்பணம் கொடுக்கக்கூடாது , ஆனா  தீர்ப்பு வந்த பின் தரலாம் . அப்படித்தருவோம் என வாக்குறுதியும் தரலாம் 


10   எந்த உணர்ச்சியையும்   வெளிக்காட்டாம இருக்கணும் 


11  ஒவ்வொரு  முறை   நாம் குட்  நைட்   சொல்லும்போதும் குட் பை சொல்லும்போதும்   ஐ லவ் யூ   சொல்லணும் . ஏன்னா   எது   கடைசி குட்  நைட்    என்பது நமக்குத்தெரியாது 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   சம்பவம்  நடந்து  அதாவது   கொலை நடந்து  25 வருட ங்கள்   கழித்து  கொலையானவர்களின்   உறவினர்களின்  பேட்டி  எடுக்கப்படும்போது  அவர்கள்  கண்ணீரே   வராமல்  செயற்கையான   சோ கத்தைக்காட்டுகிறார்கள் .இயல்பாக இருக்க விட்டிருக்கலாம்  விஜய்  டி வி ல  அழ   வைப்பது போல  செய்திருக்க வேண்டாம் 


2    வில்லியை சிக்க   வைக்க  போலீஸ்  ரகசிய  டெலி போன்  ஒட்டுக்கேக்கும்  கருவி  வில்லி யின் வீட்டில் பொரு த்துகிறார்கள் .அது கூடவா வில்லியால் யூகிக்க முடியாது ? சாமார்க்தி யமாக  தப்பிக்கிறாள் 


3  கோர்ட்டில்  ஆஜர் ஆகும்போது   வில்லனும் , வில்லியும் நீண்ட இடைவெளிக்குப்பின்  சந்திக்கிறார்கள் .அப்போது   வில்லி  நடந்து  கொண்ட விதம் தான்   வில்லனை   புதிய முடிவு  எடுக்க வைக்கிறது .அதை வில்லி யூகிக்க மாட் டாளா ? எதனால்   அப்படி  நடந்து  கொண்டாள் ?


4  வில்லன்   தனது இரண்டாம் மனைவிக்கு  கஸ்ட்மர்கள்   மூலம் பிறந்த   பெண் குழந்தைகளை   பாலியல் வான் கொடுமை  செய்ததை   வில்லி எதனால் கண்டிக்கவில்லை ?  

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - CLEAN U 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - க்ரைம்  த்ரில்லர்   ரசிகர்கள்   குடும்பத்துடன் பார்க்கலாம் .  ரேட்டிங்  3 / 5 


Fred West
Fred and Rose West in the mid-1980s
Born
Frederick Walter Stephen West

29 September 1941
Died1 January 1995 (aged 53)
Cause of deathSuicide by asphyxiation
Spouses
Catherine Costello
(m. 1962; murdered 1971)
 
(m. 1972)
ConvictionsEarlier convictions for:
Criminal penaltyDied by suicide prior to murder conviction
Details
Victims12–13+
Span of crimes
1967–1987
CountryEngland
Date apprehended
24 February 1994; 31 years ago

0 comments: