Sunday, February 10, 2013

விஸ்வரூபம் - சினிமா விமர்சனம்

தமிழ்நாட்டின் அடுத்த சி எம் கனவில் இருக்கும் கேப்டன் நடித்த ஏ வி எம் மின் மாநகரக்காவல் ல பாரதப்பிரதமரை வில்லன் கிட்டே இருந்து ஹீரோ காப்பாத்துவாரு,அமரர் திருப்பதிசாமி இயக்கிய நரசிம்மா படத்துல கேப்டன் தீவிரவாதியா  அவங்க கூட்டத்துல ஊடுருவி  டபுள் கேம் ஆடுவாரு.இந்த 2 கதையையும் மிக்ஸ் பண்ணுனா  டக்னு நம்மாளுங்க கண்டு பிடிச்சுடுவாங்க . அதனால  மசாலாப்பொரி ல சீரகம் சேர்த்தற மாதிரி THE TRAITOR ஹாலிவுட் படத்துல வர்ற மாதிரி தாலிபான்கள் வாழ்க்கை பற்றி கொஞ்சம் சேர்த்தி  அர்னால்டு ஸ்வார்செனேகர் நடிச்ச TRUE LIES  படத்துல இருந்து கொஞ்சம் மிளகாய்ப்பொடி தூவுனா கம கமக்கும் பர பரக்கும் ஆக்‌ஷன் மசாலா ரெடி .


4 படங்கள் பார்க்கும் செலவை ஒரே படத்துல  ஆடியன்ஸ் பார்த்துவிடுவதால் டிக்கெட் 4 மடங்கு போல .. 


ஓப்பனிங்க்ல நாட்டியக்கலைஞரா வரும் கமல் காட்டும் நளினங்கள், கண் அசைவுகள் , பாடி லேங்குவேஜ் எல்லாம் அட்டகாசம் . ஆல்ரெடி வரலாறு படத்துல அஜித் பண்ணின கேரக்டர்தான் என்றாலும்  கமல் டச் இன்னும் மெருகு .ஆணழகன் ல பிரசாந்த் ட்ரை   பண்ணுனார்,ஆனா இந்த அளவு நளினம் இல்லை. அந்தப்பாடலில் வரும் அட்டகாசமான 75 மார்க் ஃபிகர்கள் 6 பேரால்
   கூட காட்ட முடியாத நளினத்தை , பெண்ணின் பாவத்தை அநாயசமாய்க்கமல் காட்டி விடுகிறார்

முஸ்லீமாக  கமல் வரும் காட்சிகளில்  அசல் முஸ்லீமாகவே தெரிவது கமலின் தனிச்சிறப்பு.இந்த 2 டானிக் தவிர நடிகர் கமல் பல இடங்களில் அண்டர்ப்ளே ஆக்டிங்க்தான். அவரை சர்வசாதாரணமாக இயக்குநர் கமல் ஓவர் டேக்கி விடுகிறார். 



 வில்லனாக வரும் ராகுல்போஸ் என்னமா  முகத்துல குரோதத்தை தேக்கி வெச்சிருக்கார் . அற்புதம் . ஆஜானுபாவகமான தோற்றம் + உயரம் அவருக்கு பெரிய பிளஸ்.. 


ஹீரோயின் பூஜா குமார் .அல்வாத்துண்டு உதட்டழகி .கிறங்க வைக்கும் மேனி அழகை அவர் ரொம்ப இறங்கி வந்து காட்டினாலும் , உறங்கிக்கிடக்கும் உணர்வுகளை தட்டாமலேயே எழுப்பினாலும் , தமிழ் ரசிகர்கள் இந்த அளவு இறங்கிப்போன அழகை ரசிப்பார்களா என்பது சந்தேகமே. அவர் இனி வரும் படங்களில் மல்லிகா ஷெராவத் , ஏஞ்சலினா ஜூலி இவர்களின்  பேடு  வைக்கும் நாலெட்ஜை கற்றுக்கொண்டால் நல்லது .


ஊறுகாயாக வரும் ஆண்ட்ரியா  பெருசா ஏதும் நடிப்பை(யும் ) காட்டலை . அவருக்கு வாய்ப்பு கம்மி 





இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. தாலிபான்கள் வாழ்க்கையில் நிகழும் அவலங்கள் , அகதி வாழ்க்கை, பெண்ணடிமைத்தனம் ,குழந்தைகள் கூட தீவிரவாதப்பயிற்சி எடுப்பது, டாக்டருக்குப்படிக்க விரும்பும் சிறுவன் ஆசை நிராகரிக்கப்படுவது என முழுக்க முழுக்க ஒரு மணி நேர வரலாற்றுப்பதிவு ஆக்கியது தமிழ் சினிமா வில்  ஒரு மைல் கல். ஆப்கானிஸ்தானில் படமாக்கப்பட்டதும் தமிழில் இதுவே முதல் படம் 


2. கமல் விஸ்வரூபம் எடுக்கும் ஓப்பனிங்க் ஃபைட் காட்சி அட்டகாசம் . தியேட்டரில் கரகோஷம் அடங்கவே இல்லை . இதே போல் தமிழ் சினிமாவின் அட்டகாசமான ஃபைட் காட்சிகள்  கேப்டன் பிரபாகரனில் போலீஸ் ஸ்டேஷன் ஃபைட் , ரன்  படத்தில் மாதவன் ஓடிப்போய் ஷட்டரை இறக்கும் காட்சி , பாட்ஷா படத்தில் ரஜினி யின் இடைவேளை ஃபைட்  அரங்கு அதிரும் உதாரணங்கள் 



பூஜா குமார் அதே ஃபைட் சீனை நினைத்துப்பார்ப்பதும் அது ஸ்லோ மோஷனில் வருவதும் தமிழ் சினிமாவுக்கு முதல் முறை ) ஆல்ரெடி சிறையில் பூத்த சின்ன மலர் -ல் கேப்டன்  40 செகன்ட் அப்படி ஸ்பீடு , ஸ்லோ மோஷன் என டபுள் எண்ட்ரி ட்ரை பண்ணி இருந்தாலும் இது டியூரேஷன் , மேக்கிங்க் உலகத்தரம் .ஜாக்கிசானின் ஸ்பானிஸ் கனெக்‌ஷன் பட ஃபைட்டை நினைவு படுத்தியது .ஸ்டண்ட் மாஸ்டர் , பின்னணி இசை அமைப்பாளர் , கமலின் உழைப்பு மூன்றுக்கும் ஒரு  ராயல் சல்யூட்



3. கமலின் மனைவி கேரக்டர் இன்னொருவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பது போல் நடிப்பது கடந்த 20 வருட கமல் சினிமா வாழ்வில் இது முதல் முறை . இமேஜ் பார்க்காமல் நடித்தது குட்.. ( 20 வருடங்களுக்கு முன் அவர் நடிச்ச படங்கள்ல ஒரு வேளை இருந்திருக்கலாம் ) 


4. ஒரு மீடியமான ஆக்‌ஷன் படத்தை உலக  அளவில் கவனத்தை ஈர்த்த விதம் , 100 கோடி ரூபாய் செலவு பண்ணினாலும் கிடைக்காத நெகடிவ் பப்ளிசிட்டி , அப்படி தடை பண்ணும் அளவு என்னதான் படத்துல இருக்கு என சாமான்ய ரசிகனையும் படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டிய சாமார்த்தியம்  எல்லாம் கமலுக்கே போய்ச்சேரவேண்டிய கிரடிட்.. 

5. உனைக்காணா பாட்டில் கமல் காட்டும் அபிநயங்கள், பாடல் இசை எல்லாம் அற்புதம் . அதே போல் யார் என்று புரிகிறதா? பாட்டும் நல்ல மேட்சிங்க் 






இயக்குநர் கம் திரைக்கதை ஆசிரியர் கமல் ஹாசனிடம் சில கேள்விகள்



1. முஸ்லீம் சகோதரர்ககளை இதுக்குமுன் பலரும் வில்லன் கேரடக்ரில் காட்டி இருக்கிறார்கள் . அர்ஜூன், கேப்டன், சரத்குமார் படங்களில் எல்லாம் பார்த்தவை தான். ஆனால் அவற்றில் எல்லாம் வில்லன் அதிக பட்சம் 15 நிமிடம் காட்டுவாங்க , ஒரு க்ளைமாக்ஸ் ஃபைட் அவ்வளவு தான்.ஆனால் இந்தப்படம் முழுக்க முழுக்க முஸ்லீம் சகோதரர்களையே வில்லன்களாக காட்டி இருப்பதால் தான் இத்தனை பிரச்சனையும் . வளரும் இளைய சமுதாயம் அக்கம் பக்கம் இருக்கும் முஸ்லீம் சகோதரர்களைப்பார்த்து மிரள மாட்டார்களா? 



2, குருதிப்புனல் படத்தின் பாகம் 2 போல் தான் இந்தப்படம் வருது . ஆனா அந்தப்படத்தில் இருந்த விறு விறுப்பு , அடுத்து என்ன நடக்குமோ என்ற பதை பதைப்பு , சஸ்பென்ஸ் மிஸ்சிங்க் . முதல் 40 நிமிடங்கள் கலக்கல் , அடுத்து வரும் தாலிபான் காட்சிகள் சராசரி ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் . 



3. டெரரிஸ்ட்டாக வரும் கமல் கண்களில் சாந்தம், பொறுமை அளவுக்கதிகமா தெரியுது. வழக்கமா எதிலும் அர்ப்பணிப்பு உணர்வுடன் கேரக்டருக்காக  உடலையே மாற்றும் கமல் குறைந்த பட்சம் கண்ணுக்கு ஒரு காண்டாக்ட் லென்ஸ் கூட வைக்காதது ஏன்? 



4. தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கும் கமல் எப்படி அந்த கேங்கில் இருந்து வில்லன் கண்களில் மண்ணைத்தூவி எஸ் ஆனார்? பாகம் 2 இல் விடை கிடைக்கலாம் என்றாலும் இந்தப்படம்  மட்டும் பார்ப்பவர்களுக்கு என்ன புரியும் ? 


5. மணிரத்னம் கூட அளவுக்கதிகமா நெருக்கமோ என்னமோ 75 % வசனங்கள் புரியவே இல்லை . பி  சி செண்ட்டர் ரசிகர்கள் ரொம்ப பாவம் . யார் என்ன பேசறாங்க அப்டினு யூகிக்கக்கூட முடியாது .



6. ஓப்பனிங்க் காட்சில ஆண்ட்ரியாவை சிக்கனை டேஸ்ட் பாருன்னு கமல் சொன்னதும் அவர் இடது கையால உணவை எடுத்து சுவைக்கிறார்.. உவ்வே.. அந்த பேசிக் நாலெட்ஜ் கூடவா தெரியாது . வலது கைல எடுத்து டேஸ்டக்கூடாதா? 


7. பூஜா குமார் தன் பாஸ் கம் காதலன் கூட கார்ல போய்ட்டிருக்கார். அப்போ கணவர் கமல் ஃபோன் பண்றார். ஆஃபீஸ் வேலையா வெளில கார்ல போய்ட்டிருக்கேன்னா மேட்டர் ஓவர். ஆஃபீஸ்ல தான் இருக்கேன்னு ஏன் பொய் சொல்றார்? கார் பேக் கிரவுண்ட் சத்தம் கமலுக்குக்கேட்காதா? 



8.  ஹீரோ வுக்கும் , ஹீரோயினுக்கும் மேரேஜ் ஆகி  மேட்டர் நடக்கலை என்பதை நம்பவே முடியலை . இந்தக்காலத்துல பொண்ணு பார்க்கும்போதே ட்ரெய்லர் பார்த்துடறாங்க , நிச்சயம் நடக்கும்போது மெயின் பிக்சர் பாதி பார்த்துடறாங்க . மாடர்ன் கேர்ள்  மேரேஜ் ஆகி மேட்டர் நடக்கலை என்பதை எப்படி நம்புவது ? ஹீரோ ஒரு நார்மல் பர்சன்  இல்லை என்று ஒரு இடத்துல வசனம் வெச்சு சமாளிக்கறாங்க . ஆனா ஹீரோ அப்படி நடிக்க வேண்டிய அவசியம் இல்லை . உளவுத்துறைல பொண்டாட்டி கிட்டே மேட்டர் வெச்சுக்காதீங்க டேஞ்சர் அப்டினு எல்லாமா சொல்லி இருப்பாங்க? 




9.  கமலுக்கும் , பூஜா குமாருக்கும் காம்பினேஷன் காட்சிகள் கொஞ்ச்மாவது வெச்சிருக்கனும் . அப்போதான் அவருக்காக கமல் ஃபைட் பண்ணூம்போது இன்னும் எமோஷன் கிடைக்கும். 


10. டான்ஸர் கமலை தீவிரவாதிகள் படம் பிடிச்சு தலைவனுக்கு அனுப்பறாங்க. ஒரு ஃபோட்டோ அல்லது 2 ஃபோட்டோ எடுத்தா போதாதா? அட்வர்ட்டைஸ்மென்ட் எடுப்பது போல அத்தனை ஃபோட்டோ எதுக்கு? 





11. எம்பஸி ஆஃபீசர்  கமல் அடிவாங்கும்போது வர்றார். அந்த டைம்ல ஜஸ்ட் ஒரு ஃபோன் பண்ணி இருந்தா போதுமே... டைமும் மிச்சம் ஆகி இருக்கும், கமலையும் அடி வாங்காமல் காப்பாற்றி இருக்கலாம்.. 


12. டைம்பாம் வைப்பவன் எதுக்கு திருப்பதி நாவிதர் மாதிரி செல்ஃப் மொட்டை அடிச்சுக்கறார்? அப்போதான் பாம் வெடிக்குமா? தலையை மட்டும்னாக்கூட பரவாயில்லை... ஹய்யோ அய்யோ.. 



13. கமல் அடிக்கடி தாலிபான் தீவிரவாதி கிட்டே “ என்ன நடக்குது இங்கே? “ அப்டினு கேள்வி கேட்கறார்.. அப்போ ஆடியன்ஸ் “ அதைத்தான் நாங்களும் கேட்கறோம், என்னதான் நடக்குது? “ அப்டினு சவுண்ட் விடறாங்க.. செம காமெடி 



14. திரையில் இனி கமல் படம் எது வந்தாலும் தமிழ்ல படம் பூரா சப் டைட்டில் போடுவது நல்லது  . 



15. ஆஸ்கார் வாங்கும் ஆசைக்காகவோ , அல்லது விஸ்வரூபம் பாகம் 2 க்குப்பின் ஹாலிவு ட் படத்தில் கமல் நடிப்பதாலோ அவர் ஒபாமாவுக்கு ஓவரா ஜிங்க் ஜக் அடிப்பது மாதிரி காட்சிகள் இருக்கு . 


16 . பிராமணர்கள் , முஸ்லீம்கள் இருவரை நையாண்டி அல்லது தாக்கும் காட்சிகள் இத்தனை கட்டுக்குப்பின்னும் இருக்கு . அடுத்த படத்திலாவது அடுத்தவங்க மனசு புண் படாமல் எடுக்கவும் 


17. மனைவிக்கு கணவனைப்பிடிக்கலைன்னா  டைவர்ஸ் பண்ண 1000 வழி இருக்கு . உதாரணத்துக்கு  யாரையாவது செட்டப் பண்ணி எதிரா சாட்சி சொல்ல வைக்கலாம். அதை விட்டு ஃபிளாஸ்பேக்கை ஆராய ஆள் வைப்பது ஓவர் 


18. அந்த பிரைவேட் டிடெக்டிவ் ஆள் கிரிக்கெட் ரன்னிங்க் கமெண்ட்ரி கொடுப்பது மாதிரி ஸ்டேட்டஸ் அப்டேட் பண்ணுவது செம காமெடி . அட பறக்கா வெட்டி , முழுசா அப்சர்வ் பண்ணிட்டு அப்புறமா சொல்லறதுக்கு என்ன? என கேட்கத்தோணுது 



19. மகாநதிக்குப்பின் அழகான கமலைப்பார்க்கவே முடியல . படம் பூரா பிளாஸ்திரி ஒட்டித்தான் வர்றாரு .ஏதாவது வேண்டுதலா?






 மனம் கவர்ந்த வசனங்கள்( காதுக்கு கேட்ட கொஞ்சமாச்சும் புரிஞ்ச வசனங்கள் )




1. நான் கெட்டவ இல்லை டாக்டர் 


இங்கே வர்ற பேஷண்ட்ஸ்  யாரும் கெட்டவங்க கிடையாது




2. பிடிக்காத விஷயத்தை எப்படி ரசிச்சு செய்யறீங்க?



 என் மனைவிக்கு சிக்கன்  ரொம்பப்பிடிக்கும் , எனக்கு என் மனைவியை ரொம்பப்பிடிக்கும் . மணவாட்டியே மணவாளன் பாக்கியம் இல்லையா? 



3. ஒபாமா ரேட்டிங்கை ஏத்திக்கறார்

 இது தப்பில்லையா? 




4.  அப்பா இல்லாத பசங்க சராசரி ஆளுங்களை விட  உஷாரா இருப்பாங்க உன்னை மாதிரி .. தமாசு 



அப்பா யாருன்னே தெரியாத  பசங்க எல்லாரையும் விட உஷாரா இருப்பாங்க , உன்னை மாதிரி , இதுவும் தமாசு 


5.  என்ன மொழி பேசுனாலும் என் மகன் போராளியாத்தான் வருவான், என்னை மாதிரி 


6. பொம்பள நீ முக்காடு போடு , உடம்பை மூடு , ஊரை விட்டு ஓடு 




7. நீங்க உங்கப்பாவை விட நல்லவரா? 


 நோ


 ஏன் அப்டி இல்லை?


8. கடவுள் தான் காப்பாத்தனும் 


 எந்தக்கடவுள் ?


9.  என் வாழ்க்கைல நான் நல்லதும் செஞ்சிருக்கேன், கெட்டதும் செஞ்சிருக்கேன் , ஐ ஆம் எ ஹீரோ அண்ட் ஐ ஆம் எ வில்லன் 



10. அல்லா நம்மை மன்னிக்கவே மாட்டார் 


 நம்மை? உங்களைன்னு சொல்லுங்க 



11.  என் கடவுளுக்கு 4 கை 


 அப்போ எப்படி சிலுவைல அறைவீங்க? 




சி.பி கமெண்ட் -  கமல் ரசிகர்கள் , போர் அல்லது  போராளிகள் பற்றிய படம் விரும்பிப்பார்ப்பவர்கள்  இந்த இரு தரப்பு மட்டுமே படம் பார்க்கலாம். மற்றபடி படத்தில் வன்முறைக்காட்சிகள் , மனதை பாதிக்கும் காட்சிகள் நிறைய இருப்பதால் பெண்கள் , மைனர்கள் , மாணவ மாணவிகள் பார்க்க முடியாது . 


ஆனந்த விகடன் ஆல்ரெடி 46 மார்க் போட்டுட்டாங்க. கம்மி. ஏழாம் அறிவுக்கே 48 கொடுத்தவங்க இதுக்கு  தாராளமா 50 மார்க் கொடுத்திருக்கலாம்



 ரேட்டிங்க் - 7 / 10 


 ஈரோடு ஆனூரில் படம் பார்த்தேன் 


 



டிஸ்கி - இன்னைக்கு சண்டே , படம் போட்டு 3 நாட்கள் தான் முடிஞ்சிருக்கு , ஆனா 30 % சீட் தான் ஃபுல் ஆகி இருக்கு . கமல் ன் விஸ்வரூபம் ரஜினி யின் எந்திரனை மட்டுமல்ல விஜய் ன் துப்பாக்கியை கூட தாண்ட முடியாது # தமிழ்நாட்டில்.ஆனால் வசூலில் ஆல் ஓவர் த வோர்ல்டு  100 கோடியை அள்ளிடும்

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 8.2. 2013 ) 4 படங்கள் முன்னோட்ட பார்வை

 

1. அறியாதவன் புரியாதவன்  -பைரவி பிலிம்ஸ் கலைஞானம் வழங்க ஜெ.கே. புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் ஜெ.கே. தயாரித்து, இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள படம் அறியாதவன் புரியாதவன். கதாநாயகன் ஜெ.கே. உடன் உன்னி மாயா, சரிதா தாஸ் கதாநாயகிகளாக நடிக்க, சுபலேக சுதாகர், பாய்ஸ் ராஜன், அருள்மணி ஆகியோர் நடித்துள்ளனர். மோகனராமன் ஒளிப்பதிவு செய்ய, சுப்பு, பன்னீர் படத்தொகுப்பு வேலையை கவனிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், தயாரிப்பு பணிகளுடன் இசை மற்றும் இயக்க பொறுப்பையும் ஏற்று இருக்கிறார் ஜெ.கே


ஈரோட்டில் ரிலீஸ் இல்லை 

 


2. விஸ்வரூபம் - நடிகர் கமல்ஹாசன் ரூ.95 கோடியில் தயாரித்த மெகா பட்ஜெட் படமான விஸ்வரூபம் ஜனவர் 25-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.


ஆனால், திரைப்படத்தில் முஸ்லிம் மதத்தினரை புண்படுத்தும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறி இந்தப் படத்தை திரையிடக் கூடாது என சில முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.


தமிழக அரசின் தடையைத் தொடர்ந்து படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் விஸ்வரூப படப் பிரச்னை பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது. இதையடுத்து தமிழக உள்துறைச் செயலாளர் முன்னிலையில் நடிகர் கமல்ஹாசன், முஸ்லிம் அமைப்பினர் பேச்சு நடத்தினர். சில காட்சிகள் மற்றும் ஒலிக் குறிப்புக் காட்சிகளை நீக்க கமல்ஹாசன் சம்மதம் தெரிவித்தார். 


இதையடுத்து வியாழக்கிழமை தமிழகம், புதுச்சேரியில் 500-க்கும் அதிகமான திரையரங்குகளில் விஸ்வரூபம் வெளியானது.


சென்னையில் சுமார் 40 திரையரங்குகளில் விஸ்வரூபம் திரையிடப்பட்டது. ரசிகர்களுக்காக சிறப்பு காட்சிகள் புதன்கிழமை இரவு காண்பிக்கப்பட்டது.


விஸ்வரூபம் பட ரிலீûஸ கமல் ரசிகர்கள் விழாக் கோலமாக கொண்டாடினர். திரையரங்க வாசலில் கமல்ஹாசனின் பல அடி உயர கட் அவுட்களை வைத்து இருந்தனர். கொடி, தோரணங்களும் கட்டி இருந்தனர். பட்டாசுகள் வெடித்து, மேள தாளம் முழங்கி தங்கள் மகிழ்ச்சியை ரசிகர்கள் வெளிப்படுத்தினர்
ஈரோட்டில் விஎஸ் பி , ஆனூர் , அன்னபூரணி, சண்டிகா, ராயல் என 5 தியேட்டர்களில் ரிலீஸ் 



3. mirchi - The much-awaited Prabhas-starrer Mirchi has finally released. After Rebel's failure, Prabhas has his hopes pinning on Mirchi, which is directed by debutante director Koratala Siva. Check the Mirchi movie

review highlights to know whether Prabhas is back with a bang at the Tollywood box office.
Prabhas' performance is riveting and is undoubtedly the film's highlight. His 'punch' dialogues and body language in various scenes add to his convincing act.


Although Prabhas' role is a bit similar to the one he played in Mr Perfect, he has managed to show some variation in his characterization with elan.


The film's theme is pretty formulaic, juggling as it does between blood-thirsty factionism and a wish to make "bad" people turn "good". Director Koratala Siva has etched the character by mixing the family formula with action scenes to appease the mass audiences and maintaining Prabhas' action-hero image too.


Siva has penned an emotional script and has shaped the screenplay with only one intention - to deliver a commercial hit.


The narration is fast and gripping in the first half. The second half takes audiences through a flashback episode where the crux of the story is revealed.


Heavy dose of violence and scenes that drag in the second half might make the film uninteresting



The director draws from his writing experience and has penned some very good one liners.


Dialogues like 'Cutout choosi konni konni oppukovali dude', 'Veelaithe preminchu..maha aithe tirigi premistharu', 'katti vaadadam modaledithe...naakantey baaga evvadu vaadaledu', etc got a rousing applause from the audience.

 

The action sequences were shot well and the camera angles in fight scenes are brilliant. Prabhas' dhoti fight before the interval is to watch out for.


Devi Sri Prasad's trendy music is another asset to the film but the background score could have been better. The re-recording during the build-up scenes are superb


Madhi's beautiful picturisation perfectly captures rural charm.
The audience is left with a sense of dejavu after watching the film since there's nothing new about it. There are parts of the film, especially the comic scenes; involving Brahmanandam and Prabhas, that are entertaining.


Anushka (Vennela) looks glamorous in the film and Richa (Manasa) is okay in her role.


Well, every family entertainer cannot be different from the other as all of them dish out the same elements of action, romance, sentiments and comedy. Adding to the never ending list is Prabhas' Mirchi.


ஈரோட்டில் ஸ்ரீலட்சுமியில் ரிலீஸ்
 


4. Bullet to the Head - Follows a New Orleans hitman (Stallone) and a Washington D.C. cop (Kang) who form an alliance to bring down the killers of their respective partners. An unlikely alliance between a cop and a hitman takes place after each watches his partner die. The new partners seek revenge and discover they have a shared enemy and much in common despite being on opposite sides of the law.
ஈரோட்டில் ஸ்ரீிரஷ்ணாவில் ரிலீஸ்


ன்றி - ினர், ினி , அனத்ு சினிமா பிளாக்ஸ் 

கடல் -ஆனந்த விகடன் - ன் விமர்சனம்

தேவனுக்கும் சாத்தானுக்கும் நடுவே போராட்டம் நடைபெறும் களம்... இந்தக் 'கடல்’!


பாதிரியாருக்கான பயிற்சிக் கல்லூரியில் இருந்து முறைகேடான நடத்தை காரணமாக அர்ஜுன் வெளியேற்றப்படுவதற்கு, அரவிந்த்சாமி காரணமாகிறார். பல வருடங்கள் கழிந்தும் வன்மம் குறையாத அர்ஜுன், பொய்ப் புகாரில் அரவிந்த்சாமியைச் சிறைக்கு அனுப்புகிறார். அரவிந்த்சாமியுடன் இருக்கும் கௌதமைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டு, அவரை மாஃபியா கிரிமினல் ஆக்குகிறார். இடையே கௌதமுக்கு அர்ஜுன் மகள் துளசியோடு காதல். கடவுளுக்கும் சாத்தானுக்கும் இடையில் கௌதமின் வாழ்க்கை என்ன ஆனது என்பது கதை.



அட... ஆச்சர்யம்! துண்டு துண்டான வசனங்கள், இருட்டுப் பின்னணி என்கிற மணிரத்னத்தின் ஃபார்முலாவில் இருந்து மாறுபட்டுச் சலசலக்கிறது கடல். ஆனால், நான்கு கதாபாத்திரங்கள், அவர்களுக்கு இடையிலான உறவு, அதில் ஏற்படும் சிக்கல் எனக் கடலுக்கான களத்தை அழுத்தமாக அமைத்தவர், அதில் பேரலைகளை ஏற்படுத்தத் தவறிவிட்டார்.    



பளீரெனப் படத்தில் ஈர்ப்பவர் 'ரீஎன்ட்ரி’ அரவிந்த்சாமிதான். கெட்ட வார்த்தை பேசும் சிறுவனிடம், ''ம்ம்... என்னென்ன தோணுதோ... பேசுடே'' என்று பொறுமை காப்பதாகட்டும், சிறைக்குச் சென்று மீண்டும் கிராமத்துக்கு வரும்போது, கம்பீரம் குறையாமல் வருவதாகட்டும்... கிரேட்!



இளமையும் துடிப்புமாக வசீகரிக்கிறார் கௌதம் கார்த்திக். முரட்டுத்தனம், காதல் மயக்கம், கடத்தல் திகில், நடனத் துள்ளல் என அறிமுக வாய்ப்பிலேயே அட்டகாசம். ''சாத்தான், இயேசுவுக்கு அண்ணன்டே'' என்று 'சாத்தான்’ வில்லனாக அர்ஜுன்... அமர்க்களம். துளசி... வழக்கமாக ஈர்க்கும் மணிரத்னம் பட நாயகிகளிடம் இருக்கும் மேஜிக் ஏனோ மிஸ்ஸிங்.  



ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் 'ஏல கீச்சான்...’, 'நெஞ்சுக்குள்ளே..’, 'என்னை எங்கே நீ கூட்டிப் போற’ என்று கடல் மேல் மழைத் துளிகளாக வசீகரித்த பாடல்களுக்கு, திரையில் எந்த ஸ்பேஸும் கொடுக்கவில்லையே... ஏன் சார்? அலைகளின் மேலாகவும் உள்ளாகவும் பயணிக்கும் ராஜீவ்மேனனின் ஒளிப்பதிவு கிளாஸிக் துல்லியம்!



அர்ஜுனுக்கும் அரவிந்த்சாமிக்கும் வருகிற முட்டல், கௌதமின் அவலமான சிறுபிராயம் என அபாரமாக ஆரம்பிக்கிற கதை, போகப் போகத் துடுப்பு இல்லாத படகு மாதிரி தடுமாறுகிறது. தான் செய்த பாவங்களை  துளசியிடம் கௌதம்  அடுக்கடுக்காகச் சொல்லும்போது, ''அதனால என்ன, இனிமே செய்யாதே!'' என்று துளசி சொல்லும் இடம் ஒரு கவிதை... அதைப் போல இயல்பும் ஈர்ப்பும் வேறெங்கும் இல்லையே?! அர்ஜுன்-அரவிந்த்சாமி இடையிலான மோதலில் இருக்கும் உயிர்ப்பு, கௌதம்-துளசி இடையிலான காதலில் இல்லவே இல்லையே?




'எனக்கு நிம்மதியா இருக்கிறதவிட... உஷாரா இருக்கிறதுதாம்டே பிடிக்கும்’, 



'இப்ப பொய் பேசுறீயா? இல்லை... நான் உன்னைக் காப்பாத்துனப்ப பொய் சொன்னீயா?’


 எனப் பல இடங்களில் சுளீரிடும் ஜெயமோகனின் வசனம் படத்துக்கு சுறா பலம்.


மேக்கிங்கில் மிரட்டும் இந்தக் 'கடல்’ பயணம், திரைக்கதைத் திக்குத் தெரியாததால் தள்ளாடுகிறது!


நன்றி - விகடன் விமர்சனக் குழு

”ஹிப்”னாடிஸ காதல்!!!!! ( ஜோக்ஸ்)

இந்த வண்டி எத்தனை பேர் ஓட்டி இருக்கீங்க????
Photo
1.சிலர் நம் வாழ்வின் வாழ்த்து ஆவார்கள், பலர் நம் வாழ்வின் படிப்பினை ஆவார்கள்

--------------------------------------



2. சம்பந்தப்பட்ட நபரே சலித்துக்கொள்ளும் அளவு தூக்கிப்பேசுவதும் தவறு, வலிக்கும் வரை ஒருவரை தாக்கிப்பேசுவதும் தவறு

-------------------------


3. டியர் , 11.11.11  ராசியான நாள் ,என்ன பண்ணலாம்? 

சாரி சதீஷ், அன்னைக்குதான் உங்களை கழட்டி விட்டுட்டு புது லவ்வருக்கு வாய்ப்பு தரலாம்னு ஐடியா

-------------------------------


4. மற்றவர்களின் கண்ணீரை துடைக்க முடியாதவர்கள் குறைந்த பட்சம் அவர்கள் கண்ணீர் விட தான் ஒரு காரணமாகவாவது இல்லாமல் தவிர்க்கலாம்

---------------------------------------



5. ஹீரோ பாம்பை கைல பிடிச்சுக்கிட்டு இருக்கற மாதிரி சீன் இருந்தா படம் ஹிட் ஆகிடும்னு ஒரு செண்ட்டிமெண்ட் இருக்கு.. 

சார்.. படம் ஹிட் ஆகும் ஓக்கே, நான் அவுட் ஆகிடுவனே?

-----------------------------------




True Fact
-
LIKE us: @[245336315576613:274:Meow മ്യാവൂ]




6. பல நாட்களாக நீடித்திருந்த நட்பு  ஒரே ஒரு வார்த்தையால் முறிகிற வாய்ப்புகள் இருப்பதால் நாம் நாக்கில் ,உதட்டில் ஜாக்கிரதையாக இருக்க நேரிடுகிறது

--------------------------------



7. காமமில்லாத காதல் அரிதானது,ஆனால் அதுதான் அழகானது, அன்பானது

--------------------------------



8. மாமா, உங்க பொண்ணுக்கு குழந்தை மனசுன்னு எப்டி சொல்றீங்க? 

30 வயசு ஆகியும் இன்னும் JOHNSON & JOHNSON பேபி சோப்தான் யூஸ் பண்றாளே?

------------------------------------



9. செம்பில்லாமல் தங்க நகை செய்ய முடியாது, ஆனால் அன்பு மட்டுமே கொண்டு காதல் செய்யலாம் # KDM  காதல்

---------------------------------



10.  காமம் எட்டிப்பார்க்கும்போது காதல் கோபம் கொண்டு வெளி நடப்பு செய்து விடுகிறது

--------------------------------







11. மனதை மட்டுமே தொட்ட காதல்கள் பல உண்டு, உடலை மட்டுமே தொட்ட காதல்கள் தொட்ட பின் நேசிப்பின் சதவீதம் கொஞ்சம் குறையக்கூடும்

-------------------------------



12. டியர், என்னை தொடாம லவ் பண்ணுங்க.

சாரி, கண்ட கண்ட கவிதையை எல்லாம் படிச்சு உன் மனசை கெடுத்துக்காதே. உன் மனசை மட்டும் தொட்டா போதுமா? # பல்டி

----------------------------------



13. காமம் முடிந்த பின் காதல் முழுமை பெறுவதோ, நிறைவு பெறுவதோ கிடையாது,அப்படி நடந்தால் அது சுயநலக்காதல் அல்லது உள்நோக்கம் கொண்ட காதல்

-------------------------------------



14. டியர், என்னை மயக்கனும்னா நேருக்கு நேர் என் கண்ணை பார்க்கனும், எதுக்கு என் இடுப்பைப்பார்க்கறீங்க? 

ஹி ஹி இது “ஹிப்” னாடிஸ காதல்

-----------------------------------



15. என் மனைவிக்கு மாடர்னா இருக்கறது பிடிக்காது.. 

நிஜமாவா?  

ஆமா, மிக்ஸி யூஸ் பண்ணாம அம்மிக்கல்லுல சட்னி அரைக்கச்சொல்றா #அவ்வ்வ்வ்வ்வ்வ்

---------------------------------



Photo



16. உங்களுக்கு மேரேஜ் ஆகிடுச்சா? என யாராவது கேட்டால் ஒரே ஒரு முறை ஒரேஒரு பெண்ணுடன்தான் ஆகி இருக்கிறது எனவருத்தத்துடன்  சொல்லவேண்டி இருக்கு


----------------------

17. பெண்களுக்கு கையெழுத்து அழகாக இருப்பதில்லை, ஆண்களுக்கு தலை எழுத்து  நன்றாக இருப்பது இல்லை



---------------------------

18 மார்ச் 30 - தனுஷ்-ன் 3 ரிலீஸ் # 3 வது மாசம்,டைட்டில் 3 ,முக்கோணக்க்காதல்கதை,நாமத்துக்கும் 3 தான்


---------------------------

19 ஐஸ்வர்யா தனுஷ்க்கு என்ன சங்கடம்னா 3 படம் ஹிட் ஆகிட்டா தனுஷ்-ஸ்ருதி ராசியான ஜோடி ஆகிடும்,படம் அவுட் ஆகிட்டா அவர் ராசி இல்லாத டைரக்டர்


--------------------------------

20 நையாண்டி-ஒரே சமயத்தில 'பிளாக்'லயும்,'டுவிட்டரிலும்'இருப்பது 2 பொண்டாட்டி இருக்கிற கதை தான்! 


முனியாண்டி - 2 பக்கமும் அடி வாங்கி பாருங்க


-------------------------




தெரியாத ஆலய தகவல்:

கும்பகோணத்தை அடுத்துள்ள சுந்தரப் பெருமாள் கோயிலிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருநல்லூர் திருத்தலம். ஒரு நாளைக்கு ஐந்து முறை வெவ்வேறு வண்ணங்களில் [தாமிர நிறம், இளம் சிவப்பு, தங்க நிறம், நவரத்தின பச்சை, இன்ன நிறமென கூறமுடியாத தோற்றம்] சிவலிங்கத் திருமேனி நிறம் மாறுவதால், "பஞ்சவர்ணேஸ்வரர்" என்று பெயர் பெற்றது. மேலும், இங்குள்ள ஒரே ஆவுடையில் இரண்டு பாணங்கள் உள்ள அமைப்பு தமிழகத்தில் வேறு எங்கும் பார்க்க முடியாது.
நன்றி : Sundar Raman
தெரியாத ஆலய தகவல்:

கும்பகோணத்தை அடுத்துள்ள சுந்தரப் பெருமாள் கோயிலிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருநல்லூர் திருத்தலம். ஒரு நாளைக்கு ஐந்து முறை வெவ்வேறு வண்ணங்களில் [தாமிர நிறம், இளம் சிவப்பு, தங்க நிறம், நவரத்தின பச்சை, இன்ன நிறமென கூறமுடியாத தோற்றம்] சிவலிங்கத் திருமேனி நிறம் மாறுவதால், "பஞ்சவர்ணேஸ்வரர்" என்று பெயர் பெற்றது. மேலும், இங்குள்ள ஒரே ஆவுடையில் இரண்டு பாணங்கள் உள்ள அமைப்பு தமிழகத்தில் வேறு எங்கும் பார்க்க முடியாது.
நன்றி : Sundar Raman

21  உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டுத்தான் நான் கரண்ட்டை கட் பண்ணி அனைத்து மக்களுக்கும் தண்ணி காட்டிட்டு இருக்கேன் - ஜெ அறிக்கை


----------------------------------

22 நாத்திகவாதியா இருக்கும் (அல்லது காட்டிக்கும்)கலைஞர் பாவம் பண்ணாரு ஓக்கே, ஆத்திகவாதி ஜெவும் அதே அளவு பாவம் பண்றாரே.. அது ஏன்?


------------

23 ரமீஸ் ராஜா- பெயர்க்காரணம் - ரம்மி ஆடறதுல ராஜாவா?ரமீ என்ற ஃபிகருக்கு ராஜாவா? டவுட்டு டேவிட்டு


--------------------------------

24 புரோட்டா புவனா -இங்க வந்து இன்னியோட ஒரு மாசம் ஆயிருச்சு. கலாட்டா பாவனா - 30 டைம் ஃபாலோ, அன்ஃபாலோலயே தெரியுது:)


-------------------------

25. சில பெண் ட்வீட்டர்கள் இன்னா நினைச்சுக்கறாங்கன்னா அவங்க போடற ட்வீட் நல்லாருக்குங்கறதால தான் RT கிடைக்குதுன்னு ஹய்யோ அய்யோ


----------------------------------






Photo: இலையொட்டிய மழைத்துளிபோல்
மனதோரமாய் ஒரு கவிதையை
சுமந்தபடியே இருக்கிறது
ஒவ்வொரு மழையும்.....

ரேவா

26. நையாண்டி -பஸ்ஸில் மூன்று பேர் அமரும் சீட்டில் இரண்டு குண்டர்களுக்கு நடுவில் சிக்கி அவதி பயணம்!



 முனியாண்டி - அந்த அவதி யுவதிக்கா?


------------------------------

27. ட்விட்டர்க்கு வந்ததுல இருந்து பலர் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டு நல்லா ட்ரெயினிங்க் ஆகிடுச்சு, அம்மா கட்சில ஐக்கியம் ஆகிடலாமா?ன்னு யோசிச்சிங்க்


--------------------------------

28. சீர் செய்ய மட்டும் நான் முறை மாமனாம். வேற ஏதாவது செய்யலாம்னா அண்ணாவாம்.. # மாமன் பொண்ணு போட்டா வாய்ல மண்ணு


---------------------------

29. பட்டுப்புடவை என்ன கலர்ல,என்ன டிசைன்ல இருந்தாலும் ஜரிகைல மாங்கா டிசைன் இருக்கற மாதிரி பெண்கள் பார்த்துக்கறாங்க # அவதானிப்பு


---------------------------

30 தனது கட்சி ஆளுங்க பிட் படம் பார்க்கற ஆளுங்கன்னு தெரிஞ்சுதான் தீர்க்கதரிசனமா பி ஜே பின்னு பேர் வெச்சிருப்பாங்களோ? 


----------------------------------------



Photo: <3
வேரென 
நீ..
வேறென்ன 
கேட்கட்டும் 
எனக்காக 
நான் 
<3

- Via ரேவா பக்கங்கள்


Saturday, February 09, 2013

குஷ்பூ தான் அடுத்த சி எம்மா? என்ன கொடுமை சுந்தர் சி சார் இது?

 
 
தி மு.க-வைப் பொறுத்தவரை திருச்சியை 'திருப்புமுனை' என்பார்கள். அப்படி ஒரு திருப்புமுனைக்கான விவாதங்களை இன்று திருச்சி தொடங்கி வைத்துவிட்டது. 'கருத்​துக்குப் பதில் சொல்ல செருப்பா?' என்று தி.மு.க-வுக்குள்ளேயே முகச்​சுளிப்புகளும் உடனே தொடங்கி​விட்டது!'' - சிறியதொரு வருத்தம் கலந்த முகபாவத்தோடு கழுகார் சொன்னார்.  
 
 
 
கடந்த வியாழன் அன்று வெளியான 'ஆனந்த​விகட’னில் நடிகை குஷ்பு ஒரு பேட்டி கொடுத்திருந்தார். 'தி.மு.க-வின் அடுத்தத் தலைவர் யார்?’ என்பது தொடர்​பான கேள்விகளுக்கு பதில் அளித்த குஷ்பு, 'தலைவர், பேராசிரியர் எல்லாரும் இது சம்பந்தமா கலந்து பேசி முடிவு எடுப்பாங்க. தலைவர் மட்டும் முடிவு எடுத்துட்டதால, அடுத்தத் தலைவர் தளபதியா​தான் இருக்கணும்னு அவசியம் இல்லை.



 அது கட்சியில் யாராகவும் இருக்கலாம். கட்சியின் பொதுக்குழு கூடித்தான் அதை முடிவு எடுக்க வேண்டும்’ என்று சொல்லி இருந்தார். பேட்டியைத் தொடர்ந்து எழுந்துவிட்ட கலாட்டாக்களைப் பற்றித்தான் விரிவான தகவல்களோடு வந்திருந்தார் கழுகார்.


''இந்தப் பேட்டி இடம்பெற்ற 'ஆனந்த விகடன்' இதழ் கடைகளில் வெளியானது வியாழக்கிழமை காலை... கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவாவின் மகள் திருமணம் அன்றுதான்! கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட அனைத்து தி.மு.க. பிரமுகர்களும் திருச்சியில் இருந்தார்கள். கட்சியின் இன்னும் பல முக்கியஸ்தர்களும் கோட்டை மாநகரில் குவிந்​திருந்தனர்.




 குஷ்பு பேட்டியைப் படித்ததுமே கே.என்.நேரு, டி.ஆர்.பாலு ஆகியோருக்கு ஏக டென்ஷன் ஏறிவிட்டது. உடனடியாக இது ஸ்டாலினுக்கும் கருணாநிதிக்கும் போனது. 'தலைவர் பதவி பற்றி கருத்து சொல்ல இவர் யார்? குஷ்புவுக்கு யார் இப்படி எல்லாம் பேட்டி கொடுக்கும் அதிகாரத்தைக் கொடுத்தது?’ என்று  கொந்தளித்தனராம். பல்வேறு ஊர்களில் இருந்தும் ஸ்டாலினுக்கு கலவையான கருத்துக்கள் போனில் வர ஆரம்பித்தன.



 'தேவை இல்லாமல் குஷ்புவை வளர்த்துவிட்டு இப்போ அவஸ்தைப்படுறோம்’ என்று முன்னாள் அமைச்சர்கள் தங்களுக்குள் கூடிப் பேசிக்கொண்டனர். குஷ்புவிடம் விளக்கம் கேட்கலாம் என்று சிலரும், அவரைக் கட்சியை விட்டு நீக்கிவிடலாம் என்று சிலருமாக கருத்து சொல்ல ஆரம்பித்தனர். 'உள்கட்சி விவகாரம் பற்றி அ.தி.மு.க-வில் இப்படி எல்லாம் பேச முடியுமா?’ என்று சிலர் ஒப்பீட்டு பட்டிமன்றம் நடத்தி​​னார்கள். 'கட்சிக்குள் வந்து மூணு வருஷம்கூட ஆகாதவர்... தலைமையைத் தீர்மானிக்கும் இடத்துக்கு வந்துவிட்டாரா?’ என்றும் கேள்விகள் எழும்பியது. அத்தனையுமே கருணாநிதி, ஸ்டாலின் காதுக்கும் போனது!''


''குஷ்பு ரியாக்ஷன்?''


''சிவா வீட்டுத் திருமணத்தில் பங்கேற்​பதற்காக அவரும் திருச்சிக்கு வந்திருந்தார். ஃபெமினா ஹோட்டலில் தங்கி இருந்தார். அதுதான் வில்லங்கம் ஆகிவிட்டது. நடக்கப் போகும் விபரீதத்தை உணராத குஷ்பு, சங்கம் ஹோட்டலில் இருந்த ஸ்டாலினை நேரில் சந்தித்து விளக்கம் தர எண்ணினாராம். ஆனால், 'ஸ்டாலின்தான் சந்திக்க மறுத்துவிட்டார்’ என்று தி.மு.க-வினர் சொல்கிறார்கள்.



 இதைத் தொடர்ந்து திருமண விழா நடந்த தேசியக் கல்லூரி விளையாட்டு மைதானத்துக்கு ரொம்ப காஷ§வலாகவே வந்தார் குஷ்பு. எதுவுமே நடக்காத மாதிரி குஷ்புவை மேடையிலும் அனுமதித்தார்கள். கருணாநிதியின் அருகில் வந்து ஏதோ சிரித்துப் பேசிச் சென்றார். மேடையில் அவரை பேசச் சொன்னார்கள். 



'குடும்பம் என்றால் சண்டைச் சச்சரவு இருக்கும். அதைச் சமாளித்து வாழ்க்கையை வாழ வேண்டும்’ என்று யதார்த்தமாக அறிவுரை சொல்லிச் சென்றார். ஃபெமினா ஹோட்டலுக்கு லாபியில் சற்றே ரிலாக்ஸாக அவர் உட்காரவும் சென்னையில் அவரது வீட்டின் மீது ஒரு கும்பல் கல் வீசித் தாக்கிய தகவல் வரவும் சரியாக இருந்தது. 'நான் அப்படி ஒன்றும் தவறாகச் சொல்லிவிடவில்லையே’ என்று அருகில் இருந்தவர்களிடம் சொன்னாராம்!''


''கருத்துச் சண்டைதான் அவருக்குப் புது​சில்லையே...!''



''ஆனால், குஷ்புவை மேடை ஏற்றி வாழ்த்தச் சொன்​னது, மண அரங்கில் முதல் வரிசையில் இருந்த ஸ்டாலினின் மனைவியை கொந்தளிக்க வைத்துள்ளது. உடனடியாக அங்கிருந்து கிளம்பி ஹோட்டலுக்கு வந்துவிட்டாராம் அவர். 'குஷ்புவை யார் பேசச் சொன்னது?’ என்று பிறகு கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனிடம் அவர் சீறியதாகவும் சொல்லப்படுகிறது. 



திருமணம் முடிந்து ஹோட்டலுக்கு வந்த ஸ்டாலினும் டென்ஷனாகவே இருந்தாராம். 'உடனடியாக சென்னை திரும்ப வேண்டும். டிக்கெட் போடுங்கள்’ என்று சொல்லி இருக்கிறார். இந்தத் தகவல் கே.என்.நேருவுக்குப் போனதும் அவர் பதறிவிட்டார். 'கட்சிக்கு தேர்தல் நிதி கொடுக்கும் கூட்டம் மாலையில் இருக்கிறது. அதுல நீங்க இல்லைன்னா எப்படி?’ என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டாராம். அதன் பிறகுதான் மாலைக் கூட்டத்​தில் கலந்துகொள்ள சம்மதித்தாராம் ஸ்டாலின்!''


''அந்த அளவுக்குப் போய்​விட்டதா?''



''சென்னையில் குஷ்பு வீட்டை அடித்தார்கள் என்ற தகவல், திருச்சி விசுவாச தி.மு.க-வினரையும் உசுப்பி விட்டது. தங்கள் பங்குக்கு ஃபெமினா ஹோட்டலை நோக்கி ஒரு கும்பல் சென்றது.  வெளியே காத்திருந்தது. மதிய விமானத்தைப் பிடித்து சென்னை வருவதற்காக ஹோட்டலை விட்டு வெளியே வந்த குஷ்புவை நோக்கி ஒருவர், செருப்பை வீசி இருக்கிறார். அவருடன் வந்தவர்கள் அதனை தட்டி விட்டுவிட்டார்கள். 




அடுத்து பத்துப் பதினைந்து பேர் வந்து, செருப்பைக் கழற்றி வரிசையாக வீச வர... அதனை குஷ்புவுடன் வந்தவர்கள் தடுக்க... அதையும் தாண்டி குஷ்பு தலையில் ஒருவர் அடித்துவிட... 'நான் போலீஸைக் கூப்பிடுறேன்’ என்று இவர் சொல்ல... 'எங்க தளபதியைப் பத்திப் பேச நீ யாரு?’ என்று கூடடத்​துக்குள் இருந்து ஒரு கர்ஜனை புறப்பட... மறுபடியும் ஹோட்டலுக்குள் திரும்பிப் போனார் குஷ்பு.!''



''ம்!''


''குஷ்புவை மையம் கொண்டு தி.மு.க-வுக்குள் கடந்த இரண்டு மாதங்களாகவே சுழல் இருக்கிறது. 'குஷ்பு அளவுக்கு அதிகமாக அட்வான்டேஜ் எடுத்துக்கொள்கிறார். பொதுமேடைகளில் அவர் தலைவரிடம் பேசுவது மீடியாக்களில் அதிகமாக வருகிறது. கட்சியிலும் தலைவரிடமும் தனக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது என்பதைக் காட்டிக்கொள்ள அடிக்கடி அவர் கோபாலபுரத்துக்கு வந்து செல்வது குடும்பத்துக்குள் பலரது முகத்தையும் சுளிக்க வைத்துள்ளது.



 அதனால் கோபாலபுரம் இல்லத்துக்கு அவர் வரக் கூடாது என்று எதிர்ப்பு கிளம்பி உள்ளது என்று நான் ஏற்கெனவே சொல்லி இருந்தேன். 'கோபாலபுரத்துக்கு வராதே... குஷ்புக்கு தடை போட்டதா குடும்பம்?’ என்று 25.11.12 தேதி ஜூ.வி-யில் அட்டைப் படம் போட்டிருந்தீர்! 



தென் சென்னை எம்.பி. தொகுதியை தனக்குத் தர​வேண்டும் என்று குஷ்பு கேட்டதாகவும் அதற்குத் தலைமை சம்மதிக்கவில்லை என்றும்கூட அப்போது கிளம்பியச் செய்தியைச் சொல்லி இருந்தேன். அதையெல்லாம் வைத்துத்தான் குஷ்பு இப்படி கருத்துச் சொல்லிவிட்டாரா என்றுகூட சீனியர்கள் சந்தேகப்பட ஆரம்பித்துள்ளனர்.''



''அடுத்து அவர் என்ன செய்வார்?''



''தான் சொன்னதை சிலர் மிஸ்அண்டர்​ஸ்டேண்டிங் செய்துகொண்டார்கள் என்று சொல்லி வருகிறாராம். ஆனால் குஷ்புவை கட்சியை விட்டு நீக்குவதில் சிலர் முடிவோடு இருக்கிறார்கள். அநேகமாக ஒரு வாரத்துக்குள் விவகாரம் வெடிக்கும்'' என்ற கழுகார், சிறிது இடைவெளிவிட்டு மறுபடியும் தொடங்கினார்.



''திருச்சி சிவா மகள் திருமணத்தை நடத்தி வைத்துப் பேசிய கருணா​நிதி ஒரு ஸ்கூப் நியூஸ் கொடுத்தார். 'ஆறு மாதத்துக்கு முன்பு இந்த நிகழ்ச்சிக்கு தேதி வாங்கிய சிவா, அதன் பிறகு என்னை இன்று காலை வரை ஒரு முறைகூட நினைவுப்படுத்தி அழைக்கவே இல்லை. அப்படி இருந்தும் நான் இங்கே வரக் காரணம், எங்களுக்கு இடையே உள்ள குடும்பப் பாசம். தம்பி சிவாவுக்கு எதிர்காலம் பொற்காலமாக அமைய இருக்கிறது. 




அவரது பேச்சில் நானே மயங்கி​யவன். அவரது கொள்கை விளக்கப் பேச்சை நான் என்றும் மறக்கப் போவதில்லை’ என்று பொடி வைத்துப் பேசினார். சிவாவின் ராஜ்யசபா எம்.பி. பதவி காலம் இன்னும் சில மாதங்களில் நிறைவுபெற இருக்கிறது. தி.மு.க-வுக்கு இப்போது உள்ள எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கையைக் கொண்டு ராஜ்யசபா எம்.பி-யைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இல்லை.



அதனால் மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு சிவாவுக்கு வழங்கப்படலாம் என்பதைக் கருணாநிதி அப்படி சூசகமாக சொன்னதாகக் கழக முன்னோடிகள் சிலர் விளக்கம் அளிக்கின்றனர். பலரும் 'திருச்சி தொகுதி எம்.பி.' என்று சிவாவை இப்போதே சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.''
''ஆனால், அவருடைய லோக்கல் எதிரி கே.என்.நேருதானே வெற்றிக்குப் பாடுபட வேண்டும்?''


''அது அவர்கள் பாடு!'' என்ற கழுகார்,

''திருச்சி வந்தால் பெரும்பாலும் சங்கம் ஹோட்டலில் தங்குவதை வழக்கமாகக் கொண்ட கருணாநிதிக்கு இந்த முறையும் அங்கேதான் ஜாகை. காலை பத்திரிகையாளர் சந்திப்பின்போது மிகுந்த உற்சாகமாகக் காணப்பட்டார் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகள் சரிவர அவர் காதில் விழாததால், தலைவருக்கு  அருகில் அமர்ந்தபடி உரக்கச் சொன்னார் ஸ்டாலின். 



என்ன தோன்றியதோ...  பத்திரிகையாளர்களுடன் ஒரு குரூப் போட்டோவும் எடுத்துக்கொண்டார். திருமண விழாவில் முன்னிலை என பெயர் குறிப்பிடப்பட்டு இருந்த தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி வரவில்லை. அவர்தான் கால் வலி காரணமாக சிகிச்சை எடுக்​கிறாரே!. மதுரை மருத்துவமனைக்கு அழகிரி வீல் சேரில் வந்தது பலரையும் உன்னிப்பாக கவனிக்க வைத்தது.''



'
அட்டைப் படம்: 'ப்ரீத்தி’ கார்த்திக்


படங்கள்: என்.ஜி.மணிகண்டன், பா.காளிமுத்து


 


 குஷ்புவுக்கு ஆதரவாக துரை தயாநிதி!  




திருச்சி சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் ட்விட்டர் சமூக வலைதளத்தில், ''நான் நலமாக இருக்கிறேன். ஒரு துரதிருஷ்டம் நேர்ந்துவிட்டது. விசாரணை முடியும் வரை இது​பற்றி கருத்து எதுவும் சொல்ல முடியாது'' என்று தட்டிவிட்டார் குஷ்பு. 



அவருக்கு உடனே ஆதரவு கமென்ட்கள் பறந்து வர ஆரம்பித்தன. எஸ்.வி.சேகர், பாடகி சின்மயி ஆகிய பிரபலங்கள் தைரியம் சொன்னார்கள். மீண்டும் குஷ்பு, ''இந்த இக்கட்டான சூழலில் பல தரப்புகளில் இருந்தும் வரும் ஆதரவுகளை கண்டு என் மனம் உணர்ச்சிவசப்படுகிறது. நான் எப்போதும் வெற்றிபெறும் பெண்ணாகவே இருந்து வருகிறேன். இப்போதும் அப்படியே'' என்று பதிவு போட... அழகிரியின் வாரிசான துரை தயாநிதி இதை  'ரீ-ட்விட்’ செய்ததை ஸ்டாலின் தரப்பு கவனிக்கத் தவறவில்லை.


சர்ச்சைக்குரிய பேட்டி


சின்ன தும்மல், களைப்பான கண்கள், சோர்வு ததும்பும் குரல்... குஷ்பு இஸ் நாட் ஃபீலிங் வெல்! ஆனால், ஒவ்வொரு கேள்விக்கும் பாய்ந்து வந்த பதில், அதிரடி!




ஸ்டாலினுக்குத் தலைவர் பதவி, கோபாலபுரத்துக்குள் நுழையத் தடை, விஜயகாந்துடனான கூட்டணி, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி, தி.மு.க-வில் இருந்து ஒதுக்கப்படுகிறாரா என்ற எல்லாக் கேள்விகளுக்கும் பதில் அளித்தார் குஷ்பு.  



''தி.மு.க-வுக்கு ஸ்டாலின்தான் அடுத்த தலைவரா வரணும்னு கருணாநிதியே அறிவித்துவிட்டாரே?''



  ''நாமளே அப்படி ஒரு முடிவுக்கு வந்துடக் கூடாது. தலைவர் என்ன சொல்லியிருக்கார்னா, எனக்கு அப்புறம் சமூகப் பணிகளைத் தளபதி செயல்படுத்துவார்னுதான். தி.மு.க. தலைவரைத் தேர்ந்தெடுக்க தனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சா, தளபதிதான் அவரோட சாய்ஸ்னு சொல்லியிருக் கார். ஆனா, இறுதி முடிவைப் பொதுக்குழுதான் எடுக்கும். 'யார் கட்சித் தலைவர்’னு முடிவு பண்றப்போ, அதைப் பத்திப் பேசுவோம்.''



 


''ஆனா, அந்த அறிவிப்புக்கே அழகிரி பயங்கர எதிர்ப்புத் தெரிவிச்சாரே?''


'' 'நான் இதை ஏத்துக்க மாட்டேன்’னு அழகிரி அண்ணன் சொன்னாரா? தளபதியோ, அழகிரி அண்ணனோ, தலைவரோ... யாருமே அண்ணன், தம்பிக்குள் பிரச்னைனு சொல்லலையே. வெளியில சம்பந்தம் இல்லாதவங்க பேசிக்கிறதுக்குப் பதில் சொல்ல வேண்டியது இல்லை.''



''சரி... நீங்க உங்க கருத்தைச் சொல்லுங்க... ஸ்டாலின், அழகிரி, கனிமொழி... தி.மு.க. தலைவர் பதவிக்குப் பொருத்தமானவங்க யார்?''



''திரும்பவும் சொல்றேன்... அதை பொதுக் குழுதான் முடிவு பண்ணும்.  தலை வர், பேராசிரியர் எல்லாரும் இது சம்பந்தமா கலந்து பேசி முடிவு எடுப் பாங்க. தலைவர் மட்டுமே முடிவு எடுத்துட்டதால, அடுத்த தலைவர் தளபதியாதான் இருக்கணும்னு அவசியம் இல்லை. அது கட்சியில் யாராகவும் இருக்கலாம். உட்கட்சித் தேர்தல் நடக்கும். எல்லாரும் வாக்களிப்போம். எல்லாம் முறைப்படி நடக்கும். தி.மு.க - வில் சின்னச் சின்னப் பதவிகளுக்குக்கூட உட்கட்சித் தேர்தல் மூலம்தான் ஆட்களை நியமிப் பாங்க. ஆனா, என் வழி தலைவர் வழிதான்!''



''அதான் 'எனக்குப் பிறகு ஸ்டாலின்’தான்னு தி.மு.க. தலைவர் கருணாநிதியே சொல்லிட்டாரே?''



''எல்லார் விருப்பப்படிதான் தலைவர் தேர்ந்து எடுக்கப்படுவார்னு தலைவரே சொல்லியிருக்கார். கட்சியில அடிமட்டத் தொண்டனாஇருப்ப வங்களுக்குக்கூட தலைவரைத் தேர்ந்தெடுக்க உரிமை இருக்கு. தலைவர் முடிவு எடுத்துட்டா ரேனு யாரையும் தேர்ந்தெடுக்க முடியாது. கட்சியின் நலனுக்கு யார் பொருத்தமாஇருப்பாங் களோ, அவங்களை உட்கட்சித் தேர்தல் நடத் தித் தேர்ந்தெடுப்பாங்க.''



''சமீப காலமா தி.மு.க-வில் இருந்து உங்களை ஒதுக்கிவெச்சிருக்காங்கன்னு சொல்றாங்களே?''



''சம்பந்தம் இல்லாம யாரோ பேசுற பேச்சுக்குஎல்லாம் நான் ஏன் பதில் சொல்லணும்? இந்தப் பேச்சு எப்படி வந்திருக்கும்னு நான் சொல்லவா? தி.மு.க-வின் வீர வணக்க நாள் கூட்டத்தில் நான் கலந்துக்கலை. அன்னிக்கு எங்க வீட்ல முக்கிய மான விசேஷம் ஒண்ணு இருந்துச்சு. இந்த விஷயத்தைத் தலைவர்கிட்ட யும் தளபதிகிட்டயும் நேர்லயே சொல்லிட்டு வந்துட்டேன். உலகத் துக்கே தெரியும்...



 எனக்குக் கட்சி, சினிமாவைவிடக் குடும்பம்தான் முக்கியம்னு. அன்னிக்கு என் பொண்ணுக்கு ஒரு விசேஷம். அதனால, அந்தக் கூட்டத்தில்நான் கலந்துக்கலை. இதை மட்டுமே வெச்சு என்னைக் கட்சியில ஒதுக் கிட்டாங்கன்னு சொன்னா, அதை ஏத்துக்கவே முடியாது. முன்னாடி வள்ளுவர் கோட்டத்துல மின்வெட் டுக்கு எதிரா நடந்த கண்டனஆர்ப் பாட்டத்துல தலைவர் முன்னிலை யில் பேசினப்ப, சிறப்பு முக்கியத்து வம் கொடுக்குறாங்கன்னு பேசு னாங்க. இப்ப, ஒரே ஒரு கூட்டத்துக் குப் போகாததால், ஒதுக்கிவெச்சுட் டாங்கன்னு சொல்றாங்க. குட் ஜோக்!''



''நீங்க கோபாலபுரத்துக்கே வரக் கூடாதுனு ஆர்டர் போட்டிருக்கறதா...''


(கேள்வி முடிவதற்குள்ளாகவே) ''இதுக்கெல்லாம் விளக்கம் கொடுக்க எனக்கு நேரம் இல்லை.''  



'' 'விஸ்வரூபம்’ பட விவகாரத்தின் பின்னணியில் எந்த அரசியலும் இல்லைனு நம்புறீங்களா?''



'' 'விஸ்வரூபம்’ பத்தி இனிமே நாம பேசினா, அது கமல் சாருக்குத்தான் பிரச்னையா முடியும். கமல் சாரைப் பாதிக்கும்கிறதால அதைப் பத்தி நான் எதுவும் பேச விரும் பலை. அதான் அரசாங்கம் சார்பிலேயே பேசி ஒரு முடிவுக்கு வந்துட்டாங்களே!''



''அது தொடர்பான விவாதத்தில், 'ஜெயா டி.வி-க்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை’னு ஜெயலலிதா சொல்லியிருக்காங்களே?''


''அதை நீங்க நம்புறீங்களா? சம்பந்தம் இல்லைனு சொல்றாங்க. ஆனா, அந்தப் பேட்டி கொடுத்தப்ப, ஜெயா டி.வி. மைக் மட்டும்தான் அவங்க
முன்னாடி இருக்கு. எல்லா உண்மையும் புரியுற அளவுக்கு மக்கள் தெளிவா இருக்காங்க.''  



''நாடாளுமன்றத் தேர்தலுக்காக விஜயகாந்த் தி.மு.க. கூட்டணிக்கு வரப்போறதா பேச்சு அடிபடுதே?''



''எதிர்காலத்துல நடக்கப்போறதைப் பத்தி இப்பவே ஏன் பேசணும்? வரட்டும். அப்புறம் பார்க்கலாம். தலைவரோ, விஜயகாந்தோ அதி காரப்பூர்வமா அறிவிக்கிற வரை பொறுமையா இருப்போம். விஜயகாந்துடனான கூட்டணிபத்தி தளபதி எதுவுமே பேசலை. ஜனநாயகரீதியாக எதிர்க் கட்சித் தலைவருக்குத் துணையா இருப்போம்னு மட்டும்தான் சொன்னார்.''



''நாடாளுமன்றத் தேர்த லில் நீங்க போட்டியிடுவீங்களா?''


''தெரியலையே! இன் னும் ஒன்றரை வருஷம் இருக்கே. கட்சித் தலைமை தான் இதை முடிவு பண்ணணும். ஒருவேளை நான் போட்டியிடலைன்னா, 'குஷ்பு கேட்டாங்க... ஆனா, தலைமை மறுத்திடுச்சு’னு எழுதுவாங்க. போன சட்டமன்றத் தேர்தல் சமயமே எல்லாமே பார்த்துட்டேன். சேலம், ஆயிரம் விளக்குனு பல தொகுதிகளில் நான் போட்டியிடப் போறதாச் சொன்னாங்க. நான் தேர்தல்ல நிக்கணும்னு கட்சியில் சேரலை. யாருக்கு என்ன பொறுப்பு கொடுத்தா சரியா இருக்கும்னு அவங்களுக்குத் தெரியும்.''



''உட்கட்சிப் பூசல் பழிவாங்கும் கொலைகளில் முடியும் விபரீதப்போக்கு தி.மு.க.-வில் அதிகரிச்சுட்டே இருக்கே?''



''சும்மா... பரபரப்புக்காக அப்படி வர்ற செய்திகள் உண்மை ஆகிடாது.  ஒன் ப்ளஸ் ஒன்... பதினொண்ணுனு எழுதுவாங்க. ஆனா, எனக்கு ஒன் ப்ளஸ் ஒன் ரெண்டுனு நல்லாவே தெரியும்.உட்கட்சிப் பிரச்னை ஏன் வருது? தி.மு.க. ஜனநாயகரீதியில் செயல்படும் கட்சி. மத்த இடங்களில் கட்சித் தலைமைக்குப் பயந்து கிட்டே செயல்பட வேண்டிய கட்டாயம். ஜன நாயக மரபுகளைக் கடைப் பிடிக்கிறதால, உங்களுக்கு அப்படித் தெரியுது. இதை விட அதிகமான உட்கட்சிப் பூசல்கள் மத்த கட்சிகளில் இருக்கும். ஆனா, அதெல் லாம் வெளியே தெரியாது. ஏன்னா பயம்!



இன்னொரு விஷயம்,உட் கட்சிப் பூசல்கள் ஒரு கட்சி யின் வளர்ச்சிக்கு மைனஸ் கிடையாது. ஒரு குடும்பமா செயல்படும்போது, அதுல இருக்கிறவங்க தங்களோட வருத்தங்கள், கோபங்களை உள்ளேயே வெச்சுட்டு இருக் கிறது நல்லது இல்லையே. ஓப்பனாப் பேசினாத்தானே பிரச்னைக்கு ஒரு முடிவு வரும்.''



''எப்பவும் ஏதாவது ஒரு சர்ச்சை உங்களை வட்டமிட்டுக்கொண்டே இருக்கே... சமீபத்தில், ராமர் படம் போட்ட புடவை. ஒருவேளை பரபரப்புக்காகவே இப்படிப் பண்றீங்களா?''



''யாரை விமர்சிச்சா லாபம் கிடைக்குமோ, அவங்களைத்தானே தொடர்ந்து குறிவைப்பாங்க. ஆனா, ஒண்ணே ஒண்ணு மட்டும் அவங்களுக்குப் புரியவே மாட்டேங்குது. அது, குஷ்பு யாருக்கும்பயப்பட மாட்டா!



என் டிக்ஷனரியில் பயம்கிறதே கிடையாது. அன்பு, பாசத்துக்கு மட்டும்தான் கட்டுப்படுவேன். அச்சுறுத்தல், மிரட்டலுக்கு அடிபணிய மாட்டேன். எனக்குப் பயம்னா என்னன்னே தெரியாது!''


 




மக்கள் கருத்து 


1. பத்த வெச்சுட்டியே பரட்ட



2.சேலையில ஒரு டிசைனை வைத்துக்கொண்டு ஒரு கூட்டம் அரசியல் செய்த்து.... அந்த கேடுகெட்ட கூட்டம்தான் கருத்துச் சுதந்திரம் பற்றி எக்காளம்போட்டது...... அட ஒரு சேல தனக்குப் புடிச்சமாதிரி கட்டமுடியல.... கருத்தாம் சுதந்திரமாம்... கேடுகெட்டதுகள்... 


3. அப்பாடா இன்னுமொரு வருங்கால முதல்வர் பேட்டியை விகடன் தந்துள்ளது!. யார் கண்டது திமுக காரர்கள் இவரை முதல்வராக தேர்ந்தெடுக்கலாம். ஏனென்றால் இவர் ஒரு சினிமா ஹிரோயின். கனவு உலகத்தில் மயங்கும் தமிழர்கள் இப்படி செய்தாலும் செய்வார்கள்.



 



4. விகடன் புண்ணியத்தால் குசுப்பூ தான் திமுகவின் நிரந்தர தலைவியாக போகிறார்... இந்த பேட்டியை படித்த ஸ்டாலினின் உண்மை தொண்டர்கள் தலைவி குசுப்பூவிற்கு பலவிதமான இன்னல்களை கொடுக்க துவங்கிவிட்டனர்... திருச்சியில் கார் மீது தாக்குதல், திருச்சி விமாண நிலையத்தில் செருப்பு வீச்சு, சென்னையில் குசுப்பூ வீட்டின் மீது கொடூர தாக்குதல்.... திமுகவில் இப்படியெல்லாம் செய்வார்கள் என்பதை அறியாதவரா குசுப்பூ??? இனி தான் குசுப்பூ தனது வீரியத்தை வீசுவார்... அப்பொழுது தான் ஸ்டாலினுக்கு பலவிதங்களிலும் போட்டியாக பல காரியங்களை செய்வார்... முடிவு குசுப்பூவின் பிடிக்கு திமுக போவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது... அப்புறமென்ன கருணாநிதியின் காலத்திற்கு பிறகு குசுப்பூ தான் திமுகவின் நிரந்தர முதலாளி..



5. அதிகப் பிரசங்கித்தனமான பேட்டி. தலைவரே ஸ்டாலின் அடுத்தவர் என்று சொல்லியும் இப்படி ஒரு பேட்டி கொடுப்பதற்கு குஷ்பூவுக்கு தைரியம் எப்படி வந்தது? பதில் சொல்லாமல் இருந்திருக்கலாம். ஏதோ திராவிடப் பாரம் பாரம்பர்யத்தில் பழம் தின்று கொட்டை போட்டவர் போல பேசுகிறார். சொல்ல முடியாது இவர் எம்.பி ஆகி அமைச்சராகவும் ஆகி விடலாம், எதுவும் நடக்கும். வாக்காளனும் இவருக்கு ஓட்டைப் போட்டு விட்டு, ஓட்டுப் போட்டதையே மறந்து விட்டு டாஸ்மாக்கில் விழுந்து கிடப்பான்.



6. அன்று இதே குசுப்பூவிற்கு இதே திருச்சியில் கோவில் கட்டினார்கள்.... இன்று இதே குசுப்பூவிற்கு இதே திருச்சியில் செருப்பை வீசி மரியாதை செய்திருக்கிறார்கள்... இதெல்லாம் செய்தது யார் தெரியுமா??? மாபெரும் ஜனநாயகம் இயக்கம் என்று தணக்கு தானே புகழாரம் சூட்டி கொள்ளும் கருணாநிதி திமுகவின் உடன்பிறப்புக்கள்.... இனியென்ன குசுப்பூவை கட்சியிலிருந்து ஓரங்கட்டுவார்கள்.... இதையறிந்தே குசுப்பூவும் அஞ்சாநெஞ்சரின் ஆசியை பெற்றிருக்கிறார்... அஞ்சாநெஞ்சரின் அருளாசியிருக்கும் போது இனி குசுப்பூவிற்கு பயமில்லை...


 




நன்றி - விகடன் 

இண்ட்டர்நேஷனல் ஃபிகர் ஜோக்ஸ்

1.உன் தலை முடியை மட்டும் நாவிதர் திருத்தட்டும் , உன் தலை எழுத்தை நீயே திருத்து

-----------------------------

2. நிலவைப் பார்க்கையில் நீ என்னை விட்டு விலகி இருப்பது போலவும் , என்  நிழலை பார்க்கையில் நீ என்னுடனே இருப்பது போலவும் உணர்கிறேன்


-------------------------------

3. மாப்ளையை ஏம்மா உனக்கு பிடிக்கலை?

அவர் பேரே வளையா பதி.. எந்த வேலையையும் வளைஞ்சு செய்ய மாட்டார்.. அப்புறம் யார் சமையலை கவனிக்கறது?

-------------------------------

4. வறுமைக்கோட்டுக்கு மேல் வாழ்பவர்க்கான அடையாளம் தினசரி வருமானம் ரூ 35 # அட போங்க, ஒரு லிட்டர் பாலே ரூ 32!!!

-------------------------------

5. நயன் தாரா குளிக்கற சி டி செம சேல்ஸாமே?

அலையாதே ஸ்ரீராமச்சந்திரா தெலுங்கு படத்துல சீதையா தீக்குளிக்கிற சீன் தான் அது

---------------------------------------

6. நா முத்துக்குமார் ஏன் கடுப்பா இருக்காரு?

அணிலாடும் முன்றில் தொடர்ல கடைசி வரை விஜய் டேன்ஸ் வர்லையே ஏன்?ன்னு கேட்டாங்களாம்

----------------------------------------

7. சார். நீங்க ஒரு சினிமாப்பைத்தியமா?

ச்சே ச்சே பல சினிமா பார்க்கறேன், அதனால பல சினிமாப்பைத்தியம்னு வேணா சொல்லலாம்

------------------------------------------------

8. உனக்குத்தான் பல் பள பள -னு இருக்கே, அப்புறம் ஏன் பல் டாக்டர்கிட்டே போறே?

அவர் க்ளினிக்ல 12 நர்சுங்க தள தளன்னு இருக்கே?

------------------------------------------

9. நீங்க சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்துபவரா?

ஆமா, அதுக்காக என்னை சந்தர்ப்பவாதின்னு சொல்லிடாதீங்க.. ஏதோ அசந்தர்ப்பமா அப்டி ஆகிடுது

-----------------------------------------

10. அதெப்படி படம் ரிலீஸ் ஆன அடுத்த நாளே, வெற்றி நடை போடுகிறதுன்னு விளம்பரம் போடுறாங்க!

அதுக்காக வெட்டி நடை போடுதுனு சொல்ல முடியுமா?


--------------------------------------------

11. எசமானி அம்மான்னு என்னை கூப்பிடாதே.

..வேலைக்காரி - ஓக்கே அக்கா, உங்க வீட்டுக்காரர் கூட இதையே தான் சொன்னாருங்கோவ்

-------------------------------------------

12. யாரங்கே?

மன்னா! யாருமே இல்லை இங்கே.. சனிக்கிழமை -எல்லாரும் டாஸ்மாக்ல மட்டை ஆகிட்டாங்க

----------------------------------------------

13. தம்பி.. ஏன் என்னையே சுத்திட்டு இருக்கே?

ஹி ஹி மேடம், நான் உங்க விசிறி மேடம்.. ஃபேன்னா சுத்தனும் தானே?அதான்

---------------------------------------

14. மாப்ளையை ஏம்மா உனக்கு பிடிக்கலை?

அவர் பேரே வளையா பதி.. எந்த வேலையையும் வளைஞ்சு செய்ய மாட்டார்.. அப்புறம் யார் சமையலை கவனிக்கறது?

--------------------------------------------

15. மேடம், நீங்க யாரு?

என்னையே யாருன்னு தெரியலையா?

ஹலோ, தெரியாம தானே கேக்கறோம்,எல்லாரும் தெரிஞ்சிவெச்சுக்க நீங்க என்ன இண்ட்டர்நேஷனல் ஃபிகரா?

----------------------------------------

16. மேடம், நடுநிசிக்கீச்சுன்னு சொல்லிட்டு அதை ஏன் பகல்ல போடறீங்க?

  நடு நிசி நாய்கள் படத்தை நீங்க மேட்னி ஷோ பாக்கலையா? அது மாதிரிதான்

-----------------------------------------

17. ஹலோ ஏன் எப்போ பாத்தாலும் மிஸ்டு கால் குடுக்குறீங்க ?

XQS மீ மிஸ்.. நீங்க மிஸ் தானே? மிஸ்டு கால் தான் தர முடியும்? மிசஸ் காலா தருவாங்க?

--------------------------------------

18. ஹலோ, எதுக்கு லோ லோ ன்னு கத்திகிட்டு இருக்கீங்க?

எனக்கு லோ பிரஷர் அதான்.. இதே ஹை பிரஷரா இருந்தா ஹை ஹை னு குதிச்சிருப்பேன்

---------------------------------------

19. மேடம், தமிழ்ப்படம், தெலுங்குப்படம் என்ன வித்தியாசம்?


தமிழ்ப்படம்னா மிதமான கவர்ச்சி காட்டுவேன், தெலுங்குப்படம்னா அபரிதமான கவர்ச்சி காட்டுவேன்

--------------------------------------

20. 52 ரூபாய்க்கு ஒரு ஜோடி ஷூ - அடிடாஸின் புதிய அறிமுகமாமே?

இனி எந்த ஃபிகராவது செருப்பு பிஞ்சுடும்னு வசனம் பேசட்டும், பார்த்துக்கறேன்

---------------------------------------

Friday, February 08, 2013

குறும்பட இயக்குநர்களால் தமிழ் சினிமா சீராகுமா? சீரழியுமா? - ஆடுகளம் வெற்றி மாறன் பேட்டி

இது சினிமாவுக்கு நல்லதா...கெட்டதா ?

எஸ்.கலீல்ராஜா படம்: ஆ.வின்சென்ட் பால் 
தலை எங்கே என்று தெரியாத அளவுக்கு முகத்தைச் சுற்றி முடி வளர்ந்திருக்கும் புறா, ஆளைப் பார்த்ததும் படபடக்கும் பந்தயப் புறா, அச்சு அசலாக கோழியைப் போலவே இருக்கும் ஃபேன்ஸி புறா, பின் வாலைச் சிலிர்த்துக்கொண்டு அலையும் வெண்புறா என இயக்குநர் வெற்றிமாறனின் அலுவலகமே புறாக்களாலும், அதன் சத்தங்களாலும் நிரம்பியிருக்கிறது.



''புறா வளர்க்கணும்னு ரொம்ப ஆசை. அதிலும் குறிப்பா பந்தயப் புறா. அப்போ வீட்ல கேட்டப்ப திட்டு விழுந்துச்சு. இப்போதான் சொந்தமா சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டேன்ல... வளர்க்க ஆரம்பிச்சிட்டேன். எல்லாமே செம காஸ்ட்லி புறாக்கள். பார்க்கிறவங்களாம், 'என்ன... பந்தயப் புறா வெச்சுப் படம் எடுக்கப்போறீங்களா?’னு கேட்குறாங்க. இதுகளுக்குச் செலவு பண்ணின பணத்துக்கு, ரெண்டு படம் எடுத்தாத்தான் சம்பாதிக்க முடியும் போல!'' - கறுப்புத் தாடிக்குள் இருந்து பளீரெனச் சிரிக்கிறார் வெற்றிமாறன்.  


''சிம்புவோட சேர்ந்து 'வட சென்னை’ பண்ணப்போறதா சொன்னீங்க... ஒண்ணும் சத்தமே காணோம்?''



''எல்லாரும் என்ன பிரச்னைனு கேட்கிறாங்க. எனக்கும் சிம்புவுக்கும் நடுவுல எந்தப் பிரச்னையும் இல்லை. நல்ல ஃப்ரெண்ட்ஷிப்ல இருக்கோம். சிம்புவோட டேட்ஸ் கிடைக்கிறதுலதான் பிரச்னை. சீக்கிரமே எங்க காம்பினேஷன்ல படம் ரிலீஸ் ஆகும்.''


''தனுஷை வெச்சுத் திரும்பவும் படம் பண்றீங்கபோல?''



''ஆமா. 'ஆடுகளம்’ வந்து ரெண்டு வருஷமாச்சு. நான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போய் மூணு வருஷம் பக்கம் ஆச்சு. 'ஆடுகளம்’ முடிஞ்சதுமே நானும் தனுஷ§ம் வேற ஒரு படம் பண்ணிட்டு திரும்ப சேர்ந்து ஒரு படம் பண்றதுன்னு முடிவுபண்ணியிருந்தோம். தனுஷ் இல்லாம ஒரு ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணேன். பட்ஜெட் செட் ஆகலை. இன்னொரு ஸ்க்ரிப்ட் பண்ண ஆரம்பிச்சதுமே, 'அதுக்கு தனுஷ்தான் ஃபிட் ஆவார்’னு தோணுச்சு. 'நாம நினைச்சது நடக்காதுபோல. நான் பண்ண ஸ்க்ரிப்ட் உங்களுக்குனு பண்ண மாதிரி இருக்கு’ன்னு சொன்னேன். கதை கேட்டுட்டு, 'நாமளே பண்ணலாம்’னு சொன்னார். மே மாசத்துல இருந்து ஷூட்டிங் போறோம்.''



''ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் ஏன் இவ்ளோ இடைவெளி எடுத்துக்கிறீங்க?''



''முப்பது வருஷம் நாம கத்துக்கிட்ட விஷயங்களை ஸ்க்ரிப்ட்டாப் பண்ணி முதல் படம் இயக்கிருவோம். அதுக்கு அப்புறம் புதுசா ஒண்ணு கத்துக்கணும். புதுசா ஒரு ஏரியா தெரிஞ்சுக்கணும்னா, அதுக்கு ஒரு வருஷம் தேவைப்படுது. அப்புறம் அதைப் படமா எடுக்க இன்னொரு வருஷம் தேவைப்படுது. இது என் ஸ்டைல். இது ஆளுக்கேத்த மாதிரி மாறலாம். என் ஃபிலிம் கேரியர்ல எத்தனை படங்கள் இயக்கினேன்னு சொல்றதைவிட, என்னென்ன படங்கள் இயக் கினேன்னுதான் சொல்ல விரும்புறேன். எனக்கு இன்னும் முப்பது வருஷம் கேரியர் இருக்குன்னா மொத்தமா 15 படங்கள்தான் இயக்குவேன். அது போதும் எனக்கு!''



'' 'அதிர்வு’ன்னு ஒரு பதிப்பகம் ஆரம்பிச்சு புத்தகம் வெளியிட்டிருக்கீங்க. வாழ்த்துகள்!''



''நான் நிறைய ஆங்கிலப் புத்தகங்கள் படிப்பேன். எல்லா மொழிகளிலும் வர்ற புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருவாங்க. அதனால உலகத்தோட விதவிதமான கலாசாரம், மொழி, வாழ்க்கை தொடர்பான சம்பவங்களை ஆங்கிலத்தில் படிக்கக் கிடைக்கும். நான் படிச்சுட்டு பிரமிச்சுப்போன நாவல்கள் பத்தி என் நண்பர்கள்கிட்ட சொன்னா, அவங்களுக்கு அது தெரியாம இருக்கும். ஏன்னா, பெரும்பாலும் எல்லா ரும் தமிழ்ல நாவல் படிக்கிறவங்களா இருந்தாங்க. 



அந்த நாவல்கள் தமிழ்ல வந்திருக்கான்னு விசாரிச்சா, அப்படி ஒரு முயற்சி நடக்கவே இல்லைன்னு தெரிஞ்சது. கல்லூரிக் காலத்தில் அலெக்ஸ் ஹேலி எழுதின 'ஸிஷீஷீts: ஜிலீமீ ஷிணீரீணீ ஷீயீ ணீஸீ கினீமீக்ஷீவீநீணீஸீ திணீனீவீறீஹ்’ புத்தகம் படிச்சேன். 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு ஆப்பிரிக்கன் அமெரிக்காவில் அடிமையா விற்கப்படுவதும் அதைத் தொடரும் சம்பவங்களும்தான் புத்தகம். அந்தக் கதை வாழ்க்கை மீதான என் பார்வையையே மாத்தி அமைச்சது. அந்த மாதிரி ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு புத்தகம் என்னைச் செதுக்குச்சு. அப்போ எல்லாம் 'ஐயோ... இந்தப் புத்தகம் தமிழ்ல இல்லையே’ன்னு நிறைய வருத்தப்பட்டிருக்கேன். கடைசியா என்னை உலுக்கின புத்தகத்தை 'ஓநாய் குலச்சின்னம்’னு மொழி பெயர்த்து வெளியிட்டிருக்கேன். முயற்சிகள் இன்னும் தொடரும்.''



''இப்போ தமிழ் சினிமா சூழல் எப்படி இருக்கு?''  




''வித்தியாசமா இருக்கு. 2002-க்கு முன்னாடி இருந்த சூழல், 2003-க்கு அப்புறம் இல்லை. ஏன்னா, அப்போதான் உலக சினிமாக்களோட திருட்டு டி.வி.டி. பர்மா பஜார்ல சுலபமா கிடைக்க ஆரம்பிச்சது. அதுதான் தமிழ் சினிமா போக்கையே அப்போ மாத்துச்சு. அதுக்கு முன்னாடி ஃபிலிம் சொசைட்டியில மாசத்துக்கு நாலஞ்சு உலக சினிமாக்கள்தான் பார்க்க முடியும். காதல், ஆட்டோகிராஃப் படங்கள் சொல்லப்பட்ட விதத்துக்கு உலக சினிமாக்கள் உண்டாக்கிய தாக்கம்தான் பலமான காரணம். 



அதே 2008-க்கு அடுத்து வந்த குறும்படக் கலாசாரம் தமிழ் சினிமாவை வேற பக்கம் திருப்பிவிட்டுருச்சு. யார்கிட்டேயும் உதவியாளரா இல்லாத, எந்தப் பயமும் இல்லாத புதுப் புது இளைஞர்கள் உள்ளே வர்றாங்க. பல வருஷமா உதவி இயக்குநர்களா இருக்கிறவங்களுக்கு நிறையப் பயம் இருக்கும். இந்த இளைஞர்களிடம் அது இல்லை. தைரியமா மோதி ஜெயிக்கிறாங்க. இது தமிழ் சினிமாவை நல்ல நிலைமைக்குக் கொண்டுபோகுமா... இல்லை மோசமான இடத்துக்குக் கொண்டுபோகுமானு தெரியலை. நான் அதைப் பத்தி யோசிக்கவும் இல்லை. பேசவும் இல்லை. அமைதியாக் கவனிச்சுட்டு இருக்கேன்!''


 நன்றி - விகடன்

கேபிள் சங்கரின் ஈகோ

இடைவேளையே இல்லாத ஈகோ!

க.நாகப்பன்
சிச்சுவேஷன்-1 
 
 வில்லனின் மனைவி: ''நீங்க ஜெயிலுக்குப் போனாலும் பரவாயில்லை... வெட்டுங்க அவனை.''

ஹீரோவின் நண்பன்: ''இவ என்னடா... நம்மளைக் கொல்றதைவிட, அவ புருஷனை ஜெயிலுக்கு அனுப்புறதுலயே குறியா இருக்கா. வேற எதுவும் கனெக்ஷனா இருக்குமோ?''

சிச்சுவேஷன்-2

ஹீரோவின் நண்பன்: ''இந்தக் காலத்துப் பொண்ணுங்க காபி போடச் சொன்னா, யோசிச்சு ரொம்ப நேரம் ஆக்குவாங்க. ஆனா, 'கட்டிப்பிடி’ன்னா, உடனே கட்டிப்பிடிச்சிடறாங்க.''

இரண்டு நிமிட டிரெய்லரிலேயே கலகலவென ஈர்க்கிறது 'ஈகோ’. வழக்கமான காதல் ஃபீலிங்ஸ் இல்லாமல் சிரிப்புத் தோரணம் அமைத்திருக்கும் படத்தின் இயக்குநர் சக்திவேல், 'மொழி’ ராதாமோகனிடம் சினிமா கற்றவர். ''ஈஸ்வர் - கோமதி பெயர்களின் சுருக்கம்தான் 'ஈகோ’. ஒரு பொண்ணைத் திடீர்னு காணோம். குடும்பமே அந்தப் பொண்ணைத் தேடும்போது, தேவை இல்லாம ஹீரோவும் அவன் நண்பனும் அவங்ககிட்ட சிக்கிக்குறாங்க. அவன்தான் நம்ம பொண்ணைக் காதலிச்சுக் கடத்தியிருக்கான்னு அந்தக் குடும்பம் தப்பா நினைச்சிடுது. 'உன்னால நான் மாட்டிக்கிட்டேன்’,



 'என்னால நீ கெட்டே’னு ஹீரோவும் ஹீரோயினும் ஈகோவுல பொங்குறாங்க. அப்புறம் என்ன நடக்குதுனு காமெடியா சொல்லியிருக்கோம். 'இடைவேளைக்கு முன், இடைவேளைக்குப் பின்’லாம் படத்துல எதுவும் பெரிய வித்தியாசம் இருக்காது. 66 சீன்களும் காமெடிதான். முக்கியமா, படத்துல ஒரு துளிக் காதல்கூட இருக்காது.''


''காதல் கிடையாது, முழுக்கப் புதுமுகங்கள்... இன்னுமொரு யதார்த்த சினிமாவுக்கான பரிசோதனை முயற்சியா?''



''இந்த ஃபார்முலா இப்போ பரிசோதனை முயற்சி எல்லாம் இல்லைங்க. இதுதான் இப்போ ஹிட் மந்திரம். 'தென்மேற்குப் பருவக்காற்று’ விஜய் சேதுபதி, 'அட்டகத்தி’ தினேஷ், 'மைனா’ விதார்த் எல்லாம் அப்போ புதுமுகம். இப்போ ஒரே படத்துல பளிச் அடையாளத்தோட வளர்ந்து நிக்கிறாங்களே.


 அந்த நம்பிக்கையில்தான் புதுமுகங்களோட களம் இறங்கியிருக்கேன். ஹீரோ வேலு, திருச்சிப் பையன். அமெரிக்காவில் சிவில் இன்ஜினீயரிங் படிச்சிட்டு வந்திருக்கார். அப்பாவித்தனமான, மொக்கை வாங்கிட்டே இருக்கும் கேரக்டருக்குப் பொருத்தமா இருக்கார். ஹீரோயின் அனஸ்வரா, கேரளாப் பொண்ணு. சினிமா ஹீரோயினுக்கான எந்த கிளாமரும் இல்லாம பக்கத்து வீட்டுப் பொண்ணு மாதிரி ஹோம்லி லுக்ல ஈர்ப்பாங்க.  




படத்துல ஹீரோகூட சந்தானம் மாதிரி படம் முழுக்க டிராவல் பண்ண வேண்டிய கேரக்டர் ஒண்ணு இருந்துச்சு. 'கனாக் காணும் காலங்கள்’ பாலசரவணன் அதுக்கு செட் ஆனார். தான் வர்ற ஒவ்வொரு சீன், ஷாட், டயலாக்னு எல்லாத்துலயும் பெஸ்ட் கொடுக்கணும்னு உழைக்கிறார். வில்லேஜ், சிட்டினு எல்லா ஃபீல்டுக்கும் செட் ஆவார். வசன உச்சரிப்பு, மாடுலேஷன், ரியாக்ஷன்னு பட்டையைக் கிளப்புறார். நிச்சயம் காமெடியன்கள் வரிசைல பாலாவுக்குப் பலமான இடம் இருக்கு.''


''அதென்ன... இப்போ எல்லா இயக்குநர்களும் காமெடி ரூட்லயே பயணிக்கிறீங்க?''



''நான் 'கந்தகோட்டை’ படத்தை ஆக்ஷன் சப்ஜெக்ட்டாதான் பண்ணேன். படம் பார்த்தவங்க, 'ஆக்ஷன் சீக்வன்ஸ் நல்லா இருக்கு. ஆனா, அது விஜய் மாதிரி ஆர்ட்டிஸ்ட்கள் பண்ண வேண்டிய படம். நகுல் பண்ணதுதான் மைனஸ்’னு சொன்னாங்க. ஏத்துக்கிட்டேன். அதே சமயம், 'உங்களுக்குக் காமெடி நல்லா வருதே... அதை டிரை பண்ணுங்களேன்’னு சொன்னாங்க. அந்தச் சின்ன லீடைப் பிடிச்சுட்டு 'ஈகோ’ பண்ணேன். ஃபர்ஸ்ட் காப்பி பார்த்தவங்க வாய் விட்டுச் சிரிச்சாங்க. அந்தச் சிரிப்பு தியேட்டர்கள்ல அப்படியே ஆயிரம் மடங்கு எதிரொலிக்கணும்!''


நன்றி - விகடன்



டிஸ்கி - டைட்டிலுக்கான விளக்கம், நம்மாளு கேபிள் தான் இந்தப்படத்துக்கு வசனம் . சும்மா டைட்டில் அட்ராக்சனுக்காக , மற்றபடி ஈகோன்னா அவருக்கு என்னன்னே தெரியாது , ஜாலி டைப்