Wednesday, July 06, 2011

ஹலோ,மொக்கை ஃபிகர் மோஹனாவா? ஒரு டவுட்!!!!!


1. ”சரியான கஞ்சன் வீட்டுக்குடும்படி நீ!எது கேட்டாலும் தர மறுக்கும் மனசு உன்னுது,கேட்காமலேயே வாரி  வழங்கும் உதடு என்னுது#கர்ணபரம்பரைக்காதலன்

-----------------------

2. ”டியர்,ஏன் கனகாம்பரப்பூ வாங்கித்தர்றீங்க?”

“ அதான் வெயிட்லெஸ்,உன் கூந்தல் தாங்கும் அளவு லைட் வெயிட் கண்ணே!”

(அதுவும் இல்லாம அதுதான்  டெட் சீப் ஹி ஹி - மைண்ட் வாய்ஸ்)

---------------------

3.  ”ராஸ்கல்னு உங்களைத்திட்டறேனே,கோபம் வர்லை?”

“ம்ஹூம், ரோஸ் கலர்-னு சொல்றியோன்னு நினைச்சேன்”#சமாளிஃபிகேஷன் சண்முகராஜ்

----------------------

4.  ”டியர்,மருதாணி இலை போலே உன் நிலை.”

“ எப்டி?”

“ நான் உன் மேலே லேசா பட்டாலே சிவந்துடறியே?”#சிகப்பியுடன் காதல் கடலை

---------------------

5. ”டியர்,கார்த்தி-ரஞ்சனி மேரேஜ் மாதிரி நம்ம மேரேஜ்ஜையும் கோவைல நடத்திடலாமா?”

“ வெயிட் ஒன் மினிட்,இந்த சீன்ல தமனா யாரு?” சந்தேகப்பிராணி சசி


----------------




6. ”டியர்,நீங்க சைவம்,நான் அசைவம்.. , காதல் சரிப்பட்டு வருமா?”

“ காதல் விஷயத்தில் நான் அசைவம், நீ சைவம், தானிக்கு தீனி சரியாப்போச்சு”

----------------

7. ”மேரேஜ்க்குப்பிறகு உங்க பேரை இனிஷியலா போடவா? எங்க அப்பா பேரையா?”

 “உன் இஷ்டம் போல கண்ணே!”

( முதல்ல மேரேஜ் நடக்குதான்னு பார்ப்போம்)

----------------------

8. ”என் அளவு உங்களுக்கு ஜெனரல்நாலெட்ஜ் பத்தாது”

“ஆமா,அதனால் என்ன லவ் நாலெட்ஜ் எனக்கு ஜாஸ்தி “ #G.K   VS   L.K

----------------
9. ஹலோ,மொக்கை ஃபிகர் மோஹனாவா.நேத்து நாம 2 பேரும் சினிமாவுக்கு போனோமே? என்ன படம் அது?”

“ விளையாடறீங்களா? எங்கே படம் பார்க்க விட்டீங்க?"

-----------------------

10. 'என் பிறந்த நாள் எது?ன்னு சொல்லுங்க பார்ப்போம்?”

“அதை உங்கம்மாகிட்டே தான் கேட்கனும்,நம்ம காதல் பிறந்த நாள் தான் எனக்கு தெரியும்.”

---------------------------

Photographer Ewa Adriana Szumowska

11. ”டியர், என் ஹேர் ஸ்டைல் எப்படி இருக்கு? “ 

“ஹேர் இருக்கு, ஸ்டைலா? அது எங்கே இருக்கு?”

----------------------

12.உன் நினைவுகள் எனக்கு உற்சாகம்,நீ நேரில் என்னருகே இருந்தால் அதுவே எனக்கு உற்சவம்

----------------------

13.”காதலுக்கு ஒரு இலக்கணமாய் நாம் இருப்போம்,ஓக்கே?”

“ தேவை இல்லை,ஜஸ்ட் காதலோடு இருந்தாலே போதும் கடைசி வரை மாறா அன்போடு”

------------------
14. ”டியர்.. உங்களுக்கு கமல் பிடிக்குமா? ரஜினி பிடிக்குமா?”

“2 பேரையும் அல்ல,கமாலினிமுகர்ஜினி மாதிரி இருக்கும் உன்னைத்தான் பிடிக்கும்”

-------------------

15.”நான் உங்க கெஸ்ட் மாதிரியா?”

அய்யய்யோ,விருந்தும்,மருந்தும் 3 நாளுக்குத்தான்னு சொல்வாங்க,அப்போ மீதி 27 நாளுக்கும் நான் என்ன செய்ய?”

-----------------------------





16.உங்களைப்பிடிக்கலைன்னு யாராலயும் சொல்லவே முடியாதுங்க,நீங்க அவ்ளவ் அழகு-ஆண்களால் மட்டுமே சொல்லப்படும் வாசகம்

--------------------



17. பத்மநாப சுவாமி கோவிலில் பொக்கிஷம்: பாதுகாப்பது எப்படி என எழுந்தது புது பிரச்னை#கோபாலபுரம் கொண்டுவரவும்,எல்லாம் எங்கய்யா பார்த்துக்குவார்

----------------------------

18. கல்விக் கடன் பெற்றவர்கள் திரும்பச் செலுத்துவதில் அதிக ஆர்வம் இல்லை #லோன் வாங்குனா ,கட்டக்கூடாது என்பதுதான் அவங்க படிச்ச முதல் பாடம்போல. 

--------------------------------

19 அழகான கதாநாயகிக்காக பஸ்ஸ்டாண்ட்-ல் அலைந்தோம்-பாரதிராஜா#எல்லா ஹீரோயின்களூக்கும் R  ல பேர் வெச்சதால  ரயில்வேஸ்டேஷன்லபிடிச்சீங்களோனுநெனச்சோம் சார்.

------------------------

20 அமைச்சர் ராமலிங்கம்: தமிழகத்தில், 235 மணல் குவாரிகள் செயல்படுகின்றன. #அண்ணே,அதுல எம்புட்டுண்ணே மேல் வருமானம் வருது?

-------------------------

21 சினிமா அதிபரிடம் ரூ.82 லட்சம் மோசடி : சன் "டிவி' நிர்வாக அதிகாரி கைது#தொகை ரொம்ப கம்மியா இருக்கே?ஆள் மாறாட்டமோ?

-------------------

22.  திமுக.எதிர்க்கட்சியாகக் கூட வர முடியவில்லை என்பது தான் வேதனை-ஸ்டாலின்#அதுகுடப்பரவாயில்லைண்ணே,கேப்டன் உங்களை ஓவர்டேக்கிட்டாரே?

-------------------------------

23.. இரண்டாம் முறையாக அமைச்சர்கள்மாற்றம்: சட்ட அமைச்சர் இசக்கி சுப்பையா நீக்கம்#அட விடுங்கப்பா,ரெட்டை இலைன்னாலே ரெட்டைமனசுன்னுதானே அர்த்தம்?

----------------------------

24 பேசுறதெல்லாம் செய்தியாயிடுச்சே. கவுதம் மேனன் கவலை!!-அண்ணே,நீங்க ஹீரோயின் கிட்டேயே பேசிட்டு இருக்கீங்களாம்,அதுவும் கேரெவன் வேனுக்குள்ள!

---------------------------

25. கொரியா அழைத்துச் சென்று ஏமாற்றிய தயாரிப்பாளர்! லக்ஷா கண்ணீர் #ஏம்மா,ஃபாரீன் ஏரியா,தனியா என் கூட வர்றியா, கொரியான்னு கூப்பிட்டப்பவே தோணல?

------------------------

26. ரேணுகா மேணன் நடித்த தாரம்,ரதி நிர்வேதம் இரண்டு படங்களில் எது ”டாப்”?சன் டி வியில் விரைவில் பட்டி மன்றம்#இமேஜினேஷன்

---------------




Tuesday, July 05, 2011

மாடர்ன் டிரஸ் மாடப்புறாக்களுக்கு ஏற்படும் பிரச்சனை இன்னான்னா...!!!!!



1. நான் வாழ்நாளில் யாரையும் காட்டிக்கொடுத்ததே இல்லை,ஆனாலும் என்னிடம் இருக்கும் 2 விரல்கள் ஆள்காட்டி விரல்கள் என்றே அழைக்கப்படுகின்றன.#அவதானிப்பு

---------------------

2. பலமுறை முயன்றும் மனிதர்கள் தோல்வி அடையும் விஷயம் ஒன்று உண்டெனில் அது - தான் நேசித்த இதயத்தை மறக்க நினைப்பது

--------------

3. ” மிஸ் ,ஐ லவ் யூ”

“உன் காலேஜ் லைஃப்ல ஒரு அரியர் கூட இல்லாம டிகிரி முடிச்சுட்டு வா , நான் உனக்குத்தான்.””

அய்யோ,தங்கச்சி!!!!!!!!!!”

-------------------------

4. கல்யாணமான ஆணைக்கூட ஒரு பெண்ணால் நேசிக்க முடிகிறது ,ஆனால் ஒரு குழந்தைக்கு அப்பா ஆகப்போகிறார் என்றதும் நேசிக்க யோசிக்கிறார்கள் பெண்கள்#ட்வீட் உலக கிசு கிசு, நோ லீக்ஸ் ப்ளீஸ் ஹி ஹி

-----------------------

5. இலக்கிய உலகிலும்,திரை உலகிலும் மிகப்பிரமாதமான படைப்பாளிகள் கூட மார்க்கெட்டிங்க் டெக்னிக் தெரியாமல், தனித்துத்தெரியாமல் கிணற்றுத்தவளையாய்

------------------



6. அரசு கேபிள் டீவி, ஜெயலலிதாவின் நேரடி கண்காணிப்பிற்காக கீழ் உள்துறைக்கு மாற்றம்!:#சன் டி விக்கு ஆப்பு,முழிச்சுக்கோடா மாப்பு

--------------------

7. இனி மைக் பிடித்து பேச மாட்டேன்! தோல்வி விரக்தியில் பாக்யராஜ்!:#அய்யய்யோ,அப்போ மோகன் மாதிரி பாடுவீங்களா?அது இதை விட கேவலமா இருக்குமே?

-------------------

8. கண்ணீர் வடித்த பிரபுதேவா! தங்கர்பச்சான் தகவல்!: #நயன் தாரா சீதையா நடிக்கிறார்னு கேள்விப்பட்டப்ப நாங்க கூட ரத்தக்கண்ணீர் வடிச்சோம்

------------.....

9. ஆண்களைப்பார்த்து பெண்களால் காப்பி அடிக்கமுடியாத விஷயம் அவன் கம்பீரம்,பெண்களைப்பார்த்து ஆண்களால் காப்பி அடிக்க முடியாத
விஷயம் அவள் வெட்கம்

-----------------------

10. ஒரு பெண்ணுக்கு தொப்பை போட்டிருந்தால் கர்ப்பம் என்று பொய் சொல்லி ஏமாற்றி விடலாம்,ஆனால் ஆணால் அது முடியாது#மொக்கை

-------------------


11. உடல் சுகத்துக்காக அறிமுகம் இல்லாத பெண்களை நாடும் ஆண்கள் கூட தன் மனசுகத்துக்காக மனைவியைத்தவிர யாரையும் நாடமுடியாமல் தடுமாறுகிறார்கள்

-----------------------

Three award winning photos- Day of life in INDIA





6. 6. 12மத்தவங்களை விட அதிகமா தெரிஞ்சுக்கோ,மத்தவங்களை விட அதிகமா வேலை செய்,மத்தவங்களை விட கம்மியா எதிர்பார்#வெற்றிக்கு வித்திடும் வழிமுறைகள்

---------------------------

13. வளர விடுங்கள் எங்களை,வாழ வைப்போம் உங்களை - மரங்கள்#ஈரோடு வனத்துறை வாசகம்

-------------
14. உறவு சுமூகமாக இருக்கும்போது உயிரைக்கூட கேட்கமுடியும்,ஆனால் சின்ன விரிசல் விழுந்து விட்டால் குண்டூசி கூட கேட்க முடியாது#ஊடலாடும் உறவுகள்

-------------------

15. . ”உங்க ஹாபி என்ன?”

“கவிதை எழுதுதல்” 

உங்களால எப்படி கவிதை எழுத முடியுது?”

“அதான் காதலிக்கிறேனே?போதாதா?”
-------------------------
16. ஏழையின் வீட்டில் ரோஜாச்செடி,பணக்காரனின் வீட்டில் பிளாஸ்டிக் ரோஜா #வசதிக்கும் ரசனைக்கும் சம்பந்தம் இல்லை

--------------------


11. 17அப்பா,அழகான ராட்சசின்னா யாருப்பா?

“தெரியல. வெறும் ராட்சசி வேணா தெரியும், கிச்சன்ல போய் பாரு.”#மனைவி அமைவதெல்லாம் சாத்தான் கொடுத்த சாபம்,அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

-----------------------

18. உன் உண்மையான அன்பு உணராதவர்களிடம் உன் கோபத்தைக்காட்டாதே,அவர்கள்க்கு உன் கோபமும் அன்பின் வெளிப்பாடே என்பது தெரியாது

----------------

19. காதல் தோல்விக்கு நல்ல மருந்து இன்னொரு புதிய காதலே#மறுபடியும் முதல்ல இருந்தேவா?

-----------------------

20. ரேஷன் அரிசி கடத்தினால் குண்டர் சட்டம் பாயும் :-ஜெ# மேடம்,அப்போ பொன்னி,அரிசி,ஐ ஆர் 8 அரிசியை எல்லாம் கடத்திக்கலாமா?ரொம்ப தேங்க்ஸ் மேடம்

--------------------

21. உள்ளாட்சி தேர்தலுக்கு முன் கூட்டணி குறித்து முடிவு: ராமதாஸ் #நீங்க எப்பவும் ஆளுங்கட்சிக்கு ஜால்ரான்னு எங்களுக்கு தெரியும்ணே@பச்சோந்தியர்

----------------------




22. கட்சிப் பணியில் இருந்து வயதானவர்கள் ஒதுங்கிக் கொண்டு, இளைஞர்களுக்கு வழி விட வேண்டும் -துரைமுருகன்# அழகிரி சொல்லிக்குடுத்தாராண்ணே?

------------------

23. திமுக.கூட்டணியில் தொடர்வதா? முடிவு செய்யும் அதிகாரம், கட்சியின் செயற்குழு, பொதுக் குழுவிற்கே உள்ளது - ராமதாஸ்#சிரிக்காம ஜோக் சொல்றாரே!

--------------------

24.நீ என்னை காயப்படுத்தும்போது கூட அழ மனம் இல்லை, என்னை விட்டு கண்ணீராக நீ பிரிந்து சென்று விட்டால்?

-----------------

25.  நீ வெற்றி பெற்றால் எல்லாருக்கும் உன்னைப்பற்றித்தெரியும், தோல்வி அடைந்தால் எல்லோரைப்பற்றியும் நீ அறிவாய்

-----------------------

26.  காலையில் கொக்கரக்கோ என்றேன்,மதியம் குக்கருக்குள் வெந்தேன்,இதான்பா லைஃப்- சேவல் தத்துவம்#SMS

------------------------------

27.. ரெகுலராக முந்தானையை,துப்பட்டாவை அட்ஜஸ் செய்து பழக்கப்பட்ட பெண்கள் ஜீன்ஸ் ,டி சர்ட் போன்ற மாடர்ன் உடைகளில் வலம்வரும்போது தடுமாறுகிறார்கள்#டைட்டில் ட்வீட்

நன்றி - படங்கள் Three award winning photos- Day of life in INDIA

ரதிநிர்வேதம் - சினிமா விமர்சனம்

http://sites.google.com/site/chithravishesham/posters/2011/20110616-Rathinirvedam.jpg

மஜாவான படம் பார்க்கறதுன்னா மக்களுக்கு எப்பவும் மட்டற்ற மகிழ்ச்சி தான்,(படத்துல சீன் இல்லைன்னா பிட்டற்ற வருத்தம்)அதுவும் மலையாளமா இருந்துட்டா கேட்கவே வேணாம். அதென்ன மலையாளத்துல மட்டும் அப்படி ஒரு ஸ்பெஷல்?னு கேட்கறவங்க ஒன் ஸ்டெப் பேக் மேன். இந்தியாவுலயே அதிகம் பேர் கல்வி அறிவு கொண்டவங்க கேரளாக்காரங்க தான். கல்வி அறிவு மட்டுமா?ஹி ஹி

கில்மா படத்துக்கே காட் ஃபாதர் 1978 இல் வெளி வந்த இந்த ரதிநிர்வேதம் படம் தான். பல வருடங்களூக்குப்பிறகு ரீ மேக் ஆகி வந்திருக்கு.. இதுல என்ன வரலாற்று சிறப்பு மிக்க கதைன்னா. பெரும்பாலான ஆண்களின் வாழ்வில் வரும் முதல் அனுபவம் தான் கதை.

அதாவது  உயிருக்குயிரா ஒரு ஃபிகரை லவ் பண்றவன்,ஒன் சைடு லவ் பண்ற ஆள்,எந்த சைடும் லவ்வே பண்ணாதவன் இப்படி பல கேட்டகிரில ஆண்கள் இருந்தாலும் எல்லா ஆண்களுக்கும் பெரும்பாலும் முதல் கில்மா ஒரு ஆண்ட்டி கூட அதாவது அவனை விட வயது அதிகமான ஒரு பெண்ணுடன் தான் நடந்திருக்கும். இது இயற்கையின் நியதி. ஒரு சில விதி விலக்குகள் இருக்கலாம். ஆனா பெரும்பான்மை அதான். அந்த பேசிக் கான்செப்டை இந்தப்படமும் எடுத்துக்கிட்டதாலதான் காலங்கள் தாண்டியும் பேசப்படுது.


http://oldmalayalamcinema.files.wordpress.com/2011/02/rathinirvedam-2011.jpg?w=535&h=400


ஹீரோவுக்கு 17 வயசு. ஹீரோயின் 30 வயசான ஸ்வேதா மேணன். கேரளாவுல இயற்கை அழகுகள் கொஞ்சி மகிழும் ஒரு கிராமத்துல பக்கத்து பக்கத்து வீடு.

ஹீரோ அடிக்கடி ஹீரோயின் வீட்டுக்கு போறப்ப எல்லாம் பாப்பா தையல் மிஷின் ல உட்கார்ந்து தெச்சுட்டு இருக்குது. கிணற்றுல தண்ணி சேர்ந்திட்டு இருக்கு,வீடு கூட்டிட்டு இருக்கு ( அதுவும் அபாயகரமா குனிஞ்சு),ஜன்னலை திறந்து வெச்சுக்கிட்டு டிரஸ் மாத்துது.

ஹீரோ மனசுல  ஆ ராசா கைல படிஞ்ச மாதிரி கறை . எப்படியாவது தனது உயர்ந்த உள்ளத்தை அவளுக்கு ஓப்பன் பண்ணி புரிய வெச்சுடனும்னு. ஆனா அவ என்னடான்னா நீரா ராடியா கணக்கா செம அப்பாவியா இருக்கா. கடைசில பொறுத்து பொறுத்துப்பார்த்து பொங்கி எழுந்து  பேக்ல கை வெச்சுடறான். 

கண்ணகி பரம்பரையா இருக்கறவ என்ன பண்னனும்?பளார்னு நாலு அறை விட்டு துரத்தனுமா இல்லையா? இவ என்னடான்னா . தம்பி, இதெல்லாம் தப்புன்னு அட்வைஸ் பண்றா.

இப்போ ஹீரோயினை பொண்ணு பார்க்க மாப்ளை வீட்டுக்குக்காரங்க வர்றாங்க.. இவன் போய் அப்பாவியா மாப்ளை கூட கல்யாணம் ஆனா என்னை விட்டுட்டு போயிடுவீங்களா?ன்னு கேட்கறான்.. அவ ஆமாங்கறா ம்ஹூம் போகக்கூடாது.. அப்படி போற மாதிரி இருந்தா நீங்க கல்யாணமே பண்ணிக்கக்கூடாதுங்கறான்..



http://www.cinespot.net/gallery/d/538192-1/Rathinirvedam+Remake+Movie+photos.jpg

அப்பவும் இவன் வாயில இருந்து நான் உங்களைக்கல்யாணம் பண்ணிக்கிறேன்னு வார்த்தை வருதா?ம்ஹூம்.. அண்ணன் ஓ சி லயே பிரசாதம் சாப்பிட ஆசைப்படறான்.

அப்புறம் ஒரு தடவை பாப்பா வீட்ல உக்காந்து தையல் மிஷின்ல துணி தெச்சுட்டு இருக்கு.. பாவாடை தொடை வரை ஏறிக்கிடக்கு.. இவன் வீட்டுக்கு வந்து 27 நிமிஷமா அவ தொடையை பார்க்கறான்.. பாவம் பாப்பா ரொம்ப அப்பாவி இல்லையா? அவன் பார்க்கறதே தெரியாம வெள்ளந்தியா இருக்கறா.. (எவண்டி உன்னைப்பெத்தான் அவன் மட்டும் கைல கிடைச்சா செத்தான் செத்தான்  )

இந்த மாதிரி பல சம்பவங்கள் நடக்குது.. பொறுத்துப்பொறுத்துப்பார்த்த ஹீரோ ஒரு லொக்கேஷன் சொல்லி அங்கே நீ வந்தே ஆகனும்கறான்.. சீவக சிந்தாமணி, யோக்கிய சிகாமணி என்ன பண்ணி இருக்கனும்? வீட்லயே இருக்க வேண்டியது தானே?இல்லை.. அவன் சொன்ன இடத்துக்கு போறா..

அவன் டக்னு கட்டிப்பிடிக்கிறான்.. இவ அதிர்ச்சி ஆகிடறா.. பின்னே தேவாரம், திருவாசகம் சொல்லித்தரவா வர ச்சொல்லுவான்..?ஆரம்பத்துல பதறுனாலும் அப்புறம் பாப்பா ஓக்கே சொல்லிடறா/.. திடீர்னு மழை வருது.. 2 பேருக்கும் சவுகர்யமா போயிடுது..

இப்போத்தான் க்ளைமாக்ஸ்.. பாப்பாவை பாம்பு கொத்திடுது..  இவன் மேட்டர் முடிச்சதும் கிளம்பிடறான்.. பாப்பா செத்துப்போயிடுது.. அவளை பாடைல போட்டு எடுத்து வர்றப்ப இவனை பஸ் ஏற்றி வெளியூர் அனுப்பிடறாங்க..

இவன் சும்மா லைட்டா அவ பாடியைப்பார்த்து கதர்ற மாதிரி ஆக்ட் குடுக்கறான்.. அவ்வளவு தான் கதை..


http://4.bp.blogspot.com/-nKfAcge6nOE/TftKvL0oYqI/AAAAAAAAB2o/dhvUN5EedbU/s640/Rathinirvedam+2+Remake+Malayalam+Movie.jpg
 


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. பட ஓப்பனிங்க்ல  இருந்து முதல் 3 ரீல்கள் வரை கேரளாவின் இயற்கை வனப்பை, நீர் நிலைகளை அழகா படம் பிடிச்சது,

2. நாட்டு வழியில் பாட்டு ,செண்பகப்பூ காட்டிலே என 2 மெலோடி ஹிட் சாங்க்ஸ் ரெடி பண்ணுனதும்,அதை படமாக்கிய விதமும்..

3. பெண்களும் பார்க்கும்படியாக கதையை டீசண்ட்டாக,ஆபாசம் இல்லாமல் எடுத்தது..

4. விக்கோ,சவுரியோ,ஒரிஜினலோ ஹீரோயின் கூந்தல் செம நீளம் + அடர்த்தி 

http://searchandhra.com/english/wp-content/uploads/2011/04/Swetha-Menon-Photo-Gallery-9.jpg

இயக்குநருக்கு சில கேள்விகள்

1. வீட்டுக்குள்ளே எந்நேரமும் புடவையுடன் இருக்கும் ஹீரோயின் வீட்டுக்கு வெளியே கொல்லைப்புறத்தில் கிணற்றில் தண்ணீர் சேர்ந்தும்போது மட்டும் வெறும் பாவாடை,ஜாக்கெட்டுடன் அலைவது ஏன்?

2. ஹீரோயின் 13 சீன்களில் துணி மாற்றுகிறாள்.. ஒரு தடவை கூட பெட்ரூம் ஜன்னலை சாத்தவே இல்லை.. அது கூட பரவால்லை.. விட்டது விட்ட மாதிரியே பார்த்துட்டு இருக்கானே ஹீரோ, அவனை கண்டு கொள்ளவே இல்லை.. உள்ளுணர்வு என்பதே பெண்ணுக்கு கிடையாதா?

3 . வழி தவறிய ஹீரோயினுக்கு தண்டனையாக அவளுக்கு மரணம் பரிசு ஓக்கே,அப்போ ஹீரோவுக்கு என்ன தண்டனை?

4. உடலுக்கோ,உள்ளத்துக்கோ ஆசைப்பட்டவள் மரணம் அடைந்தாள் என்பது தெரிந்தும் ஹீரோ ஏன் அவள் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளவில்லை?என்னதான் சொந்த பந்தங்கள் தடுத்தாலும் அவன் போகாமல் இருப்பானா?

ஈரோடு ஸ்டார் தியேட்டரில் இந்தப்படம் பார்த்தேன்.. படத்துல சீன் இருக்கா? இல்லையா? என கேட்பவர்களூக்கு.. இருக்கு.. ஆனா இல்லை.. ஹி ஹி

களவாணியே .. கலைவாணியே..அலைவாய் நீயே..

A duck splattering water....
duck-wallpapers.jpg

1 . நடிக்கத் தெரியாமலா 15 விருது வாங்கியிருக்கேன்-சீறும் ஹன்ஸிகா#ஆமாங்க மேடம்,நடிக்கறப்ப உங்க திறமை நல்லா தெரிஞ்சுது,அதுக்குத்தான் விருது

-------------------

2. உடலோ,மனதோ பாதிப்புக்குள்ளாகும்போது நட்பு வட்டங்களும்,உறவுகளும் காட்டும் அன்பை பார்க்கையில் அடிக்கடி இப்படி பாதிப்பு வரட்டுமேனு தோணுது

-------------------

3. ”தன்னார்வத்தொண்டரா நீங்க?


“ நோ, நோ, பெண்ணார்வ கிண்டலர்”

----------------------

4. ”உங்க பையன் சின்ன வயசுலயே களவாணியா போயிடுவானோன்னு பயப்படறீங்களா?”

“நோ,எதிர் வீட்டு கலைவாணி கூட போயிடுவானோன்னு பயம்”



------------------

5. நம்மைத்தூக்கிவிட கைகள் கிடைத்தால் அடையும் சந்தோஷத்தை விட நம் கண்ணீரைத்துடைக்க வரும் கைகளால் ஏற்படும் நிம்மதியே அதிகம்

---------------



6. அபிமான ஹீரோவுக்கு திருமணம் எனில் பெண் வருத்தப்படுகிறாள்,அபிமான ஹீரோயினுக்கு திருமணம் எனில்ஆண் தனது லிஸ்ட்டில் அடுத்த ஹீரோயினை தேடுகிறான்



------------
7. அன்பை விட பெரிய வன்முறை  ஏதும் இல்லை#வயலன்ஸ் லவ்


------------------------
8. கண்ணியமான சிநேகிதிகளின்  நட்பினால் நாம் சில கோடுகளைத்தாண்ட முடியாமல் தவித்து நம் படைப்புகள் ஒரு சட்டத்துக்குள் சிக்கிக்கொள்கின்றன


---------------

9. ”எனக்கு சேலை அழகா?சுடிதார் அழகா?”

ஸாரி,உன் முகத்தை தாண்டி என் ரசனை இன்னும் அடுத்த கட்டத்துக்கு போகவே இல்லையே?”#காதல் கடலை


-------

10. நீ ஊடல் கொண்டு என்னுடன் பேசுவதை தவிர்க்கிறாய்,நான் காதல் கொண்டு உன் நினைவுகளுடன் தவிக்கிறேன்.


-------------


11. சாதாரணமானவர்கள் சொல்லும் நல்ல கருத்துக்கள் சாதாரணமாகவே போய்விடுகின்றன,பிரபலமானவர்கள் சொல்லும் சாதாரண கருத்துக்கள் கூட பிரபலமாகிவிடுகின்றன


------------------------
12. ”உன் வெட்கம் செம அழகு,எங்கே எனக்காக ஒரு முறை வெட்கப்பட்டு காட்டு?”


  “ச்சீய்.. நான் மாட்டேன்பா.. “

  “ஹைய்யா.. தோத்துட்டே. ஹா ஹா “


-------------------

13. டியர்.. அளவுக்கதிகமா என் மீது அன்பு செலுத்த வேணாம்..”

ஏன்?

”ஏன்னா நான் டயட்ல இருக்கேன்” #ஆரோக்கிய மேரியின் ஹெல்த் ஓரியண்ட்டட் லவ்

-------------------------

14. ”அடிக்கடி என்னுடன் ஊடல் கொள்ளச்சொல்கிறீர்களே ஏன்?”

“சமாதானப்படுத்தும் சாக்கில் உன்னிடம் கொஞ்சிக்கொண்டிருக்கலாமே?”#பொழுது போகாத பொம்மு

----------------

15. ”முதன்முதலாக நான் ஐ லவ் யூ சொன்ன தருணம் உங்கள் நினைவில் இருக்கிறதா?”

“இல்லை,நீ காதலை சொன்னதுமே எனக்கு நினைவு தப்பி விட்டதே?” #எஸ்கேப்பிசம்

------------------------


16. பெண்களில் பல வகை உண்டு,ஆண்களில் ரெண்டே வகை தான். 1. பெண்ணின் அன்புக்காக ஏங்குபவர்கள் 2 ஏங்காதவர் போல் காட்டிக்கொள்பவர்கள்

--------------------------

17. என் காதலியும் கேரளத்து பத்மநாபா கோயில் மாதிரிதான்,இன்னும் கணக்கில் வராத பல புதையல்களை தன்னகத்தே வைத்திருக்கிறாள்

----------------------

18.  ” நான் தான் லவ்வுக்கு ஓக்கே சொல்லிட்டனே?ஏன் டென்ஷனா இருக்கீங்க?

“ “ எதிர்பாராத விதமா ஓக்கே சொன்ன நீ எதிர்பாராத விதமா நோ சொல்லிட்டா?”

--------------------

19. ”டியர்.. உன் கூட பழகவே பயமா இருக்கு..” 

“ ஏன் டார்லிங்க்?” 

“ உன் கூட அன்பு செலுத்தி செலுத்தி எனக்கு அடிப்படையா கோப உணர்வே மறந்துட்டா?

-----------------------

20. ”நீ என்னை காதலிக்க ஓக்கே சொன்னதை நம் காதல் கதையின் பாகம் 1 எனவும்,நாம் காதலித்ததை பாகம் 2 எனவும் பிரிக்கலாமா?”

வேணாம், கதையாகக்கூட பிரிவு........

---------------------------


Monday, July 04, 2011

நாளைய இயக்குநர் - டபுள் ரோல் கதைகள் -விமர்சனம்

ஹாய் மதன்,பிரதாப் போத்தன் 2 பேரும் கோட் சூட்ல நீட்டாவும்,தொகுப்பாளினி வழக்கம்போல நைட்டில கசங்கலாவும் ஆஜர்....இன்னைக்கு டபுள் ரோல் கதைகள் அப்டின்னு மதன் சார் சொல்லிட்டு அது பற்றி ரொம்ப சிலாகித்து பெசினார்.. டபுள் ரோல் அந்தக்காலத்துல இருந்தே பிரமாதமான வரவேற்பு பெற்றவைகள்னு.. எடுக்கறது ரொம்ப கஷ்டம்னாரு.. (பார்க்கறது அதை விட கஷ்டம்)

1. நகுலன் - ராஜேஷ்குமார்
இந்தப்படம் போட்டு 2 வது செகண்ட்லயே அபூர்வசகோதரர்கள் இன்ஸ்பிரேஷன்னு தெரிஞ்சிடுச்சு.. அப்பு கமல் மாதிரி ஹீரோ (இவர் தான் இயக்குநரும் ) அவருக்கு தாழ்வு மனப்பான்மை.. தான் அநாதை,யாரும் நம் மீது அன்பு செலுத்துவது இல்லைன்னு.. இது பற்றாதுன்னு குடைக்குள் மழை பார்த்திபன்  மாதிரி இல்லாத ஒரு கேரக்டர் கூட பேசிக்கற மனப்பிறழ்வு நோய் வேற.. 

ஸ்கூட்டில போற ஃபிகர் கிட்டே பேச ஆசைப்படறாரு.. அது கண்டுக்கவே இல்லை.. (இந்தப்பொண்ணுங்க யாரைத்தான் கண்டுக்குவாங்களோ?).. இவர் ஆற்றாமைல பொங்கி அழறாரு.. இசை வேற சோகத்துல போட்டு தாளிக்கறாங்க.. கடைசில எப்படியோ அந்த ஃபிகர் அவரை வண்டில ஏத்திக்கிட்டு கிளம்புது..  

ஹீரோ முழங்காலை கட்டி ரொம்ப சிரமப்பட்டு தான் நடிச்சிருக்கார்.. என்ன பிரச்சனைன்னா நமக்கும் பார்க்க சிரமமா இருக்கு.. டிரமாட்டிக்கா இருக்கு.. சித்தரிக்கப்பட்ட ,செயற்கையான சோகம் மாதிரி நம்ம மூளைக்குள்ள ஒரு அவார்னெஸ் பல்பு எரியுது.. சாரி டைரக்டர் சார்.. 

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. அதிகம் பழக்கம் இல்லாத அந்த பொண்ணு ஹீரோவை பரிதாபப்பட்டு எங்காவது டிராப் பண்ணினா ஓக்கே.. திடு திப்னு வீட்டுக்கே கூட்டிட்டு போக ஓக்கே சொல்லுமா?
2. அதிக பழக்கம் இல்லாத ஆணிடம் அப்படி பாசமா முகத்தை தடவி கொடுக்குமா?

3. ஹீரோ மாதிரியே இருக்கும் அந்த இன்னொரு கேரக்டர் யாரு? இவரோட கற்பனையா? அண்ணனா? அதற்கு படத்துல விளக்கமே இல்லை.. 


இயக்குநர் சபாஷ் பெறும் இடம்

டைட்டிலுக்கான  விளக்கத்தை ஹாய் மதன் கிட்டே டைரக்டர் சொன்னது டச்சிங்கா இருந்துது..  நகுலன் அப்டிங்கறதை வேகமா,தொடர்ச்சியா சொல்லிட்டே வந்தா அது நான் குள்ளம், நான் குள்ளன்னு வரும் ..அது படத்தோட மையக்கரு.ன்னாரு.. குட் ஒன். 


2. சித்திரப்பாவை - சரத்ஜோதி 

ட்வின்ஸ் சிஸ்டர்ஸோட கதை.. மனநிலை பாதிக்கப்பட்ட பெண்.. அடிக்கடி ஏதாவது வரைஞ்சிட்டே இருக்கா.. மன நிலைக்காப்பகத்துல அவ ஒரு முறை எங்கேயும் வர சம்மதிக்காம மாடில அபாயமான இடத்துல நின்னு  வரையறா.. அவளை கீழே விழாம காப்பாற்றப்போகும் அவளின் சகோதரி ஸ்லிப் ஆகி கீழே விழுந்துடறா.. அக்கா க்ளோஸ். தங்கை.. எகெயின் டிராயிங்க் கிளாஸ்..


  இந்தப்படத்தின் மூலமா இயக்குநர் என்ன சொல்ல வர்றார்னே தெரியல.. மனநிலை தவறியவர்களை பாதுகாக்கும்போது நாம முதல்ல ஜாக்கிரதையா இருக்கனும்னு சொல்ல வர்றாரோ? 

இயக்குநரிடம் சில கேள்விகள் 

1. மனநலக்காப்பகம் அப்படி அபாயமான மாடியை கொண்டிருக்குமா? பேஷண்ட்டை அங்கே போக அலோ பண்ணுமா?
2. மகள் இறந்தாள் என்ற செய்தி ஃபோனில் அம்மாவுக்கு தெரிவிக்கப்படும்போது அந்தம்மா கிட்டே ஒரு ரீ ஆக்‌ஷனே இல்லையே? ஏன்? ஆ ராசா ஊழலில் மாட்னார்னு கேட்டு மக்கள் சகஜமா இருக்கற மாதிரி  என்ன ஒரு அலட்சியம்?

3.மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணால அவ்வளவு தெளிவான ஓவியத்தை வரைய முடியுமா?

இயக்குநர் சபாஷ் பெறும் இடம்

 பட ஹீரோயினை நடிக்க வைத்த விதம் ,மற்றும் அந்த நடிகை தேர்வு..  

看完震惊了,这才叫艺高人胆大


3. மைக்கேல் மதன் காமராஜ் - தமிழ் சீனு 

 ஒரே மாதிரி முகத்தோற்றம் உள்ள இருவரில் ஒருவர் செய்யும் தவறால் இன்னொருவர் மாட்டிக்கொள்ளும் கதை.. கேட்க பழைய கதையாக தோன்றினாலும் காமெடியாக கொண்டு போனதால் தப்பித்தார் இயக்குநர்..

போலீஸ் ஸ்டேஷனில் ஹீரோவும், போலீஸூம் பேசும் வசனங்கள் நல்லதொரு காமெடி ஸ்க்ரிப்ட் கிடைத்தால் இயக்குநர் கிளப்புவார் என்று கட்டியம் கூறுகிறது.. 


க்ளைமாக்சில் “ கை கழுவிட்டு வாய்யா சாப்பிடலாம்” என மனைவி கூறுவது டச்சிங்காக இருந்தது.. 

 இந்த வாரம் போட்ட 3 படங்களுமே சுமார் ரகங்கள் தான்.







டிஸ்கி - மேலே சொன்ன படங்களின் யூ டியூப் லிங்க் 


http://www.techsatish.net/2011/07/kalaingar-tv-naalaiya-iyyakunar-03-07.html
 

ஆண் பெண் நட்பில் அதிகம் பாதிக்கப்படுவது யார்?



1. படைப்பாளிகள் அனைவரும் வாசிப்பு அனுபவம் உள்ளவர்கள் அல்ல, ஆனால் நல்ல வாசிப்பு அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே நல்ல படைப்பாளிகள் ஆக முடியும்

-----------------------

2.பேண்ட் கிழிந்து விட்டால் ஆண்கள் அதை தூக்கிப்போட்டு விடுகிறார்கள்,பெண்கள் அதை ஃபேஷன்ஷோவுக்கு அணிந்து செல்கிறார்கள்#நல்ல பேண்ட்டை கிழி,அணி

---------------------

3. மாமன் மகள்,அத்தை மகள் என முறைப்பெண்களை சொந்தமாகப்பெற்றவர்கள் போன ஜென்மத்தில் புண்ணியம் செய்தவர்கள்#எனக்கு 5 முறைப்பெண்கள்

----------------

4. ஈகோ பார்ப்பவர்கள் வெற்றி பெற ரொம்ப கஷ்டப்படவேண்டி இருக்கும்,காதலியிடம் கூட  ஈகோ பார்ப்பவர்கள் அடுத்த ஜென்மத்தில் கூட ஜெயிக்க மாட்டார்கள்

----------------------

5. ஆண்கள் அனைவரும் ஒரே விதமாகத்தான் சிந்திக்கிறார்கள்,பெண்கள்தான் விதம்விதமாக சிந்திக்கிறார்கள்,அதனால்தான்  பெண் மீது ஆர்வம்


---------------------------




6. மெலோடிசாங்க் கேட்டுரசிக்கும் பெண்கள் எல்லாம் மென்மையானமனம்கொண்டவர்கள்எனஆண்கள் தப்புக்கணக்கு போட்டுவிடுகிறார்கள்#மிஸ்கால்குலேஷன் ஆஃப் மிஸ்

-------------------------

7. வேறு ஒருவருடன் திருமணம் ஆன பின்பு கூட முறைப்பெண்களைப்பார்க்கும்போது ஒரு கிளு கிளுப்பு வரத்தான் செய்கிறது#சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்

---------------------------

8. திருமணமண்டபங்களில் பெண்களின் அழகு கூடுதலாக ஜொலிக்கிறது,அங்கே ஆண்கள் எடுபடாமல் போவது மனதில் வலிக்கிறது

-----------------------

9. ஆண்களின் சந்தேகம் அர்த்தம் உள்ளது,பெண்கள் சந்தேகம் அனர்த்தம் விளைவிப்பது#மிஸஸ் டவுட் ஃபயர்

----------------------------

10. ஆண்களை விட பெண்கள் தான் குழந்தை மீது அதிக பாசம் கொண்டவர்கள் என்ற தவறான தகவல் காலம் காலமாக பரப்பப்பட்டு வருகிறது

--------------------------



11. தோல்வி அடைந்த காதலில் பிரிந்து போன காதலி என்றாலும் உயிரைக்கொடுக்கவும் ஆண் தயாராக இருப்பான்,ஆனால் பெண் அப்படி அல்ல#லவ்வாலஜி

-----------------------------

12. ரூ.5 லட்சத்துக்கு நகை வாங்கினால் "பான்' எண் கட்டாயம்#ரெண்டரை ரெண்டரை லட்சமா 2 வெவ்வேற கடைல வாங்குனா என்ன பண்ணுவீங்க?

------------------------

13. தியேட்டர்களில் கவர்ச்சி படங்கள்; சுவர்களில் ஆபாச போஸ்டர்கள்: நடவடிக்கை பாயுமா?#படத்துலதான் சீன் இருக்கறது இல்ல,போஸ்டர்லயாவதுஇருக்கட்டுமே

---------------------

14.  உரத்த சிந்தனை கறுப்பு வெளுக்கும் காலம் -பாண்டியன் #கறுப்பு ,சிவப்பு வெளுத்துடுச்சுன்னு பூடகமா சொல்றீங்களா?முரசொலில கும்மி உறுதி உஷார்

---------------------

15.பெரும்பான்மையான பெண்களின் பெஸ்ட் சாய்ஸ் உயரமான மாநிற ஆண்கள்,பெரும்பான்மையான ஆண்களின் பெஸ்ட் சாய்ஸ் சிவப்பு நிற தேக பெண்கள்#சைட்டாலஜி

----------------------



16. கல்யாணமண்டப களேபரத்தில் மாப்பிள்ளை பெண்ணைத்தவிர யாரையும் பார்ப்பதில்லை,பெண் மாப்பிள்ளையைத்தவிர அனைவரையும் பார்க்கிறாள்#நோட்ஸ் எடுக்குதோ?

----------------

17. மலையாளப்பட போஸ்டர்களில் மட்டும் ஏன் பெண்கள் ஒரு கையை தூக்கிக்கொண்டு ,உதட்டை கடித்துக்கொண்டு சிரமப்படுகிறார்களோ பாவம்

----------------------

18. காதலியிடம் அதிக முறை சாரி சொன்ன காதலன்கள் தான் இங்கே அதிகம்,தப்பே செய்திருந்தாலும் தெனாவெட்டாக இருக்கும் காதலிகள் தான் இங்கே அதிகம்

----------------------

19.  ஆண் பெண் நட்பில் அதிகம் பாதிக்கப்படுவதாக சொல்லப்படுவது பெண்கள் தரப்பு,ஆனால் உண்மையில் பாதிக்கப்படுவது ஆண்கள் தரப்பே#இதை முடிஞ்சவரை பரப்பு

--------------------

20. ஹோட்டல்களிலும்,வீடுகளிலும் ,விருந்துகளிலும் சாப்பிட்ட பிறகு கை கழுவ ஆண்கள் முந்திக்கொள்கிறார்கள்,காதலில் மட்டும் பெண் முந்திக்கொள்கிறாள்

---------------------------

Sunday, July 03, 2011

ரவா இட்லி,. தனியா குழம்பு , அடை மிக்ஸ் , அரிசிம்பருப்பு சாதம் அசத்தலா செய்வது எப்படி?

http://www.supanet.com/woman-cleaning-clean-kitchen-lady-14693465.jpg

ரவா இட்லி மிக்ஸ் 

தேவையானவை: ரவை - 100 கிராம், முந்திரி - 10, ஒன்றிரண்டாக பொடித்த மிளகு, சீரகம், உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, நறுக்கி காய வைத்த இஞ்சி - சிறிதளவு, கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், எண்ணெய் - சிறிதளவு.  
ரவா இட்லி செய்ய: தயிர் - 2 கப், சோடா உப்பு - ஒரு சிட்டிகை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ரவையை கடாயில் நன்றாக வாசனை வரும்வரை வறுத்து தனியே வைக்கவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு... உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, உடைத்த மிளகு, சீரகம், கறிவேப்பிலை, இஞ்சி, முந்திரி சேர்த்து வறுத்து, ரவையுடன் சேர்த்து, எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து வைக்கவும்.

ரவா இட்லி தேவைப்படும்போது அரை மணி நேரத்துக்கு முன்பாக, ரவை கலவையில் தயிர், உப்பு,  சோடா உப்பு கலந்து கொத்தமல்லி போட்டு கலக்கவும். இந்த மாவை இட்லி தட்டில் ஊற்றி, வெந்ததும் எடுக்கவும். ஒரு மாதம் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்த லாம்.


http://www.systemsdesigngroup.net/photos/kitchen%20touch%20panel.jpg

2.  தனியா குழம்பு

தேவையானவை: தனியா - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 10, புளி - நெல்லிக்காய் அளவு, நறுக்கிய பூண்டுப் பல் - ஒரு கைப்பிடி அளவு, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெறும் கடாயில் தனியா, மிளகாயை சிவக்க வறுத்துப் பொடிக்கவும். புளியைக் கெட்டியாகக் கரைத்து, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து... வறுத்துப் பொடித்த தனியா - மிளகாய்தூளை போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். பச்சை வாசனை போக கொதித்ததும் இறக்கவும். சிறிது எண்ணெயில் பூண்டை நன்றாக வதக்கி, குழம்பில் சேர்க்கவும்.

இது பத்திய குழம்பு. பசி எடுக்க வைக்கும். ஜீரணத்துக்கு நல்லது.

குறிப்பு: இதை இரண்டு வாரங்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம். வறுத்துப் பொடிக்க நேரமில்லாதவர்கள், தனியாத் தூள், மிளகாய்த்தூள் வாங்கி சேர்க்க லாம்.


3. அடை மிக்ஸ் 

தேவையானவை: இட்லி புழுங்கலரிசி - 100 கிராம், பச்சரிசி - 50 கிராம், துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 75 கிராம், காய்ந்த மிளகாய் - 6, பெருங்காயத்தூள், காய்ந்த கறிவேப்பிலை - சிறிதளவு.

அடை செய்ய: பொடியாக நறுக்கிய வெங்காயம், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: புழுங்கலரிசி, பச்சரிசி, பருப்பு வகைகள், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் ரவை போல் அரைத்தால்... அடை மிக்ஸ் ரெடி! அதிக அளவு மாவு தேவையாக இருந்தால் மெஷினில் அரைக்கலாம்.

அடை தேவைப்படும்போது, ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு அடை மாவு மிக்ஸ், உப்பு, வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு அடை மாவு பதத்தில் கரைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து, சூடான தோசைக்கல்லில் மாவை சிறு அடைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, நன்றாக வெந்ததும் திருப்பிப் போட்டு மொறுமொறுவென எடுக்கவும்.

குறிப்பு: இதற்கு தொட்டுக் கொள்ள வெல்லம், வெண்ணெய், தேங்காய் சட்னி சூப்பராக இருக்கும். இந்த மிக்ஸை மாதக்கணக்கில் பயன்படுத்தலாம்.

4. குழம்பு பவுடர்

தேவையானவை: மிளகு - 75 கிராம், சீரகம், தனியா - தலா 50 கிராம்.

குழம்பு செய்ய: புளி - நெல்லிக்காய் அளவு, பூண்டுப் பல் - 10,    மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: மிளகு, சீரகம், தனியாவை ஒன்றாக மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.

குழம்பு தேவைப்படும்போது, ஒரு பாத்திரத்தில் புளியைக் கெட்டியாகக் கரைத்து ஊற்றி... உப்பு, மஞ்சள்தூள், அரைத்து வைத்திருக்கும் பொடி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். எண்ணெயில் பூண்டை நன்றாக வதக்கி குழம்பில் சேர்த்து இறக்கவும்  

சூடான சாதத்தில் கலந்து நெய் சேர்த்து சாப்பிடலாம். இந்த மிக்ஸை ஒரு வாரம் வரை வைத்திருந்து பயன்படுத்த லாம்.

 5.அரிசி - பருப்பு சாதம் 

தேவையானவை: சாப்பாட்டு புழுங்கலரிசி - கால் கிலோ, துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - 2 டீஸ்பூன், கடுகு, சீரகத்தூள், மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, தேங்காய் துருவல் (அ) நறுக்கிய வெங்காயம், குழம்பு வடகம் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, நசுக்கிய பூண்டு - 3 பல், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசி, பருப்புடன் சீரகத்தூள், மிளகாய்த்தூள்,     மஞ்சள்தூள், பூண்டு, உப்பு சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து, 4 விசில் வந்ததும் இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, குழம்பு வடகம் தாளித்து, தேங்காய் துருவல் (அ) நறுக்கிய வெங்காயத்தை சேர்த்துக் கலந்து, சாதத்தில் சேர்த்துக் கலக்கவும்.
இதற்கு வறுத்த வெங்காய வடகம், அப்பளம் தொட்டு சாப்பிட சூப்பராக இருக்கும்.

பங்குச்சந்தையில் நுழைய விரும்பும் புதியவர்கள் கவனிக்க....


முதற்படி முதலில் படி!




குவாண்டிடேட்டிவ் அனாலி சிஸ் என்பது ஒரு நிறுவனத் தின் எண்களை அலசி ஆராய்வது. எந்தவிதமான நிறுவனத்திற்கும் மூன்று அடிப்படை ஸ்டேட் மென்ட் உள்ளது. அவை, இன்கம் ஸ்டேட்மென்ட், பேலன்ஸ் ஷீட், மற்றும் கேஷ் ஃபுளோ ஸ்டேட்மென்ட். ஒரு நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யும்போது, அதுவும் சிறிய முதலீட்டாளராக இருந்து செய்யும்போது, இந்த மூன்று ஸ்டேட்மென்டையும் அலசுவதற்கு, நீங்கள் ஒரு ஃபைனான்ஷியல் அனலிஸ்ட் டாகவோ அல்லது சார்ட்டட் அக்கவுன்டன்ட் ஆகவோ இருக்க வேண்டும் என்கிற அவசிய மில்லை.

 கூட்டல், கழித்தல் தெரிந்த யாரும் இந்த ஸ்டேட்மென்டைப் படித்து தங்களுக்கு வேண்டியதைத் தெரிந்து கொள்ளலாம்.


இன்கம் ஸ்டேட்மென்டில் நிறுவனத்தின் வரவு-செலவுகள் சொல்லப்படும். பேலன்ஸ் ஷீட்டில் நிறுவனத்தின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் சொல்லப்படும். கேஷ் ஃபுளோ ஸ்டேட்மென்டில் நிறுவனத்திற்கு பணம் எவ்வாறு வந்து செல்கிறது என்பது சொல்லப்படும்.

இந்த குவாண்டிடேட்டிவ் அனாலிசிஸை நாம் இரு பிரிவுக ளாகப் பிரித்துக் கொள்வோம்... ஒன்று, முதலீட்டிற்கு நேரடியாக உதவும் அளவுகோல்கள். மற்றொன்று, ஆழமாக அனாலிசிஸ் செய்ய விரும்புபவர்களுக்கான பல ரேஷியோக்கள், குரோத், மதிப்பீடு (வேல்யூவேஷன்) போன்ற அளவுகோல்கள். முதல் சில அத்தியாயங்களில் முதலீட்டிற்கு நேரடியாக உதவும் அளவுகோல்கள் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

..முதலில் உங்கள் அனைவருக்கும் மிகவும் பரிச்சயமான இ.பி.எஸ். என்று சொல்லக்கூடிய ஒரு பங்கின் வருமானம் மற்றும் அதன் ரேஷியோவான பி/இ பற்றி இந்த வாரம் பார்ப்போம்...இ.பி.எஸ். அதாவது, ஒரு பங்கிற்கான வருமானம்... இதைப் பற்றி எளிமையான உதாரணம் ஒன்றின் மூலம் புரிந்துகொள்வோம்

. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் மார்ச் 2010 முடியும் நிதி ஆண்டின் இன்கம் ஸ்டேட்மென்டின் ஒரு பகுதியை இங்கே கொடுத்துள்ளோம். அந்த வருடம் அந்த வங்கியின் நிகர லாபம் 4,024.98 கோடி ரூபாய். அதாவது 4,025 கோடி ரூபாய். அந்த வங்கியின் பங்கு மூலதனம் 1,114.89 கோடி ரூபாய். ஒவ்வொரு பங்கும் 10 ரூபாய் முகமதிப்பு கொண்டது.

 ஆகவே அந்நிறுவனத்தின் அன்றைய தினத்தில் மொத்த பங்குகளின் எண்ணிக்கை 111.489 கோடியாகும். நிகர லாபத்தை மொத்த பங்குகளின் எண்ணிக்கையால் வகுக்கும்போது (4024.98/111.489) கிடைப்பதுதான் இ.பி.எஸ். இதைத்தான் 'பேஸிக் இ.பி.எஸ்’ என்று கூறுகிறோம். அதற்குக் கீழ் 'டைல்யூட்டட் இ.பி.எஸ்’ என்று ஒன்று இருப்பதைக் கவனியுங்கள். அது என்ன?
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி போன்ற பல தனியார் நிறுவனங்கள், தங்களுடைய ஊழியர்களுக்கு (பெரும்பாலும் டாப் லெவல் ஊழியர்களுக்கு) நன்றாக லாபத்தை ஈட்டித் தந்தால் அந்த நிறுவனத்தின் பங்குகளை இலவசமாகவோ அல்லது குறைந்த விலையிலோ எதிர்காலத்தில் தருவதாக வாக்குறுதி கொடுத்திருப்பார்கள்.

 அந்த வாக்குறுதிப் பங்குகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், மொத்தப் பங்குகளின் எண்ணிக்கை சிறிது அதிகமாகும். அப்போது அந்நிறுவனத்தின் இ.பி.எஸ். சற்று குறையும். அதைத்தான் 'டைல்யூட்டட் இ.பி.எஸ்’ என்று கூறுகிறோம். ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் மார்ச் 2010-ல் முடிந்த நிதி ஆண்டில் டைல்யூட்டட் இ.பி.எஸ். 35.99 ஆகும். கன்சர்வேட்டிவ் கணக்கிற்கு டைல்யூட்டட் இ.பி.எஸ்ஸை எடுத்துக் கொள்வதே சிறந்தது.

பங்கின் சந்தை விலையை இந்த இ.பி.எஸ்-ஸால் வகுத்தால் கிடைப்பதுதான் பி/இ ஆகும். சரி, எந்த இ.பி.எஸ்-ஸை எடுத்துக்கொள்ள வேண்டும்? பொதுவாக சென்ற நிதி ஆண்டின் முடிவின் இ.பி.எஸ்-ஸை எடுத்துக் கொள்ளலாம். இப்போதெல்லாம் காலாண்டு முடிவுகள் வர ஆரம்பித்துவிட்டதால், கடந்த 4 காலாண்டுகளின் இ.பி.எஸ்-ஸை எடுத்துக் கொள்ளலாம். இதை டி.டி.எம். (TTM – Trailing Twelve Monthsலீs) என்று கூறுவார்கள். அந்த டி.டி.எம். இ.பி.எஸ்-ஸை எடுத்துக் கொண்டு பி/இ-யை கணக்குப் பார்த்தால் இன்னும் துல்லியமாக இருக்கும்.

சில சமயங்களில் சில நிறுவனங்கள் தற்போது முடிந்த காலாண்டில் பெரிய நஷ்டத்துடன் செயல் பட்டிருக்கும். அதனால் அதன் இ.பி.எஸ் நெகட்டிவ்வாக இருக்கும். அப்போது கடந்த நிதி ஆண்டு அல்லது டி.டி.எம். இ.பி.எஸ்-ஸை வைத்துப் பார்த்தால், இன்னும் பாஸிட்டிவ் ஆகவே இருக்கும். அதுபோன்ற சமயங்களில் பங்குகளை வாங்கச் செல்லும்போது எச்சரிக்கை தேவை. பொதுவாக கடந்த 5-10 ஆண்டுகளாக தொடர்ந்து லாபம் ஈட்டி பாஸிட்டிவ் இ.பி.எஸ்-ல் இருந்துவரும் நிறுவனங்களாகப் பார்த்து வாங்குவது நல்லது.
பி/இ என்பது பொதுவாக எதைக் குறிக்கிறது?

நீங்கள் ஒரு பங்கை 100 ரூபாய் விலை கொடுத்து வாங்குகிறீர்கள். அதன் சென்ற ஆண்டு இ.பி.எஸ். 25 என வைத்துக் கொள்வோம். அப்படி என்றால் அந்நிறுவனப் பங்கின் பி/இ நான்கு. அடுத்த நான்கு வருடங்களுக்கு இதேபோல் குறைந்தது 25-ஐ இ.பி.எஸ்-ஸாக ஈட்டினால்தான், நீங்கள் கொடுத்த விலை ஈடாகிறது என்றுஅர்த்தம்.

இன்னுமொரு நடைமுறை உதாரணத்தை எடுத்துக் கொள் வோம்... உங்கள் ஊரில் ஒரு சூப்பர் மார்க்கெட் விலைக்கு வருகிறது. அந்த சூப்பர் மார்க்கெட்டின் விலை 10 லட்ச ரூபாய் என்று கூறுகிறார். அதன் வருட நிகர லாபம் 2.5 லட்சம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

 அப்படி என்றால் நீங்கள் போட்ட பணத்தை திருப்பி எடுப்பதற்கு நான்கு வருடங்கள் ஆகும். இந்த நான்குதான் நீங்கள் வாங்கிய சூப்பர் மார்க்கெட்டின் பி/இ. ஆக பி/இ என்பது நீங்கள் போட்ட பணத்தை எவ்வளவு காலத்தில் லாபத்தின் மூலம் எடுக்கமுடியும் என்பதற்கான அளவு கோல் எனக் கொள்ளலாம். அந்த லாபம் முழுவதும் உங்கள் கையில் வருகிறதா அல்லது ஒரு பகுதி நிறுவனத்தின் வளர்ச்சிக்காக செல் கிறதா என்பது வேறு விஷயம்.

பி/இ அதிகமாக இருப்பது நல்லதா அல்லது குறைய இருப்பது நல்லதா?
பொதுவாக குறைய இருப்பது நல்லது. ஆனால், இது அவ்வளவு சுலபமாக முடிவெடுத்து விடக்கூடிய விஷயமல்ல! மிகச் சிறிய நிறுவனங் களுக்கு பொதுவாக பி/இ குறைவாக இருக்கும். ஏனென்றால் அந்நிறுவனங்களில் ரிஸ்க் அதிகம் என்பதே-பொருளாதார இறக்கத்தில் அந்நிறுவனங்கள் அதிகமாக பாதிக்கப்படலாம் அல்லது ஒரு பெரிய கஸ்டமர் விலகிப் போனால், அந்நிறுவனம் நஷ்டத்தில் சென்றுவிடலாம் அல்லது அந்நிறுவனத்தில் உள்ள முக்கிய நபருக்கு ஏதேனும் ஆகி விட்டால் அந்நிறுவனமே ஆடிப் போகலாம் - இதுபோல பல ரிஸ்க் உள்ளது. ஆகவே, சிறிய நிறுவனங் களின் பி/இ குறைவாக இருக்கும். அதே சமயத்தில் பெரிய நிறுவனங் களின் பி/இ அதிகமாக இருக்கும்.


அதேபோல் ஒரே சைஸில் உள்ள பெரிய நிறுவனங்கள் அல்லது சிறிய நிறுவனங்களை கூர்ந்து கவனியுங்கள். அவற்றிற்குள்ளும்   பி/இ வித்தியாசம் இருக்கும் - காரணம் ஒரு நிறுவனத்தின் மேனேஜ்மென்ட் மிகவும் நியாய மானதாக இருக்கும்; மற்றொன்று சில குறுக்கு வழிகளைக் கையாளலாம். நியாயமான மேனேஜ்மென்ட் உள்ள நிறுவனத்தின் பி/இ எப்போதும் அதிகமாக இருக்கும்

. இல்லையெனில் ஒரு நிறுவனம் வளர்ச்சியுடன் கூடிய லாபத்தை தந்து கொண்டே இருக்கும். மற்றொன்றில் வளர்ச்சி இருக்கும்; ஆனால் லாபம் வளராது. இதுபோல் பலப்பல காரணங்கள் பி/இ-ன் அளவை நிர்ணயிக்கின்றன.
சரி, பங்கு வாங்க புறப்பட்டு விட்டீர்கள். நீங்கள் வாங்க நினைக்கும் நிறுவனப் பங்கின் பி/இ-ஐ அந்நிறுவனத்தைச் சார்ந்த துறையின் சராசரி பி/இ விகிதத் தோடு ஒப்பிட்டுப் பாருங்கள்;

 மேலும் அந்நிறுவனத்தின் நேருக்கு நேரான போட்டி நிறுவனத்தின் பி/இ-யோடு ஒப்பிட்டுப் பாருங்கள். இதிலிருந்து உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும். மேலும் பி/இ மட்டுமே ஒரு நிறுவனத்தை மதிப்பிடுவதற்கான அளவுகோல் அல்ல. இன்னும் எவ்வளவோ உள்ளன. அவற்றோடும் சேர்த்துப் பார்க்கும் போது நீங்கள் பங்கை வாங்கலாமா அல்லது வேண்டாமா என்பதை முடிவு செய்யலாம்.

கன்சர்வேட்டிவ் முதலீட்டாளர் கள் குறைந்த பி/இ உள்ள, நீண்ட காலம் தொழில் செய்து வரக்கூடிய தரமான நிறுவனங்களை நாடிச் செல்வது சிறந்தது.

தொடரும்

நன்றி - நாணயம் விகடன்


டிஸ்கி -

குப்தா ..குப்தா... ...சித்ர குப்தா..குப்தா . வரம் தா..வரம் தா ( ஆன்மீகம்)

சித்ரகுப்தனை பணிவோம்!
லக அமைதியும் மகிழ்ச்சியும் தொடர்வதற்குக்  கோயில்களும் வேள்விகளும் பேருதவி புரிகின்றன. அதில் கலந்துகொள்ளும் மக்களும் பயன்பெறுவர். தவறான சிந்தனை மற்றும் செயல்பாடுகளால் சிக்கித் தவிக்கும் மனிதர்களை அவற்றில் இருந்து விடுதலை பெற, இறைப் பணியில் ஈடுபடச் சொல்கின்றன, புராணங்கள்!

தீர்த்தாடனம் செய்து, கோயிலை வலம் வருவதுடன், இல்லறத்தில் இருந்தபடியே இறைவனை வழிபடும் முறைகளையும் அவை எடுத்துரைக்கின்றன. அன்றாடப் பிரச்னைகளில் இருந்து விடுபடுவதற்கு வழிபாடுகளே உதவும். வீட்டில் இருந்தபடியே, இறைவனுக்கு நம் விருப்பப்படி வழிபாடு செய்வதற்கான வழிமுறைகள் உள்ளன.

மனம், விரும்பிய இறைத் திருமேனியைக் கொண்டு வழிபட, ஈடுபாடு சிதறாமல் இருக்கும். மாற்றத்தை விரும்பும் இயல்பு கொண்ட மனம், மாறுபட்ட இறை உருவங்களுக்குத் தாவும். நாளடைவில், அதுவே இறைத் தத்துவத்தில் உறைந்து போவதற்கு உறுதுணை புரியும். மனதின் மாறுபட்ட இயல்புக்குத் தக்கபடி, மாறுபட்ட இறையுருவங்களின் வழிபாட்டினை எடுத்துரைக்கின்றன, புராணங்கள். 'இறைவன் ஒருவனே; ஆனால், உருவங்கள் பலப் பல’ என்பது மக்களின் மனநிலையில் இருந்து உருவான கோட்பாடு! குழந்தையில் விளையாட்டு, இளமையில் இன்பம், முதுமையில் ஆன்மிகம் என மனம் மாறுபட்டு, மகிழ்கிறது.

மனதின் விருப்பம், உருவமில்லாத இறைவனை உருவத்துடன் பார்க்கிறது. வில்லங்கத்தை அகற்ற ஸ்ரீவிக்னேஸ்வரர்; குடும்பத்தில் மகிழ்ச்சியை நிலை நிறுத்த சோமாஸ்கந்தர்; எதிரிகளை விரட்ட ஸ்ரீசுதர்சனர்; கல்வியை வழங்கி அறியாமையை அகற்ற ஸ்ரீகலைமகள்; செல்வத்தை அளித்து ஏழ்மையை விரட்ட அலைமகள்; எதிரிகளைத் துரத்த ஸ்ரீமகிஷாசுரமர்த்தினி... இப்படியாக, இன்னல்களை அகற்ற இறையுருவங்களை ஏற்கும்போது, நமது தேவைகள் எளிதாக நிறைவேறிவிடும்.

http://www.trisakthi.com/Issues/ARP%2016-30/Images/Chithragupthan4.jpg


வரவு- செலவுக் கணக்கை ஏட்டில் பதிந்து வைக்கிற முறை தொன்று தொட்டு வருகிற ஒன்று! அவருக்குக் கணகன், கணக்கன் என்று பெயர்கள். சம்ஸ்கிருதத்தில் 'காயஸ்தன்’ என்பர். கணக்கில் உள்ள  தவறு, அரசுக்குத் தெரிந்தால், தண்டனை உண்டு; நல்லவிதமாக இருந்தால் வெகுமதி நிச்சயம்!  
இயற்கையைச் சீரழிக்கும் செயல்கள் பாபம்; இயற்கையை அனுசரித்துப் போகிற செயல்கள் புண்ணியம். அதிகாரிகளின் கண்ணில்படாதவற்றுக்குக்கூட, இறைவனின் நீதிமன்றம் தண்டனை அளிக்கும். நிரபராதி தண்டிக்கப் படக்கூடாது, அபராதி தப்பிவிடக் கூடாது என்பதற்காகவே கடவுளின் நீதிமன்றத்தில் கணக்கன் இருக்கிறான். அவனுடைய பெயர், சித்ரகுப்தன். பாவ- புண்ணியங் களைப் பதிவு செய்து, நீதியரசனான எமனிடம் சமர்ப்பிப்பவன் இவன்தான்!

எமன், தர்மராஜன், மிருத்யு, அந்தகன், வைவஸ்வதன், காலன், ஸர்வபூதஷயன், ஒளதும்பரன், தத்னன், நீலன், பரமேஷ்டி, விருகோதரன், சித்திரன், சித்ரகுப்தன் ஆகிய 14 பேரும் நீதிமன்ற அதிகாரிகள். செயல் புலன்கள் ஐந்து, அறிவுப் புலன்கள் ஐந்து; மனம், புத்தி, சித்தம், அகங்காரம் நான்கு... ஆக, இந்தப் பதினான்கில் உருப்பெற்ற மனிதனுக்கு உகந்தவாறு 14 பேருடன் நிறைவுறுகிறது! 

நீதிமன்றம் 14 வழிகளில் பாவ- புண்ணியங்களைச் சேர்த்துவிடும். பாவம் செய்தவனைத் துயரத்தில் தள்ளுவதும் புண்ணியம் செய்தவனை கடவுளுடன் இணைப்பதும் நீதியரசனின் வேலை. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtLkseMR63vL84kY6pCSh26zuBYGUSe5Rj4SgJnVeuenMMyO6KNowC18ehh2EF-hmzM9K_DRyzxl8OgAClKSpwJnEyDfXkGqS-ELHRI-NaooIwTW9f-DnJgNdcI_KB-uadoPC3EaiJiBgy/s1600/chitragupta+temple.jpg

இவை அனைத்துக்குமான செயல்களுக்கு ஆணிவேர், சித்ரகுப்தனின் பதிவேடு!
சித்ரம் என்றால் மனிதன் செய்கிற பாவ- புண்ணியம்; குப்தன் என்றால், அதைப் பதிவேட்டில் பதிந்து, தண்டனை அல்லது பெருமை அளிக்கும் வரை காப்பவன் என விளக்கம் தருகிறது சப்த கல்பத்ருமம்.

தியானத்தில் ஆழ்ந்த பிரம்மனின் தேகத்தில் இருந்து தோன்றியவன் சித்ரகுப்தன். கைகளில் ஏடும் எழுதுகோலும் ஏந்தியிருப்பவன்; தர்மராஜனுக்கு உதவுவதற்காக, பிரம்மனால் கணக்கனாக நியமிக்கப்பட்டான் என்கிறது பத்ம புராணம். சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்துடன் இணைந்த பௌர்ணமியில் சித்ரகுப்தனை வழிபடும்படி பரிந்துரைக்கிறது புராணம். சஷ்டி விரதம்போல், சித்ரகுப்த விரதமும் உண்டு.

கற்றறிந்தவர்கள் வேத முறைப்படியும், பாமரர்கள் 14 பெயர்களைச் சொல்லியும் வழிபடலாம். கைகளில் ஏடும் எழுதுகோலும் இருக்கிற சித்ரகுப்த வடிவத்துக்கு, 16 வகை உபசாரங்கள் செய்து வழிபடுவது சிறப்பு. 14 அந்தணர்களை நீதி அதிகாரிகளாகப் பாவித்து, அவர்கள் மூலமாக சித்ரகுப்த வழிபாட்டைச் செய்து, பூஜையை நிறைவு செய்யவேண்டும். அத்துடன் அன்னதானம் செய்வதும் விசேஷம். 14 பெயர்களைச் சொல்லி, தண்டனிட்டு வணங்கவேண்டும்.

'தெரிந்தோ தெரியாமலோ தவறு கள் நிகழ்ந்திருக்கும். பதிவேட்டில் எழுதியுள்ள எனது தவறுகளை எமனிடம் சமர்ப்பித்துவிடாதீர்கள். தங்களது அருளால், துன்பத்தில் இருந்து விடுபடவேண்டும். தங்களிடம் கருணை மனுவைச் சமர்ப்பிக்கிறேன். அதனை நீதியரசன் ஏற்கும்படி செய்யுங்கள்’ என சித்ரகுப்தனைப் பிரார்த்திக்க வேண்டும். அவரது சிபாரிசு, நிச்சயம் உங்களைக் காப்பாற்றி விடும். ஆகவே, பாவத்திலிருந்து விடுபட, சித்ரகுப்த பூஜை செய்வது அவசியம் என்கிறது புராணம் (சித்ரகுப்த நமஸ்து ப்யம் நமஸ்தே கர்மரூபிணே...). 

செய்கிற தவறு மனதில் பதிவதுபோல், அவனது பதிவேட்டிலும் பதிந்துவிடும். அவனைப் பணிவதே விடுபடுவதற்கான வழி! எமன் முதலான 14 பெயர்களை உச்சரித்து, சித்ரா பௌர்ணமியின் போது வணங்கினால், நரகத்தின் வேதனையில் இருந்து மீளலாம். நவகோள்களில் கேதுவும் ஒருவன். அவனது பிரத்யதி தேவதையாக இருப்பவன் சித்ரகுப்தன். கேது, மோட்சத்தை அளிப்பவன் என்பதற்கு அவனுடன் இணைந்த சித்ரகுப்தனே சாட்சி! கேதுவை வணங்கியவரை துயரத்தில் இருந்து விடுவித்து, வீடுபேறு அளிக்கிறான் சித்ரகுப்தன்.  


ஸெளதாஸன் எனும் அரசன், நல்லவர்களைத் துன்புறுத்தி, துஷ்டர்களை ஆதரித்தான். மக்கள் வேதனையில் ஆழ்ந்தனர். அவனது செயல்கள், சித்ரகுப்தனின் பதிவேட்டில் எழுதப்பட்டன. பிறகு, அவன் இறந்ததும் யாதனா தேகத்துடன் எமனின் முன்னே நிறுத்தப்பட்டான். 

பதிவின்படி, நரகத்துக்கு அனுப்ப முயன்றார் எமன். அப்போது சித்ரகுப்தன், ''அரசன் தனது தவற்றை உணர்ந்து தங்களையும் என்னையும் வேண்டி சித்ரா பௌர்ணமியில் விரதம் இருந்தான். மனம் திருந்தி, மன்னிக்க வேண்டினான். எனவே, துயரத்திலிருந்து விடுவியுங்கள்'' என்றான். உடனே, அவனை விடுவித்தார் எமன் என்கிறது பவிஷ்ய புராணம். தவறை உணர்ந்தவனுக்கு மன்னிப்பு உண்டு என்கிறது தர்மசாஸ்திரம். ஆகவே, அன்றைய நாளில் ஏழைகளுக்கு ஏடு, எழுதுகோல் மற்றும் அன்னம் ஆகியவற்றை தானம் செய்தால், சித்ரகுப்தன் மகிழ்வான்.

http://santancreative.com/Portals/0/Gallery/Album/11/My-CHITRAGUPTA-paint.JPG

யமாயதர்மராஜாய மிருத்ய வேசாந்ததாயச
வைவஸ்வதாய காலாய ஸர்வபூதஷயாயச
ஒளதும் பராய தத்னாய நீலாய பரமேஷ்டினே
விருகோதராய சித்ரா சித்ரகுப்தாயவைநம: 
  - இந்தச் செய்யுளைச் சொல்லி வணங்கினால், பலன்கள் கிடைக்கும்.

இறையுருவத்தைக் கண்கள் பார்க்க வேண்டும்; நாவு அவனது பெயரையே உச்சரிக்க வேண்டும்; மனமானது, அவனையே நினைக்கவேண்டும்; கைகள், அர்ச்சிப்பதில் ஈடுபட வேண்டும்; செவிகள், அவனது புகழைக் கேட்க வேண்டும்; கால்கள், அவனுடைய  ஆலயத்துக்குச் செல்ல வேண்டும்; நாசி, அவனுக்கு அளிக்கப்படும் பூக்களின் நறுமணத்தை நுகரவேண்டும்; சிரம், அவனையே வணங்க வேண்டும்... இப்படியாக உடலுறுப்புகள் அனைத்தும் இறைவழிபாட்டில் ஈடுபடுவதே உத்தமம்! வீட்டில் வழிபடும்போது, இவை அனைத்தையும் திறம்படச் செய்யலாம்.

புராணங்களை இயற்றிய வேதவியாசர், மக்களைக் கரையேற்ற எளிய முறையில் வகுத்துத் தந்த வழிபாடுகள், இன்றைய சூழலுக்கும் உகந்ததாக அமைந்திருப்பதே அதன் சிறப்பு! அறம், பொருள், இன்பம், வீடு - ஆகியவற்றைப் பெற சித்ரகுப்த வழிபாடு உதவும் (தர்மார்த்தகாம...). சித்ரகுப்தனுக்கு உரிய நாளில், பெண்களும் வழிபடலாம்; 

அவர்களுக்கு உரிய பலனும் வந்துசேரும் என நாரத ஸம்ஹிதை தெரிவிக்கிறது. வேதங்களை அறியாதவர்கள் கூட எளிய முறையில் பூஜித்துப் பயன் பெறலாம். 'சித்ரகுப்தாய நம:’ என்று சொல்லி, அனைத்து உபசாரங்களையும் செய்து, அவனது திருநாமத்தை உச்சரித்து வணங்கினால் போதும்!

அன்றாடப் பணிகளுடன் இறை வழிபாட்டையும் செய்ய வேண்டும். காலையில் நீராடி, நெற்றிக்கு இட்டுக் கொண்டு, மனதாரப் பிரார்த்திக்க வேண்டும். முதலில் இவை நடைமுறைக்கு வந்தால்தான், புராணங்கள் சொல்கிற வழிபாடுகளைத் திறம்படச் செயல்படுத்த முடியும். கோயிலில் வழிபடுவது ஒருபுறம்இருப்பினும், வீட்டில் செய்யும் வழிபாடு களைச் செய்யும்போது, இன்னும் அமைதி யையும் சந்தோஷத்தையும் அடையலாம்! அதற்கு, நம் புராணங்கள் அளித்துள்ள வழிபாட்டு முறைகள், மிகச் சிறந்த வரப்பிரசாதம்!

thanx- sakthivikatan

http://www.punjabigraphics.com/wp-content/uploads/2011/01/bhagwan-chitragupta.jpg