Showing posts with label ட்ரெய்லர். Show all posts
Showing posts with label ட்ரெய்லர். Show all posts

Tuesday, September 10, 2013

கோச்சடையான் ட்ரெய்லர் ரசிகர்களை ஏமாற்றியதன் பின்னணி

 
 
சுல்தான் தி வோரியர் அனிமேஷன் ட்ரெயிலர் வெளியாகி ஐந்து ஆண்டுகள் கழித்து வெளியாகியிருக்கிறது கோச்சடையான் ட்ரெயிலர். ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் வெளியாவதால் சிஜியில் முன்னேற்றம் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் ட்ரெயிலரை பார்த்தால் ஏகப்பட்ட தில்லுமுல்லுகள் நடந்திருக்கும்போல இருக்கு. அதை பற்றி கொஞ்சம் டீப்பா நோண்டுவோம்

பெர்ஃபோமன்ஸ் கப்சரிங் என்றால் என்ன ?

அனிமேஷன் காட்சி ஒன்றில் பாத்திரம் ஒன்றை அசைவிப்பதற்கு 2 வழிகளை பின்பற்றுவார்கள். ஒன்று Key frame அனிமேஷன். அதாவது பாத்திரத்தின் ஒவ்வொரு அசைவையும் Frame by Frame ஆக கணினி மூலமாகவே உள்ளிடுவார்கள். சாதாரணமாக திரைப்படங்களில் 24 frame per second என்ற வகையில் ஒரு செக்கன் காட்சிக்கு 24 key frame வழங்கப்படும். மிகவும் கடினமான பணி இது. இரண்டாவது முறை மோஷன் கப்சரிங். மோஷன் கப்சரிங் என்பது நுண்னிய சென்சார்களை ஒரு நடிகரின் உடலில் பொருத்தி நடிக்கவைத்து அவரது அசைவுகளை ஒளிப்புள்ளிகளாக கணினியில் பதிவுசெய்து, அதனை வடிவமைக்கப்பட்ட கிராபிக்ஸ் உருவத்திற்கு உள்ளிடுவதன் மூலம் அவ் உருவத்தினை அசையவைப்பது. ஹாலிவூட்டில் நெடுங்காலமாக இந்த முறைதான் உபயோகிக்கப்படுகிறது. நாம் அறிந்த ஸ்பைடர்மேன் 2, மேட்ரிக்ஸ், லோர்ட் ஒஃப் தி ரிங்க்ஸ், கிங்காங் படங்களில் இதே தொழில்நுட்பம்தான் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும். லோர்ட் ஒஃப் தி ரிங்க்ஸ் இன் கோலும் பாத்திரம், கிங்காங் எல்லாமே மிகத்துல்லியமான கிராபிக்ஸுடன் உயிரோட்டமாக நடமாடியதற்கு மோஷன் கப்சரிங் தொழில்நுட்பமே உதவிபுரிந்தது.

இது இலகுவான முறையாக இருந்தபோதும் இதன்மூலம் மிக துல்லியமாக ஒரு நடிகரின் அசைவுகளை பிரதியெடுக்க முடியாது. மோசன் கப்சரிங் மூலம் பதிவுசெய்யப்பட்ட நடிகரின் அசைவுகளை மேலும் துல்லியமாக்க keyframe மூலம் மேலும் மெருகூட்டப்படும். இதனால் அறிமுகப்படுத்தப்பட்டதே பெர்ஃபோமன்ஸ் கப்சரிங். இது ஒன்றும் புதிய தொழில்நுட்பம் அல்ல. மோஷன் கப்சரிங்கின் மேம்பட்ட வடிவமே. நடிகரின் அசைவுகளை துல்லியமாக பதிவுசெய்ய அதிக சென்சார்கள் பொருத்தப்பட்ட Lycra எனப்படும் ஆடையை நடிகருக்கு அணிவித்து நடிக்க வைப்பார்கள். இந்த பெர்ஃபோமன்ஸ் கப்சரிங் தொழில்நுட்பம்தான் கோச்சடையானில் உபயோகப்படுத்தப்பட்டதாக கூறியிருக்கிறார்கள். ஆனால் ட்ரெயிலரை பார்க்கும்போது பெர்ஃபோமன்ஸ் கப்சரிங் அல்ல, மோஷன் கப்சரிங் தொழில்நுட்பம் கூட பயன்படுத்தாமல் வெறும் Keyframe அனிமேஷன் முறையில் படம் உருவாக்கப்பட்டுள்ளதுபோன்றே தெரிகிறது. ஒவ்வொரு பாத்திரங்களின் ஒவ்வொரு அசைவிலும் அந்தளவுக்கு கார்டூன்தனம் தெரிகிறது.

விளம்பரத்திற்காக பெர்ஃபோமன்ஸ் கப்சரிங் பெயரை பயன்படுத்திவிட்டு படம் முழுவதும் keyframe அனிமேஷன் முறையில்தான் எடுத்தார்களா? அல்லது பெர்ஃபோமன்ஸ் கப்சரிங்கை பயன்படுத்த தெரியாமல் சொதப்பியிருக்கிறார்களா ? அவர்களுக்குத்தான் வெளிச்சம். கப்சரிங் முறை சொதப்பியது இருக்க, படத்தின் கிராபிக்ஸ் இன்னொரு சொதப்பல். ஐந்து வருடங்களுக்கு முன்னர் எப்படி இருந்ததோ கொஞ்சம்கூட முன்னேற்றம் இல்லாமல் அதேபோல்தான் இருக்கிறது. பாத்திரங்களின் வடிவமைப்பு, முக்கியமாக ரஜினியின் கிராபிக்ஸ் தோற்றம் பெருத்த ஏமாற்றம்

ஒரு நபரை கிராபிக்ஸில் உருவாக்கும்போது முகம் தத்ரூபமாக இருக்கவேண்டும் என்பதற்காக, அவரை எல்லா கோணங்களிலும் படம்பிடித்து கிராபிக்ஸ் முகத்துடன் பொருத்திவிடுவார்கள். உதாரணத்திற்கு ஸ்பைடர்மேனில் வரும் octopus என்னும் பாத்திரம் இப்படி வடிவமைக்கப்பட்டதே. ஆனால் அது கிராபிக்ஸ்தான் என்று யூகிக்கமுடியாத அளவிற்கு தத்ரூபமாக இருக்கும். அதேபோல கஜினி கம்பியூட்டர் கேமில் வரும் அமீர்கானின் முகம். சில கோணங்களில் மட்டும் படம்பிடிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டிருந்தாலும் சிறப்பாக வந்திருக்கும். ஒரு கம்பியூட்டர் கேமில் காட்டியிய தத்ரூபத்தை, மிகப்பெரிய சூப்பர்ஸ்டாரை வைத்து எடுக்கும் படத்தில் காட்டாதது கவலைக்குரிய விடயம். environment வடிவமைப்பு மட்டும் மொத்தமாக பார்க்கும்போது ஓரளவு நன்றாக உள்ளது. இவற்றைவிட நிறைய சொதப்பல்கள். 46 ஆவது செக்கனில் வரும் குதிரைக்கூட்டம், 48 ஆவது செக்கனில் வரும் பெண்கள்கூட்டம் (பாடல் காட்சி) 56 ஆவது செக்கனில் வரும் பாடல் காட்சி, இந்த காட்சிகளில் மக்கள் கூட்டத்தை காண்பித்திருப்பார்கள். எல்லோரது அசைவுகளும் செக்கன் மாறாமல் அச்சில் வார்த்ததுபோல இருக்கும். இவற்றை எல்லாம் விட உச்சக்கட்டமான பொறுப்பற்ற செயல் தெரிவது ட்ரெயிலரின் 56 ஆவது செக்கனில். ரஜினி முன்னோக்கி நடந்துவந்துகொண்டிருப்பார். காமெரா கோணத்தில் ரஜினியின் அளவு மாறுபடாது. அதாவது காமெரா ரஜினியோடு சேர்ந்து பின்னோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது என்று அர்த்தம். அதன்படி பின்னால் இருக்கும் கோட்டையும் ரஜினிக்கு பின்னால் இருப்பவர்களும் பின்னோக்கி நகரவேண்டும். ஆனால் இங்கே அப்படியே நிற்கிறார்கள்

சரி, இது எல்லாம் ஒருபுறம் இருக்க, ஏற்கனவே சுல்தான் தி வோரியர் எடுக்கப்பட்டு கைவிடப்பட்டது எல்லோருக்கும் தெரியும். அந்த படம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் ரஜினி உடல்நிலை சரியில்லாமல் இருந்ததும் தெரியும். அதுபற்றிய மேலதிக தகவல்கள் இல்லாமலே கோச்சடையான் ஆரம்பிக்கப்பட்டது. சுல்தான் தி வோரியரில் ரஜினியின் கிராபிக்ஸ் தோற்றத்துக்கான அசைவுகளை ரஜினியின் டூப் நடிகர் ஜீவா வழங்குவதாகவும் ஒரு செய்தி அடிபட்டது. இதையெல்லாம் வச்சு பார்க்கும்போது கோச்சடையானில் உண்மையாகவே ரஜினியின் பங்கு இருக்கிறதா? அல்லது குரலை மட்டும் கொடுத்துவிட்டு வெறும் வியாபாரத்துக்கு ரஜினியின் பெயர் பயன்படுத்தப்படப்போகிறதா ?????
 
 
thanx -Mathuran Raveendran fb page

Wednesday, November 07, 2012

விஸ்வரூபம் - கலக்கல் ட்ரெய்லர் - பேட்டிகள்

a















விஸ்வரூபம் ரிலீஸ் எப்போன்னு மட்டும் கேட்டுடாதீங்க! - கமல்


Dont Ask About Vishwaroopam Release

விஸ்வரூபம் படத்தின் வெளியீட்டு தேதி குறித்து மட்டும் எதுவும் கேட்டுவிடாதீர்கள் என்றார் கமல்ஹாஸன்.


இன்று கமல் பிறந்த நாள். இன்றுதான் கோவை, சென்னை, மதுரை என மூன்று மாநகரங்களில் விஸ்வரூபம் இசையை வெளியிட திட்டமிட்டிருந்தார் கமல். ஆனால் வானிலை சரியில்லாத காரணத்தினால் அதை தள்ளி வைத்து விட்டதாக அறிவித்தார் (இன்னிக்கு வெயில் பொளந்து கட்டுது!)



அதற்குப் பதிலாக இன்று காலை 10: 30 மணியளவில் சென்னை சத்யம் தியேட்டரில் "ஆரோ 3டி" டெக்னாலஜியில் தயாரான "விஸ்வரூபம்" படத்தின் ட்ரெய்லரை பத்திரிகையாளர்களுக்கு பிரத்யேகமாக போட்டுக் காண்பித்தார்.



அதுமட்டுமில்லாமல் இன்று நடைபெறுவதாக இருந்த ஆடியோ பங்ஷனும் கேன்சலாகி விட்டதால் அதனால் தன் ரசிகர்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக 30 ஊர்களில் உள்ள 30,000 ரசிகர்கள் "விஸ்வரூபம்" படத்தின் ட்ரெய்லர் மற்றும் கமல் அவர்களுடன் நேரடியாக தோன்றி பேசும் நிகழ்ச்சியை நடத்தினார்.




விழாவில் 5.1 மற்றும் ஆரோ 3டி சவுண்ட் டெக்னாலஜியில் ரெடி செய்யப்பட்டிருந்த 'விஸ்வரூபம்' படத்தின் ட்ரெய்லர்கள் போட்டு காண்பிக்கப்பட்டன.



விழாவில் பேசிய கமல், "இந்தியாவிலேயே முதல் முறையாக இந்தப் படத்தில்தான் "ஆரோ 3டி" என்ற புதிய சவுண்ட் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது," என்றார்.



அப்போது கமலிடம் 5.1 ட்ரெய்லர் காண்பிக்கப்பட்ட போது பி.வி.பி நிறுவனத்தின் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது, ஆனால் ஆரோ 3டி டெக்னாலஜியில் போடப்பட்ட ட்ரெய்லரில் அந்த நிறுவனத்தின் பெயர் இல்லையே..? என்று கேட்டனர்.




அதற்கு பதிலளித்த கமல், அது வியாபார சம்பந்தமான விஷயம். மற்றபடி நானும், அவர்களும் நட்பாகத்தான் இருக்கிறோம் என்றார்.



"விஸ்வரூபம்" படம் எப்போ ரிலீஸாகும் என்ற கேள்விக்கு, "இந்தக் கேள்வி உங்களிடமிருந்து வரும் என்று நான் எதிர்பார்த்தேன். இப்போதைக்கு அந்தக் கேள்வியைக் கேட்காதீர்கள். வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன," என்றார்.
 
 

வெதர் சரியில்ல... அதான்...! - விஸ்வரூபம் விழா தள்ளிப் போன காரணம்!!


Why Viswaroopam Audio Launch Postponed
பருவ நிலை சரியில்லாத காரணத்தால்தான் விஸ்வரூபம் இசை வெளியீட்டு விழாவை தள்ளி வைத்துவிட்டதாக கமல் தரப்பில் விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது (நக்கலா.. நிஜ காரணமா?)



மதுரை, கோவை, சென்னையில் நவம்பர் 7-ம் தேதி ஒரே நாளில் இசை குறுந்தகட்டை வெளியிடத் திட்டமிட்டிருந்தார் கமல்ஹாஸன். இதற்காக தனி ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்திருந்தாராம்.


ஆனால் திடீரென நேற்று விழாவை ரத்து செய்துவிட்டதாக அறிவித்தார். காரணத்தை மட்டும் அவர் குறிப்பிடவில்லை. இது பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்தது.



இந்த நிலையில், விழா தள்ளிப் போனது ஏன் என்று கமல் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


விழா நடக்கும் நாளன்று இடி மின்னல் மழை என வானிலை மோசமாக இருக்கும் என வானிலை ஆராய்ச்சி மையத்திலிருந்து தகவல் வெளியாகியிருப்பதால் விழாவை வேறு தேதிக்கு வைத்ததாக கமல் தரப்பில் கூறப்படுகிறது.


ஆனால் உண்மையான காரணம்?



படத்தின் ஆடியோ உரிமை இன்னும் விலை போகவில்லையாம். படத்தின் பல ஏரியா உரிமையை கமல் சொல்லும் விலைக்கு வாங்க யாரும் தயாராக இல்லையாம்.



இருந்தாலும், ரமணனை நம்பி ஒரு விழாவை தள்ளிப் போடுகிறார்கள் என்றால்... அடடா!

Kamal S Vishwaroopam Audio Launch Cancelled
 
 
 
நன்றி - தட்ஸ் தமிழ்


 இன்று கமலின் பிறந்த நாள் , நான் போட்ட ட்வீட்ஸ்



1. சாணக்யன் படம் கமல் ரசிகர்களே பலர் மிஸ் செய்த நல்ல படம் 
 
 
 
2. வித்தியாசமான காமெடியை அறிமுகப்படுத்திய மும்பை எக்ஸ்பிரஸ் தோல்வி 
 
 
3. நடனம் தெரிந்தும் தெரியாத மாதிரி ஸ்டெப் போட்ட சிப்பிக்குள் முத்து கமலின் நடிப்பில் ஒரு மைல் கல் 
 
 
 
4. உடன் நடிக்கும் ஹீரோயின் தோள்களை உடும்புப்பிடியாக பிடிப்பவர்கள் 2 பேர்தான் 1,புரட்சித்தலைவர் 2 உல்க நாயகன் 
 
 
 
5.மகாநதி படத்தில்தான் கமலின் திரைக்கதை அறிவு பிரமாதமாக பேசப்பட்டது. 
 
 
 
6. சிகப்புரோஜாக்கள் பட " நத்திங் நத்திங் " சைக்கோ டயலாக்கைத்தான் புரியாத புதிர் இல் ரகுவரன் ஐ நோ ஐ நோ ஆக்கினார் (36 டைம்) 
 
 
 
7. விக்ரம் படம் தான் அதிக சேசிங் சீன் உள்ள கமல் படம்.காக்கிச்சட்டைதான் அதிக ரொமான்ஸ் சீன்ஸ் உள்ள் கமல் படம் 
 
 
 
8. சட்டம் என் கையில் படத்தில்தான் லிப் கிஸ் கொடுத்து தன் புனிதப்பயணத்தை கமல் துவக்கினார் # முத்தநாயகன் 
 
 
 
 
9. கமல் (திரையில்) கொடுத்த அதி அழுத்த முத்தம் புன்னகை மன்னன் ரேகாவுக்கு.மித மென்மை முத்தம் சத்யா அமலாவுக்கு ,ஆக்ரோஷமுத்தமஹேராம் ராணிமுகர்ஜி் 
 
 
 
10. நதியா கிஸ் சீனில் நடிக்க மறுத்ததால் கடைசி வரை அவருடன் ஜோடியாக நடிக்க மறுத்த லட்சிய வீரர்தான் எங்கள் அண்ணன் கமல் 
 
 
 
11. தன் உடன் நடிக்கும் ஜோடி நடிகைகள் அனைவருக்கும் லிப் டூ லிப் கிஸ் கொடுக்கும் முனைப்பில் திரைக்கதை அமைக்கும் கமல் பி நா வாழ்த்து 
 
 
 
12.பிறவி நடிகன் கமல் பிறந்தநாள் ் வாழ்த்து

Sunday, September 02, 2012

அறிமுகப் படத்தில் உள்ளம் கொள்ளைகொண்ட அழகிகளின் பேட்டி

அறிமுகப் படத்தில் உள்ளம் கொள்ளைகொண்ட அழகிகளின் பயோடேட்டா இங்கே.... 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkwtg3hEyQ6Q8bTfrkvpKK5lxEedoBskAzJuhql8EDeuonnDWS5O4KhegY_xXvUjmTm51fzsZHsY2yPio032uhsu1gwqQIm2hX2-rVH2Nsj88Cz4idFypSjYjc1sQwiqurxVyrHbYk3iDg/s1600/Manisha+Yadav+at+Vazhakku+Enn+189+%25284%2529.jpg

'வழக்கு எண் 18/9’-ன் மனீஷா பெங்களூரு கிளி! 

''சமீபத்திய சந்தோஷம்?'' 


'' 'வழக்கு எண் 18/9’ படம் தெலுங்கிலும் ரிலீஸ் ஆச்சு. அந்தப் பட புரொமோஷனுக்காக ஆந்திரா போனப்போ, அங்கே தமன்னாவைப் பார்த்தேன். 'பாலாஜி சக்திவேல் சாரோட 'கல்லூரி’ படம்தான் எனக்குப் பெரிய பிரேக் கொடுத்தது. அவர் படத்துல நடிச்சா, சீக்கிரமே முன்னுக்கு வந்துடலாம். நல்லா பெர்ஃபார்ம் பண்ணுங்க’னு வாழ்த்தினாங்க. மறுநாளே சுசீந்திரன் சார் இயக்கத்தில் 'ஆதலால் காதல் செய்வீர்’ படத்துக்கு கமிட் ஆனேன். அப்புறம் ஒரு தெலுங்குப் பட வாய்ப்பும் வந்திருக்கு!''



'' 'வழக்கு எண்’ படத்தில் கஷ்டமான சீன்?'' 


''அதுல என்னை ரொம்பக் கஷ்டப்படுத்துற ஹோம் வொர்க் எதுவும் இல்லை. என் வயசுப் பொண்ணுங்க எப்படி இருப்பாங்களோ, அதை அப்படியே பண்ணேன். ஆனா, நான் சைக்கிள்ல போகும்போது கார் வந்து வேகமா ஆக்சிடென்ட் பண்ற சீன்லதான் ரொம்பவே பயந்துட்டேன். அப்போ நான் பயந்து பதறி நின்னதை நினைச்சா, இப்பவும் சிரிப்பு வருது!''


''ரோல்மாடல்?'' 


''ஜோதிகா!''



அத்வைதா.. 'கொண்டான் கொடுத்தான்’  விழி அழகி! 

http://cinema.lankasri.com/photos/full/actresses/others/advaitha12.jpg

''நடிகை ஆனது எப்படி?'' 


''கிளாசிக்கல் டான்ஸ், ஃபோக், ஃப்ரீ-ஸ்டைல், மோகினி ஆட்டம்னு அத்தனையும் அத்துப்படி. தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டா அஞ்சு வருஷம். ரோட்ல போனா, என்னைப் பார்க்கிற பசங்க கமென்ட்ஸ் அடிக்காம இருக்க மாட்டாங்க. இவ்வளவு தகுதிகளை வெச்சுக்கிட்டு நடிக்க வராம என்ன பண்றதாம்!'


''பியூட்டி டிப்ஸ்?'' 


''வெந்நீர் அதிகம் குடிப்பேன். நல்ல சன் ஸ்க்ரீன் லோஷன் பயன்படுத்துவேன். தினமும் பேஸிக் எக்சர்சைஸ், டென்ஷனா இருந்தா சாக்லேட். அவ்வளவுதான்!''


''சினிமா ஃப்ரெண்ட்?'' 


''சூப்பர்மேன் இளவரசு! ’கொண்டான் கொடுத்தான்’ ஷ§ட்டிங்ல குழந்தை மாதிரி என்னைப் பார்த்துக்கிட்டார். எந்தப் பிரச்னையோட போய் நின்னாலும், சுலபமாத் தீர்த்துவெச்சிடுவார்!''


''ஹீரோயின் போட்டி பலமா இருக்கே? சமாளிப்பீங்களா?'' 



''நான் மத்தவங்களைப் போட்டியா நினைக்கல. எனக்கு நான்தான் போட்டி!'



'ராட்டினம்’ ஸ்வாதி கேரள மோகினி! 

''ஸ்வாதி வரலாறு?'' 


'’திருச்சூர். ப்ளஸ் டூ. ஒரு தம்பி. மத்தபடி வரலாறு இனிமேதான் படைக்கணும்!''


''சினிமாவுக்காகப் பட்ட கஷ்டம்?'' 


''திருச்செந்தூர் கோயில்ல முதல் சீன். நானும் ஹீரோ லகுபரனும் பேசுறது, நடக்குறது, விளையாடுறதுனு மான்டேஜ் ஷாட்ஸ்தான். அதெல்லாம் டக் டக்னு டேக் ஓ.கே. ஆகவும் 'ஐ.... சினிமா ஈஸி’னு நினைச்சுட்டேன். மறுநாள் அம்மா அடிக்கி றப்போ, நான் அழுவுற சீன். ஆனா, அழுகையே வரலை. அப்புறம் நிஜமாவே அடிக்கச் சொல்லிட்டாங்க. பளார்னு விழுந்த அறையில், நிஜமாவே அழுதேன்!''



''கலகலன்னு பேசுறீங்க... ஃப்ரெண்ட்ஸ் ஜாஸ்தியோ?'' 


''அய்யோ... படத்துல நடிக்கிறதுக்கு முன்னாடி நான் செம சைலன்ட். வீட்லயே அதிகம் பேச மாட்டேன். யூனிட் ஆட்களோட பேசிப் பேசி வாயாடி ஆகிட்டேன். படபடன்னு நான் பேசுறதைப் பார்த்து ஃப்ரெண்ட்ஸே 'நீயாடி?’னு ஆச்சர்யப்படுறாங்க!''


http://moviegalleri.net/wp-content/gallery/pathirama-pathukkunga-swathi-hot-pics/pathirama_pathukkunga_actress_swathi_stills_9083.jpg


Saturday, June 09, 2012

ஹாலிவுட்டின் லேட்டஸ்ட் அதிரடிப்படங்கள் 4 - முன்னோட்டம்

சும்மாச்சுக்கும் இல்லை... நிஜமாகவே உலகம் முழுக்க வெளியாகி திரையரங்குகளை அதிரடிக்கவிருக்கும் மெகா சினிமாக்கள் குறித்த கலர்ஃபுல் டிரெய்லர் இங்கே... -ஜாக்கிசான்,ஜேம்ஸ்பாண்ட்,ஸ்பைடர் மேன் -லேட்டஸ்ட் படங்கள் ஒரு பார்வை
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjb6qt7JlXkMSs-DZjTDbHWnfGksOCP8LlErDRkECHj30yauePg6JmWr80yHQnYcd_XQ6DGNi0_Qxno0D6f4tSo5xMqEBU5jr-iG1xgpNUrwaxhAPpGM0_lD6lrB5xa1S21QW_EvBN1SCc/s1600/Skyfall+Movie+Poster.jpg

ஸ்கை ஃபால்

ஜேம்ஸ் பாண்ட் வரிசையில் 23-வது படம். டேனியல் க்ரேய்க்கின் மூன்றாவது பாண்ட் அவதாரம். ''டபுள் ஓ செவன்... நீ என் உத்தரவுக்குக் கட்டுப்பட்டவன்னு உனக்குத் தெரியாதா?'' என அடிக்கடி பாண்டின் மீது செல்லக் கோபம் காட்டும் 'மிஸ் எம்’ அப்பத்தா ஓர் இக்கட்டில் சிக்கிக்கொள்கிறார். அது அவர்களின் 'எம்16’ (MI6) புலனாய்வு அமைப்புக்கே சிக்கலாகும் சமயம் பாண்ட் என்ன செய்கிறார் என்பதுதான் படம்.


'மிஸ் எம்’ வேடத்தில் முந்தைய படங்களில் நடித்த ஜூடி டென்ச்சின் கணவர் இறந்த பிறகு, 'இனி சினிமாவில் நடிக்க மாட்டேன்’ என்று அறிவித்திருந்தார். ஆனால், பிறகு 'பாண்ட் படங்களுக்கு என் ஆயுள் முழுக்க நடிக்கக் கடன்பட்டு இருக்கிறேன்’ என்று தன் முடிவை மாற்றிக்கொண்டு, அடங்காத குதிரை பாண்டை மிரட்டி வேலை வாங்கும் பாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.


''மிஸ்டர் ஜேம்ஸ்... யார்கிட்ட இருந்து எப்படி உண்மையை வரவழைக்கணும்னு உங்களுக்குச் சொல்லியா தரணும்?'' என்றபடி ஆடைகளைக் களையும் ஹீரோயின்களாக நவோமி ஹாரிஸும்  பெரினிஸ் மார்லோவும் நடித்திருக்கிறார்கள். கறுப்பழகி நவோமி ஹாரீஸுக்கு படத்தில் பாண்டுக்கு நிகரான ஆக்ஷன் காட்சிகள் உண்டு. பாண்டுடன் நவோமி உருண்டு புரளும் சமயமே ஹிட் ஹாட் கெமிஸ்ட்ரியும் அரங்கேறுமாம்.


முன்னெப்போதையும்விட, இந்த பாண்ட் படத் தயாரிப்பில் ஏகப்பட்ட சிக்கல். ஆரம்பத்தில் எம்.ஜி.எம். நிறுவனம்தான் படத்தைத் தயாரித்தது.


ஆனால், வங்கிக் கொள்ளையில் பணத்தைப் பறிகொடுத்து மிகப் பெரிய இழப்பில் தவித்த அந்த நிறுவனம், படத்தை சோனி நிறுவனத்துக்குக் கை மாற்றியது. இதனால் உப தயாரிப்பாளர்கள்  நம்பிக்கையிழந்து கழன்றுகொண்டனர். இந்தியாவில் கொங்கன் ரயில்வேயின் அதீத வளைவுகளில் படம் பிடித்த சமயம் ரசிகர்கள் கூட்டத்தால் ரத்தான படப்பிடிப்பு, விபத்து காரணமாக டேனியல் க்ரேய்க்கின் ஓய்வு என ஏகப்பட்ட தடைகள். அத்தனையையும் தாண்டி உள்ளம் கொள்ளைகொள்ள வருகிறான் பாண்ட்!



படத்துக்கான பட்ஜெட்...? 150 மில்லியன் டாலர்கள் மட்டுமே! நம்மூர் மதிப்பில் கிட்டத்தட்ட 838 கோடி ரூபாய். படத்தில் வில்லனுக்கே 100 கோடி சம்பளமாம். அப்போ க்ரேய்குக்கு..?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvazIv0HWuUK8xDyTsg_CWYCaUU27M7y8ieU_BSQ3Gw9zX0_w3KRmRoKoNo3E31oHVSHJhz1sSLwauS6UX6y8UxhszNfw78SwcKo8ad6OzQyoP1TodBcJQRSJbibBL0Pt22_HbltUvlavY/s1600/cz12+poster+cannes.JPG



சைனீஸ் ஸோடியாக்
''இந்தப் படத்தோடு ஆக்ஷனில் இருந்து ஓய்வுபெறப்போகிறேன். இனி, என் வயதுக்குத் தகுந்த மென்மையான படங்களில் மட்டுமே நடிப்பேன்'' என ஜாக்கிசான் அறிவித்திருப்பதால், எதிர்பார்ப்பை மில்லியன் டாலருக்கு எகிறவைத்துள்ள படம்... 'சிஇசட்12’ (CZ12) என்று குறிப்பிடப்படும் சைனீஸ் ஸோடியாக்.


12.12.12-ல் வெளியாகவிருக்கும் இந்தப் படம், ஜாக்கியின் ஹிட் சீரிஸ் படமான 'ஆர்மர் ஆஃப் காட்’ படத்தின் மூன்றாவது பாகம். சகட்டுமேனிக்குக் காயங்கள், 58 வயதுக்கே உரிய தளர்ச்சி, காதல் மனைவி லின் ஃபெங்கின் தொடர் அறிவுரை கள்தான் காரணம், 'ஆக்ஷன் ரிட்டையர்மென்ட்’ முடிவுக்கு.


படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு, ஆக்ஷன் என அத்தனையும் ஜாக்கி சான். சீன அரசின் பொக்கிஷத்தை ஸ்பெயின், பிரிட்டிஷ் படைகளின் பாதுகாப் பில் இருந்து மீட்டு வரும் முந்தைய பாகக் கதையின் தொடர்ச்சிதான் என்றாலும், நவீன டெக்னாலஜியோடு ஆக்ஷன் காட்சிகளை அலேக்காக அமைத்திருக்கிறார் ஜாக்கி.

 க்ளைமாக்ஸ் சண்டைக்கு மட்டும் 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாம். புவி ஈர்ப்புக்கு எதிராகக் காற்றில் பறந்து மோதும் சாகசக் காட்சிகளில் தன் டிரேட் மார்க் குறும்புத்தனம் சேர்த்து ஷூட் செய்திருக்கிறார். ஸ்கூபா டைவிங், ஸ்கை டைவிங் என உலகின் அத்தனை சாகசங்களையும் உள்ளடக்கிய பேக்கேஜாக வரும் இந்தப் படத்திலும் வழக்கம்போல டூப் போடாமல் நடித்து இருக்கிறார் ஜாக்கி. 'என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசு கொடுத்தது நீயல்லவா’ என்று ரசிகர்களை நோக்கிப் பாடுவதற்கு மிகப் பொருத்தமான ஜாக்கி... இனி, 'ஒரு பவுன் வியர்வை’ சிந்த மாட்டார் என்பது அகில உலக ரசிகர்களுக்கும் வருத்தமே!



தி அமேஸிங் ஸ்பைடர் மேன்
டம் இன்னும் வெளியாகவில்லை. அதற்குள் 'தி அமேஸிங் ஸ்பைடர் மேன்’ இரண்டாம் பாகத்துக்கான அறிவிப்பு வெளியாகிவிட்டது. முந்தைய ஸ்பைடர் மேன் படங்களின் தொடர்ச்சியாக இல்லாமல், 'தி அமேஸிங் ஸ்பைடர் மேன்’ என்ற ஹிட் நாவலைத் தழுவி உருவாகியிருக்கும் படம். ஸ்பைடர் மேனின் பீட்டர்பார்க்கர் கதாபாத்திரத்தில் இந்த முறை நடித்திருப்பவர் ஆண்ட்ரூ.

http://emma-stone-photos.yesyada.com/wp-content/uploads/2012/04/the-amazing-spider-man-poster.jpg


 'தி சோஸியல் நெட்வொர்க்’ படத்தில் ஃபேஸ்புக்கின் மார்க் ஸக்கர்பெர்க்கின் ஆருயிர் நண்பன் சாவ்ரின் கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் ஆண்ட்ரூ. இப்போது 'ஸ்பைடர் மேன் படத்துக்காக ஜிம்னாஸ்டிக்ஸ், நடனம், சண்டை எல்லாம் கற்றுக்கொண்டு சின்சியராக நடித்தவரை, இரண்டாம் பாகத்துக்கும் கமிட் செய்துவிட்டார்கள். ஆண்களின் மனம் கவர்ந்த டாப் 100 செக்ஸி அழகிகளில் ஆறாவது இடம் பிடித்த எம்மா ஸ்டோன்தான் இந்த வலை மனிதனுக்கு வலை விரிக்கும் அழகி!


படத்தில் இந்தி நடிகர் இர்ஃபான் கான் ('ஸ்லம் டாக் மில்லினியர்’ பட இன்ஸ்பெக்டர்!) ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். 'நான் வில்லன் இல்லை. ஆனால், படத்தில் என்னுடைய ஆராய்ச்சிகள் ஸ்பைடர் மேனுக்கு வில்லத்தனமாகத் தெரியும்!’ என்கிறார் இர்ஃபான். படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 2010-ல் தொடங்கி ஏப்ரல் 2011-லேயே முடிவடைந்துவிட்டது. கடந்த ஒரு வருடமாக 'போஸ்ட் புரொடக்ஷன்’ பணிகள் மட்டும் நடைபெற்றுவருகின்றன. சமீபத்தில் வெளியான 'தி அமேஸிங் ஸ்பைடர் மேன்’ வீடியோ கேம் மெகா ஹிட் அடித்திருக்கிறது.

http://moviecarpet.com/wp-content/uploads/celebrities/the-amazing/spider-man-character-posters/The%20Amazing%20Spider-Man%20Character%20Posters-03.jpg


இந்தியா உட்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகளில்... இந்தியாவில் மட்டும் ஆயிரத்துக்கும் அதிகமான திரையரங்குகளில் ஜூன் மாதம் வலை விரிக்கப்போகிறான் இந்த ஸ்பைடர் மேன்!



வேர்ல்டு வார் இஸட்
மெரிக்க எழுத்தாளர் மார்க்ஸ் ப்ரூக்ஸின் 'தி வேர்ல்டு வார் இஸட்’ நாவல் அப்படியே சினிமாவாகி இருக்கிறது. 2006-ல் வெளியான அந்த நாவலில் கவரப்பட்ட ஹாலிவுட் நடிகர் பிராட் பிட், தானே படத்தைத் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார்.


கதை? 'ஸோம்பீஸ்’ (zombies) எனப்படும் மரணம் இல்லா மந்த மனிதர்களால்தான் உலகம் அழியும் என்பதே ஒன் லைன்!


ஆட்கொல்லி வைரஸால் தாக்கப்படும் மனிதர்கள் தங்கள் சிந்திக்கும் திறனை இழந்து வெறும் சதைப் பிண்டங்களாக அலைகிறார்கள். அந்த மந்த மனிதர்களின் மூளையில் பதிந்துள்ள ஒரே பழக்கம்... இயல்பான மனிதர்களைக் கொன்று தின்பது மட்டுமே. இந்த ஸோம்பிக்களின் மூளையைச் சிதைப்பது மட்டுமே அவைகளை அழிக்கும் ஒரே வழி. நிஜத்திலும் இதுபோன்ற ஸோம்பிக்களால்தான் உலகம் அழியப்போகிறது என்பதில் ஆழ்ந்த நம்பிக்கைகொண்டுள்ள ப்ரூக்ஸ், 'ஸோம்பிக்களால் கடி வாங்குபவர்களும் ஸோம்பிகளாக மாறிவிடுவார்கள்.

http://farm5.staticflickr.com/4116/4759295551_3baa1e8cca_z.jpg


இந்தக் கதையை நான் கற்பனையில் மட்டுமே  உருவாக்கவில்லை. இந்த நாவலுக்காக நீண்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டபோது, சில ராணுவ ரகசியங்களை  தெரிந்துகொண்டேன். அமெரிக்க ராணுவம் ஸோம்பிக்களைத் தயாரிக்கும் முனைப்பில் இருக்கிறது’ என்று அதிர்ச்சி அளிக்கிறார் ப்ரூக்ஸ்.


 படத்தில் எதிரி நாடுகளின் மீது தாக்குதல் தொடுக்க ஸோம்பிக்களை உருவாக்கும் அமெரிக்க, சீன ராணுவத்தின் கோர முகத்தைப் பதிவுசெய்திருக்கிறார்களாம். தீவிரவாதத்தின் இன்னொரு பக்கத்தை 125 மில்லியன் அமெரிக்க டாலர்களில் செலவுசெய்து காட்டுகிறார்கள். ஸோம்பிக்கள் நிஜத்தில் வந்தால், நாமெல்லாம் என்னாவோம்?!



 நன்றி - விகடன்