Thursday, May 22, 2025

THE UGLY STEPSISTER (2025) - நார்வே , ஆங்கிலம் - சினிமா விமர்சனம் ( பாடி ஹாரர் பிலிம் )

         

 பெர்லின் இன்ட் டர்நெஷனல்   பிலிம்   பெஸ்டிவலில்  சிறந்த  படம்  என்ற  பிரிவுக்காக நாமினேட் செய்யப்பட் ட படம் இது .7/3/2025   அன்று  நார்வே யில்  ரிலீஸ்  ஆன இந்தப்படம்  884 கோடி டாலர்   வசூலித்து உள்ளது . சிறந்த  ஒளிப்பதிவு ,  சிறந்த  ஆர்ட்  டைரக்சன் , சிறந்த    காஸ்ட்யூம் டிசைன் ,  சிறந்த  மேக்கப்  என்று   நான்கு  விருதுகளை ஆஸ்காரில்  அடித்து  விடும் என  விமர்சகர்களால்  கணிக்கப்படுகிறது                


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகிக்கு  ஒரு தங்கை , ஒரு அம்மா  ... அப்பா இல்லை . நாயகியின்  அம்மா   ஒரு   பெரிய  பணக்காரனைப்பார்த்துக்கல்யாணம் பண்ணிட்டா வாழ்க்கைல   செட்டிலாகிடலாம் னு நினைக்கறாங்க . மனைவியை  இழந்த  ஆனால் ஒரு மகள் உள்ள  பணக்காரனைக்கல்யாணம்  பண்ணிக்கறாங்க    .ஆனா   அந்த  ஆள்  திடீர்   என இறந்து  விடுகிறார் . சொத்து  சல்லிப்பைசா கூட இல்லை .  சும்மா ஏமாத்தி  இருக்கார் . இப்போது   நாயகியின் அம்மாவுக்கு   என்ன செய்வது என  தெரியவில்லை 



இனிமேல்  ஒரு ஆளைப்பார்த்துக்கல்யாணம்  பண்ண   தனக்கு   வயசு  இல்லை .அதனால  நாட்டின் இளவரசரை  மயக்கி   தன  மகள்களில்  யாராவது   ஒருவரை   ரெடி  பண்ணி    வாழ்க்கைல   செட்டிலாகிடலாம் னு நினைக்கறாங்க . .


நாயகியின்  தங்கை  இன்னும் பூப்பெய்தவில்லை . அதனால்   நாயகியை  ரெடி பண்ண  அவளது அம்மா முடிவு செய்கிறார் . அழகில்  ஒரு படி  குறைவாக இருப்பதால்  நாயகிக்கு பழங்கால  பிளாஸ் டிக் சர்ஜரி  செய்து  நாயகியை அழகாக்க முயல்கிறார் .. நாயகியின் அக்கா  அ தாவது  நாயகியின் அம்மாவின் 2வது கணவருக்குப்பிறந்த பெண்  உடல்  எடை அதிகமாக இருப்பதால்  வெயிட் லாஸ்க்காக  நாடாப்புழுவை சாப்பிடுகிறார் ( உவ்வேக் ) 


 இளவரசரை மயக்குவதற்காகத்தயார்  செய்யப்பட் ட  நாயகியின் அக்கா  ஒரு சாதா  வாலிபனைக்காதலிக்க   அதை நாயகி தன அம்மாவிடம்சொல்கிறாள் . இதனால்   கடுப்பான  அம்மா   தன  சக்களத்தி  மகளை   அரண்மனையில் வேலைக்காரி ஆக்குகிறாள் . அவளை  அனைவரும்   சிண்ட்ரெல்லா  என அழைக்கிறார்கள் 


அழகிய பெண்களின் சுயம்வர அணிவகுப்பில்  இளவரசன்   முதலில் நாயகியைத்தான் தேர்வு செய்து ஆவலுடன் நடனம் ஆடுகிறான் . திடீர்   என   சிண்ட்ரெல்லாவைப்பார்த்ததும் அவளுடன்  நடனம் ஆடுகிறான் 


 இதற்குப்பின் நாயகி என்ன செய்தாள் ? என்பது மீதி திரைக்கதை 

நாயகி  ஆக  லியா மைரன்  நடிப்பு அருமை . கண் இமை  முடிகளை  புதிதாக  செயற்கையாக  வைப்பது எல்லாம் கொடூரம் . நாயகியின் அக்காவாக தியா சோபி லோச்னாஸ்  அழகான முகம் , அமைதியான தோற்றம் என கவர்கிறார் . நாயகியின்  தங்கை ஆக ப்ளோ  பேகரிலி  பருவம் அடையாத பெண்ணாக  வந்து போகிறார் , அதிக வாய்ப்பில்லை நாயகியின் அம்மாவாக  ஆனே  டால் டோர்ப்  வில்லி ரோல்  போல   நடித்திருக்கிறார் 


  ஒளிப்பதிவு மார்செல் , ஜிஸ்கைன்ட்     ஆகிய இருவரும்  செய்திருக்கிறார்கள் .  பிரமாதமான கேமரா ஒர்க் . நாயகி , நாயகியின் அக்கா   இருவரையும் க்ளோசப் .,லாங்க் ஷாட் களில் அழகாககாட்டி உள்ளார்கள் .இசை  காடா  வில்டே  டூர் .அரச   கால இசையை மெலோடியா பின்னணி இசை அமைத்திருக்கிறார் ஒலிவியா   தான் எடிட்டிங்க்  . டைம்   டியூரேசன்  105 நிமிடங்கள் .படம் ரொம்ப ஸ்லோ 

சகோதரர்கள்   கிம் எழுதிய அஸ்செ ன்படெல்   என்ற  புத்தகத்தைத்தழுவி  எமிலி பிளிச்பெ ல்ட  திரைக்கதை   அமைத்து இருக்கிறார் .இயக்கமும் இவரே 

சபாஷ்  டைரக்டர்

1    அட்டென்சன்  சீக்கிங்க்கிற்காக  நெகடிவ் டைட்டில் வைத்தது 


2 மெயின் கதைக்கு  சம்பந்தம் இல்லை என்றாலும் வேண்டும் என்றே  ஒரு அடல்ட் கண்ட்டென்ட்  சீனைத்திணித்தது 


3  ஆர்ட்   டைரக்சன் , ஒளிப்பதிவு  போன்ற   வலுவான டெக்கினிக்கல் டீமை நிர்வகித்தது 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  சிண்ட்ரெல்லாவின்  செருப்பு சைசுக்கு  ஏற்றபடி  நாயகி  தன கால் பாதத்தை  வெட்டிக்கொள்ளும் கொடூரமான  மடத்தனமான காட் சி 


2   உடல்   எடைக்குறைப்புக்கு  ஆரோக்கியமான  வழி   அளவான  ஆரோக்கியமான சாப்பாடும், உடல் பயிற் சியு ம், யோகாவும்  , வாக்கிங்க் ஜாகிங்கும் . இவற்றை  எல்லாம் விட்டுட்டு  லூஸ் தனமாக   நாடாப்புழு வை சாப்பிடுவது  கேவலம் 


3  ஸ்ரீதேவி  தன மூக்கை பிளாஸ்டிக்  சர்ஜரி  செய்து கொண்டது போல   நாயகி  செய்வது , அதை விலாவாரியாகக்காட்டுவது கொடூரம் 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - 18+ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - சிண்ட்ரெல்லா  என  கவிதையான  கதையை  , கேரக்டரை  கேவலப்படுத்தி கர்ண கொடூரமாக சிதைத்து வைத்திருக்கிறார்கள் . ஆஸ்கார்   அவார்டே வாங்கினாலும் இது ஒரு டப்பாப்படமே . ரேட் டிங்  1.75 / 5 



0 comments: