Monday, February 14, 2011

காதல் ரசம் சொட்ட சொட்ட - கவிதை

http://www.myorkutglitter.com/wp-content/uploads/2009/03/love-hurts.gifமருதமலைக்குக்கூட்டிச்செல்லாமலேயே

மயில்தோகையை காட்டிச்சென்ற அவள் கூந்தலுக்கு 

மருதாணியில் அரைத்த தைலம் தடவுவேன்.

மகாபாரதப்போர்க்காலம் கடந்தாலும் அர்ஜூனனின் வில்லுக்கு

மாடலிங்காக இருக்கும் அவள் புருவங்களுக்கு இடையே

மைசூர் சந்தனத்திலகம் இடுவேன்.

ஏழாம் எண்ணைக்கவிழ்த்தாற்போன்ற 

எடுப்பாக இருக்கும் அவள் நாசியில் 

அருண் ஐஸ்க்ரீமின் கோன் மேல் வைக்கும் செர்ரி போல்

மூவுலகமும் மூக்கில் விரல் வைக்கும் வண்னம்

அழகிய மூக்குத்தி இடுவேன்..

காங்கிரஸ் கட்சி போல் பிளவு பட்டிருந்தாலும் 

எப்போதும் இணைந்திருப்பது போலவே மாயத்தோற்றம்

அளிக்கும் அவள் உதடுகளுக்கு மென் முத்தம் எனும் 

உதடு ஒத்தடம் வழங்குவேன்.

மானினம்,மீனினம்,தமிழின் மெல்லினம்

 இம்மூன்றையும் தன் மென்மையில் தோற்கடிக்கும்

அவள் இடையினத்துக்கு 

இல்பொருள் உவமை அணிக்கு 

மிகச்சிறந்த எடுத்துக்காட்டு என பட்டம் அளித்து 

உயிரியல் லேப்பில் ஸ்பெசிமென் சாம்ப்ப்பிளாக (LAB SPECIMEN SAMPLE)

வைத்து அதற்கு தங்க ஒட்டியானம் செய்வேன்.

காலடி பட்டதும் மண்வளத்தை அதிகரிக்கும் 

அவள் பாதங்களுக்கு வெள்ளிக்கொலுசு அணிவிப்பேன்.

(தங்கக்கொலுசு அணிவிச்சா ஆயுள் குறைஞ்சிடுமாம்)
எங்கே இருக்கிறாய்

என் கற்பனைக்காதலியே..?
http://sirippu.files.wordpress.com/2010/02/a21.jpg
டிஸ்கி - 1  : இது கவிதை.. சும்மா படிச்சுப்பாக்காமயே  வழக்கமா போடற மாதிரி யாராவது ஜோக் சூப்பர்னு டெம்ப்ளேட் கமெண்ட் போட்டா நொந்து நூடுல்ஸ் ஆகிடுவேன்.ஹி ஹி 

டிஸ்கி 2 - சனி ,ஞாயிறு நெட் பக்கமே வராதவங்களுக்காக

1.அனகாவின் வர்மம் - சீன் படமா? - சினிமா விமர்சனம் 18

2.தம்பிக்கோட்டை - சந்தானம் காமெடி + மசாலா - சினிமா விமர்சனம்

44 comments:

எஸ்.கே said...

HAPPY VALENTINE'S DAY!

எஸ்.கே said...

//தங்கக்கொலுசு அணிவிச்சா ஆயுள் குறைஞ்சிடுமாம்//

தங்கம் விலை ஏறிப்போச்சுனு இப்படியெல்லாமா சொல்வாங்க!:-)

சி.பி.செந்தில்குமார் said...

hi hi ஆள் சிக்குனா மறுபடி ஒரு நன்றியை மெயில்ல அனுப்பறேன்

எஸ்.கே said...

உயிரியல், அரசியல், இல்பொருள்னு பல்துறை கவிதையா இருக்கு! சூப்பர்!

சி.பி.செந்தில்குமார் said...

நன்றி எஸ் கே சார்

வைகை said...

இது கவிதை.. சும்மா படிச்சுப்பாக்காமயே வழக்கமா போடற மாதிரி யாராவது ஜோக் சூப்பர்னு டெம்ப்ளேட் கமெண்ட் போட்டா நொந்து நூடுல்ஸ் ஆகிடுவேன்///

நல்ல வேள முன்னாடியே சொன்னிங்க....

வைகை said...

மானினம்,மீனினம்,தமிழின் மெல்லினம்///


விளக்கம் ப்ளீஸ்?

Unknown said...

அடடா...கவித கவித! காதலர் தின வாழ்த்துக்கள்! :-)

வைகை said...

மூவுலகமும் மூக்கில் விரல் வைக்கும் வண்னம்/////


அவ்வளவு நாத்தமா?

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...

மானினம்,மீனினம்,தமிழின் மெல்லினம்///


விளக்கம் ப்ளீஸ்?


அடுத்த தடவை பதிவு போடறப்ப விளக்க உரையும் போட்டுத்தொலைக்கிறேன்

Unknown said...

அட கவிதை...!!அபாரம் அற்புதம்...ஹிஹி

சி.பி.செந்தில்குமார் said...

இப்படி நக்கல் அடிச்சா டெயிலி ஒரு கவிதை போட்டு டார்ச்சர் பண்ணிடுவேன் ஹி ஹி

Unknown said...

எங்கே இருக்கிறாய்

என் கற்பனைக்காதலியே..?

- இந்த இடத்துல அடிச்சிட்டீங்க சிக்சரு

என்னப்பா இது இப்படி பின்றீங்க...........

அப்படியே நம்ம கடையில வந்து பாருங்க

http://vikkiulagam.blogspot.com/2011/02/blog-post_14.html

சக்தி கல்வி மையம் said...

கலக்கல் தல....
காதல் மணம் கமழும் கவிதை!
ரொம்ப நல்லா இருக்கு..
சரியான நேரத்தில்..சரியான பதிவு...

சக்தி கல்வி மையம் said...

Tamilmanam voting button வேலை செய்யவில்லை.. சரியானவுடன் மெயிலவும்..

raji said...

ஒரே கவிதைல எல்லா டிபார்ட்மென்டையும்
இழுத்துட்டீங்களே.நல்லா இருக்கு
பகிர்வுக்கு நன்றி

//(தங்கக்கொலுசு அணிவிச்சா ஆயுள் குறைஞ்சிடுமாம்)//

ஆயுசு குறைஞ்சுடும்கறது தங்க கொலுசுக்கா
போட்டுக்க போறவங்களுக்கான்னு தெளிவா சொல்லலையே

//வைகை said...
மூவுலகமும் மூக்கில் விரல் வைக்கும் வண்னம்/////


அவ்வளவு நாத்தமா? //

கவிதை படிச்சு ரசிச்ச கையோட
இப்டி ஒரு ஜோக் இலவசம்னும் நீங்க
தெளிவா போட்டிருக்கலாம்.
படிச்சுட்டு நல்லா சிரிச்சேன்.
நன்றி வைகை

கவிதை வீதி... // சௌந்தர் // said...

என்ன வென்று சொல்வதம்மா ..
அருமையான இந்த கவிதையைப்பற்றி..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நாங்க அதற்கென்று இருக்கிறோம் பாஸ்..
பாத்துகங்க..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தமிழ்மணத்தில் இந்தவாரம் முதல் இடம் பிடித்ததற்கு வாழ்த்துக்கள்..

Anonymous said...

nice nanbarey!

MANO நாஞ்சில் மனோ said...

//காலடி பட்டதும் மண்வளத்தை அதிகரிக்கும்


அவள் பாதங்களுக்கு வெள்ளிக்கொலுசு அணிவிப்பேன்.//

அடடா இதை விட வர்ணிப்பு வேறே என்ன இருக்கு.......

MANO நாஞ்சில் மனோ said...

அருமையான ஜோக் சிரிச்சி முடியலை.........
[நண்பன் நொந்து நுடுல்ஸ் ஆகிறதை பாக்க எவ்வளவு சந்தோஷமா இருக்கு கி கி...]

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

மேலும் வளர வாழ்த்துக்கள்....!



மச்சி நான் உங்க கவிதை எழுதும் திறமையைப் பத்தி ( மட்டுமே ) சொன்னேன்!



எனது கமெண்டை முதலாவது படத்துடன் இணைத்துப் படிக்க வேண்டாம்!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

மச்சி இன்னிக்கு அவங்க என்ன குடுத்தாங்க? பதிலுக்கு நீங்க என்ன குடுத்தீங்க?

சி.பி.செந்தில்குமார் said...

மாத்தி யோசி said...

மேலும் வளர வாழ்த்துக்கள்....!



மச்சி நான் உங்க கவிதை எழுதும் திறமையைப் பத்தி ( மட்டுமே ) சொன்னேன்!



எனது கமெண்டை முதலாவது படத்துடன் இணைத்துப் படிக்க வேண்டாம்!!


kalakkal கலக்கல் கமெண்ட். பதிவுலக கே பாக்யராஜ் என பட்டம் அளிக்கிறேன். ( முதல்ல எனக்கு புரியவே இல்லை.. )

சி.பி.செந்தில்குமார் said...

மாத்தி யோசி said...

மச்சி இன்னிக்கு அவங்க என்ன குடுத்தாங்க? பதிலுக்கு நீங்க என்ன குடுத்தீங்க?

நைட் தான் தெரியும்.

பாட்டு ரசிகன் said...

உண்மையிலே காதல் ரசம் கவிதையில் சொட்டுகிறது..

settaikkaran said...

இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்..? அருமையாக இருக்கிறது.
(எனக்குக் கூட கவிதை புரிய ஆரம்பிச்சிட்டுது..!) :-))

Unknown said...

எங்கே இருக்கிறாய்

என் கற்பனைக்காதலியே..?///



அண்ணே நானும் தேடிக்கிட்டு தானே இருக்கேன்

Anonymous said...

என்னது கற்பனை காதலியா? அப்ப உமக்கு சோறு பொங்கிபோட்டு, உன்ன சே துணி துவச்சி, நீ பண்ற இம்சைலாம் தாங்குறாங்களே உங்க வொய்ஃப் அவங்களுக்கில்லையா? இந்த கவிதை

ராஜி said...

சிபி கூறியது
நைட்தான் தெரியும்
ஃஃஃஃஃஃ
கற்பனை காதலிக்கு வெள்ளி கொலுசு வாங்கி கொடுத்தே இல்ல வீட்டுக்கு போ. விளக்கு மாத்தடிதான்

எண்ணங்கள் 13189034291840215795 said...

காலடி பட்டதும் மண்வளத்தை அதிகரிக்கும்

அவள் பாதங்களுக்கு வெள்ளிக்கொலுசு அணிவிப்பேன்.//

அபிராமி கிட்ட சொல்லியாச்சா?..:)

நல்ல கற்பனை..:)

Sathish said...

இத படிச்சா கவிதை மாதிரி தெரியலையே...
உங்களுக்கு பதிவுலக பாக்யராஜ் பட்டம் தான் கரெக்ட்.

செல்வா said...

நல்லா நகைச்சுவை ..
ஹி ஹி ஹி . ஜோக் தானே சூப்பர்னு சொல்ல கூடாது ..

செல்வா said...

ஆனா எனக்கும் கவிதை மாதிரி தெரியலை அண்ணா ..
ஹி ஹி . உயிரியல் வேதியல் பாடம் படிக்கிறது மாதிரி இருக்கு ..
ஆனா கற்பனை நல்லா இருக்கு ..

சி.பி.செந்தில்குமார் said...

என்னா ஒரு வில்லத்தனம்? ம் ம்

Speed Master said...

ஒரு சின்ன ஐய்யம் மேலே உள்ள தமிழ் எழுத்துக்கள் என தெரிகிறது

கவிதையா
காமெடியா
விமர்சனமா

விளக்கவும்

Unknown said...

கலைஞரின் காதல் !!!
http://aagaayamanithan.blogspot.com/2010/02/blog-post_7395.html

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இது கவிதை.. சும்மா படிச்சுப்பாக்காமயே வழக்கமா போடற மாதிரி யாராவது ஜோக் சூப்பர்னு டெம்ப்ளேட் கமெண்ட் போட்டா நொந்து நூடுல்ஸ் ஆகிடுவேன்.ஹி ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்தப் புள்ள யாரு, சமீரா ரெட்டியா?

சி.பி.செந்தில்குமார் said...

ராம்சாமிக்கு எப்பவும் சமீரா ஞாபகம் தான் அது சைனீஷ் ஃபிகரு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இல்ல, நீங்க வர்ணிக்க வர்ணிக்க அப்பிடியே கண்ண மூடிக்கிட்டு நம்ம கேப்டன் வரைஞ்ச மாதிரி வரைஞ்சு பாத்தேன், பாத்தா சமீரா ரெட்டி படமா இருக்கு, அதான் கேட்டேன்...

சி.பி.செந்தில்குமார் said...

உங்களுக்கு கேப்டன், நான், டி ஆர், சின்ன டாக்டர் 4 பேரையும் கலாய்க்காம விட்டா தூக்கம் வராதே,,

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// சி.பி.செந்தில்குமார் said...
உங்களுக்கு கேப்டன், நான், டி ஆர், சின்ன டாக்டர் 4 பேரையும் கலாய்க்காம விட்டா தூக்கம் வராதே,, ////


கண்டுபுடிச்சிட்டீங்களே....? சரி சரி, எல்லாரும் டாகுடரு ஆகிட்டாங்க, உங்களுக்கும் ஒரு டாகுடரு பட்டத்துக்கு ஏற்பாடு பண்ணிடுவோம், அப்பத்தான் கலாய்க்கறதுக்கு வசதியா இருக்கும்