Monday, August 03, 2026

Enola Holmes 3 (2026)-ஆங்கிலம்/தமிழ் - சினிமா விமர்சனம் (க்ரைம் மிஸ்ட்ரி டிடெக்டிவ் திரில்லர்)@நெட் பிளிக்ஸ்

 




இந்தப்படத்தின் பாகம் 1,பாகம்2 பார்க்காதவர்களுக்கும் கதை புரியும். இது ஒரு தனிக்கதை.த எனோலா ஹோம்ஸ் மிஸ்ட்டீரியஸ் என்ற புத்தகத்தைத்தழுவி இதன் திரைக்கதை அமைக்கப்பட்டது.


நெட் பிளிக்சில் 1/7/2026 முதல் தமிழ்  டப்பிங் கில் காணக்கிடைக்கிறது.குடும்பத்துடன் பார்க்கத்தகுந்த யு படம் தான் இது. தியேட்டர்களில் வெளியாகாமல் நேரடி ஓடிடி ரிலீசாக வந்திருக்கிறது.


முதல் இரு பாகங்களிலும் எனோலா ஹோம்ஸ் யார்?அவரது குடும்பப்பின்னணி என்ன?துப்பறியும் கலையில் அவர் எப்படி வல்லுனர் ஆகிறார்?அவர் டீல் செய்த கேஸ்கள் பற்றி விவரிக்கப்பட்டிருக்கும்.

ஸ்பாய்லர்  அலெர்ட் 

பிரபல துப்பறிவாளர் ஷெர்லக் ஹோம்ஸின் தங்கை தான் எனோலா ஹோம்ஸ்.காணாமல் போன பல பொருள்களை,பல மனிதர்களைக்கண்டு பிடிப்பவர் தான் ஷெர்லாக் ஹோம்ஸ்.அவரே காணாமல் போகிறார்.


நாயகி எனோலா ஹோம்ஸ்க்கு ஒரு காதலன் உண்டு.அரச பரம்பரை.அவனை நாயகி திருமணம் செய்து கொள்வதில் அண்ணனான ஷெர்லக் ஹோம்ஸ்க்கு விருப்பம் இல்லை. ஏனெனில் அரச குடும்பத்து மருமகளாகி விட்டால் நாயகி தன் சுயத்தைத்தொலைத்து விடுவாள்.துப்பறிவாளராகத்தொடர முடியாது என்பதால் தான்.


ஆனாலும் நாயகியின் திருமணம் நடக்க இருக்கிறது.திருமணத்துக்கு  மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் தயார்.மணமகள் கிளம்பத்தாமதம் ஆகிறது.


நாயகிக்கு அப்போது தான் ஒரு தகவல் கிடைக்கிறது.நாயகியின் அண்ணன் காணாமல் போய் விட்டான்.அதாவது யாரோ அவனைக்கடத்திக்கொண்டு போய் விட்டார்கள்.இந்தத்தகவல் அறிந்ததும் நாயகி திருமணத்தைப்பற்றிக்கவலைப்படாமல் அண்ணனைத்தேடிக்கிளம்புகிறாள்.


அடுத்த சில தினங்களில் நாயகியின்  வருங்கால மாமியாரும் கடத்தப்படுகிறார்.இருவரையும் கடத்தியது ஒருத்தி தான்.அவள் புரொபசர் ஆன வில்லி தான் என்பதை நாயகி. கண்டுபிடிக்கிறாள்.


வில்லி எதற்காக நாயகியின் அண்ணனை,வருங்கால மாமியாரைக்கடத்தினாள்? நாயகி எப்படி இருவரையும் மீட்டார் என்பதே மீதித்திரைக்கதை


நாயகியாக மில்லி பாபி பிரவுன் நடித்திருக்கிறார்.இவரது  முக அமைப்பு கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது.துடிப்பான நடிப்பு.


நாயகியின் காதலன் ஆக லூயிஸ் பார்ட்ப்ரிட்ஜ் செம பர்சனாலிட்டியாக இருக்கிறார்.அவரது ஆடை வடிவமைப்பு ,கம்பீரம் அருமை.

நாயகியின் அம்மாவாக ஹெலினா போன்ஹாம் கார்டர் ஆக்சன் காட்சிகளில் அசத்துகிறார்.

நாயகிக்கு உறுதுணையாக வரும் டாக்டராக  ஹிமேஷ் படேல் நடித்திருக்கிறார்.இந்தியர் போலவே முகம்.

வில்லியாக வருபவரும் முகபாவனைகளில் ,ஆக்சனில் மிரட்டுகிறார்.


ஜாக் தோம் திரைக்கதை அமைக்க இயக்கி இருப்பவர் பிலிப் பரண்ட்டனி

சபாஷ்  டைரக்டர்


1 இருவர் காணாமல் போகின்றனர்.அவர்களைக்கண்டுபிடிப்பதுதான் கதை என நாம் நினைத்திருக்கும்போது வில்லியின் நோக்கம் தங்கப்புதையலை அடைவது என்ற ட்விஸ்ட் அருமை

2 ஒவ்வொரு லொக்கேஷனையும் காட்டும் முன் அதன் மினியேச்சர் செட்டிங்கைக்காட்டி விட்டு கிராபிக்சில் உண்மை பில்டிங்கைக்காட்டும் ஐடியா அருமை.அதே போல் மாறுபட்ட லொக்கேஷன்கள் கண்களுக்குக்குளிர்ச்சி

3 நாயகி,வில்லி இருவருக்குமிடையேயான ஆக்சன் சீக்வன்ஸ் அருமை.அதே போல் புரட்சிப்படை வீரனை நாயகி மடக்கும் சீனும் வீரதீரம் மிக்கது.

4 பிரமாதமான ஒளிப்பதிவு,ஆர்ட் டைரக்சன் ,பின்னணி இசை போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் அருமை.

5 நாயகிக்கும் ,காதலனுக்குமான எனோஷனல் சீன்ஸ் ,,நாயகிக்கும் அண்ணனுக்குமான வாக்குவாதங்கள் நல்ல எமோஷனல் கனெக்டைத்தருவதால் படத்துடன் ஒன்ற முடிகிறது

6 உலகின் சிறந்த டிடெக்டிவே கடத்தப்பட்டிருக்கிறார் என்றால் வில்லி எவ்வளவு பவர்புல்லானவர்?அவரை ஜெயிக்க நாயகி எவ்வளவு சிரமப்பட வேண்டும் என்ற எண்ணத்தை நமக்குள் விதைத்து விடுவதால் ஆர்வத்துடன் பார்க்க முடிகிறது.

7 அடிக்கடி நாயகி ஆடியன்சைப்பார்த்து (கேமராவைப்பார்த்து) பேசும் டெக்னிக் ரசிக்க வைக்கிறது

  ரசித்த  வசனங்கள் 

1 நல்ல கதைகள் ஒரு திருமணத்தோடு ஆரம்பிக்கும்


2 நீ  இரண்டு பாதைகளைத்தேர்ந்தெடுக்கலாம்.1 உன்னோடது 2  மத்தவங்க உனக்குக்காட்டுவது

3  என் அண்ணன் வசதி உள்ளவங்களுக்கு உதவி செய்தார்.நான் தேவை உள்ளவங்களுக்கு உதவி செய்தேன்.

4  ஒரு டிடெக்டிவ் இன்னொரு டிடெக்டிவ்க்கு தடயத்தை விடாமல் போக மாட்டான்.

5  ஒரு மர்மத்தைக்கண்டு பிடிக்க அதன் முடிச்சை அவிழ்க்கனும்

6  வாழ்வின் அர்த்தம் அந்த வாழ்வை வாழ்வதில் தான் உள்ளது.

7  உனக்கு  ஒரு பொருள் கிடைக்கலைன்னா வேற யாருக்கும் அது கிடைக்கக்கூடாது.மொத்தத்தையும் கொளுத்திடு.

8 ஒரு புதிர் அதை உருவாக்குபவனின் தன்மையுடன் இருக்கும்


9  நீ  ஏன் என் கிட்டே இவ்ளோ நல்லவனா நடந்துக்கறே?


எனக்கு அப்படி இருக்கத்தான் தெரியும்


10.முதலில் லேடியா இருந்தவதான் இப்போ ரவுடியா இருக்கேன்.

11 பெரும்பாலும் நமக்குக்கிடைக்கும் பதில்கள் நாம் தேடும் பதில்களாக இருக்காது.

12 உனக்கு முன்னால் இருப்பதையும் கவனி,பின்னால் இருப்பதையும் கவனி



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 கடத்தியது யார்?என்பது முதல் 40 நிமிடங்களிலேயே நமக்குத்தெரிந்துவிடுகிறது.காரணத்தையும் யூகிக்க முடிகிறது.


2  டிடெக்டிவ் ஸ்டோரிகளில் வரும் அவுட் ஆப் த பாக்ஸ் திங்க்கிங் என்ற பிரில்லியண்ட் கான்செப்ட் இல்லாதது பின்னடைவு

3 முதல் பாதி மிகவும்  மெதுவாக நகர்கிறது.முதல் இரு பாகங்களில் காமெடி தூக்கலாக இருக்கும்.இதில் காமெடி குறைவு





 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் 13 + குடும்பத்துடன் பார்க்கலாம்



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  டிடெக்டிவ் ஸ்டோரி ரசிகர்கள் அவசியம் காணவேண்டிய நல்ல படம்.ரேட்டிங் 3/5



Enola Holmes 3
Release poster
Directed byPhilip Barantini
Screenplay byJack Thorne
Based on
Produced by
Starring
CinematographyMatthew Lewis
Edited byTommy Boulding
Music by
  • Aaron May
  • David Ridley[1]
Production
companies
Distributed byNetflix
Release date
  • July 1, 2026
Running time
108 minutes[2]
Countries
  • United Kingdom
  • United States
LanguageEnglish