Thursday, June 06, 2019

ஜெயிச்சா உங்க சாராய ஆலையை மூடிடறேன்னீங்களே?

1   ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு திமுக அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் - கனிமொழி # ஜெயிச்சா உங்க சாராய ஆலையை மூடிடறேன்னீங்களே?அதை முதல்ல செய்யுங்க=============
2 கமல் வெள்ளையாக இருப்பதால் நம்பிவிட்டார்கள் - தேர்தல் முடிவுகளால் சீறும் சீமான்! # அடுத்த தேர்தல் ல ரஜினி வருவாரு,அதுக்கு என்ன சொல்லி சமாளிக்கப்போறாரோ?
==============
3 ஜூன் 3-ம் தேதி வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்துகிறது திமுக# தலைவரே!அந்த 200 ருபா எப்ப கிடைக்கும்?

அதுக்குப்பதிலாத்தான்யா நன்றி==============


4 எல்லாவற்றிலும் இருந்து விலகி இருப்போம் என்று நினைத்தால் தமிழ்நாடு சுடுகாடாகி விடும்! : ஹெச்.ராஜா # ராஜாவுக்கும் ரஜினிக்கும் அட்மின் ஒருத்தர்தானா?இல்லை ,2 பேருக்கும் ஒருத்தரே எழுதிக்கொடுத்தாங்களா?


==============


5 முதலில் தண்ணீர் வரும், பின்னர் தாமரை மலரும்-தமிழிசை# மாரி1 ,மாரி2 வந்தாச்சு.தாமரை தமிழகத்தில் மலர ஒரே வழி ரஜினி யை அதிமுக தலைவர் ஆக்குவதே.கமல் துணை முதல்வர்


=============


6 காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் ராஜினாமா செய்தால் தென்மாநிலங்களில் தொண்டர்கள் தற்கொலை செய்து கொள்வார்கள் : ப.சிதம்பரம்


200 ருபா தந்தா ட்வீட் வேணா போடுவாங்க,தற்கொலை பண்ணிக்கற மாதிரி தெரியல.==============


7 காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் ராஜினாமா செய்தால் தென்மாநிலங்களில் தொண்டர்கள் தற்கொலை செய்து கொள்வார்கள் : ப.சிதம்பரம்


# ராஜீவ் படுகொலை செய்யப்பட்டபோது காங் காரங்க ஒரு ஆள் கூட அவர் கூடவோ அவர் இருந்த ஏரியால கூட இல்லையாம்.அந்த குற்றச்சாட்டுக்கே இன்னும் பதில் வர்ல==============


8 மூன்றாவது குழந்தைக்கு வாக்குரிமை வழங்கக் கூடாது!'- பாபா ராம்தேவ் சர்ச்சை பேச்சு #"குழந்தைக்கு வாக்குரிமையே கிடையாதே?18 வயசு ஆகனும்,இதுல முதல் என்ன?இரண்டாவது என்ன?மூன்றாவது என்ன?===============
9கற்றலும் கற்பித்தலும் சிறப்பாக நடத்திட மாணவர்களின் உடலநலம் மிக அவசியம் - ஆசிரியர் சங்கம்

# அடேங்கப்பா,மாணவர்கள் மேல ரொம்ப அக்கறை,மாணவர்களுக்கு மட்டும் லீவ் ,ஆசிரியர்களுக்கு தோட்டப்பணி இன்ன பிற பணி உண்டுனு சொல்லிப்பாருங்க,சிலபஸ் முடிக்கனும்னு பல்டி அடிப்பாங்க


==============


10 உதயநிதிக்கு திமுக இளைஞர் அணியில் பதவி வழங்க கட்சி நிர்வாகிகள் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை!

# தளபதியா பதவி"தந்தா அது வாரிசு அரசியல்,இப்ப தொண்டர்கள் விருப்பப்படி

அய்யோ ராமா எல்லாம் டிராமா


================


11 நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் எங்களது ஸ்லீப்பர் செல்ஸ் வெளியே வருவார்கள்: டிடிவி தினகரன்

# இப்போ ஜெயில்ல இருக்காங்களா?சந்தைல வித்தை காண்பிக்கறவன் மாதிரி இதோ கலைக்கறேன் அதோ கலைக்கறேன்கறாரு,ஒண்ணும்"நடந்தபாடிலலை


===============


12 தங்கையை பெண் பார்க்க வந்தவர் திருமணமான அக்காவோடு ஓட்டம்!"# அவசரப்பட்டுட்டாப்டி.தங்கச்சியை கட்டி இருந்தா டபுள் டெக்கர் டிரைவர் ஆகி இருக்கலாம்


===============


13 2ஜி அலைக்கற்றை வழக்கில் தி.மு.க எம்.பி -க்கள் ஆ.ராசா மற்றும் கனிமொழிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. # போன"தடவை மிஸ் ஆகிடுச்சு,இந்த"தடவை மிஸ் ஆகாது,அமைச்சரவை ல இடம் கிடைக்காட்டி என்ன?திகார் ஜெயில்"ல ஏகப்பட்ட இடம் காலியா இருக்காம்


=============


14 தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் சற்று தாமதமாகலாம்: திமுக எம்பி எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் கருத்து # ஒரு 5 வருசம் ஆகுமா?===============


15 2-வது முறையும் மோடி... பயமாக இருக்கிறது - பா.ரஞ்சித்!
# போலீசைப்பார்த்து திருடன்தானே பயப்படனும்?
கறுபபுப்பணம் வெச்சிருக்கற அரசியல்வாதிக தான் பயப்படுவாங்க,நீங்க ஏன் பயப்படறீங்க?


===============


16 தனது தாத்தாவின் மறுவடிவமாக இருக்கிறார் உதயநிதி:திமுக மாநில இளைஞரணி நிர்வாகி பைந்தமிழ் பாரி பேட்டி # இரண்டாம்"கலைஞருக்கு ஜிங்சக் அடிச்சா 200 ரூபாதானாம் ,மூன்றாம் கலைஞருக்கு சொம்பு தூக்குனா 300 ரூபாயாம்,கேள்விப்பட்டப்ப நான் நம்பலை,இப்ப நம்பறேன்


==============


17 ஸ்டாலின் இந்தியாவுக்கே வழிகாட்டும் அளவிற்கு தகுதியும், முதிர்ச்சியும் பெற்றிருக்கிறார்” - தா.பாண்டியன் #

1 சட்டத்தின் பிடியில் மாட்டிக்காம திருடுவது எப்படி?

2 துண்டு சீட்டு பாத்துப் படிச்சே பழமொழியை தப்புத்தப்பா படிப்பது எப்படி?
3 மகனை நைசாக அரசியல் வாரிசாக களமிறக்குவது எப்டி?


==================


18 11  நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை காக்க, போராட வேண்டும் என்பதை, காங்., - எம்.பி.,க்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.-ராகுல்  -

குறிப்பா காங் கோஷ்டிகள் புரி ஞ்சுக்கனும்


----------
19  காங்.,கை பொருத்தவரை, இது, ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் போன்றது. அந்த கால கட்டத்தில், நமக்கு எந்த ஆதரவும் இல்லை. இருப்பினும், ஆங்கிலேயருக்கு எதிராக போராடி, வெற்றி பெற்றோம். அதே போன்ற போராட்டத்தையும், இப்போது முன்னெடுக்க வேண்டும். -ராகுல் 


ஆங்கிலேயர்களை எதிர்த்துப்போராடி வெற்றி பெற்றாரா? இவருக்கு என்ன வயசு?

============


20   காங்.,குக்கு, 52 எம்.பி.,க்கள் உள்ளனர். பா.ஜ.,வை எதிர்த்து போராட, இந்த, எம்.பி.,க்களே போதும். -ராகுல் 


7 மடங்கு அவங்க அதிகம் , எ;ப்படி போதும்?


===============


===========

0 comments: