Tuesday, June 04, 2019

200 ருபா கோஷ்டிகளுக்கு ஒரு சவால்,

திகார் ஜெயில் டெல்லி ல தானே இருக்கு? சவுகர்யம்===========2 நாடு முழுக்க மோடி எதிர்ப்பு அலை இருப்பதால்( மீடியாக்களின் தவறான வழி நடத்தல்)
ராகுல்தான் பிரதமர் ஆவார்,எனவே"ஜெயிக்கற கூட்டணிக்கு"வாக்களிப்போம் என,தமிழக மக்கள் ஏமாந்து போய் இருக்க வாய்ப்பு இருக்கு.ஜெயிக்கற பக்கம் சாய்வோம் என்பது ஒரு"சேப்டி மோடு==============


3 பாபாராம்தேவ் ஒரு"லூசா?லூஸ் மாதிரி நடிக்கறாரா? வாக்குரிமை பத்தி உளறிக்கொட்டி இருக்காரு==============
4 பிரதமர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட ராகுல் காந்தி படுதோல்வியை"சந்தித்ததால் அதற்கு"தார்மகப்பொறுப்பேற்று பதவி விலகும்போது ராகுல் பிரதமர் ஆவார் என வாக்கு"தந்து 38 எம் பி"சீட் ஜெயித்த"நம்ம தளபதி அதற்கு"பொறுப்பேற்று 38 பேரையும் ராஜினாமா செய்ய வைத்து மீண்டும் தேர்தலை சந்திப்பாரா?
==============5 உங்கள் / அவர்கள் கடைசிகாலம் வரை உங்களுக்கு உறுதுணையாகவும் ,வழிகாட்டியாகவும்,ஆறுதலாகவும் ,உதவியாகவும் இருப்பவர் பெற்றோர் மட்டுமே! வாழ்க்கைத்துணை,வாரிசு கூட ஒரு மாற்றுக்குறையலாம்,ஆனால் சுயநலம் கொண்ட பெற்றோர் மிக மிக அரிது
===============

6 டாக்டர்,மூணு வாரமா வறட்டு இருமல். என்ன பண்ண?கொஞ்சம் மிளகை வாயில் போட்டு மெல்லவும்.தண்ணீர் குடிக்கவேணாம்
ஆற வைத்த வெந்நீரில் கல் உப்பு போட்டு கரைத்து அந்தக்கரைசலை தொண்டையில் படும்படி வைத்திருக்கவும்
துளசி இலை/ மிளகுதக்காளிக்கீரை(மணத்தக்காளி,கருஞ்சிக்குட்டிக்கீரை)மெல்க==============


7 ரஜினி கட்சி ஆரம்பிக்கலை,இன்னும்முழுசா அரசியலுக்கு வர்ல,ஆனா 24 மணி நேரமும் ஒரு க்ரூப்"ரஜினியை திட்டிட்டே இருக்கு.ரஜினி முதல்வர் ஆகிட்டாலோ,கணிசமான வாக்கு வங்கியை பிரிச்சாலோ செம காண்டு ஆவாங்க இல்ல?ஜாலி


=============8 ஆன்லைன் "ரம்மி"யமானது அல்ல.உழைப்பை நம்புங்கள்


=============


9 தோல்வியைக்கண்டு பயப்படுபவன், தலைமைப்பொறுப்பைத்துறப்பவன்
நல்ல தலைவன் ஆகிட முடியாது, தோல்வியை சரி செய்து,அதற்கான காரணங்களை அறிந்து வெற்றிக்கு வழி காண்பவன் தான் தலைவன்


===============


10 ஜெயிச்சா பதவி"சுகத்தை அனுபவிப்பேன் ,தோற்றா அந்த அவமானத்தை"தாங்கிக்க"மாட்டேன் என"சாமான்யன் சொல்லலாம்,தலைவன்"சொல்லக்கூடாது


============


11 ஹிந்தி − நன்மைகள்


1 குஜராத் ,மும்பை போன்ற இடங்களில் டெக்ஸ்டைல் கடைகளில் ஹோல்சேல் பர்ச்சேஸ் ,ரேட் பேச ,பேரம் பேச தேவை
2 பெரும்பாலான கம்பெனிகளில் குறைந்த கூலிக்கு வடநாட்டவர்கள் கிடைப்பதால் அவர்களை சூபர்வைஸ் பண்ண ஹிந்தி தெரிந்தால் முன்னுரிமை
3 ஹிந்திபிரச்சார்சபா பணி===============


12 தமிழன் வித்தியாசமானவன்.ஹெல்மெட் போட்டுட்டு பைக் ல போ ன்னா முடி கொட்டிடும்னு சொல்வான்


நீச்சல் கத்துக்கோ ,ஆபத்து காலத்துல உதவும்னா அது தெரியாமயே பரிசல்,படகு ,கப்பல் ல பயணிப்பான்
ஹிந்தி கத்துக்கோ,நல்லதுன்னா மட்டும் கேட்கவா போறான்?=================


13 ஹிந்தி படிக்கறதால தாய்மொழி தமிழுக்கு ஆபத்தா?


அதெல்லாம் 1ம் இல்லை,தன் வீட்டுப்பிள்ளைகளை மட்டும் ஹிந்தி படிக்க வெச்ட்டு ஊரான் வீட்டுப்பிள்ளைகள் கிணற்றுத்தவளைகளாவே இருக்கட்டும்னு நினைக்கற அரசியல்வாதிகளாலதான் ஆபத்து===============


14 நெத்தில கட்சிக்காரன் குங்குமம் வெச்சிருந்தா அவரை கட்சியை விட்டு நீக்குவோம் (சிவாஜி கணேசன்)


ஆனா தன்னோட குடும்பத்துல யாரு குங்குமம் வெச்சிருந்தாலும் அது அவங்க சுதந்திரம்னு ஊரை ஏமாத்துவோம்
தன்னோட பேரன் ,பேத்திகளை ஹிந்தி படிக்க வைப்போம் ,ஆனா பொதுமக்கள் ஹிந்தி படிக்க விடமாட்டோம்================15 200 ருபா கோஷ்டிகளுக்கு ஒரு சவால்,எந்த மேடைலயாவது உங்க தலைவர் "ஹிந்தி படிக்க இஷ்டம் இருக்கறவங்க படிச்சுக்குங்க ,ஹிந்தித்திணிப்பைதான் எதிர்க்கறோம்,என் குடும்பத்துல எல்லாரும் ஹிந்தி கத்துக்கிட்டாங்க,டெல்லி போகனுமில்ல அப்டினுசொல்லி இருந்தா அதுக்கான தரவு குடுங்க பார்ப்போம்


=============


16 ஒரு திருடன் தேர்தல் ல ஜெயிச்சுட்டான்கறதுக்காக அவன் திருடர் ஆகிட முடியாது,கடைசி வரைக்கும் அவன் திருடன்தான்.ஒருவேளை அவன் திருந்தி இருந்தாக்கூட முன்னாள் திருடன்னு தான் ஊரு சனம் சொல்லும்

==============17 டாக்டர்,4 மணி நேரமா தல வலி.. உசுரு போற மாதிரி வலி,என்ன பண்ண?


வெய்யில் சூடு.ன்னா கிணறு,குளம்,ஆறு வாய்க்கா இருந்தா தண்ணிக்குள்ள 1 நிமிஷம் 1 நிமிஷமா கேப் விட்டு 10 டைம் மூழ்கி எழவும்
தூக்கம் கெட்டிருந்தா 8 மணி நேரம் தூங்கவும்
ஒர்க் பிரஷர்னா குழந்தைகள் கூட விளையாடவும்==============


18 ஒருமுறை திருட்டு ரயிலில் தலைவர் பிரயாணம் செய்த,போது கட்சிக்காரர் ஒருவர் "நாம செய்யற ஊழலை ,திருட்டை ஜனங்க மறக்கனும்னா என்ன பண்ணனும்?னு கேட்டாராம்்.

அதுக்கு நம்ம சாணக்கியர் "அடுத்த தடவை அதைவிடப்பெரிய ஊழலை ,திருட்டை செய்,ஜனங்க பழசை மறந்துட்டு இதைப்பேச ஆரம்பிப்பாங்க"ன்னாராம்


===============

19 அஞ்சு ருபா கட்டி ஒரு போட்டில,கலந்துக்கிட்டா என்"வாட்சப் நெம்பர்"தர்றேன்னு அறிவிக்குது ஒரு பொண்ணு,நம்மாளு 50 ருபா கட்டி 10 பொண்ணுங்க போன் நெம்பர்"குடுங்கன்னு கேட்கறான்,கேட்டா ஹோல்சேல் வியாபாரியாம் "


==============

20 குளிச்ட்டு சாப்பிடறதுதான்"முறை.சோம்பலா இருந்தா விட்டுடலாம்,அதுக்காக சாப்ட்ட பின் குளிக்காதிங்க (உடனே).யாரோ புல்"கட்டு கட்டிட்டு நீச்சல் குளத்துல குதிச்சிருக்காரு,ஆள் அவுட்.(நீச்சல் தெரிந்தவர்)


================

0 comments: