Friday, March 01, 2019

தடம் - சினிமா விமர்சனம்

Image result for thadam movie
பங்களாவுல ஒரு பணக்காரர் கொலை செய்யப்படறார், அவரை யார் கொலை பண்ணி இருக்கக்கூடும்கற சந்தேக லிஸ்ட்ல 2 பேரை போலீஸ் கைது ப்ண்ணுது, அந்த 2 பேருல  ஒரு ஆளு அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரோட பழைய பகையாளி. அவரோட பொண்ணு லவ் மேரேஜ்க்கு உதவி செய்தவர். அந்த காண்டுல அந்த இன்ஸ்பெக்டர் இந்த கேசை எப்படியாவது அவன் பேருல எழுதிடனும்னு துடிக்கறாரு, அவருக்கு உதவியா இருக்கும் லேடி சப் இன்ஸ்பெக்டர்  அவரது எண்ணத்தைப்புரிஞ்சுக்கறாரு. இந்த கொலை கேஸ் எப்படி துப்பு துலக்கப்பட்டது என்பதே திரைக்கதை


 சும்மா சொல்லக்கூடாது, இயகுநர் மகிழ் திருமேனி சும்மா மிரட்டி இருக்கார்  திரைக்கதைல, ராட்சசன் படத்துக்குப்பின்  ஒரு சைக்கோ க்ரைம் த்ரில்லரில் நிறைய ஹோம் ஒர்க் செய்து படம் எடுத்த இயக்குநர்களில் இவர் நிச்சயம் இடம் பெறுவார், இந்த ஆண்டின் சிறந்த திரைக்கதை , இயக்கம்,நடிப்பு உட்பட பல விருதுகள் காத்து இருக்கு, அனைவருக்கும் வாழ்த்துகள்


ஹீரோவா  அருண் விஜய், ஆள் சும்மா மெடிக்கல் ரெப் கணக்கா இருக்காரு, இவரோட ஜிம் பாடி கூடுதல் பிளஸ், இவரோட லைஃப் டைம் மூவிஸ் லிஸ்ட்ல பாண்டவர் பூமி , தடையறத்தாக்க, என்னை அறிந்தால், தடம் இவை இடம் பெறும், ஆக்சன் காட்சிகளில் இவரது ஸ்டண்ட் அபாரம்


இவருக்கு அடுத்ததா மனம் கவருபவர் அந்த  லேடி எஸ் ஐ , கிட்டத்தட்ட ஆட்டோகிராஃப், திருப்பாச்சி மல்லிகா சாயல். அருமையான நடிப்பு, சிறந்த துணை நடிகைக்கான விருது நிச்சயம்



இரு நாயகிகள். காதலன் ஏமாத்தறார்னு தெரிஞ்சும் ரூ 1.5 லட்சம் கொடுப்பதும் அதைத்தொடர்ந்து வரும் வசனங்களும் கவிதை


ஒரு கப் காபி குடிக்கலாமா? என நாயகன் கேட்கும்போது அந்த கேள்வில ஒரு பிழை இருக்கு, அதை சரி செஞ்சு கரெக்டா கேட்டா வர்றேன் என சொல்லும் நாயகி அழகு, அதுக்காக நாயகன் மண்டையை உடைத்து தப்பைக்கண்டறிவது சுவராஸ்யம்


இன்ஸ்பெக்டராக வருபவர் அசத்தி விட்டார். ஓவர் ஆக்டிங் இல்லாத நுட்பமான நடிப்பு , பாடி லேங்க்வேஜ்



 ஃபிளாஸ்பேக் காட்சிகளில் சோனியா அகர்வால். கச்சிதம்


கொலை வழக்கில் தீர்ப்பு வந்த பிறகு   திரையில் காட்டப்படும் இதே போல் உலகம் முழுக்க நடந்த கேஸ் விபர பட்டியல் அபாரம்


காஸ்ட்யூம் டிசைனர்  முதற்கொண்டு,, ஒளிப்பதிவாளர், எடிட்டர் என தொழில் நுட்ப ஜாம்பவான்களும் இயக்குநருக்கு கை கொடுத்து இருக்கின்றனர் 


Image result for thadam movie heroine

நச் டயலாக்ஸ்


1  தெரியாத உத்தமன் கிட்ட பிஸ்னெஸ் பண்றதை விட தெரிஞ்ச கம்மனாட்டி கிட்ட பிஸ்னெஸ் பண்றது நல்லது என்பது என் பாலிசி


வாழ்க்கைல மேஜிக் இருக்கனும்,அப்பதான் சுவராஸ்யம்


3  மனுசனாப்பொறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு வீக்னெஸ்.சீட்டாட்டம் அவங்க வீக்னெஸ் அதுக்காக அவங்களை கெட்டவங்க னு சொல்ல முடியாது






தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்


1  ரசிகர்கள் வரவேற்பு தியேட்டர்ல கிடைக்கும்கறதுக்காக பெண்கள் தம் அடிப்பது போல் காட்டுவது தவறு


நர்ஸ்களை யூனிபார்முடன் டான்ஸ் ஆடவிட்டு க்ருப் டான்சர்கள் ஆக்கிவிட்டது தவறான முன் உதாரணம்


3  நாயகன்,நாயகி இருவருக்குமான ஆடை வடிவமைப்பு அபாரம்.ஒரு நபரின் கேரக்டரை அவர் அணிந்திருக்கும் ஆடையே வெளிப்படுத்தி விடும் ( அரசியல்வாதிகளின் வெள்ளை வேட்டி ,சட்டை விதிவிலக்கு)


4 நான் சின்னப்பையனா இருக்கும்போது தமிழ் சினிமாக்களில் கமல் படங்கள்ல மட்டும்தான் லிப் கிஸ் இருக்கும்,இப்ப வர்ற படங்கள் 100 ல 95 படங்கள்ல லிப் கிஸ் அசால்ட்டா வருது,எக்ஸ்ட்ரா பேட்டா உண்டாம்


5  விசாரணைக்கைதியை அடிச்சதுக்கு சஸ்பெண்ட் ஆன போலீஸ் ஸ்டேஷன்கள் புள்ளிவிபரங்களை (குஜராத்,ஹரியானா ஸ்டேஷன்) ஹீரோ லாக்கப்ல பட்டியல் இடும்போது தியேட்டர்ல கைதட்டல் அள்ளுது


6  கொலையை யார் செய்தது? மாதிரி ராஜேஸ்குமார் டைப் கதைதான்,ஆனால் திரைக்கதை கட்டமைப்பு சுஜாதா பாணி,அபாரம் ,ஒவ்வொரு கேரக்டரையும் வடிவமைத்திருப்பது சாண்டில்யன் பாணி. இடைவேளை வரை படம் விறுவிறுப்பு


7  பினாமி சொத்துக்கள் வெச்சிருந்தா,நிரூபிக்கப்பட்டா 7 வருசம் தண்டனை னு அரசு செய்தி படம் தியேட்டர்ல போடறாங்க,கலைஞர்,ஜெ,சசிகலா,தினகரன் க்ரூப்க்கெல்லாம் தண்டனை கிடைச்சுதா?


8 ஒரே கருமுட்டையில் உருவான இரட்டையர்களுக்கு(identical twins) டிஎன்ஏ ஒரே மாதிரி இருந்தாலும் கைரேகை வித்தியாசப்படும்


காலம் எவ்ளவ் கொடுமையானது?காதல் கொண்டேன் ல சைட் அடிச்ச மென்சோக ஐ ஸ்பெஷலிஸ்ட் சோனியா அகர்வால் அம்மா கேரக்டர்ல...


சபாஷ் டைரக்டர்


1  படத்தின் கதையை யூகிக்க வைக்கும் ஒரு அடை மொழி டைட்டிலை இயக்குநர் பட ப்ரமோவிலோ , போஸ்டரிலோ, டைட்டில் கார்டிலோ தராமல் சாமார்த்தியமாக செயல்பட்ட விதம்


2 க்ளைமாக்ஸ் டிவிஸ்ட்டை யாராலும் யூகிக்க இயலாதவாறு மறைத்தது


3  நாயகன் , நாயகி காதல் காட்சிகள் கவிதை


4  யோகிபாபு வை சரியான இடத்தில் உபயோகித்தது





லாஜிக் மிஸ்டேக்ஸ் ( இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்)

1  லாஜிக் மிஸ்டேக் 1− இன்ஸ்பெக்டர்,சப் இன்ஸ்பெக்டர் இருவரும் இருக்கும்போது அங்கே வரும் காவலாளிகள் இன்ஸ்பெக்டருக்கு மட்டும் சல்யூட் வைக்கறாங்க,சப் இன்ஸ்பெக்டரைக்கண்டுக்கவே இல்ல?


2  லாஜிக் மிஸ்டேக் 2− ஒரு கொலை கேஸ் விஷயமா S.I குற்றவாளியோட பேங்க் ஸ்டேட்மெண்ட்டை விசாரிக்க சொல்றாரு,ஒருவைளை போஸ்ட் ஆபீஸ்ல SB a/c வெச்சிருந்தா எப்டி தெரியும்?


ஹீரோவுக்கு கூரான மூக்கு,அவரது சின்ன வயசு கேரக்டரா தேர்ந்தெடுக்கப்பட்ட பையனுக்கு பெரிய சப்பை மூக்கு,கேரக்டர் தேர்ந்தெடுப்பில் இயக்குநர் சறுக்கிய இடம்



4  லாஜிக் மிஸ்டேக் 3− இன்ஸ்பெக்டரோட பொண்ணுக்கு பண உதவி செய்ய ஹீரோ ஒரு ஊருக்குப்போய் குடுத்துட்டு வந்ததா விசாரணைல சொல்றாரு,நெப்ட் பண்ண மொபைல் போதுமே?எதுக்கு சேர் ,டேபிளை எல்லாம் உடைக்கனும்?





சி.பி கமெண்ட் -தடம்−கடந்த 10 வருடங்களில் வந்ததில் சிறந்த க்ரைம் த்ரில்லர்−2019−ன் சிறந்த திரைக்கதை,இயக்குநரின் நெறியாள்கை அற்புதம்,ஆல் சென்ட்டர் ஹிட்,விகடன் 50+, ரேட்டிங் 3.75 / 5 ,பிளாஸ்பேக் காட்சிகள் நீளம் என்ற சிலரின் வாதம் வீண்

0 comments: