Tuesday, March 05, 2019

நாட்டு நடப்பு, நையாண்டிச்சிரிப்பு

1  

பிரதமராக நான் பேசுவது இதுவே கடைசி முறை: மன் கி பாத்தில் மோடி உருக்கமான பேச்சு # 2019 ரிசல்ட் இப்பவே தெரிஞ்சிடுச்சா?னு ராகுல்ஜி கேட்கப்போறாரு



==================


இன்று இந்திய ஜனநாயகத்திற்கு கறுப்பு நாள்: மோடி தொடங்கி வைக்கும் 6000 ரூபாய் திட்டம் குறித்து ப. சிதம்பரம் தாக்கு #  அவரு குடுக்கறது ஏற்கனவே பிடிபட்ட கறுப்புப்பணம் போல, அதுதான் கறுப்பு நாள்ங்கறாரா?



=================



   எம்.ஜி.ஆர்., போட்ட இலையை, இப்போது உள்ளவர்கள், இரண்டாகப் பிரித்து சாப்பிடுகின்றனர். .-கமல் பேச்சு: # 2 கோஷ்டி என்பதால் இரண்டா பிரிச்சு சாப்பிடறாங்க, 4 கோஷ்டின்னா நாலா பிரிச்சுக்குவாங்க


கழகம்னாலே சாப்பிடறதுதானே?


இலையில்தான் உலை போல, ஆனா  ஜெ உயிருக்கே உலை வெச்சது யார்?னு தெரியல


====================


4 இந்த ஆட்சி, ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் நிலைக்குமா என்றெல்லாம், சிலர் கிண்டல் செய்தனர்.- தமிழக வருவாய் துறை அமைச்சர், உதயகுமார் பேச்சு # விரைவில் இந்த ஆட்சி கவிழும்னு நம்ம தளபதி கூட டெய்லி ஹோம் ஒர்க் மாதிரி சொல்லிட்டே இருப்பாரே?



================


தமிழகத்தின் நலனை முன்வைத்து, பா.ஜ.,வுக்கு எதிராக, அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை, சில கருத்துக்களைக் கூறியதாக, அமைச்சர் ஜெயகுமார் சொல்கிறார். நானும், தமிழக நலனை முன்வைத்தே, கருத்துக் கூறினேன். ஆனால், என்னை நீக்கினர். தம்பிதுரையை மட்டும், மறைமுகமாக ஆதரிக்கின்றனர். இதற்குப் பின்னால், இ.பி.எஸ்.,சின் அரசியல் விளையாட்டு இருக்கிறது.-கே.சி.பழனிசாமி பேட்டி: # ஒரு உறைக்குள்ள ஒரு கத்தி தான் இருக்கனும், ஒரு பழனிச்சாமிதான் இருக்கனும்னு அவரு நினைக்கறாரு போல 


=================

அது, பா.ம.க., இல்லை; பாசமுள்ள மகன் கட்சி. மகனுக்கான கட்சியைக் கொண்டுள்ள ராமதாசுடன், இனி எங்களுக்குக் கூட்டணி இல்லை. -விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச் செயலர், வன்னியரசு   # அப்போ திமுக வில் இப்போ கலைஞர் மகன் தானே தலைவர்? அது ஓகேவா? அதுவும் வாரிசு அரசியல்தானே?



==================


7  கருணாநிதி, தமிழர் கிடையாது; எம்.ஜி.ஆர்., தமிழகத்தைச் சேர்ந்தவர் அல்ல; ஜெயலலிதா, கர்நாடகாவில் இருந்து வந்தவர். அப்படி இருக்கும் போது, 'தமிழர் அல்லாத ரஜினி, அரசியலுக்கு வரக்கூடாது' எனச் சொல்வது தவறு. அரசியல் ரீதியாக, ரஜினியை விமர்சனம் செய்யலாம்; அவர், தமிழர் இல்லை என்றெல்லாம் விமர்சிப்பது கூடாது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் யாராக இருந்தாலும், அரசியலுக்கு வரலாம்; ஜாதி, மதம், தமிழன் என்றெல்லாம் பார்க்க முடியாது-  குஷ்பு,: # திமுக , காங்  கட்சிப்பயணத்தைத்தொடர்ந்து அடுத்த டார்கெட் ரஜினி கட்சி போல


==================


 எங்கள் தலைமையிலான வெற்றிக் கூட்டணியில், முதல் அணியாக, அ.மு.ம.க., இருக்கும். யாரும் விமர்சிக்காத அளவில், கூட்டணி அமைப்போம். 40 தொகுதிகளில், 38ல் மகத்தான வெற்றி பெறுவோம்.-தினகரன், # மீதி 2 இவரா விட்டுக்கொடுக்கறார் போல, ஏன்னா எல்லாரும்  நாற்பதும் நமதேன்னுதானே பஞ்ச் பேசறாங்க?



==============


9   தமிழ் பேரரசு கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கினார் இயக்குநர் "கவுதமன்"-செய்தி


கையேந்தி பவன் கணக்கா இப்பவெல்லாம் மூலைக்கு முடுக்கு எல்லாம் ஆளாளுக்கு கட்சி ஆரம்பிச்சுடறாங்க


தமிழ் பேரரசு கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கினார் இயக்குநர் "கவுதமன்"-செய்தி # சிவகாசி, திருப்பாச்சி இயக்குநர் பேரரசு பேர்ல இவரு எதுக்கு கட்சி ஆரம்பிக்கறாரு?இவர் பேரே நல்லாதானே இருக்கு?


====================



10 அரசியலுக்கு அப்பாற்பட்டு, விஜயகாந்தை

ஸ்டாலின் சந்தித்ததற்கு நன்றி. இந்த சந்திப்பில், நலம் மட்டும் விசாரிக்கவில்லை; அனைத்து விஷயங்கள்குறித்தும் பேசப்பட்டது-பிரேமலதா: # நட்பின் அடிப்படையில், விஜயகாந்தை சந்தித்து, நலம் விசாரித்தேன்; வேறு எதுவும் பேசவில்லை'ன்னு, ஸ்டாலின்  அடிச்சு விட்டாரே? வழக்கம் போல அது கழக டுபாக்கூர்தானா?




==================


11 வேறு எந்த தொழிலிலும் வாரிசு வந்தால் தவறு கிடையாது. ஆனால், அரசியலில் அப்படி இல்லை; வாரிசு அரசியல் நிச்சயம் இருக்கக் கூடாது-கமல்:   # ஒரு இன்ஃபர்மேஷனுக்காக சொல்றேன் - இந்திராகாந்தி - ராஜீவ் காந்தி - ராகுல் காந்தி   கூட அரசியல் வாரிசு கேட்டகிரிதான், இதை ஆதரிக்கறீங்களா? எதிர்க்கறீங்களா?


================


12 காங்கிரஸ் ஆட்சியில், ஊழல் செய்வதில், அமைச்சகங்கள் இடையே போட்டி இருந்தது. ஆனால், பா.ஜ., ஆட்சியில், வளர்ச்சிப் பணிகளில் போட்டி உள்ளது. -மோடி
# பேங்க் ல லோன் வாங்கிட்டு வெளிநாடு ஓடிப்போற தொழில் அதிபர்கள் போட்டி கூட தான் இருக்கு



==================


13   தி.மு.க., கூட்டணியில், ம.தி.மு.க.,வுக்கான தொகுதி பங்கீடு குறித்து, முதல் கட்ட பேச்சு துவங்கி உள்ளதால், அது குறித்து கருத்து கூற முடியாது =வைகோ #  இரண்டு தொகுதி நிச்சயம், மூன்று தொகுதி லட்சியம் அப்டிம்பாரோ?



===================


14  மோடி மீண்டும் பிரதமராக வாய்ப்புள்ளதால், எங்கள் கூட்டணியால், தமிழகத்திற்கு பலன் கிடைக்கும்.-துணை சபாநாயகர், தம்பிதுரை  # இந்த 4 வருசத்துல மோடியால தமிழகத்துக்கு கிடைத்த பலன்கள் ஒரு 10 சொல்லுங்க பார்ப்போம்


=================


15 நாங்கள் கூட, சில நேரங்களில், கருணாநிதியின் பேச்சை மறுத்துப் பேசியிருப்போம். ஆனால், வைகோ ஒரு போதும், கருணாநிதியின் சொல்லை தட்டியதில்லை- ஸ்டாலின்:  # அப்போ வை கோ மேல கொலை முயற்சிப்பழி சுமத்தி கட்சியை விட்டு ஏன் அனுப்புனாங்க?


அப்போ கட்சித்தலைமைப்பொறுப்பை ஒரு சீனியர்ங்கற முறைல வை கோ க்கு தரலாமே?


கலைஞர் இப்படித்தான் கூட்டணிக்கட்சிக்கு அதிக சீட் தர முடியலைன்னா இதயத்தில் இடம் உண்டுமு சமாளீப்பாரு


=====================


16   தி.மு.க., - தே.மு.தி.க., இடையே, தனிப்பட்ட முறையில், எந்த பிரச்னையும் இல்லை. ஏதாவது ஒரு மக்கள் பிரச்னைக்காகவே, அந்த கட்சியை விமர்சித்து இருப்போம் - பிரேமலதா  # இரு கட்சிகளூக்கு இடையே கூட்டணீ பேரம் நடக்க்கிறது என அறீக



===================


17 பிரதமரை நிர்ணயிக்கும் சக்தியாக, அ.ம.மு.க., இருக்கும்' என, தினகரன் கூறியது வேடிக்கை -  துணை முதல்வர் பன்னீர்செல்வம்: '  #இதே டயலாக்கை எல்லா கட்சியினரும் கூறிவருவது வாடிக்கை ஆகி விட்டது


===================


18 லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வுடன் கூட்டணி அமைப்பது குறித்து, எங்கள் கட்சியின் ஐந்து பேர் குழு நடத்திய முதற்கட்டப் பேச்சு முடிந்துள்ளது. இரண்டாம் கட்ட பேச்சு, இன்னும் இரு நாட்களில் நடைபெற்று, நல்ல தகவல் தெரிவிக்கப்படும்.-கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலர், ஈஸ்வரன் # 2 சீட் வாங்கறதுக்குள்ள 20 கட்டமா பேச்சு வார்த்தை நடத்த வேண்டி இருக்கு


=================

19 தமிழகத்தில், மூன்றாவது அணி உருவானாலும், வலிமைமிக்கதாக இருக்காது -திருமாவளவன் # என்னமோ மற்ற இரு அணீகளூம் வலிமையோட இருக்கற மாதிரி. எல்லாமே வீக் தான்



===================


20 தே.மு.தி.க.,வுடன், பேச்சு கடைசி வரை இழுபறியாக இருக்கும். தேர்தலுக்கு பின், தே.மு.தி.க., காணாமல் போகும் -EVKS   # அதாவது இவங்க கூட கூட்டணி வெச்சா நல்லவன், வைக்கலைன்னா வில்லன்? அதானே?


=================




0 comments: