Wednesday, March 27, 2019

நாட்டு நடப்பு நையாண்டிச்சிரிப்பு

1   பிரதமர் மோடியும், மேற்கு வங்க முதல்வர் மம்தாவும், பொய் வாக்குறுதிகளை அளிப்பதிலும், சர்வாதிகாரத்தனமாக செயல்படுவதிலும், ஒரே மாதிரியாக உள்ளனர். இவர்கள் இருவரும், யார்பேச்சையும் கேட்க மாட்டார்கள்.-ராகுல்:

யார் பேச்சையும் கேட்காம சுய,மா முடிவு எடுப்பவந்தான் தலைவன், எல்லார் பேச்சையும் கேட்டு அதன் படி நடந்தா எடுப்பார் கைப்பிள்ளை


============


2  கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு, ஓராண்டுக்கு மேல் ஓய்விலிருந்த நிலையிலும், அவர் தான் தலைவர் பதவியை வகித்தார். ஸ்டாலின் செயல் தலைவராகவே இருந்தார். மகன் மீது கூட, தந்தைக்கு நம்பிக்கை இல்லாதபோது, மக்கள், ஸ்டாலின் மீது எப்படி நம்பிக்கை வைப்பர்?-இ.பி.எஸ். # 

அப்டிப்பார்த்தா  ஜெ கூடத்தான் உங்களை  நம்பாம  ஓபிஎஸ் சை நம்பினாரு

==================
3  : தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், ஜெ., மரணம் குறித்து முறையாக விசாரித்து, குற்றவாளிகளை சிறையில் அடைப்பதே, முதல் வேலை.= ஸ்டாலின்

அத்தைக்கு  மீசை முளைப்பது எப்போ? மீசையை முறூக்கறது எப்போ?

அப்போ  இப்போதைக்கு அந்த மர்மம் வெளீவரவே வராது?

யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்கள நலனுக்கு அக்கறை காட்றது தில்லை. எதிரிகளை உள்ளே தள்ளறதுலதான் குறியா  இருக்காங்க


=================


4  :சிதம்பரம் தொகுதியில் போட்டியிட, முதலில் மோதிரம் சின்னம் கேட்டோம்; ஆனால், கிடைக்கவில்லை. பின், அதிகாரிகள் என்னென்ன சின்னங்கள் உள்ளன என்ற பட்டியலை கொடுத்தனர். அதில் உள்ள, வைரம், பலாப்பழம் சின்னங்களை தொடர்ந்து கேட்டேன். அவையும் இல்லை என்றனர். இறுதியாக, பானை சின்னத்தை கேட்டு பெற்றோம்- திருமாவளவன் பேச்சு

 பானை கிடைத்தவர் அபாக்கியசாலிங்கறாரா?


==================

5  , வரும் தேர்தலில், வெற்றி பெற்று, மத்தியில் அமையும் ஆட்சியில், தி.மு.க., பங்கேற்கும். - வை கோ  # அப்போ பாஜக கூட்டணீல இணைவாங்களோ? தேர்தலுக்கு முன் ஒரு கூட்டணீ, தேர்தலுக்குப்பின் ஒரு கூட்டணீ


================


6  மக்களின் வாங்கும் திறனை வைத்து பார்த்தால், உலகில், மூன்றாம் இடத்தில், இந்தியா உள்ளது.-சுப்பிரமணியன் சாமி
  

வாக்குக்குப்பணம் வாங்கும் திறனில் உலகில் முதல் இடம்


=================


7   திரிணமுல் காங்கிரஸ் கட்சி கொடி மற்றும் சின்னத்தில்இருந்த, 'காங்கிரஸ்' என்ற பெயர் நீக்கப்பட்டுள்ளது; 'திரிணமுல்' என்பது மட்டுமே உள்ளது. கட்சியை துவக்கி, 21 ஆண்டுகளுக்கு பின், இந்த மாற்றத்தை, முதல்வர் மம்தா செய்துள்ளார்#  மாற்றம் முன்னேற்றம்?
=============


8  

உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி- ஈரோடு திமுகவினர் மகிழ்ச்சி  # அடுத்ததா மதிமுக  திமுகவோட இணைஞ்சிடுமோ?========\\\


9    

திமுக கூட்டணியில் தேர்தல் அறிக்கைதான் கதாநாயகன்- விழுப்புரத்தில் உதயநிதி ஸ்டாலின் உற்சாகம்   # ஆளூங்கட்சி அளித்த  1000  ரூபா  , 2000 ரூபா தான் உங்களுக்கு வில்லன்


===============


10    

ஜாமீனுக்காக அலையும் கார்த்தி சிதம்பரம் மக்களை எப்படி சந்திப்பார்?- எச்.ராஜா கேள்வி  # வக்கீல் வீட்டுக்கு , கோர்ட்டுக்குப்போற வழில மக்கள் இருப்பாங்களே? ஆன் த வே அப்ப்டியே சந்திச்ட்டா போச்சு==============

11  11   

வாக்கு கேட்டு வரும்போது ஆரத்தி எடுக்கக் கூடாது: திமுக மாவட்டச் செயலாளர் கட்டுப்பாடு  #  ஆரத்தி எடுக்கறவங்களுக்கு வேற 1000  ரூபா தரனும்,, தேவை இல்லாத தண்டச்செலவு================


12    

திமுக வேட்பாளர்களின் தகுதியைப் பாருங்கள்; ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டாம்: வட சென்னை பிரச்சார கூட்டத்தில் மு.க ஸ்டாலின் வேண்டுகோள்  #  என்ன் ரத்தத்தின் ரத்தமேனு சொந்த ஜாதிக்காரங்க கூட ஓட்டுப்போடவெண்டாம்கறாரா?==================13    பாஜகவுடன் கூட்டணி அமைந்தபோதிலும், எம்ஜிஆரின் கொள்கைகளை விட்டுக் கொடுக்கமாட்டோம்'' - அமைச்சர் டி.ஜெயக்குமார்   #  எம் ஜி ஆர் அவர்களின் கொள்கைகள் என்ன?னு 10 சொல்லுங்க, நாங்க மறந்துட்டோம்


================14  

மக்களை பிளவுபடுத்தி அரசியல் செய்கிறது பாஜக- பிருந்தா காரத் ஆவேசம்  #  ஊர் ரெண்டுபட்டா அரசியல்வாதிகளுக்கு கொண்டாட்டம் ஃபார்முலா?==============


15 

காவலாளிகள்’ உழைப்பது செல்வந்தர்களுக்கே: பாஜக மீது பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு  # போலீஸ் டிபார்ட்மெண்ட்டை தப்பா பேசறாருன்னு அவதூறு வழக்கு [போட்டுடப்போறாங்க====================

16  

மகாத்மா காந்தியின் பாதையில் மாணவர்கள் செல்ல வேண்டும்: நரேஷ் குப்தா வலியுறுத்தல்  # போற வழில கோட்சே வந்துட்டா?===============


17 

தென் மாநிலங்களில் பாஜக 10 இடங்களைக் கூட வெல்லாது: நாராயணசாமி பேச்சு  # வட மாநில்ங்களில் 10 இடங்களைக்கூட காங்கிரஸ் ஜெயிக்க விடாதுனு அவங்க சொல்வாங்களோ?=================


18 

உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் மூலம் பெட்ரோல் டோக்கன் விநியோகம்: கண்காணிப்பு அலுவலர்கள் பறிமுதல்  #  மூன்றாம் கலைஞர் ஏன் இப்படி நாலாந்தர வேலையில் இறங்கிட்டார்?===================


19  கமல்ஹாசன் மிகச் சிறந்த நடிகர். 50 வருடங்கள் கழித்து கண்டுபிடித்து சொல்கிறார் என்றால் அவர் 50 வருடங்கள் தூங்கிக் கொண்டிருந்தாரா - உதயநிதி #  நீங்க கூடத்தான்  திடீர்னு பிரச்சாரத்துக்கு வந்திருக்கீங்க, போன தேர்தலில் தூங்கிட்டு இருந்தீங்களா?னு அவர் கேட்டுடப்போறாரு


=================


20  

பாஜகவில் சேர்ந்ததால் என் அப்பா என்னிடம் பேசவே இல்லை: தமிழிசை  #  கவலைப்படாதீங்க, இந்தத்தேர்தல்ல ஜெயிச்சுட்டா ஊர் உலகமே உங்களைப்பற்றி பேசும்
==============


0 comments: