Friday, September 23, 2011

ஆயிரம் விளக்கு - சனாகான் +சத்யராஜ் + சாந்தனு கே பாக்யராஜ் +கூட்டணி - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjoBOTOTfNIsHcX_GTj0LvQn191GzRssHEsm3K11bApumlKIYe9AJfyzm7utTwzAT9lhg6tujb0XkEAmcCgX83hyphenhyphenXbIrK-_h5iNWrhi7a6rB_WZB48uPAm3tifuP3hgdgdcCzIuTPACV4zH/s1600/av1.jpgசத்யராஜ் பாசத்துக்கும் அன்புக்கும் ஏங்கும் ஒரு தாதா.. சாந்தனு ஆள் நல்ல பர்சனாலிடியாக இருந்தாலும் மொக்க ஃபிகர் மோஹனா (சனாகான்)வை லவ்வும் ஒரு சாதா இளைஞன். இந்த சாதா இளைஞனை அந்த தாதா தத்துப்பிள்ளையாக வளர்க்க நினைக்கிறார்... அவர் தாதா என இந்த சாதாவுக்கு தெரியாது..  இருவருக்கும் இடையே நடக்கும் பாசப்போராட்டம் தான் கதை.. 


ஹீரோ சாந்தனு - நேர்ல பார்க்க சாக்லெட் பாய் மதிரி இருக்கும் கே பாக்யராஜ் வாரிசு இந்தப்படத்துல ஏன் தூங்கி எழுந்த விடியா வெள்ளி போல் இருக்கார்னு தெரில.. எப்பவும் ஆள் டல்லா இருக்கார்.. ஹீரோயின் கூட 3 டூயட்டும், சத்யராஜ் கூட ஒரு பாட்டும் பாடறார்.. 2 ஃபைட் போடறார்..  அவ்ளவ் தான்...!


ஹீரோயின் சனாகான் சாதாரண 40 மார்க் ஃபிகர்.. இவர் படம் முழுக்க நடிப்பையும் காட்டலை.....குணச்சித்திரத்தையும் காட்டலைன்னு சொல்ல வந்தேன் ஹி ஹி .. ஃபேஸ் எக்ஸ்பிரஸ்னா என்ன?ன்னு பாப்பாக்கு சுத்தமா தெரில பாவம்.. ஒரு சீன்ல வாய்க்கால்ல தண்ணியைப்பார்த்ததும் அசால்ட்டா எந்த தயக்கமோ, கூச்சமோ இல்லாம தாவணியை கழட்டி வீசிப்போட்டுட்டு வாய்க்கால்ல குதிச்சுடறார். அட ஆண்டவா!!! பார்க்கற மத்தவங்கதான் கூச்சப்படறாங்க.. ( நான் அக்மார்க் அப்பாவி என்பதால் அந்த சீனில் கண்களை க்ளோசிங்க். )இது அப்போ தெரிஞ்ச சனாகானின் லோஹிப் மேல சத்தியம்...

http://tamildigitalcinema.com/wp-content/uploads/2011/09/aayiram-vilakku-movie-still.jpg

கிளை வில்லன் சுமன்... அண்ணன் கேப்டன் மாதிரி எப்பவும் மப்புலயே இருப்பார் போல.  இவருக்கு கொடுக்கப்பட்ட வேலை என்னான்னா தனது போட்டி தாதாவை அப்பப்ப சவால் விடறது..உறுமுவது .... எமாந்த இ வா எவனாவது வந்தா அவனை கொலை பண்றது. . 

இணை வில்லன் சானா கான்க்கு மாமா பையன். இவருக்கு 24 மணி நேரமும் என்ன வேலைன்னா பைக் பெட்ரோல் டேங்க் உள்ளே ஒரு பெரிய அரிவாள் வெச்சு அலையறது.. எவனாவது தன் முறைப்பெண்ணை கையை ப்பிடிச்சு இழுத்தா அவன் கையை வெட்டறது..  டேய்.. திருந்துங்கடா...

கஞ்சா கறுப்பு. நல்ல குணச்சித்திர நடிகரும், ராம் படம் மூலம் அறிமுகம் ஆன காமெடி நடிகரும் ஆன இவர் இன்னும் எத்தனை நாளுக்கு உப்பு சப்பு இல்லாத படத்துல கிச்சு கிச்சு மூட்டுவாரோ... ஒரு சீன்ல கூட சிரிப்பே வர்ல பாஸ்.. சாரி.. 


http://cinema.vikatan.com/index.php?view=image&format=raw&type=img&id=2374&option=com_joomgallery&Itemid=77

படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்

1. வாத்தியார் சார். பசங்க  தப்பு பண்ணுனா  நீங்க மார்க் கம்மியா போடுவீங்க.. நாங்க ஆளையே போடுவோம்..  ( டேய் ரவுடிங்களே.. முதல்ல குளியல் போடுங்கடா!)


2. மிஸ் .. ஐ லவ் யூ..

உங்க மணிபர்ஸ் குடுங்க.

எதுக்கு?

என்னை யார் லவ் பண்ணாலும் அவங்க மணிபர்ஸை செக் பண்ணுவேன். ( சோனாவை விட கேவலமான மைண்ட் தாட்டோ?!!)

3. மிஸ்... உங்க பேக்கை கொடுங்க..  ( யாரும் ஜெர்க் ஆக வேணாம்.. அவரு கேட்கறது ஹேண்ட் பேக்கை ஹி ஹி )

எதுக்கு?

எனக்கும் லவ் பண்றவங்க பேக்கை செக் பண்ணி பழக்கம் .. ( நல்ல வேளை... )

4.  நான் இந்த ஆத்துல குதிச்சு தற்கொலை பண்ணிக்கப்போறேன்..

உள்லே தண்ணிப்பாம்பு நிறைய இருக்குமே?

கொத்துமா?


தெரில.. கேட்டு சொல்றேன்.. ( அஞ்சாங்கிளாஸ் தமிழ் நான் டி டெயில்ல வர்ற கதை உல்டா... )



5. லிங்கத்துக்கும், உனக்கும் என்னா லிங்க்.. ?

அவருக்கு நான் தாங்க ரைட் ஹேண்ட்... ( அப்போ அவருக்கு பதிலா நீ தான் ஊட்டி விடுவியா? )


http://indiansamachar.in/wp-content/uploads/2011/09/Tamil-Actress-Sana-Khan-Hot-pictures1.jpg
6.  இவருதான் என் புது ஃபிரண்ட் கண்ணாயிரம்...

பாப்பா யாரு... உன் புது கேர்ள் ஃபிரண்டா..? ( அப்போ நிறைய பழைய கேர்ள் ஃபிரண்ட் இருக்கா? அவ்வ்வ்)


7. இந்த சட்டை எங்கப்பாவுது.. ஆனா நான் அவரைப்பார்த்ததே இல்ல.. அவர் சட்டையை நீ போட்டிருக்கறதைப்பார்க்கறப்ப அப்பா மாதிரிதான்யா என் கண்ணுக்கு தெரியறே..

8. அந்த கொதிக்கற பால் தேக்ஸாவை எடு..


எதுக்குங்கய்யா.. குடும்பத்தோட புரூ காஃபி போட்டு குடிக்கவா?

இல்ல... உன் தலை மேல கொட்ட....

9. பெத்தவங்களையே மத்தவங்களா நினைக்கற பசங்களுக்கு மத்தில மத்தவங்களைக்கூட  பெத்தவங்களா நினைக்கற மனுஷங்களும் இந்த உலகத்துல இருக்காங்கப்பா...

http://flicksbuzz.com/Assets/Images/Mollywood/Mollywood-News/Sana-Khan-Hot-Stills-Overview.jpg

இயக்குநருக்கு சில கேள்விகள்

1. ரூ 2 லட்சம் மார்க்கட்ரேட் உள்ள இடத்தை ஃபேக்டரி கட்ட சாந்தனுவிடம் பேரம் பேசும் ரவுடி 5 லட்சம் தர்றதா சொல்றாரு.. ஓக்கே.. பேரம் படியாம 20 லட்சம் வரை இறங்கி வர்றாரே? அது எப்படி? அவனே ரவுடி... ஏன் பம்பனும்? மிரட்னா சைன் பண்ணிடறாரு.. ?

2. அதே நிலத்தை சாந்தனு அவர் அவசரத்தேவைக்கு விற்க முன் வரும்போது மார்க்கெட் ரேட்டை விட பாதி விலைக்குத்தர்றாரே.. ஏன்? நிலமும், தங்கமும்  எப்போதும் மதிப்பை இழக்காதே?


3. ஹீரோயினை ஹீரோ தான் புளூ கிராஸ் மெம்பர்னு ஏமாத்தி லவ் பண்றாரு ஓக்கே.. அதுக்குப்பிறகு 2 மாசம் கழிச்சு ஹீரோயின் ஹீரோ வீட்ல இல்லாதப்ப ஹீரோ வீட்டுக்கு போறப்ப இந்தா பார்த்துக்கோன்னு சொல்ற மாதிரி அந்த ஏமாத்துனதுக்கான ஆதாரங்களை டேபிள் மேலயே வெச்சிருக்காரே? அது ஏன்?


4. பெரும்பாலான ஹீரோயின்கள் சமூக சேவை செய்யும் ஆண்கள், தாதாக்கள் ரவுடிகளைத்தான் லவ் பண்றாங்க. அப்போ என்னை மாதிரி 3000 ரூபா சம்பளத்துக்கு வேலைக்குப்பொறவங்களுக்கு எல்லாம் ஜோடியே கிடைக்காதா?


http://7blues.com/wp-content/gallery/sana-khan/sana-khan-movies-stills.jpg
இந்தப்படம் எல்லா செண்ட்டர்களீலும் 7 நாட்கள் ஓடும்.. ஏன்னா அடுத்த வெள்ளீக்கிழமை வரை வேற படம் எதுவும் வர்லை.

ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 35

குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க்கிங்க் - சுமார்

சி.பி கமெண்ட் - டி வி ல போட்டாக்கூட பார்த்துடாதீங்க.. என் மார்க் - 25

ஈரோடு சண்டிகாவில் இந்தப்படம் பார்த்தேன்

பிப்ரவ‌ரி 14 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஹோசிமின் மிக நீண்ட இடைவெளிக்குப் பின் தனது இரண்டாவதுப் படத்தை இயக்கியுள்ளார்.இந்தப்படம் இயக்குனதுக்கு அண்ணன் சும்மாவே இருந்திருக்கலாம்.




42 comments:

குரங்குபெடல் said...

யோவ் இப்படி ஓவரா தாக்கி விமர்சனம் போடாதய்யா . . .

பாவம் படம் எடுத்தவங்க . . .

'பரிவை' சே.குமார் said...

சாந்தனு வெற்றிப் படத்தைக் கொடுக்க இன்னும் காத்திருக்க வேண்டுமா?
படத்துக்கான விமர்சனம் நல்லாயிருக்கு.

MANO நாஞ்சில் மனோ said...

விடுடா விடுடா பிழைச்சி போகட்டும்....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வசனமெல்லாம் நல்லாதான் இருக்கு அதுக்கு உங்க டுவிஸ்ட்டு இன்னும் சூப்பர்...


ஆளை போடுவாங்களா...
சூப்பர்...

MANO நாஞ்சில் மனோ said...

போட்டோவுல அம்மணி செம பிகரா இருக்கங்களே....!!!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

போட்ட பணம் வந்தா சரி...

Ravikumar Tirupur said...

பிப்14ன் பார்த்த பாதிப்பே எனக்கு இன்னும் இருக்கு மறுபடியும் இன்னொன்னா

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
கடம்பவன குயில் said...

//இந்தப்படம் இயக்குனதுக்கு அண்ணன் சும்மாவே இருந்திருக்கலாம்.//

அப்படி அண்ணன் சும்மாயிருந்தால் நீங்கள் எப்படி தியேட்டர் போய் சானாகானை ஜொள் விட முடியும் கொழுந்தனாரே????

கடம்பவன குயில் said...

காலை வெள்ளிக்கிழமை மனசு கண்ணுக்குமா விரதம்னு கேட்ட உங்க நண்பர்களுக்காக இப்படி படங்களை செலக்ட் பண்ணிபோட்டு விருந்து கொடுத்திட்டீங்களாக்கும்....கண்றாவி..

சிபி ரிடர்ன்!!!

Riyas said...

ம்ம்ம்ம்

SURYAJEEVA said...

படம் நல்லா இல்லை என்று கூறி சனா கானை ரசிப்பதை உங்கள் தனிச் சொத்தாக வைத்திருக்க முயற்சி செய்வது கண்டனத்துக்கு உரியது..

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே, படங்கள் செம தூக்கல்... விமர்சனம் செம நக்கல்.

Anonymous said...

சீக்கிரம் உங்க வீட்டுக்கு வெள்ளை வான் வரும்... வரும்.. வரும்.. வரும்

rajamelaiyur said...

//
( நான் அக்மார்க் அப்பாவி என்பதால் அந்த சீனில் கண்களை க்ளோசிங்க். )
//

ulakamaka poi

Unknown said...

அண்ணே,
விமர்சனம் எப்பவும் போல கலக்கல்,

படம் சூப்பர்
நீங்க போட்டு இருக்க படத்த (போட்டோ) சொன்னேன்..

சௌந்தர் said...

குரங்குபெடல் said...
யோவ் இப்படி ஓவரா தாக்கி விமர்சனம் போடாதய்யா . . .

பாவம் படம் எடுத்தவங்க . . .///


விடுங்க விடுங்க அண்ணன் என்னைக்கு தான் படம் நல்லா இருக்குன்னு சொல்லி இருக்கார்...

Anonymous said...

ஹிஹி படம் எடுத்தவன் விமர்சனம் பார்த்தா நொந்து நூடில்சாக போறான் பாஸ்... வெறும் ஏழு நாளா )))

Unknown said...

ஓட்டிட்டேன்...

கோகுல் said...

உங்களுக்கு ரொம்ப பெரிய மனசுங்க!
சொந்த செலவில சூனியம் வைச்சுக்கிட்டு எங்கள எல்லாம் காப்பாத்துறிங்களே!

ராஜி said...

மொக்கை படத்துக்கு சூப்பர் விமர்சனம்.

ராஜி said...

( நான் அக்மார்க் அப்பாவி என்பதால் அந்த சீனில் கண்களை க்ளோசிங்க். )இது அப்போ தெரிஞ்ச சனாகானின் லோஹிப் மேல சத்தியம்...
>>
நீங்க தான் கண்ணை மூடிக்கிட்டீங்களே????!!!!, அப்புறம் எப்படி லோ ஹிப் தெரிஞ்சுது?!

காட்டான் said...

பகிர்வுக்கு நன்றி மாப்பிள... தம11

செங்கோவி said...

நல்ல விமர்சனம்.

ரைட்டர் நட்சத்திரா said...

இதையும் பார்த்துடீங்களா ?

Yoga.s.FR said...

"அதுக்காகக்" கூடவா பத்து நாள் ஓடாது???

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஆஜர்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஆஜர்.

நிரூபன் said...

மீண்டும் வணக்கம் பாஸ்,

படம் நல்லால்லை என்றாலும், சனா கானை ரசிப்பதற்காகவே ரசிகர்கள் போவார்கள் போல இருக்கே...

நிரூபன் said...

சனா கான் தாவணியை வீசுற சீனுக்காகவே கூட்டம் அலை மோதும் என்று நெனைக்குறேன்;-)))))

நிரூபன் said...

என்னய்யா ஸ்டில்லு...
பெருசுங்க எல்லோரும் இளசொன்றைச் சுத்தி நிற்குது;-)))))))

நிரூபன் said...

உள்ளே தண்னிப் பாம்பு நிறைய இருக்குமேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ

நிரூபன் said...

இந்தப் படம் புதுப் படம் வராத காரணத்தினால் எல்லா செண்டரிலும் ஓடுமாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

நிரூபன் said...

விமர்சனம் கலக்கல் பாஸ்.

Mohammed Arafath @ AAA said...

சி.பி சார் .. உண்மையாலுமே சானாகான் உங்களுக்கு அழகா தெரியலையா? மொக்க பிகரா? நல்ல EYE டாக்டர் ட பொய் செக் பண்ணுக சார்.எவ்ளோ நாளைக்கு தான் உங்களால உங்க வயசை மறைக்க முடியும். சானாகான் வெறும் 40 mark பிகர் ன்னு சொல்றீங்களே...உங்களுக்கு youth feelings பத்தாது பாஸ்...:)

cisco said...

விமர்சனம் இந்தமாதிரி போடணும்....பார்க்கலாமா இல்லையா என்று அதை விட்டு சில பேர் போடுரானுங்களே "ஆயிரம் விளக்கு மதுரை விளக்கு" என்று....

N.H. Narasimma Prasad said...

விமர்சனம் சூப்பர் அண்ணே. சத்தியமா இந்த படத்தை நான் பார்க்கவே மாட்டேன்.

தமிழ்நுட்ப்பம் said...

பயனுள்ள அருமையான தகவல்

Without Investment Data Entry Jobs !

http://bestaffiliatejobs.blogspot.com

Unknown said...

இந்தப் படத்துக்கு விமர்சனம் போடாமலே இருந்திருக்கலாம் !

கோவை நேரம் said...

அய்யோ தலை ..உங்களுக்கு 3000 ரூபாய் தான் சம்பளமா ..? ஆனா இதுக்கே நீங்க மோகனா கூட சுத்தறீங்க ..அண்ணி வேறே இருக்கும்போதே ...

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

ரச்சனா போட்டோ போட்டு ஒரு வரி கூட அந்த பொண்ணப்பத்தி எழுதாத சிபி ஒழிக.