Monday, October 29, 2012

அட்ராசக்க சி.பி எக்ஸ்க்ளூ “ஜிவ்” பேட்டி - பாகம் 19



ட்விட்டர் நண்பர் கலைவசந்த் கேள்விகள்....,


1.பார்க்க ஹேண்ட்சம்மா இருக்கீங்க.(தூ கண்ணு தெரியாத கபோதி போல) உங்களுக்கு சினிமா, டி.வில நடிக்க இதுவரை எந்த சான்சும் கிடைக்கலியா?!



காலம் போன காலத்துல இதெல்லாம் தேவையா?ன்னு எல்லாரும் கேட்கப்போறாங்க. யோவ். நான் குடும்பத்துப்பையன்யா, எனக்கு எதுக்கு சினிமா , டி வி எல்லாம், கடைசி வரைக்கும் கற்போட இருக்க ஆசைப்படறேன். ( அப்போ சினிமா , டி வி ல இருக்கற மத்தவங்க எல்லாம்?னு கேட்டு சர்ச்சை ஆக்க நினைக்காதிங்க யாரும் .. இது சும்மா ஜோக்;-)) )







2.  ட்விட், பிளக்குல கலக்குறீங்க. ஆனா, கார்க்கி, தோட்டா ராஜனைவிட உங்களுக்கு ஃபாலோயர்ஸ் குறைவா இருக்காங்க. இத பார்த்த உங்களுக்கு என்ன தோனும்?


அடடடா , இந்த கம்பேரிசனை தமிழன் விடவே மாட்டானா? சின்ன வயசுல இருந்து பக்கத்து வீட்டுப்பொண்ணை பாரு, எப்படி படிக்கறா? நீயும் தான் இருக்கியே? அப்டின்னு அப்பா திட்டுனதால ப வீ பொண்ணை பார்க்க ஆரம்பிச்சு அப்படியே   எல்லா பொண்ணுங்களையும் பார்க்க ஆரம்பிச்சதுதான் மிச்சம். அவங்கவங்க திறமைக்குத்தக்கபடி ஃபாலோயர்ஸ் இருக்கும்.


 தோட்டா நெம்பர் ஒன் ட்வீட்டர். என்னை விட பல மடங்கு திறமையானவர். கார்க்கி ட்வீட் உலகின் கிரேசி மோகன். அவங்க திறமை என்னை விட அதிகம், அப்போ ஃபாலோயர்ஸும் அதிகமா இருக்கறதுல என்ன அதிசயம்? வேணா அவங்க கிட்டே கொஞ்சம்  ஃபாலோயர்ஸ் கடன் கேட்டுப்பார்க்கிறேன் ;-))



3. பி.எஸ்,சிக்கு மேல படிக்கலைன்னு நீங்க எப்பவாவது வருத்தப்பட்டதுண்டா? (படிக்க வெச்சிருந்தா ஈரோடு மாவட்ட காலேஜ்லாம் வெளங்கியிருக்கும்.)



ஹிந்தில எம் ஏ முடிச்சிருக்கேன்,பிஜிடிசிஏ பண்ணி இருக்கேன் , அதை எல்லாம் புரொஃபைல்ல போட்டா படம் காட்டற மாதிரி ஆகிடும் .அதுவும் இல்லாம ஹோம் மினிஸ்டர் ஒரு டிகிரி ஹோல்டர் என்பதால் மேரேஜ் இன்விடேஷன்லயே ஒரு டிகிரி மட்டும் தான் போடனும்னு சீரியஸ் கட்டளை. தமிழன் அம்மா பேச்சை கேட்காம இருந்தாலும் பொண்டாட்டி பேச்சை கேட்டே ஆகவேண்டிய சூழலில் இருப்பதால் கி கி 




இனிய காலை வணக்கம்.
உடல் பலகீனமானவன் எப்படி பொறுமையாகப் பயிற்சி செய்து தன்னைப் பலப்படுத்திக் கொள்ள முடியுமோ,அதுபோல பலகீனமான எண்ணங்களை உடைய மனிதன் சரியான எண்ணங்களை வளர்த்துக்கொள்வதன் மூலம் தன் வாழ்விற்கு வலிமை ஊட்ட முடியும்.
இனிய காலை வணக்கம்.



4. நான் டிவிட்டர்ல கொஞ்ச நேரம் உக்காந்தாலே என் மனைவி என்னை கடிஞ்சுக்குறாங்க. நீங்க பிளாக், டிவிட்டர்ல பொழுதன்னைக்கும் இருக்குறதை பார்த்து உங்க மனைவி உங்க மேல கோபப்படுறது இல்லியா?


 அங்கே தான் நீங்க தப்பு பண்றீங்க , எங்க வீட்ல நெட் கனெக்‌ஷனே இல்லை, எல்லாம் ஆஃபீஸ் டைம்ல தான். சனி , ஞாயிறு லீவ்ல வீட்ல லேப்டாப்ல மற்ற 5 நாட்களுக்குத்தேவையான பதிவை டைப் பண்ணிக்குவேன். நோக்கியா 1100 ஃபோன் தான் ரொம்ப நாள் வெச்சிருந்தேன், இப்போ சமீபத்துலதான் மொபைல்ல கேலக்‌ஷி ஆண்ட்ராய்டு  ஃபோன் வாங்கி இருக்கேன். என் ஆஃபீஸ் பணி எப்பவும் ட்ராவலிங்க்லயே இருப்பேன் என்பதால் அந்த டைம்ல மொபைல் ட்வீட்ஸ்.. 

ஞாயிறு என்பது என்னைப்பொறுத்தவரை ஓய்வு நாள் அல்ல,மற்ற 6 நாட்களுக்கான பதிவுகளை தயார் செய்யும் நாள் 

வெள்ளி, சனி பார்த்த 4 படங்கள் விமர்சனம் ஞாயிறு டைப் பண்ணி திங்கள் டூ வியாழன் தினசரி 1 பதிவு


 நான் வீட்ல இருக்கும்போது டைப் பண்ண வேண்டி தேவை வந்தா நைஸா என் பாப்பாவை தூண்டி விட்டு 2 பேரையும் மாமியார்  வீட்டுக்கு பேக் பண்ணி அனுப்பிடுவேன்.1 கி மீ தூரம் தான் எங்க வீட்டுக்கும், அவங்க வீட்டுக்கும்.அடிக்கடி கோவிச்சுட்டு போக ஈசியா இருக்கும்னு அப்படி ஏற்பாடு, நாமளும் சள்ளை ( தொந்தரவு) விட்டுதுன்னு நிம்மதியா டைப்பலாம்



5. உங்களை ஃபாலோ பண்ற புது ட்விட்டரை கூட நீங்க ஃபால்லோ பண்றீங்க. எல்லா மென்ஷனுக்கும் பதில் சொல்றீங்க. இந்த நல்ல பண்பு உங்களுக்கு எப்படி வந்தது? (அப்போதானே கடலை போட முடியும்)


ட்விட்டருக்கு வந்த புதுசுல எனக்கு மென்ஷன் பார்க்கவோ, டி எம் பார்க்கவோ தெரியாது. அப்புறம் 6 மாசம் கழிச்சு பலர் ஏன் மென்ஷனுக்கு பதில் சொல்லலை? மனசுக்குள்ளே புரட்சித்தலைவின்னு நினைப்பா? ஏன்  யாரையும்  மதிப்பதே இல்லை?னு கேட்டாங்க.. நான் பதறிட்டேன்.

 ஏன்னா வீட்ல என்னை மதிக்காத என் சம்சாரத்தையே  ரொம்ப மதிக்கறவன் நான், ஃபாலோயர்சை மதிக்காம இருப்பேனா? அதனால மென்ஷன் பார்த்து பதில் சொல்ல பழகிட்டேன். ஆனா பெரும்பாலும் ஸ்மைலிதான் ;-)) 


 ஏன்னா நாம ஏதாவது காமெடியா சொல்லப்போய் அதை அண்ணன் மாயவரத்தான்  மாதிரி யாராவது ஸ்க்ரீன் ஷாட் எடுத்து நம்மை மாட்ட வெச்சுட்டா? 



6. ஈரோடுல இருக்குற எல்லா தியேட்டர் ஓனர் , மேனேஜர், அங்கு வேலை செய்யுறவங்களுக்கு உங்க முகம் நிச்சயம் பரிச்சயம் ஆகியிருக்கும். அடிக்கடி நீங்க தியேட்டர்ல படம் பார்க்க வரும்போது உங்களை அவங்க பார்க்கும்போது அவங்க ரியாக்‌ஷன் எப்படி இருக்கும்?


 படு கேவலமா பார்ப்பாங்க . எந்த குப்பை போட்டாலும் வந்துடறானே, நமக்கு வருமானமதானே அப்டினு நினைக்க மாட்டாங்க.. கன்செஷன் பாஸ் மாதிரி ஏதாவது கொடுப்பாங்கனு பார்த்தேன். ஒரு பய கண்டுக்கலை.. பைக் பாஸ் போடும்போது  ரகசியமா பாஸ் வாலா எச்சரிப்பாரு - சார், இந்த படம் மொக்கைதான் அப்டினு, நான் எதுவும் சொல்லாம தெரியும்னு மனசுக்குள்ளே நினைச்சுக்குவேன். அவன் அதை விட கேவலமா பார்ப்பான். அவ்வ்வ்வ் 




எவ்வளவுதான் தீய பழக்கங்கள் (பொதுவுக்கு தெரியாமல்)இருந்தாலும் நம்முடன் பழகும்போது ,மிகவும் நல்லவனாக நமக்கு ஆறுதலாக ,நல்ல மொட்டிவேட்டராக ,அனைத்துக்கும் மேலாக பண்பான சொற்கள் ,பணிவான செயல் என்று இருப்பவருடன்  நட்பாக இருப்பது சிறப்பா ??



7. நீங்க டைரக்டர் ஆனா ஓகே ஓகே எம்.ராஜேஷுக்கு போட்டியா வருவீங்க எனபது என் தனிப்பட்ட கருத்து. இதற்கு உங்கள் பதில் என்ன?


நல்ல வேளை அவர் ட்விட்டர்ல இல்லை, என் பிளாக்கும் படிப்பது இல்லை. இல்லைன்னா வாழ்க்கையே விரக்தி அடைஞ்சிருப்பார்.

 எனக்கு டைரக்‌ஷன் துறைல ஆர்வம் உண்டு, ஆனா அதில் அனுபவம் இல்லை. மணிரத்னம் மாதிரி அனுபவம் இல்லாம இறங்கும்  துணிச்சலோ, எண்ணமோ  இதுவரை இல்லை.. 

 சினிமா விமர்சனம் எழுதும்போது படத்தில் காணப்படும் குறைகளை  துல்லியமாக கணிப்பவர்கள் எல்லாம் நல்ல சினிமா எடுத்து விட முடியாது. படைப்பாளிக்கும் , விமர்சனம் செய்பவருக்கும் ஒரு கோடு உண்டு . ஒரு படைப்பாளி சுலபமாக விமர்சகர் ஆகி விட முடியும் , ஆனா ஒரு விமர்சகர் நல்ல படைப்பாளி ஆகி விட முடியாது, ரொம்ப கஷ்டம் 



8. அட்ரா சக்கல வெட்டாபீஸ் வெங்கிடுசாமில படங்கள் முன்னோட்டம் போடரீங்க.அத்தனை படத் தகவல் உங்களுக்கு எப்படி கிடைக்குது? (அதான் கடலை போட்டு அங்கங்க ஆள் வெச்சிருக்கானே)


இதை நக்கல் கேள்வியா எடுப்பதா? சீரியஸா எடுப்பதா? தெர்ல


 கூகுள் சர்ச்ல போய் பட டைட்டிலை டைப் பண்ணி க்ளிக் பண்ணா அந்தப்படத்தை பற்றி ஏதாவது நியூஸ் நாளிதழ் செய்தியா வந்திருக்கும். அதுல 4 செய்தியை படிச்சுப்பார்த்து அதுல ஒண்னை செலக்ட் பண்ணி கட் காப்பி பேஸ்ட் பண்ணிக்குவேன், நோகாம நோம்பி கும்பிடறதா பலர் சொன்னாலும் அதுக்கு நிறைய உழைப்பு தேவைப்படுது. 

  நான் சொந்தமா டைப் பண்ணி போடும் சாதா பதிவுக்கு ஒரு மணி நேரம், சினிமா விமர்சனத்துக்கு ஒன்றரை மணி நேரம் ஆகுதுன்னா  வெள்ளிக்கிழமை ராம சாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி போஸ்ட்க்கு 3 மணி நேரம் ஆகும், ஏன்னா மினிமம் 7 டூ 10 படங்கள் வாராவாரம்  ரிலீஸ் ஆகுது. 7 * 4 = 28 பதிவுகள் படிச்சு அதுல இருந்து 7 செலக்ட் பண்ணனும். அப்புறம் கிளாமரான ஸ்டில்ஸ் தேடனும் , உஷ் அப்பா எவ்ளவ் வேலை  




9. சின்மயி சர்ச்சை பற்றி எல்லா பதிவும் கட் காபி போஸ்ட்டா போடறீங்க.. உங்க நிலைப்பாடு என்ன? 

ராணி வார இதழில் சின்மயி வழக்கு பற்றிய ஆதியோடு அந்தமாய் உண்மை விளக்கும் தொடர் எழுத பேச்சு வார்த்தை நடந்து வருது 

தேவி வார இதழில் கண்டெண்ட்டை பார்த்து மிரண்ட்டுட்டாங்க. குமுதம் ரிப்போர்ட்டர்ல நோ ரிப்ளை. கடைசி முயற்சி ராணி


ஆல்ரெடி 7 அத்தியாயம் 7 வாரம் வரும் அளவு எழுதி ராணி வார இதழுக்கு அனுப்பியாச்சு, அங்கே போட்டதும் இங்கே போடுவேன்.இரு தரப்பிலும் கண்டிக்கப்படவேண்டிய தவறுகள் இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டிய தவறு யாருடையது என்பதை காலமும்,கோர்ட்டும் சொல்லும்

கோர்ட்டில் ஒரு கேஸ் கொடுத்த பிறகு அது பற்றி சம்பந்தப்படவர்கள் பொது வெளியில் விவாதிப்பது தவறு.பின்னடைவுதான்

சின்மயி வழக்கில் வாதாட சட்டம் படிச்ச வக்கீலை விட ட்விட்டரில் இருக்கும் ஒரு நபர் வாதிட்டால் பிரமாதமாக இருக்கும்


 சின்மயி தரப்பில் வாதாட மாயவரத்தான் ,ராஜன் தரப்பில் ஜாக்கி சேகர் வாதாடினா கோர்ட் களை கடடும்.்

கடைசில கோர்ட்ல ஜட்ஜ் ராஜன் கிட்டே “ உங்க ட்வீட்ஸ், பிளாக் எல்லாம் படிச்சிருக்கேனே? ஃபாலோயர்னு சொல்லிடனும், செம காமடியா இருக்கும்

அட அதுக்கு நாமே பெட்டர்போல?





இதன் 17 ஆம் பாகம் படிக்காதவர்கள் -http://www.adrasaka.com/2012/10/17.html


 இதன் 18 ஆம் பாகம் படிக்காதவர்கள் -http://www.adrasaka.com/2012/10/18.html

அனைவருக்கும் மனதை மயக்கும் மழை வணக்கம்,,,,



கேர்ள்ஸ் ஹாஸ்டல்,லேடிஸ் ஹாஸ்டல் - இன்னா வித்தியாசம்?

1.விருதுநகர் மாவட்டத்தில் 3 ஆயிரம் பேருக்கு ஹெச்ஐவி பாதிப்பு # கில்மா விருந்து நகர் போல.சாக்கிரத சனங்களே



-------------------



2. அம்மா கட்சில சேர நாலெழுத்து படிச்சிருந்தா போதும் # அதிமுக எனும் நாலெழுத்து



-------------------


3. 2 காஸ் சிலிண்டர் வைத்திருப்போர் கெரசின் வாங்கினால் ரேஷன் கார்டு ரத்து: கோவை கலெக்டர் #நாங்க 2 வெச்சிருக்கோம்னு எப்டி கண்டுபிடிப்பீங்க




---------------------


4. தண்ணீரில் தத்தளிக்குது அசாம்: முதல்வரோ ஜப்பானில் முகாம் # என்னால நாட்டு மக்கள் கஷ்டத்தை கண் கொண்டு பார்க்க முடியல, அதான் ஓடி வந்துட்டேன்




------------------


5. காதலிக்கும்போது கயல்விழியா தெரிந்தவள் க்ல்யாணத்துக்குப்பின் காயலான் கடை விழியாத்தெரியறாளே! #சும்மா



----------------------




6. நீதான் என் பெஸ்ட் பிரண்ட்னு சொல்லலாம்.நீதான் என் பெஸ்ட் ஒயிப் னு சொல்லமுடியுமா?#விதிவிலக்கு - கமல் ,மு.க ,செல்வராகவன்


---------------------



7. அஜித்தை வாழ்க்கைத்துணையா பெற்றதால் அவரை அதிர்ஷ்டஷாலினி என சொல்லலாமா?



-------------------------


8. வழக்கத்துக்கு மாறாக உங்கள் கணவர் உங்களை புகழ்ந்தாலோ ,பம்முனாலோ ,பரிசு ஏதும் கொடுத்தாலோ ஏதோ தப்பு நடந்திருக்குன்னு அர்த்தம்



------------------------


9. சம்சாரம் உடன் இருந்தால் போராட்டம்.மின்சாரம் இல்லை எனில் திண்டாட்டம் # தமிழக கணவர்கள் வாழ்க்கை




-----------------------


10. எந்த ஒளியையும் காணோம்: ராமதாஸ் கிண்டல்# கழகக்குல விளக்கு குஷ்பூ வர்றப்போ பாருங்க டாக்டர் அய்யா





----------------------

நாணம் தொட்டு விடும் தூரம் தான்.ஆனாலும் கண்ணியம காக்கும் பெண்ணியம் போற்றும் மன்னன் இவன்்

11.  பூரி சரியா உப்பலைன்னு சல் "பூரி"க் ஆசிட் தெளிச்சாளாம் ஒருத்தி # கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகலை.ஆள் அவுட்



 -------------------



12. ரிசப்ஷனிஸ்ட் இடுப்பினை தினம் பார்க்கும் கொடுப்பினை # ஆபீஸ் அழகியல்



-------------------------


13. டாக்டர்.என் பேபி தூங்கவே மாட்டேங்குது.



 உள்ளே தாலாட்டு செக்ஷன் போம்மா.நர்ஸ் தூளில போட்டு தாலாட்டி தூங்க வைப்பாங்க



-----------------------


14. டாக்டர்.நான்98 கிலோ ஆனா என் பேபி 5 கிலோ தான் இருக்கு.



 பாப்பாவுக்கு ஊட்டும்போது அது சாப்பிடலைன்னா நீங்க உங்களுக்கே ஊட்டிக்கறீங்ளோ?



----------------------


15. கதை எழுதும்போது கிடைக்கவில்லை.காதலிக்கும்போது மட்டும் உருவாகி விட்டது - கரு



------------------


MY CLICK
LUZ PILLAYAAR KOVIL



16. அமைதிக்கும் மௌனத்திற்கும் வித்தியாசம் = மேனேஜர் திட்டும்போது நம்ம நிலை ,சம்சாரம் திட்டும்போது நாம் இருக்க வேண்டிய நிலை




---------------------


17. டாக்டர்.உட்கார்ந்தா என்னால எந்திரிக்க முடியல.




அடப்பாவி.இப்போ எப்படி நான் அடுத்த பேஷண்ட்டை பார்க்க?



----------------------



18. முன்னம் செய்த பாவம் உன்னை என்னிடத்தில் சேர்த்து தொலைத்தது




----------------------


19. அன்புள்ள மேனேஜர்.உடம்பெல்லாம் நல்லாத்தான் இருக்கு.எந்த விழாவுக்கும் போகத்தேவை இல்லை.ஆனா மாதம் 2 நாள் லீவ் வேஸ்ட் பண்ணலாகா.சோ ஐ ஆம் லீவ்




-------------------------


20. வாழ்ந்து கெட்டவர்களின் வறுமை, புகழின் உச்சிக்குப்போய் சறுக்கியவர்கள் அனுபவிக்கும் புறக்கணிப்பு வலி இரண்டும் மரணத்துக்கு நிகரானவை




-----------------------------






21. நுட்பமான முத்தம் என்பது முறைப்பெண் தன் பெற்றோருடன் கல்யாண மண்டபத்தில் இரவில் தூங்கும் வேளையில் சத்தம் இல்லாமல் கொடுப்பதே




----------------------


22. மயில் இறகை நோட்டுக்குள் வைத்து விட்டு தினமும் அது குட்டி போட்டிருக்கா? என நீ பார்ப்பதுபோல உன்னிடம் இருந்து  எஸ் எம் எஸ் வந்திருக்கா ? என நானும் செல் போனை பார்த்துக்கொண்டே இருப்பேன்



---------------------


23. கேர்ள்ஸ் ஹாஸ்டல், வாட்ச்மேனுக்கு கண்ணுக்கு ஓவர் டைம் ஒர்க் இருக்கும் .லேடிஸ் ஹாஸ்டல்.வாட்ச்மேனுக்கு டோட்டலாவே ஓ டி #வேறுபாடு அறிக.




--------------------


24. உன்னையே ’உலகம்’ என்று சுற்றுபவளை விட்ராதே.எங்கேயும் டூர் கூட்டிட்டுப்போகும் தண்டச்செலவு உனக்கு இல்லை!



----------------------


25. தமிழகத்தில் மழை பெய்த ஊர்களில் இன்று கணவன்மார்கள் அவரவர் சம்சாரத்துடன் எந்த சண்டையும் போடாமல் கமுக்கமாக இருந்து காரியம் சாதிப்பார்கள்



-----------------------------------






Sunday, October 28, 2012

சின்மயிக்கு எதிரான சில ஆதாரங்கள்

article, says he was harassed to remove Rajan's name

This story is being presented without prejudice on either side. For starters, an article written by Mr.Mahesh Murthy is claimed to be the beginning of the issue which has shook tamil twitter world.
  1. maheshmurthy
    Is @Chinmayi a vindictive liar? She harassed me to remove @RajanLeaks from oh.pn/ii3 I said no: now she has him jailed
  2. Chinmayi
    @maheshmurthy :) Why did you remove Shreya's entry alone? Who harassed you for that? Please use your words carefully Mr Murthy.
  3. Chinmayi
    @maheshmurthy My question was clear even then. I said it doesnt make sense you named him as the sole rep of from here.
  4. Chinmayi
    @maheshmurthy i questioned the veracity of your study. You had no answer and now you call it a harassment.
  5. maheshmurthy
    @Chinmayi article was abt bloggers. Shreya said her blog was written by others not her. So removed. u threatening me? Haha
  6. maheshmurthy
    @Chinmayi dont lie again. U just wanted @rajanleaks name removed. Thats all
  7. Chinmayi
    @maheshmurthy also saying i m known as a blogger and not as a singer is bizarre, Mr Murthy. Your article was up for major criticism
  8. maheshmurthy
    @Chinmayi dont bullshit. You took your personal animus to @rajanleaks and tried to get me to delete his name. I refused
  9. Chinmayi
    @maheshmurthy :) my tweets are in the open. You can try and say anything now :) We ll have to see why you named him of all people.
  10. Chinmayi
    @maheshmurthy Well sir I have no interest in speaking to you further. A lot of people are questioning the tool anyway. Thanks.
  11. Chinmayi
    @maheshmurthy Article was NOT about bloggers. Your article says its across Twitter blogger linkedin facebook.
  12. Chinmayi
    @maheshmurthy if you were calculating influence Rajan had more influence than a famous writers and bloggers here? Seriously?
  13. maheshmurthy
    @Chinmayi Don't know what lie you told TN cops to arrest @rajanleaks but it wont wash with me. Truth is YOU harassed me to remove his name

  14. SACHIN_DINESH
    @Chinmayi This is one of the replies that he got for his irresponsible article. pic.twitter.com/VX1guZRf
  15. sunda_m
    @maheshmurthy also she is a much admired and respected person and it wd be nice if you cd be refined in ur tweets.
  16. maheshmurthy
    @sunda_m so @chinmayi may be admired and respected - but she harassed me and lies to others about it. i will call a spade a spade
  17. maheshmurthy
    @Chinmayi Don't need a lecture from you on social media. U may have conned cops & press in TN but u can't fool ppl online
  18. maheshmurthy
    @Chinmayi You bugged me for days to remove @RajanLeaks name & I told u to buzz off & take yr personal enmity elsewhere
  19. maheshmurthy
    @Chinmayi Listen, u idiot, my article may've been wrong or right, but I'm responsible for it. I don't take orders from u.
  20. maheshmurthy
    @Chinmayi Suddenly u discover need to criticise article - when in past all u wanted was to remove @Rajanleaks name haha:)
  21. maheshmurthy
    @Chinmayi I don't know u or @rajanleaks personally, have no bias either way. But he never intimidated me to censor,u did
  22. maheshmurthy
    @Chinmayi i don't take kindly to ppl who try to intimidate me. you tried it again today. you're foolish to.
  23. Chinmayi
    @maheshmurthy My tweets are in the open Sir. I dont call people names in an argument. I questioned you i had the right to. Thanks
  24. maheshmurthy
    @Chinmayi Your tweets are NOT in the open, madam. You have deleted them repeatedly, lied about them, misrepresented events & more
  25. maheshmurthy
    @Chinmayi Even now you're sly-tweeting about reactions to my article. you've gone from @rajanleaks critic to literary critic?:)










    நன்றி - திருப்பூர் பிரசாந்த் ,மகேஷ் மூர்த்தி, சின்மயி ,
    chandsethuSethuraman,பாலாஜி ராகவன்


    டிஸ்கி - 1 - சின்மயி போலீசில் புகார் - http://www.adrasaka.com/2012/10/blog-post_3736.html



    டிஸ்கி 2 - சமாதான முயற்சிகள் , சின்மயி தரப்பு விளக்கங்கள் | அட்ரா சக்க


    http://www.adrasaka.com/2012/10/blog-post_24.html

    டிஸ்கி 3 -  ஆனந்த விகடனில் சின்மயி சர்ச்சை | அட்ரா சக்க

    http://www.adrasaka.com/2012/10/blog-post_25.html


    டிஸ்கி 4  -சின்மயி - புதிய தலைமுறை - நேர்படப்பேசு - விவாதங்கள் | அட்ரா சக்க

    http://www.adrasaka.com/2012/10/blog-post_7117.html


    டிஸ்கி 5 -  சாருநிவேதிதா சின்மயி புகார் பற்றி சொன்ன கருத்து |

    http://www.adrasaka.com/2012/10/blog-post_26.html


    டிஸ்கி 6. - ஜெயமோகன் கருத்து - சின்மயி புகார் பற்றி | அட்ரா சக்க

    http://www.adrasaka.com/2012/10/blog-post_27.html


    டிஸ்கி 7 -ட்விட்டர் ராஜன் கைது ! சின்மயி விளக்கக்கடிதம்
    http://www.adrasaka.com/2012/10/blog-post_5516.html


    டிஸ்கி 8- லீனா மணிமேகலையின் ஃபேஸ்புக்கில் நிகழ்ந்த சின்மயி சர்ச்சை விவாதங்கள் http://www.adrasaka.com/2012/10/blog-post_4186.html

    டிஸ்கி 9 -மனுஷ்ய புத்திரனின் சின்மயிக்கு எதிரான நிலைப்பாடு http://www.adrasaka.com/2012/10/blog-post_866.html

    டிஸ்கி 10 - சின்மயிக்கு விமலாதித்த மாமல்லன் எழுதிய கடிதம் | அட்ரா சக்க- http://www.adrasaka.com/2012/10/blog-post_7687.html


சின்மயிக்கு விமலாதித்த மாமல்லன் எழுதிய கடிதம்

க்ஷமிக்கணும் சின்னப்பயலின் சின்னத்தனமான கேள்விகள்


ஏதோ சின்ன பொண்ணு,தெரியாம ரீட்விட் பண்ணிடுத்து. நம்பாத்துக் கொழந்தை, தானா ஒண்ணும் பப்ளிக்குல சொல்லிடல்லியே. யாரோ டைரக்டர் கடங்காரன் சொன்னதை ரீட்வீட் பண்ணிடுத்து.  ஃப்யூச்சர்ல பாட சான்ஸ் கெடைக்குமேன்னு ஒரு ப்ரொஃபெஷனல் சபலம். ஆருக்கும் இருக்கறதுன்னா இது. இந்த சாதாரண பிஆர் ஒர்க்க்கா பண்ணின ரீட்வீட் காரியத்தப்போய் பெரிய கொலைபாதகம் மாதிரி, இது வன்கொடுமை சட்டத்தின் கீழ வராதான்னு போல்ட் லெட்டர்ஸ் போட்டுண்டு கேக்கறதெல்லாம் ரொம்ப துஷ்டத்தனம். இது துஷ்டாள் நெறஞ்ச லோகம். இதுல நம்பளவாள்ளாம் பேசவேப்படாதுன்னு கோந்தைக்குத் தெரியல. பாவம் கொஞ்சம் அசடாட்டம் தத்துபித்துன்னு ராப்பகலா பேஷிட்றது. இதப்போய் ஊதி ஊதி பெருசாக்கறதெல்லாம் ரொம்ப அக்ரமம். நான்சென்ஸ். இன்சென்ஸிடிவ் ஃபெலோஸ்.

என்று நியாயம் பேசும், அண்ணாந்து பார்த்தபடியே தானுண்டு தன் காரியம் உண்டு என்று உலகத்தில் நடக்கும் எதையும் கண்டுகொள்ளாமல்  ரிஸர்வேஷன் இஷ்யூ ஒன்றைத் தவிர வேறு  எதைப் பற்றியும் அலட்டிக்கொள்ளாமல் எல்லாவற்றையும் தாண்டிதாண்டி சென்று கொண்டிருக்கும் பிராமண குலத் திலகங்களின் சென்ஸிடிவ் பார்வைக்குக்குக் கீழ்கண்டது சமர்ப்பணம்.
எழுதியிருப்பது என்ன என்று பார்க்கும் முன்பாக, எழுதப்பட்ட நாளைப் பாருங்கள். தேதி என்ன? 04 ஜனவரி 11
4 ஆம் நம்பருக்கும் சின்மயி ஸ்ரீபாதா அவர்களுக்கும் அப்படியென்ன சூக்ஷும பந்தம் என்று ஃபார்மெட் நியூமராலஜி மகாதன்ஷேகர் ராஜாதான் விளக்க வேண்டும். 
காரணம், ட்விட்டு - ரீட்விட்டு - ரிவிட்டு என்கிற கட்டுரையில் குறிப்பிடப்பட்ட - பஞ்சம ஜாதிக்காரர்கள் (தீண்டத்தகாதவர்கள்) தாங்கள் வாழ அடுத்தவனை அண்டி வாழ்பர்கள் (ஒட்டுண்ணிகள்) என்று டைரக்டர் எஸ்.எஸ்.ராஜமெளலியால் ட்விட்லாங்கரில் எழுதப்பட்டு பாடகி சின்மயி ஸ்ரீபாதா அவர்களால் உடனே ரீட்விட் செய்யப்பட்ட தேதிகூட 4 தான். 04.அக்டோபர் 12.

ஆக ரீட்வீட் செய்தது ஒன்றும் தற்செயலான, ஒரே ஒருமுறை தவறிப்போய் செய்யப்பட்ட காரியம் அன்று. 04 ஜனவரி 2011க்கும் 04 அக்டோபர் 2012க்கும் இடைப்பட்ட காலம் 21 மாதங்கள்.  ஒருவரின் சராசரி வாழ்வு 60 வருடம் எனக்கொண்டால் இரண்டு வருடகாலம் கணிசமானதுதான். கிட்டத்தட்ட இரண்டுவருட காலமாக இணையத்தில் தீவிரமாக இயங்கி, மைல் கணக்கில் விவாதித்ததில் சக மனிதர்களைப் பற்றி சின்மயி ஏதும் அறிந்து கொண்டாரா? வாயில்லா ஜீவன்களான மீன்களைத் தொட்டியில் அடைப்பதையே துன்புறுத்துவதாக நினைக்கும் PETA ஆதரவாளரான சின்மயி ஸ்ரீபாதா, சக மனிதர்களான தலித்துகளை ஒட்டுண்ணிகள் என்று ரீட்விட் செய்து தமக்கு விசிறிவிடும் ஒருலட்சத்து சொச்சம் பக்தகோடிகளிடம் பரப்புவதில் எவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்.
நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்துகொண்டிருக்கும் இவரது விசிறிகளின் தற்போதைய நிலவரம் 1,05,619
இரண்டே நாட்களில் 1,04,494 லிருந்து 1,05,619 ஆக வளர்ந்துள்ளது என்றால்  சின்மயியின் வார்த்தைகளுக்கு எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பது எளிதாகப் புரியக்கூடும். கூடவே எளிதாகப் புரியக்கூடிய இன்னொரு விஷயம், அரசியல் நிர்ணய சட்டத்தில் உறுதியளிக்கப்பட்டிருக்கும் ஒட்டுமொத்த தலித் வாழ்வாதார உரிமைகளுக்கும் இட ஒதுக்கீட்டுக்கும் எதிரான சின்மயியின் கருத்துக்களும் சதா விசிறிக்கொண்டிருக்கும் விசிறிகளிடம் விசிறப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதும்தான்.
வண்ணத்துப்பூச்சியாக இணையத்தில் வலம் வந்து இந்த அம்மையார் கற்றுக்கொண்டது அல்லது வளர்ந்தது அல்லது தம்மை விசாலப்படுத்திக்கொண்டது என்ன? பெரிய பூஜ்ஜியம். காரணம் அன்றைக்கு தலித்துகளைப்பற்றி எவ்வளவு மட்டமான கருத்து வைத்திருந்தாரோ அதேதான் கிட்டத்தட்ட இரண்டுவருடமாகியும் அவரிடம் இருக்கிறது என்பதற்கு பழைய ட்விட்டும் புதிய ரீட்விட்டும் சாட்சியளிக்கின்றன.

நன்னா உத்துப்பாருங்கோ. சோ கால்டு தாழ்த்தப்பட்டவான்னு சொன்னா என்னண்ணா அர்த்தம்? இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தையே கேள்விக்குரியதாக ஆக்கவில்லையா?
தாழ்த்தப்பட்டவர்களாக சொல்லப்படுகிறவர்களை உயர்த்தவேண்டிய தலைவர், இந்த சிறுவர்களுக்கு அவர்கள் பிற்பட்டு இருக்கிறார்கள் என்று சொல்கிறார். மாட்டுச் சாணி.
தாழ்த்தப்பட்டவர்களின் எந்தத் தலைவரை சின்மயி மாட்டுச்சாணி என்கிறார். 
அயோத்திதாச பண்டிதர்
இரட்டைமலை சீனிவாசன் 
இமானுவேல் சேகரன் 
என்று சென்ற நூற்றாண்டில் பிறந்தவர்களிலிருந்து இன்றைய
கிருஷ்ணசாமி 
திருமாவளவன் 
செ.கு.தமிழரசன் வரை 
தலித்துகளுக்கு ஏராளமான தலைவர்கள் இருக்கையில், எந்தத் தலைவரை சின்மயி மாட்டுச் சாணம் என்று குறிப்பிடுகிறார் என்று 
சின்மயியோ 
அவரது தாயாரோ 
அட்வைசர் மாயவரத்தானோ 
பத்திரிகையாளர் சஞ்சய் பிண்டோவோ 
இணையத்தில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கும் தலித்துகளுக்கு இழைக்கப்படும் வன்கொடுமைகளுக்கு எதிராகக் குரல்கொடுப்பதைத் தம் மூச்சாகக் கொண்டிருக்கும் இலக்கியப் போராளிகளான 
எழுத்தாளர் ஷோபா சக்தியோ 
எழுத்தாளர் ஜெயமோகனோ 
எழுத்தாளர் சாரு நிவேதிதாவோ 
கவிஞர் லீனா மணிமேகலையோ 
தாழ்த்தப்பட்டவர்களின் எந்தத் தலைவரை சின்மயி மாட்டுச்சாணி என்கிறார் என்று தெளிவுபடுத்துவார்களா?  
சின்மயி ஸ்ரீபாதா அவர்களின் நொடிக்குநொடி லட்சம்பேரிடம் சென்றுகொண்டிருக்கும் ஆதிக்கசாதி கருத்துகளுக்கு எதிராக ஷோபா சக்தி சாரும் லீனா மேடமும் இதுவரை ஏதாவது பேசியிருக்கிறீர்களா? திக்குதிசை இல்லாமல் கைபோனபோக்கில் ஈர்க்குச்சியை   சுழற்றிப் பேசியவர்களெல்லாம் வெட்டி அறைகுறைகள்தான்.  ஆனால் இது கட்டாயமாய் எதிர்க்கப்படவேண்டியது என்று ஆத்மார்த்தமாய் உணர்ந்து ஆவேசத்தில் சமயத்தில் வரம்பும் மீறினார்கள் என்றாலும் வரம்பு மீறல் மட்டுமே முன்னிருத்தப்படுகிறது என்பதுதான் நூறு சத்வீத உண்மை.
மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள், சின்மயி தொடர்ந்து தமது ஆதிக்க சாதி மனப்பான்மையுடன் தலித்துகளுக்கும் இட ஒதுக்கீடு குறித்தும் பரப்புரை செய்துகொண்டு வந்தார் என்பதே ஒருவாரத்திற்குள்தான் உங்களிருவருக்கும் தெரியும் இல்லையா? சாதீய மதர்ப்பில் எழுதி பின் ஆபத்துவரும் என்று எச்சரிக்கப்பட்டதும் சின்மயி அழித்த ட்விட்டுகளின் எண்ணிக்கை எவ்வளவு ஆயிரம் இருக்கும் என்றாவது உங்களிருவருக்கும் தெரியுமா? அழிக்கப்பட்ட ட்விட்டுகளில் மாட்டுச்சாணி போன்ற கீழ்மைகள் எவ்வளவு இருந்திருக்கும் என்று உங்களால் ஊகிக்க முடியுமா? அதற்காக நீ என்னதான் கிழித்தாய் என்கிறீர்களா? அவருக்குப்போட்ட ஆறு ட்விட்டுகளிலாவது எனக்குத் தெரிந்த எதையவது சொல்ல முயன்றிருக்கிறேன். 
நாங்களெல்லாம் தத்துவம் சித்தாந்தம் வேதாந்தமெல்லாம் படித்ததில்லை. அதனால்தான் எது சரி எது மிகை என்று தெளிவாக எளிதாக முடிவெடுக்க முடிகிறது. ஆனாலும் அறிவுஜீவிகள் என்பதால் ஏகப்பட்ட லாப நஷ்ட்ட கணக்கு வழக்குகளுடன் எடுத்த நிலையை நீங்களிருவரும் நியாயப்படுத்திப் பேசிக்கொண்டே இருக்கிறீர்கள் அல்லவா?  
பிராமணன் என்பதை பார்ப்பனன் என்று உதடாற சொல்லிவிட்டாலே போதும் தலித் உரிமைகள் காக்கப்பட்டுவிடுமா ஷோபா சக்தி சார் லீனா மணிமேகலை மேடம்சார்.
பிராமணனை பிராமணன் என்று குறிப்பிட்டே அவன் நம்மைப் புறக்கணிக்க வாய்ப்பளிக்காமல் உரையாடி கொஞ்சமேனும் அவன் மண்டையில் ஏற்றமுடியும் என்பது ராஜ் கெளதமன் காட்டிய வழி. 
சின்மயியை ஆபாசமாகப் பேசிய தனிமனித தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதுதான் அதில் இருவேறு கருத்தில்லை. அதே போல,இந்திய அரசியல் சட்டத்தில் இருக்கும் தலித்துகளுக்கான உறுதியளிப்பை தொடர்ந்து மேற்சாதி மனோபாவத்துடன் சின்மயி ஸ்ரீபாதாவின் இழிவுபடுத்தலும் வ்ன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய விஷயம் இல்லையா? அவர் மட்டும் அவரது வீட்டில் தாயாரின் அரவணைப்பிலேயே இருக்க வேண்டியவரா? நீதிக்கு முன் நிறுத்தபடவேண்டியவர் இல்லையா? நியாயம் சொல்லுங்கள்.
தலித்துகளுக்கான இட ஒதுக்கீடு என்பது என்ன இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தில் போடப்பட்டிருக்கும் பிச்சையா? இல்லை உறுதி செய்யப்பட்டிருக்கும் சமூக நீதியா? பெருந்திரளான ஒட்டுமொத்த தலித் சமுதாயத்தையும் தெளிவாகவும் தீர்மானமாகவும் திட்டமிட்டும் இழிவுபடுத்தினால் ஒரு தண்டனையும் இல்லை. தனிமனிதரை சீண்டி வரம்புமீறிப் பேசினால் அந்தத் தனிமனிதர் பிரபலமாகவும் இருந்தால் உடனடியாக சிறை தண்டனையே உண்டு என்பது சற்று வியப்பளிக்கிறது. 
ஏதோ தெரியாமல், ஊர்பேர் அறியாத எழுத்தாளனின் மனசாட்சி கிடந்து அடித்துக்கொண்டதில் கைத்தவறி தத்துபித்தென்று எழுதிவிட்டேன். என்னைத்தூக்கி உள்ளே போட்டு தண்டனை கொடுத்துவிடவேண்டாம் என்று யார்யாரிடம் கேட்டுக்கொள்ள வேண்டுமோ அவர்கள் அனைவரிடமும் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். 
இதில் ஆபாசமாக நான் எதுவும் எழுதவில்லை என்றுதான் நினைக்கிறேன். இருந்தாலும் எதற்கும் இருக்கட்டும் என்று வானத்தை நோக்கிக் கேட்கிறேன். ஆண்டவரே இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டுமா? ஆம் என்று அரச அசரீரி ஒலிப்பது போன்ற பிரமை தட்டுகிறது.
இதோ இப்போதே தெண்டனிட்டு கைகூப்பி மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். தெண்டனிடுதல் கைகூப்புதல் எல்லாம் தமிழ்.துரதிருஷ்ட்டவசமாக ஆங்கில லிபியில் ட்விட்டும் இவர்களுக்குப் புரியாமல் போய்விட்டால் என் தலைக்கல்லவா ஆபத்து. எனவே சாஷ்ட்டாங்க நமஸ்காரம் செய்து க்ஷமிக்கும்படி சம்ஸ்கிருதத்திலும்  அடைப்புக்குறிக்குள் சின்மயி அவர்களின் பிரத்தியேக பாஷையிலும் (saashttaanga namaskaram pannidaren kshamikkanum) மாப்பு கேட்டுவிடுகிறேன். 
சின்மயி ஸ்ரீபாதா அவரது தாயார் மகாகனம் பொருந்திய ஸ்ரீமான் மாயவரத்தான் ஆகிய பிராமணர்களிடமும் மற்றும் அவரது விசிறிகள் 1,05,619 போக இனி வருங்காலத்தில் அவரைத் தொடரப்போகிற அத்துனை விசிறிகளிடமும்  முன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
சார் நான்கூட சின்மயி ஸ்ரீபாதா போலவே தனி மனிதன்தான் சார் இந்திய அரசியல் நிர்ணய சட்டமெல்லாம் எக்கேடு கெட்டால் எனக்கு என்ன சார். ஏதோ சின்னப்பயலின் சின்னத்தனமான கேள்வி என்று பெரிய மனது வைத்து நீங்களும் மன்னித்துவிடுங்கள் சார். சற்றே குனிந்து பாருங்கள் சார். ஏற்கெனவே உங்கள் காலடியில் நான் கிடப்பது தெரியவில்லையா சார்? தண்டனைத் தாக்குதலுக்கெல்லாம் தாங்காது சார் இந்த ஜந்து.
 
 
 நன்றி - மாமல்லன் 


டிஸ்கி - 1 - சின்மயி போலீசில் புகார் - http://www.adrasaka.com/2012/10/blog-post_3736.html



டிஸ்கி 2 - சமாதான முயற்சிகள் , சின்மயி தரப்பு விளக்கங்கள் | அட்ரா சக்க


http://www.adrasaka.com/2012/10/blog-post_24.html

டிஸ்கி 3 -  ஆனந்த விகடனில் சின்மயி சர்ச்சை | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/10/blog-post_25.html


டிஸ்கி 4  -சின்மயி - புதிய தலைமுறை - நேர்படப்பேசு - விவாதங்கள் | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/10/blog-post_7117.html


டிஸ்கி 5 -  சாருநிவேதிதா சின்மயி புகார் பற்றி சொன்ன கருத்து |

http://www.adrasaka.com/2012/10/blog-post_26.html


டிஸ்கி 6. - ஜெயமோகன் கருத்து - சின்மயி புகார் பற்றி | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/10/blog-post_27.html


டிஸ்கி 7 -ட்விட்டர் ராஜன் கைது ! சின்மயி விளக்கக்கடிதம்
http://www.adrasaka.com/2012/10/blog-post_5516.html


டிஸ்கி 8- லீனா மணிமேகலையின் ஃபேஸ்புக்கில் நிகழ்ந்த சின்மயி சர்ச்சை விவாதங்கள் http://www.adrasaka.com/2012/10/blog-post_4186.html

டிஸ்கி 9 -மனுஷ்ய புத்திரனின் சின்மயிக்கு எதிரான நிலைப்பாடு http://www.adrasaka.com/2012/10/blog-post_866.html


டிஸ்கி 10 - கோர்ட்டில் சின்மயி எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகள் | அட்ரா சக்க http://www.adrasaka.com/2012/10/blog-post_6680.html