Thursday, June 30, 2011

கணவனின் பர்சில் அடிக்கடி மனைவி கை வைக்கிறாள்,அது ஏன்?

1.சார்,நான் ஒரு மேட்டர் கேள்விப்பட்டேன் அது நிஜமா? என துக்கம் விசாரிப்பவர்கள்,நிஜமான துக்கத்தின் வலியை விட அதிக வலியை ஏற்படுத்துகிறார்கள்

-----------------------


2. திமுக.,ஆட்சியில் கட்டிய மேம்பாலங்களில் பயணிப்பதை ஜெ.தவிர்ப்பாரா?-ஸ்டாலின்#அப்படிப்பார்த்தா கலைஞர்-ன் CM சீட்லகூடத்தான் ஜெ உட்காரக்கூடாது

-----------------------------

3. அரசு நிர்வாகத்தை சீர்குலைத்துள்ளது தி.மு.க.,-  ஜெ#ஒவ்வொரு புதியஅரசும் பதவிஏற்றதும் சொல்லும் முதல் வாசகமே முந்தினஅரசு சரி இல்ல என்பதுதானே

--------------------------------

4. வெளியூர் போகிறவன் சிக் என இருக்கும் தன் மனைவி தனக்காக காத்திருக்க்கிறாள் என்பதைஉணர்ந்து எந்த தப்பும் செய்யாமல் வீடுதிரும்புவது ஹோம் சிக்

-----------------------

5. ஆஃபீசில் என்ன செய்யறே?என்று SMS அனுப்பினாள் காதலி,உன்னை நினைப்பதைத்தவிர வேறென்னத்தை செஞ்சுடப்போறேன் என்றேன்#வெட்டாஃபீஸ் வேலாயுதம்

---------------------------


6. நான் சிவப்பாக இருப்பதால் தான் என் மேல் காதலா? என்றாள் காதலி. இல்லை என்மனதுக்கு உவப்பாக இருப்பதால்தான் என்றேன்#மனசுக்குள்ள TRனு நினப்பு

-----------------------

7.நான் சும்மானாச்சுக்கும் கோவிச்சுக்கறேன்,என்னை சமாதானப்படுத்தறியா?என்றாள் காதலி.சமாதானப்படுத்தறேன்,ஆனா அதுக்காக கோவிக்க வேணாம் என்றேன்#லவ்வாலஜி


----------------

8. இந்த டிரஸ் எனக்கு நல்லாருக்கா? என்றாள் காதலி.ஆடையுடன் இருக்கும்போதுதான்  சிலை அழகு என்று யார் சொன்னது ? என்றேன்#கிக்காலஜி

----------------------------

9. கணவனின் பர்சில் அடிக்கடி மனைவி கை வைக்கிறாள் அவனுக்கு தெரியாமல்.மனைவியின் தங்கை மீது கணவன் கண் வைக்கிறான் அவளுக்குத்தெரியாமல் FOR DOT

------------------------
10. ஃபோட்டோவைக்காட்டி நான் எப்படி இருக்கேன்? என்றேன்.உவ்வே என்றாள் காதலி,அய்யய்யோ.. இதுக்கு நான் காரணம் அல்ல என்றேன்#ஊடல் காதல்

-------------------------

 

11.நான் எது சொன்னாலும் அதை கவிதை ஆக்கி விடுகிறாய்,இனி மவுன மொழிதான் பேசுவேன் என்றாள் காதலி.அடி லூஸே..மவுனமொழியை எப்படி பேசமுடியும்? என்றேன்

-----------------------------

12. என் மனதைக்காயப்படுத்தவேண்டும் என அவள் எதுவும் பேசுவதில்லை,ஆனால் அவள் பேசுவதெல்லாமே என் மனதை காயப்படுத்துவதாகவே அமைந்து விடுகிறது#லூஸ்டாக்

-------------------------------

13. நாளை மீடியாக்கள் தலைப்பு செய்தி -பெண்லைன் -ல் குறுக்கிட்ட ஆண் லயன் சாரு,சாட்டிங்க்கில் நடந்த அக்கப்போரு#இமேஜினேஷன்@டேமேஜினேஷன் (பழைய பதிப்பு ,புதிய காப்பி)


பி எஸ் சி பிசிக்ஸ் படிச்ச ஃபிகரை லவ் பண்றது தப்பா.. ஏன்?

1.ரவுடிகளுடன் தேமுதிக எம்எல்ஏ.கைகோர்ப்பு: சேலம் எஸ்.பி., தகவல்-இனம் இனத்தோடு,பணம் பணத்தோடு,ரவுடி,ரவுடியோடு சேருவது இயற்கைதானே?

---------------------

2.  கடலை போடலாமா? என  SMS இல் கேட்டேன்.நான் ஆஃபீசில் இருக்கேன் என்றாள் காதலி. அதனால் தான் கடலையோடு நிறுத்திக்கிட்டேன் என்றேன்#லவ்வாலஜி

--------------------------

3.   59 கல்யாணம் செஞ்சவங்கதான் 60ம் கல்யாணம் பற்றி யோசிக்கனும்.. ஒரே ஒரு கல்யாணம் செஞ்சவன் கிடைச்ச பொண்ணை நேசிக்கனும்#கில்மாலஜி

---------------------

4.  கிடைச்ச ஃபிகரை வளைச்சுப்போடு டும் டும் டும்,வளைச்ச ஃபிகரை அணைச்சுப்படு டும் டும் டும் மேரேஜ்னா மட்டும் ஓடிப்போயிடு டும் டும் டும்

------------------

5.  புத்திசாலிகள் கல்யாணம் செய்துகொள்வதில்லை,கல்யாணம் செய்தவர்கள் புத்திசாலிகளாக இருந்ததில்லை#வீட்டுக்குவீடுவாசப்படி

-------------------


6.    காதலிப்பவர்கள் முட்டாளாக கருதப்படமாட்டார்கள்,காதலித்த பெண்ணையே கல்யாணம் செய்தவர்கள் தான் முட்டாள் ஆவார்கள்#விதி வலியது

-----------------------

7. பிரிவு என்பது கொடுமை என்றேன்,இல்லை கவிதை என்றாள்.எப்படி? சூரியனின் நிறப்பிரிகை தானே வானவில்?என்றாள்#பிசிக்ஸ்படிச்ச ஃபிகரைலவ்வுனது தப்போ?

---------------------

8. இந்தி படிக்காததால் மதிப்பிழந்து விட்டனர் தமிழர்கள்- பாப்பையா#இந்தியை மட்டுமா படிக்கலை?அரசியல் தலைவர்களின் சுயநல மனசையும் தான்.

-------------------------

9.எல்லோருமே நல்லவர்களாகத்தங்களை காட்டிக்கொள்வதில் முனைப்பாக இருப்பதால் உண்மையான நல்லவர்களைக்கண்டறிவது மலைப்பாக இருக்கிறது

------------------------
10. நல்லவர்களாக நடிப்பவர்கள் பெருகி விட்டதால் ஊரோடு ஒத்து வாழ் தத்துவப்படி நானும் முகமூடி அணிய த்தயார் ஆகி விட்டேன்

---------------------

Wednesday, June 29, 2011

எனக்கு அடிமையாய் நடந்துக்கறியே,கஷ்டமா இல்ல?

1.சீட்டுக்காக இனி யாரிடமும் கையேந்த வேண்டாம் - திருமாவளவனுக்கு ராமதாஸ் அறிவுரை.# கவர்ச்சி காட்ட வேணாம்னு ரேவதிக்கு, சில்க்ஸ்மிதா சொல்ற மாதிரி இருக்கே?!

---------------------

2. ஸாரி,டியர்..உங்களோட வாழ எனக்குப் பிடிக்கல.. நான் போய் ஒரு லாயரைப்பார்க்கறேன்..

அடிப்பாவி,லாயர் கூட வாழப்போறியா?

---------------------

3. நிர்வாக முறையில் மத்திய அரசை பின்பற்றி தமிழக அரசு துறைகளில் மாற்றம் #அய்யய்யோ இதுவரை ரூ 500க்கு கை ஏந்துனவங்க எல்லாம் ரூ 5000 கேட்பாங்களே?

------------------------
4. உன் அன்பு எனக்கு முழுதாகக்கிடைக்குமா? என்றாள் காதலி . வேணாம்.நீ திணறி விடுவாய், கொஞ்சம் கொஞ்சமாய் செலுத்தும்போதே உன்னால் தாள முடிவதில்லை.

------------------

5. நம் உடன் எப்போதும் இருப்பவர்களுக்கு நம் அருமை தெரியாது. நம்மை விட்டு விலகி இருப்பவர்களே பிரமிப்பாக பார்ப்பார்கள்

----------------------


grande_barriere_de_corail_18-austrialia.jpg

6. பத்திரிகையாளர்களுடன் பிரதமர் சந்திப்பு!#"இங்கே பாருங்க.கேள்விகளை செவிமடுக்கும் அதிகாரம் மட்டுமே எனக்கு வழங்கப்பட்டுள்ளது,பதில்கள் நோ

--------------------
7. ”எப்போ பாரு என் கிட்டே பேசிட்டே இருக்கியே? போர் அடிக்கலை?”  “என்ன பேசறோம்னே தெரியறதில்லை, தெரிஞ்சாத்தானே போரடிக்கும்?##காதல் கடலை

--------------------------

8. தவறு செய்த மனிதனின் மனதில் ஏற்படும் குற்ற உணர்ச்சி தரும் தண்டனையை விட பெரிய தண்டனை வேறு ஏதும் இருப்பதாகத் தெரிவதில்லை

---------------------

9. இனி சினிமாவில் நடிக்க மாட்டேன், இனி எனது மகன் சினிமாவில் ஆர்வம் காட்டுவார்-சிரஞ்சீவி# அடடா, இதைக்கேட்கறப்ப கலைஞர்,ஸ்டாலின் கதை நினைவுவருதே

--------------------

10. கட்சி அமைப்புகளை மாற்றியமைக்க தி.மு.க., முடிவு#மார்க்கெட் அவுட் ஆன நடிகை கல்யாணம் பண்ண முடிவெடுக்கற மாதிரி..??

----------------------


bali_6-5-indonesia.jpg



11. எனக்கு அடிமையாய் நடந்துக்கறியே,கஷ்டமா இல்ல? என்றாள் காதலி. அன்புக்கு அடிமையாய் இருக்கையில் அறிவு ஓய்வு எடுக்க போய் விடும் என்றேன்.


--------------------

12. உன்னிடம் பேசி என்னால் ஜெயிக்க முடியாது என்பதால் நேசித்து அதிலாவது ஜெயிக்கலாம் என்று பார்க்கிறேன்#லவ் ரேஸ் லவ் க்ரேஸ்

-------------------
13. என்னை இனி நடிக்க வேணாம்னு அவர் சொல்லிட்டார்- நயன் தாரா #இனிமே ஓக்கே மேடம், இத்தனை நாளா ஏன் நடிக்கலை?டவுட்டு

------------------------
14. நங்கையிலேயே நகை இருந்தும் இந்த நங்கைகள் ஏன் தான் நகை நகை என அலைகிறார்களோ?#நகைமுகன்

--------------------
15.கனிமொழிக்கு ராகுகேது சர்ப்ப தோஷ பூஜை: குடும்பத்தினர் நடத்தினர் #தமிழ்நாட்டையே பிடிச்ச தோஷத்துக்கே தோஷமா?விதி வலியது

------------------

 

































16. ”என் பின்னாலயே வர்றியே?வெட்கமா இல்லை?” “சம்மதம் சொன்னால் உனக்குஇணையாகவே வருவேன்,அப்புறம் உனக்கு வெட்கமா இருக்கும்,பரவால்லியா?#காதல் கடலை

---------------------
17. ”தினமும் எனக்கு ஊட்டி விடும் காதலா, இதில் உனக்கு என்ன இன்பம்?” “ஊட்டி விடும் சாக்கில் உன் உதடுகளின் ஸ்பரிசம்”#லவ்விஸம்,டச்சிஸம்

------------------

18. கனிமொழி ரொம்ப நல்லவர்-முன்னாள் கணவர்# நல்லா யோசிச்சு சொல்லுங்கண்ணே,நல்லவரா? வல்லவரா?

--------------------

19. :என்னுடன் ஜாகிங்க் வருவதை ஏன் தவிர்க்கிறாய்?” எதிர்ப்படுபவர்கள் உன்னை கவனிப்பதை நான் கவனிப்பேன்,அதை நீ கவனிப்பாய்.தேவையற்ற சங்கடங்கள் ஏன்?

------------------

20. அன்பு என்பதன் அர்த்தத்தை உன் கண்களில் கண்டேன்,அழகு என்பதன் மயக்கத்தை உன் உதட்டு சிரிப்பில் உண்டேன்.
---------------------------------




ஆண்கள் ஏன் வில்லங்கமா யோசிக்கறாங்க?





1. வில் அங்கமாய் பெண்கள் நம் கண் முன்னே தோன்றும்போது மனம் வில்லங்கமாய் சிந்திக்கிறதே#ஜிகிடி

--------------------

2. ஒரே சமயத்தில் 2 ஃபிகர்களை கரெக்ட் பண்ண முயற்சிப்பது தவறல்ல,ஆனால் இருவரும் ஒரே தளத்தில் இருப்பவர்களாக இருந்தால் ஆபத்து

------------------

3. மாமா என அழைக்கும் முறைப்பெண்கள் அவர்கள் திருமணத்துக்குப்பின் முறைக்கும் பெண்களாக மாறும் அபாயம் இருப்பதால் அதற்கு முன்பே.......#ஜிகிடி

----------------

4. ஃபிகர்கள் நம்மை மாமா என்று கூப்பிட்டுவிடக்கூடாது என்று தான் முன்யோசனையாக நான் டபுள் எம்ஏ படிக்காமல் சிங்கிள் எம்ஏ வோடு நிறுத்திவிட்டேன்

----------------------

5.  விரைவில் 'விண்ணைத்தாண்டி வருவாயா 2' குறித்து அப்டேட் செய்கிறேன்-சிம்பு #முடிஞ்சா ஹீரோயினா நயன் தாராவையும் அப்டேட் பண்ணப்பாருங்க

------------------



6. சிறையில் ஏழு போர்வைகளை பயன்படுத்தும் ஆ ராசா -செய்தி#நல்லவன்கற போர்வைல நடமாடறவர் அவரு ஜாக்கிரதை..

---------------------

7. தமிழக போலீசில் 20 ஆயிரம் பணியிடம் காலி: #காலி இடம்னு யாராவது வளைச்சுப்போட ட்ரை பண்ணிடப்போறாங்க,நான் ஈரோடு என் கே கே பி ராஜாவை சொல்லலை

--------------------

8. ஐஸ்வர்யா ராய் கர்ப்பமானதால் ஹீரோயின் படத்திலிருந்து நீக்கம்#அதனால என்ன?அம்மா தான் கர்ப்பவதிகளுக்கு  நிவாரண நிதி வழங்கறாரே?

------------------

9. கல்யாணத்திற்கு பிறகு மனைவியிடம் எப்படி அன்பாய் பழக வேண்டும், என்று கார்த்திக்கு டிப்ஸ் -ஜோதிகா#அப்போ சூர்யா ரஞ்சனிக்கு டிப்ஸ் தருவாரா?

-------------------

10. என் ரசிகர்கள்விரும்பும்வரை நான் குத்துப்பாட்டு  ஐட்டம் டான்சராக இருப்பேன்- மல்லிகா ஷெராவத் #நல்லவேளை,உங்க ஸ்டேட்மெண்ட்ல டான்சர்  இருந்துது

-----------------------




11. கஸ்டம்சிடம் தொடர்ந்து சிக்கும் பாலிவுட் நடிகைகள்!#கஸ்டம்ஸ் ரெய்டுலதானே சிக்குனாங்க.. ஒண்ணும் பாதகம் இல்ல..

----------------

12. புனிதமான இடத்தில் அரசியல் பேச விரும்பவில்லை-எடியூரப்பா#அப்போ அரசியல் பாவச்செயல்னு ஒத்துக்கறீங்களா?

------------------















180 (நூற்றியெண்பது) - 420 (ஃபோர் ட்வெண்ட்டி) - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiY9vg6jUW7XvE3bqN9Sp_EmFs19CegtG8N0wFSEEfFoc7zAf3EWDjlpjZjn1RcKKax04UO3xyemEuVCtQmQrpGHx9FdD1_KawEHQnBakdLKrccu_7yC9s59mELn9Z9tPY60LjPdDuz_jU/s1600/180-Movie-First-look-Poster.jpgகல்யாண மண்டபத்துல பட்டுச்சேலை சரசரக்க,மல்லிகைப்பூ மண மணக்க,இடையில் அணிந்திருக்கும் ஒட்டியாணம் மினுமினுக்க ஃபிகரு பண்ற அலம்பல் பார்த்துட்டு செம ஃபிகர்ப்பான்னு தப்பா நினைச்சிருப்போம்..அவங்களுக்கு முன் தகவல் ஏதும் சொல்லாம திடீர் விசிட்டா வீட்டுக்குப்போய் பார்த்தா பாப்பா 35 மார்க் கூட பெறாத அட்டு ஃபிகரா இருக்கும்.. அங்கே  வீடு கூட்டிட்டு இருக்கும்..

அந்த மாதிரி சில படங்கள்ல டிரைலரும்,போஸ்டரும்,விளம்பர யுக்திகளையும் பார்த்துட்டு அட,செம படமா இருக்கும்போல இருக்கே.. அப்டின்னு வாயைப்பிளந்துட்டு படத்துக்குப்போவோம்.. அங்கே போய்ப்பார்த்தா படம் பிலோ ஆவரேஜா இருக்கும்.. (BELOW AVERAGE).

நீரவ்ஷாவின் கலக்கலான ,கண்களில் ஒற்றிக்கொள்ளும்படியான ஒளிப்பதிவு, +70 மார்க்  வாங்கும் ஹோம்லி ஃபிகர் 1 ,75  மார்க் வாங்கும் மாடர்ன் ஃபிகர் 1 என 2 ஃபிகர்கள் ஹீரோயின்ஸாக என முக்கிய பிளஸ்கள் இருந்தும் படம் ஊத்திக்கிட்டதுக்கு முக்கியக்காரணம் கதை நஹி.. + ஹீரோவுக்கு கேன்சர்..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpyuErGiMiUdNrGasXgWMl2YF5bZAHFE7Lx1OZvLPRUzNkXg1uppDffoudTC5ZYhwl_SneW3DBz03eky7TvWA5bWFvlVNOILNJYTX0lR6q5bLz8Js0bQDnDSRRGaLXzxOrOv2J28fjOdk/s1600/Nitya+Menon+(8).jpg

ஹீரோ சித்தார்த் புது ஊருக்கு வர்றாரு.. அங்கே ஒரு ஃபிகர் லவ்வுது இவரை ஒன் சைடா. (தெலுங்கு டப்பிங்க் படம் என்பதைத்தான் சூசகமா சொல்றேன்) இவரு பம்முறாரு. ஃபிளாஷ்பேக்.. இவருக்கு ஏற்கனவே இன்னொரு ஃபிகரோட லவ் ஆகி மேரேஜூம் ஆச்சு.. ஆனா அண்ணனுக்கு கேன்சர்..  அண்ணனை  மரண பயம் துரத்துது.. அண்ணனை அண்ணி உட்பட அனைவரும் இரக்கமா பார்க்கறாங்க..  அண்ணனுக்கு இது பொறுக்கல.. கண்காணாத தேசம் போறாரு.. 

இப்போ மனைவி சந்தோசமா இருக்கறதை பார்க்க நினைக்கிறார்.. மறுபடி அவர் மனைவியோட இணைஞ்சாரா? கண்ணீர் மழையில் நனைஞ்சாரா? என்பதை தில்லு உள்ளவர்கள் தியேட்டரில் போய் பார்க்க... 

படத்தில் மணிரத்ன வாடை அதிகம் வீசுவதால் வசனத்திற்கு அதிக வேலை இல்லை.. .

. தேடித்தேடிப்பார்த்ததில் தட்டுப்பட்ட நல்ல வசனங்கள்



http://news.moviegallery.co.in/wp-content/uploads/2011/03/180-Movie-Stills.jpg

1. டாக்ஸி டிரைவர் - சார்.. எங்கே போகனும்?

இந்த 2 விரல்ல ஒண்ணைத்தொடு..வலது விரலைத்தொட்டா டி நகர், இடது விரலைத்தொட்டா அண்ணா நகர்..

டாக்ஸி டிரைவர் - அப்போ சாருக்கு 2 செட்டப்பா?



2. ஒவ்வொரு வார்த்தையையும் யோசிச்சு யோசிச்சு பேச முடியாது.. டார்ச்சர் தாங்கல..

3. நான் ரொம்ப பயந்துட்டேன்...

பயப்படாதே.. நான் இன்னும் சாகல..

4. ஏங்க. மாப்ளையோட கேன்சர்.. நம்ம பொண்ணையும் கொன்னுடுமோன்னு பயமா இருக்குங்க.. நம்ம பொண்ணை நம்மளோடயே கூட்டிட்டு போயிடலாமா?

5.  காசில உயிர விடனும்னு முடிவு பண்ணி இருக்கேன்..

(இப்படி எத்தனை பேரால சாவு நடக்கற இடத்தை தீர்மானிக்க முடியும்?)

6. சாகறதைப்பற்றி கவலைப்பட்டுட்டே இருந்தா வாழும் நாட்கள் எப்படி இன்பமாகும்?

7.  தூரத்துல இருந்து அவ சிரிக்கறதை ஒரு தடவை பார்த்துட்டா போதும்.. நான் உயிரை விட்டுடுவேன்.. ..

8.  நான் அவ கூட இருக்கற வரை அவ சோகமாத்தான் இருப்பா,விட்டு விலகி வந்துட்டா அவ நார்மல் ஆகிடுவா..

9. அவளைப்பார்க்கனும்னு செல்ஃபிஷ் போல ஓடி வந்தேன், பார்த்துட்டேன், இப்போத்தான் தோணுது பார்க்காமலேயே இருந்திருக்கலாம்..

10. நான் வந்தா சாவும் என் கூடவே வரும், அதைக்கூட தாங்கிப்பேன்,ஆனா அவ முகம் வாடிடும்,அதை என்னால தாங்கிக்கவே முடியாது..

http://4.bp.blogspot.com/-YYys6LDC5xg/TVoVHkNsf2I/AAAAAAAALPo/w1FnHqh5vwk/s1600/180-Telugu-Movie-Press-Meet-Gallery-4.jpg

 இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1. படத்தின் ஓப்பனிங்க் சாங்க்கில் ஹீரோ சித்தார்த் சிறுவர்களுடன் சேர்ந்து கும்மி அடிக்கும் பாடல் நடனக்காட்சி படமாக்கப்பட்ட விதம் ஒளிப்பதிவுக்கலைஞர்களுக்கு ஒரு பொக்கிஷம்,

2. ஹீரோயின் அடிக்கடி யாருக்கோ வரும் ஃபோனில் மிமிக்ரி பண்ணி பேசுவது..

3. பாடல் காட்சியில் ஹீரோ,ஹீரோயின் விரல்கள் மட்டும் நண்டு ஊறுது ,நரியூறுது விளையாட்டு விளையாடுவது..

4. ஹீரோவுக்கு மரண பயம் ஏற்பட்டதும் காலனின் குறியீடாக  மொட்டைத்தலை பாஸ் காட்டப்படுவது..

5 .அழகான 2 ஹீரோயின்களையும் படத்தில் எந்த அளவு தேவையோ அந்த அளவு உபயோகப்படுத்திக்கொண்டது..

6. ஹீரோ ஹீரோயினை ஸ்டெதஸ்கோப் வைத்துப்பார்க்கும்போது ஹார்ட் பீட்டுக்குப்பதிலாக ரோஜா பட பாடலான புது வெள்ளை மழை பாட்டு ஒலிப்பது.. 



http://moviegalleri.net/wp-content/uploads/2011/04/priya_anand_180_movie_hot_photoshoot_stills.jpg


இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1. ஹீரோ வுக்கு கேன்சர் என்ற அரதப்பழசான ட்விஸ்ட் வைத்தது..இந்த சீனில் சோகம் வருவதற்குப்பதிலாக எரிச்சல்தான் வருது/...

2. டாக்டராக வரும் ஹீரோ அதற்குண்டான பாடி லேங்குவேஜ்ஜில் கவனம் செலுத்தாதது..

3. மவுண்ட் ரோடில் ஆக்சிடெண்ட் ஆகும்போது தலையில் அடிபட்ட ஹீரோயின் கழுத்தில் பேண்டேஜ் உடன் அடுத்த காட்சியில் ஹாஸ்பிடலில் வருவது

4. படம் முழுக்க ஒளிப்பதிவில் கவனம் செலுத்தியதில் பாதி கூட திரைக்கதையில் செலுத்தாதது..

5. மரண தேவன் கேரக்டரை அடிக்கடி காண்பித்து கடுப்பேற்றுவது..





http://www.tamilactresspics.com/new-gallery/plog-content/images/tamil-movies/180/180-tamil-movie-audio-launch-stills-5.jpg

இந்தப்படம் காதலர்கள், பதிவர் ராமலட்சுமி  மேடம் மாதிரி புகைப்படக்கலைஞர்கள் மட்டும் பார்க்கலாம்..

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 36

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - சுமார்

சி. பி  கமெண்ட் - அய்யய்யோ போயிடாதீங்க..

எல்லா செண்ட்டர்களிலும் 7 நாட்கள் ஓடும். ஏன்னா அடுத்த வெள்ளிக்கிழமைக்கு 7 நாட்கள் பாக்கி இருக்கே..?

 ஈரோடு ஸ்ரீகிருஷ்ணாவில் படம் பார்த்தேன்..

http://telugu.way2movies.com/wp-content/uploads/2011/05/180_movie_trailers.jpg

Tuesday, June 28, 2011

ஈரோடு காலேஜ் பிரின்சிபால் VS மவுண்ட் ரோடு அமலா பால்

1.உங்களுக்கு பிடிச்சது எது?பிடிக்காதது எது?

பிடிச்சது  அமலா பால்,பிடிக்காதது எங்க காலேஜ் பிரின்சிபால்#பால் பாண்டி ஜோக்

---------------------------

2. DR,என்னால எதையும் சாப்பிட முடியல. 

பேச்சிலர்னா ஹோட்டலை மாத்துங்க, சம்சாரின்னா சம்சாரத்தை மாத்திப்பாருங்க

------------------------

3. இந்தக்காலத்துப்பொண்ணுங்க ரொம்ப மோசம்னு எப்படி சொல்றே?

வெள்ளிக்கிழமை தலைக்கு குளிச்சுட்டு கோயிலுக்குப்போற பொண்ணுங்களை விட சனிக்கிழமை தலையை விரிச்சுப்போட்டுட்டு பஃபே க்ளப் போற பொண்ணுங்கதான்  அதிகமா இருக்காங்க.. 

------------------------------

4.  என் லவ்வை அவ கிட்டே சொல்லக்கூட நான் இவ்வளவு யோசிச்சதில்லை,ஆனா உன் கிட்டே சொல்லத்தாண்டா பயமா இருக்கு.. 

ஏன்?

காதலியிடம் லவ்வை சொல்ல 4 ரூபா ரோஜாப்பூ வாங்கிகுடுத்தா போதும்,ஆனா நண்பனிடம் அதை சொல்ல 400 ரூபாவுக்கு தண்டச்செலவு செஞ்சு ட்ரீட் வைக்கனும்னு எழுதப்படாத விதி இருக்கே?

--------------------------



5. சரக்குல இவ்வளவு தண்ணி கலக்கக்கூடாது. 

மிஸ்.ஒரு படி அரிசில எவ்வளவு தண்ணீர் கலந்து குக்கர்ல வைக்கனும்னு தெரியுமா உங்களுக்கு?

----------------------

6. அவரு பால் மணம் மாறா பாலகன்னு இனிமே சொல்ல முடியாது.. 

ஏன்? 

எப்போ பாரு நடிகையோட ஸ்டில்லை ஸ்மெல் பண்ணிட்டே இருக்கானே? அமலா பால் மணம் மாறா கிராதகன்னு வேணா சொல்லலாம்..


---------------------

7. விளக்கேற்ற ஒரு பெண்ணைத் தேடி களைத்தவர்கள் அவசர உதவிக்குகிடைத்த பெண்ணை வைத்து விளக்கை அணைக்கிறார்கள்#முதிர் கண்ணன்களின் காமம்


----------------------------------

8.  மனசுக்குப்பிடிச்சவங்களை பார்க்காமல்.பேசாமல் இருந்து விடலாம்,ஆனால் மனதில் நினைக்காமல் இருந்து விட முடிவதில்லை#நெஞ்சுக்கு நீதி

--------------------

9. உனக்காக எதையும் விட்டுக்குடுக்க நான் தயார் தான்,ஆனால் உன்னை விட்டுக்குடுக்க தயார் இல்லை.. 

-----------------------

10. பெண்கள் அனைவரும் தேவதைகள் தான்.நீ தேவதைகளின் தேவதை

-------------------

. லிப்ஸ்டிக் போடும் ஃபிகர்களை ஆண்கள் விரும்பாததற்குக் காரணம் என்ன??


1. லிப்ஸ்டிக் போடும் ஃபிகர்களை ஆண்கள் விரும்பாததற்குக் காரணம் அவசர முத்தங்களால் கறைகள் காட்டிக்குடுத்துவிடும் அபாயமாகக்கூட இருக்கலாம்#ஜிகிடி

--------------------

2. நீ தலைக்குக்குளித்து வரும் நாட்களில் உன்னைத்தவிர்க்க நினைக்கிறேன்,காரணம் உன் முக வசீகரத்தை கூந்தல் அழகு முந்துவதை விரும்பாததால்#ஃபிரைடே

--------------------

3. காதலிக்க கண்கள் மட்டும் போதும்,ஆனால் அதை கண்ட்டினியூ பண்ண பாக்கெட்ல காசு வேணும்#நோ மணி நோ மணி நோ ஹனி நோ ஹனி டோய் 

---------------------

4. உன்மேல் உள்ள அன்பை முழுசாக வெளிப்படுத்த எனக்குத்தெரியவில்லை என்றாய்,சோ வாட்?உள்ளே அன்பு இருக்கு என்று தெரிந்தாலே போதாதா?

---------------------

5. உன்னுடன் சந்திக்கும் வாய்ப்பு ஒரு நிமிடம் கிடைத்தால் போதும் என்னோடு இருக்கும் பர்ஸ் காலி ஆகி விடும்#வெட்டிச்செலவு வந்தனா 

--------------------




6. ஓட்டுப்போட 18 வயசு ஆகனும்,மேரேஜ் பண்ண 21 வயசு ஆகனும்,நீதி -நாட்டை கட்டுப்படுத்தறதை விட ஒரு நாட்டுக்கட்டையை கண்ட்ரோல் பண்ணறது கஷ்டம்

---------------------

7. கணவன்மார்கள் பைக்கில் போகும் நேரத்தை விட மனைவியை டிராப் பண்ணும் நேரம் அதிகம்,மனைவிமார்கள் பெரும்பாலும் கணவன்களை டிரைவராக யூசிங்க்

---------------------

8. ஆண்கள் பைக் உலா போகையில் அவன் கம்பீரம் கூடுகிறது,பெண்கள் ஸ்கூட்டி உலா போகையில் அவள் நளினம் குறைகிறது

--------------

9./ கண்ணாமூச்சி விளையாட்டுக்கள் எனக்குப்பிடிக்காமல் போனதற்குக்காரணம் ,அவள் கண்கள் கட்டப்படுவதால்

----------------
10.  எந்த பொறுப்பு கொடுக்கப்பட்டாலும் அதில் திறம்பட செயல்படுவேன்-ஜெ#அப்போ முதல்ல கரண்ட்கட்டுக்கு ஒரு வழி பண்ணுங்க தாயே

------------------



11. பிரதமர் முழு அதிகாரத்துடன் இல்லாவிட்டால்,  சிறப்பாக செயல்பட முடியாது-ஜெ#சிஎம்மாக இருக்கறவங்க கூடதோழியின் பேச்சைத்தானே கேட்கறாங்க?

--------------------

12. எல்லா கட்சிகளிலும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள்-ஜெ#அய்யய்யோ,அம்மா,குண்டை தூக்கிப்போடறீங்களே?அப்போ திமுகவுல உங்க நண்பர் யாரு?

---------------------------
13. நரேந்திர மோடி பற்றி விரிவாக விவாதிக்க விரும்பவில்லை. அவர் எனக்கு நல்ல நண்பர் அவ்வளவுதான்-ஜெ#இந்நாள் சினிமா நடிகை பேட்டி மதிரியே இருக்கே?

----------------------

14. நம் நாட்டு மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்-ஜெ#என்னம்மா? இது?45 நாட்களுக்குள்ளேயா?

-------------------------

15. ஊழல்அமைச்சர்கள் மீது பிரதமர் நடவடிக்கை எடுக்கவேண்டும். நாடே எதிர்பார்க்கிறது-ஜெ #ஊழல் செய்த முதல் அமைச்சர்கள் மீதும்,2 பேரும் மாட்னீங்க

-------------------



16. அரசு பேருந்தில் 'தீ' 36 பயணிகள் தப்பினர்-செய்தி # தீ ரஜினி நடிச்ச படம் ஆச்சே.. ரஜினியே தப்பிச்சுட்டாரு..பயணிகள் தப்பிக்க மாட்டாங்களா?

------------------------

17. பிரபுதேவா- பியா ஒரேவிமானத்தில் அருகருகே அமர்ந்து மும்பை சென்றனர்# நயன்தாரா எங்கிருந்தாலும் சீதை படப்பிடிப்பை கேன்சல்செய்துவிட்டுஆஜர்ஆகுக

---------------------------

18.  என்னைத்தொந்தரவு செய்வதே உன் வேலை ஆகி விட்டது.இனி என் முன்னால் வருகையில் மாஸ்க் அணிந்து வரவும்.

----------------------

19.  எல்லோரிடமும் குழந்தைத்தனம் ஒளிந்திருக்கும்,ஆனால் அது எல்லோர் முன்னிலையிலும் வெளிப்படாது#ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்க்&டீலிங்க்

-----------------------
20.  உன்னை சமாதானப்படுத்த என்ன பரிசு வேணும்? என கேட்டேன் .செலவே இல்லாத எப்போதும் கிடைக்கும் 4 எழுத்து மந்திரம் என்றாள் #கிஸ்ஸாலஜி

----------------------

பிள்ளையார் கோயில் தெரு கடைசி வீடு -கிராமத்துக்காதல்+அழகிய அழுகை - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUmMckJNomiHZVrgmF6HV4h4OF3XWvEdWvIJUFPo69D4yDD_pHP9FHLKxMN-Z5_87J9A9zlDxKx_FuhhTC2OhVJdayVkQsf7z6YO1PUBTjP0D-i3m1BufJaL5-3GvZNuj5a-DotubEEEUI/s1600/pillaiyar_theru_kadaisi_veedu-Mp3+Sogs+free+Download.jpg 

ஹீரோவுக்கு கேன்சர், ஹீரோயினுக்கு எயிட்ஸ்,வில்லனுக்கு பைல்ஸ்,வில்லிக்கு லொள்ஸ்  இப்படி கதை சொல்ற இயக்குநர்களுக்கெல்லாம் ஆப்பு இருக்குடி..1980 களில் 47 படங்கள் இப்படி வந்தன.. அவற்றில் பாதி ஹிட் படங்கள். ஆனா 2011லயுமா? உஷ் அப்பா முடியல.. 

ஜித்தன் ரமேஷை சிரிக்கறப்பவே பார்க்க சகிக்காது.. இதுல பாதிப்படம் அழுதுட்டே வர்றாரு.. (சிரிப்புப்போலீஸ் ரமேஷ் மன்னிக்க)

படத்தோட கதை என்ன?ஹீரோவுக்கும் ,ஹீரோயினுக்கும் காதல்,ஹீரோயினுக்கு கேன்சர் என ஹீரோவும் ,ஆடியன்சும் நினைக்கும்போது கேன்சர் ஹீரோவுக்கு என ஒரு சஸ்பென்ஸ் வைக்கிறார்.. கேன்சர் ஹீரோவுக்கா இருந்தா என்ன? ஹீரோயினுக்கா இருந்தா என்ன? சாகறது ஆடியன்ஸ்தானே?

இந்த லட்சணத்துல இந்தப்படத்தோட டைரக்டர் பட ரிலீஸ் அப்போ டி விக்கு அளித்த பேட்டில வழக்கமான படங்களில் வர்ற மாதிரி ஹீரோ - ஹீரோயின் அறிமுகம் சாதாரணமா இருக்காது ஸ்பெஷல் டச் இருக்கும்னாரு.. அந்த ஸ்பெஷல் டச் என்னங்கறதை இப்போ சொல்றேன்.. சாப்பிட்டுக்கிட்டே இதை படிக்கறவங்க சாப்பிட்ட பிறகு தொடரவும்.. 

 ஹீரோ கிராமத்துல காலைக்கடனுக்காக ஒதுங்கறார்.. பாதிலயே வயக்காட்டு ஓனர் டேய் யார்றா அங்கே என கத்தறார்.. பாதிலயே எந்திரிச்ச ஹீரோ கைல தண்ணி சொம்போட ஓடறார்.. (வித் அவுட் வாஷிங்க்.. )அப்போ ஹீரோயின் எதேச்சையா அங்கே வர்றார்.. 2 பேரும் மோதிக்கறாங்க.. அப்போ ஹீரோ அந்த 40 மார்க் ஃபிகரைப்பார்த்து பிரமிச்சுப்போய் பின்னாலயே போய் கிணத்துல விழறாரு.. ஹீரோயின் அவரைக்காப்பாற்ற முயற்சி பண்றப்ப ஹீரோவோட வேட்டி அவர் கைல.. ஹீரோ கிணத்துல..

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல ,ஒரு அப்பார்ட்மெண்ட் ஃபிகர்ஸ்சுக்கு ஒரு ஃபிகர் இதம் என்பது போல  இந்த கேவலமான ஒரு சீனே போதும், அண்ணன் கிட்டே சரக்கு இல்லைன்னு.. தெரிஞ்சுக்க.. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2ndqtDaKToa4izyljPWJGe9ZFo-B9KFpNl7qFT7qLbJiIbkHxCKSspR8JcHAZKOqVqcyQkKVHx8b9lnLmhIIom3PNEN3GjVQLqZ8vWGPmdY8NFvSht4j4sTBnH7mDXI6yo0aXgPtCAQ06/s1600/pillaiyar_theru_kadaisi_veedu_04.jpg

படத்தில் தேறிய வசனங்கள்

1.  லவ்ங்கறது  அழகைப்பார்த்தோ ,பணத்தைப்பார்த்தோ வர்றதில்லை.. உள்ளே இருந்து வர்றது.. 

எப்டி? வாமிட் மாதிரியா?

2.  எனக்கு அந்தப்பொண்ணு வேணூம்....ம் ம் 

என்னமோ டீக்கடை பன்னு வேணும்கற மாதிரி கேட்கறே?

3. உன் ஆளு எப்படி இருப்பா?

இந்த ஊர்லயே அழகான பெண் அவ தான்.. (இப்படித்தான் ஒவ்வொரு லவ்வரும் சொல்லிக்கறானுங்க.. )

4. நான் அடிக்கடி சொல்வேனே.. ஊரெல்லாம் அழகா இருக்கும், ஒருத்தன் மட்டும் அழுக்கா இருப்பான்னு அது இவன் தான்.. (ஆஹா என்னமா இண்ட்ரோ கொடுக்குது பொண்ணு..?)

5. நீ என்னடி  படிக்கறே?

 ஆமா, சொன்னா மட்டும் புரிஞ்சிடவா போகுது?

6. காக்கா எச்சம் போட்டா நினைச்ச காரியம் நடக்கும்..  (அட ஈனப்பயலுகளா.. அது தினமும் தாண்டா எச்சம் போடுது...?டெய்லி அதன் கீழ் போய் நின்னுக்கிட்டா காரியம் சக்ஸஸா?)

7.  அம்மா.. அடுத்த ஜென்மத்துலயாவது உனக்கு நல்ல புருஷன் கிடைக்கட்டும்.. 

8. அவன் பண்றது கேனத்தனமா இருந்தாலும் பார்க்க நல்லாத்தான் இருக்கு.. 

9. நான் உன் கூட பேசுனது சாதாரண விஷயம்....உடனே லவ்ங்கறதா?

ஆனா எனக்கு அதுதான் விஷயமே.. 

10. பொண்டாட்டிங்க எல்லாரும் புகுந்த வீட்ல இருக்கறப்ப பழைய பாத்திரம் மாதிரி  இருப்பாங்க,ஆனா பிறந்த வீட்டுக்கு வந்துட்டா மட்டும் பளிச்னு ஆகிடறாங்களே அது எப்படி?

11. நடந்தது நடந்து போச்சு.. 

ஆமா.. நடக்காதது ஆட்டோல போச்சு.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi-nkyvXbHdRYB_uYJMJX3jcp32bON5N4dVGnE7Pwe7KZaXnDq7DKHGfpfsnnbk2pAI1cLYV7H58xUqExaKlhGPOQ7NjGAQKD379x8AAQJ1Vf9FRiynlVV0_RYFYPL6eNo_sYoDKKGpJ2E/s1600/Suhasini+Hot+In+Pillaiyar+Theru+Kadaisi+Veedu+%25281%2529.jpg

12. நட்பு, வீடு 2ம் தானா அமைஞ்சது,நீ மட்டும் தான் நானா தேடி கிடச்சது..

13. ஆண்டவன் சில சமயம் கெட்டவங்களுக்கும் நல்லது பண்ணிடறானே?

14. இவருக்கு ரொம்ப நல்ல மனசுங்க.. என்ன ,அறிவு தான் கொஞ்சம் கூட இல்லை..

15. ஒருத்தன் சாகப்போறான்னு தெரிஞ்சும் மேரேஜ் பண்ண  ஓக்கே சொல்றியேம்மா.. உன்னை நினைச்சா..... 

16. இந்த ஊர்ல எங்கண்ணன் ஏகப்பட்ட நல்லது பண்ணி இருக்கார்.. அவர் செஞ்ச நல்லதுகளை சொல்லிட்டே போகலாம்.. அவ்ளவ் ஏன்? கல்யாணம் ஆகி 5 வருஷம் ஆகியும் நோ சைல்டு.. இப்போ அவ 4 மாசம் முழுகாம இருக்கான்னா அதுக்கும் எங்கண்ணன் தான் காரணம்..(அண்ணன் பேரு ராம்சாமியா?)

17. உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா?

தெரியலை.. இது வரைக்கும் அதுக்கான அவசியம் வர்லை..

18. மனசுல இருக்கறதை நாம சொல்லாமலேயே தெரிஞ்சுக்கறது 2 பேர் தான் 1. அம்மா 2.சாமி..

19.  நீங்க தண்ணி அடிப்பீங்களா?

எப்பவும் அடிக்க மாட்டேன்.. சந்தோஷமா இருக்கறப்ப, மூடு அவுட்டா இருக்கறப்ப.. அடிப்பேன்..

=இதுக்கு பேசாம டெயிலி தண்ணி அடிப்பேன்னு சொல்லி இருக்கலாம்.. 

20. எல்லாரும் கல்யாணத்துக்கு போய் இருக்காங்க..

எதுக்கு? சாப்பிடவா?

21.  காதல் ஒண்ணும் பஸ் இல்லை.. 50 பேர் 60 பேர் ஏத்திக்க.. அது கேரியர் இல்லாத சைக்கிள் மாதிரி.. ஒருத்தருக்கு மேலே ஏத்தவே முடியாது.. 

அடத்தூ.. பஞ்ச் டயலாக்..?

22.என்னை முன்னே பின்னே பார்த்திருக்கியா?

ம்ஹூம்..

அப்புறம் என்ன தைரியத்துல  ஓ சி கட்டிங்க்க்கு ஷேர்க்கு வர்றே?

பசங்க சொல்வாங்க.. நல்ல காரியம் பண்ணப்போறப்ப ஒரு கட்டிங்க் போட்டுட்டு போனா நல்லதுன்னு.//..

23.  பாக்கெட்ல காசும்,. உடம்புல தெம்பும் இருந்தா 10 பொண்டாட்டிங்க கூட கட்டிக்கலாம்... (நல்லவேளை.. பொண்ணுங்களை இதுல சேர்க்கல.. )

24. இந்த உலகத்துல எந்த ஆம்பள தப்பு பண்ணாம இருக்கான்? 

25.  ஒரு பேஷண்ட்டை காப்பாற்ற ஹாஸ்பிடல், பணம் மட்டும் போதாது..

. ( ஏன்?அழகிய நர்சும் வேணுமா?ராஸ்கல்.. பாடைல போறப்பக்கூட பருவச்சிட்டு கேட்குதா..?)

ஹீரோயின் புதுமுகம் போல ,பேரு சுஹாசினியாம்..சுமாரா இருக்கு ஃபிகரு,.. 

http://www.metromasti.com/galleryImage,650,wmi%7C2.png%7CC%7C60%7C20%7C20%7C,wmi%7Csimgw.png%7CBC%7C%7C0%7C100%7C,,khushi/2011-04-02/Kollywood/Event/Pillaiyar%20Theru%20Kadaisi%20Veedu%20Movie%20Audio%20Launch%20Gallery/Pillayar-Koil-Kadaisi-Theru-Audio-Launch-Gallery-16.jpg

இயக்குநர் சபாஷ் பெறும் இடங்கள்

 1. படத்தோட ஓப்பனிங்க் ஷாட்ல கிராமத்து சிறுவர்கள் வாய்க்கால்ல பாய்ந்து ஜம்ப் பண்ணும் கவிதையான காட்சி..

2. காதலி கடவுள் பற்றி பேசியதும், பத்தே நிமிடத்தில் ஆல விழுதுகளை, 2 எலுமிச்சம்பழங்களை (கண்கள்) வைத்தே ஒரு விநாயகர் சிலை ரெடி பண்ணும் காட்சி.. ஆர்ட் டைரக்‌ஷனுக்கு ஒரு சபாஷ்..

3. ஹீரோயினுக்கு கேன்சர் என ஹீரோ நினைத்துக்கொண்டிருக்கும்போது ஹீரோவுக்குத்தான் கேன்சர்,என ட்விஸ்ட் வைத்த விதமும்,அதைத்தொடர்ந்து வரும் ஹீரோ- ஹீரோயின் சந்திப்புகளும்..

4. எனக்கு ஒரு தேவதையை மெலோடி பாட்டை கையாண்ட விதம்.. 

இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1. ஓப்பனிங்க் சீன்ல ஹீரோ சைக்கிள்ல 12 கிமீ ஸ்பீட்ல போறார். அதை துரத்தும் போலீஸ் ஜீப் 75 கிமீ ஸ்பீடுல போகுது,ஆனா ஹீரோவைப்பிடிக்க 13 நிமிஷம் ஆகுது.. என்னா லாஜிக் இது?

2. ஹீரோவுக்கு வந்திருக்கும் கேன்சர்க்கு டாக்டர் சொல்ற டெக்னிக்கல் பேரையேதான் 180 (நூற்றி எண்பது) படத்து ஹீரோவுக்கும் அந்த டாக்டர் சொல்றாரு.. என் டவுட் கொஸ்டின் பேப்பர் அவுட் ஆகிடுச்சா? அல்லது 2 பேரும் ஒரே டி விடில சுட்டுட்டீங்களா?

3. டைட்டிலில் பொள்ளாச்சி பொன்னாவரம் என கதைக்களன் நடக்கும் ஊரைக்காட்டுகிறார்கள் ,ஆனால் பேசும் மொழி நடை (ஸ்லாங்க்) அந்த ஊர் போலவே இல்லையே?

4. ஹீரோ இறந்துட்டதும் டக்னு படத்தை முடிக்காம மெகா சீரியல் ரேஞ்சுக்கு ஏன் சடங்குகளை எல்லாம் காட்டி இழுக்கனும் படத்தை?

http://2.bp.blogspot.com/-LX8ePYh34mA/TZN-lwi0t7I/AAAAAAAAPPs/QQyJj4S9QQ0/s1600/pillaiyar_theru_kadaisi_veedu_audio_launch_06.jpg


இந்தப்படம் எல்லா செண்ட்டர்லயும் சுமாரா 20 நாட்கள் ஓடலாம்..

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 37

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க்கிங்க் - சுமார்

சி. பி . கமெண்ட் - டி வி சீரியல் ரசிகைகள் பார்க்கலாம்

ஈரோடு தேவி அபிராமி,ஆனூர் 2 தியேட்டர்களில்  படம் ஓடுது.. நான் எந்த தியேட்டர்ல பார்த்திருப்பேன்னு எல்லாருக்கும் தெரியும்..என் பொண்ணு பேரு இருக்கற தேவி அபிராமி தியேட்டர்ல தான் பார்த்தேன்..

Monday, June 27, 2011

என் அழகை வைத்தே பல கவிதைகள் தேற்றி விடுகிறாயே? எப்படி?

1.நில அபகரிப்பை தடுக்க மாவட்டம் தோறும் சிறப்புப்பிரிவு: தமிழக அரசு உத்தரவு #ஈரோடு என் கே கே பி ராஜா மீது அம்மாவுக்கு என்ன கோபமோ?

------------------------------

2. டீசல் விலை உயர்வை எதிர்த்து ஸ்டிரைக் : லாரிகள் நாளை ஓடுமா? #டீசல் அடிச்சுட்டு ஓட்டுனா ஓடும்,லபோ திபோன்னு அடிச்சுக்கிட்டு இருந்தா ஓடாது

-----------------------

3. காதலன் வீட்டு முன்பு தீக்குளித்த பெண் பலி#அப்டியே காதலனையும் கட்டிப்பிடிச்சு கரை சேத்தி இருக்கலாம்

---------------------

4. எஸ்.ஐ.,யை தரக்குறைவாக பேசியதால் பரபரப்பு#அவர் என்ன அரசியல்வாதியா?எப்படி பேசுனாலும் போனாப்போகுதுன்னு விட?

---------------------

5. ஓட்டலில் சாப்பாட்டிற்கு அப்பளம் வைக்காததால் ஆவேசம்  10 பேர் கைது#அடடா அப்பளம் சாப்பிட ஆசைப்பட்டு இப்படி ஜெயில்ல களி சாப்பிடறாங்களே?

--------------------

6. மகனை நினைத்து அடிக்கடி அழும் கனிமொழி: சிறை அதிகாரி தகவல்#மகனையும் உள்ளே அனுப்பிடலாமா?அப்பா மட்டும் போதுமா?

--------------------

7. கும்பகோணம்:அண்ணியின் விரலை கடித்த வாலிபருக்கு வலை#மாறுபட்ட கோணத்துல சிந்திச்சு இருக்கார் போல..

---------------------


8. விஜய்யின் போக்கிரி பட தயாரிப்பாளர் கைது!#விஜய்யை  வெச்சு படம் தயாரிச்சா அவ்வளவு பெரிய சமுதாயக்குற்றமா? அவ்வ்வ்

-------------------

9. ஐஸ்வர்யா ராய் கர்ப்பம்: சல்மான் வாழ்த்து!#நல்ல மனம் வாழ்க ,நாடு போற்ற வாழ்க

---------------------

10சீதையாக நடிப்பதால்,  பிரபுதேவாவை சந்திக்காமல் விரதம் இருந்துள்ளார் நடிகை நயன்தாரா.#ஆமாமா,முதல் ராமரை நினைச்சு 2வது ராமரை அவாய்டுபண்றாரோ?

----------------------------

11. "ஐ லவ் யூ அண்ணா". என ஒரு ஃபிகர் அழைத்தால் பயம் தேவை இல்லை,உங்கள் பெயரை அண்ணாமலை என மாற்றுக#விடாக்கண்டன் விமல்ராஜ்

---------------------

12.ஆ.ராசாவை விசாரிக்க சென்னை வருமானவரித்துறை அதிகாரிகள் நடவடிக்கை#இது ஜெ வின் பழி வாங்கும் நடவடிக்கை-கலைஞர் புலம்பல்@இமேஜினேஷன்

-----------------------

13.அண்ணா என ஒரு ஃபிகர் அழைத்தும் ஒருவன் கவலைப்படவில்லை என்றால் அந்த ஃபிகர் கேரளத்துப்பைங்கிளியாக இருக்கும்

--------------------

14. சின்ன விஷயத்தை பெரிசாக்கி நமக்கு தொந்தரவு தர்றவங்க 1.நம்ம சம்சாரம் 2.சினிமாவில் நடிகைகள்#நோ உள்குத்து

--------------------



15. பிரபுதேவா எனக்கு அண்ணன் மாதிரி- ஹன்சிகா மோத்வானி#அப்புறம் ஏன் நயன் தாரா உங்களை சக்களத்தின்னு வையறாங்க?ஒரு வேளை கண்ணன் மாதிரியோ?

--------------------

16. ட்விட்டரில் உன்னால் ஐலவ்யூ சொல்ல முடியுமா? என சவால் விட்டாள்.ஏன் முடியாது என்றேன்.140 க்குள் முடிக்கவேண்டும் எப்படி 143 முடியும்?என்றாள்

---------------------

17. எனக்காக காத்திருப்பது உனக்கு போர் அடிக்கவில்லையா? என்றாள் காதலி.உன் சமீபத்தைவிட எனக்கு அதிகபோதை தருவது உனக்காக காத்திருக்கும் தருணங்களே

--------------------

18. கணினியுகத்தில் எந்த கிறுக்கனாவது காதலியின் ஃபோட்டோவை மணிபர்சில்வைத்திருப்பானா?என்றாள் காதலி.எந்த யுகத்திலும் காதலியின் முகம்தானே சுகம்?

---------------------

19. காதலியிடம் 143 என்றேன்.இப்போதைக்கு உங்கள் எண்ணத்தை 356 என்றாள்.நான் என்ன 420யா? என்றேன்#அக்கவுண்டன்ஸி கேர்ள் லவ்

-----------------------------

20. என் அழகை வைத்தே பல கவிதைகள் தேற்றி விடுகிறாயே? எப்படி? என்றாள் காதலி.உன்னையே தேற்றிய எனக்கு கவிதைகளை தேற்றுவதா கஷ்டம்? என்றேன்

அன்பே.. உன் அதீதஅன்பு என்னை மிரள வைக்கிறது

1.நீ என்னை காயப்படுத்தி விட்டாய்,இதில் என்ன விசித்திரம் எனில் காயத்துக்கு மருந்தே நீ தான்.

------------------------

2. உணர்ச்சி வசப்பட்டு நான் வார்த்தைகளை கொட்டுவதில்லை,உணர்ச்சிகள் மாறி விடும்,ஆனால் பேசிய வார்த்தைகள் மாறாது.. 

--------------------

3.  சேலை எடுக்கும் கணவன் மெல்லிய  எடை குறைந்த சேலையாக எடுத்தால்வீட்டில் துவைக்கும் பணி கணவனுடையதாக இருக்கும்

---------------------

4.  என்னைப்புரிந்து கொள்வாயா?இல்லை,பிரிந்து கொல்வாயா?முடிவெடுக்கும் அதிகாரம் உன் கையில்,ஏற்றுக்கொள்ளும் அன்பு என் மனதில்#அப்ளிகேஷன்

---------------------

5. நான் கேட்கும் கேள்விகளுக்கு எந்த பதிலும் சொல்வதே இல்லை என என்னுடன் ஊடல்கொண்டாள்.அப்போதுதான் ஏன்? ஏன்? என பேசிக்கொண்டே இருப்பாய் என்றேன்


 ---------------------



6. கொடுத்து கொடுத்து சிவந்த அதரங்கள் என்னுது,வாங்கினால் வட்டியுடன் திருப்பித்தரவேண்டும் என்ற இங்கிதம் இல்லாத உதடுகள் உன்னுது#கிஸ்ஸாலஜி

--------------------

7. இன்றுடன் நம் காதல் செத்துப்போய்  12 ஆண்டுகள் ஆகின்றன.நீயும், நானும் தனித்தனியே இருக்கிறோம்.வாழ்கிறோமா?

---------------------------

8. கூட்ட நெரிசலில் பஸ்ஸில் கண்டக்டர் முன்னும்பின்னும்  எரிச்சலுடன் அடிக்கடி சென்று வருவதைப்போல என் நினைவுகள் உன் ஊடல் தருணங்களைதொட்டுத்தொட்டு வருகிறது..

----------------------------

9. உன் அதீதஅன்பு என்னை மிரள வைக்கிறது,வாங்கிய கடனை வட்டியுடன் கட்ட இயலாத ஏழை அசலையாவது கட்ட ஏங்குவது போல் கிடைத்த அன்பை உன் மீது செலுத்த துடிக்கிறேன்

--------------------

10.  கல்நெஞ்சக்காரியடி நீ.அதனால் தான் உன் முடிவை மறு பரிசீலனைக்கு நான் கோரிக்கையே விடுக்கவில்லை.நேசிப்பு என்பது இதயம் உள்ளவர்களூக்குமட்டும்

------------------------

நெல்லை பதிவர் சந்திப்பு கடைசி பாகம் -பாகம் 6



பண்டிகைகளும், விழாக்களும் மக்களின் மகிழ்ச்சிக்காக உருவாக்கப்பட்டவை.வீட்டில் ஏதாவது சண்டை,கணவன்,மனைவிக்குள் ஊடல் என்றால் இந்த மாதிரி விழாக்காலங்களில் உறவினர்கள் வீட்டுக்கு வரும்போது அவர்கள் முன் சும்மானாச்சிக்காவது தம்பதிகள் சந்தோஷமாக முகத்தை வைத்துக்கொள்வார்கள்.. அந்நியோன்யமாய் இருப்பது போல் காட்டிக்கொள்வார்கள்.. பிறகு அதுவே தொடர் கதை ஆகிவிடும்..

இது போன்ற உயரிய காரணங்களுக்காகவும்,மனித நேயம் வளர்வதற்காகவும்,உறவுகள் மேம்படுவதற்காகவும் உருவாக்கப்பட்டவைதான் விழாக்கள்..ஊர்த்திருவிழா என்றால் வியாபாரிகளுக்குக்கொண்டாட்டம்.. சுபச்செலவாக இருப்பதால் யாரும் அது பற்றி கவலைப்படுவது இல்லை.. 

பிரபலமான எழுத்தாளர்களை வாசகர்கள் சந்திக்க ஆர்வமாக இருப்பதும், சந்திப்புக்குப்பின் அவன் மனம் ஏமாற்றம் அடைவதையும் நான் கண்டிருக்கிறேன்..  காரணம் அவன் படித்த எழுத்து மூலம் அவனுக்குள் ஒரு கற்பனை  பிம்பத்தை உருவாக்கி வைத்திருப்பான்.. 

நேரில் சந்தித்து உரையாடிய பின் அவன் கற்பனைகள் தவிடுபொடியாகும்..அவன் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக எழுத்தாளனின் முகம் வெளிப்படும்போது அவன் ஏமாற்றம் அடைகிறான்...

ஆனால் பதிவர் சந்திப்பில் யாரும் அதிகமாக எதிர்பார்த்து வரவில்லை.. ஒவ்வொரு பதிவரின் எழுத்தை மட்டுமே பார்த்தவர்கள் அவர்கள் எப்படிப்பட்ட கேரக்டர்?பழகுவதற்கு எந்த மாதிரி ஆள் என்பதை கண்கூடாக காண முடிவதால் சந்திப்புக்கு பிறகு உறவு பலப்படும் வாய்ப்பே அதிகம்.. 


எல்லா பதிவர்களூம் பேசி முடித்த பின் ஒரு நன்கொடை வசூலிக்கப்பட்டது.. பதிவர்கள் மனம் உவந்து பணம் கொடுத்தனர்.. இதில் சித்ராவும் ,பலாப்பட்டறை சங்கரும் அதிகமான பணம் கொடுத்தனர்.. நான் 100 ரூபாய் கொடுத்தேன்..

மொத்தம் 37 பதிவர்கள் வந்திருந்தனர்.. சராசரி ஆளூக்கு ரூ 50 டூ 100 தருவாங்க, அதிக பட்சம் ரூ 3000 கலெக்ட் ஆகும் என நினைத்தேன்.. ஆனால் ரூ 5615 கலெக்ட் ஆச்சு.. ஆச்சரியம் தான்.. இதில் நெஞ்சை நெகிழ வைக்கும் செய்தி யாரோ ஒரு பதிவர் ஏழ்மை நிலையையும் மீறி ரூ 15 நன்கொடையாக கொடுத்ததுதான் விழாவின் ஹை லைட்..அப்போதுதான் நான் நன்கொடை இன்னும் அதிகமாக கொடுத்திருக்கலாமோ என வருந்தினேன்..

ஒவ்வொரு மனிதனும் அவசரமாக ஒரு செயலை செய்தி முடித்து விடுகிறான்.. பிறகு காலம் எல்லாம் அதை அப்படி செய்திருக்கலாமோ?இதை இப்படி செய்திருக்கலாமோ என நினைத்து நினைத்து வருந்துகிறான்.. இது இயற்கை.. மனித மன விசித்திரம்..

சும்மா வந்து சந்தித்தோம், சிந்தித்தோம் என வாய் வார்த்தைக்காக இல்லாமல் ஏதோ உபயோகமாக செய்த திருப்தி அனைவர் உள்ளத்திலும்..

பதிவர் மீட்டிங்க் முடிந்ததும் சாப்பாடு...


பஃபே சிஸ்டம்..ஒரு ஆள்க்கு ரூ 160 செலவு (உபயம் அண்ணன் உணவு உலகம்).

செம கலக்கலான சைவ சாப்பாடு..


முதல்ல ஒரு சூப் குடிச்சோம்.. அப்புறம் நாண் ரொட்டி ,குருமா , பிறகு வெஜ் ஃபிரைடு ரைஸ்.. தயிர் பச்சடி..

அப்புறம் நார்மல் ஒயிட் ரைஸ் ,ரசம், தயிர்.. அப்பளம், மாங்காய் ஊறுகாய்  என வெளுத்து வாங்கினோம்..

இந்த சாப்பாட்டை செம எஞ்சாய் பண்ணி சாப்பிட்டது இம்சை அரசன் பாபு,வெறும்பய ஜெயந்த்,கல்பனா ,நாஞ்சில் மனோ சாரி லேப்டாப் மனோ இந்த செட் தான்.. ஊஞ்சல்ல உக்காந்துட்டு ஜாலியா பேசிக்கிட்டே கிண்டல் அடிச்சுக்கிட்டே சாப்பிட்டாங்க.. அவங்க என்ன பேசுனாங்க, என்ன கமெண்ட்ஸ் பண்ணாங்க என்பது எல்லாம் இங்கே சொன்னா அது ரொம்ப நீளம் ஆகிடும்.. ஏற்கனவே பதிவை சீக்கிரம் முடிடா ரொம்ப இழுக்காதே என ஏகப்பட்ட மிரட்டல்கள் வருவதால் அவை கட்..

பாபு வும் ,மனோவும் கல்பனாவை மிரட்டி (அன்பு மிரட்டல்) அதை வாங்கிட்டு வா, இதை வாங்கிட்டு வா என அதிகாரம் செஞ்சாங்க.. ஏன்னா இவங்க போனா அடிக்கடி வர்றானே அப்டின்னு இமேஜ் ஸ்பாயில் ஆகிடுமாம்.. 

நாய்க்குட்டி மனசு,சித்ரா,கவுசல்யா இவங்க ஒரு செட்.. டேபிள்ல உக்காந்து சாப்பிட்டாங்க..


பலாபட்டறை சங்கர்,மணிஜி,மணிவண்ணன் ,வலைச்சரம் சீனா,வெடிவால் இவங்க எல்லாம் ரொம்ப நாசூக்கா சாப்பிட்டாங்க..

ஜோசஃபின் அவர் கணவர் கூட  ஸ்டேண்டிங்க்லயே சாப்டாங்க.. அவர் மனைவிக்கு ரொம்ப தான் மரியாதை செலுத்துனார்.. லவ் ஜோடி போல.. நான் கேட்டேன்.. என்ன சார் உக்காந்து சாப்பிடலியா?ன்னு , அதுக்கு அவர் அது எப்படிங்க மனைவிக்கு எதிரே மரியாதை இல்லாம அமர்வது என்றார்..  ஹூம்.. நல்லவேளை.. என் மனைவியை அழைத்து வரவில்லை என நினைத்துக்கொண்டேன்..

நான் நின்னுட்டே தான் சாப்பிட்டேன்.. ஒரு இடத்துல உக்காந்து சாப்பிட்டா எல்லாரையும் நோட் பண்ண முடியாதே?

சாப்பிட்டு முடிச்ச பிறகு எல்லாரும் குரூப் குரூப்பா ஃபோட்டோ எடுத்துக்கிட்டோம்..காலேஜ் ஃபைனல் இயர் ஸ்டூடண்ட்ஸ் மாதிரி ஒரு ஃபீலிங்க்..

இறுதி நிகழ்ச்சியா சித்ரா எல்லா பதிவர்களூக்கும் ஸ்வீட் பாக்கெட் குடுத்தாங்க.. உணவு உலகம் அண்ணன் தான் அவங்க கிட்டே நீங்க கொடுங்கன்னு வேண்டுகோள் விடுத்தார்.. அப்பவே என் மைண்ட் 37 பதிவர்களுக்கு அல்வா கொடுத்த ஃபாரீன் பதிவர் சித்ரா.. பதிவுலகம் அதிர்ச்சி அப்டின்னு டைட்டில் வெச்சுடலாமா?ன்னு யோசிச்சுது..

சித்ரா கிட்டே பர்மிஷன் கேட்டேன்.. தம்பி.. நீ பதிவர் சந்திப்பு போஸ்ட்டையாவது எந்த கோணங்கித்தனமும் பண்ணாம உருப்படியா எழுதப்பாரு அப்டின்னாங்க.. ஆஹா.. சி.பி போற பக்கம் எல்லாம் பல்பு வாங்கறானே அப்டின்னு நினைச்சுட்டு டைட்டில் ஐடியா கேன்சல்..ஓக்கே அக்கா அப்டின்னுட்டேன்..

அப்புறம் எல்லார்கிட்டேயும் சொல்லிட்டு பிரியா விடை பெற்றோம்.. ( நல்ல வேளை பிரியாங்கற பேர்ல எந்த பதிவரும் இல்லை)


அப்புறம் நான் ,லேப்டாப் மனோ, கோமாளி செல்வா ,லேப் டாப் மனோ மேல நம்பிக்கை இல்லாம அவரோட சம்சாரம் ( தாலி கட்டிய முதல் மனைவி ) பாடிகார்டா அனுப்பின மனோவின் மச்சினன் 4 பேரும் குற்றாலம் போய் வந்தோம்.. அது தனியாக பின்னொரு நாளில் குற்றாலத்தில் கும்மி அடிச்சோம் என்ற தலைப்பில் பதிவு போட்டுக்கலாம்..

இப்போதைக்கு நெல்லை பதிவர் சந்திப்பு போஸ்ட் இனிதே நிறைவு பெறுகிறது.. வாழ்க வளமுடன்,, வாழ்க வையகம்..

டிஸ்கி - பதிவர்சந்திப்புக்கான வீடியோ இணைப்பு கிடைத்தால் அண்ணன் உணவு உலகம் அனுமதியுடன் அதை பதிவாக போடலாமா? என யோசித்து வருகிறேன்..  ..

உதயன் -சந்தானத்தின் காமெடிக்காக - சினிமா விமர்சனம்

http://indiatheatres.com/MovieStills%5CUdhayan(1).jpga

10 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்தால் 10,000 ரூபாய்க்கு மட்டுமே நடிக்கும் ஹீரோ,20 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்தால் 50 லட்சம் ரூபாய்க்கு நடிக்கும் ஓவர் ஆக்டிங்க் ஹீரோயின்  இவங்க ரெண்டு பேரும் இணைந்தா எப்படி இருக்கும்?அது தான் உதயன்.. அரசியல் வாழ்வில் மட்டும் அல்ல, சினிமா வாழ்விலும் கலைஞருக்கு ,அவர் குடும்பத்தார்க்கு இறங்குமுகம் ஸ்டார்ட்டட் என்பதை உணர்த்த வந்த படம்....

சிங்கிள் ஆக்ட்டுக்கே ஃபீலிங்க்ஸ் காட்டத்தடுமாறும் ஹீரோவுக்கு இதில் டபுள் ஆக்‌ஷன்.. அண்ணன் தானும் சிரமப்பட்டு நம்மையும் சிரமப்படுத்தறார்... 2 கேரக்டருக்கும் என்னா வித்தியாசம்னா தாதா ஹீரோ பான்பராக்கோ வெற்றிலையோ போட்டிருப்பார்.. சாதா ஹீரோ டிரஸ் மட்டும் போட்டிருப்பார்.. ஹி ஹி ..


படத்தோட கதை என்னான்னா.. 2 தாதா கோஷ்டி... (அய்யய்யோ.. மறுபடி தாதா கதையா? வுடு ஜூட்.. )  ஒரு தாதா கோஷ்டில ஹீரோயின் அப்பா கணக்குப்பிள்ளை... இன்னொரு தாதா கோஷ்டில ஹீரோவோட அண்ணன் (இவரும் ஒரு ஹீரோ தான் )2 கோஷ்டியும் மாற்றி மாற்றி அடிச்சுக்குது.. இதெல்லாம் இடைவேளைக்குப்பிறகுதான்.. அதுவரை ஹீரோ ஹீரோயின் லவ் காட்சிகள், சந்தானம் காமெடி காட்சிகளை வெச்சு ஒப்பேற்றப்பார்த்திருக்காங்க.. ..ஹூம்... 

60 மார்க் ஃபிகரை 80 மார்க் ஃபிகர் ஆக்கும் ரசவாத வித்தையை ஆடை வடிவமைப்புக்கலைஞரும்,முக ஒப்பனைக்கலைஞரும் பிரமாதமாக கற்றுத்தேர்ந்திருக்கிறார்கள்.. அவர்களுக்கு ஒரு சபாஷ்.. ..ஹீரோயின் முகத்தைபார்த்துக்கொண்டே இருக்கலாம்.. சோ க்யூட்.. ஆனா பாப்பாவுக்கு ஓவர் ஆக்‌ஷன் தான் வருது.. 

டபுள் ஹீரோ இருந்தும் அவர்களை ஓவர்டேக் செய்து சிங்கிள்மேன் ஆர்மியாக அசத்துவது நம்ம சந்தானம் தான்.. பாம்பு பிடிப்பவராக  டி வி கேமராமேன்களோட அவர் அப்பார்ட்மெண்ட்க்கு வரும் பில்டப் சீன்கள் செம காமெடி ரகளை கச்சேரி.. 




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7Tz5rh9HRS-3PBw_FWJZnEyQq_NPyq3Pn1EqbVJMlHdl8oONmQaEBbKD0AIbqTMXcUYtEH36zq_uVMXq7QImVfZYM6fGplElBaEL9QP_s8L4LMNIrUxNEpv_SfatCchxePUWLdrZ-EfSt/s1600/Pranitha-+Cute-+Stills+-In-+Udhayan-+Movie-008.jpg



சந்தானம் காமெடியில் பின்னிப்பெடல் எடுத்த காட்சிகள்..

1. எதுக்காக மறுபடியும் அங்கே போய் திரும்பி எண்ட்ரி கொடுக்கறீங்க?


சந்தானம் -  ஹி ஹி பில்டப்ல பேண்ட் ஜிப் போட மறந்துட்டேன்..

2. சந்தானம் - பாம்பை பிடிக்க பரபரப்பா போறேன்.. எதுக்கு கேமராவை முன்னால கொண்டு வர்றீங்க?.. இந்த கீரித்தலையனை கூடவே கூட்டிட்டு போறேன்.. பாம்பை பயமுறுத்த உதவுவான்..

3. சந்தானம் -  அவன் என்ன அபிஷேக் பச்சனா?க்ளோஷப்ஷாட் வைக்க?

4. சந்தானம் -  அடேய்.. பாம்புக்கு எதுக்கு பால், முட்டை இதெல்லாம்? அதென்ன ஜிம்முக்கா போகுது?

5. சந்தானம் -  அடப்பாவிகளா.. இந்நா வரைக்கும் பூட்டாத கதவையா நம்பிட்டு இருந்தீங்க..?நீங்கள்ளாம்......

6. ஹீரோ- சாரி. மிஸ்.. நீங்க ரொம்ப அழகு.. வண்டியை இடிச்சா திரும்பி பார்க்கறீங்க.. அதுக்குத்தான் அடிக்கடி இடிச்சேன்.. அடிக்கடி உங்க முகத்தை பார்க்கலாமே..?

7. ஹலோ.. இப்போ நீங்க என்ன டிரஸ் போட்டு இருக்கீங்க?

சந்தானம் - ம் ,அழுக்கு பனியனும்,கிழிஞ்ச லுங்கியும் போட்டிருக்கேன்.. பேசுதுங்க பாருங்க.. ஃபோன்ல..

8. சந்தானம் -  சரி சரி.. போடா.. பேண்ட் சர்ட் உனக்கு ஓசி கொடுத்தவன் உன்னை தேடுவான்.. இவரு பெரிய மிஸ்கின் பாரு.. கூலிங்க் க்ளாஸ் போடாம வெளீல வரவே மாட்டாரு.. 

9. ஹீரோ -  இது யாரு ஆண்ட்டி..? உங்க தங்கச்சியா? ஓ சாரி உங்க மகளா?

10. ஹீரோயின் - ஆம்பளைங்களூக்கு உடனே கிடைச்சுட்டா அதனோட அருமை தெரியாது.. ஆராய்ச்சி பண்ணிட்டு இருப்பாங்க.. 

11. மிஸ்.. உங்க பேரென்ன? 

------------------------

ஓ , ஊமையா? சாரிங்க... 

அய்யோ.. என் பேரு பிரியா.. 

12. இப்போ பாருடி.. என் சர்ட் பட்டன் மேல் பட்டனை ஒண்ணு மட்டும் கழட்றேன்.. லோன் சாங்க்‌ஷன் ஆகிடும் பாரு.. ( ஓப்பன் யுனிவர்சிட்டி ஓமனா வாழ்க)

13. சந்தானம் -  மேடம், உள்ளே ஏ சி ஒர்க் ஆகலையா? ஏன் பட்டனை கழட்டி விட்டிருக்கீங்க?

ஸ்டுப்பிட்.. 

டவுட் கேட்டா ஏன் திட்டறீங்க?
14.  என்னப்பா இது சொல்லாம கொள்ளாம வந்திருக்கே?

சொல்லாம வந்தா சர்ப்பரைஸ்.. சொல்லிட்டு வந்தா அது மீட்டிங்க்.. 

15. அவ பேரு கூட என்னமோ வர்றியா? போறியா?ன்னு வருமே.. ம் பிரியா.... 


http://movies.vinkas.in/files/2011/06/pranitha-stills.jpg

16. சின்னப்பையன் - அங்க்கிள், எங்க கூட விளையாட வர்றதா சொன்னீங்க?

சந்தானம் -  அது உங்கக்கா கூட இருக்கறப்ப சொன்னது.. இப்போ நீ தனியாத்தானே இருக்கே?

17. சந்தானம் -  கோணியை திட்டுனா சாணிக்கு ஏன் கோபம் வருது?

18. சந்தானம் -  இந்த பொண்ணுங்க எல்லாம் சாக்கு மூட்டைல கால் விட்டு தத்தி தத்தி வர்றாங்க பாருங்க.. இந்த கேமை நிமிர்ந்து பார்த்தா  தெரியாது.. குனிஞ்சு பார்த்தாதான் தெரியும்.. 

19. எத்தனை  பேர் இருந்தாலும் அந்த கூட்டத்துல  பொண்டாட்டி வாசனை புருஷனுக்கு தெரிஞ்சிடும்.. 

20. ஸாரி.. மேடம்,,. நான் வேணும்னு பண்ணலை.. தெரியாம இடிச்சுட்டுது..

இல்லை.. நான் வேணும்னுதான் இடிச்சேன்... ( ஆஹா பெண்ணுக்கு சம உரிமை)

21. சாரி சார்.. யாரும் சாகலை.. சுடுகாடு காலி.. அதனால டியூ கட்ட முடியல.. 

22. ஏய்.. வசந்த்.. நீயா!!!!!!!!!!!

ஏன்? வேற யாரையாவது எதிர்பார்த்தியா?

அது இல்ல.. வீட்டுக்குள்ள எப்படி வந்தே?

வாசல் வழியாத்தான்... 

23. ஹலோ.. பூசாரியா? நீங்க மந்திரிச்சதுல இருந்து என் பொண்ணு ராத்திரில உளர்றதில்லை.. 

வெரிகுட்..
பகல்லயே உளற ஆரம்பிச்சுட்டா.. 

24. சந்தானம் -  வெள்ளிக்கிழமை தலைக்கு குளிச்சுட்டு கோயிலுக்குப்போற பொண்ணுங்களைவிட சனிக்கிழமை தலையை விரிச்சுப்போட்டுட்டு பஃபே க்ளப் போறபொண்ணுங்க அதிகம்

25. வோட்கா சரக்குல இவ்வளவு தண்ணி கலக்கக்கூடாது. 


சந்தானம் -  மிஸ்.ஒரு படி அரிசில எவ்வளவு தண்ணீர் கலந்து குக்கர்ல வைக்கனும்தெரியுமா உங்களுக்கு? 

26.  சந்தானம் -  நீயும் சிங்கிள்,நானும் சிங்கிள்.. ஒய் டோண்ட் வீ  கெட் மிங்கிள்?

27. சந்தானம் -  கல்யாணம் பண்ணிக்கறியா?ன்னு கேட்டதுக்கு ஏன் இந்த கத்து கத்தறா?கற்பழிச்சிருந்தாக்கூட இப்படி கத்தி இருக்க மாட்டா.. போல.. 

28. ஹீரோ - ஹாய்.. ப்ரியா.. நீ பக்கத்துல இருந்து பார்க்கறதை விட தூரத்துல இருந்து பார்க்கறப்பத்தான் அழகா தெரியறே!!


அப்படியா? அப்போ நான் கிளம்பறேன்.. என்னை தூரத்துல இருந்தே ரசிச்சுக்கோ..

29. சந்தானம் - எதுக்கு இத்தனை பொண்ணுங்க? இவங்க எல்லாம் யாரு?

எல்லாரும் என் ஒயிஃப்ங்க தான்.. ஹவுசிங்க் லோன் வாங்கி கட்னதால எல்லாரும் ஹவுசிங்க் ஒயிஃப் ஆகிட்டாங்க.. 

30. சந்தானம் -  டேய்.. உன் கிட்டே கரண்ட் இருக்கறதால தானே லோன் வாங்கி லோன் வாங்கி வீடு கட்டறே..?ஃபீஸ் பிடுங்கிட்டா?

எப்படி பிடுங்குவீங்க..?

இப்படி உதைச்சுத்தான்

அய்யோ.....




http://telugu.go4wallpapers.com/bollywood_babes33/P/Praneetha/PRANEETHA151110a.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. ஹீரோ சின்னப்பையன்கிட்ட ஐஸ்க்ரீம் குடுத்துவிட்டு அதை ஹீரோயினிடம் தரச்சொல்ல அவன் அவனோட ஆள் சிறுமிக்கு அதை தருவது சோ க்யூட் சீன்.. 

2. ஹீரோயின் காதல் வசப்பட்ட முதல் நாள் ஹீரோவின் ரூமில் உடை மாற்றும்போது ஹீரோவின் ஃபோட்டோவை தன் துப்பட்டாவால் மூடும் இடம் கவிதை.. 

3.  இத்தனை நாளாய் எங்கே இருந்தாய் பாடல் காட்சிகளில் காமிரா கோணங்களும் , ஹீரோயின் முக அழகை 100%  மெருகேற்றி காட்டியதும்.. 

4. அபார்ட்மெண்ட்சில் ஹீரோ,ஹீரோயின், சிறுவர் ,சிறுமிகள் கண்னாமூச்சி ஆட்டம் ஆடும்போது வரும் பின்னணி இசை

5. டூயட் சாங்க்ஸ் தவிர ஹீரோயினை பிரமாதமான அழகுடன் கண்ணியமான உடைகளில் காட்டியது..  ( டூயட் சாங்க்ஸில் தடார் என கவர்ச்சி டிரஸ்ஸில் ஹீரோயின் வரும்போது மொத்தப்படத்திலும் மெனக்கெட்டு காட்டிய கண்ணியக்காதல் களங்கம் அடைகிறது)





https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh9cj6niB9z9RrfJSauXmGlKZjIfEkaXdyfrk494h8fzQveXcskW5mp03g96WCI6d1JHTcOHbRSmoycB3sQeSHjdfLbD8XdlqpCbcU1FAGsolZnMEOwsM1SeV53DgX3-uvouXFUnSUfCBc/s1600/Pranitha+new+Hot+Photo+Stills+%25285%2529.jpg
இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1.  ஒரு தனியார் வங்கியில் அசிஸ்டெண்ட் மேனேஜராக இருக்கும் ஹீரோ இப்படித்தான் கலர் போன ஜீன்ஸ் பேண்ட்டும் ,டக் இன் செய்யாத சட்டையுமாக படம் பூரா வருவாரா? THE DRESSING SENSE OF THE HERO IS VERY BAD


2. டிராஃபிக்கில் மாட்டும் ஹீரோயின் நடி ரோட்டில் சாவதானமாக மேக்கப் போடறாரே  . அது எப்படி? எந்தப்பெண் அப்படி போடுது?

 3. ஹீரோவுக்கு முக உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தத்தெரிவதில்லை என்பதற்காக அவருக்கு படம் பூரா கூலிங்க் கிளாஸ் மாட்டி விட்டது.. 


 4. படம் பூரா கண்ணியமாக பாடல்களை நுழைத்தவர் திடீர் என யக்கா யக்கா லக்கா லக்கா மேல இல்ல கீழே இல்ல ஆதரிப்பார் யாரும் இல்ல என்ற மோசமான டப்பாங்குத்துப்பாடலை நுழைத்து படத்தின் தரத்தை குறைத்தது..




http://www.imageboxoffice.com/photos/1024-768/simg34d53c99263536.jpg

இடைவேளைக்குப்பிறகு வன்முறை  ஜாஸ்தி.. 

ஏ , பி செண்ட்டர்களில் 25 நாட்கள் ஓடும்.. சி செண்ட்டர்களில் 10 நாட்கள் ஓடும்

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 40

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க் - ஓக்கே

சி .பி .கமெண்ட் - சந்தானம் காமெடிக்காக பார்க்கலாம் என நினைப்பவர்கள் மட்டும் பார்க்கலாம்

 ஈரோடு ராயல் தியேட்டரில் படம் பார்த்தேன்

பலரது வேண்டுகோளுக்கிணங்க  நாட்டுக்கு முக்கியமான தகவல்  ஹீரோ பெயர் - அருள் நிதி (வம்சம்),ஹீரோயின் பெயர் ப்ரனீதா (காஜல் அகர்வால் தங்கை)

டிஸ்கி - 1 வரி,வீட்டு மனை மற்றும் சட்ட சிக்கல்கள் கேள்வி பதில்கள்

டிஸ்கி 2 கோ தானம் எதற்காக?அரிசி மாவால் கோலமிடுவது புண்ணியமா? நவக்கிரகங்களை வழிபடுவது ...