Tuesday, September 06, 2011

''ரஜினி, கமல் இருவரின் பலம்... பலவீனம் என்ன?'' கே பாலச்சந்தர் விகடன் பேட்டி- காமெடி கும்மி

http://worldonpc.com/wp-content/uploads/2010/09/125.jpgவிகடன் மேடை - கே.பாலசந்தர்



1. ''இதுவரை உங்களிடம் திட்டு வாங்காத நடிகர்கள்..?'' 


சி.பி - அண்ணன் எப்பவும் நடிகர்களை மட்டுமே திட்டறார், நடிகைகளை திட்டறதே இல்லையே.. அது ஏன்? ஒரு வேளை அப்படி இருக்குமோ? சே ச்சே இருக்காது. 


''இதற்குப் பதில் சொன்னால், திட்டு வாங்கியவர்களின் பட்டியல் அப்பட்டமாகத் தெரிந்துபோகும்! அவர்கள் என்னைத் திட்டுவார்கள். பின்னால் திட்டுவார்கள்... நேரில் வந்து திட்டினாலும் பரவாயில்லை. மற்ற நண்பர்கள் மத்தியில் என்னைத் திட்டுவார்கள்... எவ்வளவு குழப்பம் ஐயா உங்களால்! இந்த வயதில் எதற்கு எனக்கு இந்த வீண் பொல்லாப்பு!''

சி.பி - நீங்க திட்டுனவங்க எல்லாம் ஃபேமஸ் ஆகிடுவாங்கன்னு சொல்றாங்களே, அப்புறம் ஏன் உங்க மனைவி ஃபேமஸ் ஆகலை? டவுட்டு ஹி ஹி 


2. 'இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கவில்லையே என்று எந்தப் படத்தைப் பார்த்தாவது ஏங்கியது உண்டா?'' 


சி.பி - அதுக்கெல்லாம் எங்கேங்க நேரம், சினிமா ,டி வி னு அண்ணன் பறந்துட்டே இருக்காரே, மாறி மாறி./..

''ஒரு பெரும் பட்டியல் உண்டு! ஜம்ஷத் தவிர, மற்றவர்களும் இதே கேள்வியைக் கேட்டால் என்ன செய்வது? அதற்காகவே இரண்டு படங்களைப்பற்றி மட்டும் சொல்கி றேன். வஸந்த் இயக்கிய 'கேளடி கண்மணி’, மணிரத்னம் இயக்கிய 'ரோஜா’!''



3. '' 'சிந்துபைரவி’ படத்தில் சங்கீத மேதையான ஜே.கே.பி. தன் மனைவிக்கு இசை தெரியாது என்பதற்காக, இசை தெரிந்த சிந்துவைக் காதலிக்கிறார். ஆனால், ஜே.கே.பி-வுக்குச் சங்கீதம் தெரியுமே தவிர, சமைக்கத் தெரியாது. அதனால், ஜே.கே.பி-யின் மனைவி ஒரு சமையல்காரரைக் காதலித்தால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?'' 

சி.பி - சபாஷ், சரியான கேள்வி, இப்போ பாருங்க, அண்ணன் கேட்ட கேள்விக்கு சம்பந்தமில்லாம எதையாவது சொல்லி எஸ் ஆவாரு..  

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSSWtmi5XqMpjbtIXbGnzyrbMVB-LL81HLT8LKt8i1Ul_tZVx0J3OubSmtTf5wxz2ZFg_vDgu381c_E9sCu3ayeE3upwCTnoiFuwWDBeAk8fLYv_Wn0vbBcT_fYj7lKuPBv5KPHVAx-tf9/s1600/kamal_gouthami_02.jpg


''சபாஷ்... சரியான போட்டி! பெண்ணியம் என்பதற்கு இதுதான் விளக்கம் என்று இத்தனை நாட்கள் எனக்குப் புரியாமல் போயிற்று.
அம்மணி சுகன்யா, நீங்கள் ஒப்புக்கொண்டால் நானும் ஒப்புக்கொள்கிறேன். ஈர்ப்பு என்பது, நம்மிடம் இருப்பது மற்றவரிடம் இருந்தாலும் வரலாம். நம்மிடம் இல்லாதது மற்றவரிடம் இருப்பதாலும் வரலாம். ஈர்ப்பு என்பது வேறு, இருப்பு என்பது வேறு. இந்த மேகம் அந்த மேகத்துடன் எப்படிச் சேர்ந்தது என்பதை மேகங்கள் சேர்ந்த பின் தான் அறிகின்றன. அறிந்ததும் கலந்து பொழிந்து மறைகின்றன. THE MAGIC OF THE WIND REMAINS A MYSTERY!''

சி.பி - இதனால் அறியப்படும் நீதி என்னான்னா நம்மால பதில் சொல்ல  முடியாத கேள்வியை யாராவது கேட்டாங்கன்னா ஏதாவது ஆங்கிலப்பழமொழி சொல்லி சமாளிக்கனும்



http://bollywood.celebden.com/wp-content/uploads/2008/06/shruti.jpg

4. ''உங்களது எந்தப் படத்தை இப்போது ரீ-மேக் செய்ய ஆசை?'' 


சி.பி - அய்யய்யோ, மறுபடியும் முதல்ல இருந்தா?

'' 'ஒவ்வொரு படத்தையும்’ என்று சொல்லி நான் தட்டிக்கழிக்கப்போவது இல்லை! பெண் கதாபாத்திரங்களை நாயகிகளாக்கி நிறையப் படங்கள் எடுத்திருக்கிறேன். ஆனால், இன்று பெண்கள் நிறையவே முன்னேறிவிட்டார்கள். அவர்கள் வேகத்துக்கு என்னால் ஈடு கொடுக்க முடியாது... கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத அளவுக்குச் சிலர் தங்களை 'வளர்த்துக்’கொண்டு இருக்கிறார்கள்.


ஆண்கள்பற்றிய கதையை ரீ-மேக் பண்ணலாம். அவர்கள் பிரச்னை செய்ய மாட்டார்கள். மன்னிக்கவும். அதற்காக ஆண்கள் இன்னமும் மாறாமல் அப்படியே இருக்கிறார்கள் என்று நான் சொல்வதாக தப்பாக நினைத்துவிடாதீர்கள். ஆங்... அந்தப் படம்தான் கரெக்ட். இப்பவும் ரீ-மேக் பண்ணலாம் அதை. அதுதான்... சொல்லக் கொஞ்சம் பயமாக இருக்கிறது... பயம் என்று இல்லை... வேண்டாமே. அடுத்த கேள்விக் குப் போகிறேன். சரி... அடுத்த வாரம் சொல்றேனே!''

சி.பி - சிம்புவை வெச்சு மன்மத லீலை எடுங்க, டி ஆர் ரொம்ப நாளா ஆசைப்படறார்.. நல்ல அப்பா!!!!!


http://www.8pmnews.com/wp-content/uploads/2010/06/kamal-hasan-his-family1.jpg
.
5. ''ரஜினி, கமல் இருவரின் பலம்... பலவீனம் என்ன?'' 


''அயராத உழைப்பு, அசாத்தியமான திறமை 'இன்னும் மேலே... இன்னும் மேலே’ என்று அடுத்தடுத்து புதுப் புது பரிமாணங்களை நோக்கிச் செல்வது... தொடுவது... இதுதான் மிகப் பெரிய பலம்.


ஆனால், அது புலியின் மேல் சவாரி செய்வதுபோல... இறங்கவே முடியாது. அதுதான் பலவீனம்!''


சி.பி - ரஜினியின் பலம் என்ன மாதிரி கேரக்டர்  கொடுத்தாலும் அதில் தன் ஸ்டைலிஷ் நடிப்பை பிரம்மாண்டமாய் புகுத்துவது, பலவீனம் அந்த வட்டத்துல இருந்து அவரால வெளில வர முடியாமை..



கமலின் பலம் வெரைட்டியான நடிப்பை, கெட்டப் சேஞ்ச் உடன் கலக்குவது, பலவீனம் -தான் திரையில் வரும் சீன்களில் தான் மட்டுமே தனித்து தெரிய வேண்டும் என மெனக்கிடுவது. இதனால் அவரது நடிப்பில்,பாடி லேங்குவேஜ்ஜில் அவரையும் அறியாமல் ஒரு செயற்கைத்தன்மை ஒட்டிக்கொண்டது..


6. ''கமல் - ரஜினி யாரை ரொம்பப் பிடிக்கும்... உண்மையைச் சொல்லுங்கள்?'' 

சி.பி -கமலைத்தான் அவருக்கு ரொம்ப பிடிக்கும் ஏன்னா கால்ஷீட் எப்போ கேட்டாலும் அவர் குடுத்துடுவார், ரஜினியே நினைச்சாலும் அவரால குடுக்க முடியாது..  


''வலது கண், இடது கண் இதில் உங்களுக்கு எது ரொம்பப் பிடிக்கும்? சொல்லுங்கள் மிஸ்டர் ராஜேந்திரன். மாறு கண் இல்லை எனக்கு. ஒரு கண்ணில் வெண்ணெயும் இல்லை!''

http://10hot.files.wordpress.com/2009/02/kamal-gowthami-rajini-latha-rajnikanth-tamil-actors-sarees1.jpg


7. ''உங்கள் படைப்புகளில் மறக்க முடியாத கதாபாத்திரம்?'' 


'' 'ஒரு கலைஞனுக்கு அவனுடைய எல்லாப் படைப்பும் பிடித்தமானவைதான். அதே சமயம் ஒன்றுகூட முழு திருப்தி கொடுக்காதுதான். அதனால்தான் அவன் இன்னும் இயங்குகிறான்!’ இப்படி எல்லா படைப்பாளிகளும் சொல்லிக்கொள்வது உண்டு.

ஆனால், நான் சொல்கிறேனே!
நிறைய கதாபாத்திரங்கள்... குறிப்பாக இரண்டு. 'அபூர்வராகங்கள்’ பிரசன்னா (கமல்ஹாசன்), 'அவள் ஒரு தொடர்கதை’ கவிதா (சுஜாதா).''

சி.பி - அண்ணன் குமுதத்துல ஒரு பேட்டில மனதில் உறுதி வேண்டும் நந்தினி நர்ஸ் கேரக்டர் தான் தான் மறக்க முடியாத கேரடர்னார்...  கல்கில ஒரு பேட்டில சிந்து பைரவி  சிந்து கேரக்டர்னார்,.... தமிழன் ஞாபக மறதி ஜாஸ்தி உள்ள ஆளு.. எதையும் தாங்குவான்


8''எம்.ஜி.ஆரை வைத்து நீங்கள் படங்கள் இயக்காதது ஏன்?''
''என்னுடைய இயக்கத்துக்கு அப்பாற்பட்ட உயரமானவர் அவர். அவருடைய 'தெய்வத் தாய்’ படத்துக்கு வசனம் எழுத வைத்து என்னை வெள்ளித் திரைக்கு அறிமுகம் செய்துவைத்தார்.

'தந்தை மகற்காற்றும் நன்றி’யை அவர் செய்தார். 'மகன் தந்தைக்காற்ற வேண்டியதை’ நான் செய்தேனா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும் சுசீலா!''

சி.பி - அண்ணன் எப்பவும் பெண்களை முன்னிறுத்திதான் திரைக்கதை அமைப்பார், இது எம் ஜி ஆருக்கு ஒத்து வராத ஃபார்முலா ஆச்சே?

9.  ''வொயிட் அண்ட் வொயிட் உடை ரகசியம் என்ன?'' 

''ஒரு ரகசியமும் இல்லை!
வெள்ளை என்பது மனதைக் குறிக்கிறது... என் மனம் வெள்ளை மனம் என்றெல்லாம் ஒரு காரணமும் இல்லை. நான் 'வெள்ளித் திரை’க்காரன். அதனால்தான் என்று வைத்துக்கொள்ளுங்களேன்.

ஏன்... இப்படிச் சொல்லலாமே! காட்சி முடிந்த பின்னே கைதட்ட யாரும் இல்லை. காலி இருக்கைகளின் இருளுக்கு எதிரே மிஞ்சி இருக்கும் ஒன்றே ஒன்று வெள்ளித்திரைதானே!

வெள்ளை ஷூ போடுவேன்... அதற்குள் ரகசியம் அடங்கி இருக்கிறது! வேறு இடங்களில் செருப்புகளைக் கழட்டி வெளியே விட வேண்டிய நேரங்களில் என் காலணியைச் சட்டென்று அடையாளம் கண்டுபிடித்துவிட முடிகிறதே!''

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjluemJxXWGC83AUghhlZg-Z8uCdQFRmoMwJCHN-92RPMwLIeqbMJCYXKAs5L-JlDf768LrTU3YgTQHHy3fAmMBOXtdcwNbwXPZx3H9PHJoZROTttcVIrLL3OQmRDHhXGsx57R50IhC1NE/s1600/Kamal_Hassan_Vaani_Marriage_1.JPG

10. ''இயக்குநர் பாலசந்தர், வீட்டில் எப்படி?'' 

''நீங்கள் வீட்டில் எப்படியோ எனக்குத் தெரியாது. நான் வீட்டிலும் 'பாலசந்தர்’ வெளியிலும் 'பாலசந்தர்’தான். அதாவது, பாரதி சொன்ன நிமிர்ந்த நன்நடையும் நேர்கொண்ட பார்வையும்!''



11. ''ரஜினி அரசியலுக்கு வருவாரா?'' 

''ஆனை காட்டில், பூனை வீட்டில், திமிங்கிலம் கடலில் என்று அவையவை அவையவற்றுக்கு உரிய இடத்தில் இருப்பது தானே அழகு! ஆனால் ஒன்று, வருவதைக் காட்டிலும், வருவாரா என்று கேட்க வைப்பதிலும், வரலாம் என்று எதிர்பார்ப்பதிலும் தானே சுவாரஸ்யம். THE JOY IS IN WAITING.
இன்னொண்ணு!

எது எங்கே... எப்போது... எப்படி வர வேண்டுமோ... அது அங்கே... அப்படி வந்தே தீரும்.
மூன்று!
அவர் தனது உடல்நலத்தில் முழுக் கவனம் செலுத்தி, நன்கு தேறி 'ராணா’வை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்பதே என் ஆசை. அரசியல் எங்கே போகப்போகிறது?''\
http://s1.hubimg.com/u/1802612_f520.jpg


12. ''தற்போதைய ஆட்சி மாற்றத்தைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' 

''மாறும் உலகில் மாறாத ஒன்றே ஒன்று மாற்றம்தான். ஏற்றமோ... மாற்றமோ வந்தால் அதை ஒப்புக்கொள்வதுதானே நியாயம்!''


13. ''உங்கள் பார்வையில் தமிழின் சிறந்த 10 படங்களைச் சொல்லுங்கள்..?'' 

''இதே கேள்வியை 100 பேரிடம் கேட்டுப் பாருங்கள். 100 விதமான பட்டியல் வரும்.
இப்படிப் பட்டியலிடுவதே ஒரு SUBJECTIVE THINKING தான்.
நான் இயக்கிய படங்களைக் குறிப்பிட் டாலும், குறிப்பிடாவிட்டாலும் தவறாகிவிடும். எனவே, நீங்கள் செய்வதே பொருத்தமாக இருக்கும்!''

http://www.chakpak.com/articles/wp-content/uploads/2011/05/Sarika-Hassan-Kamal-Hassan-.png


14. ''நீங்கள் இயக்கிய நடிகைகளிலேயே  திறமையானவர் என்று யாரைச் சொல் வீர்கள்?'' 


''எனது இயக்கத்தில் வந்தவர்கள் எல்லோருமே மிகத் திறமையானவர்களாகத் தானே வெளியே போவார்கள். யாரைச் சொல்வது; யாரைக் குறிப்பிடாமல் விடுவது! ஒவ்வொருவருமே ஒரு பூ, புயல், பூகம்பம், புன்னகை, புது நெருப்பு!''


 சி.பி - சுஜாதாவை, சுஹாசினியை சொல்லலாம்.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiRayqa_Sk7yR8RtrRO_HFFlyel0fm6p7T_MJYcJyHSt_IDDPUTuZrgcGk3BeHZSGoNS3nBCkS1ChhnYpzCte09Vl2ofTwpO-nuaBlzHJk4jf1zjtdJwmzUhHqdfgAAbOBDEOZtVXD-5YQ/s400/KamalGowthami.jpg

15. ''யாரை நடிக்கவைக்க ரொம்ப சிரமப்பட்டீர்கள்?'' 

சிபி - அண்ணனுக்கு ஒரு கஷ்டமும் இல்லை, அவர் டைரக்‌ஷன்ல நடிக்கறவங்களுக்குத்தான் கஷ்டம் எப்போ என்ன சொல்லி திட்டுவாரோ? அடிப்பாரோ?ன்னு 


''என்னால் அதிகம் சிரமப்பட்டவர்கள் யார் என்று கேட்டிருந்தீர்களானால், ஒருவேளை பதில் சொல்லியிருப்பேன்!
உங்கள் கேள்விக்குப் பதில்... உஷ்ஷ்ஷ்... ''


thanx - vikatan

21 comments:

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

me first
commend next

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

ஒரு பழைய அட்டகாசமான
பிலிம் - "நினைத்தாலா இனிக்கும்"
படம் பார்த்த மாதரி இருக்கு ...

MANO நாஞ்சில் மனோ said...

ayyo ayyo vadai pocche avvvv...

MANO நாஞ்சில் மனோ said...

அய் ஜாலி ஜாலி அண்ணனுக்கு தமிழ்மணம் அவுட்டே....

MANO நாஞ்சில் மனோ said...

டேய் அண்ணா இது ஜூவி ல வந்து பல வருஷமாச்சே....அப்பிடித்தானே...?

MANO நாஞ்சில் மனோ said...

இயக்குனர் சிகரம்னு சும்மாவா சொல்றோம்..!!!!!

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

மனோ தலிவா .... இது வரை ...என்னக்கு
வடை குடுக்கவில்லை ....அதன் விடை
தெரிய வில்லை ....
First கமெண்ட் க்கு ...ஒரு பரிசு
Rs 10 /- குடுத்தால் நாம வடை வாங்கிகலாம்...
என்ன நான் சொல்வது!!!!!
நான் சரியாய் பேசுரனா?????
(ஐடியா குடுத்த தலீவன் மனோ வாழ்க !!!!!!)

KANA VARO said...

கமல் ரஜினி பற்றி கதைச்சா கூடவே பாலச்சந்தர் பற்றி கதைக்கிறது தவிர்கேலாது,

Unknown said...

பகிர்வுக்கு நன்றி!

அம்பலத்தார் said...

ம்...கலக்கல்தான்

நிரூபன் said...

சுகாசினி மேடத்தை இப்படியா கலாய்க்கிறது?

நிரூபன் said...

காமெடிக் கும்மி கலக்கல் பாஸ்.

செங்கோவி said...

அவரை உண்டு இல்லேன்னு ஆக்கி இருக்கீங்க போல..

Anonymous said...

ம்ம் நல்லாய் இருக்கு பாஸ்)

Anonymous said...

கலக்கல்...

செல்ல நாய்க்குட்டி மனசு said...

கமல் கெளதமியோட இருக்கிற படம் போட்டீங்க சரி, இங்கே எதுக்கு நடிகர் திலகத்திடம் கமலும் அவர் maaji மனைவியும் ஆசிர்வாதம் பெரும் படம். இந்த lol தானே வேண்டாம்கறது. இப்போ கமல் ரசிகர்களும் பொங்கி எழப் போறாங்க

rajamelaiyur said...

இருவரும் super star தான்

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
vetha (kovaikkavi) said...

சகோதரர் நிருபன் கூறியது போல காமெடிக் கும்மி தான்! - கலக்கல் போங்கோ! (ஆனாலும் வாசிக்கும் போது நிறைய அறியலாம்)
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

ராஜி said...

பாலசந்தர் சாரையும் விட்டு வைக்கலியா?!

நாடோடிப் பையன் said...

Pretty funny follow-on comments. Keep it up.