Tuesday, March 05, 2019

ஆர்கானிக் டூத்பிரஸ் 1000 ருபா

1  கிராமத்துல இருக்கற யாராவது "வேப்பங்குச்சில"பல்"துலக்குனா நல்லதுன்னா தமிழன் எள்ளிநகையாடுவான்,இதே குச்சியை ஆர்கானிக் டூத்பிரஸ் னு 1000 ருபாக்கு பாரீன்காரன் வித்தா கும்பிடு போட்டு வாங்கிக்குவான்==============2 ஒரு பொண்ணுட்ட வாட்சப் நம்பர் கேக்கனும் ஆனா ரொம்ப கூச்சமா இருக்கு. எப்டி கேக்கலாம்.
ப்ளேபாய்ஸ் உதவுங்க 😔னு ஒருத்தரு ஸ்டேட்டஸ் போட்டா அது பொண்ணுங்களுக்கு விரிக்கப்படும் வலை என கொள்க! அவ்ளோ நல்லவரா?அவ்ளோ கூச்ச சுபாவியா?னு பொண்ணுங்க நம்பி ஏமாறட்டும்னுதான்.ஆனா பொண்ணுங்க உஷாரு===============3 சுயம் பாதிக்கப்படும் போது, சோறு மூன்றாம் பட்சமே” என்று ரோஷமா இருந்தா ஊருல ஒரு ஆம்பள பொண்டாட்டி கையால சோறு சாப்பிட முடியாது================


4 எம் ராஜேஷ் + சிவகார்த்திகேயன் = மிஸ்டர் லோக்கல்

டைட்டில் நல்லாருக்கு,;தர லோக்கல் னு வெச்சிருந்தா இன்னும் சிறப்பா அமைஞ்சிருக்கும்


===============


5 கட்டண சேனல்களுக்கு கடிவாளம் போட பிடி நம்ம கிட்டதான் இருக்கு,ஒரு ஆறு மாசம் எந்த சேனலும் பாக்கறதில்லைனு முடிவு பண்ணி ஓய்வு நேரத்தை கோயில்,பார்க் ,பீச் அவுட்டிங் போய்ட்டா சேனல்காரன் நம்ம கால்ல வந்து விழுவான்,ஆனா அவன் நம்பிக்கை வெச்சிருக்கறது சீரியல் பைத்தியங்களை நம்பி


===============


6 அரசுப்பள்ளி ஆசிரியர்களே!
1 சம்பள உயர்வு மற்றும் உங்க சொந்தப்பிரச்சனை தவிர மக்கள் பிரச்சனைக்காக எப்பவாவது போராடி இருக்கீங்களா?
2 அரசுப்பள்ளியில் கற்பிப்பது சரியாக இருந்தால் எதுக்கு எக்ஸ்ட்ரா பீஸ் வாங்கி வீட்ல ட்யூசன் எடுக்கறீங்க?
3 உங்க குழந்தைகளை அரசுப்பள்ளியில் ஏன் சேர்க்கல?(உடனே MLA MP னு கை காட்ட வேணாம்!ஆசிரியரா மத்தவங்களுக்கு முன் உதாரணமா இருக்கலாமே?)
4 போராட்டம் நடந்த 8 நாட்களில் அரசுப்பள்ளி மாணவர்கள் கல்வி பாதிக்கப்பட்டதற்கு தார்மீகப்பொறுப்பேற்று தனியார் பள்ளியில் படிக்கும் உங்க குழந்தைகளை கட்டாய விடுமுறை எடுக்க வைத்திருக்கலாமே?ஏன் செய்யலை?சுயநலம்தானே?
5 மார்ச் மாசம் பரீட்சை முடிந்த பிறகு லீவ் நாட்கள்ல போராட்டம் ,ஆர்ப்பாட்டம் ஏன் பண்றதில்லை?================ஜிமிக்கி சேலஞ்ச்,மூக்குத்தி"சேலஞ்ச்,நெக்லெஸ் சேலஞ்ச்னு படிப்படியா முன்னேறி வரும் பெண்கள் அடுத்த கட்டமா ஒட்டியாணம் சேலஞ்ச்க்கு விரைவில் வருவாங்கனு
ஐ ஆம் வெய்ட்டிங்க்===============


8 மீன ராசி அன்பர்களே!இந்த வருஷ ராகு கேது பெயர்ச்சி பலன்கள் நமக்கு சுமாராதான் இருக்கு.அலைச்சல் ஜாஸ்தி,உடல் நலன் குன்றும்,பாலோயர்ஸ் அன்பாலோ"பண்ணுவாங்க,பொண்ணுங்க பிளாக் பண்ணுவாங்க,"வியாபாரி"களுக்கு எதிரிகளால் பிரச்சனை வரும்,இந்த வருசம் பூரா டிஎம் பக்கம் போய்டாதீங்க==============


9 பேரன்பு ரொம்ப சோகப்படம்னும்
செயற்கையான இயக்கம்னும் சிலர் நெட்ல பரப்பறாங்க.மாமூல் மசாலா குப்பைகளையே ரசித்து நம் மூளையை மழுங்கடிப்பதை விட இது போன்ற மாறுபட்ட திரைக்கதைகளை ரசிக்கப்பழக வேண்டும்.அது படைப்பாளிக்கு நாம் தரும் கவுரவம்================


10 எழுத்தாளர்கள் எப்போ வீட்ல இருக்க மாட்டாங்கனு தெரிஞ்சுக்கிட்டு அப்போ போய் அவர்"வர்ற வரை அவரு எழுதுன புக் எதுனா படிச்ட்டு இருக்கேன்னு வாங்கி ரிசப்ஷன்ல/ திண்ணை ல உட்கார்ந்து படிச்ட்டு எழுத்தாளர் வர்றதுக்குள்ள எஸ் ஆகிடனும்.லைப்ரரி இல்லாத ஊரார்கள் முயற்சிக்கலாம்================


11 1000+ படங்களுக்கு இசை அமைத்த இசை ஞானியிடம் ஏ ஆர் ரஹ்மான் 500 படங்கள் உதவி இசைஞரா பணி ஆற்றி இருக்காராம்,அதனாலதான் அதெல்லாம் ஹிட் ஆச்சு னு யாரும் இன்னும் கிளம்பலையா?================12 கேரளா கோட்டயம் ரம்யா, சங்கணாச்சேரி ரம்யா வில் திரையிடப்பட்ட சர்வம் தாளமயம் போதிய 15 பேர் வராததால் ஒரு ஷோ கூட ஓட்டலையாம்,அட துயரத்த.பேரன்பு கூட மம்முட்டி ஸ்டார் வேல்யூ வெச்சு ஒப்பேத்தறாங்க.அதுவும் 4 ஷோ இல்ல. டெய்லி 2 ஷோதான்


==============


13 உலக புற்றுநோய் தினம் இன்று..! ஈரோட்டில் விளைந்த ஒரிஜினல் மஞ்சள் ,கருஞ்சீரகம் ,மிளகு ,கறுப்புத்திராட்சை விதை இவற்றை தொடர்ந்து உணவில்"சேர்த்து வந்தால்"கேன்சர்"பாதிப்பு ஏற்படாது (தம் அடிக்கிற,பான்பராக் போடற கேசுங்களுக்கு"இது பொருந்தாது) ( 4/2/19)\\\


===============14 மம்தாபேனர்ஜி சிபிஐ அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தராம எதிரப்பது குறித்து ஆதரவா?எதிர்ப்பா?னு"பலர் குழப்பமா இருக்காங்க.இதை திமுக ஆதரிக்குது,பாராட்டுது,அப்போ நிச்சயம் இது"சட்டத்துக்குப்புறம்பான,ஏதோ"திருட்டுத்தனத்தை மறைக்கறதுக்காகத்தான் இருக்கும்


=================`15 பேரன்பும் ,பெருங்கோபமும் கொண்டவன் னு சிலர் ஸ்டேட்டஸ் போடறது மாதிரி சில குறைகள் இருப்பதால் "பேரன்பு" மீது பெருங்கோபம் கொண்டவர்களாக இருக்கின்றனர்


================


16 ஒரு திருடன் ஒருத்தனுக்கு ஆதரவா குரல் குடுக்கறான்னா அவன் நிச்சயம் இன்னொரு திருடனாத்தான் இருப்பான்==============


17 பேஸ்புக்ல சில புரட்சிப்பெண்கள் டைட்டிலை"சொல்லாம கில்மாப்படத்தோட கதையை மட்டும் சொல்லி திட்றாங்க,டைட்டிலோ,லிங்க்கோ"ஷேர்"பண்ணுனா யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்=============


18 ரஜினி படத்தை விட கமல் படத்துக்கே நல்ல ஹிட்ஸ்"தந்ததாக ரஜினி இளையராஜாவிடம் செல்லச்சண்டை போட்டதற்கு இளையராஜாவின் பதில் அருமை.ஆனா கிராமியப்படங்களில்தான் அவரது இசை தூக்கல்.ராமராஜன் அதிக ஹிட்ஸ் அடிக்கக்காரணம் அதுவே=================


19 ஒரு விழாவில் நிகழ்ச்சித்தொகுப்பாளரா பணி ஆற்றுபவர்கள் மேடையில் பிரபலங்களை பேசவிடனும்,தன்னோட மேதா விலாசத்தைக்காட்டவோ,அதிகப்பிரசங்கித்தனத்தை வெளிப்படுத்தவோ கூடாது,மோசமான முன் உதா− சுஹாசினி"மணிரத்னம்


================

20 ஆனந்த விகடன்,தினமலர்,தினத்தந்தி,த தமிழ் இந்து மாதிரி அதிக பாலோயர்கள் உள்ள பத்திரிக்கைகள் தங்கள் இதழில் வெளிவந்த கதை,கட்டுரைகளை ,அதன் லிங்க்கை பகிரும்போது படைப்பாளியின் ட்விட்டர் ஐடியையும் குறிப்பிட்டால் படைப்பாளிக்கு உதவியாக இருக்கும்,பாலோயர்ஸ் அதிகமாகும்==================

0 comments: