Friday, June 28, 2019

வாய்;லயே வடை சுடுவது எப்படி?

1    எங்கள் கவனம் முழுவதும் மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதிலேயே இருக்கிறது.-ராஜேந்திர பாலாஜி: 


தண்ணீர்ப்பஞ்சம்  பற்றிக்கேட்டா அது வதந்தி ,தண்ணீர்ப்பற்றாக்குறைதான் என அறிக்கை விட்டு பிரச்சனையை தீர்ப்பது போலவா?
===========

2   , உள்ளாட்சி தேர்தல் குறித்த சிந்தனை இப்போது எங்களிடம் இல்லை.-ராஜேந்திர பாலாஜி: 

இப்பவாவது வெளிப்படையா  உண்மையை , மனசுல உள்ளதை சொல்லிட்டாரே?


 ஆட்சியைத்தக்க வைக்கறதே உன் பாடு என் பாடுனு போராட்டமா இருக்கு

==============
3   கருணாநிதி சென்னைக்கு செய்த புண்ணியம், ஏரியை அழித்து, வள்ளுவர் கோட்டம் கட்டியது தான்.- எச்.ராஜா:

வள்ளுவர் கோட்டம் இல்லைன்னா தண்ணீர்ப்பஞ்சமே இராதா?

நில ஆக்கிரமிப்பு செஞ்ச அவங்க கட்சிக்காரங்க சாதனையை விட்டுட்டீங்களே?

===============


 தேர்தல் காலங்களில் அலை எப்படி வீசுகிறதோ, அதைக் கணக்கிட்டுத் தான், பா.ம.க., கூட்டணி அமைக்கும்-விஷ்ணு பிரசாத்:

 நாம எப்படி? எது தோற்கப்போகுதுனு தெரிஞ்சு அந்தக்கட்சி கூட கூட்டணி வைப்பமா? எல்லாருமே ஜெயிக்கத்தானே பார்ப்பாங்க?

===============


5 லோக்சபா தேர்தலில், அ.ம.மு.க.,வுக்குக் கிடைத்த தோல்வி, மக்களால் மட்டுமே தரப்பட்டது அல்ல. என்னைப் பொருத்தவரை, ஓட்டு இயந்திரம் மீது சந்தேகப்படுகிறேன்.-சி.ஆர்.சரஸ்வதி 

பொண்ணுங்கன்னாலே சந்தேகப்படறது இயல்புதானே?

=============
6  1,380 பூத்களில், அ.ம.மு.க.,வுக்கு ஒரு ஓட்டு கூட விழவில்லை. இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?=சி.ஆர்.சரஸ்வதி 

சரி , ஏத்துக்க வேணாம், இப்போ என்ன பண்ணனும்கறீங்க? 

=============

7  சட்டசபை இடைத்தேர்தலில், இப்படிப்பட்ட தோல்வியை, அ.ம.மு.க., எதிர்பார்க்கவில்லை.-சி.ஆர்.சரஸ்வதி 

எதிர்பாராததை எதிர்பாருங்கள்

===============



8  காங்., கட்சியின் தலைவராக, ராகுல் தொடர்வதே சிறப்பானது. அதேசமயம், அவரது சொந்த விருப்பங்களும், மதிக்கப்பட வேண்டும். -  மணிசங்கர் அய்யர்  


நடுநிலைமையா பேசறாராம்

===============

9   காங்., கட்சியின் தலைவர் பொறுப்பை, நேரு - காந்தி குடும்பத்தைச் சாராதவர் ஏற்க முடியும்; ஆனால், கட்சியில், நேரு - காந்தி குடும்பத்தினரின் பங்களிப்பு, எப்போதும் போல் தொடர வேண்டும்.=  மணிசங்கர் அய்யர்  

தென்னை மரத்துல ஒரு குத்து , பனை மரத்துல ஒரு குத்து மொமெண்ட், நேரு  குடும்பத்துக்கு ஜால்ரா அடிச்ச மாதிரியும் ஆச்சு,  புதிய தலைமைக்கு ஆதரவு தெரிவிச்ச மாதிரியும் ஆச்சு

 ================

10   - தமிழகத்தில், தொழில் வளர்ச்சி இல்லாததால், வேலையில்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து, தமிழக ஆட்சியாளர்கள், கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.-கே.எஸ்.அழகிரி

அதுதான் எதிர்க்கட்சிங்க நீங்க கவலைப்படறீங்களே ? போதாதா?

=============


11  தங்கள் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை சரிகட்டுவதில் தான், முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களின் பெரும்பான்மை நேரம் செலவழிக்கப்படுகிறது.=கே.எஸ்.அழகிரி

 பின்னே மக்கள் பிரச்சனையைத்தீர்க்கவா நேரம் ஒதுக்க முடியும்?

================
12 இந்தியாவில், விரைவான போக்குவரத்திற்காக, சாலை விரிவாக்க திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துவது, முக்கிய பிரச்னையாக உள்ளது. இதற்கு தீர்வு காண, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.-நிதின் கட்கரி  

எட்டு வழி சாலைக்கு அச்சாரம் வைச்சதே மத்திய அரசுதான், இப்போ மாநில அரசு மேல பழி போடறாரு

================
13  வறட்சி, வெள்ளம் என, எந்த இயற்கை இடர்பாடுகளையும் சமாளிக்கும் திறன் கொண்டது, அ.தி.மு.க., அரசு. எனவே, அரசியல் காழ்ப்புணர்வோடு, தி.மு.க., நடத்தும் போராட்டங்கள், மக்கள் மத்தியில் எடுபடாது.-ஜெயகுமார்  

வாய்;லயே வடை சுடுவது எப்படி?னு இவர் கிட்டே கத்துக்கனும்

============

14  தமிழகத்தில் வெற்றி பெற்று என்ன பயன், மத்தியில் ஆட்சி அமைக்க முடியவில்லையே' என, தி.மு.க., - எம்.பி.,க்கள் குறித்து, சில மூடர்கள் விமர்சிக்கின்றனர்=ஸ்டாலின் '

இவருக்கும் மனசுக்குள்ளே அந்த ஆதங்கம் இருக்கு போலயே?

=================


15 . எம்.பி.,க்களாக பதவி ஏற்பதற்கு முன்பே, மத்திய அரசின் ஹிந்தி திணிப்பு எனும் மும்மொழி கொள்கைக்கு எதிராக குரல் கொடுத்து, அதை வாபஸ் பெறச் செய்தனர். தெற்கு ரயில்வேயில், தமிழ் மறுக்கப்பட்டபோது, உறுதியாக போராடி, தமிழை காத்தனர். மக்களுக்காக என்றும் பாடுபடுபவர்களே, தி.மு.க., - எம்.பி.,க்கள்.-ஸ்டாலின் '


 இந்த ஹிந்தி எதிர்ப்புங்கற ஒரு பாய்ண்ட்டை வெச்சே பல வருசமா திமுக காலம் தள்ளிட்டு இருக்கு

==============
16   மோடியின் முகத்தில் விவேகானந்தரை காண்கிறேன் =அ.தி.மு.க., எம்.பி., ரவீந்திரநாத் குமார் 


 நல்ல கண் டாக்டரைக்காணவும், சரி ஆகிடும்

அப்போ விவேகானந்தர் முகத்துல மோடியைக்காண்கிறாரா?


 அப்பா எட்டு அடி நெடுஞ்சாண் கிடையா விழுந்தா இவரு 16 அடி படக்னு விழுந்துட்டாரே?


 அமைச்சர் பதவிக்கு துண்டு போட்டுட்டாரு

=====================


17 ஸ்டாலின் சிங்கப்பூர் சென்றதற்கு பதிலாக பெங்களூரு சென்று காவிரியில் தண்ணீர் திறந்து விடும்படி தங்கள் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் அமைச்சரிடம் கோரியிருக்கலாம்' -தமிழிசை ..

 அட்லீஸ்ட் ஒரு ஃபோனாவது பண்ணி இருக்கலாம்

 தண்ணீர்ப்பிரச்சனையை அவ்வளவு சுலபமா தீர்த்துட்டா அதை வெச்சு எப்படி அரசியல் பண்ண  முடியும்?

===================



கடைசில நீங்க சொன்ன ஸ்லீப்பர் செல் இவருதான் போல 


நீங்க என்ன நீக்கறது? அவரே வெளில வந்துட்டாரே?>

================

19  ஊழல் குறித்து, யார் பேசுவது என்ற, விவஸ்தை இல்லாமல் போய் விட்டது,'' -, மீன் வளத்துறை அமைச்சர், ஜெயகுமார்

  இது என்ன திமுக வுக்கு வந்த அவஸ்தை?

===============


20 , ஊழலுக்காக கலைக்கப்பட்டது, தி.மு.க., ஆட்சி. பழைய வீராணம் ஊழல், பூச்சி மருந்து ஊழல், விவசாய இடுபொருட்கள் வாங்கியதில் ஊழல், சர்க்கரை பேர ஊழல், அரிசி பேர ஊழல் என, ஊழலின் மொத்த உருவம், தி.மு.க., தான். வேறு எந்த ஆட்சியும், ஊழலுக்காக கலைக்கப்படவில்லை


 தண்ணீர்ப்பிரச்சனையை தீர்க்காம  திமுக வுக்கு தண்ணி காட்டிட்டு இருக்காரு


=====================

0 comments: