Tuesday, March 26, 2019

நாட்டு நடப்பு நையாண்டிச்சிரிப்பு

1  மத்தியில், காங்கிரஸ் ஆட்சி அமைப்பதற்கு வாய்ப்பு இல்லை. கடந்த தேர்தலில், 44 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றனர். தற்போது, 100ஐ எட்டாத சூழல் தான் அக்கட்சிக்கு உள்ளது-மின் துறை அமைச்சர்தங்கமணி:  # அப்படிப்பார்த்தாலும்  போன தேர்தலை விட டபுள் மடங்கு வெற்றி தானே?


=============


2 தமிழக மக்கள் செய்த தவறால், தவறான மனிதர்கள் ஆட்சியில் உள்ளனர். மத்தியிலும், மாநிலத்திலும், மக்களைப் பற்றி கவலைப்படாத அக்கிரம ஆட்சி நடக்கிறது-  ஸ்டாலின்: # அப்போ இந்த முறையும் தமிழக மக்கள் அதே தப்பை திரும்ப செய்யப்போறாங்க


நம்ம ஆட்சியா இருந்தா மக்களைப்பற்றி கவலைப்பட்டிருப்போம், அதாவது  தன் வீடு, மனைவி , மக்கள் இப்படி


==================


3  ஓட்டுக்கு பணம் கொடுப்பதை, யாரும் ஊக்குவிக்க வேண்டாம். பணம் கொடுத்து, தமிழர்களை கையேந்தும் நிலைக்கு தள்ள வேண்டாம் - பொன் ராதா # அதே மாதிரி 20 ரூபா டோக்கன் கொடுஹ்ட்து பின்னே பணம் தர்றதா ஏமாற்றவும் வேண்டாம்னு ம் சொல்லிடுங்கோ


================


4   இங்கு நடப்பது, அ.தி.மு.க., ஆட்சி இல்லை; 'அடல்ட்ஸ் ஒன்லி' ஆட்சி. - # அடல்ட்ஸ் ஒன்லின்னா 18+ வயசு  உள்ளவங்கோட ஆட்சி,  17 வயசு ஆன மைனருங்க தேர்தல்லயே நிக்க முடியாதே?


==================

5   மோடி, நம் நாட்டின் பிரதமர் இல்லை; அவ்வப்போது வந்து செல்லும், என்.ஆர்.ஐ. -உதய நிதி  #  சிபி ஐ ரெய்டு வரப்போகுது


=============


6    இந்தத் தேர்தலில், தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கை தான், கதாநாயகன்; வில்லன், மோடி தான்-உதய நிதி # கதாநாயகி தமிழச்சி தங்க பாண்டியனா?


===============


7   தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 90 சதவீதம், 'காப்பி' அடிக்கப்பட்டவை=ராமதாஸ்  # அதாவது அட்லி அவிச்ச இட்லினு சொல்லுங்க


=============


8  தி.மு.க வின் தேர்தல் அறிக்கையில், கதாநாயகனும் இல்லை; கதாநாயகியும் இல்லை. ஏன், வில்லன் கூட இல்லை. அது வெறும், 'காமெடி' படம் தான்--ராமதாஸ்  # ஊழல் அற்ற ஆட்சி அமைப்போம்னு நல்லா “கதை” வேணா விடுவாங்க

=================


 தி.மு.க., - அ.தி.மு.க., சார்பில் கொடுக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும், என்னைச் சின்ன வயதிலேயே ஈர்த்தவை தான். அதே வாக்குறுதிகளைத் தான், இப்போதும் கூறுகின்றனர். -கமல் # அது மட்டுமா கொடுக்கறாங்க, எக்ஸ்ட்ரா 1000, 2000 நு  ரேஷன் கார்டுக்கு கொடுக்கறாங்களே? அது உங்க சின்ன வயசுல தந்தாங்களா?


====================


10    தேர்தலில் போட்டியிட, நான் அஞ்சவில்லை. அந்த பயமெல்லாம் இருந்தால், கட்சியே துவங்கியிருக்க மாட்டேன் - கமல் # அப்போ  ரஜினி பயப்ப்படறாருங்கறாரா?


=================


11     ஆறு பொருத்தம் இருந்ததால், தி.மு.க., கூட்டணியில் சேர்ந்தேன்,'' - பாரிவேந்தர்     %    ஆறு மனமே ஆறு அந்த ,ஆண்டவன் கட்டளை ஆறு


=============

12  அ.தி.மு.க., அணி, கொள்ளையடிக்க, பேரம் நடத்த, அமைக்கப்பட்ட கூட்டணி,- ஸ்டாலின் # நாம மட்டும் வெள்ளை அடிக்கவா போறோம்?

==============
13  தமிழகத்தில் நடக்கும் இடைத்தேர்தலில், 18 தொகுதிகளில், அ.தி.மு.க., வெற்றி பெற்றாலும், அங்கிருந்து, 15 பேர், தி.மு.க.,வுக்கு வருவது உறுதி,'' - துரைமுருகன்  # அப்போ எதுக்கு தண்டமா திமுக போட்டி இடுது? காசை மிச்சம் பண்ணலாமே?


==============

14  ஆறு பொருத்தம் இருந்ததால், தி.மு.க., கூட்டணியில் சேர்ந்தேன்,'' - பாரிவேந்தர்  $ யாருக்கு ஏழரை என்பது தேர்தல் முடிவில் தெரியும்


===============


15  பாஜகவுடன் கூட்டணி அமைந்தபோதிலும், எம்ஜிஆரின் கொள்கைகளை விட்டுக் கொடுக்கமாட்டோம்'' - அமைச்சர் டி.ஜெயக்குமா # மத்தியில் ஆட்சி அமைக்கும் கட்சியுடன் இணக்கமாக இருப்பதுதானே எம் ஜி ஆரின் முக்கியக்கொள்கை?-------------------

16   

எந்த காலத்திலும் அதிமுகவுடன் டிடிவி.தினகரன் இணைய முடியாது: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கருத்து  # அப்போ மதுரை ஆதீனம் சொன்னது கப்சாவா?இணைக்க முயற்சிகள் நடக்குதுன்னாரே?=============


17  

ஆட்சியில் இருந்து கொண்டு மக்களை ஏமாற்றுகிறார் முதல்வர்: சேலம் பிரச்சாரக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் புகார்  # ஆட்சில இல்லாதப்ப எப்படிங்க மக்களை ஏமாற்ற முடியும்> இருக்கறப்பதான் ஏமாற்ற முடியும்?நாங்க ஆட்சிக்கு வந்தா ஊழல் பண்ண மாட்டோம்னு வேணா ஏமாற்றலாம்=================


18   

நெல்லை சிவன் கோயில் சிலை திருட்டு வழக்கில் டிஎஸ்பி காதர்பாட்சா நள்ளிரவில் கைது: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு நடவடிக்கை  # வேலியே பயிரை மேய்ஞ்சிருக்கு?=============


19 

கோடீஸ்வர வேட்பாளர்கள்; புதுச்சேரியில் கமல் கட்சி வேட்பாளர் முதலிடம் # மக்கள் நிதி மய்யமா? நீதி மய்யமா?=============

20 டிடிவி தினகரன் முன்னிலையில் சினிமா நடன இயக்குநர் கலா இணைந்துள்ளார்.

உயிரைக் கொடுத்து வேலை செய்வேன் என உருக்கம் # இவரு உயிரைக்கொடுத்துட்டா இவர் வேலை செஞ்சதுக்கான சம்பளத்தை யார் வந்து வாங்குவா?


==================

0 comments: