Thursday, June 20, 2019

ஆனா அந்த மடம், ஆகாட்டி சந்தை மடம்

1  தமிழகத்தில், குடிநீர் பிரச்னை இல்லை. - வேலுமணி: 

ஆமா,. ட்ரிங்க்கிங் வாட்டர் தான் கிடைக்கறதில்லை


===============


 2  குடிநீர் தட்டுப்பாடு இருப்பதாக, வீண் வதந்திகளை பரப்புகின்றனர்.- வேலுமணி:


”வசதியா ”இருக்கற அமைச்சர்களுக்கு மக்களோட கஷ்டம் ”வதந்தியா”த்தான் தெரியும்,கொஞ்சம் மாட மாளிகையை விட்டு வெளில வந்தா மக்கள் பிரச்சனை தெரியும்


அமைச்சருக்கு மேல் மாடி காலி? மக்கள் காலிக்குடங்களோட அலையறாங்களே? பார்க்கல?

==============

3   தமிழகத்தில், தற்போது ஏற்பட்டுள்ள தண்ணீர்பிரச்னை என்பது, எதிர்க்கட்சி, ஆளும் கட்சி என்பது கிடையாது; இது, மக்களின் பிரச்னை.-சரத்குமார்: 

 அதனால மக்களே அதை எதிர்கொள்ளட்டும். மக்களே தீர்த்துக்கொள்ளட்டும்கறாரா?

================


4   தண்ணீர்பிரச்னை க்கு  அனைவரும் ஒன்று சேர்ந்து, அதை எப்படி நிவர்த்தி செய்ய வேண்டும், எதிர்கொள்ள வேண்டும் என்று சிந்திக்க வேண்டும்.-சரத்குமார்: 


ஆமா, ஆளுங்கட்சின்னா சிந்திக்கனும், எதிர்க்கட்சின்னாதான் நிந்திக்கனும் ( திட்டனும்)

============
5  லோக்சபாமற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும்படி, பிரதமர் கூறுகிறார். ஓட்டளித்த மக்களின்உரிமையை, பாதியில்பறிப்பது, சரியாக இருக்குமா?-சுதாகர் ரெட்டி: 

அதுக்குப்பதிலாத்தான் மறுபடியும் ஓட்டளிக்கும் உரிமை வந்திடுதே, நீங்க சரியா ஆட்சி செஞ்சா ஜனங்க மறுபடி உங்களைத்தானே தேர்ந்தெடுப்பாங்க?

=============
நாடு முழுவதும், மோடி அலை வீசியபோதும், தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட, பா.ஜ.,வால் வெற்றி பெற முடியவில்லை என்பது உண்மை தான். -ராம்விலாஸ் பஸ்வான் 

இங்கே வீசுனது மோடி எதிர்ப்பு அலை ஆச்சே?

============
7 நாட்டின் மற்ற பகுதிகளைப் போல் அல்ல தமிழகம்; இங்கு, மாறுபட்ட சிந்தனையுள்ள மக்கள் உள்ளனர்.-ராம்விலாஸ் பஸ்வான் 


ஆனா அந்த மடம், ஆகாட்டி சந்தை மடம்னு மாத்தி மாத்தி திமுக அதிமுகனு திராவிடக்கட்சிகளுக்கே வாக்களிப்பாங்க 

==============


8  தமிழகத்தில், பா.ஜ.,வுக்கு இடம் கிடைக்காதது, இது முதல்முறையல்ல.- ராம்விலாஸ் பஸ்வான் 

நாங்க அடி வாங்கறது புதுசு இல்ல, பழகிடிச்சுனு வடிவேலு பாணில சொல்ராரா?

===============

9  பிரதமர் மோடி கூறிய அறிவுரைகள், அவரின் கட்சி, எம்.பி.,க்களுக்கும், ஜூனியர்களுக்கும் பொருந்தும் என்றால், வரவேற்கலாம். ஆனால், பெரும்பாலான நேரங்களில், அவரின் அறிவுரைகளை, அக்கட்சி தலைவர்கள் கடைபிடிப்பதில்லை- அதிர் ரஞ்சன் சவுத்ரி  

பொதுவா வீட்ல பெற்றோர் அறிவுரையை வாரிசுகள் கேட்க மாட்டாங்க, அடுத்தவங்க சொன்னா கேட்பாங்க, ஆந்த ஃபார்முலா தான்

=============

10 , எதிர்கட்சிகளுக்கு அறிவுரை கூறுவதை விடுத்து, மோடியின் கட்சியினருக்கு அறிவுரை கூறலாம். = அதிர் ரஞ்சன் சவுத்ரி 

 நீங்க கூட மோடிக்கு சொன்னது அறிவுரைதான்,  நீங்க மட்டும் சொல்லலாமா?

============= 


11  ஜனநாயகம் என்பது, எம்.பி.,க்களின் எண்ணிக்கையை பொருத்ததல்ல; விவாதத்தை பொருத்தது.- அதிர் ரஞ்சன் சவுத்ரி  


எண்ணிக்”கை”யில் நம்பிக்”கை” இல்லைங்கறாரா?


============

12  தமிழகத்தில், எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு வருவோம்.-பொன்.ராதா 


வாக்களிக்காத மக்களுக்கு எதுவும் செய்ய மாட்டீங்களா? வாக்களித்தவங்க, வாக்களிக்காதவங்கனு எப்படி பிரிச்சு கண்டு பிடிப்பீங்க?


==============

13  காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி, தமிழகத்துக்கான தண்ணீர் கிடைக்கும். இல்லையென்றால் வெற்றி பெற்றுள்ள, எம்.பி.,க்கள் கர்நாடகம் சென்று, கூட்டணிக் கட்சியிடம் பேசி அணைகளைத் திறக்க வேண்டும்.-பொன்.ராதா 

இதுதான் சாக்குனு கர்நாடகா டூர் போட்டுடப்போறாங்க

 எதுக்கு தலையைச்சுத்தி காதைத்தொடனும்? காங்கிரசின் தலை ராகுல் ஒரு வார்த்தை சொன்னா கேட்கமாட்டாங்களா?


===============


 14   திருநாவுக்கரசர், சொத்துக்களை விற்று, விவசாய கடனை அடைக்க வேண்டும் என்றார். அவர், தன் சொத்தை கொடுத்தால், நானும் கொடுக்க தயார்.-பொன்.ராதா 

நீங்க முதல்ல தந்து அவருக்கு ஒரு முன்னுதாரணமா இருக்கலாமே? வயசுல சீனியர் வேற 

=============

15  மதுரை காமராஜர் பல்கலையில், முதுகலை படிப்புகளுக்கு இணையதள வழியாக விண்ணப்பம் வினியோகிக்கப்பட்டது. நுழைவுத் தேர்வுள்ள மற்றும் இல்லாத படிப்புகளுக்கு, 200 ரூபாய் கட்டணமாக பெறப்பட்டது. பின், விண்ணப்பித்தோரின் பட்டியல் வெளியிடப்பட்டது. நுழைவுத் தேர்வுக்கு பின், தேர்வு முடிவுகளையோ மதிப்பெண்களையோ வெளியிடாமல், கலந்தாய்வுக்கு முன், குறுகிய காலத்தில், கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அது, பலருக்கு, சேரவில்லை. இந்நிலையில், கலந்தாய்வில் பங்கேற்ற குறைந்த மாணவர்களை மட்டும், முறைகேடாக சேர்த்துள்ளனர். இது குறித்து, உரிய விசாரணை நடத்த வேண்டும்.- வைகோ   

எல்லாரும் தண்ணீர் தண்ணீர்னு அல்லாடிட்டு இருக்காங்க , இவரு என்னடான்னா....


================

16    பா.ஜ., செயல் தலைவராக, ஜே.பி.நட்டா அறிவிக்கப்பட்டுள்ளார். அவரது வழிகாட்டுதலில், பா.ஜ., அனைத்து மாநிலங்களிலும் வெற்றி பெறும்.-தமிழிசை 

 நட்டா வந்தாலாவது பாஜக தமிழகத்தில் நோட்டா வைத்தாண்டி டுமா?

==============



17  போர்க்கால அடிப்படையில், தண்ணீர் பிரச்னையை தீர்க்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.-தமிழிசை 


போர்னாலேஎ ரஜினி தான் ஞாபகம் வர்றாரு, போர் வரும்போது பார்த்துக்கலாம்னாரெ>? அவரோட ரசிகர் மன்றங்கள் மூலமா எதுனா உதவி செய்யலாமே அவரு?

===============


18   இஸ்ரேலில் உள்ளது போல், நடமாடும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் போன்ற, புதிய திட்டங்களை, இங்கு செயல்படுத்தலாம். -தமிழிசை 


 மழை நீர் சேகரிப்பில் விழிப்புண்ர்வு மக்களிடையே வந்தா  இவ்ளோ அலைச்சல், செலவு , சிரமம் எதுவும் இல்லை


============


19  தண்ணீர் பிரச்னை குறித்து பேச, ஸ்டாலினுக்கு, எந்த அருகதையும் இல்லை.  -தமிழிசை 


துண்டுச்சீட்டு பார்த்து தான் பாவம் அவரே எதுனா சொல்லப்போறார், அதைக்கூட தடுத்தா எப்ப்டிங்க?

===============


 மக்க:ள்  நல்லா புரிஞ்சுக்கிட்டாங்க , உங்க அமைச்சர்கள் தான் புரிஞ்சுக்கலை, தெரிஞ்சுக்கலை, தண்ணீர் ப்ரச்சனை என்பது வதந்தினு அடிச்சு விடறாங்க 

==================

0 comments: