Saturday, June 08, 2013

ஜில்லுன்னு ஒரு டூர்...!- சுற்றுலா குறித்த பரவசத் தகவல் கையேடு!


 சுற்றுலா குறித்த பரவசத் தகவல் கையேடு!

தொகுப்பு: அருண் சரண்யா

இந்தியா - என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்? உடலையும் மனதையும் குளிர்விக்க நாடு எங்கும் பரவிக் கிடக்கின்றன மலைவாசஸ்தலங்கள். சொல்லப்போனால் அத்தனை ஜில் பகுதிகளையும் குறிப்பிடவோ விவரிக்கவோ இந்தப் பக்கங்கள் போதாதுதான். என்றாலும் நீங்கள் குளுகுளு டூர் செல்ல முடிவெடுத்தால் அதற்கு இவை கட்டாயம் உதவும்.


லே (LEH)

ஐம்மு காஷ்மீரில் உள்ள லடாக் மாவட்டத்தின் தலை நகரம். 11,600 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ளலே அரண்மனைமிகப் பிரபலம். உலக அமைதிக்காக எழுப்பப்பட்ட உயரமான சாந்திஸ்தூபம் சுற்றுலாப் பயணிகளை வசீகரிக்கிறது. ட்ரெக்கிங் பாதைகள் நிறைய உண்டு. யுத்த அருங் காட்சியகம் ஒன்றும் காணத்தக்கது. சீக்கியர்களுக்கான குருத்வாரா, இந்துக்களுக்கான சம்பா ஆலயம், முஸ்லிம்களுக்கு ஜும்மா மசூதி என்று அனைத்து மதத்தினருக்கும் வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. வெற்றி நினைவாலயம், ஜோராலா கோட்டை என்று பார்ப்பதற்கு உகந்த இடங்களும் உள்ளன.


அரக்கு பள்ளத்தாக்கு (Araku valley)

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள அழகான, மாசடையாத பள்ளத்தாக்கு. விசாகப்பட்டினத்திலிருந்து 114 கி.மீ. தூரத்தில் உள்ளது. சுற்றிலும் மலைகளால் சூழப்பட்டு 5000 அடி உயரத்தில் உள்ளது. இதன் ஒரு பகுதியில் அமைந்துள்ளன அனந்தகிரி மற்றும் சுங்கரி மெடா-ரிசர்வ் காடுகள். காப்பித் தோட்டங்களுக்குப் பெயர் பெற்றது. போகும்போது அங்குள்ள பழங்குடியினர் தயாரிக்கும் காஃபி பொடி, சீயக்காய்த்தூள், மற்றும் புளியை மறக்காமல் வாங்குங்கள்.
ராஜ்கிர் (Rajgir)

பீகாரில் உள்ளது. நாளந்தா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். மௌரிய சாம்ராஜ்யத்தின் தலைநகரமாக இருந்திருக்கிறது. இங்குள்ள பருந்து சிகர மலை (Vulture's Peak Mountain) புகழ் பெற்றது. பாட்னாவிலிருந்து ரயில் மற்றும் சாலை வழியாக சென்றடையலாம். சுமார் 100 கி.மீ. தூரம் குன்றுகளுக்கு நடுவே அமைந்த பசுமையான பள்ளத்தாக்கு. பிரம்ம குண்டம் எனப்படும் வெந்நீர் ஊற்றுக்கள் புகழ் பெற்றவை. 1969ல் எழுப்பப்பட்ட விஸ்வ சாந்தி நினைவுத் தூணும் பிரசித்திப் பெற்றது. உலக அமைதிக்கானது இது. கேபிள் காரில் பயணிப்பது தனி ஆனந்தம். ‘வேணு வனம்எனும் செயற்கையான காட்டுப் பகுதியில் நிர்மலமான அமைதியை அனுபவிக்கலாம். ஜப்பானிய ஆலயம் ஒன்றையும் காணலாம்.
மோர்னீ குன்றுகள் (Morni hills)
சண்டிகரிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது என்பது கூடுதல் சிறப்பு. ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ள மோர்னீ ஒரு கிராமம். ஒரு காலத்தில் அந்தப் பகுதியை ஆண்ட ராணியின் பெயரால் அழைக்கப்படுகிறது. இமய மலையின் சிவாலிக் தொடரின் ஒரு பகுதி இது. நாலாயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து, இமய மலையின் பல அற்புதமான இயற்கைக் காட்சிகளைக் காணலாம். ட்ரக் கிங்கிற்கும் ஏற்ற இடம். சின்னச் சின்ன ஏரிகள் அமைந்துள்ள பகுதி. சுற்றுலாப் பயணிகளுக்காக ஹரியானா அரசு ஒரு பெரிய பயணியர் விடுதியை அமைத்திருக்கிறது.
டல்ஹவுசி (Dalhousie)
ஹிமாசலப் பிரதேசத்தில் அமைந்துள்ள மலைவாழ் இடம். அற்புதமான புல்வெளிகள், மலைச்சரிவுகள். பிரிட்டிஷ் அதிகாரிகள் கோடையில் இங்கு வந்து தங்குவது வழக்கம். சுமார் ஏழாயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது. ரவீந்திரநாத் தாகூர் இந்தச் சூழலில் மனதைப் பறிகொடுத்துதான் கீதாஞ்சலியை எழுதத் தொடங்கினாராம்!
குஃப்ரீ (Kufri)
ஹிமாசலப் பிரதேசத்தின் தலைநகரமான சிம்லாவிலிருந்து வெறும் 13 கி.மீ. தூரத்தில் அமைந்த பகுதி. ஒரு காலத்தில் நேபாளத்தின் பகுதியாக இருந்தது. மலைமீது குதிரைச் சவாரி செய்து உச்சியை அடைவது உற்சாகமான (கொஞ்சம் திக்திக்) அனுபவம். உச்சிப் பகுதியை அடைந்தால் பனி சூழப்பட்ட இமயமலையின் அற்புதமான காட்சிகளைக் காணலாம்.
குலூ (Kullu)

லார்கி மற்றும் மணாலி ஆகியவற்றுக்கு நடுவே அமைந்த ஹிமாசலப் பிரதேசப் பகுதி. அழகிய ஊசியிலைக் காடுகளும், பியாஸ் நதியும் கண்டுகளிக்கத்தக்கவை. மிகப்பெரிய பள்ளத்தாக்கான குலூ பள்ளத்தாக்கை, கடவுள்களின் பள்ளத்தாக்கு என்பர். மிக அழகானது இந்தப் பள்ளத்தாக்கு. குலூவில்லுக்என்ற மற்றுமொரு பள்ளத்தாக்கும் இருக்கிறது. மிகச் சிறந்த கோடை வாசஸ்தலம் இது. சுதந்திர இந்தியாவில்தான் இங்கு சாலையே போடப்பட்டது என்பதால், இன்னமும் மாசடையாத பகுதிகள் இங்கு உண்டு.
மணாலி (Manali)
6700 அடி உயரத்தில், ஹிமாசலப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. சிம்லாவிலிருந்து 270 கி.மீ. சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் நம்பியிருக்கும் சிறு நகரம். கொஞ்சம் உள்ளடங்கிச் சென்றால்தான், இயற்கையை ரசிக்க முடியும். இந்து மதத்தின் புராண சட்ட மேதையான மனு என்பதிலிருந்து தான், மணாலி என்ற பெயர் பிறந்துள்ளது. இங்கிருந்து ரோதாங் பாஸ் என்ற பகுதியை அடையலாம். அங்கு சென்றால் பனி படர்ந்த இமய மலையைக் காணலாம். குளிர் காலத்தில் மணாலியின் சாலைகளில் உருவான பனிக்கட்டிகள் மீது சிறுவர்களும், சுற்றுலாப் பயணிகளும் பனிச் சறுக்கு விளையாடுவது வெகு சகஜம்.

நந்தி ஹில்ஸ் (Nandi Hills)
கர்நாடகாவிலுள்ள சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் உள்ளது. பெங்களூரிலிருந்து 50 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. மரங்கள் சூழ்ந்த, சுற்றுலாவுக்கு ஏற்ற இடம். பார்ப்பதற்கு எருது போல் இருக்கும் இந்தக் குன்றில் தான் பென்னாறு, பாலாறு, பொன்னையாறுகள் உற்பத்தியாகின்றன. மலைப்பாதைகள் அதிக வளைவுகள் இல்லாதது. மேகங்கள் நம்மைத் தொட்டு விட்டுச் செல்லும் அழகை ரசிக்கலாம். குன்றுக்குக் கீழே உள்ள போதி நந்தீஸ்வரா ஆலயங்கள் பார்த்து ரசிக்கத் தக்கவை.
பாவாகத் (PAVAGADH)

குஜராத்தின் பாஞ்ச்மஹால் மாவட்டத்திலிருந்து சுமார் 46 கி.மீட்டரில் உள்ளது. இங்குள்ள மகாகாளி கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். யுனெஸ்கோவால்பாதுகாக்கப்பட்ட சரித்திரச் சின்னமாகஇனம் காணப்பட்ட பகுதி. நிறைய இயற்கைக் காட்சிகள் கொண்டது. 822 மீட்டர் உயரத்தில் உள்ளது. அரண்மனையையும் கண்டுகளிக்கலாம். காளி கோயிலுக்கு கேபிள் காரில் செல்வது சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்வூட்டக்கூடிய ஒன்று. ஆனால் கேபிள் காரிலிருந்து இறங்கிய பிறகும், சுமார் 250 படிகள் ஏறித்தான் கோவிலை அடைய முடியும்.
தவாங் (TAWANG)

அருணாசலப் பிரதேசத்தில் உள்ளது. சீனா இதை தன் எல்லைக்குட்பட்டது என்று கூறி வருவது வேறு விஷயம். 10,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள தவாங் புத்த மடாலயம் மிகப் பிரபலம். திபெத்தில் உள்ளதை விட்டுவிட்டால், உலகின் மிகப்பெரிய புத்த மடாலயம் இதுதான். ஆறாம் தலாலாமா இங்கு ஜனித்ததால், புத்த மதத்தினருக்கு இது ஒரு புனிதத் தலமும்கூட. தேஜ்பூரிலிருந்து பதினாறு மணி நேர சாலைப் பயணத்தில் அடையலாம். மாநில அரசு கௌஹாத்தியிலிருந்து ஹெலிகாப்டர் வசதியும் செய்து தருகிறது.
லோனாவாலா (Lonavala)
மகாராஷ்ட்ராவின் பூனே மாவட்டத்தில் இருக்கிறது. மும்பாயிலிருந்து 97 கி.மீ. தொலைவில் உள்ள இந்தப் பகுதிசிக்கிக்காக (வேர்க்கடலை பர்பி) மிகவும் புகழ் பெற்றது. 2000 அடி உயரத்தில் அமைந்துள்ள இங்கு, பலவித குகைச் சிற்பங்கள் உண்டு. துங்கிக் கோட்டையைக் காணலாம். மும்பையிலிருந்து வார இறுதிகளில் இங்கு வந்து செல்பவர்கள் பலர் உண்டு. லோனாவாலாவிலிருந்து ஆறரை கி.மீ. தூரத்தில் சிவாஜியின் பிரபல கோட்டையான ராஜ்மசி உள்ளது. பள்ளத்தாக்குகளின் அழகு சிறப்பானது. வால்வான் அணை, டைகர்ஸ் பாயின்ட் போன்றவையும் கண்டு ரசிக்கத் தக்கவை.

ஷில்லாங் (Shillong)
ஷில்லாங் மேகாலயாவின் தலைநகரம். 5,000 அடி உயரத்தில் அமைந்த நகரம். மிக அடர்த்தியான மக்கள் தொகை. நிறைய ஐரோப்பியர்கள் காணப்படுவதால், ‘கிழக்கு ஸ்காட்லான்ட்என்றும் அழைக்கப்படுகிறது. யானை அருவி, லார்ட்ஸ் ஏரி, லேடி ஹைடரீ பூங்கா, ஷில்லாங் கால்ஃப் மைதானம் (ஆசியாவின் மிகப்பெரிய கால்ஃப் மைதானங்களில் ஒன்று), ஷில்லாங் சிகரம், பட்டாம் பூச்சி மியூசியம் போன்றவை இங்குள்ள சுற்றுலாத் தலங்களில் சில.
தரிங்படி (DARINGBADI)

ஒடிசாவின் காஷ்மீர்என அழைக்கப்படும் இது, 915 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. காபி மற்றும் மிளகுத் தோட்டங்களுக்குப் பெயர் பெற்றது. டோலுரி நதி அழகு சேர்ப்பதுடன், ஒரு அருவிக்கும் காரணமாகிறது. பெல்கார் (BELGHAR) சரணாலயத்தில் பல மிருகங்களைக் காணலாம் - முக்கியமாக நீண்ட தந்தம் கொண்ட காட்டு யானைகள்.
குல்மார்க் (GULMARG)

காஷ்மீரிலுள்ள இப்பகுதி பனிச்சறுக்கு விளையாட்டுக்கு மிகவும் புகழ் பெற்றது. சுமார் 8,800 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு வசிப்பவர்கள் மிகக் குறைவு. அப்படி வசிப்பவர்களில் 99 சதவிகிதம் ஆண்கள் தான் என்பது வேடிக்கையான புள்ளி விவரம். பலரும் இங்கு பகலில் வந்துவிட்டு, இரவில் அவரவர் ஊருக்குத் திரும்பிவிடுகிறார்கள். சுற்றுலாப் பயணிகள் தங்குவது உண்டு.
மிகவும் அருகிலேயே அமைந்துள்ள இமயமலைக் குன்றுகள் வசீகரித்தாலும், பாகிஸ்தானுக்கும், நமக்கும் இடையே உள்ள எல்லைக்கோடு குல்மார்க்கு அருகில் இருப்பதும், அதிகம் பேர் தங்காததற்கு ஒரு காரணம். எங்கு பார்த்தாலும் ராணுவ வீரர்கள் துப்பாக்கிகளுடன் தென்படுவார்கள். ஸ்ரீநகரிலிருந்து காரில் இரண்டு மணி நேரப் பயணத்தில் குல்மார்க்கை அடையலாம். கேபிள் காரும், குளிரான சூழலும், அற்புதமான பனிச் சறுக்குத் தளமுமாக குல்மார்க் நன்றாகவே வசியம் செய்கிறது.
வால்பாறை (VALPARAI)

கோவையில் உள்ள இது, 3500 அடி உயரத்தில் உள்ளது. மேற்கு மலைத் தொடரில், கோவையிலிருந்து 100 கி.மீ. (அல்லது பொள்ளாச்சியிலிருந்து 65 கி.மீ.) தொலைவில் உள்ளது. ஆழியாறிலிருந்து வால்பாறையை அடைய சுமார் 40 கொண்டை ஊசி வளைவுகளைக் கடக்க வேண்டும். தனியார் தேயிலைத் தோட்டங்கள் நிறைய உண்டு. சோலையாறு அணைக்கட்டு, பஞ்சமுக விநாயகர் ஆலயம், குரங்கு அருவி, பாலாஜி ஆலயம், ஆழியாறு அணைக்கட்டு, அதிரம்பட்டி அருவி ஆகியவை முக்கியமான டூரிஸ்ட் ஸ்பாட்ஸ்.
ஊட்டி (OOTY)
2240 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மலை வாசஸ்தலம். ஊசியிலைக் காடுகள், அழகிய மரங்கள் வனப்பைக் கூட்டுகின்றன. நீலகிரி மலையிலுள்ள இதன் அழகை முழுமையாக உணர்ந்து கொள்ள, மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி ரயிலில் பயணிக்கலாம். பெரும் பரப்பில் தாவரப் பூங்காங்கள், ஒரு நாளில் சென்றுவரக் கூடிய பக்காரா அணை, தோடர்களின் குடியிருப்பு, தொட்டபெட்டா, ட்ரெக்கிங் செல்லுதல் போன்ற பல சுவாரசியங்கள் ஊட்டியில் உள்ளன.
டார்ஜீலிங் (DARJEELING)

கன்ஜன்ஜங்கா சிகரத்தின் அழகைத் தரிசித்து மெய் மறக்கலாம். அற்புதமான புத்த மடாலயங்கள், பூந்தோட்டங்கள், தேயிலைத் தோட்டங்கள் போன்றவற்றிற்கும் பெயர் போனது. 7500 அடி உயரத்தில் அமைந்துள்ள இதனை அடைய ஒரு மினி ரயிலைப் பயன்படுத்தலாம். வெறும் 83 கி.மீ. தூரத்தை அடைய ஆறு மணி நேரம் என்றாலும், இயற்கை ரசிகர்களுக்கு நேரம் போவது தெரியாது.

காங்டோக் (GANGTOK)
கயிற்றுக் காரில் கட்டாயமாகச் செல்லுங்கள். காங்டோக் பள்ளத்தாக்கின் அழகை அருமையாக உணரலாம். சிக்கிம் மாநிலத் தலைநகரமான காங்டோக்கில் உள்ள மடாலயங்கள் மிக அழகானவை. 500க்கும் அதிகமான பூக்கள் இங்கே மலர்கின்றன. சாகச விளையாட்டு விரும்பிகளுக்கு அற்புதமான தலம்.
மசூரி (MUSSOORIE)

இங்குள்ள சிலர் முசௌரி என்று சொன்னாலும், வட இந்தியர்களுக்கு இது மசூரிதான். அழகிய டுன் பள்ளத்தாக்கு, சிவாலிக் மலைத் தொடர்கள் போன்றவை இதை மிக ரம்மியமாக்குகின்றன. அருகிலுள்ள அற்புதமான கேம்டி (KEMPTY) அருவி அழகுமிக்கது. டெப்போ ஹில் என்ற பகுதியில் நின்று பார்த்தால், கிட்டத்தட்ட எல்லா இமயமலைச் சிகரங்களையும் கண்டு ரசிக்கலாம் - பனி படராத நாட்களில். ஒட்டக முதுகுக் குன்று, துப்பாக்கிக் குன்று போன்றவையும் பிக்னிக்கிற்கு மிகவும் ஏற்றவை.
மவுண்ட் அபு (MOUNT ABU)
பாலைவன மாநிலமான ராஜஸ்தானில் இது ஒரு விதிவிலக்கு. அந்த மாநிலத்திலுள்ள ஒரே சுற்றுலா மலைப் பிரதேசம். 1720 மீட்டர் உயரத்தில் உள்ளது. சமண மதத்தினர் இங்கு புனித யாத்திரையாகவும் வருகின்றனர். காரணம் இங்குள்ள பேரழகு வாய்ந்த தில்வாரா ஆலயம். பிரம்ம குமாரிகளின் பிரம்மாண்டமான அரங்கமும் உள்ளது.

கொடைக்கானல்
பழநிக் குன்றுகளின் நடுவே உள்ள பசுமைப் பிரதேசம். அழகிய மலைச் சரிவுகள், அருவிகள், மனம் மயக்கும் ஏரிகள் போன்றவை இங்கு உண்டு. பலவித பறவைகளும் பயமின்றி வந்து செல்கின்றன. 2,130 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கொடைக்கானலில் வாழை, ப்ளம்ஸ், லிச்சி போன்ற பழங்கள் ஏராளமாக விளைகின்றன. அரிதாகப் பூக்கும் குறிஞ்சி மலரும் இங்கு உண்டு. குறிஞ்சிப் பூக்கள் கொத்தாக மலரும்போது, மலைச் சரிவுகள் நீல, பர்ப்பிள் வண்ணமாகக் காட்சியளிப்பது ரசிக்க வேண்டிய ஒன்று. பல்வேறு நீளம் கொண்ட பதினைந்திற்கும் மேற்பட்ட ட்ரெக்கிங் பாதைகள் உண்டு.
மடிகேரி (MADIKERI)

கர்நாடகாவிலுள்ள கூர்க் மாவட்டத்தின் தலைநகரம். மெர்க்காரா என்றும் குறிப்பிடப்படுகிறது. ராஜாவின் சிம்மாசனம் (உயரத்தில் அமைந்துள்ளது இங்கிருந்து பார்த்தால், அழகிய பள்ளத்தாக்குகளை ரசிக்கலாம்) மடிக்கோடி கோட்டை (இதற்குள் ஒரு அரண்மனையும் உண்டு) ஆகியவை சுற்றுலாப் பயணிகளைக் கவரக் கூடியன. நகருக்குள் அமைந்த ஓம்காரேஸ்வரர் ஆலயமும் பிரசித்திப் பெற்றது.

மூணார் (MUNNAR)
முத்திரப்புழா, நல்ல தண்ணீ, குந்தளா ஆகிய மூன்று மலை ஓடைகளின் சந்திப்பில் உள்ள பிரபல வாசஸ்தலம். கொச்சியிலிருந்து 136 கி.மீ.தூரத்தில், 1524 மீட்டர் உயரத்தில் அமைந்த இடம். ஆனைமுடி இதன் உயர்ந்த சிகரம். மேகங்களை நம் மட்டத்துக்கும் கீழே காணலாம் என்பதும் பனி படர்ந்த பள்ளத்தாக்குகளும் பயணிகளுக்கு ஆனந்தத்தை அளிக்கும். இங்கும் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நீலக் குறிஞ்சி மலர் பூக்கிறது. பாராகிளைடிங், பாறை ஏறுதல் போன்ற சாகச விளையாட்டுகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, தேயிலைத் தோட்டங்களுக்கும் குறைவில்லை. மாட்டுப் பெட்டி ஏரி மற்றும் சற்று தொலைவில் அமைந்த ராஜமாலா வனவிலங்கு சரணாலயம் போன்றவையும் பிரபலமானவை.
பஞ்சாக்னி (PANCHAGNI)

வருடம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இது மகாராஷ்ட்ராவில் உள்ளது. ஆசியாவிலேயே இரண்டாவது நீளமான மலை தீபகற்பமான டேபிள் லேண்ட் இங்குள்ளது. பாண்டவர்கள் தங்கியதாக நம்பப்படும்டெவில்ஸ் கிச்சன்என்ற பெயர் கொண்ட பெரும் குகையும் உண்டு. பார்சி பாயின்ட், பீன் கௌலா, சிட்னி பாயின்ட், டும் அணைக்கட்டு, லின்டுமாலா அருவி என்று பல இடங்கள் பார்த்து ரசிக்க உள்ளன.
ஈடா நகர் (ITA NAGAR)
அருணாசலப் பிரதேசத்தின் தலைநகரம். கௌஹாத்தியிலிருந்து ஹெலிகாப்டர் வசதியும் உண்டு. இங்கேபோக, அஸ்ஸாமின் ஹர்முடி ரயில்வே நிலையத்தில் இறங்க வேண்டும். பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஈடா கோட்டை பிரபலமானது. தலாலாமாவால் அருளப்பட்ட புத்த விஹாரம் இங்குள்ளது. கங்கா ஏரி என்பது ஓர் அழகிய இயற்கை நீர்நிலை. படகுச் சவாரியும் உண்டு. இந்த இடத்திலிருந்து போம்டிலா, பீஷ்மக் நகர் போன்ற சுற்றுலாத் தலங்களுக்குப் போய்வர மினி பஸ் வசதி உண்டு.
பச்மாரி (PACHMARHI)
சாத்புராவின் ராணி என அழைக்கப்படும் இது மத்தியப் பிரதேசத்தில் உள்ளது. 1100 மீட்டர் உயரத்தில் உள்ள இதன் அருகில் தான் விந்திய, சாத்புரா மலைத் தொடர்கள் உள்ளன. 10000 வருடங்கள் தொன்மை கொண்ட குகை ஓவியங்களை இங்கு காண முடியும். தேக்கு மரம் உள்பட பலவித பயனுள்ள மரங்கள் இங்கு வளர்கின்றன. ரஜத் பராபட் எனப்படும் பெரிய அருவி, தேனி அருவி, அப்சரா அருவி போன்ற அருவிகளோடுசௌராக்எனும் சிவாலயத்தையும் கண்டு ரசிக்கலாம். இந்தியாவின் மையப் புள்ளி இதன் அருகில்தான் உள்ளது. போபாலிலிருந்து சுமார் ஆறு மணி நேரத்தில் பச்மாரியை அடையலாம்.
ஏற்காடு
கொஞ்சமா செலவாகணும்... ஆனா ஜில்லுன்னு ஜாலியா பொழுது போக்கணும்னா அதுக்கு ஒரே சாய்ஸ் ஏற்காடு தான்! சேலம் மாவட்டத்திலுள்ள ஏழைகளின் ஊட்டி இது. வளைந்து நெளிந்து செல்லும் கொண்டை ஊசி வளைவுகளின் ஊடே பயணித்தால் ஆரஞ்ச், பேரிக்காய், காஃபி தோட்டங்களைக் காணலாம். ஏரியில் படகு சவாரி, கிளியூர் நீர்வீழ்ச்சி, ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறும் மலர் கண்காட்சி, காய்கனி சந்தை என எல்லாமே டூரிஸ்ட் அட்ராக்ஷன்தான். குறிஞ்சி பூக்கும் சீஸனில் சுற்றுலா பயணிகள் அலைமோதுவார்கள்.

ஆலப்புழா (ஆலெப்பி)
படகு சவாரின்னு சொன்னதுமே ஞாபகத்துக்கு வருவது ஆலப்புழாதான். தென்கேரளாவிலுள்ள ஆலப்புழாவில் அழகிய கடற்கரை, இயற்கை அழகு நிறைந்த உப்பங்கழிகள், மிக அமைதியான ஏரி, ரம்யமான படகு வீடு பயணம் போன்றவை மறக்க முடியாதவை. சுற்றுலா பயணிகளைக் கவர்ந்திழுக்கும் ஆலப்புழா படகுப் போட்டி உலகப் பிரசித்திப் பெற்றது. இந்தியாவின் பல இடங்களில் இருந்து இரயில் மூலமாக ஆலப்புழாவைச் சென்றடையலாம்.


நன்றி - கல்கி

மச்சினி கூந்தலில் மரிக்கொழுந்து சரம் சூடி இருந்தால்??

1. மிஸ்! உங்க எழுத்து பிரமாதமா இருக்கு, எப்படி இவ்வளவு அழகா எழுதறீங்க? 



டேய் , லூசு நல்லா பாரு , டைப் பண்ணினது



-----------------------


2. ஆண்களை மதிக்கும் பெண்கள் (எங்காவது இருந்தால் ) ஆண்களால் பூஜிக்கப்படுவார்கள



----------------------


3. அன்பே! தா தா என அடம் பிடித்தாய் ! எதைத்தர? -தாதாதி தாதா




---------------------


4. பஸ் ல ஹேன்ட்பேக் குடுத்து ஸ்டேன்டிங்கில் வரும் பிகரின்் ஹேன்ட்பேக்கை PHD பண்ணியதில் 8 பொட்டு அட்டை இருக்கு.அடேங்கப்பா.அஷ்ட லட்சுமியோ?




------------------------------



5. அன்பே! உன் சவுரி செம அழகு என்பதால் உன் பின்னல் அழகு சூப்பர் என சொல்ல வந்தேன்.வாய் தவறி பின்னழகு சூப்பர்னு சொல்லிட்டேன்.அய்யய்யோ



--------------------------





6. மழைக்காக நீ குடை பிடித்தாய்.குளிருக்காக நான் உன் கையைப்பிடித்தேன்.மாமூலுக்காக போலீஸ் நம் இருவரையும் பிடித்துக்கொண்டது



-------------------------


7. அன்பே! தங்கம் மாதிரி தகதகவென நீ! செம்பு மாதிரி நான் !



--------------------


8. மச்சினி கூந்தலில் மரிக்கொழுந்து சரம் சூடி இருந்தால் மரிக்கொழுந்தியா ?



-------------------------


9.  என் வீட்டு வாசல் கதவை டொக் டொக் என்று தட்டினாய்.ஆனால் நீ டொக்கு பிகர் அல்ல




------------------------------


10. அன்பே ! சுமாரான பிகர் போனாலே பார்ப்பேன்.சூப்பர் பிகர் உன்னைப்பார்க்க மாட்டேனா?




-----------------------


11. மழைக்கு கூட கவிதைப் பக்கம் ஒதுங்கியதில்லை நான்.ஆனால் உன் பக்கம் ஒதுங்கி இருக்கிறேன்.



------------------------


12. சகி! நீ அழுதால் சகிக்கலை!



---------------------


13. வீணா வின் காதலன் எங்காவது காதலியை வெளில கூட்டிட்டுப்போகனும்னா எப்டி கூப்டுவாரு ? = வீணா (ப்) போலாமா?




-----------------------


14. மடக்கி எழுதுவது தான் கவிதை என்றால் நான் உன்னை மடக்கியதை கவிதையை மடக்கிய கவி எனலாமா?



----------------------


15. முதல் இரவில்


ஆணாதிக்கவாதி - டியர், லைட்டை அணை! 


 பெண்ணாதிக்கவாதி - ஏன்? உங்களால ஒரு சின்ன ஸ்விட்சைக்கூட அமுத்த முடியாதா? ஹூம்



----------------------------


16. தர்மபுரி வீரன் - டியர், என் மனசு குழப்பமா இருக்கு, நான் கொஞ்ச நாள் எங்கம்மா வீட்டுக்குப்போய்ட்டு வர்றேன் 



. கர்ம வீராங்கனை -என் உடம்பு கர்ப்பமா இருக்கு , நான் ஹாஸ்பிடல் போய்ட்டு வர்றேன்



-----------------------


17. உனக்கும் , எனக்கும் எதற்கு இத்தனை இடை வெளி ? நான் செல்லும் பாதை எங்கும் வழி அனுப்பும் உன் இடையடி !



-----------------------------


18. கோவை கலெக்டர் அலுவலகத்தில் தலைகீழாக பறந்தது தேசியக்கொடி # தலைகீழா நின்னாலும் தமிழனைத்திருத்தவே முடியாது



---------------------------



19. பிறக்கும் போது வெறும் கை. வாழும்போது அல்லக்கை.இதுதான் புருஷன்மார்களின் வாழ்க்கை




------------------------


20. நீ படிக்கும் புத்தகத்தில் ஓவியமாக இருக்கவே ஆசை.ஏன்னா எப்படியும் நீ படம் தான் பார்ப்பே.




--------------------------------

Friday, June 07, 2013

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 7 6 2013 ) 4 படங்கள் முன்னோட்ட பார்வை

1. யமுனா - எஸ்.எஸ். ஸ்டூடியோ எஸ்.சிவா வழங்க ஸ்ரீஹரி பாலாஜி மூவிஸ் சார்பில் ஜெய்கார்த்திக், எம்.பாண்டி  தயாரிக்கும் படம் "யமுனா''. இதில் நாயகனாக சத்யா, நாயகியாக ஸ்ரீரம்யா நடிக்கின்றனர். பாலாசிங், ஆடுகளம் நரேன், சாம்ஸ், பசங்க சிவக்குமார், வினோதினி ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படத்தை இ.வி.கணேஷ் பாபு இயக்கியுள்ளார். இவர் பாரதி, ஆட்டோகிராப், ஈ, மொழி, சிவகாசி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். படம் பற்றி அவர் சொல்கிறார். ஏழைகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து அவர்களை தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்தும் கூட்டத்துக்கும் நாயகனுக்கும் நடக்கும் போராட்டமே கதை.

திருவையாறு தியாகராஜ சாமிகள் சமாதியில் இதன் பாடல் கம்போசிங் நடந்தது. வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். சுடுகாட்டில் முதலிரவு நடப்பது போலான ஓ நெஞ்சே நெஞ்சே பாடல் காட்சி அனைவரையும் வசீகரித்துள்ளது. இப்பாடல் காட்சியில் சத்யா, ஸ்ரீரம்யா நெருக்கமாக நடித்துள்ளனர். தணிக்கை குழு `யூ' சான்றிதழ் அளித்துள்ளது.  இசை: இலக்கியன், ஒளிப்பதிவு: பொ.சிதம்பரம், எடிட்டிங்: பி.லெனின்.
 


2. சொல்லமாட்டேன் -  பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்துக்கு ‘சொல்லமாட்டேன்’ என பெயரிடப்பட்டு உள்ளது. இதில் சக்தி, ஜிஸ்மி, ஆதிரா, ஆதித்யா, ஜித்தன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி என்.பி. இஸ்மாயில் இயக்குகிறார். அழகான கடற்கரையில் அமைந்துள்ள சுற்றுலா தலத்துக்கு கல்லூரி மாணவிகள் வந்து போகிறார்கள்.

அப்படி வருபவர்களில் ஒரு பெண் காணாமல் போகிறாள் அவளை கண்டு பிடிக்க போலீஸ் தேடுகிறது. ஆனால் அப்பெண்ணோ கொலை செய்யப்பட்டு ஆவியாக வருகிறாள். தன்னைப் போன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு காரணமானவர்களை அந்த ஆவி பழி வாங்குவது கதை.

திகில், மர்மங்கள் நிறைந்த படமாக தயாராகிறது. இப்படத்தில் கல் ஒன்று முக்கிய கேரக்டரில் வருகிறது. ‘ஈ’ படத்தில் ஒரு ‘ஈ’ எப்படி பழிவாங்குகிறதோ அதுபோல் இதில் கல் பழிவாங்குகிறது. கல்லுக்கும் வில்லனுக்கும் நடக்கும் சண்டை காட்சியும் படத்தில் இடம் பெறுகிறது.

கிளைமாக்சில் வில்லனும் நாயகியும் மோதும் சண்டை காட்சி யதார்த்தமாக படமாகியுள்ளதாக இயக்குனர் கூறினார். ஒளிப்பதிவு: பாலு, இசை: ராஜ் மோகன், எடிட்டிங்: ஜஸ்டின்.
 

3.NAYAK Remarkable how NOTHING NEW is attempted by big budget movie- makers!! The same old 'porridge' is regurgitated and spat out at audiences !!


Fight sequences, dancing with blonde babes, duets in foreign locales and, and, and...... .....that's it! Got nothing more. Sorry folks.

 
The only scenes worth watching are the ones given to Brahmanandam. Finally he is given dialogues worthy of him! In fact the comedians have the only worthwhile roles here - they are the only silver lining in this long, long movie.


The movie does not warrant the hype. The half empty theatre is hopefully the Telugu audience's refusal to accept absolutely stale stories.


Kajal Aggarwal does not warrant any mention except maybe 'nice skin' !


Dear Amala Paul. Sultry bathroom scenes maketh not one an actress. And a quiz for the audience - saree with sneakers or saree with Ugg boots ...choose please and let Ms. Paul know which of the two is least acceptable.


Ram Charan . Hmmm. With a dyed-in-wool filmi background, he should have the risk taking ability to lead from the front and try newer and better scripts. Disappointing. But nice hair, man !!

 
The Story : Hero=good . Pomegranate juice=blood. Action=dishum,dishum. Villian=bad. Bone and skull macerating crunch-crunch = stunts. Whew !! The silliness goes up a notch post intermission.


Charmee as an item girl at a 'colony wedding' wearing very sensible black sandals (but not very sensible clothes) and surrounded by firang babes (yet again!!!!!) does not add any value to this movie.
Recycling an older popular song and a clip from Pawan Kalyan's movie will also not salvage this movie. Sorry.

Having two Ram Charans does not cut it either.


ஈரோடு சண்டிகா , ஸ்டார் இல் ரிலீஸ்

4.  After Earth-One thousand years after cataclysmic events forced humanity's escape from Earth, Nova Prime has become mankind's new home. Legendary General Cypher Raige returns from an extended tour of duty to his estranged family, ready to be a father to his 13-year-old son, Kitai. When an asteroid storm damages Cypher and Kitai's craft, they crash-land on a now unfamiliar and dangerous Earth. As his father lies dying in the cockpit, Kitai must trek across the hostile terrain to recover their rescue beacon. His whole life, Kitai has wanted nothing more than to be a soldier like his father. Today, he gets his chance.


What is going on with M. Night Shyamalan lately? I used to like him in earlier films like Unbreakable and Signs, but he hasn't made the critics and audiences gifted as it would probably if his directing career is in serious jeopardy. One of the biggest and toughest question is that simple: Why is M. Night Shyamalan directing in a new post-apocalyptic adventure starring Will and Jaden Smith? Did he ever asked to direct After Earth or did Sony wanted to choose any director that Smith had previously worked for instead of Shyamalan? For those who don't know, this is the first lowest-rated movie for Will Smith since 1999's disappointing mess "Wild Wild West," one for Jaden since "The Day the Earth Stood Still," and another bomb for Shyamalan.


After Earth feels like a re-cut of "Battlefield Earth" (Ya know, the Travolta movie we don't even care anymore) and sometimes half-"I Am Legend" and half-"Hunger Games." But to me, maybe it's the whole Scientology thing that starts to ruin the whole story.

The story is ridiculous, poorly acted (Smith sounded like James Earl Jones), mediocre sci-fi elements. How can this movie be much worse? I wished the late Roger Ebert was here giving a harsh review on "After Earth." Bottom Line: It's not going to be a big summer success, but it's another letdown for fans of Will Smith. I'll just pass on the movie instead of renting it on DVD.

ஈரோடு அபிராமியில் ரிலீஸ்

Thursday, June 06, 2013

சோக்காலி - சினிமா விமர்சனம்

 
தினமலர் விமர்சனம்

ரோஜா டி.வி. எனும் தனியார் ‌சாட்டிலைட் சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வேலை பார்க்கும் சைதன்யா செம சோக்கு பேர்வழி! பிரேம் எனும் சைதன்யாவால் எக்கச்சக்க இளம் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். பெரும் செல்வந்தரும் தொழில் அதிபருமான கவர்ச்சி நடிகை சோனா, தன் தங்கையை பிரேம் எனும் சைதன்யாவால் பறி கொடுத்து அவரை பழிவாங்க துடிக்கிறார். அதேமாதிரி சோனாவுடன் வேலை பார்க்கும் கராத்தே ராஜாவும் இதுமாதிரி சொந்தத்தை பறிகொடுத்து பிரேமை சொர்க்கத்திற்கு அனுப்ப துடிக்கிறார்.

பிரேமின் தீவிர ரசிகையான நாமக்கல் பரமத்தி வேலூரை சார்ந்த மலர்கொடி எனும் சுவாசிகாவோ தன்னை விரும்பும் அறிவழகன் எனும் ஜெயராமை ஒதுக்கி தள்ளிவிட்டு, பிரேமின் இச்சைக்கு இரையாகிறார். ஒருகட்டத்தில் வயிற்றில் பிரேமின் வாரிசுடன் அவரைத்தேடி சென்னை வரும் சுவாசிகாவிற்கு, பிரேம் வாழ்க்கை கொடுத்தாரா? அல்லது சோனா, கராத்தே ராஜாவின் துப்பாக்கி தோட்டாக்களுக்கு இரையானாரா? என்பது க்ளைமாக்ஸ்!!


சைதன்யா, சுவாசிகா, ஜெயராம், சிட்டிபாபு, கஞ்சா கருப்பு, சோனா, அல்வா வாசு, முத்துக்காளை, கிரேன் மனோகர் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் எல்லோரும் சோக்காலி சினிமாவை நிறைய நடித்து டிராமா ஆக்கி விடுகின்றனர்!

எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசை பலம்! ஜே. மோகனின் ஒளிப்பதிவும், ஏ.சரணாவின் எழுத்து, இயக்கமும் பழைய பாணியில் இருப்பது "சோக்காலி"யை பாதி "சீக்காலி"யாகவும் மீதி "ஜாலி"யாகவும் காட்டியிருக்கிறது!

ஆக மொத்தத்தில், "சோக்காலி" பாதி ஜாலி! மீதி...?!"
  • நடிகர் : சைதன்யா
  • நடிகை : சோனா
  • இயக்குனர் :சரணா

 

hay jawani hai deewani -சினிமா விமர்சனம்

தினமலர் விமர்சனம்

நண்பர்களுடன் செல்லும் இன்பச் சுற்றுலா பயணம் வாழ்வில் மறக்க முடியா தருணங்கள். இந்த அழகிய தருணங்களின் ஒரு ஆல்பமாய் “ஹே ஜவானி ஹை திவானி" படம் திகழ அதை ரசிக்காமல் இருக்க முடியுமா என்ன!!!

ஸோயா அக்தர் இயக்கிய ‘ஸிந்தகி நா மிலேகி துபாரா‘ படத்துக்கு பிறகு ஒரு நல்ல டிராவலிங் படத்தைப் பார்த்த திருப்தியை இப்படம் கொடுத்துள்ளது. பளிங்கைப் போல க்ளியராக அமைக்கப்பட்டுள்ள கதாபாத்திரங்களின் வடிவம். பள்ளி, கல்லூரியில் எப்பொழுதும் டாப்பராக பெற்றோர்களைப் பெருமிதம் கொள்ளச்செய்த மகளாக தீபிகா படுகோன்.  
வாழ்க்கை முழுவதும் பறவை போல பறந்திட வேண்டுமென எண்ணும் ரன்பீர் கபூர். சூதாட்டத்திலேயே எல்லா காசையும் தொலைக்கும் ஆதித்யா ராய் கபூர். ஆதித்யாவை ஒரு தலையாக காதலிக்கும் கல்கி கொச்சைலேன்.  நான்கு நண்பர்கள், ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையின் மீதுள்ள வேறுபட்ட பார்வை. 
 


படிப்பு, படிப்பு என்று சாதாரண மனிதர்கள் பெரும் சராசரி இன்பங்களைக் கூட இழந்துவிட்டதாக வருந்தும் தீபிகா படுகோனின் மன ஓட்டம். சூப்பர் மார்கெட்டில் பள்ளித் தோழி கல்கியை காண்கிறார் தீபிகா. கல்கி எட்டு நாட்களுக்கு குலு மணாலியில் சுற்றுலா செல்லப்போவதாக சொல்வது தீபிகாவின் ஆர்வத்தைக் கீறுகிறது. 
 வீட்டில் லெட்டர் எழுதிவைத்து டூருக்கு கிளம்பும் தீபிகா ரயில் நிலையத்தில் தன்னுடன் படித்த கபீர் தாப்பரை (ரன்பீர் கபூர்)  சந்திக்கிறார். ரன்பீர், ஆதித்யா, கல்கி, தீபிகா என நால்வரும் ஒரே டீமாக குலு மணாலி செல்கின்றனர். 

தனிமையிலேயே வாழ்ந்து பழகியதால் தீபிகா ரிசர்வ்டாக இருக்க, ஜாலி பாய் ரன்பீர் கபூர் நல்ல தோழனாக தீபிகாவின் மனப்பான்மையை மாற்றுகிறார். ஆதித்யா மற்ற பெண்களுடன் நெறுங்கிப் பழகுவதைப் பார்த்து கல்கி மனம் சுக்கு நூறாக உடைகிறது. 
 
ரன்பீர் தனக்கு நியூயார்க்கில் வேலை கிடைத்ததை  அறிந்து வாழ்த்துவதற்கு மாறாக ஆதித்யா எனக்கும் சொல்லியிருந்தால் நானும் அப்ளை செய்திருப்பேனே என்று கோபப்படுகிறார் இதனால் தீபிகா ரன்பீர் மீது வந்தக் காதலை சொல்லாமல் விட்டு விடுகிறார் .
 இப்படி இந்தப் பயணத்தில் நட்பு, சந்தோஷம், சோகம், ஏமாற்றம், காதல் என பலதரப்பட்ட உணர்வுகள் . எட்டு வருடம் கழித்து, கல்கிக்கும் குணால் கபூருக்கும் நடக்கும் திருமணத்தில் இந்த நான்கு நண்பர்களும் மீண்டும் சந்திக்கின்றனர். இந்நிகழ்வில் இவர்கள் வாழ்வில் அடையும் மாற்றம் தான் மீதிக் கதை.

படம் முழுக்க இந்த நான்கு நண்பர்களைச் சுற்றியே கதை நகர்கிறது. கடைசி வரை கதாபாத்திரங்களின் நிறம் மாறாதிருப்பது படத்தின் சிறப்பம்சம். பெண்களிடம் வழிந்து ரன்பீர் கபூர் பேசும் வசனங்கள் பஹுத் அச்சா ஹை !! மற்ற பெண்களைப் பார்த்தால் வழிந்திடத் தோன்றும் ஆனால் உன்னைப் போன்ற பெண்ணைப் பார்த்தால் காதலிக்கத் தோன்றும் என்று தீபிகாவைப் பார்த்து இவர் கூறும்போது விழுவது தீபிகா மட்டுமல்ல படம் பார்க்கும் பல பெண்களின் இதயமும் தான்.
 


பர்ஃபி, ராஜ் நீதி, பச்னா ஹே ஹஸீனோ, ராக்கெட் சிங் இப்படி ஒவ்வொரு படத்தில் வெவ்வேறு பரிமாணங்களில் ரசிகர்களை அசத்தும் ரன்பீர் கபூர் இந்தப் படத்திலும் ஈர்க்கத் தவறவில்லை.  தீபிகா படுகோனுக்கு இக்கதாபாத்திரம் புது அவதாரம். சோகமாக முகத்தை வைத்துக் கொள்ளும் போது கூட க்யூட்டாக தெரிகிறார். எப்போதும் சூதில் தோர்க்கும் ஆதித்யா ராய் கபூரும் விரக்தியை வெளிப்படுத்துவதிலும், ஏக்கத்தனமான பார்வையால் கல்கியும் யதார்த்த்துடன் தங்களது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.


ப்ரீதம்மின் இசையில் பாடல்கள் திரையரங்கை திருவிழாக் கோலம் காண வைக்கிறது.  நம்ம ஊரைச் சேர்ந்த மணிகண்டன் ஒளிப்பதிவில் படம் முழுவதும் கலர்ஃபுல்லாக திகழ்கிறது. பல வருடம் கழித்து மாதுரி திக்ஷித் இப்படத்தில் தோன்றி, முதல் பாடலில் துள்ளலான நடனம் போடுகிறார். மிஸ் பண்ணாதீங்க.

காஸ்ட்யூம், காஸ்டிங் டைரக்டர் என ஒவ்வொரு பிரிவுகளிலும் மிகுந்த அக்கறை காட்டப்பட்டுள்ளது. கனவுகளைத் துரத்தும் மனிதன் வாழ்வில் தொலைக்கின்ற அம்சங்களை அயன் முகர்ஜியின் இயக்கம் அழகாய் வெளிப்படுத்தியுள்ளது.


இவன் நல்லவன் இவன் கெட்டவன் என்று யாரும் கிடையாது.  கதைமாந்தர்கள் யாவரும் சாதாரண மனிதர்கள். இவர்கள் உணர்ச்சியை வரையறுக்க முடியாது. ஒவ்வொரு சூழலில் ஒவ்வொரு விதமாகத்தான் வெளிப்படுத்துவர் என்ற யதார்த்த்த்தைப் பிரதிபலிக்கின்ற திரைக்கதை பாராட்டிற்குரியது. இந்தப் படம் நம் மொழியிலும் ரீமேக் செய்யப்பட வேண்டுமென்ற அவா எழுகிறது.

வெளியாட்களோடு பக்குவமாய் பழகு, நண்பர்களோடு மட்டும் குழந்தையாய் இரு வாழ்க்கை முழுவதும் இளமையாய் உணர்வாய் எனக் கூறுகிறது ஹே ஜவானி ஹை திவானி.
 


மொத்தத்தில், முழு திருப்தி தருகின்ற படம். படம் பார்த்த பிறகு நம் இதழில் பிறக்கும் புன்னகை மகிழ்ச்சியின் வெளிப்பாடு.
  • நடிகர் : ரன்பீர் கபூர்
  • நடிகை : தீபிகா படுகோனே
  • இயக்குனர் :அயன் முகர்ஜி
 நன்றி - தினமலர்




ஃபிகரு உன் கிட்டே VGM:-)) -னா இன்னா அர்த்தம்?

இயற்கையின் அழகுணர்ச்சியை பாருங்கள்.. 102 வயதுடைய கப்பல் இப்போது மிதக்கும் காடுகளாய்(சொர்க்கமாய்) இடம்: சிட்னி ஒலிம்பிக் பார்க், டக் ரிவர்.

இயற்கையை ரசிக்க கற்று கொண்டவருக்கு மனதை ஒருநிலைபடுத்தவும், பக்குவபடுத்தவும் வேறெந்த செயல்களிலும் ஈடுபடத் தேவை ஏற்படுவதில்லை.!
காலை வணக்கங்கள்.
Picture from did you know
இயற்கையின் அழகுணர்ச்சியை பாருங்கள்.. 102 வயதுடைய கப்பல் இப்போது மிதக்கும் காடுகளாய்(சொர்க்கமாய்) இடம்: சிட்னி ஒலிம்பிக் பார்க், டக் ரிவர்.

இயற்கையை ரசிக்க கற்று கொண்டவருக்கு மனதை ஒருநிலைபடுத்தவும், பக்குவபடுத்தவும் வேறெந்த செயல்களிலும் ஈடுபடத் தேவை ஏற்படுவதில்லை.!
காலை வணக்கங்கள்.
Picture from did you know
1. ஏன் ம் ம் மட்டும் பதில் ?


 பக்கத்துல ஆள் இருக்குடி


 எவ அவ ? # அவ்வ்வ்வ்வ்வ ( அலைபேசியில் காதலி)



---------------------


2. நான் முத்தம் தந்தால் தான் நீ தருவாய் என்று கணக்குப்பார்க்கிறாயே? நான் எப்பவாவது அப்படி கணக்குப்பார்த்தேனா? # மீ மேத்ஸ் பெயில் கி கி



----------------------------

3. உன் உள்ளங்கையால் என் கையைத்தொடு என்றாள்.மாறாக நான் முத்தமிட்டேன்.கையாலாகாதவன்னு சொல்லிடுவாளோ?




---------------------------


4. பயப்படாதீங்க.டாக்டர் ஊசி போடமாட்டாரு.



 என் பயம் என்னான்னா என்னை உக்கார வெச்சு ட்விட்ஸ் போடுவாரே



---------------------


5. டாக்டர்.18 மணி நேரமும் ட்விட்டர்ல இருக்கீங்ளே? பேஷண்ட்சை எப்படி பார்ப்பீங்க ?



 வந்தா பார்க்க மாட்டேனா? ;-)) # சும்மா 


----------------------------


Time to love for the Macaws <3


6. காலை 4 டூ 7 உன் ட்வீட்டை நான் .11 டூ 12 என் ட்வீட்டை நீ # ஆர் டி ஒப்பந்தம் ,விஜய் ரசிகை் அனுஷ்கா ரசிகை




------------------------

7. ஜெயிச்சுட்டேனே நான் டென் த்ல.கொஞ்சம் கூட கைல பிடிக்க முடியல ்#லஷ்மிமேனன்



-------------------------


8, மிஸ்டர் கேப்டன்.உங்க தொகுதில தான் இருக்கேன்.என்ன சார் தொகுதி ,? பிகர் ஏதும் சரி இல்லையே?


--------------------


9. விஜய் அரசியலுக்கு விரைவில் வர வாய்ப்பு-செய்தி # வந்தா கட்சியோட கொ ப செ சங்கவி ,பொதுச்செயலாளர் எஸ் ஏசி



--------------------


10. தமிழக அரசு குறித்து ஜனாதிபதியிடம் புகார்-அன்புமணி# டேமேஜர் சரி இல்லைனு எம் டி கிட்டே வாட்ச்மேன் புகார் குடுக்கற மாதிரி்


---------------------



Reposting the priceless pic that showcases Thala's modesty - for the benefit of those who have not seen it before ! goosebumps ! :-)
Reposting the priceless pic that showcases Thala's modesty - for the benefit of those who have not seen it before ! goosebumps ! :-)

11. கும்கிக்கு முன் ஜம்.கும்கிக்குப்பின் கும். குட்டிப்புலிக்குப்பின் ஷேம் ஷேம்



-------------------


12. ஹாய்.உங்கள ஒரு தடவை தான் பார்த்தேன்.அப்டியே கண்ணுக்குள்ளேயே நிக்கறீங்க. 



தாங்ஸ் மிஸ்.கொஞ்சம் உதடு வரை இறக்கி விட்டா தேவலை # கிஸ் 



-----------------------


13. சமையலுக்கு நீ! மையலுக்கு நான்!




-----------------------


14. அன்பே!,நீ காலையில் சாப்பிட ஆரம்பித்தாய்.மதியம் ஆகி விட்டது



----------------------


15. நான் மென்மையானவன் இல்லை -ராகுல் # மேன்மையானவன் இல்லைனு தெரியும்.இது வேறயா?




------------------------



இனிய காலை வணக்கம் நண்பர்களே...-விக்கி
இனிய காலை வணக்கம் நண்பர்களே...

16. அன்பே! நீ VGM:-)) என்றதும் வெரி குட் மார்னிங் என சொன்னாய் என சந்தோஷப்பட்டேன்.வெங்காயம் என அர்த்தம் என்றதும் அவ்வ்வ்வ்




-------------------


17. துருப்பிடித்த சிறு துரும்பு உதிர்ந்தால் கப்பல் ஒன்றும் ஆடிவிடாது -கேப்டன் # ஆடி விடலைன்னா ஆவணில விட்டுடும்



--------------------


18. காதலில் விழுந்த எல்லோருக்கும் பெற்றோர் தரப்பிலோ ,நேசித்தவர் தரப்பிலோ காயம் நிச்சயம்



----------------------



19. இந்திய அமைதிப் படை வீரர்களுக்கு இறைச்சி வாங்கியதில் முறைகேடு: # ச்சீ ச்சீ மட்டன் ரகம் ல மட்ட ரகம் ?


-----------------------


20. டாக்டர்! நாள் முழுவதும் விடாம நடந்துட்டே இருந்தா வெயிட் குறையுமா?



 ம்ஹூம் , முழங்கால் குறைஞ்சுடும் 



--------------------------


Sydney Harbour has over 240 kms of shoreline to explore. Which bay would you most like to sail to?
Sydney Harbour has over 240 kms of shoreline to explore. Which bay would you most like to sail to?


21. கீப் இட் அவுட் = சின்ன வீட்டை உன் வீட்டுக்கு கூட்டி வராதே, வெளிலயே பார்த்துக்கோ # சபாஷ் துபாஷ்




-----------------------


22. தி.மு.க., கோட்டைக்குள் குள்ள நரிகள்புகுந்து விடக் கூடாது:- கலைஞர் # உயரமான நரி புகுந்தா ஓக்கேவா தலைவா?



----------------------

23. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே - அனுஷ்கா. # இது என் டயலாக் ஆச்சே? - சூர்யா



-----------------------


24. கைல எப்பவும் கொஞ்சமாவது பணம் இருந்தா எல்லாருமே ஹேண்ட்சம் தான் ;-)



-------------------------


25. நான் செயின் ஸ்மோக்கர் இல்ல - பூஜா காந்தி # நெக்லஸ் ஸ்மோக்கரா?




-----------------------


சேலம் டூ ஆத்தூர் பை  பாஸ் ரோட்டில் சிவா .ஹோட்டல் ல் நிலக்கடலை சட்னி பிரமாதம்a
சேலம் டூ ஆத்தூர் பை பாஸ் ரோட்டில் சிவா .ஹோட்டல் ல் நிலக்கடலை சட்னி பிரமாதம்  

Wednesday, June 05, 2013

iddarammayilatho - சினிமா விமர்சனம் ( தினமலர்)



தினமலர் விமர்சனம்


தெலுங்கில் போக்கிரி, பிஸினஸ்மேன் படங்களில் மாபெரும் வசூல் சாதனை படைத்த இயக்குனர் பூரி ஜெகன்நாத், ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுனும், தேசமுத்ரு படத்திற்குப் பிறகு இணைந்துள்ள படம் தான் "இத்தரம்மாயிலதோ". 

கனிம ஊழலில் ஒரு லட்சம் கோடி ரூபாய் அபேஸ் செய்யப்பட்ட அடிநாதத்துடன் கதை துவங்குகிறது. சென்ட்ரல் மினிஸ்டரின் மகள் அகான்ஷாவான காத்ரின் தெரஸா சைக்காலஜியில் முதுகலை படிப்பதற்காக ஐரோப்பா செல்கிறார்.  ஐரோப்பாவில் தங்கச் செல்லும் வீட்டில் அமலாபாலின் டைரி இவர் கையில் கிடைக்கிறது. 
டைரியை படிக்கும் காத்ரின், அமலாபாலுக்கும் அல்லு அர்ஜுனுக்கும் இடையே இருக்கும் காதலை படித்து தெரிந்து கொள்கிறார்.  டைரியில் வைக்கப்பட்டுள்ள போட்டோவை வைத்து சன்ஜு ரெட்டியாகிய அல்லு அர்ஜுனை அடையாளம் காண்கிறார். அல்லு அர்ஜுனுக்கு அமலாபாலுடன் திருமணம் நிச்சயமான செய்தி வரை டைரியில் எழுதப்பட்டிருந்தது.. இதன் பிறகு இவ்விருவருக்கும் திருமணம் ஆனதா ?? ஆகவில்லையா ?? என்ற கேள்விக்கு விடையறிய அல்லு அர்ஜுனை நாடுகிறார். 


பறவைகளை தன் வீடியோ கேமராவில் அமலாபால் பதிவு செய்ய, வில்லன் செய்த ஒரு கொலையும் எதேச்சையாக அதில் பதிவாகிறது. இதனால் வில்லன்களால் அமலா பால் கொல்லப்படுகிறார். நிச்சயம் செய்யப்பட்டுள்ள காத்ரின், அல்லு அர்ஜுனின் சோகக் கதையை கேட்டு அனுதாபம் கொண்டு பின்பு காதலிலும் விழுகிறார். இறுதியில் இறந்ததாக எண்ணப்பட்ட அமலாபால் உயிருடன் வர க்ளைமாக்ஸில் ஏகப்பட்ட ட்விஸ்டுகள்.

கலர் கலராக காஸ்ட்யூம்கள், மாசு கிளப்பும் கார்கள், நீண்ட தாடியும் நீள முடியும் வைத்த வில்லன்கள் என்ற மாஸ் படத்திற்கு அமைத்திருந்த டெம்பிளேட்டிலிருந்து விலகி, மிக ஸ்டைலிஷாக அமைக்கப்பட்டிருந்த விதம் முதல் ஹைலைட். தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணியும் பாடல்களும் இனிமையான பதிவு, குறிப்பாக வெஸ்டர்னும் கர்நாடக சங்கீதமும் சேர்ந்த சங்கராபரணம் பாடல்.
 ‘ஒன் ஒன் பாடலிலும், டாப் லேச்சு போயாலி பாடலிலும் அல்லு அர்ஜுனின் நடனம் டாப் டக்கர். இன்டர்வல் பிளாக்கிற்கு முன் வருகின்ற சண்டைக் காட்சி இந்தியன் சினிமாவில் படமாக்கப்பட்ட மிகச்சிறந்த சண்டைக்காட்சிகளில் ஒன்று எனக் கூறினால் அது மிகையல்ல. ‘ பிடில் பிரம்மாவாக ‘ பிரம்மானந்தம் காமெடியில் அசத்துகிறார். 

அல்லு அர்ஜுனின் அசத்தலான நடனமும் கண்ணாலேயே கொலை செய்ய கணக்குபோடும் வன்ம விழிகளும் இவரது கதாபாத்திரத்திற்கான தோரணையை சேர்க்கிறது. இவருடன் ஆடும் போது அமலா பால் சாதாரணமாகத் தான் தெரிகிறார். ஒன்றுக்கு இரண்டாக காத்ரின் அமலாபால் என இரு நாயகிகள். அமலாபாலை விட காத்ரின் தான் மனதில் பதிகிறார் நடிப்பிலல்ல கிளாமரில்.


மாடர்ன் உலகத்தில் ஸ்கைப் காலிலே நிச்சயதார்த்தம் செய்து கொள்வது, கிட்டாரை பெண்ணின் உடலாக வர்ணிக்கும் காட்சிகளில் பூரி ஜகன்நாத் ரசிக்க வைக்கிறார். இன்டர்வல் வரை காதல் காமெடி என அழகாக பயணம் செய்யும் படம், இடைவேளைக்குப் பிறகு வழக்கமான பழிவாங்கும் பாதையில் வியக்கத் தக்க அம்சங்கள் ஏதுமின்றி , நாம் எதிர்பார்த்தவாறே பயணிப்பது ஸ்வாரஸ்யத்தைக் குறைத்து, கடைசியில் இதுவும் வழக்கமானதெலுங்கு படம்தான் என்று தோன்ற வைத்துள்ளது.


மொத்தத்தில், "இத்தரம்மாயிலதோ" பழைய காலத்து பழிவாங்கும் கதை தான், வழக்கமான தெலுங்கு சினிமாதான். ஆனால் அதை ஸ்டைல் அம்சங்களுடன் வழங்கியுள்ள   விதம் தான் புதுமை.    
நன்றி - தினமலர்
 a





அறிவுக்கொழுந்தியா ன்னா யாரு?

1. கணவர்கள்=shock absorbers ,சம்சாரங்கள் = shock factories 



------------------------



2. காதல் அமையாதவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாய் அரசாங்கமே ",காதல் வாய்ப்பு அலுவலகம் " திறந்தால் என்ன? (வேலை வாய்ப்பு அலுவலகம் போல்)



--------------------------------


3. பிரமாதமான மூளையுடன் அழகிய மச்சினி இருந்தால் அவரை அறிவுக்கொழுந்தே என்பதற்குப்பதில் அறிவுக்கொழுந்தியா என்றேஅழைக்கலாம்


------------------------


4.  செஞ்சுட்டாளே அவ சமையலை.கொஞ்சம் கூட வாய்ல வைக்க முடியலை.சாம்பார் எது? ரசம் எது? பேதம் பார்க்கத்தெரியல ;-))



------------------------


5. சசிகலா உறவினர் " பாஸ் என்ற பாஸ்கரன் "மோசடி புகாரில் இன்று திடீரென கைது # நல்ல வேளை. அந்தப்பட ஹீரோயின் நயன் தாராவை கைது பண்ணலை



----------------------------


6. டோனியின் ஆண்டு வருமானம் 146 கோடியாம்!!# லட்சுமிராய் 143 சொன்னதே இந்த 146 க்காகத்தானோ?



------------------------


7. தூங்கினால் வரும் உன்னைப்பற்றிய கனவு.ஆனால் தூங்க விடாமல் செய்கிறது உன் நினைவு



--------------------------


8. தேவதை என்றால் சிறகு இருக்கனுமே என்றே தேடினேன்.மற்றபடி உன் இடையைத்தொடும் எண்ணம் எனக்கு இல்லை


--------------------------


9. உன்னை நிராகரித்த பின்னும் உன் அன்பு மாறாமல் இருந்தால் அதுவே உண்மையான காதல்



----------------------------


10. உன்னால் யாரும் கண்ணீர் விடாமல் பார்த்துக்கொள்.உனக்காகக்கண்ணீர் விட ஒரு இதயத்தையாவது வசீகரித்துக்கொள்


---------------------------


11. வானிலை ,பருவ நிலை ,பெண்ணின் மனநிலை மூன்றும் மாறிக்கொண்டெ இருக்கும் தன்மையது



----------------------------


12. ஒரு ஏழையின் போக்க முடியாத பசியைப்போல எனக்குள் உன் மீதான ் வெளிப்படுத்தாத அன்பு கனன்று கொண்டிருக்கிறது்



---------------------------


13. திருமணம் ஆகாமல் குழந்தை பெற்றால் அபராதம் – அதிரடியாக அறிவித்துள்ள சீனா # டெலிவரிக்கு 1 மணி நேரம் முன்னே தாலி கட்டிட்டா ஓக்கேவா? 


--------------------------


14. என்னை ஏன் காதலிக்கிறய்? எதற்கு என் மேல் அன்பு வைக்கிறாய்? எப்படி உன்னை நம்புவது? என கேள்விமேல் கேள்விகேட்டால் ஓடிடுவேன் என எச்சரிக்கிறேன்


-----------------------------


15.

Tuesday, June 04, 2013

HANG OVER -3 - சினிமா விமர்சனம்

 
தினமலர் விமர்சனம்

ஹாலிவுட்டிலே ‘வுல்ஃப் பேக்‘ என்னும் பெயர் மிகப் பிரபலம். இந்தப் பெயர் காமெடி படங்களிலேயே பாப்புலர் சீரிசான “ஹேங்க் ஓவர்“ படத்தைத் தான் நினைவுபடுத்தும். .  இந்த சீரிஸ்களுக்கு முற்றுப்புள்ளியாய் மூன்றாம் பாகம் அமையும் என முன்பே கூறப்பட்டதால் ஹேங்க் ஓவர் மூன்றாம் பாகத்திற்கு எதிர்பார்ப்பு சற்று அதிகமாகக் காணப்பட்டது.

பேச்சுலர் பார்ட்டிக்காக லாஸ் வேகஸ் செல்லும் நண்பர்கள் இரவில் மதுவுடன் போதை மாத்திரையை சேர்த்து எடுத்துக் கொள்ள ஒரு நாள் இரவில் எத்தனை மாற்றங்கள் இவர்கள் வாழ்க்கையில் நடக்கிறது என்பதை தமாஷாக சித்தரித்திருந்தது முதல் பாகம். இதனுடைய அச்சசல் ஜெராக்ஸாக இரண்டாம் பாகம் அமைந்திருந்தது.  மூன்றாம் பாகத்தை வித்தியாசப் படுத்திக்காட்ட கதைக் களத்தை மாற்றி அமைத்துள்ளனர்.

இன்டர்நேஷனல் கிரிமினல் சௌ ஜெயிலிலிருந்து தப்பிக்கும் காட்சியுடன் படம் துவங்குகிறது. எப்போதும் கிறுக்குதனமாக நடந்து கொள்ளும் ஆலன்,, மெச்சூராக உள்ள இவரின் நண்பர்கள் ஸ்டூ, பில், டக். ஆலனின் தந்தை இறக்க இறுதி அஞ்சலியில் நண்பர்கள் பங்கு பெருகின்றனர். ஆலனின் மன நோய்க்கு ட்ரீட்மென்ட் எடுக்க இவர்கள் ஆலனை அழைத்து செல்ல, வழியில் வேகமாக மினி வேன் மோத இந்நால்வரும் கடத்தப்படுகின்றனர். 
 


சௌ தனது இருபத்தியோரு பில்லியன் மதிப்புள்ள தங்க பிஸ்கட்டுகளை கடத்தி சென்றதையும் இப்போது அவன் போலீஸிலிருந்து தப்பிய கதையையும் இவர்களைக் கடத்திய கேங் லீடர் கூறுகிறார். ஜெயிலிருந்து சௌ தொடர்பு கொண்டது ஆலன் மட்டும்தான் ( முன்தைய பாகத்தில் சௌவ்விடமிருந்து ஆலன் ட்ரக்ஸ் வாங்க இருவருக்குள்ளும் நட்பு ), எனவே மூன்று நாட்களுக்குள் நீங்கள் சௌவ்வைப் பிடித்துத் தரவேண்டும். 
இல்லாத பட்சத்தில் நண்பன் டக்கை கொன்றுவிடுவதாக கூறி டக்கை பணயமாக இழுத்துச் செல்கிறான். முதல் பாகத்தில் மொட்டை மாடியில் மாட்டிக் கொள்ளும் டக் இந்த முறை வில்லனிடம் மாட்டிக் கொள்ள, மீதமுள்ள இந்த மூன்று வுல்ஃப் பேக் நண்பர்கள் மூன்று நாட்களில் சௌவ்வைப் பிடித்தார்களா என்பது தான் மூன்றாம் பாகத்தின் மீதிக் கதை.

முந்தைய பாகங்களில் இருந்த அளவிற்கு அனைத்து கதாபாத்திரங்களுக்கும் இதில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. ப்ராட்லி கூபர், எட்ஹெல்ம்ஸ் நடித்திருந்தாலும் கூட ஆலன் கதாபாத்திரத்தில் தாடி வைத்து குழந்தை போல் அழும் ஜேக் காலிபெனாகிஸ் தான் மனதில் பதிகிறார். நண்பன் வில்லனிடம் மாட்டிக்கொண்டிருப்பதைவிட செல்போன் தவறியதை நினைத்து கவலைப்படுவது சிரிப்பைத் தான் தூண்டுகிறது. சௌவ்வாக வரும் கென் ஜியாங் செய்யும் கிறுக்குத்தனமான வில்லத்தனம் ரசிக்கவைக்கிறது. 
 


படத்தின் முக்கிய காட்சியனைத்தும் ட்ரையிலரிலேயே வந்துவிடுகிறது. அதைத் தவிர பெரியதாக விழுந்து சிரிப்பதற்கு காட்சிகள் கிடையாது. முதல் பாகத்தில் புலியை வைத்தும் இரண்டாம் பாகத்தில் குரங்கை வைத்தும் அமைந்திருந்த நகைச்சுவை இந்தப்படத்தில் காணாமல் போனது ஏமாற்றம். ஹேங்க் ஓவர் சீரிஸ் ரசிகர்கள் மட்டும் இறுதி முடிவில் நிறைவைக் காணலாம்.

மொத்தத்தில் "ஹேங்க் ஓவர்-3" மிகுந்த காமெடியும் கிடையாது, அலுக்க வைக்கும் போர் படமும் கிடையாது. ஒன்றரை மணிநேரத்திற்கு ஒரு சாதாரண "டைம் பாஸ் படம்".
நன்றி - தினமலர்
  • நடிகர் : பிராட்லி கூப்பர்
  • நடிகை : ஹேதர் கிரஹாம்
  • இயக்குனர் :டாட் பிலிப்ஸ்
 

வீட்ல ராமன் ,COT ல கிருஷ்ணன்

1. காதலிக்கு ஸ்டிக்கர் பொட்டு பரிசளியுங்கள் 1.மங்களத்துக்கு மங்களம் 2 சிக்கனத்துக்கு சிக்கனம் # ஒரு அட்டையே 2 ரூபாதான்


-----------------------


2.  ஐ லவ் என சொல்லி முடிப்பதற்குள் யாரை யாரை என கேட்டு உசுரை எடுக்கும் பறக்கா வெட்டி தேவதை நீ! # ஐ லவ் யூ



---------------------------


3. ஆகத்திறந்த ஓவியம் கேட்டாள். டைட்டானிக் கேட் வின்ஸ்லேட் ஓவிய ஸ்டில் பரிசளித்தேன்.



---------------------------


4. வில்லு படம் பாத்துதான் நான் விஜய் ரசிகன் ஆனேன் - ஷாருக். # நியாயமாஆப்பார்த்தா நயன் தாரா ரசிகராத்தானே ஆகி இருக்கனும் (கிணத்தடி ஸீன்)



-------------------------


5. கதவுகளை சாத்தியே வைத்திருக்கும் ஒரு வீட்டிற்குள் வெப்பமும் ,இறுக்கமும் அதிகமாகத்தான் இருக்கும் #ஸ்டெல்லாப்ரூஸ் ன் காலசர்ப்பம் நாவலில்்




----------------------------


6. வீட்ல ராமன் ,COT ல கிருஷ்ணன்



--------------------


7. கு க ஆபரேசன் - ஆணுக்கு - வாஸக்டமி .பெண்ணுக்கு க்யூபெக்டமி # மழைக்கால மருத்துவக்குறிப்பு



----------------------



8. டாக்டர்.பசி வயித்தைக்கிள்ளுது. 



 எதுக்காக நர்ஸ் இடுப்பைக்கிள்ளுனே ? # செயின் ரீ ஆக்சன் 



-------------------------


9. சைக்கிள் ல வந்த பால்காரர் சைக்கிள்ல இருந்த ஹார்னை அமுக்கினேன்.திட்றாரு ;-))



-----------------------


10. அன்பே! எங்கம்மா ,அப்பா வரும்போது மட்டும் அவங்களைப்பார்க்காத கல்லுளிமங்கி போல் இடிச்ச புளியாய் அமர்ந்திருக்க்கிறாயே? எப்படி?




------------------------


11. அத்தான்.எந்த டிரஸ் ல நான் அழகா இருக்கேன்? 


பட்டுப்புடவைனு சொல்ல ஆசை.ஆனா உடனே அதை வாங்கித்தரச்சொல்வியே? 


-----------------------


12. முத்தத்தைக்கேட்டால் "என்னை அதுக்காகத்தான் லவ் பண்ணுனியா?" என கேட்கிறாயே! நீயே சொல்.வேற என்னத்தை கேட்க ?என் அத்தை மகளே


-----------------------


13. பெண்களின் சமயோசிதம் ,முன் ஜாக்கிரதை உணர்வு வெளிப்படும் நேரம் தன்னிடம் உள்ள கைக்குழந்தையை தன் கணவன் அல்லாத பிற ஆண்களிடம் தரும்போது




---------------------


14. உன் உடல் என்னை ரசிக்கத்தூண்டியதை விட உன் ஊடலே அதிகம் என்னை ரசிக்க வைத்தது



------------------------


15. மழைக்காலங்களில் கைக்குழந்தையுடன் ஊட்டி ,கொடைக்கானல் ,ஏற்காடு ,மூணாறு ஆகிய சுற்றுலா தலங்கள் செல்வதை தவிர்ப்பீர்



-------------------------


16. ஒற்றை ஜடை தான் உனக்கு அழகு என நான் பொய் சொன்னதுக்குக்காரணம் ரெட்டை ஜடை போட்டு விடச்சொல்லி இம்சை செய்வாய் என்பதால் தான்



------------------------


17  அன்பே! எத்தனை நொறுக்கித்தீனி வாங்கி வந்தாலும் நீயே அதை முடிச்சுக்கட்டிடறியே? நீ என்ன கொள்ளிவாய்ப்பிசாசா?




--------------------------


18. நம்மைத்தான் கட்டிக்குவா னு காதலியை நம்பி கெட்டவனும் ,தாலி கட்டிய பொண்டாட்டியை ் நம்பாம கெட்டவனும் நம்ம நாட்ல அதிகம் ்



-------------------------------


19. நீ கோபத்துடன் (என்னை விட்டு ) நகர்ந்தால் (சமாதான) முத்தம் பெற்று பின் நகர்வாய!்




=======================


20. நான் தப்பி ஓடவில்லை. படப்பிடிப்புகளில் நடித்துக் கொண்டு தான் இருக்கிறேன் - சனாகான் # நடிப்பா? ஆஆஆகிர்ர்ர்ர்ர்




------------------------------------

Monday, June 03, 2013

குட்டிப்புலி - சினிமா விமர்சனம்

 

டீ ,காபி கூட குடிக்காம சுத்த சைவம் மட்டும் சாப்பிடும் எந்த கெட்ட பழக்கமும்  இல்லாத நல்ல பசங்களை இந்த பொண்ணுங்க கண்டுக்கவே மாட்டாங்க . தண்ணியைப்போட்டுட்டு  தெருவோரம் விழுந்து கிடக்கும் பன்னாடைப்பரதேசிங்க , ஊர்ல சண்டித்தனம் , ரவுடித்தனம் பண்ணிட்டு திரியும் ரவுடிங்க , பொறுக்கிங்க , மொள்ள மாரிங்க இவங்களைத்தான் விழுந்து விழுந்து காதலிப்பாங்க . அப்படி ஒரு  கிராமத்து ( நல்ல)ரவுடியை காதலிக்கும் ஹீரோயின் என்ன ஆகறாங்க என்பதே கதை . 


இப்படியே கதை சொல்லிட்டா போர் அடிச்சுடும் என்பதால் அம்மா செண்ட்டிமெண்ட்ஸை அப்படியே மாங்காய் துண்டுகள் ல மிளகாய்ப்பொடி தூவுவது மாதிரி தூவி இருக்காங்க .


 அம்மா மீது அதீத பாசம் உள்ள ரவுடியா எம் சசிகுமார் அசால்ட்டாக நடிக்கிறார். டி ஆர்க்குப்பின் வெள்ளித்திரையில் வெற்றிப்பவனி வரும் தாடிக்காரர்.


 எம் சசிகுமாருக்கு கிடைக்கும் ஆடியன்ஸ் வரவேற்பு ஆச்சரியம் அளிப்பதாய் இருக்கு . தியேட்டரில் அவர் பேசும் வசனங்களுக்கு , சில ரி ஆக்‌ஷன்களுக்கு அப்ளாஸ் மழை !!



 ஆனால் அவர் விருமாண்டி கமல் ரேஞ்சுக்கு முயற்சி செய்வதும் , எம் ஜி ஆர் மாதிரி தன் கேரக்டரை வடிவமைத்துக்கொள்வதும் ரொம்ப ஓவர் . இதே மாதிரி 4 படங்கள் வரிசையா வந்தா போர் அடிச்சிடும். பேட்டர்னை மாத்துங்க பாஸ்,,. 


பத்தாங்கிளாசே இப்போத்தான் படிக்கும் பக்கா ஃபிகர் லட்சுமிமேணன் தான் ஹீரோயின் . கும்கியில் கும்மென வந்த வர் இதில் இன்னும் கொஞ்சம் பூசிய உடம்பில் இருக்கார் . ( எல்லாம் ஒரு வெற்றிப்பரவசம் தான் ) .இவரது கனகாம்பர நிற உதடும் ,மயில் தோகையில் இருக்கும் கண் மாதிரியான மயக்கும் கண்ணும் ,  திருஷ்டியில் கூட அழகு சிருஷ்டியாய் அமைந்த கன்னத்து தழும்பும் வரப்பிரசாதங்கள் . இவரது ஆடை அணியும் அழகு படத்துக்கு படம் கண்ணியமும்  , அழகும் கூடுகிறது  சபாஷ்.. 

( வர்ணிப்பை நிறுத்திக்கறேன், லிமிட் தாண்டக்கூடாதாம் - ஃபோனில் உத்தரவு. பிளாக் ரெகுலரா படிப்பாங்களாம் , அவ்வ் ) 


ஹீரோவின் அம்மாவாக வரும் சரண்யா அக்மார்க் கிராமத்து சினிமா அம்மா. பல காட்சிகளில் இவர் எல்லாரையும் நடிப்பில் தூக்கி சாப்பிடுகிறார், க்ளைமாக்ஸில்  இவரது ஆக்ரோஷம் மட்டும் கொஞ்சம் செயற்கை . 





இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. வில்லன்கள் வம்புக்கு இழுக்கும்போது  தானே களத்தில் இறங்காமல் ஹீரோ ஒரு சின்னப்பையனை தடி வரிசை சுத்திக்காட்டச்சொல்லும் இடமும் , அந்தப்பையன் செம கலக்கலாக  சிலம்பாட்டம் ஆடுவதும் தியேட்டரில் கைதட்டல்கள் 6 நிமிடங்கள் அள்ளிக்கிச்சு.. செம பில்டப் சீன் .



2.  நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவர்கள் சார்பாக ஹீரோ ஹீரோயினிடம் லவ் லெட்டர் கொடுத்துட்டு வேட்டியை மடிச்சுக்கட்டிட்டு வெட்க தயக்கத்துடன் ஓடும் காட்சி அக்மார்க் எம் சசிகுமார் முத்திரை . செம சிரிப்பு 


3. ஹீரோயின் - ஹீரோ மேல் ஆசைப்படுவது , காதலை நாசூக்காக வெளிப்படுத்துவது அதைத்தொடர்ந்து வரும் காதல் காட்சிகள் இதம்


4. டூயட்  காட்சிகளிலும் சரி , குத்தாட்டபாடல் காட்சிகளிலும் சரி  திரையில் வரும் பெண்கள் அணிந்திருக்கும் உடைகளில் கண்ணியமோ கண்ணியம். பார்த்து பார்த்து உடைகளை தேர்வு செய்த ஆடை வடிவமைப்பாளருக்கு ஒரு ஷொட்டு 


5.  சரண்யாவின் அம்மா பாச நடிப்பு தாய்மார்கள் மனதை தொடும் விதம் மிக இயல்பாக அமைத்தது  அதற்கு உயிரோட்டம் அளித்த சரன்யாவின் பிரமாதமான நடிப்பு 


6. ஹீரோவை விட ஹீரோயின் 6 செமீ உயரம் என்பதால் எப்போதும் லாங்க் ஷாட்டிலேயே  ஹீரோவை காட்டி சமாளிப்பதில் ஒளிப்பதிவாளருக்கு வெற்றி . சாமான்யனின் கண்ணுக்கு இருவரும் ஒரே உயரம் என்றே தோணும் 


7. இளையராஜாவின் சூப்பர் ஹிட் பாடல்களை  ஆங்காங்கே பயன் படுத்தி இருப்பது புத்திசாலித்தனம் ( உபயம் - சுப்ரமணிய புரம் - இரு பொன் மணி )

8. ஹீரோவுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற பில்டப்பை கொடுத்து க்ளைமாக்சில் வைத்த ட்விஸ்ட்


9. படிச்ச பொண்ணான ஹீரோயினிடம் படிக்காத ஹீரோ  மடிச்சு விட்ட லுங்கியை எடுத்து விட்டு வாத்தியாருக்கு சொல்வது போல் அடக்க ஒடுக்க மாக வணக்கம் போடுவதும் , பெருமிதம் கலந்த வெட்கத்தோடு ஹீரோயின் அதை ரசிப்பதும் செம செம 


10 . ஹீரோயினை காதலிக்க ஏங்கும்  அந்த 4 பசங்க பண்ணும் அலப்பறைகள் , திட்டங்கள் , கலட்டாக்கள் இன்று போய் நாளை வா, கண்ணா லட்டு தின்ன ஆசையா பாதிப்பென்றாலும் ரசிக்க வைக்கிறது


11. ஹீரோயினின் தோழியாக வரும் அந்த தெத்துப்பல் அழகி கவனிக்க வைக்கும் அழகு , நடிப்பு 


கீழே உள்ள ஸ்டில்லில் மஞ்சக்காட்டு மைனா தான் நான் சொன்ன ஹீரோயின் தோழி



இயக்குநரிடம் சில கேள்விகள்


1. தன்னை மாப்பிள்ளை பார்க்க வரும் பெண் வீட்டார் மேல் ஹீரோ வேணும்னே அவங்களை வெறுப்பேற்ற அவர்கள் மேல் வாமிட் எடுக்கும் காட்சி உவ்வே... இந்த மாதிரி காட்சியை சென்சார் எப்படி அனுமதிக்குன்னு தெரியலை . ஆபாசம் , வன்முறைக்காட்சிகளை கட் பண்ணுவது மட்டும் அவர்கள்  வேலை அல்ல  . இந்த மாதிரி அசூயையான காட்சிகளை கட் பண்ணுவதும் அவர்கள் வேலை தான் 


2. எம் சசிகுமாருக்குன்னு தனி பாணி இருக்கும்போது எதுக்கு பருத்தி வீரன் கார்த்தி பாடி லேங்குவேஜ் , விருமாண்டி கமல் மாதிரி அடிக்கடி மீசை முறுக்கும் மேனரிசம்? 


3. வீடே பற்றி எரியுது . ஹீரோ ஒரு பெட்ஷீட்டை போர்த்திட்டு அந்த பொண்ணை  அசால்ட்டாக ஒரு தீக்காயம் கூட ஆகாம காப்பாத்தறதெல்லாம் ரீலோ ரீல் 



4.  ஆடுகளம் படத்தின் பின்னணி இசையை ஆங்காங்கே அப்பட்டமாக காப்பி அடித்திருக்கும் வாகை சூடவா இசை அமைப்பாளர் ஜிப்ரான் பற்றி கண்டுக்கவே இல்லையே , ஏன்?


5. க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் பி சி செண்ட்டர் ரசிகர்களை கவரும் விதத்தில் படமாக்கப்ப்ட்டிருந்தாலும் நந்தா ஸ்டைலில் சரன்யா  வரக் வரக் என வில்லனை கழுத்தை அறுப்பது ஓவர். இன்னும் கண்ணியமாக காடி இருக்கலாம் 


6. சரண்யா பேங்க்ல டெபாசிட் பணம் போட்டு வெச்சிருக்காங்க . அந்த பாண்ட் பேப்பரை அடமானமா வெச்சு கடன் கேட்கறாரு ஒரு பிரைவேட் ஆள் கிட்டே . அந்த இடத்துல ஒரு வசனம் . மெச்சூரிட்டி பீரியட் முடியாம பணம் எடுக்க முடியாது அப்டினு . அது தப்பு . எடுக்கலாம். வட்டி கட் ஆகும் அவ்வ்ளவுதான். இந்தக்காட்சியைப்பார்க்கும் பாமர ஜனங்க மனதில் பேங்க் பற்றி தவறான எண்ணம் ஏற்படும் .




மனம் கவர்ந்த வசனங்கள்
  
1. நீ குடுக்கற பரிசு பார்த்து அவ அப்படியே ஷாக் ஆகனும். 



அப்போ கரன்ட் கம்பியைத்தான் குடுக்கனும்



2.  நிஜ வாழ்க்கைல யும் சரி.சினிமாவிலயும் சரி.பொண்ணுங்க சல்லிப்பசங்களைத்தான் லவ்வு பண்ணுதுங்க



3. பல ஆபத்தான சந்தர்ப்பங்கள் அமைஞ்சும் நம்ம உயிருக்கு எதுவும் ஆகறது இல்லையே? அதுக்கு என்ன அர்த்தம்? மனிதனின் சாவு அவன் கைல இல்ல




4. லேடி -யோவ்.நான் சொன்னதை எப்பய்யா கேட்டே? பகல்லயும் சரி ,நைட்லயும் சரி



5.  ஒரு பொண்ணு நினைச்சா மட்டும் தான் நீயும் ,நானும் ,யாரும் ஆம்பளை.


6. குடிகாரப்பயலுக்கும் கோவக்காரப்பயலுக்கும் வாக்கப்பட்ட பொண்ணுங்க வாழ்க்கை வீணாத்தான் போகும்


7 பொண்ணு எப்பவாவது உன்னைப்பார்த்து வெட்கச்சிரிப்பு சிரிச்சா உன் மேல லவ்வுன்னு அர்த்தம்.எப்போ பாரு கெக்கெபிக்கேனு சிரிச்சா லூசுன்னு அர்த்தம்


8. ஆம்பளை கெட்டுப்போனா ( உதவாக்கரையா ) அவன் குடும்பம் தான் அழியும்.பொம்பளை கெட்டா அவ வம்சமே அழியும்


9. தரைல விழுந்த பூவை தலைல வெச்சா குடும்பத்துக்கு ஆகாது



10. கடவுள் இல்லாத கோயிலும் ,கரகம் இல்லாத திருவிழாவும் எதுக்கு ?




 


11.  நான் எதுவும் செய்யலையேம்மா? 

 ம்க்கும், செஞ்சிருந்தாத்தான் குழந்தை பொறந்திருக்குமே?


12. உன் கிட்டே வாழ முடியலைன்னு ஒருத்தி செத்துப்போனா நீ எப்படி ஆம்பளை ஆக முடியும் ? 


13. ஒரு ஆம்பளை தன்னை ஆம்பளைன்னு சொல்லிக்கறதை விட அவ பொண்டாட்டி அவனை ஆம்பளைன்னு சொல்லிக்கறதுல தான் பெருமை



14. நல்லவங்க எப்பவும் நல்லா இருக்கனும், அதுக்கு நாம குறுக்கே நிக்கக்கூடாது 


14. பெத்த அம்மா, கட்டிக்கப்போற பொண்ணு 2 பேரும் நல்லவங்களா அமைவது ஒரு ஆணுக்கு கிடைக்கும் வரம்


15.  என் பையன் சிங்கம் மாதிரி இருப்பான், ஆனா பேரு புலி 


16. டேய், அவன் கிஸ் அடிக்கறானே?  உதட்டை அப்படியே குடிக்கறானா? 


17. பொம்பளை சாபம் விட்டா புழுப்பூத்துத்தான் சாவோம்னு நம்பிக்கை உள்ளவன் நானு, அதனால உன் பாவம் எனக்கு வேணாம்

18. போலீசையே அடிச்சுட்டானா? ரைட்டு , இன்னைக்கு இருக்குடி கச்சேரி 


19. பொண்ணு முகம் மட்டும் லட்சணம் இல்லை , முழுசும் லட்சணம் தான் . 


20. அம்மா, எப்போ வேணாலும் சாவு வரும்னு தெரியற  என்னை மாதிரி ரவுடிங்க ஒரு பொண்ணை நினைக்கறது பாவம்மா.. 

 டேய்..  கல்யாணம் பண்ணிக்கறது பாவமா? 

 ஆமா, அது பெரும்பாவம் 





 


சி பி கமெண்ட் - குட்டிப்புலி - எம் சசிகுமார் ன் அதே பார்முலாப்படம் - ,பி .சி சென்ட்டர்களில் சுமாரா ஓடிடும்விருதாச்சலம் கலெக்டரே! ஊர்ல தியேட்டர்ல 70% பேர் சரக்கு அடிச்சுட்டு பார்சல் புரோட்டா சாப்ட்டுட்டு இருக்காங்க.என்ன பண்ணிட்டு இருக்கீங்க?( செக்ண்ட் ஷோ @ விருதாச்சலம் ) 


விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 39


குமுதம் ரேங்க் - ஓக்கே 



 ரேட்டிங்க் -  2.75 / 5 




 


ஜிந்தாபாத் ஜிந்தாபாத் பிரீத்தி ஜிந்தாபாத்



1. வாழ்வதற்கு மிகவும் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடம்#ஓஹோ.ஆஸ்தி ரேலியா?



-----------------------


2. தமிழகத்தில் இனி தமிழுக்கு அழிவு நேரும்-வைகோ எச்சரிக்கை # அய்யய்யோ.எனக்கு தமிழ் மட்டும்தானே தெரியும்.இப்போ என்ன செய்ய



--------------------


3,  கமலின் அடுத்த படத்தில் காஜல் ஹீரோயின் # உதடு பத்திரம்.


-----------------------


4. எம்ஜிஆர்க்கு அடுத்து அஜித்துக்குதான் அதிக ரசிகர் பட்டாளம் : சோ # சார் சார் அப்போ நான் யார் சார் ? - ரஜினி



------------------


5. இந்தியாவின் வளர்ச்சிக்கு ஜப்பான் உதவி: பிரதமர் பேச்சு # சராசரி இந்தியன் உயரம் 5. 1/4 அடி.சராசரி ஜப்பானியர் உயரம் 4 3/4 அடி



-------------------
 



6.  பாட்ஷா ரீ-மேக்கில் நடிக்கிறார் தனுஷ்! # நான் ஒரு தடவை சைக்கோவா நடிச்சா 100 தடவை நடிச்ச மாதிரி




-----------------------


7. 2014 பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் தனியாக நிற்க போகிறோம் - கேப்டன் # சிங்கம்தானே சிங்கிளா வரும்?உங்களுக்கென்ன?்




-----------------------


8. OPS - மேடம், உங்களுக்குத்தெரியாம யார் உத்தரவு போட்டிருப்பாங்க ?



 ஜெ - ஏதாவது எதிர்ப்பு வந்தா இப்படித்தான் சமாளிக்கனும் # ராணி தந்திரம்


----------------------


9. ஐஸ்வர்யாவ தான் கஷ்டம், சோனம் கபூரை ஈசியா இம்பிரஸ் பண்ணலாம்: தனுஷ் # SOநம் கபூர்னு சொல்றீங்ளா?கன்னி ராசி தனுஷ்?்




-------------------------------


10. எம்.ஜி.ஆர்.-க்கு அடுத்து அஜித் - சோ அதிசயப் புகழாரம்! # இப்டித்தான் ரஜினியைப்புகழ்ந்து உசுப்பேத்தி உசுப்பேத்தி ரசிகர்களை.




----------------------





11.  தொழில் அதிபர் ஒருவரை காதலிக்கிறேன்-லட்சுமிராய்# அவரையுமா ? - டோனி ,ஸ்ரீசாந்த் கதறல்



---------------------------


12. சூதாட்டத்தை ஒழிக்க அரசு உறுதிபூண்டுள்ளது: மத்திய அமைச்சர் # அதாவது தனியார் யாரும் சூதாடக்கூடாது, அரசே ஏற்று நடத்துமா?




-------------------------

 13. சிந்து சமவெளி’ படத்தைப்போல் இனிமேல் சர்ச்சைக்குரிய படத்தில் நடிக்க மாட்டேன்-அமலாபால்# அமலாபால் இனி கவர்ச்சி ,கிளுகிளுப்புக்கு அப்பால்?



-------------------------------


14. சேவை செய்யவே கட்சியை ஆரம்பிச்சேன் -சரத்குமார் # அதுக்கு ஹோட்டல் ,மெஸ் ஆரம்பிச்சிருக்கலாம்ணா.லெமன் சேவை ,காராசேவை்



---------------------------


15. என் அம்மாவைப் போல் நான் இல்லை - கட்சியினருக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை. # ஆமா கொஞ்சம் அப்பா ஜாடை




------------------------

 



16. தமிழ் தெலுங்கு படத்துல நடிச்ச 6 நடிகைங்க சூதாட்ட புகார்ல சிக்க போறாங்களாம்# 6 மனமே 6 அங்கே மாட்னவங்க எண்ணிக்கை 6




---------------------------


17. 'பொன்னியின் செல்வி' ஆட்சியில் அமர்ந்தார், குறுவை சாகுபடி பொய்த்தது-,மு க் # அய்யா ஆட்சில மட்டும் அள்ளிக்கிச்சா? சும்மா அள்ளி விடாதீங்க



-------------------------------


18. அரசியலுக்கு வருகிறார் பிரீத்தி ஜிந்தா # ஜிந்தாபாத் ஜிந்தாபாத் பிரீத்தி ஜிந்தாபாத்னு தொண்டர்கள் கோஷம் போட்டா குளிக்க பாத்ரூம் போவாரோ?



------------------------------------


19. ஆழ்ந்து வாசிக்கும் பழக்கமும் ,உண்மையாய் ஒருவரை நேசிக்கும் வழக்கமும் வழக்கொழிந்து வருவது வருந்தத்தக்க விஷயம்




--------------------------


20. தன் குடும்பத்திற்காக மட்டுமே உழைத்த தமிழ் இனத்தின் தலைவர் கலைஞர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்



--------------------------------