Wednesday, March 06, 2019

கழகமே ஒரு செட்டப்தான்

1  பிரதமர் நேர்மையாக இருந்தால் மோசடியாளர்கள் யாரும் ஓடமாட்டார்கள்”- அருண் ஜெட்லி சர்ச்சை ட்வீட் # இதுல சர்ச்சை என்ன இருக்கு?போபர்ஸ் ஊழலில் சொத்து குவிச்சவங்க மாதிரி ஆட்களோ,அவங்க வாரிசோ பிரதமரா வந்தா ஏற்படும்் பின் விளைவுகளை சொல்றார்


============2 கிராம சபை கூட்டங்களில் தி.மு.க.வினரே கேள்வி கேட்கின்றனர்; அமைச்சர் செல்லூர் ராஜூ
# ஏன்னா அவங்களுக்கு கேட்க மட்டும்தான் தெரியும்,எதிர்க்கட்சியா இருக்கறப்ப ஆளுங்கட்சியை கேள்வி கேட்பாங்க,ஆளுங்கட்சியாகிட்டா லஞ்சம் கேட்பாங்க,கமிஷன் கேட்பாங்க,ஓசி ல குடு னு கேட்பாங்க===================

3 கோவை − சின்னதம்பி யானையை பிடித்து கும்கி யானையாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் # சின்னத்தம்பி ஹீரோ பிரபு
கும்கி ஹீரோ அவரோட மகன் விக்ரம் பிரபு
மாத்துனா என்ன தப்பு?னு மொக்கை போட யாரும் இன்னும் கிளம்பலையா?


=============


4 ஸ்டாலின் காமெடி நடிகராக மாறி வருகிறார்”- அமைச்சர் செல்லூர் ராஜு # காமெடி நடிகர்களுக்கு ஹீரோ ஆசை வரும்,வந்துட்டா உள்ள மார்க்கெட்டும் போய்டும்=================


5 ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தேன் கூட்டை கலைப்பதற்காகவே வாகனங்கள் கொளுத்த பட்டதாக போலீசார் சாட்சியம்-செய்தி
# எங்க ஊர்ல தேன்கூட்டைக்கலைக்கனும்னா தேன்கூட்டைத்தான் கொளுத்துவாங்க,இது என்ன புது உருட்டா இருக்கு?================


6 திருப்பதி கோவிலில் இருந்து 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த வைரக் கற்கள் பதிக்கப்பட்ட தங்கக் கிரீடங்கள் திருடப்பட்டதால் அதிர்ச்சி # ஆந்திராவில் கூட நம்ம கட்சித்தொண்டர்கள் கை வரிசையைக்காட்டி இருப்பாங்க போல


=================7 முதலில் உங்கள் வீட்டை கவனியுங்கள்; ஏனெனில் தனது வீட்டை நிர்வகிக்க முடியாத ஒருவரால் நாட்டையும் நிர்வகிக்க முடியாது
- மத்திய அமைச்சர் நிதின் கட்கரி # வீட்டைப்பற்றிய கவலை இல்லாதவரே நாட்டுக்காகப்பணி ஆற்றமுடியும்.ஒண்ணுக்கு மூணு வீடு வெச்சிருக்கறவங்க சொத்து சேர்க்கவே,திருடவே நேரம் சரியா இருக்கும்


===============
8  மோடி அரசின் இடைக்கால பட்ஜெட்; இது பட்ஜெட் அல்ல! பாரத மக்களை ஆசை வார்த்தை காட்டி திசைதிருப்பும் மலிவான தந்திரத்துடன் கூடிய ஒரு தேர்தல் அறிக்கை!” - மு.க. ஸ்டாலின் # தலைவரே!ஆளுக்கு ஒரு"செண்ட் இடம் இலவசம்னு ஆசைகாட்டினது யாரு?நம்ம தானைத்தலைவர்தானே?நாம மட்டும்தான் திருடனுமா?==================

9 இந்து முறைப்படி திருமணம் செய்பவர்கள் திமுக உறுப்பினராகக் கூடாது என்று அறிவிக்க ஸ்டாலின் தயாரா?- சரத்குமார் சவால் # அவ்ளவ் கூட வேணாம்,சாமி கும்பிடற இந்துக்கள் ஓட்டு வேணாம்னு தில்லா சொல்லச்சொல்லுங்க நாட்டாமை,நாத்திகவாதி மட்டும் ஓட்டு போட்டா 10% கூட தேறாது,


=================
10 திமுக ஆட்சியில் டிவி எங்க தாத்தா கொடுத்தார், எங்க அப்பா செட் டாப் பாக்ஸ் தருவார்! - உதயநிதி ஸ்டாலின் #
மொத்தத்துல கழகமே ஒரு செட்டப்தான்கறாரா?

===============


11 திமுக ஆட்சியில் டிவி
எங்க தாத்தா கொடுத்தார்
எங்க அப்பா செட் டாப் பாக்ஸ்
தருவார்-உதயநிதி ஸ்டாலின்
# சபாஷ்,ஆனா திமுக ஆட்சிக்கு வந்தா கரண்ட் யார் தருவாங்க?போன திமுக ஆட்சியில 14 மணிநேரம் / 24 மணி நேரம் கரண்ட் இல்லையே?ஆட்சி அடுத்ததா வரமுடியாம போக கரண்ட்தானே முக்கிய காரணி?


==================


12 காந்தியின் உருவபொம்மையை துப்பாக்கியால் சுட்ட சம்பவம்.. இந்து மகா சபையை சேர்ந்த பெண், கணவர் கைது # பொண்டாட்டி தப்பு செஞ்சா புருசனை எதுக்கு கைது?அந்தப்பொண்ணோட அம்மாவைக்கைது பண்ணலாம்,வளர்ப்பு சரி இல்லைனு


=================


13 "காலையில் ஒன்று மாலையில் ஒன்று பேசுகிறது பா.ம.க" - திருமாவளவன்.# இது ஒரு பெரிய பிரச்சனையா?காலைல குட் மார்னிங்க சொல்றதுதான்,சாயங்காலம் குட்ஈவ்னிங்க் சொல்றதுதான்


=================14 மதுக்கடைகளில் சிசிடிவி கேமராக்கள் ஏன் பொருத்தவில்லை? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை கேள்வி # குடிகாரன் மப்பு ஏத்திக்கிட்டு மேலும் குடிக்க காசு பத்தலைனு அந்த கேமராவேயே அபேஸ் பண்ணி வித்துட்டா!?


================15 லஞ்சம் வாங்க கூடாது என்று மோடியிடம் சத்தியம் வாங்கிய தாயார் # அம்மா,உங்க கிட்ட லஞ்சம் வாங்க மாட்டேன்னு சத்தியம் பண்ணியிருப்பாரோ?===============


16 சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க தேவசம் போர்டு சம்மதம்
சீசன் முடிஞ்சிடுச்சே?இனி 2019 நவம்பர்ல பாத்துக்கலாம்=================17 விரைவில் அப்பா முதல்வராவார்.. மக்களின் துயரை துடைப்பார்.. தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு வரை ஜனங்க துயரம் தீரவே போறதில்லைங்கறாரு================


18 காங்கிரசுக்கு தூதுவிட்டு அது முடியாமல் போனதால், கமல் திமுகவை விமர்சிப்பது அரசியல் கத்துக்குட்டி தனத்தையே காட்டுகிறது - வாகை சந்திரசேகர் தானைத்தலைவர் "கனி"கனியும்னு,காத்திருக்கேன்ட்டு கேப்டன் படிஞ்சு வர்லைன்னதும் கட்சிக்காரங்களை விட்டு திட்டி அறிக்கை விட்டோமே,அது மாதிரிதான்==============


19 பாஜக கூட்டணியில் எதிர்பார்க்கும் தொகுதி அளிக்காவிட்டால் தனித்து போட்டி. -பாரிவேந்தர். தொகுதி எதிர்பார்க்கறீங்க?
1 தந்தாலே போதும்,ஹிஹி===============


20 பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்!’ - எண்ணிக்கை குறைவதாக தகவல் # நம்மாளு டெய்லி சிக்கன்"65 சாப்பிடறான்,கோழிகளோட எண்ணிக்கை"குறையாமயா இருக்கும்?


==================  

0 comments: