Monday, June 17, 2019

ஒரு லோடு லாரித்தண்ணீர் விலை ஒரு கிராம் தங்கம் விலை

 1  லோக்சபா தேர்தல் தோல்விக்காக, காங்., தலைமையை மாற்றுவது என்ற பேச்சுக்கே இடமில்லை.=ரண்தீப் சுர்ஜேவாலா:

நாங்களா பேசுனோம்? உங்க தலைவர் ராகுல்தான் பேசுனாரு, அவர் கிட்டே சொல்லலாமே?


தலைமையை மாத்துனா மட்டும் ஜெயிக்கவா போறோம்கறாரா?


==================


 2 கட்சியின் தலைராக, ராகுல் தொடர்ந்து இருப்பார். இதில், யாருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை.-ரண்தீப் சுர்ஜேவாலா:


இப்போதாங்க சந்தேகமே வருது, நான் அழற மாதிரி நடிக்கறேன், நீ ஆறுதல் சொல்லி தேற்றுவது போல் நடினு எல்லாமே ஒரு ஸ்டண்ட்டோ?

=======================

3  பெல்லாரியில், உருக்கு ஆலைக்கு, 3,667 ஏக்கர் நிலத்தை விற்கும், அரசின் முடிவை கண்டித்து, பா.ஜ., சார்பில் தர்ணா போராட்டம் நடத்தப்படும்.- எடியூரப்பா:


 எதுக்கெடுத்தாலும் போராட்டம்தானா?னு இதே பாஜக தானே மற்ற மாநிலங்களில் சலிச்சுக்கிச்சு?


==================

4 : எந்த பிரச்னைக்கும், பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண்பது தான் நிரந்தர தீர்வாக இருக்கும். அதனால், ஜம்மு - காஷமீரில், பயங்கரவாதிகள் ஆயுதம் ஏந்துவதை விட்டு, அரசுடன் பேச முன்வர வேண்டும்-  சத்யபால் மாலிக்

 பயங்கரவாதிகள் என்னைக்கு எப்போ எங்கே வாயால பேசி இருக்காங்க? தீவிரவாதத்தால , ஆயுதத்தாலதானே பேசுவாங்க ?


==================== 5  தமிழகம் முழுவதும், கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டு, மக்கள் அல்லாடி வருகின்றனர்-தினகரன்  


மழை வரும்போது அதை சேகரிக்காம அசால்ட்டா இருந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் இது ஒரு பாடம்


 மழை நீர் சேகரிப்புதிட்டம் ஜெ காலத்துல முன்னெடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது, அதை மிண்டும் செயல்படுத்தனும்

====================
6  வீராணம் குடிநீரை பெறும், தலைநகர் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்கள், மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளன. 


ஒரு லோடு லாரித்தண்ணீர் விலை ஒரு கிராம் தங்கம் விலை அளவு வந்தாச்சு


==================

7  குடிநீர் பஞ்சம்   எல்லாம் கண்டுகொள்ளாமல், காவிரி நீரை பெற, எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பதவி நாற்காலியை கெட்டியாக பிடித்துக் கொள்வதில் மட்டுமே, முதல்வர், இ.பி.எஸ்., கவனம் செலுத்தி வருகிறார்---தினகரன்  

அவங்களுக்கு ஒற்றைத்தலைமை பிரச்சனையே இரட்டைத்தலைவலியா இருக்காம்

===============
8    தமிழக அரசு திட்டமிட்டே, உள்ளாட்சி தேர்தலை தள்ளிப் போட்டு வருகிறது-திருமாவளவன் 

இதையே இப்போதான் கண்டுபிடிக்கறீங்களா?னு ரமணாவில் யூகிசேது கேட்கற மாதிரி இருக்கு

================


9  . தற்போது, தேர்தலை நடத்த, நீதிமன்றம் கெடு விதித்த நிலையில், உள்ளாட்சி தேர்தலை நடத்தியே ஆக வேண்டும்.-திருமாவளவன் 


 கோர்ட்ல வாய்தா வாங்கியே 2  வருசம்  ஓட்டிடுவாங்க பாருங்க 

================ 


10   தமிழகத்தில், தி.மு.க., தலைமையிலான கூட்டணி, லோக்சபா தேர்தலில் பெற்ற வெற்றியை போன்று, நடக்க இருக்கும் உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெறும். விரைவில் வெற்றி கூட்டணியோடு, தேர்தலை சந்திப்போம்.-திருமாவளவன் 


பாராளுனமன்றத்தேர்தல் தீர்ப்பே சட்டமன்றத்தேர்தல் , உள்ளாட்சிட்தேர்தல்ல எதிரொலிக்கும்னு சொல்ல முடியாது . நம்ம ஜனங்க ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு மாதிரி தீர்ப்பு வெச்சிருப்பாங்க

===================

11 , மத்திய, மாநில அரசுகள், பொதுமக்களின் அன்றாட வாழ்வுக்குத் தேவையான பொருளாதாரம் ஈட்டும் வகையில், செயல் திட்டங்களை வகுத்து, ஏழ்மை இல்லாத நிலையை ஏற்படுத்தி, குழந்தை தொழிலாளர் முறையை முழுமையாக ஒழிக்க வேண்டும். -வாசன் 


 இதை சொன்னா  குழந்தைத்தனமா பேசாக்தீங்க , நடக்கற காரியமா இதெல்லாம் அப்டிம்பாங்க 

=================


12  குழந்தையை வேலைக்கு அனுப்பும் பெற்றோரிடமும், குழந்தைத் தொழிலாளரை வேலைக்கு அமர்த்தும் நபரிடமும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில், அரசு, தனியார் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.-வாசன் 

சைடு டிஷ் ஆக குழந்தைகளை உபயோகப்படுத்திக்கொள்வது சைல்டிஷ் ஆக  இருக்குங்கறாரு

===============

13  மேகதாதுவில், அணை கட்டியே தீருவோம் என, கர்நாடக அரசு கூறுவது, காவிரி ஆணையத்துக்கு எதிரானது. -நல்லக்கண்ணு :

கர்நாடகா அரசு பண்றதெல்லாம் காவிரி ஆணையத்துக்கு எதிரானதா இருக்கா?காவிரி ஆணையத்துக்கு எதிரானதைத்தான் கர்நாடகா அரசு பண்ணுதா?னு டவுட்டா இருக்கு

===============


14  இரு மாநிலங்களும் ஒப்புக் கொண்டால் மட்டுமே, அணை கட்ட வேண்டும் என, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே மரபு உள்ளது. -நல்லக்கண்ணு :

மரபை  மீறிய மைந்தன்னு பேர் எடுக்க ஆசைப்படறாங்க போல தமிழ்நாடும் ஒத்துக்கற மாதிரி பாஜக அதிமுகவுக்கு செக் வெச்சாலும் வைக்கும்

===================

15  ஆணையம் வந்த பிறகும், கர்நாடக அரசு, 'அணை கட்டுவோம்' என, தன்னிச்சையாகக் கூறுவது தவறு.-நல்லக்கண்ணு :


 இது( கர்நாடகா - தமிழகம் காவிரி பிரச்சனை) ஒரு ”அணை” யாத நெருப்பு

==============


16   அதற்கு, மத்திய அரசும் ஒப்புக் கொள்வது, தமிழகத்திற்கு செய்யப்படும் துரோகம்.-நல்லக்கண்ணு :

 தமிழகத்துக்கு பாஜக அரசு எதுவுமே செய்யலை, அட்லீஸ்ட் துரோகத்தையாவது செய்யட்டுமே?னு விட்டுட முடியுமா?

==============

17  தே.மு.தி.க., சார்பில் மக்களுக்கு, லாரிகளில் தண்ணீர் வினியோகித்தோம். - பிரேமலதா : 


தமிழகத்துக்கு இனி எந்த நல்லதும், நலத்திட்டங்களும் நடக்காதுனு சாபம் எல்லாம் விட்டீங்களே?

===============


18 தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவது, வேதனையாக உள்ளது. - பிரேமலதா 

டாஸ்மாக் தண்ணிக்கு எந்தப்பிரச்சனையும் இல்லையே?- குடிமகன்: 


19  மழைக்காலத்தில் தண்ணீரை சேமித்தால், தண்ணீர் பிரச்னை வராது- பிரேமலதா : 

தண்ணீரை சேமிக்காட்டிப்பரவால்லை, வீணாக்காம இருந்தாலே போதும், கார் கழுவக்கூட குடிநீரை உஒஅயோகப்படுத்தினா?

===============


20  . பிரதமர் மற்றும் தமிழக முதல்வரிடம், தமிழகத்தின் தண்ணீர் பிரச்னை குறித்து பேசுவோம். -0 பிரேமலதா : 


பேசுங்க பேசுங்க பேசிக்கிட்டே இருங்கனு அவங்க நினைச்சுக்கப்போறாங்க மனசுல


================

0 comments: