Showing posts with label .அனுபவம். Show all posts
Showing posts with label .அனுபவம். Show all posts

Monday, May 02, 2011

காலேஜ் கேர்ள்ஸ் கிட்டே ஒரு மேட்டர் நோட் பண்ணி இருக்கீங்களா?



1. மோஹனா..நீ ஒரு பையனோட டெயிலி பைக்ல சுத்தறியாமே?ஏதாவது எசகு பிசகா நடந்திடுமோன்னு பயமா இருக்கும்மா..

பயப்படாதீங்க டாடி....பைக்ல உக்காந்தாலும் , பேக்ல  உக்காந்தாலும் தலைல  ஹெல்மெட் போட்டிருக்கேன்.. பயப்படாதீங்க....

----------------------------------

2. எனக்கு மேரேஜ் லைஃப் புளிச்சுப்போச்சு...

அப்போ உன்னைப்பொறுத்தவரை கல்யாணம்கறது ஆயிரம் காலத்து தயிர்னு சொல்லு..

-------------------------

3. மேனேஜர் சார்.. நீங்க சொன்னதைத்தனே செஞ்சேன்.. ஏன் கோவிச்சுக்கறீங்க?

டைப்பிஸ்ட் ஜெயந்தியை உள்ளே வரசொல்லப்பான்னேன். நீ ஹால்ல போய் அப்டியா சத்தமா “மேனேஜர் உங்களை ரூமுக்கு கூப்பிடறார்னு சொல்றது? என்னை டேமேஜர் ஆக்கீட்டுத்தான் ஓய்வே போல..

-----------------------------

4. நம்ம கட்சியோட ஆல மரமே தலைவர் தான்...

ஆமா.. ஆனா விழுதுகள் மாதிரி அவருக்கு ஏகப்பட்ட சின்ன வீடுகள் இருக்கே..?அதான் பிரச்சனை..

-----------------------------------------

5. மேனேஜர் சார்.. பொண்ணுங்க கூட பேசும்போது மட்டும் ஏன் முகத்தை உர்-னு வெச்சுக்கறிங்க?

அவங்க கிட்டே மட்டும் சிரிச்சுப்பேசுனா இளிச்சவாயன் ஆக்கிடுவாங்க..

--------------------------------

6. காலேஜ் போற  சில பொண்ணுங்க புக்ஸை நெஞ்சோட அணைச்சுட்டுப்போறாங்களே.. ஏன்?

படிக்கறதில்லை... க்ளாஸ்ல கவனிக்கறதில்லை... இப்படியாவது பாடம் மனசுலஏறட்டும்னு  நினைக்கறாங்களோ என்னமோ..?

----------------------------------

7. எங்க ஆஃபீஸ்ல மொத்தமா 80 பேரு இருக்காங்க.. இதுல 75 பேர் எப்பவும் கடுப்பாவே இருப்பாங்க....

 அட.. வித்தியாசமான கடுப்புக்கணிப்பா இருக்கே..?

---------------------------

8. நாட்டுல நடக்கற ஊழலை யாரும் கண்டுக்காம இருக்காங்களே?அது ஏன்?

 நாட்டுல 90% ஆளுங்க ஊழல் தான் பண்றாங்க.. பெரும்பான்மையை ஏத்துக்கறதுதானே மக்களாட்சி?

---------------------------------

9.  தலைவர் ஸ்ட்ரைட் ஃபார்வார்டுன்னு எப்படி சொல்றே..?

மரியாதையை , சுய மரியாதையை  எதிர்பார்க்கறவங்க என் கட்சில இருக்க வேணாம்னு சொல்றாரே..?

-------------------------------

10. டியர்.. குழந்தைத்தனமா பேசாதீங்க.. லவ் பண்ணலாம்..ஆனா மேரேஜ் பண்ண மாட்டேன்னு ஏன் சொல்றீங்க?

ஹி ஹி ஹி .. மோஹ்னா..எனக்கு ரஸ்க் சாப்பிடத்தான் பிடிக்கும்.. ரிஸ்க் எடுக்க பிடிக்காது..

 டிஸ்கி 1 - மொத ஸ்டில்லுல இருக்கற ஃபிகரு ஏன் ஃபுல் ஸ்லீவ் ஜாக்கெட் போட்டிருக்குன்னா அவங்க ரொம்ப மூடி டைப்பாம்.ஹி ஹி ( விக்கி  தக்காளி பாட்டில் டைப்.. அவனுக்கு கரெக்ட் ஜோடி)

 டிஸ்கி 2 -காலேஜ் பொண்ணுங்க ஸ்டில்ஸ் போட்டிருக்கீங்களே? அவங்க கிட்டே அனுமதி வாங்குனீங்களா?ன்னு ரொம்ப அக்கறையா  யாரும் கேட்க வேணாம்.. அதுவும் சினிமா ஸ்டில்ஸே..  ( கிரேட் எஸ்கேப்)


ஃபிகரோட சேட்டிங்க் நடக்கறப்ப சின்ன பிரச்சனை.... ...!!!!

http://www.findnearyou.com/wallpaper/Telugu_Actress_Anjali/Telugu_Actress_Anjali_2854.jpg

1.சினேகிதியுடனான சேட்டிங்கில் திடீர் தடங்கல்..காரணம் ஆற்காட்டாரா?அவள் வீட்டாரா?#குழம்பும் மனசு

--------------------------------------

2. நல்லவனாக நடிக்க வேண்டிய கட்டாயத்தில் எங்கே நிஜமாகவே நல்லவன் ஆகி விடுவேனோ என பயமாக இருக்கிறது

-------------------------------

3. சிநேகிதி சொல்லும் அவள் காதல் கதைகளை கேட்கையில் கிளுகிளுப்பு கொள்வதா? பொறாமைப்படுவதா? என்ற குழப்பத்தில் மூளையின் அட்ரினல் சுரப்பிகள்

---------------------------

4. விக்கிலீக்ஸ் - மக்களை தவறாக வழிகாட்டுவதிலும், தகவல் தரும் இணையதளத்தைப் பற்றி அவதூறு பேசுவதையும், இந்தியாவில் தான் பார்த்தேன்#ஜெய் ஹோ

-------------------------

5. ராகுல்-இளைஞர்களால், இந்த சமுதாயத்தை மாற்ற முடியும். அவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்.#ஆனா காங்கிரஸ்க்கு வந்துடக்கூடாது.டேஞ்சர்

------------------------------
http://mimg.sulekha.com/anjali/stills/anjali-018.jpg
6. ஆணின் முதல் தேடல் பெண் பெண்ணின் முதல் தேடல் ஆண்.ஆனால் இரு தரப்புகளுமே நடிப்பதால் கண்ணாமூச்சி ஆட்டம் தொடர்கிறது

--------------------------

7.மின்சாரத்தை முறையாக வழங்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.#அதுக்கு நீங்க பொறுப்பான அரசை தேர்ந்தெடுத்திருக்கனும். இப்போ வருத்தப்பட்டு?

-----------------------------

8. தூத்துக்குடி வாக்கிங்' சென்ற மாவட்ட தி.மு.க., துணைச் செயலர் ஏ.சி.அருணா நடுரோட்டில், அரிவாளால் வெட்டிகொலை#வாக்கிங்க் மேக்கிங்க் மர்டர் ?

-----------------------

9. தமிழக காங்கிரசை அழிக்கும் முயற்சியில், தங்கபாலு ஈடுபட்டு வருகிறார்#எதுக்கு தேவை இல்லாத ரிஸ்க்? சீமான்,தாமரை கூட்டணி போதுமே?

-----------------------------------

10. அட்ஷய திரிதியை- நகை விற்பனை 40% அதிகரிப்பு #பவுன் விலை ரூ 17,000 ஆன பின்பும் இப்படி வாங்கித்தள்ளுறாங்களே..ஏது இவ்வளவு பணம்இவங்களுக்கு?

-----------------------------

டிஸ்கி 1 - முதல் ஸ்டில்லில் அஞ்சலி போட்டிருக்கற சுடி  டாப்ஸ் இஸ்பேட் நெக்குன்னு பேரு. இஸ்பேட்னா என்னன்னு தெரியாதவங்க சீட்டு ஆடற சகுனி மார்களை கேட்டுக்குங்க.. நெக்குன்னா என்னன்னு தெரியாதவங்க நங்கு நங்குன்னு சிஸ்டம் மானிட்டர்ல தலையை இடிச்சுக்குங்க. ஹி ஹி (என் பதிவைப்படிச்சுட்டு பாதிப்பேரு அப்படித்தான்  இடிச்சுக்கறாங்களாம். ஹா ஹா )




டிஸ்கி 2 -பதிவோட டைட்டிலையும் ,முதல் ட்வீட்டையும் படிச்சுட்டு ஃபிகரோட பேரென்ன?குலம் கோத்திரம் என்ன?னு கேட்டு ஆத்திரத்தை யாரும் கிளப்பாதீங்க.. ஏன்னா.. அது நாஞ்சில் மனோ அனுபவம்... அவர் வார்த்தையால சொன்னார்.. நான்  அதை படைப்பாக்கிட்டேன் ஹி ஹி




Sunday, May 01, 2011

ஒரு கோல்டன் ஆப்புர்ச்சுனிட்டி.. மிஸ் பண்ணிடாதே கோகிலா

http://www.fashionclothingtoday.com/wp-content/uploads/2010/10/Traditional-Jewellery-of-India.jpg 
அட்சய திருதியை 'தங்க'மான இ.டி.எஃப்!
ந்தவிதமான முதலீடாக இருந்தாலும் சரி, அதன் மதிப்பு கடந்த சில ஆண்டுகளில் கடுமையாக ஏறியிறங்கி இருக்கிறது. உலக அளவில் பல நாட்டு பங்குச் சந்தைகள் பாரதூரமாக ஏறியிறங்கி இருக்கின்றன. கச்சா எண்ணெய் விலைகூட 147 டாலர்கள் வரை உயர்ந்து, அதன்பிறகு கடுமையாகச் சரிந்தது.

ஆனால், தங்கத்தின் விலை மட்டும் இறங்காமல் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த ஏற்றத்தைப் பயன்படுத்தி லாபம் சம்பாதித்தவர்கள் மிகச் சிலர் மட்டுமே. இந்த விலையேற்றத்தை எதிர்பாராத பலரும் வேடிக்கை மட்டுமே பார்த்தார்கள்.

நகையாக வாங்கினால், பாதுகாப்பு, டிசைன் பழையதாகிவிடுவது, செய்கூலி, சேதாரம் என பல பிரச்னைகள்.விஷயம் தெரிந்த சிலர் மட்டும் வங்கிகள் விற்கும் தங்கக்காசுகளை வாங்கி இருக்கிறார்கள். ஆனால், இந்த காசுகளை வங்கிகள் திரும்ப வாங்கிக் கொள்வதில்லை என்ப தோடு, தங்க நகைக் கடைகளில் விற்கும்போது அவர்கள் கேட்கும் விலைக்கு கொடுக்க வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது.


இந்த பிரச்னைக்களுக்கெல்லாம் ஒரு எளிய தீர்வாக நினைத்த நேரத்தில் தங்கத்தை வாங்கி, விற்று லாபம் பார்க்க நினைப்பவர்களுக்கு கிடைத்திருக்கும் ஒரு வரப்பிரசாதம் தான் கோல்ட் இ.டி.எஃப்.
கோல்ட் இ.டி.எஃப். என்றால் என்னமோ ஏதோ என்று அஞ்சத் தேவையில்லை.
 http://www.teamads.in/jewellery/admin/upload/ifresh-face-girl-female-model.jpeg
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ஒரு வகைதான் 'எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட்’ என அழைக்கப்படும் இ.டி.எஃப் கள்.இந்த இ.டி.எஃப்.களில் பல வகை உண்டு. வங்கிப் பங்குகள், நிஃப்டி பங்குகள், ஜூனியர் நிஃப்டி பங்குகள், இன்ஃப்ரா பங்குகள் என பலவிதமான இ.டி.எஃப். திட்டங்கள் உள்ளன. இதில் ஒன்றுதான் கோல்ட் இ.டி.எஃப். தங்கத்தில் முதலீடு செய்து அதிக லாபம் சம்பாதிக்க நினைக்கிற முதலீட்டாளர்களுக் காகவே இந்த கோல்ட் இ.டி.எஃப். திட்டத்தைக் கொண்டு வந்திருக்கின்றன மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள்.

இந்தியாவில் மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் கோல்ட் இ.டி.எஃப். திட்டங்கள் அறிமுகப்படுத்தபட்டன. ஆனால், இன்றோ 10 கோல்ட் இ.டி.எஃப். திட்டங்கள் வந்துவிட்டன. என்.எஸ்.இ.கோல்ட்.காம் (http://www.nsegold.com) எனும் இணையதளத்தை பார்த்தாலே தெரிந்துவிடும், அந்த திட்டங்கள் குறித்த சகலமும்.
கோல்ட் இ.டி.எஃப்.பை பேப்பர் தங்கம் என்றும் சொல்கிறார்கள்.

நகைக் கடைகளில் நகையாக தங்கம் வாங்கும்போது அதை தொட்டுப் பார்த்து உணரலாம். ஆனால் இ.டி.எஃப். மூலம் முதலீடு செய்யும்போது அது நம் டீமேட் கணக்கில் அது யூனிட்களாக வரவு வைக்கப்படும். ஒரு யூனிட் என்பது கிட்டத்தட்ட ஒரு கிராம் தங்கத்துக்கு சமமானது.


பொதுவாக, இ.டி.எஃப். திட்டத்தை ஆரம்பிக்கும் முன்பே மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் கணிசமான அளவு தங்கத்தை வாங்கி சேர்த்து வைத்திருக்கும். அந்தத் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகை அதிகரிக்க அதிகரிக்க தன் வசம் இருக்கும் தங்கத்தை சம்பந்தப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
 http://1.bp.blogspot.com/_Q09g8aDEtNc/TBBvmNcuwxI/AAAAAAAAPBY/Xuv4hel8eYc/s1600/Indian-Wedding-Jewellery-Hitex-International-Gem-Jewellery-Expo-2010.jpg
தங்கம் விலை உயரும்போது அது நம்முடைய இ.டி.எஃப். யூனிட்களிலும் எதிரொலிக்கும். அதாவது, வெளி மார்க்கெட்டில் ஒரு கிராம் தங்கம் விலை 10 ரூபாய் உயர்ந்தால், நம்மிடம் இருக்கும் கோல்ட் இ.டி.எஃப். யூனிட்டின் மதிப்பும் சுமார் 10 ரூபாய்க்கு உயரும்.

விலை குறைந்தால் நம்மிடம் இருக்கும் யூனிட்டின் மதிப்பும் குறையும்.
சில ஆண்டுகளுக்குப் பின் நல்ல லாப விலைக்கு வந்தபிறகு அதை விற்று லாபம் பார்க்க நினைத்தாலும் விற்று பணமாக்கிக் கொள்ளலாம். அல்லது தங்கமாகவும் வாங்கிக் கொள்ளலாம்.

ஆனால், குறைந்த பட்சம் ஆயிரம் கிராம் தங்கத்துக்கு சமமான யூனிட்கள் இருந்தால் மட்டுமே தங்கமாக வாங்கிக் கொள்ள முடியும். ஒரு கிலோ தங்கத்தை வெளி மார்க்கெட்டில் நேரடியாக வாங்கும்போது வாட், செல்வ வரி, இன்ஷூரன்ஸ் போன்றவை செலுத்த வேண்டும். ஆனால், இ.டி.எஃப். யூனிட்களை தங்கமாக மாற்ற புரோக்கரேஜ் கட்டணங்களை மட்டும் செலுத்தினால் போதும்.

எப்படி முதலீடு செய்யலாம்?

கோல்ட் இ.டி.எஃப்.-யில் முதலீடு செய்ய டீமேட் கணக்கு மட்டும் இருந்தால் போதும். பங்குகளை வாங்க நீங்கள் ஏற்கெனவே டீமேட் கணக்கு வைத்திருந்தால், அந்த கணக்கிலேயே கோல்ட் இ.டி.எஃப். யூனிட்களையும் வாங்கலாம். பங்குச் சந்தை வர்த்தகமாகும் நேரத்தில் இந்த ஃபண்டுகளும் வர்த்தகமாகும். தேவைப்படும் நேரத்தில் எளிதாக வாங்கவும் முடியும், விற்கவும் முடியும்.

எவ்வளவு முதலீடு செய்யலாம்?

ஒவ்வொருவரின் போர்ட்ஃ போலியோவிலும் குறைந்தபட்சம் 10 முதல் 15 சதவிகிதம் வரை தங்கம் இருக்கலாம்.

பலரும் தங்கத்தில் முதலீடு செய்யாமல் விட்டதற்கு என்ன காரணம்? முதல் காரணம், குறுகிய காலத்தில் தங்கம் விலை இந்த அளவுக்கு உயரும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

இரண்டாவது, கல்யாணம், காட்சி யின்போதுதான் நம் மக்கள் தங்க நகையை வாங்குகிறார்களே ஒழிய, முதலீட்டு நோக்கத்தில் தங்கத்தை வாங்குவது என்பது இன்னும் நம் மக்களிடம் பிரபலமாகவில்லை. 

மூன்றாவது, தங்க எஸ்.ஐ.பி-யில் முதலீடு!
நகைக்கடைகளுக்கு போய் ஒரு கிராம், இரண்டு கிராம் என தங்க நகை வாங்க முடியாது. ஆனால், கோல்ட் இ.டி.எஃப்.பில் ஒரு யூனிட் தங்கத்தைகூட வாங்க முடியும். மாதந்தோறும் ஒன்றிரண்டு யூனிட் கோல்ட் இ.டி.எஃப். வாங்கினால் கூட சில மாதங்களில் ஒரு கணிசமாக யூனிட்கள் நம் வசம் சேர்ந்திருக்கும்.
 http://i8.lulzimg.com/i/1edd1995.jpg

அனைத்து இ.டி.எஃப்.களும் கிட்டத்தட்ட ஒரே அளவு வருமானத்தைத்தான் கொடுக்கும். காரணம், ஒவ்வொரு ஃபண்ட் நிறுவனமும் தன்னிடம் இருக்கும் மொத்த தொகைக்குமே தங்கத்தை வாங்குவதில்லை. அதிகபட்சமாக 10 சதவிகித தொகையை ரொக்க மாகவோ அல்லது இதர கடன் திட்டங்களிலோ முதலீடு செய்யும்.

இதுபோல எவ்வளவு தொகையை வைத்திருக்கிறார்களோ, அதற்கேற்றார்போல இ.டி.எஃப்.-ன் வருமானம் கூடவோ, குறையவோ வாய்ப்பிருக்கிறது.

இனியாவது சேமிப்பின் ஒரு பகுதியை தங்கத்தில் முதலீடு செய்வோமா?


நன்றி - நாணயம் விகடன்

Saturday, April 30, 2011

சந்தனக்கடத்தல் மன்னன் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி ஜூ வி பேட்டி - காமெடி கும்மி

எல்லா அரசியல்வாதிகளும் சுயநலமிகள்

சிறை மீண்ட முத்துலட்சுமி ஆவேசம்
நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு கர்நாடக சிறையில் இருந்து ரிலீஸ் ஆகி
வெளியில் வந்திருக்கிறார் சந்தனக் கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி.

 ஆமா.. சுதந்திரப்போராட்ட தியாகி .. வெளில வந்துட்டாங்க.. மாலை போட்டு ஆரத்தி எடுக்க வேண்டியதுதான்.. 




மேட்டூர் அருகே உள்ள பொட்டனேரி கிராமத்தில், அக்கா வீட்டில் தங்கியிருக்கும் முத்துலட்சுமியை சந்தித்தோம். பேச்சில் ஏகத்துக்கும் இப்போ கன்னட வாசம்! 

பேட்டி எடுத்தா கேள்விகளால் வசப்படுத்தனும்.. இப்படி வாசம் பிடிக்கக்கூடாது.. 

''கிட்டத்தட்ட மூணு வருசம் ஜெயிலுக்குள்ளயே ஓடிப்போச்சு. 2008-ம் வருஷம் நவம்பர் 26-ம் தேதி ராத்திரி ஒரு மணி இருக்கும். எங்க வீட்டுக் கதவை யாரோ தட்டினாங்க. வெளியில ரெண்டு பொம்பளை போலீஸ்  இருந்தாங்க. 'நாங்க
மாதேஸ்வரன்மலை போலீஸ்காரங்க. உங்களை அரெஸ்ட் பண்ண வந்திருக்கோம்...’னு தமிழ் கலந்த கன்னடத்தில் சொன்னாங்க.


'எதுக்கு..?’ன்னு புரியாமல் கேட்டேன். '11 தடவை உங்களை கோர்ட்ல ஆஜராகச் சொல்லி​யும், நீங்க ஆஜராகாம கோர்ட்டை அவமதிப்பு செஞ்சதுக்காக, உங்களை கைது செய்யச் சொல்லி பிடி வாரன்ட் போட்டிருக்கு’ன்னு சொன்னாங்க.

 அதெப்பிடி? மாலை 6 மணீக்கு மேலே பெண் கைதியை லாக்கப்ல வைக்க சட்டம் இல்லையேன்னு கேட்க வேண்டியது தானே?

'கோர்ட்ல ஆஜராகச் சொல்லி எந்த நோட்டீஸும் வரவே இல்லை’ன்னு நான் சொன்னது எதையும் அவங்க கேட்கத் தயாரா இல்ல. கட்டின புடவை​யோட அந்த நடு ஜாமத்துல என்னைக் கைது பண்ணிக் கூட்டிட்டுப் போயிட்டாங்க.''


1. ''சிறையில் எப்படி உணர்ந்தீர்கள்?''

''என்னை மைசூர் ஜெயில்ல அடைச்சாங்க. சின்ன ரூம், அதுல 16 பேர் தங்கி இருந்தோம். கால் நீட்டிக்கூட படுக்க முடியாது. ஆரம்பத்துல பல நாள் ராத்திரி தூக்கமே வராது. காட்டுக்குள்ள அவரோட நான் வாழ்ந்த வாழ்க்கையை நினைச்சிப் பார்த்​துட்டுப் உட்கார்ந்திருப்பேன்.

பொழுது விடிஞ்சிடும்.
ஜெயிலுக்குள்ள நக்சலைட் இயக்கத்தைச் சேர்ந்த பெண்கள் சிலரும் இருந்தாங்க. அவங்​களுக்குத் தமிழ், கன்னடம் ரெண்டும் தெரியும். அவங்கதான் என்கூட ரொம்ப அன்பாப் பழகி​னாங்க.

கோர்ட்டுக்கு கன்னடத்துல நான் எழுதச் சொன்ன லெட்டரை எல்லாம் அவங்கதான் எழுதிக் கொடுத்தாங்க. இப்போ ஓரளவுக்கு நானும் கன்னடம் பேசக் கத்துகிட்டேன். கன்னடத்துல கையெழுத்துப் போடவும், கொஞ்சம் படிக்கவும் தெரியும். எல்லாம் அவங்க கத்துக் கொடுத்ததுதான். நான் சோர்ந்துகிடந்தப்ப எல்லாம் எனக்கு ஆறுதலாக இருந்ததும் அவங்கதான்!''

 உடனே நம்மாளுங்க நக்சலைட்டுக்கும் ,உங்களுக்கும் என்ன தொடர்பு?ன்னு ஒரு கேஸ் போட்டு இருப்பாங்களே?


2. ''சிறைக்குள் மண்ணெண்ணெய் கடத்தியதாக உங்கள் மீது புகார் சொல்லப்பட்டதே..?''

''அது ஒரு பெரிய கூத்துங்க! ஜெயிலுக்குள்ள இருக்குற பொண்ணுங்களுக்கு எம்ப்ராய்டரி சொல்லிக் கொடுத்தாங்க. நானும் கத்துக்கிட்டு இருந்தேன். எம்ப்ராய்டரிக்கு டிரேஸ் பேப்பர்ல பயன்படுத்த மண்ணெண்ணெய் தேவைப்பட்டது. அதுக்காகக் கேட்டேன்.

உங்க வீட்டுல இருந்து கொண்டுவந்து கொடுக்கச் சொல்லுன்னு வார்டன் சொன்னார். அக்காகிட்ட சொன்னேன். அவங்க ஒரு சின்ன டப்பாவுல 50 மில்லி கொண்டுவந்தாங்க.
நான் தற்கொலை பண்ணிக்கிறதுக்காக மண்ணெண்​ணெய் கடத்தினதா என் மேல் புகார் பதிவு செஞ்சு விசாரணை நடத்தினாங்க.

அதுக்குப் பிறகுதான் மைசூர்ல இருந்து பெங்களூரு ஜெயிலுக்கு மாத்திட்​டாங்க. ஜெயிலுக்குள் எம்ப்ராய்டரியைத் தெளிவாக் கத்துக்கிட்டேன். நானே ஒரு சேலையில எம்ப்ராய்டரி போட்டேன் பாருங்க...'' என்று ஒரு சேலையைக் காட்டுகிறார்.

அடடா.. இந்த மேட்டரை இப்போ சொல்லி இருக்கீங்களே..? அண்ணன் நக்கீரன் கோபால்ட்ட அப்பவே  சொல்லி இருந்தா  அண்னன் நக்கீரன்ல ஒரு காட்டு காட்டி இருப்பாரு.. அதை வெச்சு 4 வாரம் எக்ஸ்க்ளூசிவ் மேட்டர் ஓட்டி இருப்பாரே..?

3. ''நீங்க ஆரம்பிச்ச மலை வாழ் மக்கள் இயக்கம் எந்த அளவில் இருக்குது..?''
''மலை வாழ் மக்களோட உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கத்தான் அந்த இயக்கத்தை ஆரம்பிச்சேன். நான் ஜெயிலுக்குப் போயிட்டதால், கடந்த மூணு வருஷமா அதை நடத்த யாரும் இல்லை.

இப்போ அதை நடத்தும் அளவுக்கு என்கிட்ட வசதி இல்ல.

 காட்டுல கட்டு கட்டா கணவர் சேர்த்து வெச்ச பணம் எல்லாம் என்னாச்சு?


ஏன்னா, புள்ளைங்க ரெண்டு பேருக்குமே இந்த வருஷம் ஃபீஸ் கட்டணும். பெரியவ, காலேஜ்ல கடைசி வருஷம் படிக்கிறா. சின்னவ, பிளஸ் டூ எழுதி இருக்கா. அவளையும் காலேஜ்ல சேர்த்தாகணும். இப்படி நிறையச் செலவுகள் இருக்குது. அந்தக் கடமையை முடிச்சிட்டு, அதுக்குப் பிறகு முழு நேரமா மலை வாழ் மக்களுக்காகத்தான் சேவை பண்ணப்போறேன்!''

4. ''அரசியல் திட்டம் இருக்கா..?''

''என் கணவர் இறந்த பிறகு, நான் எல்லா சோதனைகளையும் சந்திச்சிட்டேன். எல்லா அரசியல்வாதிகளையும் பார்த்துட்டேன். எல்லோருமே சுய நலத்தோடதான் இருக்காங்க.

 ஆமா.. சுய நலமா இருந்தாதான் அவங்க அரசியல் வாதி.. பொது நலமா இருந்தா அவங்க காந்திய வாதி


அதனால, இனி யாரையும் நம்பி அரசியல்ல இறங்குற எண்ணம் எனக்கு இல்லை. நான் உண்டு.. என் குடும்பம் உண்டுன்னு அமைதியா இருக்கணும்.  இனி என் குழந்தைங்களோட எதிர்காலம்தான் எனக்கு முக்கியம்!''

 பார்த்தீங்களா? நீங்களும் சுயநலமாத்தான் இருக்கீங்க.. அப்போ கண்டிப்பா நீங்களும் அரசியல்வாதி ஆக  வாய்ப்பு உண்டு.. 

Friday, April 29, 2011

ஒழுக்கத்துக்கு சம்பந்தமே இல்லாத சினிமாத் துறை - கவிஞர் வாலி

https://lh4.googleusercontent.com/-FWnZ8RSOqsM/TXj1XVoGkqI/AAAAAAAAtNA/1h_Xwms2ijU/s1600/anushka-hot-vaanam-movie-stills%25281%2529.jpg

1.ஒழுக்கத்துக்கு சம்பந்தமே இல்லாத சினிமாத் துறை - கவிஞர் வாலி#அடடா.. அதனாலதான் 40 வருஷத்துக்கும் மேலே அங்கேயே இருக்கீங்களா வர மனசில்லாம?

---------------------------

2. பூவா? தலையா? படத்துக்கு பாதி சம்பளம் தான் குடுத்தாங்க-நடிகை ஷெரீன் புகார் #அரை குறையான டிரஸ்ல நடிக்கறதா ஒத்துக்கிட்டு பல்டி அடிச்சீங்களோ?

 --------------------------------
 3. இப்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணம் இல்லை-நடிகை கரண்#40 வயசு ஆன பின்னும் அப்படி ஐடியா இல்லையா? இப்போ இல்லாட்டி எப்போ?

-----------------------------

4.பிரான்ஸ் செல்கிறது திருத்தனி டீம்-இயக்குநர் பேரரசு#மொட்டை போட திருப்பதியோ பழநியோ போனா பத்தாதா?

--------------------------

5.ஜெனிலியாவுக்கு ஜூலையில் திருமணம்# உங்க கல்யாண வாழ்க்கையில்” ஜெயம்” கிடைக்க வாழ்த்துக்கள்

----------------------
http://2.bp.blogspot.com/_YcU7A6403D0/TUHOrQ1qX6I/AAAAAAAAASo/SDA7_5aiZfU/s1600/kiran003.jpg
6.ஈரோட்டை சேர்ந்த ரஞ்சனியை, கார்த்திக்கு திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர்# அப்பாடா.. நம்ம ரூட்டு க்ளியர்.. தமனாவுக்கு ஒரு கவிதை எழுதலாம்

-------------------------------

7.கட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்-கருணாநிதி#உங்க குடும்பத்துல யார் யார் இருக்காங்கன்னு எங்களுக்கே தெரியுமே? நீங்க சொல்லனுமா? தலைவரே,.

----------------------

8.தங்கபாலு-வேட்பாளர் தேர்வு, நான் மட்டும் முடிவு செய்வது அல்ல#ஆமா சம்சாரத்தைக்கேட்காம எந்த முடிவும் எடுக்க மாட்டாரு,ஆனா கவுத்துடுவாரு

------------------------

9.உதயநிதி தனது பெண் குழந்தைக்கு அழகான தமிழ் பெயரை தேடிக் கொண்டிருக்கிறார்.#ஜெயான்னு வைங்க.அப்பவாவது அய்யா ஜெ த்வேஷத்துல இருந்து மாறட்டும்
 http://mimg.sulekha.com/sherin/stills/sherin-newhot06.jpg
_-----------------------------

10. சிம்பு எழுதிய எவன்டி உன்னை பெத்தான் பாடலை ஒன்றரை மணி நேரத்தில் மெட்டமைத்து உள்ளனர்.#வானம் வந்தா ஏழரை யாருக்குன்னு தெரிஞ்சிடும்?


-----------------------------

Thursday, April 28, 2011

ஆனந்த விகடன் VS - ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் பேட்டி

http://www.hope.ac.uk/thebighope/images/content/abdul%20kalam.jpg 
விகடன் மேடை - அப்துல்கலாம்

 'நண்பர்களே! உங்கள் கேள்விகளை எல்லாம் படித்துப் பார்க்கும்போது, எனக்கு ஓர் எண்ணம் தோன்றுகிறது. அதாவது, நம் நாட்டின் இளைய சமுதாயத்துக்கு, 'என்னால் முடியும்’ என்ற நம்பிக்கை மிகவும் முக்கி யம். அது நல்ல புத்தகங்களில் இருந்தும், நல்ல பெரியோர்களிடம் இருந்தும், நல்ல ஆசிரியர்களிடம் இருந்தும், தெய்வீகப் பெற்றோர்களிடம் இருந்தும்தான் கிடைக்கும்.

'என்னால் முடியும்’ என்ற நம்பிக்கை உங்களுக்குள் உதயமானால், மக்களுக்கு 'நம்மால் முடியும்’ என்ற நம்பிக்கை வளரும். நம்மால் முடியும் என்ற நம்பிக்கை வந்தால், இந்தியாவால் முடியும். அப்படிப்பட்ட நம்பிக்கை ஏற்பட்டால், வளமான இந்தியாவை... ஓர் அமைதியான இந்தியாவை நம்மால் உறுதியாக அமைக்க முடியும். 60 கோடி இளைய சமுதாயத்தின் சக்தி, 'நம்மால் செய்ய முடியும்’ என்ற நம்பிக்கையின் சக்தியாக மாறுமானால், இந்தியா 2020-க்குள் வளர்ந்த நாடாக மாறும் என்பது திண்ணம்!''

 - ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்
எஸ்.சங்கரன், காரைக்குடி.

1.''உங்கள் ரோல் மாடல் யார்?''

''என் 10-வது வயதில், பறவையின் பறக்கும் விதம்பற்றிக் கற்பித்து, வாழ்க்கையில் பறக்க வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்த என் ஆசிரியர் சிவசுப்பிரமணி ஐயர்தான் என் ரோல் மாடல்!''

கே.மாலதி, நாச்சியார்புரம்.

2. ''நீங்கள் ஜனாதிபதியாக இருந்தபோது நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஏதாவது சொல்லுங்கள்?''

''நான் 11-வது குடியரசுத் தலைவராக இருந்தபோது, தினமும் குறைந்தது, 100 மாணவர்களிடமாவது உரையாடுவது வழக்கம். அப்போது ஒருநாள், 9-ம் வகுப்பு மாணவன் என்னுடைய கேள்விக்குப் பதில் அளித்தான். பார்வையற்ற அந்த மாணவனின் பெயர் ஸ்ரீகாந்த்.

அவன் சொன்னான், 'நான் ஒருநாள் இந்தியாவின் பார்வையற்ற முதல் ஜனாதிபதி ஆவேன்’ என்று. என்ன ஒரு லட்சியம், தன்னம்பிக்கை அந்த மாணவனுக்கு!

அந்த மாணவன் அதன் பின் படித்து 10-ம் வகுப்பில் 90 சதவிகித மதிப்பெண்கள் பெற்றான். 12-ம் வகுப்பில் 96 சதவிகித மதிப்பெண்கள் பெற்றான். அவனது லட்சியம், அமெரிக்காவின் பாஸ்டன் மாநகரில் உள்ள  MIT-ல் கல்வி கற்பதாகும்.

முதன்முறையாக  MIT அவனுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க அனுமதி அளித்தது. அவனைப் படிக்கவைக்க, 'லீட் இந்தியா 2020’ என்ற இயக்கம், GE கம்பெனி உதவியோடு அமெரிக்கா அனுப்பியது. இதில் என்ன சுவராஸ்யம் என்றால், GE கம்பெனி மேலாளர் அவனுக்கு, 'நீ படித்து முடித்ததும் உனக்கு வேலை தரத் தயாராக இருக்கிறோம்!’ என்று இ-மெயில் அனுப்பினார்.

அதற்கு ஸ்ரீகாந்த், 'உங்கள் உதவிக்கு நன்றி. ஒருவேளை, நான் இந்தியாவின் பார்வையற்ற முதல் ஜனாதிபதி ஆகாவிட்டால், உங்கள் அழைப்பை ஏற்கிறேன்’ என்று பதில் அனுப்பினான். என்ன ஒரு தன்னம்பிக்கை. இதுபோல, கொண்ட லட்சியத்தில் மாறாத உறுதி இளைய சமுதாயத்துக்குத் தேவை!''

இள.செம்முகிலன், விருத்தாச்சலம்.

3.''நீங்கள் தமிழ் சினிமாக்கள் பார்ப்பது உண்டா? உண்டு என்றால், சமீபத்தில் பார்த்த படம் என்ன?''

''கடந்த 50 வருடங்களாக சினிமா பார்க்கவில்லை. அதனால் நான் இழந்தது என்று ஏதும் இல்லை!''

ப.நலங்கிள்ளி, திருப்பத்தூர்.

4.''பால்ய கால சந்தோஷத் தருணங்களை நினைவுகூருங்களேன்?''

''நான் மேல்நிலைக் கல்வி படிக்கும்போது, தமிழ் பாடத்தில் 100-க்கு 95 மதிப்பெண்கள் பெற்றேன். என் தமிழ் ஆசிரியர் எனது விடைத் தாளை வகுப்பு முழுவதும் காண்பித்து, அனைவரும் இப்படி மார்க் எடுக்க வேண்டும் என்று கூறினார். அப்போது எனக்குக் கிடைத்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை!''

பொன்.சிங்கமுத்து, கும்பகோணம்.

5.''கவிஞர் நீங்கள். காதலித்தது இல்லை என்று சொன்னால், நம்ப மாட்டேன். உங்கள் முதல் காதலி யார்?''

''அறிவுத் தாகம்!''
ஆ.சங்கர், திருப்பூர்.

'5. B. 'உங்களின் கல்லூரிக் காலத்தில், உங்களோடு படித்தவர் எழுத்தாளர் சுஜாதா, அவருடனான உங்களின் நினைவுகளை எங்களிடம் பகிர்ந்துகொள்ளலாமே?''

''நானும் சுஜாதாவும் எப்போதும் முதல் பெஞ்சில் அமர்ந்து இருப்போம். ஆசிரியர் கேள்வி கேட்டு முடிப்பதற்கு முந்தியே நாங்கள் முந்திக்கொண்டு, எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிப்பதால், எங்களுக்கு முந்திரிக்கொட்டை என்று பெயர். சுஜாதா என் இனிய நண்பர்!''

ப.சிவராமன், பழநி.

'6. 'விஞ்ஞானி, ஆசிரியர், குடியரசுத் தலைவர் - உங்கள் மனதுக்கு நெருக்கமாக இருந்த பொறுப்பு எது?''

''ஆசிரியர்!''

ஜெ.ஜெர்லின் அபிஷகா, கன்னியாகுமரி.

7. ''இந்தியாவில் வல்லரசு என்ற வார்த்தையை நீங்கள்தான் பிரபலம் ஆக்கினீர்கள். ஆனால், காலம் காலமாக வல்லாதிக்க எண்ணம்தானே பெரிய நாடுகளை எல்லாம் சிதறடித்து வந்திருக்கிறது?''

''நான் சொல்வது 2020-ல் இந்தியா பொருளாதார மேம்பாடு அடைந்த, பாதுகாப்பு மிகுந்த, அமைதியான, ஏற்றத்தாழ்வு இல்லாத சமதர்ம சமுதாயம்கொண்ட வளர்ந்த நாடு என்ற அந்தஸ்தை எட்டுவோம் என்றுதான். தவிர, வல்லரசு என்ற கோட்பாடு உலகத்திலேயே இப்போது இல்லை!''
 http://robinindia2020.com/abdulkalam.jpg
எஸ்.பெனாசிர், புதுக்கோட்டை.

8.''2020-ல் நிச்சயம் உங்களின் கனவு நிறைவேறும் என்று இப்போதும் நம்புகிறீர்களா?''

''60 கோடி இளைய சமுதாயத்தின் சக்தி, 'நம்மால் செய்ய முடியும்’ என்ற நம்பிக்கையின் சக்தியாக மாறுமானால், இந்தியா 2020-க்குள் வளர்ந்த நாடாக மாறும் என்பது திண்ணம்.

எனது கனவு, 125 கோடி மக்களின் முகத் தில் மகிழ்ச்சி கலந்த புன்னகையைப் பார்ப் பதுதான். அது இந்தியாவின் எழுச்சிகொண்ட இளைய சமுதாயத்தால் கண்டிப்பாக நிறை வேறும் என்று நம்புகிறேன்!''

சே.செல்லத்துரை, மேட்டுப்பாளையம்.

9.''கல்பாக்கம் அணு உலை கடுமையான பூகம்பத்தைத் தாங்க முடியாத இடத்தில் இருக்கிறது என்கிறார்களே... உண்மையா?''

''இந்திய அணு உலைகளின் பாதுகாப்பு மிக முக்கியமானது. அவற்றை மீண்டும் கண் காணித்து, சுனாமியுடன் பூகம்பமும் சேர்ந்து வந்தால், அதைத் தாங்கிச் செயல்படக்கூடிய சக்தி இருக்கிறதா என்பதைத் தீவிரமாக மறு பரிசீலனை செய்து, மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது!'' 

Wednesday, April 27, 2011

ஃபேமஸ் ஃபிகர்களை கலாய்ப்பது சாமி குத்தமா?

http://www.filmyfriday.com/wp-content/uploads/2009/07/anjali-abrol.jpg 

1.சிம்பு கோ படத்தை திட்டினாரா? என்பது எனக்குத்தெரியாது- ஜீவா#ச்சே ,ச்சே இருக்காதுங்க.. அவர் நயன் தாராவை மட்டும் தான் திட்டுவாரு

-------------------------------
2.சிறந்த படம் மைனா ; நார்வே விருதுகள் அறிவிப்பு!#மைனாவுக்கே குடுக்கறப்ப குருவிக்கு ஏன் குடுக்கலைன்னு விஜய் போராட்டம் பண்ணுவாரோ?

-------------------------------------
3.இன்றும் வசூலில் சாதனை படைக்கும் எம்.ஜி.ஆர்., படங்கள்#அவரை வெச்சு ஓட்டு வேட்டையே நடக்குது,வசூல் வேட்டை நடக்காதா? என்ன/


----------------------------
4.கலைத்துறையில் என் குடும்பம் இருக்கக்கூடாதா? கருணாநிதி கேள்வி#தலைவா!கண்ணுக்கெட்டுன தூரம் வரை உங்க குடும்பம் மட்டும் தான் தெரியுது...

---------------------------------
5.மும்பை பெண் நிருபரை கரம்பிடித்தார் நடிகர் பிருத்விராஜ்#பேட்டி எடுக்க வந்த பொண்ணு கூட லூட்டியா?

-----------------------------
6.செம்மொழி ஆகிய தமிழ்மொழியாம்-சம்மன் வாங்கிய கனிமொழியாம் #பத்திரிக்கை செய்தி அடடா என்னா ஒரு ரைமிங்க்.

----------------------------------
7.ராமகிருஷ்ணன் -மனிதனின் வாழ்க்கை திசையை மாற்றும் திறன் புத்தகத்திற்கு உண்டு# ஃபேஸ்புக் ஆரம்பிச்சு 2மாசம் ஆகுது ஒரு ஃபிகர் கூட மாட்டலையே

-------------------------------
8. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.70 ஆகும்# அப்ப உடனடியா ஆஃபீஸ்ல பெட்ரோல் அலவன்ஸ் ஹைக் பண்ண சொல்லி கேட்க வேண்டியதுதான்,மாட்னாரு மேனேஜர்

-----------------------------
http://cinespot.net/gallery/d/433242-2/Anjali+Tamil+actress+in+Payyan+Malayalam++photos+Stills.jpg
9. ஸ்பெக்ட்ரம் ஊழலில் கனிமொழிக்கு தொடர்பு: குற்றப்பத்திரிகையில் தகவல்: தயாளு பெயர் இல்லை#ரொம்ப சின்ன பேருதானே.. ஏன் சேர்த்தாம விட்டாங்க?

--------------------------
10.பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.70 ஆகும்-செய்தி#மக்களை தினமும் வாக்கிங்க் போக வைக்க எங்கள் அரசு கொண்டு வந்த திட்டம் தான் இது.

------------------------
11. தமிழின படுகொலைக்கு கருணாநிதி காரணம்: விஜயகாந்த் குற்றச்சாட்டு#நீங்க கூடத்தான் தமிழை கொன்னேடுத்தீங்க படத்துல நாங்க சகிச்சுக்கலையா?

-------------------------------
12. பருத்தி, நூலிழை விலை சரிவு; துணி விலையும் குறைந்தது:ஜவுளி உற்பத்தியாளர்கள் அவசர ஆலோசனை#பருத்தி விலையை படுத்தி எடுக்கப்போறீங்களா?

----------------------------
13. கூத்தாடிகளுக்கு அரசியல் தர்மம் உண்டா?- சுப்பிரமணியன்சாமி#அதெல்லாம் எதுக்கு.. நடிக்கத்தெரிஞ்சா போதாதா?

-------------------------
14.ரூ.50க்கு குழந்தை : கோவையில் புது பிசினஸ்: அதிர்ச்சி தகவல் அம்பலம்#மீண்டும் அய்யா ஆட்சி அமைந்தால் இலவச குழந்தை திட்டம் அமல் ஆகும் கபர்தார்

--------------------------
15. குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, இலவசங்களை அறிவித்து, மக்களை பிச்சைக்காரர் ஆக்கவில்லை-சீமான் #அப்போ கலைஞரை பெக்கர் மேக்கர்ங்கறீங்களா?.

-------------------------
16. ரியாலிட்டி ‌ஷோ மூலம் கலக்க வருகிறார் பூனம் பாண்டே# நிகழ்ச்சி ஹிட் ஆனா பிட் உண்டா?
 http://www.glamour.raafatrola.com/sites/default/files/Poonam_Pandey_300.jpg?1301675101
-----------------------
டிஸ்கி -1  கமெண்ட் போட வர்றவங்க பதிவை படிச்சுட்டு ஏதாவது கருத்து கூறவும்.அதை விட்டுட்டு சாப்டாச்சா? வீட்ல திட்டா? ஆஃபீஸ்ல மேனேஜர்ட்ட தகராறா? என சம்பந்தமில்லாமல் கேட்டு கடுப்படிக்க வேண்டாம்..ஹி ஹி 

டிஸ்கி 2 - கண்ணியமான பதிவர் நடத்தும்  கவுரவமான வலைத்தளம் இது என்பதால் டீசண்ட்டான கமெண்ட்ஸ்சை போடவும். இப்படிக்கு மானமிகு பதிவர் சி பி. ஹி ஹி  

டிஸ்கி 3 - பதிவைப்பற்றி கவலையே படாமல்,படித்தே பார்க்காமல் ஆஹா அபாரம் என டெம்ப்ளேட் கமெண்ட்ஸ் போடுபவர்களிடம் க்ராஸ் கொஸ்டீன் கேட்கப்படும்,.சரியான பதில் அளிக்கவில்லை எனில் அவர்கள் தளத்தில் மைனஸ் ஓட்டு போடப்படும் ஹி ஹி 

Sunday, April 24, 2011

நாவரசு கொலையில் 'திடுக்' திருப்பம்..தப்பி ஓடிய ஜான் டேவிட்! ஜூ வி பர பரப்பு கட்டுரை


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgIMGVUPXOJ3j9IO3-SXbinKN2oWeEhtn93H5wozAe67b1NxoBvvxImNFX7qanupWH1ODTVXGPkUol8tiiQENCWpAU06EQZPUtB5s_gQMQInXMkjXsSGvrBw4KSp5PL7sS9S373k_ngWxcE/s1600/0409223w.jpg
15 வருடங்களுக்கு முன்பு தமிழகத்தையே திடுக்கிடவைத்தது, நாவரசு கொலை
விவகாரம்! கடந்த ஏப்ரல் 20-ம் தேதிதான் உச்ச நீதிமன்றத்தில் குற்றவாளி ஜான் டேவிட்டுக்கு இரட்டை ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது. ஆனால், ஜான் டேவிட் ஆஸ்திரேலியாவுக்குத் தப்பி ஓடிவிட்டதால், மீண்டும் இந்த விவகாரம் சூடுபிடித்துள்ளது.

ஆமா.. நம்மாளூங்க தப்பி ஓடும் வரை வேடிக்கை பார்த்துட்டு , அதுக்கப்புறமா ஆள் விட்டு தேடுவாங்க.. 


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தவர் நாவரசு. இவரது தந்தை பொன்னுசாமி, அந்தக் காலகட்டத்தில் சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்தார்.
1996 நவம்பர் 6-ம் தேதி திடீரென்று நாவரசு காணாமல் போனார். 'காணாமல் போனாரா... கடத்தப்பட்டாரா?' என்று போலீஸ் குழம்பியது. நாவரசு காணாமல் போவதற்கு முன்பு கடைசியாக ஜான் டேவிட்டுடன் நடந்து சென்றதைப் பார்த்த மாணவர்கள், போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.




அதன் பிறகு ஜான் டேவிட்டை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்தனர். நாவரசு படித்த கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவந்த ஜான் டேவிட், கரூரைச் சேர்ந்தவர். 'தனக்கு ரெக்கார்டு நோட் எழுதிக்கொடுக்கும்படி ஜூனியரான நாவரசுவை ஜான் டேவிட் டார்ச்சர் செய்தபோது, 'ஜாக்கிரதை... என் தந்தை பல்கலைக்கழகத் துணைவேந்தர்’ என்று கோபமாகச் சொல்லி இருக்கிறார். 

இதனால் ஆத்திரமடைந்த ஜான் டேவிட், 'சமாதானமாகப் போவோம்' என்று பொய்யாகச் சொல்லி நாவரசுவைத் தனியாக அழைத்துச் சென்று கண்மூடித்தனமாகத் தாக்கியதில், நாவரசுக்கு உயிர் பிரிந்துவிட்டது. அதன் பிறகு, உடலைத் துண்டு துண்டாக அறுத்து அப்புறப்படுத்தி இருக்கிறார் ஜான் டேவிட்' என்று முதல் கட்ட விசாரணையில் அப்போதைய கடலூர் மாவட்ட எஸ்.பி-யான ரவிச்சந்திரன் தெரிவித்து இருந்தார்.

15 நாட்களுக்குப் பிறகு பல்கலைக்கழகக் குளத்தில் சிதைந்த நிலையில் ஒரு ஆணின் தலை கிடைத்தது. சென்னை தாம்பரத்திலிருந்து கிளம்பிய 21 ஜி பஸ்ஸில் ஒரு பார்சலில் தலையில்லா முண்டம் கிடைத்தது. மரக்காணம் அருகே ரயில்வே டிராக் பக்கம் கை, கால்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இவற்றை எல்லாம் போலீஸார் ஒன்றுபடுத்தி, 'நாவரசுவின் உடல்தான்’ என்று உறுதி செய்தனர். சவாலான இந்த வழக்கை விசாரித்த கடலூர் நீதிமன்றம், 1998-ல் ஜான் டேவிட்டை குற்றவாளி எனக் கருதி இரட்டை ஆயுள் தண்டனை அளித்தது. இதை எதிர்த்து, ஜான் டேவிட் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். போதிய ஆதாரம் இல்லை என்று சொல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.பாலசுப்பிரமணியம், வி.பக்தவத்சலு ஆகியோர் ஜான் டேவிட்டை விடுதலை செய்தனர். இதையடுத்து, கிறிஸ்துவ போதகராக மாறி தேவாலயத்தில் பணியாற்றி வந்தார் ஜான் டேவிட்.

 பாவம். அந்த மதத்துக்கே தீராத களங்கம்


2002-ம் வருடம் தமிழக அரசு இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, முகுந்தகம் சர்மா தலைமை​யிலான பென்ச், ''மாணவர் நாவரசு கொலை வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் செயல்பாடுகள் அதிருப்தி அளிப்பதாக உள்ளது. 

இந்த வழக்கில் சரியான விசாரணை நடத்தாமல், ஜான் டேவிட்டுக்கு கீழ் கோர்ட்​டில் விதிக்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையை ரத்து செய்ததை ஏற்றுக்கொள்ள முடி​யாது!'' என்று குறிப்பிட்டதோடு, ''ஜூனி​யர் மாணவரான நாவரசுவை, ராகிங் என்கிற பெயரில் திட்டமிட்டு சீனியர் மாணவர் ஜான் டேவிட் கொலை செய்தது, ஆதாரப்பூர்வமாகவும், சாட்சிகள் மூலமாகவும் உறுதி செய்யப்​பட்டு இருப்பதால், ஜான் டேவிட்டுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனை உறுதி செய்யப்​படுகிறது. எனவே, ஜான் டேவிட் கோர்ட்டில் உடனடியாக சரணடைய வேண்டும்!'' என்று தங்களது தீர்ப்பில் தெரிவித்தனர்.


உடுமலைப்பேட்டையில் வசித்து வரும் நாவரசுவின் தந்தை பொன்னுசாமி, மலையாண்டி கவுண்டனூர் என்கிற ஊரில் பொன்.நாவரசு மெட்ரிக் பள்ளி ஒன்றைத் துவக்கி நடத்தி வருகிறார். அவர் அமெரிக்காவில் மகள் வீட்டுக்குச் சென்று இருந்த காரணத்தால், அவர் சார்பாக, மைத்துனர் சிவ.சத்தியசீலன் பேசினார்.

''மருத்துவம் படிக்கப்போன நாவரசுவை, கதறக் கதறக் கொன்ற கொலைகாரன் இத்தனை காலமும் வெளியில் நடமாடியதை நினைக்கும்போது மனதுக்குக் கஷ்டமாக இருக்கும். குற்றம் செய்தால், சட்டத்தின் முன்பு தண்டனை அனுபவித்தே தீர வேண்டும் என்பதை இந்தத் தீர்ப்பு நிரூபித்து இருக்கிறது!'' என்றார் சோகத்துடன்.

டெல்லி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வாதாடிய வக்கீல் தனஞ்செயன், ''இந்த வழக்​கில் தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் குற்றவாளி​களுக்காக ஆஜரான பிரபல வழக்கறிஞர் சுசில்குமார் எதிர்த் தரப்புக்காக வாதாடினார். 

ஜான் டேவிட்டின் சூட்கேஸிலும் கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட கருவிகளிலும் நாவரசுவின் ரத்தம் படிந்து இருந்தது முக்கியமான ஆதாரமாக இருந்தது. நாவரசுவுக்கு முன்பே, ஜான் டேவிட் பலரை ராகிங் செய்ததற்கான சாட்சியங்கள், கொலைக்குப் பிறகு பதற்றத்துடன் ஜான் டேவிட் நடமாடியதைப் பார்த்த சாட்சிகளை மேற்கோள் காட்டினேன். 

ஜான் டேவிட்டுக்கு திருமணம் ஆனதையும், அவர் மத போதகராக இருப்பதையும் காட்டி அனுதாபம் பெற முயன்றதைக் கடுமையாக எதிர்த்தேன். இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ஜான் டேவிட்டுக்கு கீழ் கோர்ட்டில் விதிக்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையை உறுதி செய்தனர்!'' என்றார்.

கடலூர் மாவட்ட போலீ​ஸார் ஜான் டேவிட்டை தேடிய​போதுதான், ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் சென்ற தகவல் கிடைத்துள்ளது. உடனே, இன்டர்போல் போலீஸ் உதவியுடன் ஜான் டேவிட்டைத் தேடும் நடவடிக்கையில் இறங்கி இருக்கிறார்கள்!

 கடைசியாக வந்த தகவல் -  சென்னை, கரூர் மற்றும் திருச்சி ஆகிய பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், ஜான் டேவிட் சென்னை அடையாறில் தங்கி, வேளச்சேரியில் உள்ள பி.பி.ஓ., கம்பெனியில் பணிபுரிந்ததை கண்டுபிடித்தனர். போலீசார் தேடுவதையறிந்த ஜான் டேவிட், பாண்டிச்சேரிக்‌கு சென்று விட்டார். இந்நிலையில், இன்று மாலை 4.30 மணிக்கு கடலூர் மத்திய சிறையில் ஜான் டேவிட் தானாகவே வந்து சரணடைந்தார்.