Showing posts with label ஏலியன்ஸ். Show all posts
Showing posts with label ஏலியன்ஸ். Show all posts

Saturday, June 09, 2012

PROMETHEUS -ஏலியன்ஸ் ரீல் இன் சயின்ஸ் ஃபிக்‌ஷன் -ஹாலிவுட் சினிமா விமர்சனம்

http://cdn.timesofisrael.com/uploads/2012/06/prometheus_movie-wide-635x357.jpg

ஹாலிவுட் சினிமாக்காரங்க கல்லா கட்ட கண்டு பிடிச்ச முக்கியமான வழிகள்

1. உலகையே ரட்சிக்க வந்த சிங்கிள் மேன் சுனாமியா ஸ்பைடர் மேன், பேட் மேன்,அயர்ன்மேன்,ஹல்க்,தோர்,ஃபெண்டாஸ்டிக் ஃபோர் ,சூப்பர்மேன்,எக்ஸ்மென்  மாதிரி ஹீரோ ஓரியண்ட்டட் கதைகளை பிரம்மாண்டமா தந்து  டீன் ஏஜ் ,ஆல் ஏஜ் ஆடியன்ஸை கவர் பண்ணி வசூலை அள்ளுவது

2.கொரில்லா,சுறா,அன்கோண்டா,டைனோசர் போன்ற  ஓவர் பில்டப் மிருகங்கள் பற்றிய கற்பனைக்கதைகளை ரசிக்கும்படி எடுப்பது



3.ஜேம்ஸ்பாண்ட்,சீக்ரெட் ஏஜெண்ட் டைப் ஆக்‌ஷன் படங்கள்,ஜாக்கிசான்,புரூஸ்லீ டைப் ஃபைட் படங்கள்



4. சயின்ஸ் ஃபிக்ஸன் ஸ்டோரிஸ் , அதுல வேற்றுக்கிரக வாசிகள் பூமி மீது படை எடுப்பது மாதிரி ரீல் விடும் கதைகள்

இந்தப்படம் ஏலியன்ஸ் சப்ஜெக்ட் தான்.. ஹாலிவுட்ல மெகா ஹிட்டாம்.. என்ன கதைன்னு பார்ப்போம்

2093 டிசம்பர் மாசம் 21 ந்தேதி கதை ஆரம்பிக்குது.. வேற்றுக்கிரக வாசிகளின் வாழ்க்கை முறையை  ஆராயும் நோக்கில் பூமியில் இருந்து ஒரு விஞ்ஞானிகள் குழு விண்கலத்துல கிளம்புது.. அந்த குழுவில் 2 பெண்கள் ( சும்மா ஒரு தகவலுக்காக)..பூமி மாதிரியே காற்று,நீர் வசதி உள்ள ஒரு கிரகத்துல இறங்கறாங்க .. அங்கே இறங்கி ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கறப்போ புயல் அடிக்குது..ஒரே ஒரு மனித முகம் அதாவது தலை மட்டும் கிடைக்குது.. அதை எடுத்துட்டு விண்கலத்துக்குள்ளே வந்துடறாங்க..

http://collider.com/wp-content/uploads/prometheus-movie-image.jpg

அவங்க அந்த குகைக்குள்ளே போய் டார்ச் எல்லாம் அடிச்சுப்பார்த்ததுல அங்கே இருக்கும் தட்ப வெப்பம் எல்லாம் மாறி சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்த கதையா ,வேற்றுக்கிரக உயிரினங்கள் உயிர் பெற்று எழுகின்றன..

அந்த தலையை ஆராய்ச்சி பண்றப்போ பல ஆச்சரியங்கள் நிகழுது.. வேற்றுக்கிரக உயிர் இனங்கள் அல்லது செல்கள் ஒரு டாக்டர் உடம்புல புகுந்துக்குது.. அது தெரியாம அந்த ஆள் அவரோட லவ்வர் கிட்டே கில்மா திருவிழா கொண்டாடிடறாரு.. மேட்டர் நடந்த 10 மணி நேரத்துல கரு உருவாகி பாப்பா 3 மாச கர்ப்பம்..

பாப்பா கண்டு பிடிச்சுடுது.. இது ஏலியன்ஸோட குழந்தைதான்.. ஆபத்துன்னு.. உடனே பர பரன்னு அதை தானே ஓடிப்போய்  ஒரு மிஷின் மூலம்   அந்தக் கருவை அழிக்க முயற்சி பண்றா.

பற்பல பரபரப்பு, ஆராய்ச்சி ,ஓட்டங்கள், துரத்தல்கள்க்குப்பிறகு. ஒரே ஒரு லேடி மட்டும் தப்பிக்கிறா.. அவ பூமிக்கு தகவல் அனுப்பறா.. ஆமை புகுந்த வீடு,சசிகலா புகுந்த தோட்டம், நயன் தாரா லவ் பண்ண ஆம்பளை எதுவும் உருப்படாது.. அது மாதிரி இனி  யாரும் லூஸ் தனமா ஆராய்ச்சி அது இதுன்னு இங்கே ஆள் அனுப்ப வேண்டாம் , அழிஞ்சுடுவீங்க அப்டிங்கறா..க்ளைமாக்ஸ்ல இந்தப்படத்தோட செகண்ட் பார்ட் வறதுக்கான ஒரு லீடு கொடுத்து படத்தை முடிக்கறாங்க   



http://www.clickondetroit.com/image/view/-/14585838/medRes/2/-/maxh/360/maxw/640/-/637us4/-/Noomi-Rapace-in--Prometheus--jpg.jpg


படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்

1.  டாடி, இறந்த பிறகு எல்லாரும் எங்கே போவாங்க?

சாமி கிட்டே..

அம்மா போன மாதிரியா?

ம்

அது அழகான இடமா இருக்குமாப்பா?

எனக்கெப்படித்தெரியும்? நம்பிக்கை தான்

2. நெருப்பு சுடாம இருக்க என்ன வழி?

அது சுடும்னு பயப்படக்கூடாது..

3. ரெண்டு வருஷங்களா தொடர்ந்து தூங்கிட்டு இருந்த நான் ஜஸ்ட் நவ் எந்திரிச்சிருக்கேன், எனக்கு எந்த புது ஃபிரன்ட்சும் தேவை இல்ல..  என்னை யார் அன் ஃபாலோ பண்ணாலும் கவலை இல்லை

4. அட! இறந்து போனவர் நமக்கு வரவேற்பு எல்லாம் குடுக்கறாரே?

5. என்னது? எஞ்சினியர்ஸா? அவங்க என்னத்தை வடிவமைச்சுக்கிழிச்சாங்க?

நம்மை வடிவமைச்சதே அவங்க தான்

6. கடவுளோட படைப்பு எப்பவும் சீரா இருக்காது..

 ம் ம் என்னை அங்கே இருந்து இங்கே கொண்டு வர முடியுமா?

அந்த மாதிரி வேலையை செய்ய்றதால தான் எனக்கு கேப்டன்னு பேரு

7.  இந்தத்தண்ணீர் ஏன் உறையவே இல்லை?

ஒரு வேளை இது தண்ணீரே இல்லையோ என்னவோ?

அப்போ இது ஏலியன்ஸோட யூரின்னு சொல்ல வர்றியா?
8. இந்த கிரகத்துல மனிதர் வாழத்தேவையான காற்றும், நீரும் இருக்கு.. பேசுனபடி பந்தயத்துல நான் ஜெயிச்சுட்டேன், பந்தயத்தொகையை குடு.. நான் என் கேர்ள் ஃபிரண்ட்டோட டேட்டிங்க் போகனும்

9. இந்த குகைல இருக்கும் ஓவியங்கள் எல்லாம் உருமாறுது.. நாம வந்து இங்கே இருக்கும் தட்ப வெப்பத்தை எல்லாம் மாத்திட்டோம்னு நினைக்கறேன்..

10.பெரிய விஷயத்துக்கு கூட சின்னக்கரு தான் மூலதனம்.. எதையும் அலட்சியப்படுத்தக்கூடாது

11. மனிதர்கள் எதற்காக  , ஏன் என்னை உருவாக்குனாங்க..?

 அவங்களால உருவாக்க முடியும் என்பதை உலகுக்கு உணர்த்த

12. நீங்க எதுக்காக இங்கே வந்தீங்களோ  அதுக்காக எதுவரை ரிஸ்க் எடுப்பீங்க?

என் உயிரின் எல்லை வரை
 சபாஷ்

13.  டியர், வாழ்க்கைல நான் கண்டு பிடிச்ச முக்கியமான முதல் விஷயம் நீ தான்..

14. இந்த சத்தம் விசித்திரமா இருக்கு, பூனை சாகும்போது எழுப்பும் ஒலி போல..

15.  பூமில இருக்கற அழகான ஆண்களை எல்லாம் விட்டுட்டு போயும் போயும் உன்னை பிடிச்சுருக்குன்னு சொல்ல மனசுக்கு கஷ்டமா இருக்கு..

16. ஏய்.. நீ உண்மையிலே போண்ணு தானா? ஏலியன்ஸா?

 என் ரூமுக்கு வா.. தெரிஞ்சுக்குவே,

17. அவர் கூட கடைசியா எப்போ கில்மா?

 ஜஸ்ட் டென் அவர் பேக்..

 ஆனா உன் வயிற்றுல 3 மாச கரு உருவாகி இருக்கு

18. ஏதாவது செஞ்சு என்னைக்காப்பாத்து

 யார் கிட்டே இருந்து?
 மரணத்து கிட்டே இருந்து..

19.  மனித இனத்தோட பல பதில் தெரியாத கேள்விகளுக்கு  பதில் தெரிய வரும் தருணத்துல நீ இப்போ இருக்கே..  போக விரும்பறியா?

20. நாம இங்கே இருந்து பாதுகாப்பா பூமிக்கு போனாலும் இங்கே இருந்து ஒரு ஜந்து கூட நம்ம கூட வர நான் அனுமதிக்க மாட்டேன்..

 உங்க எண்ணம் பலிக்கட்டும்

21. அரசனா இருக்கறவன் சாம்ராஜ்யத்தை ஆள்வதும் உண்டு..  பின் அவன் இறப்பதும் உண்டு.. இது இயற்கையின்  விதிகள்..

22. அவங்க பூமிக்குக்கிளம்ப ஆயத்தம் ஆகிட்டாங்க.. அதை விடக்கூடாது..

 ஏன்?

 சில புதிய விஷயங்களை உருவாக்கனும்னா பல பழைய விஷயங்களை அழிச்சுத்தான் ஆகனும்

23.. கடவுளுக்கு நிகரான சக்தியை மனுஷனுக்கு குடுக்க நினைச்சோம்.. அது தப்புன்னு இப்போ புரியுது .. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhbFlvElV-cTWsHv0wf9OEYdqp7yf49cFOfatVCDMmV2YLZgntIKblgRO65FrBSfFvmWZ8RPMdWPJsKVC7Jg9o1nQDUcMThCyrVgAZdUyaIDH7ZF4Ipi1ekpflQ1hFMIjzvg09ZbxNoXwt7/s1600/Prometheus_movie_05.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. ஓப்பனிங்க் ஷாட்ல ஒக்கேனக்கல் நீர்வீழ்ச்சியின் 10 மடங்கு வேகம், நயாகரா அருவியின் இரு மடங்கு பூரிப்புடன் காட்டப்படும் அருவி அழகான ராட்சச கவிதை.. ஒளிப்பதிவு பக்கா..

2. ஏலியன்ஸின் கருவை அழிக்க அந்த லேடி தனி ஆளா கருவை அழிக்க எடுக்க முயற்சிக்கும் காட்சி அதகளமான டைரக்‌ஷன்.. அதுல அவர் நடிப்பு, கேமராமேனின் ஆங்கிள்கள் கன கச்சிதம்

3. கிட்டத்தட்ட 127 நிமிஷங்கள் படம் ஓடுது.. ஃபைட் சீன்கள் இல்லை, ஆக்‌ஷன் காட்சிகள் இல்லை.. ஆனாலும் ஒரு விறு விறுப்பான நாவல் படிப்பது போல் அபாரமாக திரைக்கதை அமைத்த விதம் ( 43 பேர் ஸ்க்ரீன்ப்ளேவாம் - டெக்கான் கிரானிக்கல் செய்தி)

4. கதையில், திரைக்கதையில் வாய்ப்பு இருந்தும் கிளாமர் காட்சிகள் ஏதும் இல்லாமல் நாகரீகமாக எடுத்த விதம்



http://cdn.slashgear.com/wp-content/uploads/2012/06/prometheus-talents-05-sg-580x386.jpg


இயக்குநரிடம் சில கேள்விகள் , லாஜிக் மிஸ்டேக்ஸ் சுட்டிக்காட்டல்கள்

1. அந்த லேடி  உடல் உறவு கொண்ட 10 மணி நேரத்துல கரு 3 மாச கருவாக அசுர வளர்ச்சி அடையுது, ஓக்கே , ஆனா  அந்த கால்குலேஷன் படி அந்த லேடி பிரசவம் ஆக இன்னும் 20 மணி நேரம் ஆகுமே? அல்லது குறைந்த பட்சம் 7 மணிநேரம்   ஆகுமே?எப்படி 7 நிமிஷத்துல ஏலியன்ஸ் குழந்தை பிறக்குது?

2. பிரசவம் நடக்கறப்ப அந்த லேடி தனக்குத்தானே மரத்துப்போகும் ஊசி, மயக்க நிலைக்கான அனஸ்தீசியா எல்லாம் குடுத்துக்கறா.. அப்படி இருக்கும் போது அவ மீண்டும் சுய உணர்வு வர அட்லீஸ்ட் அரை மணி நேரமாவது ஆகும், ஆனா அவ பிரசவம் முடிஞ்ச மறு நிமிஷமா எழுந்து எஸ் ஆகறா.. அது எப்படி?

3. ஸ்பேசில் உடல் உறவு கொள்ளக்கூடாதுன்னு ஒரு விதி இருக்கே? அதை ஏன் அவங்க ஃபாலோ பண்னலை?

4. லேடீஸ் விண்கலத்துல போறப்பவே இவங்களுக்குத்தெரியாதா? எவனாவது கை வெச்சா கர்ப்பம் ஆவாங்க.. அது ஏலியன்ஸா இருக்க வாய்ப்பு அதிகம்னு.. அப்புறம் ஏன் லேடீஸை அனுப்பனும்?

5. ஸ்பீசிஸ் பார்ட் 2 படத்துல வர்ற பல காட்சிகள் இதுல ரிபீட் ஆகுது.. குறிப்பா அந்த லேடி கில்மா சீன், ஏலியன்ஸ் கரு உருவாவது.. 





 சி.பி கமெண்ட் - சயின்ஸ் ஃபிக்ஸன் ஸ்டோரி பிடிச்சவங்க, ஏலியன்ஸ் கதைல ஆர்வம் உள்ளவங்க படம் பார்க்கலாம்.. ஃபைட், ஆக்‌ஷன் பிரியர்கள்க்கு இந்தப்படம் பிடிக்கறது சிரமம் தான்..

 ஈரோடு வி எஸ் பி ல இந்தப்படம் பார்த்தேன்.

Friday, March 09, 2012

JOHN CARTER -ஏலியன்ஸ் உடான்ஸ் - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

http://www.disneydreaming.com/wp-content/uploads/2012/01/John-Carter-International-Movie-Poster.jpg 

இந்தக்கதைல மொத்தம் 3 கிரகம் இருக்கு. உதாரணமா அதிமுக கட்சில சசிகலா, நடராஜன்,இளவரசின்னு 3 கிரகங்கள் இருக்கே அது மாதிரி.. தமிழ் நாட்ல கலைஞர், ஜெ, டாக்டர் மான மிகு ராம்தாஸ்-னு 3 கிரகங்கள் இருக்கே அது மாதிரி,நயன் தாராவை சுத்தி சிம்பு, பிரபுதேவா,ஜெயம் ரவின்னு 3 கிரகம் இருக்கே அது மாதிரி ( ஜெயம் ரவி லேட்டஸ்ட் கிரகம் ஹி ஹி ).

மார்ஸ்னு ஒரு கிரகம்.. இங்கே தான் ஹீரோயின் கொஞ்சம் முற்றிய முகத்தோட,வற்றாத , 2 கைகளால் அணைத்தால் பற்றாத தேகத்தொட கிட்டத்தட்ட டிம்பிள் கபாடியா இன் விக்ரம் மாதிரியும் தூரத்தட்ட கேத்ரினா கைஃப் மாதிரியும் இருக்காங்க .. பூமியில் இருக்கற ஒரு குதிரைப்படை வீரர் தான் ஹீரோ ஜான் கார்ட்டர்.. வில்லன் வில்லனோட மகன் இருக்கற கிரகம் தான் ஹீலியம் ..

பூமில இருக்கற ஹீரோ ஏதோ ஒரு தங்கப்புதையல் இருக்கற தங்கக்குகையை தேடிப்போறார்.. போற வழில அவருக்கு ஒரு பவர் கிடைக்குது.. அதாவது ஸ்பிரிங்க் மாதிரி ஜம்ப் பண்ற பவர்.. காலை ஒரு உந்து உந்துனாருன்னா ஜொய்ங்க்னு ஆகாசத்துல 2 கி மீ போய்ட்டு வருவார்.. கால் சுளுக்காது.. இதை நம்ப முடியாதவங்க கால் கிலோ மல்லிகைப்பூவை  வாங்கிட்டு தியேட்டருக்கு வரவும் .. அப்பப்ப நம்ம காதுல வெச்சுக்க.. 

மார்ஸ் கிரகத்துல இருக்கற ஜீவராசிகள்க்கு  4 கை, 2 கால்.. மத்ததெல்லாம் எத்தனைன்னு தெரியலை.. என்னமோ ஈரோடு எலிகெண்ட் டெயிலர்ட்ட டிரஸ் தெச்ச மாதிரி அந்த ஏலியன்ஸ்ங்க டிரஸ் போட்டிருக்குங்க.. அவங்க ஹீரோவோட பறக்கும் சக்தியை பார்த்துட்டு வியக்காங்க.. இது எப்படின்னா ஏதோ எதேச்சையா தனுஷ் கொலை வெறி பாட்டை பார்த்து மயங்கி பிரதமரே பார்ட்டிக்கு கூப்பிட்டாரே? கமல் பொண்ணு ஸ்ருதி 3 படத்துல ஷூட்டிங்க் ஸ்பாட்ல தனுஷ் ஐஸ்வர்யா பார்க்க பார்க்க கில்மா பண்ணுச்சே அந்த மாதிரி ஒரு லக்கி பிரைஸ்.. 


http://media1.onsugar.com/files/2012/03/10/2/192/1922283/03ca4b8024337481_FishingThumb.xxxlarge_2/i/John-Carter-Movie-Pictures.jpg

ஹீரோயினை வில்லனோட மகன் கல்யாணம் பண்ண ட்ரை பண்றான்.. ஹீரோ அதை தடுத்து  எம் ஜி ஆர் மாதிரி காப்பாத்தி அவன் பண்ணிடறான்.. அதாவது கல்யாணத்தை.. அவ்ளவ் தான் கதை.. 

 செம காமெடியான மேட்டர் என்னான்னா நம்ம ஊர்ல ஜிகிடிங்க எல்லாம் அரைகுறையா ஜின்ஸ், ஸ்லீவ்லெஸ் அப்படி சென்னை பஜார்ல சுத்தும்ங்க.. மேரேஜ் அன்னைக்கு பார்த்தா முக்காடு போட்ட முனிஸ்புரி மாதிரி, சீதா தேவிக்கு அக்கா மாதிரி பாந்தமா பட்டு சேலை கட்டி அடக்க ஒடுக்கமா இருக்கும்.. ஆனா இந்தப்படத்துல ஹீரோயின் கல்யாண டிரஸ் செம காமெடி..  மேலே ஒரு பிரா , கீழே ஒரு கோவணம் ஹி ஹி அது அவங்க கிரக  வழக்கமாம்.. அடக்கிரகமே..

 டைரக்டருக்கு ஃபோன் போட்டு கேட்டப்ப ( ஏன்? அவர் மட்டும் தான் படத்துல ரீல் விடனுமா? நாம விடக்கூடாதா? ஹி ஹி ) அவர் சொல்றாரு. கோடிக்கணக்குல சம்பளம் தர்றோம்.. முடிஞ்சவரை உரிச்சுக்காட்டிடனும் அப்டிங்கறார்.. நம்ம ஊரா இருந்தா டூயட் சீன்ல சீன் காட்ட வைக்கலாம்.. அவங்க நாட்டுல இந்த மாதிரி பாரம்பரிய உடை அப்டினு ஏதாவது சொல்லி ஏமாத்தனும் போல.. 


http://bestmoviesevernews.com/wp-content/uploads/2012/02/john-carter-movie-image-31-e1329520416937.jpg

ஓக்கே .. இப்போ நடிப்பை பார்க்கலாம்.. ( நல்லா கேட்டுக்குங்க.. நான் நடிப்பை மட்டும் தான் பார்த்தேன்) ஹீரோ ஆள் ஜெகஜோதியா இருக்கார் ( சரவணா ஸ்டோர் அண்னாச்சி கணக்குப்பண்ணி குடித்தனம் வெச்சாரே அந்த ஜீவஜோதி மாதிரி ஹி ஹி )அவர் எக்சைஸ் எல்லாம் நல்லா பண்ணி பாடியை கட்டு மச்தா வெச்சிருக்காரு.. மிச்ச வேலை எல்லாம் கிராஃபிக்ஸ் பார்த்துக்குது. பாதி நேரம் அண்ணன் ஆகாயத்துல பறக்கறாரு.. மீதி நேரம் ஹீரோயின் கையை  அணடர் லைன் கையை மட்டும் தடவிட்டு இருக்காரு .. 

ஹீரோயின் இந்திய ரசிகர்களுக்கு பிடித்தமாதிரி முக அமைப்பு.. தமிழர்களுக்கு பிடித்தமாதிரி குஷ்பூ, ஹன்சிகா உடற்கட்டு ( சுந்தர் சி, பிரபு, கார்த்திக் மன்னிக்க , மற்றும் பிரபுதேவா மன்னிக்க ஹி ஹி )

இந்தப்படத்துல ஒரு சீன்ல லிப் டூ லிப் சீன் இருந்ததா பக்கத்து சீட் ஆள் சொன்னாரு.. எனக்கு ஏன் தெரியலைன்னா நான் தாவணிக்கனவுகள் பாக்யராஜ் மாதிரி /. சின்னகுழந்தைங்க பார்க்கக்கூடாத மாதிரி சீன் வந்தா நானே எட்டனாவை கீழே போட்டு பொறுக்கிட்டு இருப்பேன் ( பொறுக்கிப்பய ஹி ஹி )

கேப்டன் எல்லாம் என்னய்யா ஆள்? நரசிம்மாவுல 86 பேரைத்தானே அடிச்சார்? இதுல ஹீரோ 1876 பேரை ஒரே ஒரு வாளை வெச்சு அடிச்சு தள்ளறாரு  



 அடங்கப்பா சாமி .. ஒளிப்பதிவு  ஓக்கே .. லொக்கேஷன்கள் நல்லாருக்கு //ஹீரோயின் கூட நிக்கற 5 ஜிகிடிங்க நல்லாருக்காங்க ஹி ஹி 

http://static.moviefanatic.com/images/gallery/lynn-collins-and-taylor-kitsch-in-john-carter_433x278.jpg

  மனதில் நின்ற வசனங்கள்

1.  சின்ன வயசுல இருந்தே நீ இப்படித்தான்.. நடக்காத விஷயத்தை நடத்திக்காட்டறேன். முடிச்சுக்காட்டறேன்னு சொல்றவ. முற்போக்கு எண்ணம் உள்ளவ,.. 

2. ஹீரோ - நான் தான் உன்னை காப்பாத்த வந்தேன்.. ஆனா நியாயமா பார்த்தா நான் தான் ஒதுங்கி நிக்கனும் போல.. 

 ஹீரோயின் - ஆமா.. ஏதாவது டேஞ்சர்னா என்னை கூப்பிடு.. நான் பார்த்துக்கறேன்.. 

3.  யுத்தம் அவமானச்சின்னம்

 ஆனா நல்ல விஷயத்துக்கு நடந்தா அது மக்களைக்காக்கற கலங்கரை விளக்கம் ( ஆனா இந்தியாவுல மட்டும் 2 நாள் கூட தாங்காதாம் அவ்வ்வ் )


4.  நீ சொல்றதை உண்மைன்னு எப்படி நம்பறது?

 ஏன்? நீ சொல்றதை நான் நம்பலையா? என்னை நம்பித்தான் ஆகனும் ( பாப்பா அவன் ஆம்பளை, நம்பலாம்.. நீ பொம்பளை எப்படி நம்பறது?)

5.  ஏய்.. கை கொடுன்னா வெறும் விரலை மட்டும் தர்றே.. இதை எப்படி குலுக்க?

இதே போதும் ..... 

6.  மூளை இல்லாதவன் போல் நடிக்கறது கஷ்டம் , அது எல்லாருக்கும் வராது.. 

7. எந்த ஒரு ராஜ்யத்தையும் ஆள மக்கள் ஆதரவு ரொம்ப முக்கியம் 

 புரியலை 

 உனக்குப்புரியலைன்னா  அதை புரிஞ்சவனை வாரிசா தேர்ந்தெடுக்க வேண்டி வரும்..   ( மக்கள் ஆதரவு கிடைக்க எளிய வழி.. எதையாவது இலவசமா தர்றதா சொல்லி ஏமாத்தறதுதான் )

http://www.ropeofsilicon.com/Images/stories/2012/mar/collins-interview-john-carter_0352012_020045.jpg


8.  வில்லன் - எனக்கு மனசாட்சி இருக்கு

 ஹீரோயின் - மனசே இல்லாத உனக்கு மனசாட்சி இருக்குறது எப்படி?

9. இந்த கிரஹத்துல ஆண்கள் உப்பை விட சப்பை.. பெண்கள் பாறையை விட கடினமானவங்க  ( அடப்பாவமே அப்போ எதுக்கும் யூஸ் ஆக மாட்டாங்களா?)

10. ஒரு வீரன் ஆயுதத்தை மாத்துவான் , ஆனா மனசை மாத்த மட்டான்

11.  சாகா வரம் பெற்றவர்களால மட்டும் தான் மரண பயம் இல்லாம வாழ முடியும்

12.. நான் இருக்கறவரை இந்த கிரகத்தை யாராலும் ஒண்ணும் பண்ண முடியாது.. 

 உயிர் போற நேரத்துலயும் ஊக்கம் குடுக்கறியா?

13. சில நேரங்கள்ல நமக்கு விருப்பப்படாததை விரும்பித்தான் ஆகனும்


http://spinoff.comicbookresources.com/wp-content/uploads/2012/03/john-carter-collins4-570x380.jpg

 படம் பார்க்கற யாரும் இந்தக்கதையை நம்பவே முடியலையே அப்படின்னு சொல்லிடக்கூடாதுன்னு ஒரு முக்கியமான டயலாக்கை 7 இடத்துல ரிப்பீட்டறாங்க

 அந்த டயலாக் “ என்னால நம்பவே முடியல “ - இந்த டயலாக்கை ஹீரோ 4 தடவை, ஹீரோயின்  3 தடவை சொல்றாங்க.

 சி.பி கமெண்ட் - ஸ்கூல் பசங்க, பொழுது போகாதவங்க மட்டும் இந்தப்படத்தை பார்க்க்கலாம் மோசம் இல்லை.. கொஞ்சம் டகால்டி .... 

 ஈரோடு வி எஸ் பி தியேட்டர்ல படம் பார்த்தேன்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfEa41mGxPvazWehVrqt4CowXkSaeJ53LmVY3N7zDgOEeaNdOuhJbmrd5St7Dy3Xht3momS5CrflyJYrT1fiJaUUsh_CJNFlFiZP3JlXn7l7_hYTvNR_qMVnoCkLgmt9leRWjCtp-I9zE/s1600/2207220-dejahthoris_lynn_collins.jpg