Sunday, June 10, 2012

டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிக்க 10 வழிகள்

டெங்கு தடுக்க... தகர்க்க... தப்பிக்க 10 வழிகள்

மிழகத்தின் தென் மாவட்டங்கள் முழுவதும் இப்போது டெங்கு அனல். இப்போது கொங்கு மண்டத்திலும் அது கால் பதித்துவிட்டது. காய்ச்சலால் பாதிக்கப்படுவோர், பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. டெங்கு காய்ச்சலின் பாய்ச்சலில் இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்வது எப்படி?


 புதுச்சேரி பிம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பேராசிரியர் டாக்டர் நாகராஜனிடம் விரிவாகப் பேசினோம்.


''டெங்கு என்றால் என்ன? அது எப்படிப் பரவுகிறது?'' 


''டெங்கு என்பது ஒரு வகையான வைரஸ் கிருமி. 'ஏடிஸ் எஜிப்டி’ (Aedes aegypti) என்ற பிரிவைச் சேர்ந்த டெங்கு தொற்று உள்ள பெண் கொசுவால் இது பரவுகிறது. டெங்குவால் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கடித்த கொசு, பாதிப்பு இல்லாத மற்றொருவரைக் கடிக்கும்போது, அவருக்கும் டெங்கு பரவும். மற்றபடி தண்ணீர், காற்று, எச்சில், இருமல், தும்மல் மற்றும் தொடுதல் மூலம் இந்தக் கிருமி பரவுவது இல்லை. அதாவது மனிதனிடம் இருந்து மனிதனுக்கு இது நேரடியாகப் பரவுவது இல்லை.''


''நெல்லை மாவட்டத்தில் மட்டும் அதிக அளவில் டெங்கு பரவக் காரணம் என்ன?'' 



''சமீபத்தில் நெல்லை மாவட்டத்தில் பெய்த பரவலான கோடை மழைதான் டெங்கு காய்ச்சல் பரவக் காரணம். டெங்கு காய்ச்சல் வழக்கமாக மழைக் காலத்தில்தான் ஏற்படும். டெங்குவைப் பரப்பும் 'ஏடிஸ் எஜிப்டி’ கொசு முட்டை 300 நாட்கள் வரை அழியாமல் இருக்கும். திடீரென்று மழை பெய்யும்போது, டயர், தேங்காய் சிரட்டை போன்றவற்றில் நல்ல நீர் நிரம்பும். அப்போது இந்த முட்டைகள் அதில் செழித்து வளரும். இங்கு பெய்த கோடை மழை அதற்குச் சரியான வாய்ப்பாகிவிட்டது.''



''டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் என்ன?'' 


''காய்ச்சல் 104 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும். இதனுடன் சோர்வு, தீவிரமானத் தலைவலி, உடல் வலி, கண் வலி, தசைகள் மற்றும் மூட்டு வலி, வாந்தி, உடலில் அரிப்பு, எலும்பு உடைவது போன்று வலி ஆகியவை இந்த நோயின் அறிகுறிகள்.''


''இந்த அறிகுறிகள் இல்லாமலும் ஒருவருக்கு டெங்கு இருக்குமா?'' 


''ஆம், கொசு கடித்து நோய்க் கிருமி மனித உடலுக்குள் சென்று, மூன்று நாட்கள் முதல் ஏழு நாட்கள் வரை பல்கிப் பெருகும். அதனால், இந்தக் காலகட்டத்துக்குப் பிறகும்கூட டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி வெளிப்படும் வாய்ப்பு உண்டு.''


''டெங்கு காய்ச்சலைக் கவனிக்காமல்விட்டால் என்ன ஆகும்?'' 



''டெங்கு காய்ச்சலை ஏழு நாள் காய்ச்சல் என்று கூறுவார்கள். நோய் பாதிப்பு ஏற்பட்டு ஏழு நாட்களில் சரியாகிவிடும். சிலருக்கு மட்டும் டெங்கு வைரஸ் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தலாம். டெங்கு வைரஸ் ரத்தத்தில் உள்ள ரத்தத் தட்டு அணுக்களை அழித்துவிடும். இந்தத் தட்டு அணுக்கள்தான் ரத்தம் உறைவதற்கு மிக முக்கியமான காரணம். ரத்தத் தட்டுக்கள் எண்ணிக்கை குறையும்போது, அது நுரையீரல், வயிறு போன்ற உறுப்புகளிலும் பல் ஈறு, சிறுநீர்ப் பாதையிலும் ரத்தக் கசிவை ஏற்படுத்தக்கூடும். உரிய மருத்துவச் சிகிச்சை கிடைக்கவில்லை எனில் உயிர் இழப்புகூட நேரிடலாம்.''


''டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க தடுப்பு ஊசி, மருந்து ஏதேனும் உள்ளதா?'' 


''தடுப்பு ஊசி, மருந்து எதுவும் இது வரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, சிகிச்சை எடுப்பதன் மூலம் மட்டுமே உயிர் இழப்பைத் தடுக்க முடியும்.''



''டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன சிகிச்சை அளிக்கப்படும்?'' 



''டெங்கு காய்ச்சலுக்கு எனத் தனி சிகிச்சை எதுவும் இல்லை. ஆனால், இது குணமாக்கக்கூடிய காய்ச்சலே. ஒருவருக்கு ரத்தத்தில் ரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கை தோராயமாக ஒன்றரை லட்சம் இருக்க வேண்டும். ஆனால், டெங்கு வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டவருக்கு அது வெறும் ஆயிரமாகக்கூடக் குறைந்துவிடலாம். எனவே, தேவைப்பட்டால், ரத்தத் தட்டு எண்ணிக்கையைப் பொருத்து ரத்தம் செலுத்துதல் அல்லது ரத்தத் தட்டு அணுக்கள் செலுத்துதல் போன்ற சிகிச்சைகளை மேற்கொள்வார்கள். ஒரே விஷயம்... காலத்தைக் கடத்தாமல் சிகிச்சை அளித்துவிட வேண்டும்.''


''டெங்கு காய்ச்சல் ஒருவருக்கு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?'' 



''உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று ரத்தப் பரிசோதனை செய்யவேண்டும். டெங்கு பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய டெங்கு ஐ.ஜி.எம். எலிசா, பி.சி.ஆர். ஆகியப் பரிசோதனைகள் செய்யப்படும். பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டால் மருத்துவர்கள் கூறும் வழிமுறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும். வீட்டிலேயே நன்றாக ஓய்வெடுக்கலாம். உடலில் நீர்ச் சத்து குறையும் என்பதால், அதிக அளவில் நீர்ச் சத்து உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு நிலைமை மோசமாகத் தொடங்கினால், உடனடியாக மருத்துவமனையில் அனுமதியாகி சிகிச்சைப் பெற வேண்டும்.''



''டெங்கு காய்ச்சல் எவ்வளவு நாட்கள் வரை நீடிக்கும்?'' 


''ஏழு நாட்களில் சரியாகிவிடும். உடல் வலி, சோர்வு போன்ற இதன் பாதிப்புகளில் இருந்து இரண்டு வாரங்களில் வெளிவரலாம்.''


''டெங்கு காய்ச்சலைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?'' 


''டெங்குவைத் தவிர்க்கக் கொசு ஒழிப்பு ஒன்றே வழி. டெங்குவைப் பரப்பும் 'ஏடிஸ் எஜிப்டி’ கொசு நன்னீரில் முட்டை இடும் என்பதால், கொசு வளர வாய்ப்பு இல்லாதவாறு சுகாதாரமாகச் சுற்றுச்சூழலைப் பராமரிக்க வேண்டும்.


வீட்டுக்குள் கொசு வர முடியாதபடி ஜன்னல்களில் கொசு வலை பொருத்தலாம். வாசலில் நீண்ட திரைச்சீலைகளைப் பயன்படுத்தலாம். கொசுவத்தி, கொசு விரட்டி, ஸ்பிரே போன்றவையும் பயன் கொடுக்கும்.


  வீட்டுச் சுவர்கள் மீது 'டி.டி.டி.’ மருந்தைத் தெளித்தால் கொசுக்கள் ஒழியும். வீட்டைச் சுற்றியும், தெருவோரச் சாக்கடையிலும் 'டெல்டாமெத்திரின்’ மருந்தைத் தெளிப்பது பலன் கொடுக்கும். ஜன நெருக்கடி மிகுந்த குடியிருப்புகளில், 1000 கன அடி இடத்திற்கு 4 அவுன்ஸ் 'கிரிசாலை’ப் புகையை செலுத்துவதும் கொசுக்களை விரட்ட உதவும்.


இவை எல்லாவற்றுடன், சுற்றுப்புறச் சுத்தம் முக்கியம்!''



டெங்கு காய்ச்சல் தடுக்க...
வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்கவிடாதீர்கள். தெருவில் தண்ணீர் தேங்கியிருந்தால் சுகாதார ஊழியர்கள் வந்து அகற்றுவதற்குக் காத்திருக்காமல், நீங்களே தண்ணீரை அகற்றுங்கள்.


கை, கால் முழுக்க மறைக்கும் பருத்தி ஆடைகளை அணியலாம். கொசு எதிர்ப்புக் களிம்பைப் பூசிக்கொள்ளுங்கள்.


குடிநீரைக் காய்ச்சி வடிகட்டிக் குடியுங்கள்.


காய்ச்சல் வந்தால் உடனே செய்ய வேண்டியது... 


டெங்கு அறிகுறி தெரிந்தால், சிறிதும் தாமதம் இன்றி உடனடியாக மருத்துவரை அணுகி, ரத்தப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.


டெங்கு காய்ச்சல் உடலில் நீர்ச் சத்தைக் குறைத்துவிடும். உடலின் நீர் இழப்பைத் தடுக்க இளநீர், கஞ்சி, உப்பு-சர்க்கரைக் கரைசல் போன்ற நீராகாரமாக அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.


எப்படிப் பரவாது... 


ஒருவரை ஒருவர் தொடுவதால் டெங்கு பரவாது. தும்மல், இருமல் மூலமும் இது பரவாது.

 நன்றி - டாக்டர் விகடன்


டீன்ஸ் கேர்ள்ஸ் ஜீன்ஸ்ல ஏன் பாக்கெட் இல்ல? ஒரு பொழப்பத்த ஆராய்ச்சி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEguXBts88qXghQcMwG5pmJHInG9HW2NmjkiFUTprnLylbswRJghpYkIT5LB4DS-ykE5fsqxMI-pBrTSrrAS1BJVLZjEGuGpJE2cvqQbkzt9YoBbRpHp7aGmxdWFwZtUXGxnmfWgRLyDQJ0/s1600/Namitha3.jpg

1. அன்னா ஹசாரே என்ன அரிச்சந்திரனா?-காங். கேள்வி! # காங்கிரஸ் என்ன கற்புக்கரசி கண்ணகியா? - அன்னா கேள்வி


----------------------------------


2. லேடீஸ் ஜீன்ஸ்ல ஏன் பாக்கெட் இல்ல? 

அண்ணே, பசங்கதான் பணம் வைக்க பாக்கெட் வைப்பாங்க, பொண்ணுங்க எந்தக்காலத்துல பணம்வெச்சிருக்காங்க?

--------------------------------------

3. டியர்.நீ ஏன் உன் ஜீன்ஸ்ல பாக்கெட்டே வைக்கலை?

டேய் லூசே! எனக்கு செலவு பண்ணத்தானே உன்னை லவ் பண்றேன்?அப்புறம் எதுக்கு நான் பாக்கெட் வைக்கறேன்?

-------------------------------

4. கே-உங்களாலே பெண்களை பற்றி எழுதாமல் ஒரு நாளாவது இருக்க முடியுமா ?  

ப- உங்களால சாப்பிடாம இருக்க முடியுமா?

---------------------------------

5. எல்லா படைப்பாளிகளுக்கும் அவரவர் படைப்பு பிடித்தமானதாகவே இருக்கும், ஆனால் பெரும்பாலான மக்களை கவர்ந்த படைப்பே வெற்றி பெறுகிறது

----------------------------------------


6. பிரபல ட்விட்டர் , வலைபாய்ந்த ட்விட்டர் என்ன வித்தியாசம்? 


ரொம்ப நாளா ட்விட்டர்ல இருக்கறவங்க பிரபல ட்விட்டர்ஸ், ரொம்ப நேரம் டைம்லைன்ல இருந்தா வலைபாய்ந்த ட்விட்டர்

---------------------------------------------


7.  ஹலோ, காஞ்சனாவா? ரொம்ப அர்ஜெண்ட்.. என்ன வேலை செஞ்சுட்டு இருந்தாலும்  அதை அப்படியே விட்டுட்டு என் ஆஃபீஸ் வா! 

மொட்டை மாடில ஸ்லிப் ஆன  உங்கம்மா கையை பிடிச்சு காப்பாத்திட்டு இருக்கேன், விட்றவா?

-----------------------------------------


8. உல்லாச பயணம்னா என்ன?

தெரியலை.. அதெல்லாம் அந்த காலத்துல .. இப்போ பயம் தான்.. ஓவர் பஸ் டிக்கெட் சார்ஜ்.. 

-------------------------------------------------

9. 2 பாய் பிரண்ட்ஸ் மட்டும் வெச்சிருந்தா அது லிமிட்டட் ஃபிகர், 2க்கும் மேற்பட்ட ஃபிரண்ட்ஸ் இருந்தா அது அன் லிமிட்டட் ஃபிகர் # கே. அவதானிப்பு


----------------------------------------

10. அத்தான், நான் தூங்கப்போறேன்.. எந்த ரீ ஆக்‌ஷனும் காட்டாம இருக்கீங்களே?


தூங்கத்தானே போறே? என்னமோ தூக்குக்கயிறுல தொங்கப்போற மாதிரி பேசறே?

----------------------------------------------


Illakiya, Kural & Simbu @ Kuralarasan Birthday Bash...



11.  தலைவர் சரியான குழப்பவாதின்னு எப்படி சொல்றே?


தமிழ்-ல எனக்குப்பிடிக்காத ஒரே வார்த்தை தமிழ்தான் -னு சொல்றாரே?

------------------------------------


12. முல்லை பெரியாறு பிரச்சனை முடியறவரை முல்லை மலர் மேலே மொய்க்கும்வண்டு போலே  பாட்டைக்கூட ரேடியோவுல போடக்கூடாதாம்# அவ்வ்

------------------------------------

13. நமீதா - தமிழ் சினி ஃபீல்டுல எனக்கு ஆல்ட்டர்நேட் யாரும் இல்லை , 

மேடம், அது 10 வருஷம் முன்னே, உங்க வீட்ல இண்டர்நெட் கனெக்‌ஷன் குடுங்க

------------------------------------


14. ஃபிலிம் ஃபெஸ்டிவல்-ல எனக்கு பரிசு கன்ஃபர்ம்.. 


ஏன் டைரக்டர் சார்? வேற எந்த படமும் போட்டி போடலையா?

--------------------------------------

15. சனிப்பெயர்ச்சி ,குரு பெயர்ச்சி  என்ன வித்தியாசம்? 

சம்சாரம் தன் தாய் வீட்டுக்கு போய்ட்டா அது சனிப்பெயர்ச்சி, வாத்தியார் ஸ்கூல்க்கு லீவ் போட்டா அது குரு பெயர்ச்சி

----------------------------------



· ·



16. மிஸ்! உங்களை யாராவது லவ் பண்ணி ஏமாத்திட்டா என்னா செய்வீங்க? 


லவ்வர் பணக்காரனா இருந்தா அவன் மேல கேஸ் போடுவேன், ஏழைன்னா நல்லா உதை போடுவேன்

------------------------------------


17. காதலி - டியர், வீட்ல யாரும் இல்லை, என்னை எதுவும் செஞ்சுடாதீங்க.

காதலன் -. இது இன்விடேஷனா? வார்னிங்கா? மீ டியூப்லைட்,டெல் ஃபிராங்க்ளி

---------------------------------


18. டாக்டர்!இந்த மாத்திரை சாப்பிட்டா பேதி போயிடுமா? 


ஏற்கனவே போய்ட்டுத்தானே இருக்கு? நின்னுடும்..

--------------------------------------

19.  ஒரு புது காமெடியனை அறிமுகப்படுத்தறேன், என்ன பேர் வைக்கலாம்? 

கபில் சிபில்-னு வைங்க,பேரைக்கேட்டாலே மக்கள் குபீர்னு சிரிப்பாங்க


---------------------------------------

20. தலைவர் ஏன் தனிமைல தவிக்கறாரு?

அவரோட குடும்பமே  ஜெயில்ல இருக்கே?

---------------------------------------


மகாகவியின் அரிய புகைப்படம்...


Saturday, June 09, 2012

ஹாலிவுட்டின் லேட்டஸ்ட் அதிரடிப்படங்கள் 4 - முன்னோட்டம்

சும்மாச்சுக்கும் இல்லை... நிஜமாகவே உலகம் முழுக்க வெளியாகி திரையரங்குகளை அதிரடிக்கவிருக்கும் மெகா சினிமாக்கள் குறித்த கலர்ஃபுல் டிரெய்லர் இங்கே... -ஜாக்கிசான்,ஜேம்ஸ்பாண்ட்,ஸ்பைடர் மேன் -லேட்டஸ்ட் படங்கள் ஒரு பார்வை
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjb6qt7JlXkMSs-DZjTDbHWnfGksOCP8LlErDRkECHj30yauePg6JmWr80yHQnYcd_XQ6DGNi0_Qxno0D6f4tSo5xMqEBU5jr-iG1xgpNUrwaxhAPpGM0_lD6lrB5xa1S21QW_EvBN1SCc/s1600/Skyfall+Movie+Poster.jpg

ஸ்கை ஃபால்

ஜேம்ஸ் பாண்ட் வரிசையில் 23-வது படம். டேனியல் க்ரேய்க்கின் மூன்றாவது பாண்ட் அவதாரம். ''டபுள் ஓ செவன்... நீ என் உத்தரவுக்குக் கட்டுப்பட்டவன்னு உனக்குத் தெரியாதா?'' என அடிக்கடி பாண்டின் மீது செல்லக் கோபம் காட்டும் 'மிஸ் எம்’ அப்பத்தா ஓர் இக்கட்டில் சிக்கிக்கொள்கிறார். அது அவர்களின் 'எம்16’ (MI6) புலனாய்வு அமைப்புக்கே சிக்கலாகும் சமயம் பாண்ட் என்ன செய்கிறார் என்பதுதான் படம்.


'மிஸ் எம்’ வேடத்தில் முந்தைய படங்களில் நடித்த ஜூடி டென்ச்சின் கணவர் இறந்த பிறகு, 'இனி சினிமாவில் நடிக்க மாட்டேன்’ என்று அறிவித்திருந்தார். ஆனால், பிறகு 'பாண்ட் படங்களுக்கு என் ஆயுள் முழுக்க நடிக்கக் கடன்பட்டு இருக்கிறேன்’ என்று தன் முடிவை மாற்றிக்கொண்டு, அடங்காத குதிரை பாண்டை மிரட்டி வேலை வாங்கும் பாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.


''மிஸ்டர் ஜேம்ஸ்... யார்கிட்ட இருந்து எப்படி உண்மையை வரவழைக்கணும்னு உங்களுக்குச் சொல்லியா தரணும்?'' என்றபடி ஆடைகளைக் களையும் ஹீரோயின்களாக நவோமி ஹாரிஸும்  பெரினிஸ் மார்லோவும் நடித்திருக்கிறார்கள். கறுப்பழகி நவோமி ஹாரீஸுக்கு படத்தில் பாண்டுக்கு நிகரான ஆக்ஷன் காட்சிகள் உண்டு. பாண்டுடன் நவோமி உருண்டு புரளும் சமயமே ஹிட் ஹாட் கெமிஸ்ட்ரியும் அரங்கேறுமாம்.


முன்னெப்போதையும்விட, இந்த பாண்ட் படத் தயாரிப்பில் ஏகப்பட்ட சிக்கல். ஆரம்பத்தில் எம்.ஜி.எம். நிறுவனம்தான் படத்தைத் தயாரித்தது.


ஆனால், வங்கிக் கொள்ளையில் பணத்தைப் பறிகொடுத்து மிகப் பெரிய இழப்பில் தவித்த அந்த நிறுவனம், படத்தை சோனி நிறுவனத்துக்குக் கை மாற்றியது. இதனால் உப தயாரிப்பாளர்கள்  நம்பிக்கையிழந்து கழன்றுகொண்டனர். இந்தியாவில் கொங்கன் ரயில்வேயின் அதீத வளைவுகளில் படம் பிடித்த சமயம் ரசிகர்கள் கூட்டத்தால் ரத்தான படப்பிடிப்பு, விபத்து காரணமாக டேனியல் க்ரேய்க்கின் ஓய்வு என ஏகப்பட்ட தடைகள். அத்தனையையும் தாண்டி உள்ளம் கொள்ளைகொள்ள வருகிறான் பாண்ட்!



படத்துக்கான பட்ஜெட்...? 150 மில்லியன் டாலர்கள் மட்டுமே! நம்மூர் மதிப்பில் கிட்டத்தட்ட 838 கோடி ரூபாய். படத்தில் வில்லனுக்கே 100 கோடி சம்பளமாம். அப்போ க்ரேய்குக்கு..?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvazIv0HWuUK8xDyTsg_CWYCaUU27M7y8ieU_BSQ3Gw9zX0_w3KRmRoKoNo3E31oHVSHJhz1sSLwauS6UX6y8UxhszNfw78SwcKo8ad6OzQyoP1TodBcJQRSJbibBL0Pt22_HbltUvlavY/s1600/cz12+poster+cannes.JPG



சைனீஸ் ஸோடியாக்
''இந்தப் படத்தோடு ஆக்ஷனில் இருந்து ஓய்வுபெறப்போகிறேன். இனி, என் வயதுக்குத் தகுந்த மென்மையான படங்களில் மட்டுமே நடிப்பேன்'' என ஜாக்கிசான் அறிவித்திருப்பதால், எதிர்பார்ப்பை மில்லியன் டாலருக்கு எகிறவைத்துள்ள படம்... 'சிஇசட்12’ (CZ12) என்று குறிப்பிடப்படும் சைனீஸ் ஸோடியாக்.


12.12.12-ல் வெளியாகவிருக்கும் இந்தப் படம், ஜாக்கியின் ஹிட் சீரிஸ் படமான 'ஆர்மர் ஆஃப் காட்’ படத்தின் மூன்றாவது பாகம். சகட்டுமேனிக்குக் காயங்கள், 58 வயதுக்கே உரிய தளர்ச்சி, காதல் மனைவி லின் ஃபெங்கின் தொடர் அறிவுரை கள்தான் காரணம், 'ஆக்ஷன் ரிட்டையர்மென்ட்’ முடிவுக்கு.


படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு, ஆக்ஷன் என அத்தனையும் ஜாக்கி சான். சீன அரசின் பொக்கிஷத்தை ஸ்பெயின், பிரிட்டிஷ் படைகளின் பாதுகாப் பில் இருந்து மீட்டு வரும் முந்தைய பாகக் கதையின் தொடர்ச்சிதான் என்றாலும், நவீன டெக்னாலஜியோடு ஆக்ஷன் காட்சிகளை அலேக்காக அமைத்திருக்கிறார் ஜாக்கி.

 க்ளைமாக்ஸ் சண்டைக்கு மட்டும் 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாம். புவி ஈர்ப்புக்கு எதிராகக் காற்றில் பறந்து மோதும் சாகசக் காட்சிகளில் தன் டிரேட் மார்க் குறும்புத்தனம் சேர்த்து ஷூட் செய்திருக்கிறார். ஸ்கூபா டைவிங், ஸ்கை டைவிங் என உலகின் அத்தனை சாகசங்களையும் உள்ளடக்கிய பேக்கேஜாக வரும் இந்தப் படத்திலும் வழக்கம்போல டூப் போடாமல் நடித்து இருக்கிறார் ஜாக்கி. 'என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசு கொடுத்தது நீயல்லவா’ என்று ரசிகர்களை நோக்கிப் பாடுவதற்கு மிகப் பொருத்தமான ஜாக்கி... இனி, 'ஒரு பவுன் வியர்வை’ சிந்த மாட்டார் என்பது அகில உலக ரசிகர்களுக்கும் வருத்தமே!



தி அமேஸிங் ஸ்பைடர் மேன்
டம் இன்னும் வெளியாகவில்லை. அதற்குள் 'தி அமேஸிங் ஸ்பைடர் மேன்’ இரண்டாம் பாகத்துக்கான அறிவிப்பு வெளியாகிவிட்டது. முந்தைய ஸ்பைடர் மேன் படங்களின் தொடர்ச்சியாக இல்லாமல், 'தி அமேஸிங் ஸ்பைடர் மேன்’ என்ற ஹிட் நாவலைத் தழுவி உருவாகியிருக்கும் படம். ஸ்பைடர் மேனின் பீட்டர்பார்க்கர் கதாபாத்திரத்தில் இந்த முறை நடித்திருப்பவர் ஆண்ட்ரூ.

http://emma-stone-photos.yesyada.com/wp-content/uploads/2012/04/the-amazing-spider-man-poster.jpg


 'தி சோஸியல் நெட்வொர்க்’ படத்தில் ஃபேஸ்புக்கின் மார்க் ஸக்கர்பெர்க்கின் ஆருயிர் நண்பன் சாவ்ரின் கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் ஆண்ட்ரூ. இப்போது 'ஸ்பைடர் மேன் படத்துக்காக ஜிம்னாஸ்டிக்ஸ், நடனம், சண்டை எல்லாம் கற்றுக்கொண்டு சின்சியராக நடித்தவரை, இரண்டாம் பாகத்துக்கும் கமிட் செய்துவிட்டார்கள். ஆண்களின் மனம் கவர்ந்த டாப் 100 செக்ஸி அழகிகளில் ஆறாவது இடம் பிடித்த எம்மா ஸ்டோன்தான் இந்த வலை மனிதனுக்கு வலை விரிக்கும் அழகி!


படத்தில் இந்தி நடிகர் இர்ஃபான் கான் ('ஸ்லம் டாக் மில்லினியர்’ பட இன்ஸ்பெக்டர்!) ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். 'நான் வில்லன் இல்லை. ஆனால், படத்தில் என்னுடைய ஆராய்ச்சிகள் ஸ்பைடர் மேனுக்கு வில்லத்தனமாகத் தெரியும்!’ என்கிறார் இர்ஃபான். படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 2010-ல் தொடங்கி ஏப்ரல் 2011-லேயே முடிவடைந்துவிட்டது. கடந்த ஒரு வருடமாக 'போஸ்ட் புரொடக்ஷன்’ பணிகள் மட்டும் நடைபெற்றுவருகின்றன. சமீபத்தில் வெளியான 'தி அமேஸிங் ஸ்பைடர் மேன்’ வீடியோ கேம் மெகா ஹிட் அடித்திருக்கிறது.

http://moviecarpet.com/wp-content/uploads/celebrities/the-amazing/spider-man-character-posters/The%20Amazing%20Spider-Man%20Character%20Posters-03.jpg


இந்தியா உட்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகளில்... இந்தியாவில் மட்டும் ஆயிரத்துக்கும் அதிகமான திரையரங்குகளில் ஜூன் மாதம் வலை விரிக்கப்போகிறான் இந்த ஸ்பைடர் மேன்!



வேர்ல்டு வார் இஸட்
மெரிக்க எழுத்தாளர் மார்க்ஸ் ப்ரூக்ஸின் 'தி வேர்ல்டு வார் இஸட்’ நாவல் அப்படியே சினிமாவாகி இருக்கிறது. 2006-ல் வெளியான அந்த நாவலில் கவரப்பட்ட ஹாலிவுட் நடிகர் பிராட் பிட், தானே படத்தைத் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார்.


கதை? 'ஸோம்பீஸ்’ (zombies) எனப்படும் மரணம் இல்லா மந்த மனிதர்களால்தான் உலகம் அழியும் என்பதே ஒன் லைன்!


ஆட்கொல்லி வைரஸால் தாக்கப்படும் மனிதர்கள் தங்கள் சிந்திக்கும் திறனை இழந்து வெறும் சதைப் பிண்டங்களாக அலைகிறார்கள். அந்த மந்த மனிதர்களின் மூளையில் பதிந்துள்ள ஒரே பழக்கம்... இயல்பான மனிதர்களைக் கொன்று தின்பது மட்டுமே. இந்த ஸோம்பிக்களின் மூளையைச் சிதைப்பது மட்டுமே அவைகளை அழிக்கும் ஒரே வழி. நிஜத்திலும் இதுபோன்ற ஸோம்பிக்களால்தான் உலகம் அழியப்போகிறது என்பதில் ஆழ்ந்த நம்பிக்கைகொண்டுள்ள ப்ரூக்ஸ், 'ஸோம்பிக்களால் கடி வாங்குபவர்களும் ஸோம்பிகளாக மாறிவிடுவார்கள்.

http://farm5.staticflickr.com/4116/4759295551_3baa1e8cca_z.jpg


இந்தக் கதையை நான் கற்பனையில் மட்டுமே  உருவாக்கவில்லை. இந்த நாவலுக்காக நீண்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டபோது, சில ராணுவ ரகசியங்களை  தெரிந்துகொண்டேன். அமெரிக்க ராணுவம் ஸோம்பிக்களைத் தயாரிக்கும் முனைப்பில் இருக்கிறது’ என்று அதிர்ச்சி அளிக்கிறார் ப்ரூக்ஸ்.


 படத்தில் எதிரி நாடுகளின் மீது தாக்குதல் தொடுக்க ஸோம்பிக்களை உருவாக்கும் அமெரிக்க, சீன ராணுவத்தின் கோர முகத்தைப் பதிவுசெய்திருக்கிறார்களாம். தீவிரவாதத்தின் இன்னொரு பக்கத்தை 125 மில்லியன் அமெரிக்க டாலர்களில் செலவுசெய்து காட்டுகிறார்கள். ஸோம்பிக்கள் நிஜத்தில் வந்தால், நாமெல்லாம் என்னாவோம்?!



 நன்றி - விகடன்

ஆர்த்திராவ் நித்யானந்தாவை மாட்ட வைத்தது எப்படி? ஜூ வி கட்டுரை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSISw0op29irRYN6ssutfJQSnKXqiOMuhhzks500ZH5E2gfii9WB2WrRZheiovnsg3QCBX8ZwLgoAIBvLupgq6uY1XPD4mUrifln42DiA_29PvI89Nc-LNgB8Vjo_UMz3VMvnak0zq-c8/s1600/Swamiji+with++NIYF.JPG''நித்தியானந்தரை என் குருவாக​வும் கடவுளாகவும் நினைத்து ஆறு வருடங்களாக அவரது தீவிர பக்தையாக இருந்தேன். இன்று ஏமாந்து உங்கள் முன் நிற்கிறேன்...'' என்று சோகத்துடன் சொல்கிறார் ஆர்த்தி ராவ். 




யார் இந்த ஆர்த்தி ராவ்?


 14.3.10 ஜூ.வி-யில் 'கேமரா பொருத்திய வெளிநாட்டு பக்தை’ என்ற தலைப்பில் கவர் ஸ்டோரியும், 12.6.11 ஜூ.வி-யில் 'வீடியோ தயாரித்தாரா ஆர்த்தி ராவ்..?’ என்ற தலைப்பில் செய்தியும் வெளியிட்டு இருந்தோம். அந்தக் கட்டுரையில் ரஞ்சிதா, 'நான் நித்தியானந்தருடன் இருப்பதைப் போன்ற மார்ஃபிங் செய்யப்பட்ட வீடியோவை வைத்து லெனின் கருப்பன், ஆர்த்தி ராவ், வழக்கறிஞர் ஸ்ரீதர் ஆகியோர் பணம் கேட்டு என்னை மிரட்டினார்கள். நான் பணம் கொடுக்காததால், அந்த வீடியோவை வெளியிட்டு என்னை அசிங்கப்படுத்தினார்கள். அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்...’ என வழக்கு தொடர்ந்து இருப்பதையும், வீடியோ விவகாரத்தில் ஆர்த்தி ராவுக்கு முக்கியப் பங்கு இருப்​பதையும் குறிப்பிட்டு இருந்தோம்.



அதைப் பற்றிதான் இப்போது கன்னட சேனல் ஒன்றில் ஆர்த்தி ராவ் வாய் திறந்திருக்கிறார். ''நான் நித்தியானந்தரோட ஆசிரமத்தில் இருந்தவரை என்னோட பேரு மா நித்யானந்த பிரம்மேஸ்வரிமை. சென்னையில் ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்த பெண் நான். மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் முடிச்சிட்டு, அமெரிக்காவில் வேலை பார்த்தேன். அங்கேயே ஒருத்தரைக் காதலித்து, திருமணம் செய்துகொண்டு செட்டிலாகி விட்டேன்.


 எனக்கும் என் கணவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அவரை விட்டுப் பிரிந்து விட்டேன். அப்போதுதான் என் பயணம் ஆன்மிகத்தை நோக்கித் திரும்பியது. நித்தியானந்தரின் ஆசிரமத்தில் சேர்ந்து சேவை செய்ய ஆரம்பித்தேன். 'உனக்கு சீக்கிரமே ஜீவன் முக்தி கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்’ என்று சொல்லி நித்தியானந்தர் என்னை செக்ஸுவலாகப் பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தார். 

சி.பி - ஓஹோ.. அவர் தான் உங்களை பயன் படுத்துனார்.. அதை சாக்கா வெச்சு இப்போ நீங்க உங்க சுய நலத்துக்கு அந்த மேட்டரை பயன் படுத்திக்கறீங்க? 

 http://www.envazhi.com/wp-content/uploads/2010/12/ranjitha-123211.jpg


'இது தப்பு’ என்று நான் அவரிடம் சொன்னபோது, 'கண்ணன் - ராதை போல நாம இருக்கணும். அப்போதான் சீக்கிரமே ஜீவமுக்தியை அடைய முடியும்’ என்று சொல்லி என்னைச் சமாதானப்படுத்தினார். அவர் சொன்னதை நானும் நம்பினேன்.

சி.பி - அடடா.. ஜீவ முக்தி  அடையறதுதுதான் ஆன்மீகப்பணியா?  அய்யய்யோ, மதுரைல எத்தனை பேர் இப்படி ஜீவ முக்தி அடைஞ்சுட்டு இருக்காங்களோ தெரியலையே?


லெனின் கருப்பன் என்னிடம், 'ஜீவ முக்தி என்று பொய் சொல்லி நித்தியானந்தர் ஏமாற்றுகிறார்’ என்று சொன்னார். அதைப் பொய் என்று நிரூபிக்க வேண்டும் என்று நினைத்தேன். அந்த சமயத்தில் நித்தியானந்தரின் அறையைச் சுத்தம் செய்யும் பணி எனக்குக் கொடுக்கப்பட்டது. நித்தியானந்தரின் அறைக்குள் இருக்கும் ஏர் பியூரிஃபையர் மெஷினுக்குள் ரகசிய கேமரா ஒன்றை நான் பொருத்தி வைத்தேன். இரண்டு நாட்கள் கழித்து அந்தக் கேமராவை எடுத்து ஓடவிட்டுப் பார்த்தபோது, எனக்கு அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் இருந்தது. கேமராவை வேறு யாராவது வைத்திருந்தால்கூட, நான் அதை மார்ஃபிங் என்று நினைத்திருப்பேன். நானே வைத்ததால் என்னால் சமாதானம் அடைய முடியவில்லை. உடனே, ஆசிரமத்தைவிட்டு வெளியேறிவிட்டேன்''


 என்கிறார்.



ஆர்த்தி ராவ் குற்றச்சாட்டுக்கு நித்தியானந்தா என்ன சொல்கிறார்?


''கடந்த 2004-ம் ஆண்டு கொடிய பால்வினை நோய்களால் பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காகத்தான் ஆர்த்தி ராவ் என்ற பெண் எங்களது ஆசிரமத்துக்கு வந்தார். ஆசிரமத்தில் ஒரு பக்தையாகத்தான் வந்து போவாரே தவிர அவருக்கு எந்தப் பொறுப்பும் கொடுக்கப்படவில்லை. பல ஆண்களோடு உறவு வைத்துக் கொண்டால் என்ன வியாதி வருமோ, அப்படிப்பட்ட ஒரு வியாதிதான் ஆர்த்திக்கும் வந்திருந்தது. ஹெர்பீஸ் டூ என்ற அந்தக் கொடிய பால்வினை நோய் எளிதில் மற்றவர்களுக்குப் பரவும் தன்மை கொண்டது. 


ஐந்து வருடங்களாக உடல் ரீதியாகத் தொல்லை கொடுத்தார் என்று சொல்கிறாரே, என் உடலில் உள்ள ரத்தத்தை எடுத்து சோதனை செய்யுங்கள். அந்தப் பெண்ணோடு உடல் ரீதியான தொடர்பில் இருந்தால் எனக்கும் அந்த நோய் வந்திருக்க வேண்டும் அல்லவா..?

 சி.பி - அது எப்படி வரும்? நீங்க தான் புத்திசாலித்தனமா காண்டம் யூஸ் பண்றதா  ஐரோப்பா கண்டமே சொல்லுதே?

அமெரிக்காவில், குழந்தைகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்​பட்டிருக்கிறது. அமெரிக்காவிலும், இந்தியாவிலும் நித்தியானந்தரின் பெயரைப் பயன்படுத்தி பல்வேறு மோசடிகளை செய்திருக்கிறார். அவர் ஒரு ஃபிராடு. அமெரிக்கப் போலீஸ் மற்றும் நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளி. இன்றுவரை அவர் தலைமறைவு வாழ்க்கைதான் வாழ்ந்து வருகிறார். லெனின் கருப்பனோடு சேர்ந்து ஆசிரமத்தின் சொத்துக்களை அபகரிக்க முயற்சி செய்தார்.


 பொய்யான ஒரு வீடியோவைத் தயாரித்து ரஞ்சிதாவை மிரட்டி இருக்கிறார். ரஞ்சிதாவும் அப்போதே போலீஸில் புகார் செய்து, நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.


இப்போது நான் மதுரை ஆதீனமாக பொறுப்பு ஏற்றுக் கொண்டதைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிலர்தான், இந்த ஆர்த்தி ராவைத் தூண்டி விட்டு எனக்கு எதிராகப் பேச வைத்திருக்கிறார்கள். ஆர்த்தி ராவ் விவகாரத்தை சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும்'' என்கிறார்.


தலை சுத்துதுடா சாமி!

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicBLFbH6cGUPbhjtNdFyEmvNO4w_SaYaN8zwqJC_nb9Mks36yiVh4ArWmZSLZHd6i5G8jfmZCGvdz3eBtw8wTv1tWINMLiCu2n1EqTuPjrIWuDccSB6uqVhBEvYnwcMfA2uP44FVG9OT6i/s1600/ranjitha.jpg

PROMETHEUS -ஏலியன்ஸ் ரீல் இன் சயின்ஸ் ஃபிக்‌ஷன் -ஹாலிவுட் சினிமா விமர்சனம்

http://cdn.timesofisrael.com/uploads/2012/06/prometheus_movie-wide-635x357.jpg

ஹாலிவுட் சினிமாக்காரங்க கல்லா கட்ட கண்டு பிடிச்ச முக்கியமான வழிகள்

1. உலகையே ரட்சிக்க வந்த சிங்கிள் மேன் சுனாமியா ஸ்பைடர் மேன், பேட் மேன்,அயர்ன்மேன்,ஹல்க்,தோர்,ஃபெண்டாஸ்டிக் ஃபோர் ,சூப்பர்மேன்,எக்ஸ்மென்  மாதிரி ஹீரோ ஓரியண்ட்டட் கதைகளை பிரம்மாண்டமா தந்து  டீன் ஏஜ் ,ஆல் ஏஜ் ஆடியன்ஸை கவர் பண்ணி வசூலை அள்ளுவது

2.கொரில்லா,சுறா,அன்கோண்டா,டைனோசர் போன்ற  ஓவர் பில்டப் மிருகங்கள் பற்றிய கற்பனைக்கதைகளை ரசிக்கும்படி எடுப்பது



3.ஜேம்ஸ்பாண்ட்,சீக்ரெட் ஏஜெண்ட் டைப் ஆக்‌ஷன் படங்கள்,ஜாக்கிசான்,புரூஸ்லீ டைப் ஃபைட் படங்கள்



4. சயின்ஸ் ஃபிக்ஸன் ஸ்டோரிஸ் , அதுல வேற்றுக்கிரக வாசிகள் பூமி மீது படை எடுப்பது மாதிரி ரீல் விடும் கதைகள்

இந்தப்படம் ஏலியன்ஸ் சப்ஜெக்ட் தான்.. ஹாலிவுட்ல மெகா ஹிட்டாம்.. என்ன கதைன்னு பார்ப்போம்

2093 டிசம்பர் மாசம் 21 ந்தேதி கதை ஆரம்பிக்குது.. வேற்றுக்கிரக வாசிகளின் வாழ்க்கை முறையை  ஆராயும் நோக்கில் பூமியில் இருந்து ஒரு விஞ்ஞானிகள் குழு விண்கலத்துல கிளம்புது.. அந்த குழுவில் 2 பெண்கள் ( சும்மா ஒரு தகவலுக்காக)..பூமி மாதிரியே காற்று,நீர் வசதி உள்ள ஒரு கிரகத்துல இறங்கறாங்க .. அங்கே இறங்கி ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கறப்போ புயல் அடிக்குது..ஒரே ஒரு மனித முகம் அதாவது தலை மட்டும் கிடைக்குது.. அதை எடுத்துட்டு விண்கலத்துக்குள்ளே வந்துடறாங்க..

http://collider.com/wp-content/uploads/prometheus-movie-image.jpg

அவங்க அந்த குகைக்குள்ளே போய் டார்ச் எல்லாம் அடிச்சுப்பார்த்ததுல அங்கே இருக்கும் தட்ப வெப்பம் எல்லாம் மாறி சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்த கதையா ,வேற்றுக்கிரக உயிரினங்கள் உயிர் பெற்று எழுகின்றன..

அந்த தலையை ஆராய்ச்சி பண்றப்போ பல ஆச்சரியங்கள் நிகழுது.. வேற்றுக்கிரக உயிர் இனங்கள் அல்லது செல்கள் ஒரு டாக்டர் உடம்புல புகுந்துக்குது.. அது தெரியாம அந்த ஆள் அவரோட லவ்வர் கிட்டே கில்மா திருவிழா கொண்டாடிடறாரு.. மேட்டர் நடந்த 10 மணி நேரத்துல கரு உருவாகி பாப்பா 3 மாச கர்ப்பம்..

பாப்பா கண்டு பிடிச்சுடுது.. இது ஏலியன்ஸோட குழந்தைதான்.. ஆபத்துன்னு.. உடனே பர பரன்னு அதை தானே ஓடிப்போய்  ஒரு மிஷின் மூலம்   அந்தக் கருவை அழிக்க முயற்சி பண்றா.

பற்பல பரபரப்பு, ஆராய்ச்சி ,ஓட்டங்கள், துரத்தல்கள்க்குப்பிறகு. ஒரே ஒரு லேடி மட்டும் தப்பிக்கிறா.. அவ பூமிக்கு தகவல் அனுப்பறா.. ஆமை புகுந்த வீடு,சசிகலா புகுந்த தோட்டம், நயன் தாரா லவ் பண்ண ஆம்பளை எதுவும் உருப்படாது.. அது மாதிரி இனி  யாரும் லூஸ் தனமா ஆராய்ச்சி அது இதுன்னு இங்கே ஆள் அனுப்ப வேண்டாம் , அழிஞ்சுடுவீங்க அப்டிங்கறா..க்ளைமாக்ஸ்ல இந்தப்படத்தோட செகண்ட் பார்ட் வறதுக்கான ஒரு லீடு கொடுத்து படத்தை முடிக்கறாங்க   



http://www.clickondetroit.com/image/view/-/14585838/medRes/2/-/maxh/360/maxw/640/-/637us4/-/Noomi-Rapace-in--Prometheus--jpg.jpg


படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்

1.  டாடி, இறந்த பிறகு எல்லாரும் எங்கே போவாங்க?

சாமி கிட்டே..

அம்மா போன மாதிரியா?

ம்

அது அழகான இடமா இருக்குமாப்பா?

எனக்கெப்படித்தெரியும்? நம்பிக்கை தான்

2. நெருப்பு சுடாம இருக்க என்ன வழி?

அது சுடும்னு பயப்படக்கூடாது..

3. ரெண்டு வருஷங்களா தொடர்ந்து தூங்கிட்டு இருந்த நான் ஜஸ்ட் நவ் எந்திரிச்சிருக்கேன், எனக்கு எந்த புது ஃபிரன்ட்சும் தேவை இல்ல..  என்னை யார் அன் ஃபாலோ பண்ணாலும் கவலை இல்லை

4. அட! இறந்து போனவர் நமக்கு வரவேற்பு எல்லாம் குடுக்கறாரே?

5. என்னது? எஞ்சினியர்ஸா? அவங்க என்னத்தை வடிவமைச்சுக்கிழிச்சாங்க?

நம்மை வடிவமைச்சதே அவங்க தான்

6. கடவுளோட படைப்பு எப்பவும் சீரா இருக்காது..

 ம் ம் என்னை அங்கே இருந்து இங்கே கொண்டு வர முடியுமா?

அந்த மாதிரி வேலையை செய்ய்றதால தான் எனக்கு கேப்டன்னு பேரு

7.  இந்தத்தண்ணீர் ஏன் உறையவே இல்லை?

ஒரு வேளை இது தண்ணீரே இல்லையோ என்னவோ?

அப்போ இது ஏலியன்ஸோட யூரின்னு சொல்ல வர்றியா?
8. இந்த கிரகத்துல மனிதர் வாழத்தேவையான காற்றும், நீரும் இருக்கு.. பேசுனபடி பந்தயத்துல நான் ஜெயிச்சுட்டேன், பந்தயத்தொகையை குடு.. நான் என் கேர்ள் ஃபிரண்ட்டோட டேட்டிங்க் போகனும்

9. இந்த குகைல இருக்கும் ஓவியங்கள் எல்லாம் உருமாறுது.. நாம வந்து இங்கே இருக்கும் தட்ப வெப்பத்தை எல்லாம் மாத்திட்டோம்னு நினைக்கறேன்..

10.பெரிய விஷயத்துக்கு கூட சின்னக்கரு தான் மூலதனம்.. எதையும் அலட்சியப்படுத்தக்கூடாது

11. மனிதர்கள் எதற்காக  , ஏன் என்னை உருவாக்குனாங்க..?

 அவங்களால உருவாக்க முடியும் என்பதை உலகுக்கு உணர்த்த

12. நீங்க எதுக்காக இங்கே வந்தீங்களோ  அதுக்காக எதுவரை ரிஸ்க் எடுப்பீங்க?

என் உயிரின் எல்லை வரை
 சபாஷ்

13.  டியர், வாழ்க்கைல நான் கண்டு பிடிச்ச முக்கியமான முதல் விஷயம் நீ தான்..

14. இந்த சத்தம் விசித்திரமா இருக்கு, பூனை சாகும்போது எழுப்பும் ஒலி போல..

15.  பூமில இருக்கற அழகான ஆண்களை எல்லாம் விட்டுட்டு போயும் போயும் உன்னை பிடிச்சுருக்குன்னு சொல்ல மனசுக்கு கஷ்டமா இருக்கு..

16. ஏய்.. நீ உண்மையிலே போண்ணு தானா? ஏலியன்ஸா?

 என் ரூமுக்கு வா.. தெரிஞ்சுக்குவே,

17. அவர் கூட கடைசியா எப்போ கில்மா?

 ஜஸ்ட் டென் அவர் பேக்..

 ஆனா உன் வயிற்றுல 3 மாச கரு உருவாகி இருக்கு

18. ஏதாவது செஞ்சு என்னைக்காப்பாத்து

 யார் கிட்டே இருந்து?
 மரணத்து கிட்டே இருந்து..

19.  மனித இனத்தோட பல பதில் தெரியாத கேள்விகளுக்கு  பதில் தெரிய வரும் தருணத்துல நீ இப்போ இருக்கே..  போக விரும்பறியா?

20. நாம இங்கே இருந்து பாதுகாப்பா பூமிக்கு போனாலும் இங்கே இருந்து ஒரு ஜந்து கூட நம்ம கூட வர நான் அனுமதிக்க மாட்டேன்..

 உங்க எண்ணம் பலிக்கட்டும்

21. அரசனா இருக்கறவன் சாம்ராஜ்யத்தை ஆள்வதும் உண்டு..  பின் அவன் இறப்பதும் உண்டு.. இது இயற்கையின்  விதிகள்..

22. அவங்க பூமிக்குக்கிளம்ப ஆயத்தம் ஆகிட்டாங்க.. அதை விடக்கூடாது..

 ஏன்?

 சில புதிய விஷயங்களை உருவாக்கனும்னா பல பழைய விஷயங்களை அழிச்சுத்தான் ஆகனும்

23.. கடவுளுக்கு நிகரான சக்தியை மனுஷனுக்கு குடுக்க நினைச்சோம்.. அது தப்புன்னு இப்போ புரியுது .. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhbFlvElV-cTWsHv0wf9OEYdqp7yf49cFOfatVCDMmV2YLZgntIKblgRO65FrBSfFvmWZ8RPMdWPJsKVC7Jg9o1nQDUcMThCyrVgAZdUyaIDH7ZF4Ipi1ekpflQ1hFMIjzvg09ZbxNoXwt7/s1600/Prometheus_movie_05.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. ஓப்பனிங்க் ஷாட்ல ஒக்கேனக்கல் நீர்வீழ்ச்சியின் 10 மடங்கு வேகம், நயாகரா அருவியின் இரு மடங்கு பூரிப்புடன் காட்டப்படும் அருவி அழகான ராட்சச கவிதை.. ஒளிப்பதிவு பக்கா..

2. ஏலியன்ஸின் கருவை அழிக்க அந்த லேடி தனி ஆளா கருவை அழிக்க எடுக்க முயற்சிக்கும் காட்சி அதகளமான டைரக்‌ஷன்.. அதுல அவர் நடிப்பு, கேமராமேனின் ஆங்கிள்கள் கன கச்சிதம்

3. கிட்டத்தட்ட 127 நிமிஷங்கள் படம் ஓடுது.. ஃபைட் சீன்கள் இல்லை, ஆக்‌ஷன் காட்சிகள் இல்லை.. ஆனாலும் ஒரு விறு விறுப்பான நாவல் படிப்பது போல் அபாரமாக திரைக்கதை அமைத்த விதம் ( 43 பேர் ஸ்க்ரீன்ப்ளேவாம் - டெக்கான் கிரானிக்கல் செய்தி)

4. கதையில், திரைக்கதையில் வாய்ப்பு இருந்தும் கிளாமர் காட்சிகள் ஏதும் இல்லாமல் நாகரீகமாக எடுத்த விதம்



http://cdn.slashgear.com/wp-content/uploads/2012/06/prometheus-talents-05-sg-580x386.jpg


இயக்குநரிடம் சில கேள்விகள் , லாஜிக் மிஸ்டேக்ஸ் சுட்டிக்காட்டல்கள்

1. அந்த லேடி  உடல் உறவு கொண்ட 10 மணி நேரத்துல கரு 3 மாச கருவாக அசுர வளர்ச்சி அடையுது, ஓக்கே , ஆனா  அந்த கால்குலேஷன் படி அந்த லேடி பிரசவம் ஆக இன்னும் 20 மணி நேரம் ஆகுமே? அல்லது குறைந்த பட்சம் 7 மணிநேரம்   ஆகுமே?எப்படி 7 நிமிஷத்துல ஏலியன்ஸ் குழந்தை பிறக்குது?

2. பிரசவம் நடக்கறப்ப அந்த லேடி தனக்குத்தானே மரத்துப்போகும் ஊசி, மயக்க நிலைக்கான அனஸ்தீசியா எல்லாம் குடுத்துக்கறா.. அப்படி இருக்கும் போது அவ மீண்டும் சுய உணர்வு வர அட்லீஸ்ட் அரை மணி நேரமாவது ஆகும், ஆனா அவ பிரசவம் முடிஞ்ச மறு நிமிஷமா எழுந்து எஸ் ஆகறா.. அது எப்படி?

3. ஸ்பேசில் உடல் உறவு கொள்ளக்கூடாதுன்னு ஒரு விதி இருக்கே? அதை ஏன் அவங்க ஃபாலோ பண்னலை?

4. லேடீஸ் விண்கலத்துல போறப்பவே இவங்களுக்குத்தெரியாதா? எவனாவது கை வெச்சா கர்ப்பம் ஆவாங்க.. அது ஏலியன்ஸா இருக்க வாய்ப்பு அதிகம்னு.. அப்புறம் ஏன் லேடீஸை அனுப்பனும்?

5. ஸ்பீசிஸ் பார்ட் 2 படத்துல வர்ற பல காட்சிகள் இதுல ரிபீட் ஆகுது.. குறிப்பா அந்த லேடி கில்மா சீன், ஏலியன்ஸ் கரு உருவாவது.. 





 சி.பி கமெண்ட் - சயின்ஸ் ஃபிக்ஸன் ஸ்டோரி பிடிச்சவங்க, ஏலியன்ஸ் கதைல ஆர்வம் உள்ளவங்க படம் பார்க்கலாம்.. ஃபைட், ஆக்‌ஷன் பிரியர்கள்க்கு இந்தப்படம் பிடிக்கறது சிரமம் தான்..

 ஈரோடு வி எஸ் பி ல இந்தப்படம் பார்த்தேன்.

அந்த காலம், இந்த காலம்! கேலிச் சித்திரங்கள்

1. அந்த காலம், இந்த காலம்! கேலிச் சித்திரம்- புலவர் தருமி



2.
3.
pic.twitter.com/rIeyePcN


4.
அந்த காலம், இந்த காலம்! கேலிச் சித்திரம் 4 
5.



pic.twitter.com/Yvccnm8B




6.

Friday, June 08, 2012

கிருஷ்ணவேணி பஞ்சாலை - சினிமா விமர்சனம்

http://images.behindwoods.com/photo-galleries-q1-09/tamil-photo-gallery/krishnaveni-panchalai/wmarks/krishnaveni-panchalai13.jpg
படத்தோட டைரக்டர் கொங்கு மண்டலம்.. நம்ம ஏரியா -கோவைக்காரர்.. அவருக்கு வாழ்த்துகள்.. ரொம்ப செலவில்லாம மினிமம் பட்ஜெட்ல ஒரு தரமான படம் தர முயற்சித்ததற்கு....

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுக்கா ஈங்கூர் என்ற கிராமத்தில் இருந்த சுப்பாத்தா ஸ்பின்னிங்க் மில்ல நடந்த சில நிர்வாகப்பிரச்சனைகள், போனஸ் பிரச்சனைகள், மில் மூடப்பட்டது, முதலாளி வர்க்கத்தின்  ஈகோ இவை தான் கதைக்களன்.. ஆனா படத்துல உடுமலைப்பேட்டைல நடந்த மாதிரி காட்டறாங்க.. 

 கதையை கேட்ட புரொடியூசர் ரொம்ப ட்ரையா (DRY)  இருக்கே..ன்னு யோசிச்சிருக்கனும்.. அதனால திருப்பூர் மாவட்டம் மண்ணறை ( ஊத்துக்குளி ரோடு ) கிராமத்தில் உள்ள பிரைட் பிராசசர்ஸ் டையிங்க் கம்ப்பெனியில் நடந்த ஒரு லவ் ஜோடி, அவங்க அக்காவின் நிறைவேறாத காதல் இதை எல்லாம் கிளைக்கதையா வருது.

மில்லுல ஒர்க் பண்ற ஹீரோவும், ஹீரோயினும் லவர்ஸ்.. ஆனா அந்த கிராமத்துல ஜாதிப்பிரச்சனை அஜீத் தூக்கி அதாவது தலை . தூக்கி ஆடுது.. ஹீரோயினோட அக்கா லவ் மேரேஜ் பண்ணிக்கறா.. 4 மாசம் தனியா வாழ்றா.. அப்புறம்  அம்மா வீட்டுக்கு 3 மாச கர்ப்பத்தோட மாப்பிள்ளையையும் கூட்டிட்டு வர்றா.. அம்மாக்காரியே விஷம் வெச்சு கொன்னுடறா.. இது படம் பார்த்த லாலி பாப் சாப்பிடற குழந்தைக்குக்கூடத்தெரியுது, ஆனா வேற யாருக்கும் தெரியலை.. இடை வேளை.. ( படம் போட்டு 48 நிமிஷங்கள்லயே இடைவேளை)

ஹீரோயின் லவ் மேட்டர் தெரியுது.. அம்மாக்காரி அடிக்கறா.. மில்லுல வேலை செய்யற சூப்பர் வைசர் ஹீரோயின் வீட்டுக்கு தன் அம்மாவோட வந்து பொண்ணு கேட்குறான், இவங்க தர்லை.. உடனே அவன் விஷம் குடிக்கற மாதிரி அவங்க வீட்டுக்கு முன்னால ஆக்ட் குடுக்கறான்.. அதை பார்த்து பயந்து ஹீரோயினோட தாய் மாமன் ராத்திரியோட ராத்திரியா வீட்டை காலி பண்ணப்பார்க்குறான்.. இந்த ஹீரோயினோட  அம்மா பேக்கு போல் விஷம் சாப்பிட்டு இறந்துடுது.. லவ் ஜோடிக சேருது இவ்ளவ் தான் கதை..


ஹீரோ ஹேமச்சந்திரன்  அழகா இருக்கார்.. நல்லா நடிக்கறார்.. காதல் காட்சிகளில் யதார்த்தம்.. பாடல் காட்சிகளில் உற்சாகம் .. இவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு.. 

 ஹீரோயின் நந்தனா..  ஆள் பார்த்தவுடன் தந்தனா பாட சொல்லும் அளவுக்கு எல்லாம் இல்லை.. கேரளா வனப்பு மட்டும் கொஞ்சம் பார்வையை தாழ்த்தும்போது தெரிகிறது ( அதாவது நம்ம பார்வையை ) குண்டு முகம்.. என்ன ஆச்சரியம்னா படம் பூரா இவரை கண்ணியமாக காட்டியதுதான்.. ஒரு இடத்துல கூட அவர் ஆடை விலகல..  அப்படியே அச்சு அசல் உடுமலைப்பேட்டை கிராமத்துப்பெண்ணை கண் முன் நிறுத்துகிறார்.. அவரை லிப்ஸ்டிக் கூட போட விடாமல் மிதமான  ஒப்பனையில் வலம் வர விட்டது இயக்குநர் சாமார்த்தியம்.. விழிகள், புருவங்கள் கூடுதல் கூட்டல் அதாங்க அடிஷனல் பிளஸ்

எம் எஸ் பாஸ்கர்  வந்தவரை ஓக்கே.. ஹீரோயின் அம்மாவாக நடித்தவர் அழுத்தமான நடிப்பு.. சபாஷ்.. படத்தில் காமெடிக்காட்சிகள் இல்லாதது ஒரு குறை.. 




http://chennaionline.com/images/gallery/2011/June/20110607034918/Krishnaveni-Panchalai-Movie-Photos-101.jpg

 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. படத்தோட ஓப்பனிங்க் ஷாட்ல  1957 ல , 1967 ல நடக்கிற மாதிரி சில காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கு .. அதுக்கான ஆர்ட் டைரக்‌ஷன் அற்புதம்.. அந்தக்கால தினமணி பேப்பர், தினத்தந்தி பேப்பர், சேர், கட்டில், இண்ட்டிரியர் டெக்ரேஷன் ஆஃப் த பங்களா  எல்லாம் அபாரம்


2.பிரமாதமான பாடல்கள் 4.. அனைத்தும் படமாக்கப்பட்ட விதம் கவிதை..ஆலைக்காரி பஞ்சாலைக்காரி,ஆத்தாடி ஒரு பறவை பறக்குதோ ,ரோஜா மலரே, உன் கண்கள் முன்னாலே என பாடல் வரிகள் - வைரமுத்து + தாமரை.. சபாஷ்


3. ஆத்தாடி ஒரு பறவை  பாடல் காட்சிகளில் நீர் நிலைகளில் பறவைகள்,தண்ணீர்ப்பாம்பு, என ஒளிப்பதிவு செம  செம


4. ஹீரோ ஹீரோயினுக்கு முத்தம் தரும் காட்சியில்  ஹீரோயின் சிலிர்க்கும் காட்சியில் அதே போல் சிலிர்க்கும் சேவல் ஷாட், கன்னுக்குட்டியின் குதூகலம் படமாக்கப்பட்ட விதம் அழகு.. 


5. படத்தில் வசனங்கள் ரொம்பவே ஷார்ப்  அண்ட் ஸ்வீட்.. தேவையான இடங்களில் மட்டுமே பாத்திரங்கள் பேசுகின்றன




http://chennai365.com/wp-content/uploads/movies/Krishnaveni-Panchalai/Krishnaveni-Panchalai-Stills-02.jpg

 இயக்குநரிடம் சில கேள்விகள், லாஜிக் மிஸ்டேக்ஸ் சுட்டிக்காட்டல்கள், திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1. பொதுவா பஞ்சாலைல வேலை செய்யறவங்க எப்பவும் முகம் எல்லாம் புழுதியா, பஞ்சு அடைச்சு அழுக்கா தான் இருப்பாங்க.. ஆனா படத்துல வர்ற ஹீரோயின் உட்பட எல்லா லேடிஸும் என்னமோ முதலிரவுக்கு போற முத்தழகி மாதிரி 4 முழம் மல்லிகைப்பூவோட கலக்கலா வர்றாங்க.. ஹீரோ மற்றும் ஆண் கேரக்டர்கள் எல்லாம் அப்போதான் கோயில்ல இருந்து வர்ற கோயில் காளை மாதிரி நெற்றியில் விபூதி , பவுடர் உடன் அழகா இருக்காங்க.. ஒரு பயலை கூட வேலை செஞ்சு களைச்ச மாதிரி காட்டலை.. ஆனா படம் கதைக்களன் பூரா பஞ்சாலை.. 


2. மில் டைம் 10 மணிக்கு.. ஒரு லேடி 10.35க்கு வர்றா, கேட்ல வாட்ச்மேன் ( செக்யூரிட்டி) என்னம்மா இவ்ளவ் லேட்டா வர்றே? 5 நிமிஷம் , 10 நிமிஷம்னா பரவாயில்லைன்னு சொல்றான்.. அதே லேடி உள்ளே போறப்ப சூப்பர்வைசர்  4 பேர் கிட்டே பொத்தாம் பொதுவா கேட்கறான்.. “ ஒரு நிமிஷம் லேட்டா வந்தாலும் லேட் லேட் தான்.. 4 பேர்  ஆளுக்கு ஒரு நிமிஷம்னா  4 நிமிஷம் புரொடக்‌ஷன் பாதிக்கப்படுதே? அப்டிங்கறான்


3. ஹீரோ தன் காதலியின் அக்கா மேரேஜை முன்னால நின்னு நடத்தி வைக்கறான், ஆனா ஹீரோயினுக்கு அது தெரியலை. எந்தக்காதலன் தன் காதலிக்கு தெரியாம  காதலியோட அக்காவுக்கு மேரேஜ் பண்ணி வைப்பான்.. என் கிட்டே கூட சொல்லாம அப்படி என்ன என் அக்கா கூட உனக்கு நட்பு? அப்டினு அவ கேட்கமாட்டாளா?


4. அக்காவோட துணிகள் எனக்கு பத்தலை, எல்லாத்தையும் அவ கிட்டே கொடுக்கவா? அப்டின்னு ஹீரோயின் கேட்டதும் அம்மாக்காரி அவ டிரஸ்சை எல்லாம் எரிக்கறா.. ஏன் எரிக்கனும்? ஜாக்கெட் தான் பத்தாது.. ஏன்னா ஹீரோயின் ரெட்டை நாடி , அவங்கக்கா ஒற்றை நாடி, ஆனா புடவைக்கு என்ன சைஸ் வேண்டிக்கிடக்கு?அப்படியே கோபமா இருந்தாலும் ஏதாவது அநாதைக்கோ, பிச்சைக்காரிக்கோ கொடுக்கலாமே? ஏன் எரிக்கனும்?

5. மில்லுல வேலை செய்யற தொழிலாளர்கள் எண்ணிக்கை 300 -ன்னு ஒரு இடத்துல டயலாக் வருது.. ஆனா  ஒரு சீன்ல மில் ஏற்பாடு செய்யும் டூர்ல வேன்ல 16 பேர் மட்டும் தான் வர்றாங்க.. மீதி 284 பேருக்கும் உடம்பு சரி இல்லையா? போனஸ் பிரச்சனை பற்றி பேச்சு வரும்போது  கூட்டத்துல  8 வரிசைல சேர்  போட்டிருக்கு ,8 *  8 = 64 பேர் தான் இருக்காங்க.. மில்லுல உள்ளே காட்டறப்போ எப்பவும் 4 பேர் தான் காட்டறாங்க.. என்னதான் லோ பட்ஜெட் படம்னாலும் மில்லுல லேபர்ஸ் வேலை செய்யறதை கொஞ்சம் பிரம்மாண்டமா காட்ட வேணாமா? க்ளைமாக்ஸ்ல செட்டில்மெண்ட் பேசறப்பக்கூட  100 பேரைத்தான் காட்டறீங்க.. 


6. ஹீரோயினை பெண் கேட்க ஒரு கூட்டம் வருது.. ஹீரோயினோட அம்மாவும்,  தாய்மாமாவும் பாய்ல உக்காந்திருக்காங்க.. ஆனா பெண் கேட்டு வந்தவங்க வெறும் தரைல உக்காந்திருக்காங்க.. இதுதான் தமிழர் பண்பாடா? அவங்க ஏழையாவே இருந்தாலும் அவங்க தரைல உக்காந்து வந்த விருந்தாளிங்களை  பாய்ல உக்கார வைப்பாங்க.. 

7.  மில் ஓனர் ரொம்ப நல்லவர், ஆனா லேபர்ஸை பேச்சு வார்த்தைக்கு ஏன் கூப்பிடவே இல்லை.. ?


8 .. ஈங்கூர் சுப்பாத்தா மில்லுல 18% போனஸ் குடுத்தாங்க.. கோவை லக்‌ஷ்மி மில்லுல 24% போனஸ் குடுத்தாங்க.. ஆனா இந்தக்கதைல  25 % போனஸ் கொடுப்பதாவும் லேபர்ஸ் 28 % ஒரு சாராரும், இன்னொரு சாரார் 30 % போனஸ் கேட்பதாவும் வசனம் வருது.. மில் ஓனர் 45% தர ஓக்கே சொல்றார்... தமிழ் நாட்ல எந்த மில்லுல போனஸ் 45% தர்றாங்க?உயர்ந்த பட்சமே 28% தான்


9. அப்படிப்பட்ட நல்ல மில் ஓனர் லாஸ் ஆனதும் லேபர்ஸ் எல்லாம் வீம்பா இருப்பது நம்பற மாதிரி இல்லை. போன வருஷம் மாதிரியே 45% போனஸ் வேணும்னு கேட்பதும் சரி அல்ல.. நம்பகத்தன்மை இல்லை.. 

10.. லேடீஸ் லோ கலெக்டரா ( பொம்பளை பொறுக்கி ) வர்ற வில்லன் ஹீரோயின் கிட்டே கல்யாணம் வரை போறதெல்லாம் ஓவர்... அவன் என்ன பெண்களையே பார்க்காதவனா?


11.. படத்தோட நீளம் ரொம்பக்குறைவு.. 113 நிமிஷம் தான் ஓடுது.. ஹீரோயின் அக்கா சாகறப்ப நமக்கு பரிதாபமே வர்லை.. ஏன்னா அவங்க காதல் போர்ஷன் காட்டவே இல்லை.. ஹீரோயின் அக்கா செத்ததும் அக்கா வீட்டுக்காரர் அப்பவே செத்திருக்கனும்.. என்னமோ தப்பிச்சு ஓடற மாதிரி காட்டி அப்புறம் அவர் தற்கொலை செய்வதும் நம்பற மாதிரி இல்லை.. 

12. படத்தின் முக்கிய விஷயம் ஹீரோயின் அம்மா ஏன் அவ்வளவு ஆங்காரமா பெத்த பெண்ணையே விஷம் வெச்சுக்கொல்றாங்க? என்பதை சரியா காட்டலை.. 


13. ஓப்பனிங்க் ஷாட்ல  கைல கன் இருந்தும் அதுல சுட்டு தற்கொலை செய்யாம மில் ஓனர் கார்ல பெட்ரோல் ஊற்றி அதுக்குள்ள உக்காந்து தீ பற்ற வைத்து சாவது நம்பவே முடியலை.. தீப்பற்றிட்டா தற்கொலை செய்யற எண்ணன் உள்ள  ஆள் கூட எரிச்சல், வலி தாங்காம கத்துவான், அங்கேயும் இங்கேயும் ஓடுவான்.. அவர் பொம்மையா இருக்கார் 


http://images.behindwoods.com/photo-galleries-q1-09/tamil-photo-gallery/krishnaveni-panchalai/wmarks/krishnaveni-panchalai01.jpg

 மனம் கவர்ந்த வசனங்கள்


1.  நம்ம ஜாதிக்காரங்களா இருந்தா விசுவசமா வேலை பார்ப்பாங்க.. கூடவே இருப்பாங்க.. 


 நோ நோ நல்லா  வேலை பார்க்கறவங்க, நல்லா வேலை பார்க்காதவங்க என ரெண்டே வகைதான்


2. கவர்மென்ட் மாப்ளைன்னா ஊர் ஊரா போகனும்.. ஆனா மில் மாப்ளைன்னா நிரந்தரம் , அதனால மில் மாப்ளையே பாரு


3. ஏய்.. எதையாவது விட்டுட்டுப்போய்ட்டியா?

 ம்

 இதுவா பாரு


4. ட்ரிங்க் ட்ரிங்க் ( சைக்கிள் பெல்)

என்ன எதையாவ்து விட்டுட்டுப்போறியா?

 ம் ம் ம் 


5. பூ வாங்கித்தர்றேன்.. உனக்கு என்ன பூ பிடிக்கும்?

 ஏன்? எனக்கு என்ன பூ பிடிக்கும்னு உனக்குத்தெரியாதா?


6. ஏய்.. நான் உனக்குக்குடுத்தேனே, அதை திருப்பிக்குடு.. 

 வெச்சுக்கோன்னு சொல்லித்தானே கொடுத்தே.. 


7. ஒரு வருஷத்துல இந்த லேபர்ஸ்  மிச்சப்படுத்தறதே தீபாவளி போனஸ் தான்


8. லைட் இருக்கு.. ஆனா அதை போடாம ஏன் லாந்தர் விளக்குல படிக்கறே?

 நான் படிச்சுட்டு இருக்கறது மாக்ஸிம் கார்க்கி புக், அப்படித்தான் படிக்கனும்


9. கண்டவங்களையும் சொந்தக்காரங்கன்னு சொல்லிட்டு திரியறதுக்கு அவ செத்துப்போனதே , எவ்வளவோ மேல்


10. எத்தனை நாளைக்கு லேபர்ஸ் ஓனரை தேடி வர்றது? இப்போ எங்க டர்ன்.. அவங்க எங்களைத்தேடி வரட்டுமே? 


11. அடச்சே.. காரியத்தையே கெடுத்துட்டானே?


ஏன் கோவிச்சுட்டு போறான்?

 ம்.. இரு கேட்டு சொல்றேன். 

12.  சார்.. உங்க கிட்டே இருக்கற தாராள குணத்தையும், தொழிலையும் போட்டுக்குழப்பிக்காதீங்க


13. சிக்கலான நேரங்களில் எடுக்கப்படும் நேர்மையான முடிவுகளில் கூட சில சமயங்களில் தவறுகள் நேர்ந்து விடுகின்றன


14. ஜாதி விட்டு ஜாதி மாறி லவ் மேரேஜ் பண்றவங்களுக்கு நகரம் தான் பெஸ்ட்.. 




http://moviegalleri.net/wp-content/gallery/tamil-actress-nandhana-stills/krishnaveni_panjalai_actress_nandhana_stills_5794.jpg


எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 39



எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே 

 சி..பி கமெண்ட் - காதலர்கள், மில் தொழிலாளிகள் பார்க்கலாம்.. பெண்கள் பார்க்கும் விதமாய் கண்ணியமான காட்சி அமைப்புகள்.. இந்தப்படத்தின் ப்ரொமோவில் ஓவராய் பில்டப் கொடுத்தது தேவையற்றது

 ஈரோடு ராயல்-இல் படம் பார்த்தேன்


http://images.behindwoods.com/photo-galleries-q1-09/tamil-photo-gallery/krishnaveni-panchalai/wmarks/krishnaveni-panchalai19.jpg

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (8.6..2012 ) 6 படங்கள் முன்னோட்ட பார்வை

http://icdn.raaga.com/Catalog/CD/T/T0002478.jpg 

1.பொற்கொடி 10-ம் வகுப்பு  -புதுமுகங்கள் நடிப்பில், கிராமத்து பின்னணியில் `பொற்கொடி 10-ம் வகுப்பு' என்ற பெயரில், ஒரு புதிய படம் உருவாகி வருகிறது. அன்புக்காக ஏங்கும் உண்மையான உள்ளங்களின் உணர்வுகளை கதைக்களமாக கொண்ட படம் இது.


 பிரவீன்-பிருந்தா அறிமுக ஜோடியுடன் பாலாசிங், ராஜஸ்ரீ, ஜெயசூரியகாந்த், புதுமுகம் அங்கமுத்து ஆகியோர் நடிக்கிறார்கள். ஸ்ரீ முருகன் ஒளிப்பதிவு செய்ய, ஓவியன் இசையமைக்க, முத்து விஜயன், யுகபாரதி ஆகிய இருவரும் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். 


நியூ டீம் ஒர்க் புரொடக்ஷன்ஸ் சார்பில் எல்.இ.பிரபு தயாரிக்க, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் பழ.சுரேஷ். படப்பிடிப்பு சென்னை, கொடைக்கானல், ஆந்திர எல்லையான கனகம்மா சத்திரம், காவேரிராசபுரம், ஸ்ரீஹரிபுரம், சின்ன ஜம்பாட ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. 

. அன்பிற்காக ஏங்கும் உண்மையான உள்ளங்களின் உணர்வுகளையே கதைக்களமாகக் கொண்டு, மண் மணம் மாறாமல், முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் பழ.சுரேஷ். இதில் புதுமுகம் பிரவீன் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக பிருந்தா அறிமுகமாகிறார். முக்கிய வேடத்தில் பாலா சிங், "கருத்தம்மா" ராஜஸ்ரீ நடிக்கிறார்கள். இவர்களோடு ஜெயசூரியகாந்த், புதுமுகம் அங்கமுத்து ஆகியோர் நடிக்கிறார்கள். 


முத்துவிஜயன், யுகபாரதி வரிகளுக்கு ஓவியன் இசையமைக்கிறார். ஸ்ரீ முருகன் ஒளிப்பதிவு செய்கிறார். திரைக்கதை-வசனம்-இயக்கம்: பழ.சுரேஷ். யூ டீம் ஒர்க் புரொடக்ஷன்ஸ் சார்பில் எல்.இ.பிரபு தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னை, கொடைக்கானல், ஆந்திர எல்லையான கனகம்மா சத்திரம், காவேரி ராசபுரம், ஸ்ரீ ஹரிபுரம், சின்ன ஜம்பாட ஆகிய இடங்களில் நடைபெற்றது.ஈரோடு அண்ணாவில் ரிலீஸ்

http://mimg.sulekha.com/tamil/krishnaveni-panjalai/stills/krishnaveni-panjalai-stills-0215.jpg


2. கிருஷ்ணவேணி பஞ்சாலை தமிழ் சினிமாவைப் பொருத்தவரை இது ஒரு வித்தியாசமான நிகழ்ச்சிதான். பொதுவாக எந்த சினிமா விழாவிலும் பார்க்க முடியாத மனிதரான நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம், கிருஷ்ணவேணி பஞ்சாலை படத்தின் இசையை வெளியிட்டு வாழ்த்தியுள்ளார்.

ஸ்டுடியோ அல்லது திரையரங்கில் விழா வைத்தால் அப்துல் கலாம் வருவது சந்தேகம் என்பதால், நேராக அவர் தங்கியிருக்கும் விருந்தினர் இல்லத்துக்கே போய், அவர் கையால் வெளியிட வைத்து வாழ்த்துப் பெற்றனர் படக்குழுவினர்.

யதார்த்தமான கதைக் களத்தில் உருவாகியுள்ள படம் கிருஷ்ணவேணி பஞ்சாலை. வி தனபால் இயக்கியுள்ளார். என் ஆர் ரகுநந்தன் இசையமைத்துள்ளார். வைரமுத்து, தாமரை பாடல்களை எழுதியுள்ளனர். மின்வெளி மீடியா தயாரித்துள்ளது.

படத்தின் பாடல்களை இயக்குநர் மகேந்திரன் வெளியிட, முதல் பிரதியை அப்துல் கலாம் பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்வில் இயக்குநர் தனபால், வி பொன்ராஜ், இசையமைப்பாளர் ரகுநந்தன், எடிட்டர் காசி விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சினிமா இசைத் தகட்டை அப்துல் கலாம் வெளியிடுவது இதுவே முதல்முறை!ஈரோடு ராயலில் ரிலீஸ்


http://www.hdwallpapers.in/walls/2012_prometheus-HD.jpg


3.  "Prometheus"  -A team of scientists journey through the universe on the spaceship "Prometheus" on a voyage to investigate Alien life forms. The team of scientists becomes stranded on an Alien world, and as they struggle to survive it becomes clear that the horrors they experience are not just a threat to themselves, but to all of mankind.

I have to give this movie a very low score because it was just bland. I also agree with stevelovell, the characters were flawed and really given very little room for development.

There were a lot of moments when I went WTF? Really? Where are we going with this? For instance, the character Meredith can be ignored. She didn't really serve any real purpose in the plot at all.

Don't take me wrong, the movie was still enjoyable. But I definitely would enjoy it more if it wasn't given all the attention and all the hype. It simply is a movie that doesn't deliver.

Overall, it's just not an exciting movie.ஈரோடு வி எஸ் பி யில் ரிலீஸ்

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgUaNE4Aknk8ELFPjKD4WFTcH7Lcz0B25uZOnbMJTaMy75BjL6htFsdSvHz2o126FbPwl-nN5vIWSlDF8BO7Pc8CDsCjcbPOF-9L5uPPvIddk4dMhvh-zP26TPML-_4R7dxc31q_P49UjA6/s320/Thoothuvan+Movie+Posters.jpg
 4. தூதுவன் -போஸ்டர் டிசைனில் ஆரம்பித்து தயாரிப்பில் இருக்கும்போதே சில படங்கள் கவனிக்க வைக்கும். அப்படியொரு படம்தான் ‘தூதுவன்’. அறிமுக இயக்குநர் மோகன்ரூப் இயக்க, சங்கர்ராமன் தயாரிக்கும் இப்படம், பாலியல் இச்சைக்காக கடத்தி விற்கப்படும் சிறுமிகள் மற்றும் சிறுவர்களை மீட்டு, அவர்களின் புதிய வாழ்வுக்காக போராடும் ஒரு இளைஞனின் கதையாம். “இந்தப் படம் வெளியாகும் போது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்துவது உறுதி” என்கிறார் இயக்குநர் மோகன் ரூப்.ஈரோடு ஸ்டாரில் ரிலீஸ்

http://www.freedownloadpond.com/wp-content/uploads/2010/09/APPU-AND-PAPPU-KANNADA-2010.jpg


5. அப்பு பப்பு  -  (கன்னடம்)In the times of the Animal Welfare Board, showing animals on screen has become a nightmare for most film makers. So it is not only surprising but also refreshing to see a real orangutan playing an important part in a Kannada film. Appu and Pappu take the children’s film and those involving animals to another level.


There is nothing extraordinary about the story itself. It is strewn together to maximize the laugh factor. There are actually four different tracks that are entwined. Appu’s (Senhith) parents Deepa and Ramesh (Rekha and Abbas) are separated. Appu wants them together and gives it a try with the help of his grandfather. There is a thief who uses an orangutan (Judi) to steal in a five-star hotel. Raju Talikote and his gang of smugglers try to get back a digital storage device with some defence secret that have placed in Appu’s toy car.


All these tracks come together in a five star hotel in Cambodia where Appu and his mother visit. Abbas works there while Komal and the orangutan operate their misdeeds there. Raju Talikote’s gang follows them there. Appu saves Pappu’s life and the orangutan changes his thieving ways. Appu and Pappu however vanish and suddenly everyone involved begin to work overtime to find them.ஈரோடு ஸ்ரீகிருஷ்ணாவில் ரிலீஸ்

http://www.zorsebol.com/wp-content/uploads/2012/04/Shanghai-first-look.jpg


6.Shanghai  (HINDI)  - Whether it be Khosla ka Ghosla, Oye lucky lucky Oye or Love Sex aur Dhoka, director Dibakar Banerjee has wowed us with his ability to tell stories with his unique yet engaging style. This time, he comes with a political thriller which has been much awaited. Does it match up to our expectations?


A valiant & hard hitting effort this one, its a well made film backed by exemplary performances but just falls short somewhere.

Set in small-town India, the local government wants to redevelop the area under a project titled IBP (International Business Park). An esteemed social activist (Prosenjit Chatterjee) is protesting for the rights the locals but is mowed down by the political party in question. What the next 115 minutes deals with is Shalini Sahays(Kalki K) fight for justice. A student of his, she seeks the help of local videographer/porn filmmaker Joginder(Emraan Hashmi) & restrained yet no-nonsense IAS officer TA Krishnan(Abhay Deol) to book those at fault.



While its true that scores of Bollywood films have tackled corruption in the system, none have done so in a completely deglamorized avatar. The beauty of the film lies in the simplicity of the storytelling which is engaging yet very real.



The music by Vishal & Shekhar is strictly ok but the background score by Mikey McLeary is absolutely fantastic.

When it comes to performances, all of them shine. The star of this show, pitching in with a stellar effort is Emraan Hashmi. He truly shows his growth as an actor. Kalki too is fiery in her disturbing role & one particular scene where she beats up a truck driver is one of the best in the film. Abhay stays in character and comes into his own in the last 20 minutes of the film.

While it has plenty of plus points, it doesnt manage to land the knockout punch as parts of the film do drop. There is a lot that happens in these 2 hours and sometimes you just need it to slowdown to build the moments.




Nevertheless, Dibakar Banerjee shines yet again as he crafts a film thats haunting in a strange way. I would surely recommend all to watch this once & share your views on it. Not filmi, only real, Shanghai is surely one of the better films around.ஈரோடு ஸ்ரீநிவாசாவில் ரிலீஸ்


 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhB2q37UWI0V2A7HrqHBpYxk7sLtkG0OYYY-Dk-7u-GVeh6IdcBDfMWKlpPq0Sdz8W4xojz2MqSS4bHdteb0t1RHth8g0Fv4AX3czsa8kJ7v9dTI1mDGH6gvUJsZT6WBGBk5asV0By8PaI5/s1600/shanghai+movie+wallpapers+3.jpg

பெண் உடலில் எனக்கு பிடித்த பாகம் எது? பிடிக்காத பாகம் எது? ( ட்வீட்ஸ் & ஜோக்ஸ்)

1.மணிரத்னத்தின் பூக்கடை டைட்டிலுக்கு சிக்கல்,ஜகா வாங்கினார் # இது எல்லாம் ஒரு பிரச்சனையா? மலர் நிலையம்னு வைங்க பாஸ்


--------------------------------------

2. பெண்கள் நாட்டின் கண்கள், கவிதை KNOT க்கு அடித்தளம்  கொடுக்கும் நாண்கள்

------------------------------------

3. குளிக்கறப்ப சோப் யூஸ் பண்றதில்லை, கடலை மாவுதான் - ஹன்சிகா மோத்வானி # நாங்க நம்ப மாட்டோம், ஏதாவது ஆதாரம் இருக்கா?வீடியோ லிங்க் ப்ளீஸ்

-----------------------------------

4.ஹோசன்னா பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்தது வருத்தம் அளிக்கிறது எ- ஏ.ஆர்.ரஹ்மான் # ஹோ”சன்”னா எதிர்ப்பாங்க, ஹோ”ஜெயா டி வி”ன்னு மாற்றிடுங்க

------------------------------------

5. அமெரிக்காவின் ஓப்ரா வின்ப்ரேவுக்கு சமீராரெட்டி புடவை பரிசு # மேடம், உங்களுக்கும் சேலை கட்டத்தெரியாது, அவருக்கும் தெரியாது, பொன்னாடையோ?

----------------------------------------

6. லேடி -சுவாமி! கடவுள் இருக்காரா? இல்லையா?

நித்யானந்தா - வாசல்லியே நின்னு விசாரிச்சா எப்டி? ஆசிரமத்துக்குள்ளே வா பெண்ணே!

--------------------------------

7. சார், நீங்க ஏன் எப்பவும் பூப்போட்ட ( பூ டிசைன்) சட்டையே போடறீங்க?

ராமராஜன் & சாரு - எனக்கு மனசு பூ மாதிரின்னு பூவைகளுக்கு உணர்த்த


---------------------------------------

8. சுவாமி!  நீ இருக்கியா? இல்லையா?ன்னு விவாதம் நடக்குது, நீ பதில் சொல்லு.


கடவுள் - ஸாரி, எனக்கு பொழப்பை பார்க்கனும்,நோ டைம்


-----------------------------------------

9. எனக்கு இருக்கற அறிவுக்கும் , அழகுக்கும் நான் சாரு நிவேதிதா ஆக வேண்டியவன்னு இனி சொல்வாங்களோ?# சாருவின் இயற்பெயர் அறிவழகன்


----------------------------------

10. தலைவர் ஏன் கடுப்புல இருக்காரு?


பொன்னாடை வேண்டாம் என்று சொன்ன பன்னாடையே! வருக!னு கட் அவுட் வெச்சிருக்காங்களாம்

-------------------------------------

11. சில பெண்களால் தான் இங்கு பாதி ஆண்கள் வஞ்ச புகழ்ச்சி அணி பற்றி தெரியாமலேயே இருக்கிறார்கள் # வஞ்சிப்புகழ்ச்சி

--------------------------------

12. கோமாளி செல்வா - எதையும் நான் முன்கூட்டியே செஞ்சுடுவேன்

.. ஏமாளி செல்வி - அதுக்காக 2013 டைரியை இப்போவே எழுதிட்டா எப்படி?

-----------------------------

13. இண்டர்வியூவில் ஆஃபீசர் - நாங்க கேட்கற கேள்விகளுக்கு நீங்க பதிலே சொல்லலையே?

சவுமி - சாரி சார், எனக்கு எல்லார் கிட்டயும் கேள்வி கேட்டுத்தான் பழக்கம்

-----------------------------------

14. மகாராணி! அரண்மனை வாயிற்காவலன் உங்களுக்கு எப்படி பழக்கம்?


விடும் அமைச்சரே! ”காவலன் ”  “ நண்பன்” ஆவது காலத்தின் COTட்டாயம்

----------------------------------

15. நாற்காலி ஆசை இல்லாதவராமே தலைவரு?

அவருக்கு ராசி நெம்பர் 3, அதனால முக்காலில தான் உக்காரும் அந்த தக்காளி

-------------------------------

16. மை பேபி - டாடி, நீ லூஸா?

ஹி ஹி உனக்கு எப்படித்தெரியும்?

தாத்தா கிட்டே அம்மா சொல்லிட்டு இருந்தாங்க

----------------------------------

17. உன் உடலில் எனக்கு பிடித்த பாகம் உன் கண்கள்: பிடிக்காத பாகம் அதை அடிக்கடி மூடிவிடும் உன் இமைகள்


--------------------------------

18.  டாக்டர் பட்டம் கொடுத்ததை தலைவர் ஏன் வேண்டாம்னு சொல்லிட்டாரு?

அவர் மேல ஏகப்பட்ட கேஸ் இருக்கு.. வக்கீல் பட்டம் குடுத்தாலாவது யூஸ் ஆகும்னு பார்க்கறாரு..

--------------------------------------

19. திருடிய மனதை திருப்பிக்கொடு என்றாள். வாங்கியதை திருப்பித்தரும் பழக்கம் எனக்கு இல்லை,உனக்காக முத்தத்தை மட்டும் திருப்பித்தரவா? என்றேன்

---------------------------------

20. வீடு புகுந்து திருடினியா?

நோ யுவர் ஆனர், நான் திருடுனதே வீட்டைத்தான் ஹி ஹி


---------------------------------

Thursday, June 07, 2012

செஸ்’வநாதன் ஆனந்த் பேட்டி @ விகடன்

'செஸ்’வநாதன் ஆனந்த்!


மாஸ்கோ போட்டியில் சாம்பியன்ஷிப் வென்று, ஐந்தாவது முறை உலக சாம்பியன் ஆகியிருக்கிறார் ஆனந்த். ''ஆனந்தின் ஸ்டைல் மலை ஏறிவிட்டது. இந்த முறை கெல்ஃபாண்ட்தான் சாம்பியன்'' எனப் போட்டி தொடங்கும் முன் ஆனந்தை ஏகத்துக்கும் சீண்டின ரஷ்ய ஊடகங்கள். முன்னாள் சாம்பியன் காஸ்பரோவோ, ''ஆனந்திடம் வெற்றிக்கான ஊக்கம் இல்லை'' என கமென்ட் அடித்தார். அத்தனை விமர்சனங்களுக்கும் தனது வெற்றியால் பதில் சொன்னார் ஆனந்த். 


''இந்த வெற்றி எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். கடைசி நிமிஷம் வரை ரெண்டு பேருக்கும் செம சண்டை. பயங்கர டென்ஷன். ரெண்டு பேருக்குமே ஜெயிக்கிறதுக்கான சான்ஸ் ரொம்ப ரொம்பக் கம்மி. டை பிரேக்கர் வரை இழுத்துட்டுப் போய்... கடைசி நாள் அஞ்சு மணி நேரம் தொடர்ந்து விளையாடி இருக்கோம். மறக்க முடியாத வெற்றி!'' - ரொம்பவே ரிலாக்ஸ்டாகச் சிரிக்கிறார் ஆனந்த்.


''இந்த வெற்றி யாருக்குச் சமர்ப்பணம்?''


''என் பையன் அகிலுக்கு. அவருக்கு ஒரு வயசுதான். 'அப்பா சாம்பியன் ஆயிட்டேன், உனக்கு டெடிகேட் பண்றேன்’னு இப்போ சொன்னாலும் அவருக்குப் புரியாது. ஆனா, அகில் பிறந்த பிறகு கிடைச்ச இந்த சாம்பியன் பட்டம் ரொம்பத் திருப்தி கொடுத்திருக்கு.''


''சாம்பியன்ஷிப் போட்டிக்கு எப்படித் தயாரானீர்கள்?''


''கிட்டத்தட்ட நாலு மாசம் பிராக்டீஸ் மட்டும்தான்! கெல்ஃபாண்ட் ரொம்பவும் டேலன்டட் ப்ளேயர். அவரோட மூவ்களைக் கணிப்பது ரொம்ப சிரமம். ஹான்ஸ் ஷ்மிட், நீல்சன், ரஸ்டம், சௌரவ் சேகர் கங்குலினு என் டீம் நபர்களோட கடந்த நாலு மாசமும் விளையாடிக்கிட்டே இருந்தேன். கஷ்டமான மூவ்களைச் சமாளிக்க மட்டுமே ஸ்பெஷல் பயிற்சி எடுத்துட்டு, மாஸ்கோ போனேன். முதல் ஆறு ஆட்டங்களில் கெல்ஃபாண்டைச் சமாளிச்சு டிரா பண்றதே பெரிய போராட்டம் ஆகிருச்சு. ஏழாவது கேம்ல அவர் ஜெயிச்சுட்டார். ஆனா, நான் அந்தப் பதற்றத்தை மனசுல ஏத்திக் கலை. 'இன்னும் அஞ்சு கேம் இருக்கு. எப்படியும் ஜெயிச்சுடலாம்’னு நம்பிக்கையா  இருந்தேன். அடுத்த கேம்லயே சின்ன லூப் கிடைச்சது. அன்னைக்கு போட்டி முடிஞ்சு ஹோட்டலுக்கு வந்த பிறகும் விளையாடிட்டே இருந்தேன். கெல்ஃபாண்டும் மறுநாள் என்னைப் போலவே ரொம்பவும் தயாரா வந்தார். என்னோட மூவ்களுக்கு அவரோட எதிர் மூவ்கள் அதிரடியா இருந்துச்சு. அப்போ எந்த நிலைமையிலும் அவசரப்படாம விளையாடியதே இந்த வெற்றிக்குக் காரணம்.''



''ஐந்தாவது முறை உலக சாம்பியன். ஜெயிச்ச அந்த நிமிஷம் உங்க மனசுக்குள் என்ன தோணுச்சு?''


''உண்மையைச் சொல்லணும்னா, எனக்கு அப்போ சந்தோஷப்படக்கூட சக்தி இல்லை. 'அப்பாடா! நல்லபடியா முடிஞ்சது’னு பெருமூச்சுதான் விட்டேன். மனசு ரிலாக்ஸ் ஆச்சு.''


''செஸ் உலகில் உச்சத்தைத் தொட்டுட்டீங்க. இனிமே உங்க இலக்கு என்ன?'

'
''எனக்கு இலக்கு என எதுவுமே இல்லை. என் வேலை செஸ் விளையாடுறது. விளை ய£டிக்கிட்டே இருப்பேன்!''


''நீங்க செஸ் விளையாட ஆரம்பிச்சப்போ, இந்தியாவில் இந்த விளையாட்டைப் பத்தித் தெரிஞ்சவங்க ரொம்பக் குறைவு. இப்போ ரொம்ப சின்ன வயசுலயே கிராண்ட் மாஸ்டர் பட்டம் ஜெயிக்கிறாங்க. அடுத்த ஆனந்தைக் கண்டுபிடிச்சுட்டீங்களா?''


''ரொம்ப சந்தோஷமா இருக்கு. எட்டு வயசுலயே அற்புதமா செஸ் விளையாடுறாங்க. அவங்க மூவ் எல்லாம் யோசிக்கவே முடியாதபடி இருக்கு. இதில் ஒரு ஆனந்தைக் கண்டுபிடிக்கிறது கஷ்டம். பார்த்துக்கிட்டே இருங்க. பல ஆயிரம் ஆனந்துகள் வருவாங்க.''


''செஸ் கூட்டமைப்பு உங்களுக்கு பாரத ரத்னா விருது தரணும்னு கோரிக்கை வெச்சிருக்கே?''



''பத்மஸ்ரீ, பத்மவிபூஷண், ராஜீவ் காந்தி கேல் ரத்னானு இந்திய அரசின் மிக உயரிய விருதுகளை வாங்கியிருக்கிறேன். பாரத ரத்னாவும் கிடைச்சா சந்தோஷம்தான்!''


நன்றி - விகடன்