ஒரு ஹீரோவின் படம் மெகா ஹிட் ஆனால் உடனே அவரது அடுத்த படத்துக்கு லக்கி பிரைஸ் அடிக்கும் . மிகப்பெரிய எதிர்பார்ப்பு உ ருவாகும் . படம் சுமாராக இருந்தாலும் அந்த எதிர்பார்ப்பை வைத்தே ஓப்பனிங்க் டே கலெக்சனை அள்ளி விடுவார்கள் . அந்ததங்கத்தருணத்தை இந்தப்படக்குழு இழந்து விட்ட்து . மகாராஜா என்ற சூப்பர் டூப்பர் ஹிட்டுக்குப்பின் வெளியாகும் விஜய் சேதுபதி படம் , ஆனால் எந்த விளம்பரமும் இல்லாமல் சத்தம் இல்லாமல் வந்து இருக்கிறது .இது தேறுமா? என்பதைப்பார்ப்போம்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகியோட அப்பாவின் மறைவுக்குப்பின் நாயகியின் அம்மா வேறு ஒரு ஆளுடன் லிவ்விங்க் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்தார். நாயகியின் அம்மா வின் மறைவுக்குப்பின் அந்த ஆள் அதாவது நாயகியின் சித்தப்பா அந்த வீட் டை ஆக்ரமித்துக்கொள்கிறார் . . இவர் தான் வில்லன் இவர் ஒரு போலீஸ் ஆபீசரும் கூட . வீட்டுக்கே தன கேர்ள் பிரண்ட்ஸை அழைத்துக்கொண்டு வந்து அடடூழியம் செய்து வருகிறார் வில்லன். வில்லனின் டார்ச்சர் தாங்காமல் நாயகி அவனிடம் இருந்து எப்படியாவது தப்பினால் போதும் என நினைத்து வில்லனிடம் கேட்கிறார் . என்னையும், இந்த வீடடையும் வீட்டுப்போக என்ன டிமாண்ட் செய்கிறாய் ?. உடனே வில்லன் வீட்டின் மதிப்பைக்கணக்குப்போட்டு 10 லட்சம் கேட்கிறான்
நாயகன் மலேசியாவுக்குப்பிழைப்புக்காக வருகிறார் . ஒரு கடையில் சமையல் கலைஞனாக வேலைக்கு சேர காமெடியன் உதவி செய்கிறார் . நாயகி ஒரு கடையில் சேல்ஸ் கேர்ள் ஆக வேலை செய்கிறார் . நாயகனுக்கு நாயகியைக்கண்டதும் காதல் . தொடர்ந்து நாயகியை பாலோ பண்ணி நாயகியையும் காதலிக்க வைக்கிறார் . நாயகியின் பணப்பிரச்சனையை தீர்க்க நாயகன் ஒரு சூதாடட கிளப்பில் போய் சீட்டு விளையாடுகிறான் . அங்கே இன்னொரு வில்லனால் ஏமாற்றப்பட்டு தோற்கடிக்கப்படுகிறான் . இப்போது நாயகன் இந்த வில்லனுக்கு ஒரு கோடி ரூபாய் பணம் தர வேண்டும் . நாயகனின் பாஸ்போர்டடை வில்லன் பிடுங்கி வைத்துக்கொள்கிறான்
வில்லன் நெம்பர் 2 விடம் நாயகன் பட் ட கடன் , வில்லன் நெம்பர் 1 இடம் நாயகி பட்டிருக்கும் கடன் இரண்டையும் தீர்க்க நாயகன் ஒரு வங்கியில் கொள்ளை அடிக்கிறான் . இதற்குப்பின் நாயகன் சந்திக்கும் சிக்கல்கள் , சவால்கள் தான் மீதி திரைக்கதை
நாயகன் ஆக விஜய சேதுபதி நடித்திருக்கிறார் .இவரது கேரக்ட்டர் டிசைன் தெளிவாக இல்லை , ஆனால் நடிப்பு ஓகே ரகம் . அசால்ட் ஆக நடித்திருக்கிறார் .
காமெடியன் ஆக யோகி பாபு பல மாமாங்களுக்குப்பின் இதில் சிரிக்க வைக்கிறார் .
நாயகி ஆக ருக்மணி வசந்த் இதில் அறிமுகம் , குணா ரோஷினியின் சித்தி பெண் போல சாயல் . அழகு , ,
இளமைப்பொலிவு நடிப்பு அனைத்தும் ஓக்கே . நாயகியின் தோழி ஆக திவ்யா பிள்ளை அதிக வேலை இல்லை , வந்தவரை ஓகே . நாயகியின் சித்தப்பாவாக , வில்லன் ஆக பப்லு பிரித்விராஜ் . இவரைப்பார்த்தால் வில்லன் போலவும் இல்லை , போலீஸ் ஆபீசர் போலவும் இல்லை. தவறான செலக்சன் .
இன்னொரு வில்லனாக கேஜிஎப் அவினாஷ் . இவரது கேரக்ட்டர் டிசைன் வலுவாக இல்லை . இரண்டு வில்லன்கள் இருந்தும் டம்மி வில்லன்கள் ஆனதால் நாயகன் ஜெயிப்பதில் சவால் எதுவும் இல்லை .
மலேசியாவில் மொத்தப்படத்தையும் எடுத்திருக்கிறார்கள் .கரண் பி ராவத்தின் ஒளிப்பதிவு அருமை . நாயகி , நாயகனின் தோழி , நாயகன் , காமெடியன் அனைவரையும் அழகாகக்காட்டி இருக்கிறது கேமரா . பின்னணி இசை சாம் சி எஸ் , ஒரே இரைச்சல் .ஆக்சன் சீன்களில் பிஜிஎம் காது வலிக்க ஒலிக்கிறது . பாடல்களுக்கான இசையை ஜெஸ்ட்டின் பிரபாகர் தந்துள்ளார் . சுமார் ரகம்
கதை , திரைக்கதை எழுதி இயக்கி தயாரித்து இருக்கிறார் ஆறுமுககுமார்
சபாஷ் டைரக்டர்
1 நாயகியின் அழகு , இளமைப்பொலிவு , முக வசீகரம் அனைத்தும் அருமை .
2 யோகிபாபுவின் காமெடி ஒர்க் அவுட் ஆகி இருப்பது உலக அதிசயம்
3 மலேசியாவில் லைவ் லொக்கேஷனில் நடத்திய படப்பிடிப்பு
4 விஜய் சேதுபதியின் ஆர்ப்பாட் டம் இல்லாத நடிப்பு
ரசித்த வசனங்கள்
1 சின்ன வயசுல எங்கப்பா செலவுக்குக் காசு தராததால் அவர் கிட் டே திருடி இருக்கேன் . உங்க கிட் டே திருட மாட் டேன்
நானும் காசு தர மாட் டேன்
2 தற்செயலாக நடப்பதெல்லாம் கடவுள் கிருபை
3 இவனை எதனால உயிரோட எரிக்கறாங்க ?
கடன் வாங்கினவன் ஓடிட் டான் , இவன் ஜாமீன் போட் டவன்
4 பணம் இருக்கறவன் அடிப்பான் , பணம் இல்லாதவன் அடி வாங்குவான் , இதுதான் இங்கே ரூல்.
5 டொக் டொக் டொக்
உள்ளே வராதீங்க
6 என் தலைக்கு மேல கத்தி தொங்கிட்டு இருக்கு , உனக்கு பொம்பள ஷோக்கு கேக்குதா?
7 போலீஸ்ல பிடிச்சுக்கொடுத்துடுவேன்னு போலீசையே மிரட்டாத
8 டே அறிவு , உனக்கு அறிவு பேருல மட்டும் தான் இருக்குது
கண்டுபிடிச்சுட்டா ங்களா?
9 முத முறையா தப்பு பண்ற இல்ல? கெட்ட கெட்ட கனவா வரும்
10 நாளை வர்ற பிரச்னையை இன்னைக்குத்தடுக்க முடியாது
11 அவனைப்பார்த்தா பயந்து போன் காலை கட் பண்ணினவன் மாதிரி தெரியலை , பயம்னா , என்னன்னே தெரியாதவன் காலைக்கட் பண்ணின மாதிரி இருக்கு
12 பயந்தா புதுசு புதுசா கற்பனைகள் வரும் '
13 ஹாய் டொக்கு ..
டே ய் ..ஹாய் ருக்குனு சொல்லு '''
14 சொந்தமா யோசிக்கத்தெரிஞ்சா நான்ஏன் உன் கூட இருக்கறேன் ?
15 நான் இல்லாம நீ எப்படி சமாளிப்பே ?
நீ இங்கே இருந்தாதான் பிரச்சனை , கிளம்பு
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 பேங்க் கொள்ளைக்காட்சி பெட்டிக்கடையில் கடலை மிட் டாய் திருடுவது மாதிரி மேம்போக்காக நம்ப முடியாத வகையில் படமாக்கப்பட்டுள்ளது
2 நாயகன் சீட்டு விளையாட்டில் ஜெயிப்பது , பின் ஏமாற்றப்படுவது எல்லாம் எல்லோருக்கும் பிடிக்காது . போர் அடிக்கும்
3 நாயகன் , நாயகி ரொமாண்டிக் போர்சன் இன்னமும் அழகாக காட்டி இருக்கலாம்
4 மலேசியன் போலீஸ் எல்லாம் மாங்கா மடையர்கள் என்பது போல சித்தரிக்கப்பட் ட பல காட் சிகள்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 16+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - வழக்கமான மசாலாக்கதைதான். முதல் பாதி ஜாலி . பின் பாதி இழுவை . நாயகியின் அழகுக்காகப்பார்க்கலாம் . ரேட்டிங்க் 2.25 / 5 . விகடன் மார்க் யூகம் - 40
ஏஸ் | |
---|---|
![]() திரைப்பட பதாகை | |
இயக்கம் | ஆறுமுக குமார் |
தயாரிப்பு | ஆறுமுக குமார் |
கதை | ஆறுமுக குமார் |
இசை | இசை: ஜஸ்டின் பிரபாகரன் பின்னணி இசை: சாம் சி. எஸ். |
நடிப்பு | |
கலையகம் | 7சிஸ் என்டர்டெயின்மென்டு |
வெளியீடு | 23 மே 2025 |
ஓட்டம் | 154 நிமிடங்கள்[1] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மொத்த வருவாய் | மதிப்பீடு ₹ 1 கோடி[2] |
0 comments:
Post a Comment