Friday, March 01, 2019

90Ml - சினிமா விமர்சனம் 18+

Image result for 90ml movieஇந்தபட டீசர் பார்க்கும்போதே  எனக்கு பக்னு ஆகிடுச்சு, எங்கே இது ஹிட் ஆகி இதே டைப்ல பல படங்கள் புரொடக்சன் பண்ணிடுவாங்களோனு , நல்லவேளை அப்டி ஹிட் அடிக்கல்ஹீரோயின் ஓரியண்ட்டட் ஃபிலிம் இது. அதாவது இதுவரை ஜனங்க ஆம்ப்ளை குடிகாரனுங்க நாசமாப்போறதைத்தானே படங்கள் ல பார்த்திருக்கோம், இயக்குநர் மாத்தி யோசி பாலிசி ல பொண்ணுங்க குடி காரிகள் ஆகி எப்படி நாசமாப்போறாங்க என திங்க் பண்ணீ படம் எடுத்திருக்காரு


ஒரு அபார்ட்மெண்ட்ல 4 குடும்பப்பெண்கள், அங்கே ஹீரோயின் ஓவியா எண்ட்ரி, இவங்க ஒரு புரட்சிப்பொண்ணு ., தம் அடிக்கும், தண்ணீ அடிக்கும், கஞ்சா அடிக்கும், ஆனா மேரேஜ் பண்ணீக்காம லிவிங் டுகெதரா ஒருத்தன் கூட வாழும்


இந்தப்பெண்ணால மற்ற குடும்பப்பெண்கள் எப்படி நாசமாப்போறாங்க என்பதை ஸ்டெப் பை ஸ்டெப்பா சொல்லி இருக்காங்கஓவியா கேரக்டர் அப்படியே அவரோட நிஜ கேரக்டர், “ நான் பிக் பாசையே பார்த்தவடா என பஞ்ச் பேசுவது காதல் துரோகி ஆரவ் வை மனசுல வெச்ட்டுப்பேசுனது மாதிரி இருக்கு, எனக்கு என்ன ஒரு வருத்தம்,னா மேக்கப் மேக்னா பிக் பாஸ் ரைசாவோட முதல் தமிழ்ப்படம் கூட ஹிட் அடிச்சிடுச்சு, ஓவியா வுக்கு இப்படி கெட்ட பேரு ஆகற மாதிரி ஆகிடுச்சே> /?( இந்த லட்சணத்துல  ஈரோடு மாவட்ட ஓவியா பேரவை ல நான் உறுப்பினர் வேற


லெஸ்பியன் ஜோடி  கதை சகிக்கலை, அதை ஒரு சஸ்பென்ஸ் மாதிரி இண்ட்டர்வெல் பிளாக்ல நாடோடிகள் பட சீனை இமிடேட் பண்ணி அட்லீ வேலை பார்த்திருப்பது  ஓவர்


இடைவேளைக்குப்பின் சிம்பு வரும் காட்சி மட்டும் குட்


படத்துல மொத்தம் 32 லிப் கிஸ் காட்சிகள், 14 பெட்ரூம் காட்சிகள், 18 கில்மா வசனங்கள்


இசை சிம்பு , ஓக்கே ரகம், லாஸ்ட் பாட்டு கலக்கல் ரகம்


Image result for 90ml movie

நச் வசனங்கள் 

1  செக்ஸி ங்கறது டிரஸ்ல இல்ல,ஆட்டிடியுட் ல தான் இருக்கு


நீ குட்டைப்பாவாடை போட்டிருக்கறதால அவன் உன்னைப்பாக்கவே வர்றான்
நான் fullலா கவர் பண்ணாலும் பாப்பான்,பார்க்கட்டும்,பாவம்


3  பழசாகப்பழசாகத்தான் சரக்குக்கு வேல்யூ அதிகம்


உண்மையான லவ்ங்கறது ஒரு வாட்டிதான் வரும்


5  குடிகாரர்கள் கவனத்துக்கு,நீங்க குடிக்கறது உடல்நலனுக்கு எந்தஅளவு கெடுதலோ அதே அளவு கெடுதல் ஸ்டைல்னு நினைச்சு பாட்டில் மூடியை பல்லால் கடித்து திறப்பது


கல்யாணம் ஆனாதான் நீ எனக்கான பிராப்பர்ட்டினு எனக்கு ஒரு நம்பிக்கை வரும்
ஆனா எனக்கு கல்யாணத்துல இஷ்டம் இல்ல,சுதந்திரமான பொண்ணா இருக்க விரும்பறேன்


7  பிரமாதமான கதையா இருக்கே,ஒரு லெஸ்பியன் லவ்,மொட்டை மாடில பொண்ணுங்க சரக்கு அடிக்கறது,தம் அடிக்கறது,அப்றம் கஞ்சா அடிக்க நைட் டைம்ல கசமுசா இடத்துக்குப்போறது ,விளங்கிடும்


8    தலைவா, உள்ளே செமயா பேசி கலக்கிட்டே\
\
 சிம்பு = உள்ளே இருக்கறதைத்தானே பேசுனேன்?


Image result for 90ml movie

தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்


1  பிக்பாஸ் ஆதர்ச நாயகி ஓவியா இன்ட்ரோ சீன்லயே தம் அடிக்கறாரு,லிப் கிஸ் அடிக்கறாரு,தவறான முன் உதாரணம்


2  மொட்டை மாடி பார்ட்டீ.சரக்கு அடிக்கற பழக்கம் இல்லாத 4 குடும்பப்பொண்ணுங்க ஓவியா தண்ணி அடிக்கறதைப்பாத்து அவங்களும் சரக்கு அடிக்கறாங்க,பெண்கள் முன்னேற்றம் ஓங்குக


3  சினிமா ல ஹீரோ மடில லேப்டாப் வெச்சு டைப்பறப்போ "மடியில் லேப்டாப் வைத்து டைப்புவது உடல்நலனுக்கு கேடானது"னு எச்சரிக்கை வாசகம் போடனும்.படிச்சவங்களுக்கே அது கெடுதல்னு தெரியறதில்ல

4  சிம்புதான் இசையாம்
அந்த க்ளைமாக்ஸ் டப்பாங்குத்துப்பாட்டு "இன்னைக்கு நைட்டு" பாட்டு மட்டும் டி ஆர் போட்டது மாதிரி மெட்டு ,தந்தை மகனுக்கு ஆற்றும் உதவி

5 10 ருபா பப்சுக்கு ஆசைப்பட்டு ஆன்லைன் விமர்சகர்கள் யாராவது படம் ஆஹா ஓஹோனு அடிச்சு விட்டா எனக்கு மென்ஷன் போடுங்க.10 கேள்விகள் ரெடியா வெச்சிருக்கேன்

Image result for 90ml movieஇயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

லாஜிக் மிஸ்டேக் 1− தன் முதல் இரவுக்கதையைசொல்லும்போது டயலாக் "ஒரு டம்ளர் பால் எடுத்துட்டு பெட்ரூமுக்கு வந்தேன்"
ஆனா காட்சில ஒரு சொம்பு ல தான் பால் கொண்டு போகுது

2  லாஜிக் மிஸ்டேக் 2− பெட்ரும் ல தம்பதி கட்டில்ல,நடுவுல அவங்க குழந்தை.மிட்நைட்ல குழந்தையை ஓரமா நகர்த்திட்டு ஹீரோ இடம் மாறும்போது குழந்தை அழுது,அதனால வேற கேர்ள்பிரண்ட் பிடிக்கறானாம்,மடத்தனம்,குழந்தையை நகர்த்தாம ஹாலுக்குப்போக முடியாதா?


3  லாஜிக்மிஸ்டேக் 3− கஞ்சா அடிக்க ஒரு வீட்டுக்குப்போகும் புரட்சிப்பெண்கள் 4 பேரும் எதிரே வரும் தம் பார்ட்டியைக்கண்டு அசூசையாக முகத்தை,மூக்கை மூடிக்கொள்வது செம காமெடி,இவங்க என்னமோ டீ டோட்டலர் மாதிரி,இவங்களே தம் அடிக்கறவங்க,சரக்கு வேற சி.பி கமெண்ட்90ml - கேவலமான கதை,மட்டமான திரைக்கதை,வல்கரான வசனங்கள்,கலாச்சாரத்தை மதிக்காத காட்சி அமைப்புகள்,டி சென்ட்டர் ரசிகர்களால் கூட ஏற்றுக்கொள்ள முடியாத படம்,ஓவியாக்கு கெட்ட பேரு,விகடன் 35, ரேட்டிங்க் 1.5 / 5 (குடும்ப்பெண்கள் தியேட்டரில் பார்ப்பதை தவிர்க்கவும்கேரளா ,கோட்டயம் அனஸ்வரா தியேட்டர், 63/ 496 சீட்ஸ் ,கலாச்சார சீர்கேட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆபாயில் பிலிம்

அ==
0 comments: