இதன் திரைக்கதை நான் லீனியர் கட்டில் சொல்லப்பட்டிருக்கும் . விருமாண்டி பட பாணியில் பாதிக்கப்பட் ட நாயகனின் பார்வையில் நாயகனின் அம்மா எழுதிய நாவல் மூலமாக சொல்லப்படும் சம்பவங்கள் தனி .கடைசியில் நாயகியின் பார்வையில் சொல்லப்படும் சம்பவங்கள் தனி
2015ல் ரேணி நைட் என்பவர் எழுதிய நாவலைத்தழுவி எடுக்கப்பட் ட சீரிஸ் இது அபோன்சோ குரான் என்பவர் தான் திரைக்கதை ,இயக்கம்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகியின் கணவன் திருமணம் ஆகும் வரை ஒழுக்கமாக இருந்தவன் . நாயகி தான் அவனுக்கு முதல் பெண் ஸ்பரிசம் . ஆனால் திருமணத்துக்குப்பின் நாயகிக்கு அவன் உண்மையாக இல்லை .படத்தின் ஓப்பனிங்க் சீனிலேயே நாயகியின் கணவன் வேறொரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பதில் தான் ஆரம்பிக்கிறது .
நாயகி , அவளது கணவன் இருவருக்கும் ஒரு மகன் பிறக்கிறான் . 5 வருடங்கள் இல்லற வாழ்க்கை சுமூகமாகப்போகிறது . நாயகி தன குடும்பத்துடன் டூர் போகிறாள் .கடைசி நேரத்தில் அவளது கணவன் வரவில்லை . என்னைத்தனியே விட்டு விட்டு செல்ல வேண்டாம் என நாயகி மன்றாடிக்கேட்டுக்கொள்கிறாள் , ஆனால் கணவன் கேட்கவில்லை
டூரில் மகனுடன் நாயகி ஜாலியாகப்பொழுதைக்கழிக்கிறாள்
நாயகனுக்கு 18 வயது , டீன் ஏஜ் மாணவன் .அவனுக்கு ஒரு கேர்ள் பிரன்ட் உண்டு . இருவரும் ஜாலியாக ரவுண்ட் அடித்துக்கொண்டிருக்கிறார்கள் . அப்போது நாயகனின் காதலிக்கு அவளது சித்தி சீரியஸ் ஆக இருப்பதாகத்தகவல் வருகிறது . அவள் கிளம்பி விடுகிறாள் .நாயகன் தனியாக இருக்கிறான்
க்ளப்பில் சரக்கு அடிக்கும்போது நாயகன், நாயகி இருவருக்கும் அறிமுகம் உண்டாகிறது
இப்போது சொல்லப்போவது நாயகனின் அம்மா எழுதிய நாவல் வெர்சன் ல சொல்லப்பட்ட சம்பவங்கள் .
நாயகி நாயகனை தூண்டி மயக்குகிறாள் . உறவு கொள்கிறாள் . அடுத்த நாள் நாயகி கிளம்ப
இருக்கும்போது நாயகன் நானும் உன்னுடனே வருகிறேன் என்கிறான் . நாயகி மறுக்கிறாள் . எனக்கு கணவன் உண்டு . நான் என் வழியே போகிறேன் , நீ உன் வழியே போ என்கிறாள் . நாயகன் கேட்கவில்லை
மாலையில் பீச்சில் நாயகி தன் மகனுடன் ஓய்வெடுக்கும்போது கண் அசந்து தூங்கி விடுகிறாள் விழித்துப்பார்க்கும்போது அருகில் மகன் இல்லை . பதறி தேடிப்பார்த்தால் அவன் கடலில் தூரத்தில் மாட்டிக்கொண்டு விட் டான் . நாயகன் நாயகியின் மகனைக்காப்பாற்றுகிறான் . ஆனால் நாயகன் கடலில் மூழ்கி இறந்து விடுகிறான்
நாயகி நினைத்திருந்தால் நாயகனைக்காப்பாற்றி இருக்க முடியும் . ஆனால் வேண்டும் என்றே நாயகி அதைத்தவிர்த்து விடடாள் .காரணம் நாயகனைக்காப்பாற்றினால் நாயகிக்கு அபாயம் . நாயகி பின்னாலேயே வருவான் . எதற்கு வம்பு ? என விட்டு விடடாள்
நாயகனின் கேமராவில் இருந்த சில போட்டோ க்களை வைத்து நாயகனின் அம்மா வும் அப்பாவும் நாயகியை அடையாளம் அறிந்து கொள்கின்றனர் . நாயகனின் அம்மா ஒரு ரைட் டர் என்பதால் தான் கண்ட போட்டோ க்களை வைத்து இது தான் நடந்திருக்கும் என்ற யூகத்தில் ஒரு நாவல் எழுதி சொந்தமாக பப்ளிஷ் செய்கிறார்
நாயகன் நாயகியை எடுத்த கிளாமரான போட்டோக்களை நாயகியின் கணவனுக்கும் , நாயகியின் மகனுக்கும் தனித்தனியே அனுப்புகிறான் நாயகனின் அப்பா . இதனால் குடும்பத்தில் குழப்பம் வருகிறது .
தான் ஒழுக்கம் இல்லாதவனாக இருந்த போதிலும் தன் மனைவி கற்புள்ளவள் ஆக இருக்க வேண்டும் என நினைத்து நாயகியின் கணவன் அவளைப் பிரிகிறான் . தன அம்மாவையே மோசமான நிலையில் பார்த்ததால் நாயகியின் மகன் மன பதட் டம் அடைந்து போதை மருந்து உட்கொண்டு சீரியஸ் கண்டிஷனில் ஹாஸ்ப்பிடலில் அட்மிட் ஆகிறான்
தன மகன் இறந்த துக்கத்தை நாயகியும் அனுபவிக்க வேண்டும் என நினைத்த நாயகனின் அப்பா நாயகியின் மகனைக்கொல்ல ப்போகிறார் . இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான் மீதிக்கதை
நாயகியின் தன்னிலை விளக்கமாக வேறு ஒரு பாய்ண்ட் ஆப் வியூவில் ஒரு கதை சொல்லப்படுகிறது
5 வயது மகனின் அம்மாவாக வரும் 25 வயது ஆன நாயகி ஆக ஒரு நடிகையும் , 20 வருடங்கள் கழித்து 45 வயது ஆன நாயகி ஆக வேறு ஒரு நடிகையும் நடித்திருக்கிறார்கள் . முதலாமவர் அழகு , இளமை .இரண்டாமவர் குணச்சித்திர நடிப்பு . இருவருமே நடிப்பில் சிறப்பு .நாயகியின் கணவர் ஆக வருபவர் பரவாயில்லை ரகம் . நாயகன் ஆக வரும் டீன் ஏஜ் மாணவன் நடிப்பு சிறப்பு .நாயகனின் அப்பா வில்லன் போல நடந்து கொள்வது அருமை . ஒளிப்பதிவு ,இசை கச்சிதம்
சபாஷ் டைரக்டர்
1 நான் லீனியர் கட்டில் கதை சொன்ன விதம் அருமை . பிளாஷ்பேக் சீன் .தற்கால சீ ன் என குழப்பம் இல்லாமல் சொன்ன விதம் அழகு
2 நாயகி தான் நாயகனை மயங்கினாள் என்பது போல நாயகனின் அம்மா கற்பனையாக நாவலில் விவரிக்கும் சம்பவங்கள் செம கிளு கிளுப்பு
ரசித்த வசனங்கள்
1 அவன் பலமானவன் இல்லை , ஆனால் அப்படி நினைத்த்துக்கொண்டான்
2 மேரேஜ் என்பது டெலிகேட் பொசிசன் தான் ., ஆனால் உனக்கு மட்டுமல்ல,உலகில் எல்லோருக்கும் தான்
3 50 வருசமா ஒரே பாடத்தை திருப்பி திருப்பி நடத்தி போர் அடிக்குது
4 அவளுக்கு உதவி செய்யவே என்னை விடமாட் டா
5 இப்படி ஒரு கொடூரம் நடந்தது தெரியாமலேயே சூரியன் உதித்தது
6 நல்ல பெண்ணுக்கு கள்ளக்காதலுக்கு டைம் இருக்காது
7 ஹூம் , பேய் வந்து தானாக்கதவைத்தட்டுது
8 அவள் தன தவறுகளை உணரவுமில்லை , மன்னிப்புக்கேட் கவும் விரும்பலை
9 வயதானவர்கள் பேஸ்புக் யூஸ் பண்றாங்க , யூத்-ங்க இன்ஸடாகிராம் யூஸ் பண்றாங்க
10 மகனுக்கு ஒரு ஆபத்து எனில் உடனடியாகக்களத்தில் குதித்து அவர்களை காப்பாற்ற முயல்வதில் அம்மாக்களை விட அப்பாக்கள் தான் முன்னிலை
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 ஹாஸ்ப்பிடலில் சி சி டி வி கேமரா இருக்கும்போது வில்லன் எப்படி நாயகியின் மகனைக்கொல்ல முயல்கிறான் ?
2 வில்லனின் மகனை நாயகி கொன்றதாக வில்லன் நினைப்பதால் வில்லனால் தன மகனின் உயிருக்கு ஆபத்து என்பதை நாயகியின் கணவன் யூகிக்காதது எப்படி ?
3 நீச்சல் அறிந்த நாயகன் நாயகியின் மகனைக்காப்பாற்றி விட்டு அவன் மட்டும் கடல் நீரில் மூழ்கி இறப்பது எப்படி ?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 18+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - கதை சொல்லும் உத்தி , நாயகியன் அழகுக்காகப்பார்க்கலாம் .முதல் 4 எபிசோட்களில் முடிக்க வேண்டியது .இழுத்து விட் டார்கள் . 7 வது எபிசோடில் நாயகியின் வெர்சன் சொல்லப்படுது . 5, 6 ஆகிய எபிசோட்களைப்பார்க்காவிடடாலும் கதை புரியும் . ரேட்டிங்க் 3/ 5
Disclaimer | |
---|---|
![]() Promotional poster | |
Genre | |
Based on | Disclaimer by Renée Knight |
Written by | Alfonso Cuarón |
Directed by | Alfonso Cuarón |
Starring | |
Narrated by |
|
Composer | Finneas O'Connell |
Country of origin |
|
Original languages |
|
No. of episodes | 7 |
Production | |
Executive producers |
|
Production locations |
|
Cinematography |
|
Editors |
|
Running time | 45–55 minutes |
Production companies | |
Original release | |
Network | Apple TV+ |
Release | October 11 – November 8, 2024 |
0 comments:
Post a Comment