Tuesday, June 18, 2019

விஜய் 63 (அட்லி) பட டைட்டில்

1  வடிவேலுவும் இளையராஜா மாதிரி பேச ஆரம்பிச்ட்டாரு,அவரோட வெற்றி,காமெடி,உழைப்பு,வயசு ,அனுபவம் அதெல்லாம் தனி.ஒரு இயக்குநரை பொதுவெளியில் மரியாதை இன்றி பேசுவது தவறே!இனி 24ம் புலிகேசி வந்த மாதிரிதான்.ஷங்கர் வெறும் CG ஒர்க்கை வெச்சு தான் மேலே வந்தார் என்பதெல்லாம் ஓவர்===============
2 ஒரு திறமைசாலியிடம்,படைப்பாளியிடம் எத்தனை திறமைகள் இருந்தாலும் அடக்கம் ,பணிவு எனும் அணிகலன் இல்லாவிடில் ஜொலிக்க முடியாது.திறமை இருக்குமிடம் கர்வம் இருக்கும் என்பது சால்ஜாப்பு
=============
3 நல்லவேளை,ரயில்வே ரிசர்வேசன் ல ஜாதி பாத்து


லோயர் பெர்த்
மிடில் பெர்த்
அப்பர் பெர்த்
ஒதுக்கறதில்ல===========


4 தமிழ் சினிமா வின் சிறந்த நகைச்சுவை வசனகர்த்தாவும்,காமெடி டிராமா வில் தனக்கென தனி பாணி வகுத்தவரும்,ஆள்மாறாட்டக்காமெடி வார்த்தை ஜால மன்னரும் ,நல்ல மனிதரும் ஆன கிரேசி மோகன் இன்று பகல் 2 மணிக்கு காலம் ஆனதை இப்போதுதான் அறிந்தேன்,பெரிய அதிர்ச்சி,ஆழ்ந்த இரங்கல்கள்


===========


5 பாகற்காய் குழம்பு உடம்புக்கு நல்லதுன்னா நம்மாளு அந்த கசப்பை நீக்க அஸ்கா சர்க்கரையை (சீனி,வெள்ளை சர்க்கரை) அதுல கலந்து கெடுத்துடறான்,பாகற்காயின் மருத்துவகுணமே போய்டும்


=============


6 ராஜராஜசோழன் பற்றி அவதூறாகப்பேசிய இயக்குநர் ரஞ்சித் தின் குடும்ப புகைப்படத்தை ஹெச் ராஜா பகிர்ந்து அவரைக்கண்டித்திருப்பது வன்மம்.யார் என்ன தப்பு செய்தாலும அவருக்கு மட்டுமே தண்டனை வழங்கனும்,குடும்பத்துக்கு அல்ல


=============


7 அம்மாவின் சமையலில் குறை இருக்காது,மீறி குறையிருந்தால் அது அம்மாவின் சமையலாய் இருக்காது


===========


8 மணிரத்னம் இயக்கிய ரோஜா அதிரிபுதிரி ஹிட்

ஆர் கே செல்வமணி கட்டிய ரோஜா ஆந்திராவில் ஹிட்
எனவே தாமரைக்குப்பதில் தாமரையை விட அதிகம் ஹிட் அடித்த ரோஜாவை தேசிய மலராக அறிவிக்க வேண்டும்னு
யாரும் இன்னும் கிளம்பலையா?=========

9 சொந்தமாக யோசித்து எழுதுகிற(டைப்பற)படைப்புகள்"தவிர்த்து மற்ற படைப்புகளில்

(படித்ததில் பிடித்தது)
இப்டி போட்டுட்டா பிரச்சனை வராது,இல்லைன்னா நீங்க சொந்தமா போட்டாக்கூட இது"அதுவா இருக்குமோனு ஜனங்க நினைக்கலாம்


============


10 ராஜராஜசோழன் க்கு

1. உலக
2. சோழ
3. அபிமானவல்லி
4. திரைலோக்கிய
6. பி௫த்துவி
5. பஞ்சவன் 7. இலாடா
10. தீர நாரயணி
8. மீனவன் 9. வில்லவன்
12. காடரம் தொங்கியார்
11. தில்லை அழகியார் 13. வானவன்
மொத்தமா 15 மனைவிகளாமே?
14. இங்கோன் பிச்சியார் 15. தைலா
8 பேருதான் மொத்தம்,மீதி ஒல்லி


=============


11 pink ல தோற்றத்துல அமிதாப் மிரட்டி இருந்தாலும்,குரல் ல அஜித் மிரட்டி இருக்கார்.ஜட்ஜ் ரோல்க்கு பிரபலமான ஆளா போட்டிருக்கலாம்,பிஜிஎம் ,ஒளிப்பதிவு குட்


===============


12 pink ரீமேக் அறிவிப்பு வந்தபோது அது ஏ சென்ட்டர் படம்,பெரும்பாலானவை கோர்ட் காட்சிகள்,தமிழ் ல எடுபடாது என கருத்து தெரிவித்திருந்தேன்,(விதி விலக்கு − விதி,நான் சிகப்பு மனிதன் )
ஆனா ட்ரெய்லர் எதிர்பார்த்ததை விட சிறப்பு============


13 இறுதிச்சடங்குகளில் கலந்துகொள்வதில்லை என கருத்துத்தெரிவித்த கமல் (அப்துல்கலாம் இறந்தபோது ஏன் கலந்துக்கலை? னு கேட்டப்ப தந்த பதில்) கிரேசிமோகன் இறுதிச்சடங்கில் கலந்தது ஏன்? உள்ளூரில் இருந்தும் ரஜினி ஏன் கலந்துக்கலை? னு நெட் தமிழன் விவாதிக்க எதுனா ஒரு டாபிக் கிடைச்சிடுது.


==============

14 மீன ராசி அன்பர்களே!ஆனி மாதம்"தேவை இல்லாத ஆணிகள் எல்லாம் தொலையும்.குறிப்பா உங்க சம்சாரம் கோவிச்ட்டு அவங்க அம்மா வீட்டுக்குப்போகும்.நீங்க டூர் போகும் வாய்ப்பு உண்டாகும்.மங்களம் (மறுபடி ஒருக்கா ) உண்டாகும்.ஷேர் ல லாபம் வரும்

=================


15 மாவு பாக்கெட் வாங்கும்போதே MFG date பாத்து வாங்குங்க.பொதுவா சாமான்யன் அப்டிதான் வாங்குவான்.அதுக்காக கடைக்காரர் செய்தது சரி என்று அர்த்தமல்ல.வியாபாரிகள் எது"செய்தாலும் அது வியாபார தந்திரம் ஆகிவிடுகிறது.நுகர்வோர்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்


=================


16 நம் வாழ்க்கையின்"சிறந்த"வழிகாட்டியும் ,வழித்துணையும் ,ஆலோசகரும் அப்பாதான்.அப்பாவிடம் இருக்கும் நல்ல குணங்கள் நம்மையும் அறியாமல்"நம்மிடம்"பற்றிக்கொள்ளும்.பணம் இருந்தாலும்"எளிமையாய்"வாழ்வது எப்படி என்று"என்"அப்பாவிடம்"கற்றேன்".தந்தையர்"தின வாழ்த்துகள்


================


17  டாக்டர் ,ரைட் ஹேண்டில் வாட்ச் கட்டுறவங்களுக்கு செம்மையா கரெக்ட் ஆக முடிவு எடுக்கிற திறன் இருக்கும்.னு சொல்றாங்களே அது நிஜமா?

எல்லாரும் இடது பக்க பாதைல போனா இவரு மட்டும் வலது பக்கப்பாதையை தேர்ந்தெடுப்பாரு,அவ்ளவ்தான்.ஊரோடு ஒத்து வாழ் கொள்கைக்கு நேர் எதிரா இருப்பாரு


================


18 ஒரு பரீட்சார்த்தமான முயற்சி + வித்தியாசமான கதைக்களம் + அஜனரஞ்சகமான படம்

என தெரிந்தும் கமர்ஷியல் படங்களின் வசூலோடு ஒப்பீடு செய்து அந்த அளவு"வசூல் வராது என கொக்கரிப்பது மெச்சூரிட்டி இல்லாதவர்கள்"செயல்


===============


19 விஜய் 63 (அட்லி) பட டைட்டில்

யூகம்
1 அடிபொலி
2 வெற்றி
3 கோல்


===============


20 Coach Manickam (C.M) என டைட்டில் வைக்க விஜய்63 படத்துக்கு முயற்சிகள் நடந்ததாகவும் ,அரசியல் பிரச்சனைகளைத்தவிர்க்க அந்த டைட்டில் கைவிடப்படலாம் எனவும் தகவல்


==================

0 comments: