Tuesday, June 11, 2019

ஃபேஸ்புக்ல ஒரு பொண்ணு கொஞ்சம் ஜாடை மாடையா ஒரு கில்மா கிளுகிளுப்புப்பதிவு

1  எங்க பரம்பரைலயே நான்தான் படிச்சவன் என்பதை நீங்கள் நல்ல நோக்கத்தில் (படிக்க வைத்த பெற்றோருக்கு நன்றி சொல்லும்"விதமாய்)சொன்னாலும் அதில் உங்கள் பெற்றோர்"படிக்காதவர்கள் என்னும் செய்தி தொக்கி நிற்கிறது,எனவே தொனியை மாற்றவும்.இந்த அளவு நான்"படித்ததே பெற்றோரின் முயற்சியால் என்பதே சரி


==============

2 நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு(மா)ராஜா


==============


கேரளாவில் வாழும்"தமிழர்கள் கவனத்துக்கு,நிபா வைரஸ் இளைஞர்களைத்தாக்கி வருவதாக தகவல்.எர்ணாக்குளம் (கொச்சின்) , திருச்சூர் மாவட்டங்களில் இருப்போர் எச்சரிக்கை


===============


4 மருதாணிங்கறது உள்ளங்கைல வைக்கறதுதான் அழகு.அந்த வட்டசிவப்பு.ஆனா இப்ப மணப்பெண்கள் மெனக்கெட்டு மெஹந்தி முழங்கை வரை போட்டுக்கறது என்னமோ பாம்பு சட்டை உரிச்சுப்போட்டதை எடுத்து மாட்டிக்கிட்ட மாதிரி இருக்கு,இந்தடிசைன் செஞ்சு விட தண்டமா 2000 ருபா சார்ஜ் வேற


================


5 பாரதியார் தலைப்பாகை காவி நிறத்தில் அமைத்தது பாஜக வின்"தந்திரமே.வெட்டியா இருக்கற எதிர்க்கட்சிகளை இவங்களே வளர்த்து விடறாங்க,இப்டிதான் பிளாப் ஆன மெர்சல்்படத்தை பரபரப்பா பேச வெச்சாங்க.===============


6 தமிழச்சி தங்க பாண்டியன் கூட அட்லீ வேலை பாக்குது.மெழுகுவர்த்தி−− அவுரங்கசீப் கதைல அவுரங்கசீப்பை கடாசிட்டு கலைஞர் பேரைப்போட்டு ஒரு குட்டிக்கதை ரெடி பண்ணிடுச்சு.டிகிரி படிச்ச 1786 பேரு லைக்கி இருக்காங்க,ஒரு பய கூட அவுரங்கசீப் பத்தி படிச்சதில்ல போல


==============


7 தக்சின பாரத் ஹிந்தி பிரச்சார் சபாவில்
1 பிராத்மிக் 2 மத்யமா 3 ராஷ்ட்ரபாஷா 4 ப்ரவேஷிகா 5 விசாரத் பூர்வத் 6 விசாரத் உத்தரார்த் 7 ப்ரவீன் பூர்வத் 8 ப்ரவீன் உத்தரார்த் என 8 பரீட்சைகளையும் எழுதுவதில் இந்திய அளவில் தமிழகமே நெ 1.(இந்த 8 லும் பாஸ் ஆனா ஹிந்தி பிரச்சாரக்)


================


8 எதிரி வளர்வது உன்"பிழை அல்ல,ஆனால் நீயே எதிரியை"வளர்த்து விடுவது பெரும் தவறு


===============


9 வட மாநிலத்தவர் தமிழ் எழுத ,பேச இரண்டிலும் தேர்ச்சி பெறுவது மிக"கடினம்,ஆனால்"தமிழன்"புத்திசாலி.மற்ற மொழிகளை குறிப்பா ஹிந்தி கற்றுத்தேர்வதில் தமிழன் விற்பன்னன்


===============


10 நான் ஹிந்தி படிக்கும்போது ட்யூஷன் பீஸ் மாதம் ரு 100.அப்போ பவுன் விலை ரூ 3900
இப்ப பவுன் விலை ரு 25,000 ( 6 1/2 மடங்கு ஏறி இருக்கு) ஹிந்தி ட்யூஷன் பீஸ் மாசம் ரு 1000 (10 மடங்கு ஏறி இருக்கு ) ஹிந்தி எக்சாம் 6 மாசத்துக்கு ஒரு தடவை வரும்,அதுக்கு ரெடி பண்ண ரூ 6000 fees


===============


11 ஹிந்தி கற்றுக்கொள்வது"தவறா?தமிழா!நீ சிந்தி!
தலைவரின் வாரிசுகள் ஹிந்தி படித்தார்கள் தலைவரின் தொண்டர்கள் ஹிந்தி ஒழிக கோஷம் போட்டார்கள் பல்லக்கை உருவாக்குபவனாக இரு. பல்லக்கு தூக்கியாக இராதே!

================


12 ஹிந்தி ஒழிக கோஷம் போட்ட கூட்டத்தில் நைசாக ஹிந்தி கற்றவர்கள்
1 ஆ ராசா 2 கனிமொழி 3 தமிழச்சி தங்க பாண்டியன் 4 துரை முருகன் மகன் 5 கிருத்திகா உதயநிதி 6 திருச்சி சிவா மற்றும் பலர்


=============


13 வடமொழி வேண்டாம் என ஒதுக்காதீர்கள்
நக்மா ,குஷ்பூ,ரவீனா டான் டான் டான் டான்,மனீஷா கொய்ராலா ,,கேத்ரீனா கைப் என பெரும்பாலும் நீங்கள்,நாம் ரசித்த நடிகையர்கள் வட மாநிலத்தவரே

==============

14 கொதிக்கும்வெய்யிலிலும் சர
அடிச்சுத்தூக்கும் அபரித மழையிலும் சரி,பொண்ணுங்க மேக்கப் மட்டும் கலையறதே இல்லை.டபுள் கோட்டிங்கா இருக்குமோ?


================15 "இந்தி"யா விலேயே இந்தி இருக்குதே! அப்போ இந்தியை எப்படி தவிர்க்க முடியும்? னு பாஜக ஆட்கள் யாரும் இன்னும் கிளம்பலையா?


===============


16 துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி தொடர்ந்து அதிமுகவையும் முதல்வர்,துணை முதல்வரையும் மட்டம் தட்டியே வருகிறார்.கண்டனமே தெரிவிக்கலை,கண்டுக்காத மாதிரியே இருக்காங்க


==================


17 கேரளாவில் ஜூன் 3−− ஜூலை 25 வரை தினசரி மழை வரும் என்பதால் இங்கு அனைத்து வீடுகளிலும் ஒவ்வொரு நபருக்கு ஒரு குடை என்ற விகிதத்தில் இருக்கும். குடை கம்பெனிகாரர்கள் இங்கே கடை போட்டா அள்ளலாம் காசை


=============


18 உள்ளாட்சித்தேர்தலில் அனைத்துக்கட்சிகளும் தனியே நிற்க முடிவு போல.வாக்கு வங்கி % தெரிஞ்சுக்கிட்டா 2021 தேர்தல்ல பேரம் பேச ஐடியா போல


===========


19 ஃபேஸ்புக்ல ஒரு பொண்ணு கொஞ்சம் ஜாடை மாடையா ஒரு கில்மா கிளுகிளுப்புப்பதிவு போட்டுட்டாப்போதும், நம்ம சின்னத்தம்பிங்க எதுவுமே தெரியாத சுப்பனுங்களாட்டம் மேடம் இது என்ன>? அது என்ன? இது எப்படி>? அது எப்படி?>னு சந்தேகம் கேட்கற சாக்குல என்னென்னமோ கேட்கறாங்க


==============


20 கையும் ஓடல, காலும் ஓடல. கால் ஓடும் சரி. கை எப்படி ஓடும்? 🤔 குழந்தைங்க விளையாட்டுல நரி ஊறுது நண்டு ஊறுது சொல்லிட்டு கை விரல்கள் பயணிக்கையில் கூடவே கையும் ஓடுமே?

================

0 comments: