Friday, March 01, 2019

Luka Chuppi -2019 ( hindi) -சினிமா விமர்சனம் ( ரொமண்டிக் காமெடி)@ நெட் ஃபிளிக்ஸ்

Image result for #LukaChuppi  ( hindi)


ஹீரோ ஒரு மீடியா ரிப்போர்ட்டர், புதுசா ஜாய்ன் பண்ணுன இன்னொரு ரிப்போர்ட்டர் ஹீரோயினை லவ்வறாரு. நாம மேரேஜ் பண்ணிக்கலாமா?னு யதார்த்தமா கேட்க அது பதார்த்தமா  ஒரு ரிகர்சல் மாதிரி லிவ்விங்க் டுகெதரா வாழ்ந்து பார்த்துட்டு மேரேஜ் பண்ணீக்கல்லாம்குது. ( நம்மாளுங்களுக்கு சவுகர்யம், 6 மாசம் வாழ்ந்து பாத்துட்டு பிடிக்கலைஞு கை கழுவி விட்டுட்டா அடுத்த பிராஜெக்ட் பாக்கலாம்)


லிவ்விங் டுகெதரா கமல் - கவுதமி மாதிரி ஒரு அபார்ல்மெண்ட்ல வாழ்றப்ப அக்கம் பக்கம் வீட்டார்களால் நடக்கும் காமெடி கலாட்டாக்கள் தான் பின் பாதி திரைக்கதைஹீரோவா கார்த்திக் ஆர்யன், ஆள் செம ஸ்மார்ட், காலேஜ் பொண்ணுங்க இனி கொஞ்ச காலம் பின்னாலா சுத்தலாம்


ஹீரோயினா  க்ரித்தி ஷனான். சோனியா, சோனாலி பிந்த்ரே சாயல். குடும்பப்பாங்கான முகம் , நண்ணியமான தோற்றம்பக் வீட்டு ஆண்ட்டிகள் கலாட்டா ஓரளவு காமெடி, ஆனா பின் பாதி  சீரியல்; பாக்கற உணர்வு, பெண்களூக்குப்பிடிக்கும்


Image result for kriti sanon

தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

அருண் விஜய் நடித்த தடம் ,ஓவியா நடித்த 90ml இரண்டுமே கோட்டம் ,கேரளா வில் காலைக்காட்சி இல்லை,அதனால் ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை பழமொழிப்படி ஹிந்திப்படம்தமிழ்,தெலுங்கு,மலையாள படங்களில் ஹெல்மெட் போடாம பைக் ஓட்டற சீன் வந்்தா திரைல "தலைக்கவசம் இல்லாமல் பைக்ஓட்டுவது ஆபத்தானது "னு எச்சரிக்கை வாசகம்"போடறாங்க,ஆனா ஹிந்திப்படத்துல போடறதில்ல,அதென்ன சட்டம்? ( hindi


சினிமாப்படங்கள்ல ஹீரோக்கள் பனியன் போடறதே இல்லை,90% வெறும் சட்டைதான் போடறாங்க,வியர்வை க்கு இருக்கவே இருக்கு செண்ட்
ஆரோக்யக்கேடு ( hindi)


புரட்சிப்பொண்ணுங்களோட கதை,அதாவது ஹீரோ கல்யாணம் பண்ணிக்கலாமா?னு கேட்கறாரு,ஹீரோயின் "கொஞ்ச நாள் லிவ்விங்க்டுகெதரா வாழ்ந்து ரிகர்சல் பாக்கலாம்குது,அடடா!அபாரம் பரிமளா,மேல சொல்லு ( hindi)


ஹீரோ லிப் கிஸ் க்கு முன் வாசனைக்காக தன் வாய்க்கு தானே செண்ட் அடிச்சுக்கறாப்டி ( மவுத் ஃபிரெஷ்னராம்)கஷ்டகாலம்,அதுக்கு ஏலக்காய் 2 எடுத்து மென்னு இருக்கலாம்,அல்லது ஹால்ஸ் மிட்டாய் ( hindi)


6 )திருமணம் என்பது ஒரு பாதுகாப்பு,கவுரவம் ,நம்முன்னோர்கள் ஒன்றும் முட்டாள் இல்லை வகையறா திரைக்கதை ( hindi)Image result for kriti sanon

நச் டயலாக்ஸ்

1  சுவாமிஜி ,மேரேஜ் பண்ணிக்காம லிவ்விங்க் டுகெதர் வாழ்க்கை பற்றி உங்க கருத்து என்ன?
உண்மையான அன்பு இருக்கும் பட்சத்துல எதுவுமே தப்பு இல்ல ( hindi)


2 தூய்மையான அன்பை திருமணம் பண்ணிதான் நிரூபிக்கனும்னு இல்ல ( hindi)


3 மேடம்,உங்க டயர் ரொம்ப நல்லாருக்கு
யோவ் கார் டயரை சொன்னேனுங் ( hindi)


4 கடவுளுக்கு பேர் தேவை இல்லை,கடவுள்னாலே கடவுள்தானே? ( hindi)
Image result for kriti sanon


தியேட்டரில் நடந்த சுவாராஸ்ய சம்பவங்கள்1 ஒரு லவ் ஜோடி, கவுண்ட்டர்லயே நோட் பண்ணேன், டிக்கெட்க்காசு அந்தப்பொண்ணுதான் தந்தது, இடைவேளை விட்டப்ப கேண்ட்டீன் போறப்பக்கூட அந்த பக்கி 200 ரூபா அந்தப்பொண்ணு கிட்டே தான் வாங்கிட்டுப்போனான் ( அதுல 2 ஐஸ்க்ரீம், 2 பாப்கார்ன் வாங்கிட்டு வந்தான் ஐஸ்க்ரீம் 20+20=40, பாப்கார்ன் 40+40 =80 120 ரூபா போக 80 ரூபா திருப்பியே தர்ல


2 எதிர் சீட்ல ஒரு லவ் ஜோடி முத 2 ரீல் முடிஞ்சதும் எந்திரிச்சு பின் சீட் கார்னருக்கு போனாங்க , இடைவேளை அப்போ வேற சீட் மாறுனாங்க , நல்ல வேளை ஆபரேட்டர் சேர் பக்கம் போகலை


3 படம் முடிஞ்சதும் க்ளைமாக்ஸ்ல ஒரு டூயட் சாங். செம டான்ஸ், ஒரு சேட்டு வீட்டு லட்டு ஜீன்ஸ் டாப் போட்டுட்டு வந்து செம ஆட்டம் போடுச்சு( இதுக்காகவே ஹிந்திப்படம் நிறையா பாக்கனும்)

கேரளா ,கோட்டயம் தன்யா 12 பேர்/465 சீட்ஸ்,அதுல 4 ஜோடி கார்னர் சீட்,சத்தியமா படம் பாக்க வர்ல காலைக்காட்சி திரைல யு படம் ,கார்னர்ல ஏ படம் ( hindi)

அ===

சி.பி. கமெண்ட் - Luka chuppi - ஏ சென்ட்டர் ரசிகர்களுக்கான ரொமான்ட்டிக் காமெடி பேமிலி டிராமா,சுமார் ரகம் ,ரேட்டிங்க் 2.5 / 5 ( hindi)

0 comments: