Tuesday, October 30, 2012

ட்விட்டர்களுக்கு அஷ்டமத்துல சனியா? ப சிதம்பரத்தின் மகன் புகாரால் பாண்டிச்சேரி ட்விட்டர் கைது, ட்விட்டர்கள் அதிர்ச்சி!!!

டுவிட்டர் சமூக வலைதளத்தில்தன்னை பற்றி அவதூறு தகவல்கள் :ஐ.ஜி.,யிடம் கார்த்தி சிதம்பரம் மனு

 


ஐ.ஜி.,யிடம் கார்த்தி சிதம்பரம் மனு

டுவிட்டர் இணையதளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய மந்திரி ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் பற்றி அவதூறான செய்தி வெளியாகியிருந்தது.

அதில் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவைவிட கார்த்தி சிதம்பரம் அதிக சொத்து குவித்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதுபற்றி அறிந்த கார்த்தி சிதம்பரம், அதிர்ச்சி அடைந்தார்.

அதையடுத்து புதுவை போலீஸ் ஐ.ஜி.யிடம் அவர் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதன்பேரில் டுவிட்டர் இணைய தளத்தில் இந்த தகவலை வெளியட்டதாக புதுவை லாஸ்பேட்டை குறிஞ்சி நகரை சேர்ந்த ரவி (வயது 46) என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. சேதராப்பட்டில் ரவி சொந்தமாக தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். 
 
 
நன்றி - மாலைமலர்
 
 
 ட்விட்டர் நண்பர்களே! ட்வீட்ஸ் போடும்போது அவதூறாகவும் , பொத்தாம்பொதுவாகவும் ட்வீட்ஸ் போடாதீர்கள்.செய்தியை வைத்து ஒரு கமெண்ட் போடும்போது கூட  கவனமாக ட்வீட்ஸ் போடவும். வலை பாயுதே விகடனில் வர ஆசைப்பட்டு வழக்கு பாயுதே என அலறும்படி ஆகி விடக்கூடாது. தனிப்பட்ட முறையில்  எந்த ஒரு பிரபலத்தையும் தாக்க வேண்டாம். அவதூறான கமெண்ட் போட வேண்டாம்
 
 

4 comments:

தமிழ் பையன் said...

சரியான பதிவு. கருத்து சுதந்திரம் என்ற பேரில் ஆதாரம் இல்லாமல் புகார் சொல்வது தவறு.

Raj said...

kan ketta piraku sooriya namaskaram?

Entha poruppum illamal than enra agambavathudan twittum Raajan pondror ulleye irukkattum

வெளங்காதவன்™ said...

மானங்கெட்ட மாக்கள் இருக்கும் ஈலோகத்தில்,

ப.சி. மவன் நல்லவனா...

மனசில ஆக்கியோ?

#கர்ர்... த்துத்தெரி...

Anonymous said...

சி பி உங்க பழைய த்வீத்ஸ்லாம் யாரும் இன்னும் பார்க்கல போல...-:)