Monday, March 18, 2019

நாட்டு நடப்பு, நையாண்டிச்சிரிப்பு

1  நம் படைகளின் தாக்குதல்களால், எதிரிகள் மிரட்சியில் இருக்கும் நிலையில், அவர்களுக்கு உதவுவது போல், எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன -  மோடி:  # 

எதிரிகளை விடுங்க, நம்ம கட்சிக்கூட்டணி எடியூரப்பாவே எட்ட்ப்பா ஆகிட்டாரே? முதல்ல அதைக்கவனிங்க, எதிரியை எப்ப வேணா கவனிக்கலாம்., ஆனா கூடவே இருந்து குழி பறிக்கற துரோகியை முதல்ல கவனிக்கனும்


=====================


2   : லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி தொடரும். கூடுதல் தொகுதிகளை கேட்டு அடம் பிடிக்க மாட்டோம்.-ம.ஜ.த., கட்சியைச் சேர்ந்த, முன்னாள் பிரதமர்தேவகவுடா # 

கூட்டணீக்கட்சிகளிடம் பேரம் பேசியே ஜவ்விழுப்பு இழுக்கும் தேமுதிக மாதிரி கட்சிகளூக்கு ஒரு பாடம்



======================


3: பீஹார் மாநிலம் பாட்னாவில், பிரதமர் மோடியும், முதல்வர் நிதிஷும் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில், லட்சக்கணக்கான மக்கள் திரண்டதாக கூறுகின்றனர். இதுபோன்ற ஒரு கூட்டத்தை, சாலையோர பெட்டிக்கடையில் கூட, என்னால் கூட்ட முடியும்.-  லாலு பிரசாத் யாதவ்n# 

ஜெயில்ல இருந்தப்ப ட்ரெய்னிங் எடுத்திருப்பாரோ?


===================


4  ஒரு புறம் எதிரியும், மறுபுறம் துரோகியும் சேர்ந்து, அ.தி.மு.க., ஆட்சியை வீழ்த்த நினைக்கின்றனர். -தமிழக மின் துறை அமைச்சர், தங்கமணி பேச்சு: # 

அதான் 1000 , 2000 -னு நாம ரூபா நோட்டை இறக்கி இருக்கமே?கவலைப்படமாதீங்க, தமிழன் விசுவாசம் மிக்கவன், கை நீட்டி காசு வாங்கிட்டா நன்றியை காட்ட்டிடுவான்

====================


வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு, 2,000 ரூபாய் வழங்குவது, தேர்தலுக்காக அல்ல. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களை கணக்கெடுக்கும் பணி, தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. தகுதியுடையவர்களுக்கு மட்டுமே, 2,000 ரூபாய் வழங்கப்படும். - விஜயபாஸ்கர் #

 ஆமா, ,முக்கியத்தகுதி அவங்களூக்கு ஓட்டு போடும் வயசான 18 ஆகி இருக்கனும், அதானே? 17 வயசுள்ள வறுமைக்கோட்டுக்கு கீழே வசிக்கும் மக்கள் எத்தனை பேருக்கு அந்தப்பணம் தந்தீங்க?>?


=====================


 பேச்சு: கல்வி துறையை மேம்படுத்த, மத்திய அரசு தொடர்ந்து, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், கல்வி நிலையங்களுக்கு, முன் எப்போதும் இல்லாத, தன்னாட்சி உரிமை அளிக்கப்பட்டுள்ளது.- மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர்  # 

ஆனா மாணவர்கள் குறைவா இருக்காங்கனு அரசுப்பள்ளிகளை தொடர்ந்து மூடிட்டே இருக்கமே?


==============


7நாட்டுக்கு, அமைதி தான் தேவை. ஆனால், அவசியம் ஏற்படும்போது, யுத்தமும் தேவைப்படுகிறது. தோட்டாக்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் போரில், நாம் ஏற்கனவே வெற்றி பெற்று விட்டோம். இனி, ஓட்டு சீட்டுகள் மூலம் நடத்தப்படும் தேர்தல் போரிலும், வெற்றி பெறுவோம். நாடு முழுவதும், 400 லோக்சபா தொகுதிகளில், பா.ஜ., கூட்டணி வெற்றி பெறும். மீண்டும் பிரதமராக, நரேந்திர மோடி பதவியேற்பார்- மத்திய உணவு துறை அமைச்சர், ராம்விலாஸ் பஸ்வான்  $  

 தோட்டாவை பயன்படுத்தறமாதிரி வாக்காளர்கள் நோட்டாவை பயன்படுத்தாம கிருக்கனுமே?த்மிழநாட்ல நனக்கு நோட்டாதானே டாட்டா காட்டுது?>

=======

========================

8கூட்டணி, தனித்துப் போட்டி என்பதெல்லாம், அரசியல் சூழ்நிலையைப் பொறுத்து, ஒவ்வொரு காலகட்டத்திற்கும் மாறுபடும்-  தமிழக வருவாய் துறை அமைச்சர், உதயகுமார், $

 aரசியல்வாதின்னாலே பச்சோந்தி மாதிரி மாறிட்டே இருக்கறவங்கதானே?

=================

.9   கூட்டணி என்பது, தேர்தல் காலங்களை கணக்கில் வைத்து உருவாகக் கூடியது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவே, தனித்தும், கூட்டணி அமைத்தும் போட்டியிட்டு இருக்கிறார். ஆனால், கொள்கை, லட்சியம் மாறாது.-தமிழக வருவாய் துறை அமைச்சர், உதயகுமார், # 

நம்ம கொள்கை எப்படியாவது ஜெயிக்கனும், அதானே?நமக்கு எதிர்மாறான கொள்கை உள்ள கட்சிகளையும்  சேர்த்துக்கலாம், நம்ம லட்சியம் ஆட்சியைப்பிடிஉக்கனும்

=======================

10   பாக்., பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு தீர்மானத்தில், 'இந்தியா - பாக்., இடையே போர் பதற்றம் தணியும் வகையில், பொறுப்பாக செயல்பட்ட, பிரதமர் இம்ரான் கானுக்கு, அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும்' என தீர்மானம் # 

பயங்கரவாதிகளை, தீவிரவாதிகளை  அமைதியா இருனு அடக்க முடியலையே?

=====================

11    தி.மு.க.,வினர் யாருக்கும் கொடுத்து உதவ மாட்டார்கள். இது, தி.மு.க.,வின் கொள்கை முடிவு.-பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி:  #
இல்லையே, நில ஆக்ரமிப்புல பலருக்கு டார்ச்சர் கொடுத்து இருக்காங்களே? பொய்யான வாக்குறுதி ஜனங்களுக்கு கொடுத்து இருக்காங்களே?


===============


12பிச்சைக்காரர்கள் கூட, அ.தி.மு.க.,காரனை பார்த்து தான் பிச்சை கேட்பர்-ராஜேந்திர பாலாஜி: # 

அம்மா தாயே , ஓட்டுப்போடுங்கன்னு பிச்சை எடுப்பது எல்லாக்கட்சி அரசியல்வாதிகளும்தான்


===============


13  இரட்டை இலை சின்னம் கிடைக்காதது, எங்களுக்கு பின்னடைவு அல்ல. தேர்தலில் சின்னம் ஒரு பொருட்டே அல்ல.-தினகரன்: 

#  அப்போ குக்கர் சின்னம்தான் வேணும்னு அடம் பிடிப்பது ஏன்?


வெத்து கெத்து அரசியல்வாதிகளீன் அடையாளச்சின்னம்


ச்சீ ச்சீ இந்தப்பழம் புளிக்கும் கதைதான்


=================


14 : எங்களின், 10 அம்ச கோரிக்கைகளை, அ.தி.மு.க., ஏற்று, உறுதி அளித்த பிறகே, கூட்டணிக்கு சம்மதித்தோம்-அன்புமணி # பிரமாதம், அடுத்த தேர்தல்ல கூட்டணீ மாறுனாக்கூட எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றதாதால்தான் மாறினோம்னு சமாளீச்சுக்கலாம்

======================


15 லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணி வலுவாக உள்ளது. இந்த பயத்தால், ஆளும் கட்சியினர், நலத்திட்ட உதவிகள் என்ற பெயரில், வாக்காளர்களுக்கு பணம் வழங்கி வருகின்றனர். என்ன தான் பணம் கொடுத்தாலும், தமிழக மக்கள், தி.மு.க., கூட்டணிக்கு தான் ஓட்டளிப்பர்; அந்தக் கூட்டணி தான் வெற்றி பெறும். மக்களுக்கு நல்லது செய்யும் ஒரே கட்சி, தி.மு.க., தான்.-ராஜ்யசபா, எம்.பி., சிவா # யாரோட மக்களூக்கு? தலைவர்களின் , அரசியல் கட்சி எம் எல் ஏக்களீன் மகன் மகள்< மக்களூக்கா?>

==============
16  கொசு மருந்து அடிக்கும்போது, எத்தனை கொசுக்கள் இறந்தன என எண்ணுவது இல்லை,'' என, வெளியுறவுத் துறை இணையமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, வி.கே.சிங்  #  அப்போ 300 பேர் தாக்குதலில் இறந்தாங்கனு அறிக்கை விட்டது ஒரு குத்து மதிப்பாத்தானா?


===============


17   அ.தி.மு.க.,வுடனான கூட்டணிக்காக, 300 கோடி ரூபாய்க்கு மேல் பணம் கைமாறியதாக, எங்கள் மீது அபாண்டமான பழியைச் சுமத்துகின்றனர்-பா.ம.க., மாநில துணை பொதுச் செயலர், அருள்: # ரொம்ப அதிகமா சொல்லிட்டாங்க போல, நீங்கதான் க்ரெக்ட் ரேட்டை சொல்லிடுங்களேன்


================

18  லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்காக வைக்கப்படும் பேனர்களில், என் படமே, பிரதானமாக இடம் பெற வேண்டும். வேட்பாளர்களின் படம் மற்றும் கட்சி சின்னம் ஆகியவை, கீழ் பகுதியில், சிறிதாக இடம் பெற வேண்டும் - பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர், மாயாவதி: # எதுக்கு சுத்தி வளைச்சுட்டு? ஜெ வழியில் செயல்படனும்னு உத்தரவு போட்டுடுங்க

===============


19 கூட்டணி குறித்துப் பேச, தே.மு.தி.க., மாவட்ட செயலர்கள் என்னைச் சந்தித்தனர். இது குறித்து, ஸ்டாலிடம் தெரிவிக்க போன் செய்தபோது, அவர் துாங்குவதாக தகவல் வந்தது. 'ஏதும் முக்கிய விஷயமா?' என்று கேட்டனர்; ஒன்றுமில்லை என்று கூறி, இணைப்பை துண்டித்து விட்டேன் - துரைமுருகன்: # கட்சித்தலைவர் மதியம் தூங்கறவர்ங்கற ராணுவ ரகசியத்தை வெளிப்படுத்தீட்டீங்களே, இது கட்சிக்கட்டுப்பாட்டை மீறுவது ஆகாதா?


இந்த ஆட்சியைக்கலைக்கும் வரை தூங்க மாட்டேன்னு சபதம் போட்டாரே?

ஆதாரம் இருந்தா ரெக்கார்டு பண்ணினதை வெளியிடுங்க பார்ப்போம்



================

20 தென் மாவட்டங்களிலும், கொங்கு பகுதி மாவட்டங்களிலும், எங்களுக்கு இப்போதும், நல்ல செல்வாக்கு இருக்கிறது.-த.மா.கா., துணை தலைவர், ஞானதேசிகன், # எந்த அர்சியல் கட்சிகளாவது எங்களுக்கு இன்ன பகுதிகளீல் செல்வாக்கு இல்லைனு சொல்லி இருக்காங்களா?



=================

0 comments: