Monday, June 10, 2019

ஸ்டாலின் ஒரு ராஜ தந்திரிங்கற மேட்டரை ஸ்டாலினே இப்பதான் கேள்விப்படறாராம்

1  உ.பி.,யில் நடக்க உள்ள, 11 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தனித்து போட்டியிடுவோம். இதன்மூலம், மாயாவதிக்கு தகுந்த பதிலடி தருவோம். - அகிலேஷ் யாதவ்: 

அப்போ நம்ம நோக்கம்  ஜெயிப்பது இல்லை ? பதிலடி தந்தா போதும்?


அகிலேசை அகி”லேசா” நினைக்காதீங்க அப்டிங்கறாரு

============

2   பணபலம், ஆட்சி அதிகாரம் ஆகியவற்றை பயன்படுத்தி, லோக்சபா தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது- மம்தா பானர்ஜி:


 வழக்கமா தோல்வி அடைபவர்கள் சொல்ற பாய்ண்ட்ட விட்டுட்டீங்க, வாக்கு எந்திரத்தில் முறைகேடு?

===============


 சமாஜ்வாதி கட்சியை, அகிலேஷ் யாதவ், முழுவதுமாக சரிசெய்ய வேண்டும். அதில் அவர் வெற்றியடைந்தால், மீண்டும் இணைவோம். மாறாக தோல்வியடைந்தால், தனித்தனியே செயல்படுவது தான் இருவருக்குமே நல்லது -மாயாவதி:


சரி செஞ்சுட்டா தனியா போட்டி இட்டுக்குவாரே? எதுக்கு கூட்டணிக்கு வர்றாரு?


=============

4   நல்லவர்களை, ஆண்டவன் நிறைய சோதிப்பார்; ஆனால், கைவிட மாட்டார். கெட்டவர்களுக்கு நிறைய கொடுப்பார்; ஆனால், கைவிட்டு விடுவார்' என ஓபிஎஸ் கூறியுள்ளார். இது, சினிமாவில், ரஜினி பேசிய வசனம்; நிஜ வாழ்க்கையில் எடுபடாது.-கே.எஸ்.அழகிரி  '

 நிஜ் வாழ்வில் ரஜினி பஞ்ச் எடுபடாதுனு சொ,ல்றீங்களா? ரஜினியே எடுபட மாட்டாரு அப்டிங்கறீங்களா?

=============\
\5   இறைவன், தவறு செய்ய மாட்டார்; அதனால் தான், தி.மு.க., - காங்., கூட்டணிக்கு, தமிழகத்தில், 37 இடங்களைக் கொடுத்துள்ளார். தகுதியானவர்களுக்குத் தான், இறைவன் வாய்ப்பு கொடுப்பார் -கே.எஸ்.அழகிரி  

 அப்போ மத்தியில் ராகுல் ஆட்சி அமைக்க தகுதி இல்லாதவர்ங்கறீங்களா? 


===============

6   நடந்து முடிந்த லோக்சபா தேர்தல், 'பெராரி' காருக்கும், சைக்கிளுக்கும் இடையேயான போட்டியாக இருந்தது. இதில், கார் தான் வெல்லும் என்பது, அனைவருக்கும் தெரியும் -அகிலேஷ் யாதவ் 

 கார் எப்படி வென்றதுனு பு”கார்” அளீக்கலையா யாரும்?


===============


7  கருணாநிதியை போல், ஸ்டாலினும் ஒரு ராஜதந்திரி என்பதை, நடந்து முடிந்த தேர்தல்கள் மூலம் உணர்த்தியுள்ளார்.-   திருமாவளவன்  

 ஸ்டாலின் ஒரு ராஜ தந்திரிங்கற மேட்ட்ரை ஸ்டாலினே இப்பதான் கேள்விப்படறாராம்


==============

 8  வட மாநிலம் முழுவதும், சனாதன கும்பல் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், தமிழகத்தில் அது எடுபடாது என்ற வகையில், ஒட்டுமொத்த இந்திய தேசத்தையே, தமிழகத்தின் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார், ஸ்டாலின்-திருமாவளவன்

 இடைத்தேர்தல்ல சட்டசபைத்தேர்தல்ல இந்த அளவு வெற்றி பெற்றிருந்தா ஆட்சியையே பிடிச்சிருக்கலாமே? ஏன் கோட்டை விட்டுட்டாரு>


================


9  2011ல், அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், உரிய காலத்தில் கடன்களைச் செலுத்திய விவசாயிகளுக்கு, வட்டியை அரசே ஏற்றுக் கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், 87 சதவீதம் கடன்கள் வசூலாகின்றன. எனவே, விவசாய கடன்களை, தள்ளுபடி செய்வதற்கான தேவை, இப்போது ஏதுமில்லை.-கூட்டுறவு துறை அமைச்சர், ராஜு : \


அப்போ கடனை கட்டாம விட்டா தள்ளுபடி பண்ணிடுவீங்க?

==============

10  தமிழகத்தில் 24மணி நேரமும் கடைகள் திறந்திருக்க அரசாணை வெளியீடு - தமிழகஅரசு



# மகிழ்ச்சி,திமுக ஆட்சியா இருந்தா டாஸ்மாக் 24 மணி நேரமும் திறந்திருப்பாங்க



==============
 11  துணை முதல்வர் பன்னீர்செல்வம், தன் மகனுடன், ஜெயலலிதா நினைவிடம் சென்று, மரியாதை செலுத்தினார்-செய்தி

குனியாம , பம்மாம நேரா முதுகுத்தண்டு 90 டிகிரில நிக்கற மாதிரி நின்னு மரியாதை செலுத்தினார்


மகனுக்கு மந்திரி பதவி வேண்டி தர்மயுத்தம் 2.ஓ?

===================

12  அ.ம.மு.க., ஒரு கட்சியே இல்லை; வெறும் குழு தான்.-

ஜெயகுமார்  

 வெண்ணிலா கபாடிக்குழு மாதிரி  ஹிட் ஆகிடும்னு எதிர்பார்த்தாங்க 


==============


 13   அ.ம.மு.க.  ஒரு, 'லெட்டர் பேடு' கட்சி. கழுதை தேய்ந்து கட்டெறும்பாய், அந்தக் கட்டெறும்பு, ஒரு சிற்றெறும்பாய், அந்த சிற்றெறும்பும் இன்று காணாமல் போயிருக்கிறது. -

ஜெயகுமார்  

 அதிமுக எனும் யானை காதில் புகுந்த சிற்றெறும்புனு அவங்க பஞ்ச் அடிப்பாங்களோ?


==================


14  கடலில் கரைத்த பெருங்காயம் போல், அ.ம.மு.க.,வின் நிலை பரிதாபமாக உள்ளது. எனவே தான், கடந்த சில நாட்களாக, நம்மிடம் இருந்து பிரிந்து, அ.ம.மு.க., சென்ற நம் சகோதரர்கள், மீண்டும் நம்மிடையே வரத் துவங்கி உள்ளனர். -

ஜெயகுமார்  

திரும்பி வந்தா சகோதரர்கள், திரும்பி வர்லைன்னா பங்காளிகள்?

=================


15  இன்னும், நிறைய பேர் வரவிருக்கின்றனர்.=

ஜெயகுமார்  


சிறிய குழுன்னீங்க இப்பதான், அதுக்குள்ளே நிறைய பேருனு நீங்களே ஒத்துக்கிட்டீங்களே?

==============


16  எதிர்காலத்தில், நானும், என் கணவர், நிக் ஜோனசும், அரசியலுக்கு வர வாய்ப்பு இருக்கிறது. =', பிரியங்கா சோப்ரா 

வானிலை , புயல் எச்சரிக்கை மாதிரி அரசியல் பிரவேச எச்சரிக்கை போல


=============


17  நான், இந்திய பிரதமர் ஆவேன்; என் கணவரை, அமெரிக்க அதிபராக பார்க்க ஆசைப்படுகிறேன்-', பிரியங்கா சோப்ரா 


சினிமாலயா?

===============

. 18  அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களில், இதுவரை நான், ஆர்வம் காட்டாமல் இருந்தேன். ஆனால், இப்போது ஆசை வந்திருக்கிறது. அரசியலில், நல்ல மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. திடமாக எண்ணினால், எதுவுமே அசாத்தியம் இல்லை-', பிரியங்கா சோப்ரா 


 சினிமா ல மார்க்கெட் போனா அடுத்து அரசியல் தானே?


==============


19  லோக்சபா மற்றும் தமிழக இடைத் தேர்தல்களில், மக்கள் நீதி மையம் கட்சியுடன், எங்கள் கட்சி கூட்டணி அமைத்து, தேர்தலைச் சந்தித்தது. தற்போது, அந்தக் கூட்டணியில் இருந்து, விலகி விட்டோம். தமிழக மக்கள், மாற்று அரசியலை விரும்புகின்றனர். நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள், இதை உறுதி செய்கின்றன.-

செ.கு.தமிழரசன்

 மநீமை  கூட மாற்று அரசியல் தானே?

================ 

20 : தி.மு.க., ஆட்சிக் காலத்தில், அரசு அதிகாரிகள், ஆளும் கட்சியினருக்கு சாதகமாகச் செயல்படவில்லை என்றால், உடனடியாக மாற்றப்படுவர். அ.தி.மு.க., ஆட்சியில் தான், சாதாரண உதவியாளர்களில் இருந்து, மாவட்ட ஆட்சியர் வரை, அனைவரும் சுதந்திரமாக, தங்கள் பணியை செய்கின்றனர். - அமைச்சர், ராஜு


கேள்வி கேட்க ஆளில்லைங்கறீங்க?

=============


0 comments: