ஸ்பாய்லர் அலெர்ட்
வில்லனுக்கு சினிமா விமர்சகர்களைக்கண்டால் பிடிக்காது . ஒவ்வொரு சினிமா விமர்சகர் ஆக டார்கெட் வைத்து ஸ்பெஷல் ஷோ இருக்கு , குடும்பத்துடன் வரவும் என அழைத்து அவங்களைக்காலி பண்ணும் கேரக்ட்டர்
நாயகன் ஒரு சினிமா விமர்சகர் . யு ட்யூபில் சினிமா விமர்சனம் செய்பவர் . இவருக்கும் அதே போல அழைப்பு வருகிறது .. இவரும் குடும்பத்துடன் போய் தியேட்டரில் மாட்டிக்கொள்கிறார் .அவர் தன குடும்பத்தை எப்படிக்காப்பாற்றினார் என்பது மீதி திரைக்கதை
நாயகன் ஆக சந்தானம் , மாறுபட்ட கெட்டப் ரசிக்க வைக்கிறது . ஆனால் படம் முழுக்க அவர் ;ப்ரோ ப்ரோ எனப்பேசுவது சகிக்கவில்லை .. சில ஒன் லைனர் , சில காமெடி ஸீக்வன்ஸ் அவரைக்காப்பாற்றி
இருக்கிறது
நாயகி ஆக கீர்த்திகா திவாரி டூயல் ரோல் . நாயகனுக்கு ஜோடியாக ஒரு ரோல் , ஜெசிகா என்னும் பேய் ரோல் இரண்டிலும் அதிக வாய்ப்பில்லை
வில்லன் ஆக செல்வ ராகவன் .ஸ்கூல் பசங்க மாதிரி மேக்கப் போட்டு கடுப்பேற்றுகிறார்
போலீஸ் ஆபீசர் ஆக கவுதம் வாசுதேவ் மேனன் ஓகே ரகம் . அவர் இயக்கிய படங்களில் வரும் டூயட்டை அவருக்கே கொடுத்து நடிக்க வைத்த ஐடியா குட்
மொட் டை ராஜேந்திரன் தான் படத்தின் ஒரே ஆறுதல் . பல இடங்களில் சிரிக்க வைக்கிறார்
நாயகனின் அம்மாவாக வரும் கஸ்தூரி தெலுங்கில் பேசி காமெடி பண்ண முயற்சிக்கிறார் ., ம்ஹூம் .எடுபடலை
நாயகனின் அப்பாவாக வரும் நிழல்கள் ரவி காமெடி பண்ணுகிறேன் பேர் வழி என நம்மை கோபப்படுத்துகிறார் . மை டியர் மார்த்தாண்டன் படத்தில் கேவலமாக ஒரு சிரிப்பு சிரிப்பாரே அதே சிரிப்பை அதை விடக்கேவலமாக டெலிவரி செய்கிறார்
ரெடின் கிங்க்ஸ்லி சுமார் ரகம் .லொள்ளு சபா மாறன் அதிக வாய்ப்பில்லை
தீபக் குமார் பதி யின் ஒளிப்பதிவு அருமை .நிஜ உலகம் , பேய் உலகம் என கலர் டோனில் வெரைட்டி காட்டுகிறார்ரோஹித் ஆப்ரஹாம் தான் இசை . பாடல்கள் சுமார் ரகம் . பின்னணி இசை பரவாயில்லை பரத் விக்ரமனின் எடிட்டிங்கில் 133 நிமிடங்கள் படம் ஓடுகிறது .பின் பாதியில் 20 நிமிடங்கள் ட்ரிம் பண்ணி இருக்கலாம்
திரைக்கதை , வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் எஸ் பிரேம் ஆனந்த்
சபாஷ் டைரக்டர்
1 உயிரின் உயிரே பாட்டுக்கு கவுதம் வாசுதேவ் மேனன் நாயகனின் தங்கை காலைப்பிடிக்க அவரது காலை நாயகன் பிடிக்கும் சீன் நல்ல ஐடியா
2 லொள்ளு சபா மாறன் குளிருது என பதறுவதும் அந்த லேடி அரக்க பறக்க பொருட்களை சிதறடிப்பதும் காமெடி
3 மஞ்சு மேல் பாய்ஸ் மலையாளப்பபடத்தை நக்கல் அடிக்கும் சீன செம .ஜட்டி பாய்ஸ் என விளிப்பது லொள் ரகம்
4 படத்துக்கு ஜெசிக்காவின் டைரி என டைட்டில் வைத்திருக்கலாம் .மேட்ச்சிங்காக இருந்திருக்கும் .அந்த டைரியை கைப்பற்ற செய்யும் காமெடி அலப்பறைகள் அருமை
5 லொள்ளு சபா மாறன் டி வி செய்தி வாசிப்பாளராக நடித்து தப்பிக்க முயற்சிக்கும் சீன் அருமை
6 சினிமா விமர்சகர்கள் ஆன இட் ஈஸ் பிரசாந்த் , பிலிமி கிராப்ட் அருண் ஆகியோரை நடிக் க வைத்தது புத்திசாலித்தனம்
7 மொட்டை ராஜேந்திரனின் எலி காமெடி குழந்தைகளைக்கவரும்
8 ஆர்ட் டைரக்ஸன் ஒர்க் அபாரம் . வி எப் எக்ஸ் சில கப்பல் சீன்கள் செம
9 இயக்குனரிடம் பல வித்தியாசமான ஐடியாக்கள் கொட்டிக்கிடப்பது கண்கூடு
ரசித்த வசனங்கள்
1 இதுதான் உன் முதல் படமா? ரொம்ப ஓவரா நடிக்கறே?
2 ஒவ்வொரு படத்தையும் கழுவி ஊத்தும்போது அப்படியே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே
3 லில்லி ...... டோன்ட் பி சில்லி
4 யோவ் கிங்க்ஸ்லி, நெல்சன் சொல்லிக்கொடுத்த ஒரே ஒரு மாடுலேஷன் வெச்சு எல்லாப்படத்துலயும் நீ நடிச்சுட்டு இருக்கே
5 எதனால கீழே பார்த்து பார்த்து வசனம் சொல்றே?
கீழே தானே சப்டைட்டில் ஓடுது ?
6 இதுல எதோ ஒரு மேஸ்திரி இருக்கு
யோவ் அது மிஸ்ட்ரி
7 அந்தப்பொண்ணு கிட்டே அவரு என்ன பன்றாரு ? இங்க்லிஷ் ட்யூஷன் எடுக்கறாரோ ?
8 இதுவரை இங்க்லிஷ் ல பேசுனேனே எதுனா புரிஞ்சுதா?
புரிஞ்சுதா? எனக்கேட்டது வேணா புரிஞ்சுது
9 கிங்க்ஸ்லி , புரூஸ்லீ , மூக்கு சளி
10 சமையல் செய்த கை விரல்களுக்கு மோதிரம் தான் போடணும் , என்னது ? மோதிரம் ஆல்ரெடி சாப்பாட்டில் இருக்கு ? போட்டு விட்டுட் டாங்களா?
11 அவ உயிரோட இருந்தா செம பீஸ் , செத்துட் டா ரெஸ்ட் இன் பீஸ்
12 ரேஷன் கடைல 2000 ரூபா தர்ற மாதிரி எல்லாரும் இங்கேயே எதனால வர்றாங்க ?
13 இந்தக்குழி எவ்ளோ ஆழம் இருக்கும்னு தெரியலையே?
நான் வேணா உன்னை தள்ளி விடறேன் , பார்த்துட்டு வர்றியா?
14 அதுவரை நான் என்ன செய்ய ?
நிலாவை கிரகணம் பிடிக்காம பார்த்துட்டு இரு
15 அந்த ஆப் ஷேவ்டு மண்டை ஆண்ட்டி இருக்கே ,,,,,,
16 போன நியூ இயருக்கு வந்த பத்து , பதினைந்து டைரிகளே என் கிட் டே சும்மா தான் இருக்கு . உன் டைரியை எடுத்து நான் என்னம்மா பண்ணப்போறேன் ?
17 எந்த லூசுன்னு தெரியல , இத்துப்போன இந்தக்கார் ல இண்டிக்கேட் டரை ஆன் பண்ணிட்டு போய் இருக்கு
18 சாகப்போற நேரத்துல சாரி வேற
19 எனக்கு 2 அம்பு குத்திடுச்சு , உனக்கு 3 அம்பு குத்திடுச்சு
அது என்ன முட் டை புரோட் டாவா? கணக்கு வைத்து அங்கலாய்க்க
20 ஆட்டுக்கல் பாயாவை குக்கரில் வைத்த மாதிரி உஸ்னு ஒரு சவுண்டு
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 காமெ டி நடிகர்கள் திரையில் வந்தாலே ஆடியன்ஸ் சிரிக்க மாட் டார்கள் .ஸ்க்ரிப்ட்டில் காமெடி இருக்கணும்
2 பாத்ரூம் , டாய்லெட் சீன்கள் தமிழ் திரையில் அதிகம் வந்தது கமல் படங்களில் தான் . . இயக்குனர் கமல் ரசிகர் போல . பாத்ரூம் , டாய்லெட் சீன்கள் ஓவர் .அதை வைத்து செய்த காமெடி எடுபடவில்லை , உவ்வே ரகம்
3 பின் பாதி ரொம்பவே இழுவை
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 16+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - எல்லோருக்கும் படம் பிடிக்காது .குழந்தைகள் ரசிக்கலாம் .முதல் பாகம் ,2 ம் பாகத்தை விட இதில் காமெடி குறைவு . விகடன் மார்க் யூகம் 40 . ரேட்டிங்க் 2.5 / 5
Devil's Double Next Level | |
---|---|
![]() Theatrical release poster | |
Directed by | S. Prem Anand |
Written by | S. Prem Anand |
Produced by |
|
Starring |
|
Cinematography | Deepak Kumar Padhy |
Edited by | Bharath Vikraman |
Music by | OfRo |
Production company |
|
Release date |
|
Running time | 133 minutes[1] |
Country | India |
Language | Tamil |
0 comments:
Post a Comment