Friday, March 29, 2013

திவாகரன் கைது பின்னணி மர்மங்கள் - ஜூ வி அலசல்

எக்குத்தப்பாகப் பேசியதால் கைதானாரா திவாகரன்?
பெங்களூரு வழக்குக்குப் பின் நிலைமை சீராகிவிடும்!
திவாகரனை மீண்டும் கைதுசெய்து மன்னார்குடி தரப்பை அதிரவைத்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. பெங்களூருவில் நடைபெற்றுவரும் சொத்துக்குவிப்பு வழக்கு முடிவை நெருங்கும் தருணத்தில் நடைபெற்றுள்ள இந்தக் கைது, பல்வேறு சந்தேகங்களைக் கிளப்புகிறது. 


கடந்த முறை கைதுசெய்யக் காரணமாக ரிஷியூர் தமிழார்வன் கொடுத்த புகாரின் பேரில்தான், இந்தக் கைதும் அரங்கேறி இருக்கிறது. திவாகரனோடு ரிஷியூர் ஊராட்சி மன்றத் தலைவர் கிருஷ்ணமேனன் மற்றும் ராஜேந்திரன் என்பவரையும் கைதுசெய்துள்ளது காவல் துறை. மூவர் மீதும் கொலை முயற்சி, கொலை செய்யத் தூண்டுதல், கூட்டுச் சதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.  


புகார் கொடுத்த ரிஷியூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தமிழார்வனிடம் பேசினோம். ''கடந்த முறை எனது வீட்டை திவாகரன் இடித்துத் தள்ளினார். அந்த வழக்கில் கைதாகி ஜாமினில் வந்ததில் இருந்து, என்னைக் கொல்லத் திட்டமிட்டு வருகிறார்கள். இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் வாக்கிங் போகும்போது, ராஜேந்திரன் என்னைக் கத்தியால் குத்த வந்தார். அதுகுறித்து புகார் கொடுத்தேன். அரெஸ்ட் ஆகி பெயிலில் வந்திருக்கிறார். இப்போது மீண்டும் என்னைக் கொல்ல முயற்சிசெய்வதாக 22-ம் தேதி உளவுப் பிரிவினர் தகவல் சொன்னார்கள். அதன் பின்னர்தான் நான் புகார் கொடுத்ததை அடுத்து, இப்போது நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்'' என்றார்.


கடந்த 22-ம் தேதி இரவு 7.50-க்கு சுந்தரக்கோட்​டையில் இருக்கும் திவாகரன் வீட்டுக் கதவைத் தட்டிய மன்னார்குடி டி.எஸ்.பி-யான அன்பழகன். 'ரிஷியூர் தமிழார்வனைக் கொல்ல முயற்சித்த வழக்கில் உங்களைக் கைதுசெய்கிறோம்’ எனச் சொன்னார். 'கொஞ்சம் பொறுங்கள்!’ என வீட்டுக்குள் சென்ற திவாகரன், வழக்கறிஞருக்குத் தகவல் கொடுத்துவிட்டு, சில நிமிடங்களில் வெளியில் வந்தார். 


அங்கிருந்து புறப்பட்ட வேன் நேராக நீடாமங்கலம் சென்றது. தகவல் தெரிந்த திவாகரன் ஆதரவாளர்கள் நீடாமங்கலம் காவல் நிலையத்தை நோக்கிக் குவியத் தொடங்கினர். உடனே திவாகரனை அங்கிருந்து திருவாரூர் தாலுக்கா காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். நள்ளிரவு 1.40-க்கு காவல் துறையினரின் பாதுகாப்போடு திவாகரனை நீடாமங்கலத்துக்கு  நீதிபதியின் வீட்டுக்கு அழைத்து வந்தனர். கைதுசெய்யப்பட்ட மூவரையும் 15 நாட்கள் ரிமாண்ட் செய்வதாக நீதிபதி உத்தரவிட்டார்.


கைதுக்குப் பின்னணி என்ன?


''கடந்த ஆண்டும் திவாகரன் கைதுசெய்யப்பட்டார். பொது நிகழ்ச்சிகளில் அதிகம் தலைகாட்டக் கூடாது என்ற அறிவுறுத்தலுக்குப் பின்னரே, அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். ஆனாலும் வெளி நிகழ்ச்சிகளில் தலைகாட்டுவதை திவாகரன் தவிர்க்கவில்லை. சமீபத்தில் திருவோணம் முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ-வான எம்.ஆர். வீட்டுத் திருமணம் சங்கரன்கோவிலில் நடந்தது. அங்கு சென்ற திவாகரன் வரும் வழியில் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் சென்றார்.


 அங்கு அவருக்கு அதிகப்படியான மரியாதை தரப்பட்டது. அதன் பிறகுதான் அந்தக் கோயிலின் செயல் அலுவலர், காத்திருப்போர் பட்டியலுக்குச் சென்றார். அடுத்து, புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் நடந்த சுற்றுச்சூழல் கருத்தரங்குக்குச் சென்றார். அங்கு அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கினார்கள். அதையடுத்து விருது வழங்கிய மன்னர் கல்லூரியின் முதல்வர், இரண்டு உதவி பேராசிரியர்கள் என மூவர், காத்திருப்போர் பட்டியலில் இடம்பெற்றனர்.



அடுத்து, திருவாரூர் மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் ஒருவர் வீட்டுத் திருமணத்துக்குச் சென்று வந்தார். திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் மதியழகன் வீட்டு திருமண நிச்சயதார்த்த விழாவிலும் கலந்துகொண்டார். அங்கு வந்திருந்த தி.மு.க. எம்.எல்.ஏ-வும் டி.ஆர்.பாலுவின் மகனுமான ராஜாவிடம் நலம் விசாரித்துப் பேசினார்.


 அடுத்து திருமண விழாவுக்கும் சென்றவர், அங்கு வந்திருந்த கே.வி.தங்கபாலு, முன்னாள் எம்.பி-யான பி.வி.ராஜேந்திரன் ஆகியோரிடம் பேசினார். இப்படி தி.மு.க., காங்கிரஸ் என ஜெயலலிதாவுக்குப் பிடிக்காத கட்சியினரின் வீட்டு விஷேசங்​களுக்கு சென்றுவந்ததை உளவுப் பிரிவு போலீஸார், தலைமையிடம் போட்டுக் கொடுத்துவிட்டனர். அங்கு பெங்களூரூ வழக்குப் பற்றி திவாகரன் பேசியதாகவும், 'விரைவில் நிலைமை சீராகிவிடும்’ என்று மற்றவர்களுடன் மகிழ்ச்சி பொங்கக் கூறினார் என்றும் உளவுப் பிரிவினர் நோட் போட்ட​னராம். அதனை அடுத்தே இந்த அதிரடிகள்'' என்கிறார்கள் விவரமறிந்த வட்டாரத்தினர்.



சமீபத்தில் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் திருவிழா நடந்தது. அந்தத் திருவிழாவில் திவாகரனுக்கு எனத் தனி மண்டகப்படியும் உண்டு. அந்த மண்டகப்படியில் கலந்துகொண்ட திவாகரனுக்கு வழக்கமான மரியாதை செய்யப்​பட்டது. அப்போது அ.தி.மு.க அவைத் தலைவரும் முன்னாள் அறங்காவலர் குழு தலைவருமான பிச்சைக்கண்ணு, முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சதாசிவம், ராஜகோ​பால், மணிவண்ணன் என நால்வர் திவாகரனைச் சந்தித்தனர். இந்தத் தகவலையும் உளவுப் பிரிவு தலைமையிடம் சொல்ல... அந்த நால்வரும் கட்சியைவிட்டே நீக்கப்பட்டனர்.
கைதுகுறித்துப் பேசும் இன்னும் சிலரோ, ''டெல்டா மாவட்ட அ.தி.மு.க-வினருக்கு திவாகரன் தான் பாஸ். அவரால் உருவாக்கப்பட்டவர்கள் ஒன்றியப் பொறுப்புகள் தொடங்கி அமைச்சர்கள் பொறுப்பு வரை வகித்து வருகின்றனர். இப்போது திவாகரன் ஓரங்கட்டப்பட்டதும் அந்த இடத்துக்கு அந்த ஏரியாவைச் சேர்ந்த ஒரு வி.ஐ.பி. ஒருவர் வர நினைக்கிறார். அவர்தான் திவா​கரனைப் பற்றிய தகவல்களை தலைமை​யிடம் போட்டுக்கொடுத்து​விட்டார்'' என்கிறார்கள்.


கைதுகுறித்து மன்னார்குடி டி.எஸ்.பி-யான அன்பழகனிடம் பேசினோம். ''ரிஷியூர் தமிழார்வன் கொடுத்த புகாரின் பேரில் விசாரணைசெய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்று மட்டும் சொன்னார்.


இன்னும் யார் யார் தலை உருளப்​போகிறதோ?


- வீ.மாணிக்கவாசகம்
படம்: செ.சிவபாலன்


நன்றி - ஜூ வி 

சாகித்ய அகாடமி விருது வென்ற மலர்வதி


பள்ளிக்கூடத்துல இருந்து திரும்பி வந்ததும் என்னைக் கட்டிப்பிடிச்சுக்கிட்டு அம்மா உச்சி முகர்ந்து முத்தம் கொடுப்பாங்க. அப்போ அவங்க மேல அடிச்ச பினாயில் நெடி இப்பவும் என் நெஞ்சின் அடியாழத்தில் பதிஞ்சிருக்கு. அது என் உள்ளுணர்வில் உண்டாக்கிய உணர்வுதான் 'தூப்புக்காரி’ நாவலின் ஒவ்வொரு வார்த்தையும்!''- மெல்லிய புன்னகையும் அழுத்தமான வார்த்தைகளுமாகப் பேசுகிறார் மலர்வதி. 2012-ம் ஆண்டின் இளம் எழுத்தாளருக்கான சாகித்ய அகாடமி விருது வென்ற பெருமிதம் பூரிக்கிறது மலர்வதியின் புன்னகையில்.
 கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிக்கோடு கிராமத்தைச் சேர்ந்த மேரி புளோரா எனும் மலர்வதி எழுதிய இரண்டாவது நாவல் தூப்புக்காரி. கிராமத்தின் கிழக்கு மூலையில் ஒரு முட்டுச் சந்தில் பாதி மட்டுமே கட்டி முடிக்கப்பட்ட வீட்டில் வசிக்கும் மலர்வதி, திருமணச் சிந்தனைகளைத் தவிர்த்து இலக்கியமே நேசமும் சுவாசமுமாக இருக்கிறார்.

''என் இயற்பெயரான மேரி புளோரா தமிழ்ப் பெயராக இல்லைனு சொல்லி, வரலாற்று ஆய்வாளரும் எழுத்தாளருமான தக்கலை பென்னி, 'மலர்வதி’னு அந்தப் பெயரைத் தமிழாக்கம் செஞ்சாங்க. என் கூடப் பிறந்தவங்க ஒரு அண்ணன், ஒரு அக்கா. என் அம்மா ரோணிக்கம் மட்டும் இல்லைன்னா, என் வாழ்க்கை எப்பவோ கேள்விக்குறி ஆகியிருக்கும். என்னைக் கர்ப்பத்தில் சுமந்தப்பவே,  அப்பா குடும்ப உறவுகளைத் தூக்கி எறிஞ்சுட்டு, அம்மாவைத் தவிக்க விட்டுட்டுப் போயிட்டாரு. அம்மாவுக்குப் படிப்பறிவு கிடையாது. அப்பா வீட்டை விட்டுப் போனதும் குடும்பமே வீதிக்கு வந்துடுச்சு.

 ஆனா, ஒத்தை மனுஷியா நின்னு அம்மா எங்க மூணு பேரையும் வளர்த்தெடுத்தாங்க. பள்ளிக்கூடத்தில் துப்புரவுப் பணிக்குப் போனாங்க. மாசம் முப்பது ரூபாய் சம்பளம். அந்த வேலை போக பல வீடுகள்ல பாத்திரம் தேய்ச்சுக் கொடுப்பாங்க. ஒரு ரூபாய் கூலிக்காகப் பக்கத்து வீடுகளுக்கு ரேஷன்ல நின்னு பொருட்களை வாங்கிட்டு வந்து கொடுப்பாங்க. தலையிலும் சுமை, வயித்திலும் சுமையை வெச்சுக்கிட்டு, மூணு குழந்தைங்க வயிற்றுப் பசியைத் தீர்க்கத் தன் உயிரையே தேய்ச்சுக்கிட்டாங்க.


விவரம் தெரிஞ்சதில் இருந்தே, அம்மாவின் வேதனையை என் மனதில் சுமந்துட்டே இருந்தேன். குடும்பச் சூழல் காரணமா ஒன்பதாம் வகுப்புக்கு மேல படிக்க முடியலை. எங்க சுத்துவட்டாரப் பகுதிகளில் பள்ளிக்கூட விடுமுறையில் வீட்டில் இருக்கும் பொடிசுங்கள்ல இருந்து பார்வை மங்குன பாட்டி வரை எல்லா பெண்களுக்கும் வேலை கொடுக்குறது களம் அண்டி ஆபீஸ்தான் (முந்திரித் தொழிற்சாலை). நானும் முந்திரி உடைக்குற வேலைக்குப் போனேன். அந்த சின்னஞ்சிறிய உலகத்தில் நான் கத்துக்கிட்ட விஷயங்கள் அதிகம்.


வேலை முடிஞ்சு வீட்டுக்குப் போனா, கழிவறை கழுவுறதுக்காக அம்மா வாங்கி வெச்சுருக்குற பினாயில் வாடைக்கு நடுவில் தான் சாப்பாடு, தூக்கம் எல்லாமே. திருவிழாக்களுக்குப் போறப்பகூட அம்மா அங்கே இருக்கிற கடைகளில் புது துடைப்பத்தைத்தான் அழகு பார்ப்பாங்க. 

 
முந்திரித் தொழிற்சாலையில் வேலை பார்க்கும்போது, இளம் கிறிஸ்துவ மாணவர் இயக்கத்துக்கு நாடகங்கள் எழுதிக் கொடுத்தேன். எங்கள் பகுதியில் சாதியப் பிரச்னைகளோ, மதரீதியான வன்முறைகளோ கிடையாது. அங்கே இருந்ததெல்லாம் ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடும் படிச்சவன், படிக்காதவன் என்ற பாகுபாடும்தான். மனிதனை மனிதனாக இருக்கும் நிலையிலேயே ஏற்றுக் கொள்வதுதான் மனிதநேயங்கிற அடிப்படைப் பண்பைப் புறந்தள்ளி விட்டு, வேறுபாடு கற்பித்த சமூகம்தான் என்னை இலக்கிய உலகின் வாசலில் கொண்டுவந்து நிறுத்தியது.


கல்வியும் பணமும் இல்லாததால் என் நியாயமான திறமைகள் புறந்தள்ளப்பட்டன. நான்கு சுவர்களுக்குள் கையில் முந்திரியும் இதயத்தில் நிராகரிப்பின் வலியும் சேர்ந்து வார்த்தவைதான் என் இலக்கிய தாகம்.


அதே சமயம், இலக்கியத்தில் சங்க இலக்கியங்கள், தொல்காப்பியம்னுலாம் தேடித் தேடிப் படிச்சவள் இல்லை நான். ஆரம்பத்தில் கிறிஸ்துவ மதம் சம்பந்தப்பட்ட மூன்று கட்டுரைத் தொகுப்புகளை எழுதினேன். என் முதல் நாவலான 'காத்திருந்த கருப்பாயி’யை 1,000 பிரதிகள் அச்சடிச்சு நானே வெளியிட்டேன். அந்த நாவலில் கல் குவாரித் தொழிலாளர்களின் வாழ்க்கையைச் சொல்லியிருந்தேன். அதுக்காக அடகுவெச்ச செயினைக் கூட சமீபத்தில்தான் மீட்டேன். இரண்டாவது நாவலான 'தூப்புக் காரி’யை அனல் பதிப்பகம் வெளியிட்டாங்க. சாமான்ய மனுஷியான எனக்கு இந்த விருது கிடைச்சதால், இப்போ 'தூப்புக்காரி’ நாவலுக் குத் தட்டுப்பாடாகி இருக்கு. என் அம்மா பட்ட பாட்டுக்கு நான் ஏதோ சாதிச்ச திருப்தி கிடைச்சிருக்கு.


ஊரெல்லாம் மழை பெய்யுது. அதன் துளி கடலில் விழுந்தால் அது சமுத்திரம். சாக்கடையில் விழுந்தால்..? எனக்கு எப்பவும் கடலில் விழவே ஆசை!''

thanx - vikatan

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 29.3.2013 ) 7 படங்கள் முன்னோட்ட பார்வை

 

1. கேடி பில்லா கில்லாடி ரங்கா- தனக்கென்ன யதார்த்த பாணியில் கதை சொல்லும் வல்லவர் டைரக்டர் பாண்டிராஜ். அதற்கு அவர் இயக்கிய பசங்க, வம்சம், மெரினா படங்களே சாட்சி. மெரினா படத்திற்கு பிறகு பாண்டிராஜ் அடுத்து இயக்க இருக்கும் படம் "கேடி பில்லா கில்லாடி ரங்கா". இப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவை கதையாக உருவாக இருக்கிறது. படத்தின் நாயகர்களாக விமலும், சிவ கார்த்திகேயனும் நடிக்கின்றனர். இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் முதல்படம் இது. படத்தின் நாயகியாக இப்‌போதைக்கு பிந்து மாதவி மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளார்.  

கேடி பில்லா கில்லாடி ரங்கா" படத்துக்கு "யு" சான்றிதழ் கிடைத்துள்ளது.
பசங்க இயக்குனர் பாண்டியராஜின் அடுத்தப் படைப்பாக உருவாகி இருக்கும் திரைப்படம் "கேடி பில்லா கில்லாடி ரங்கா". இந்தப் படத்தில் விமலுடன் இணைந்து சிவகார்த்திகேயன் முதன் முறையாக நடித்திருக்கிறார். நாயகிகளாக ரெஜினா மற்றும் பிந்து மாதவி ஆகியோர் நடித்திருக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். பாண்டிராஜின் பசங்க புரோடக்சன் நிறுவனமும், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோசன் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து படத்தை தயாரித்திருக்கிறார்கள். 


முழுக்க முழுக்க காமெடியை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் வரும் மார்ச் 29ம் தேதி திரைக்கு வருகிறது. இதனிடையே "கேடி பில்லா கில்லாடி ரங்கா" திரைப்படம் தணிக்கைக் குழு பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது. இதனை பார்த்த தணிக்கைக் குழு படத்துக்கு "யு" சான்றிதழ் வழங்கியுள்ளது. 

ஈரோடு  ராயல், அன்னபூரணி , சீனிவாசா வில் ரிலீஸ் 
 


2. சென்னையில்  ஒரு நாள்  -சில வருடங்களுக்கு முன் சென்னையில் மூளைச்சாவு ஏற்பட்டு மரணம் அடைந்த சிறுவன் இதயந்திரன், தனது உடல் உறுப்புகளை வேறு ஒரு நோயாளிக்கு பொறுத்தியதை செய்திதாள்கள் மூலம் நாம் படித்திருப்போம். இந்த உண்மை செய்தியை மலையாளத்தில் டிராபிக் என்ற பெயரில் சீனிவாசன் இயக்கி இருந்தார். பல விருதுகளை, பாராட்டுகளை பெற்ற இப்படம் இப்போது தமிழுக்கு வர இருக்கிறது. மலையாள படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்த சையத் என்பவர் இப்படத்தை சென்னையில் ஒரு நாள் என்ற பெயரில் இயக்க உள்ளார். மலையாளத்தில் செய்ய முடியாத சில விஷயங்களை தமிழில் செய்துள்ளார். இந்தபடத்தில் பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.


பிரகாஷ்ராஜ் சூப்பர் ஸ்டார் நடிகராகவும், அவர் மனைவியாக ராதிகாவும், பிரசன்னா டாக்டராகவும், சரத்குமார் போலீஸ் அதிகாரியாகவும், சச்சின் பத்திரிகையாளராகவும், இவர்கள் தவிர பலரும் நடித்துள்ளனர். இதில் யாருக்கும் யாரையும் தெரியாது. சென்னையில் ஒருநாள் காலையில் நடக்கும் சம்பவம், அன்று மாலையில் இவர்கள் எல்லோரையும் சேர்த்து வைக்கிறது. இவர்கள் சேர்ந்து செய்யும் செயலை ஒரு திரைக்கதையாய் கொண்டு வந்துள்ளார் இயக்குநர்.


ஈரோடு அபிராமியில் ரிலீஸ்


3. மாமன் மச்சான் - ஹனிபா பிலிம்ஸ் சார்பில் ஏ.முஹம்மது ஹனிபா தயாரிக்கும் படம் மாமன் மச்சான் இதில் நாயகனாக அமுதன், நாயகியாக அபிநிதி நடிக்கின்றனர். அருண், மோனிஷா ஆகியோர் இன்னொரு ஜோடியாக நடிக்கிறார்கள்.

வெள்ளைப்பாண்டி, போண்டாமணி, கோவை ராதிகா, ஜெயராஜ், கவிசேகரன் ஆகியோரும் முக்கிய கேரக்டரில் வருகின்றனர்.
இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி எம்.ஜெயராஜ் இயக்குகிறார்.

ஒரு ஊரையே தன்வசம் வைத்து ஆட்டி படைக்கிறார் ஊர்த்தலைவர் வேற்று சாதியினரையும் காதல்திருமணம் செய்வோரையும் எதிர்க்கிறார். ஆனால் தன் மகன் தெருக்கூத்து நாடக கலைஞர்களின் பெண் ஒருத்தியை காதலித்து மணந்து தன் வீட்டுக்கே அழைத்து வருகிறான். மகன் செயலால் ஊர் தலைவர் வெட்கி தலைகுனிகிறார். பிடிவாதத்தை தளர்த்தி மகனை ஏற்றாரா? என்பது மீதி கதை.

மாமன் விடாக்கொண்டனாகவும் மச்சான் கொடாக்கண்டனாகவும் இருந்தால் எத்தகு விளைவுகள் ஏற்படும் என்பது காமெடி திரைக்கதையில் படமாக்கப்பட்டு உள்ளது.

ஒளிப்பதிவு: விஜய்திருமூலம், இசை: சரத்பிரியதேவ், நிர்மல், பாடல்: சேதுராமலிங்கம். படப்பிடிப்பு திருச்சி சமயபுரம், காஞ்சீபுரம் மற்றும் சென்னை போன்ற இடங்களில் நடந்து முடிந்துள்ளது.
 

4. அழகன் அழகி  -நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகி, விரைவில் வெளிவர இருக்கும் அழகன் அழகி திரைப்படத்திற்காக பவர் ஸ்டார் பங்கேற்கும் "டெர்ரர் லவ் ஆந்தம்" என்னும் நடனக் காட்சியை இடம்பெற்றுள்ளது.

இது குறித்து படத்தின் இயக்குனர் நந்தா பெரியசாமி, யூ டியூப்பில் வெளியாகி உள்ள அந்த நடனக் காட்சியின் சிறுபகுதியை, லட்சக் கணக்கானோர் கண்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

பெருமளவில் பாராட்டுகளும், வாழ்த்துகளும், குறிப்பிடத்தக்க அளவில் எதிர்வினைகளையும் காண நேர்கிறது.

பாராட்டிக் கொண்டிருக்கும், வாழ்த்திக் கொண்டிருக்கும் அனைவருக்கும் என் நன்றியை பதிவு செய்வது முதல் கடைமையாகக் கருதுகிறேன்.

அதேசமயம், விமர்சனங்களுக்கு விளக்கம் கொடுப்பதும் முக்கியமானதென நினைக்கிறேன். அதன் பொருட்டே இந்தக் கடிதம்.

படத்தில், "பவர் ஸ்டார்" பங்கு பெறும் "டெர்ரர் லவ் ஆந்தம்" குறை ரசனை கொண்டதாக அமையவில்லை என்பதை குறிப்பிட விரும்புகிறேன். மேலும், படத்திற்கு அவசியம் என்னும் தெளிவோடு தான். இடம் பெறச் செய்திருக்கிறேன்.

என்ன அவசியம்?.. "தன்னம்பிக்கை உள்ள எந்த ஆணும் அழகன் தான், என்னும் கருத்தை முன் வைக்கும் படம் "அழகன் அழகி".

இக்கருத்தின் அடையாளம் "பவர் ஸ்டார்". இதனை, பலரின் எதிர்மறையான விமர்சனங்களின் ஊடாகவே உணர்ந்து கொள்ள முடியும்.

அவ்விதத்தில், அந்த நடனக்காட்சி குறித்த கடுமையான சில விமர்சனங்கள் "படத்திற்கு இந்த நடனக்காட்சி அவசியம்" என நான் நினைத்ததை மேலும் உறுதிப்படுத்துவதாகவே அமைந்திருக்கின்றன.

ஆமாம் எதையும் கடந்து தன்னம்பிக்கையோடு இருக்கும் ஆண் தான் "அழகன்".

எனவே என் அன்பானவர்களுக்கு நான் முன்வைக்கும் வேண்டுகோள் என்னவெனில், முன்முடிவான விமர்சனக் கருத்துகளைத் தவிர்த்து, விரையில் வெளியாக உள்ள "அழகன் அழகி" திரைப்படத்தைப் பார்த்து, "பவர் ஸ்டார்" பங்கு பெறும் "டெர்ரர் லவ் ஆந்தம்" இடம் பெற்றுள்ள பொருத்தப்பாட்டை முழுமையாக உள்வாங்கிய பின்பு உங்களிடம் இருந்து வரும் கருத்துகளுக்காக திறந்த மனத்தோடு காத்திருக்கிறேன் என்கிறார் இயக்குனர். 
 


5. கீரிப்புள்ள. - நடிகர் யுவன் ,நடிகை திஷா பாண்டே  நடித்து நாளை வெளிவர உள்ள திரைப்படம் கீரிப்புள்ள.


இந்த படத்தை திரைக்கு கொண்டுவரும் முன்னரே  திருட்டு VCD மற்றும் சில இனையதளங்களிலும் வெளியாகியிருக்கிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான பெரோஷ்கான் போலீசில் புகார் செய்து சைபர் கிரைம் மூலம் 16  இனையதளங்களில் தடை செய்து விட்டார்.
அப்படி இருந்தும்  இந்தப்படத்தின் திருட்டு VCD வெளியாகியிருக்கிறது.
இந்த தகவலை கேள்விப்பட்ட பெரோஸ்கான் , யுவன், மற்றும் அவரது ரசிகர்கள் எல்லா  ரோட்டு கடைகள் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள கடைகளை முற்றுகையிட்டு ஆறாயிரம் திருட்டு VCD களை கைப்பற்றி அழித்துவிட்டனர் .
இது பற்றி பெரோஸ்கான் மேலும் கூறும்போது : கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து கஷ்டப்பட்டு படம் எடுக்கும் எங்களது உழைப்பையும், பணத்தையும் கஷ்டபடாமல் திருடுகிறார்களே என்று வேதனையுடன் கூறினார்.
6. பிப்ரவரி 31   - இது ஒரு திகில் படம் மாதிரி தெரியுது , ஸ்டில்ஸ் எல்லாம் கொஞ்சம் கில்மாவா இருக்கு, ஆனா இந்தப்படம் பற்றி விபரங்கள் ஏதும் கூகுள் இல் காணோம் 
 


7. G.I. Joe: Retaliation The G.I. Joes are not only fighting their mortal enemy Cobra; they are forced to contend with threats from within the government that jeopardize their very existence. 
This film is about the GI Joe's getting ambushed and framed. They fight to get their innocence back and save the world in the process.

"G.I. Joe: Retaliation" has a lot of jaw dropping visual effects. I was truly impressed by the acrobatic action sequence in the snowy mountains, and the destruction of a major city was spine chillingly real. However, the abundance of adrenaline pumping action only serves to disguise the paper thin plot. The plot is contrived and not so believable, and there are many scenes which is bad that it is comedic. A good example is the world leader summit scene where the president says "you, you, you, you, you".

"G.I. Joe: Retaliation" is a typical blockbuster, with loads of explosions, destruction of properties and mindless murders. It is not memorable or mind blowing, but it will still do well in the box office.

a
டிஸ்கி - மேலே உள்ள சினிமா செய்திகள் தினமலர், தினமணி , மாலை மலர், மற்றும் முன்னணி சினிமா இணைய இதழ்களில் இருந்து எடுத்தாளப்பட்டவை , என் சொந்தப்பதிவு அல்ல ( நாம என்னைக்கு சொந்தமா பதிவு போட்டிருக்கோம்? ) நன்றி டூ ஆல் 

Thursday, March 28, 2013

மாந்திரீகன் - சினிமா விமர்சனம்

                                             
                                                 காலை 10.30 க்கு படம் னு அவசர அவசர மா போனா... அங்க 10.40 ஆகியும் ஆப்ரேட்டர் வரல... எத்தன மணிக்கு படம் னு விசாரிச்சா... தம்பி இது வரைக்கும் அஞ்சு பேர் தா இருக்காங்க.. 10.50 வரைக்கும் பாத்துட்டு 10 பேர் வந்தா தான் படம் னு சொன்னாங்க. எப்டியோ..காலேஜ் லீவு ங்கறதால.. பக்கத்து காலேஜ் பசங்க ஒரு அஞ்சு பேர் அப்டி இப்டி னு ஒரு 15 பேர் வந்துட்டாங்க. உடனே தியேட்டர் ல குஷி ஆகி ஒரு வழியா படம் போட்டாங்க.


                                                    2012 ல ரிலீஸ் ஆன ஜெயராம் நடிச்ச மலையாளப் பட டப்பிங் னு ரீல் போட்டதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சுது.சரி படத்தோட கதைக்கு வருவோம்... பொண்ணுங்களுக்கோ அல்லது ஆண்களுக்கோ தன் துணையை தேர்ந்தெடுக்கற உரிமை அந்த ஊர் ஜமீன் குடும்பத்துக்கு இல்ல..பெரியவங்களா பாத்து வைக்குற ஒரு பேயையோ இல்ல வில்லனையோ தான் கட்டிக்கிட்டு மாறடிக்கனும். அந்த ஊர் ஜமீன் பையனுக்கும் அதே ஊர் சாதாரண குடும்பத்த சேர்ந்த பொண்ணுக்கும் லவ் ஆகிடுது.



 எப்படியும் நம்மள சேர விடமாட்டங்கன்னு ஓடிப் போக முடிவு பண்றாங்க (உண்மையான காதலாம்......)  இது அந்த பையனோட மூணு அண்ணன்களுக்குத் தெரிஞ்சு அந்த பொண்ணு குடும்பத்த வெட்டி கொன்னுட்டு, பொண்ண .. அதாவது தாமிரபரணி படித்தில் நடித்த பானுவ.. உயிரோட கொளுத்தறாங்க... செத்தா ஒன்னா சாவோம் னு அந்த பையனும் பானுவோட சேர்ந்து ஒண்ணா எரிஞ்சு போயிடறான்.அதுல பானுவோட ஆவி மட்டும் துர் ஆத்மாவா வெறியோட பழி வாங்க அலையுது. கடைசில அது பழி வாங்குச்சா இல்லையா? ஆடியன்ஸ் இந்த படத்துக்கு வந்து எப்பிடி பலி ஆனாங்க என்பதை எந்த அளவுக்கு மொக்கையா சொல்ல முடியுமோ அந்த அளவு மொக்கயா சொல்லி இருக்கற படம் தான்  மாந்திரீகன்.

                                                       நமக்கு நல்லா தெரிஞ்ச  ஜெயராம் தான் பட ஹீரோ.தன் அப்பா மாந்திரீகன் என்பதால் அவர் அடக்கிய பேய்யை உங்களால்தான்  அடக்க முடியும் என மந்திரம் தந்திரம் தெரியாத ஜெயராமை பேயை அடக்க கூட்டி வந்து தன் நண்பர்களுடன் சேர்ந்து அவர் அடிக்கும் லூட்டிகளை முழுமையாக ரசிக்க முடியாவிட்டாலும் ஜெயராம் காட்டும் எக்ஸ்பிரசன்கள் அற்புதம். அவர் நண்பர்களுடன் சேர்ந்து செய்யும் மொக்கையைத்தான் தாங்க முடியவில்லை.



முதன் முறையாக பேயைப் பார்த்து பயப்படும் போதும், தன் காதலிக்காக மனமுருகுவதும் அவர் நடிப்பு அருமை. முகத்தில் ஆங்காங்கே தென்படும் அப்பவித்தனம் அவரது ப்ளஸ்.

                                      அடுத்து பாரட்டப்படவேண்டியவர்கள் ஹீரோயின்கள்  தாமிரபரணி பானு மற்றும் பூனம் பஜ்வா (கச்சேரி ஆரம்பம், தெனாவட்டு போன்ற தமிழ் படங்களில் நடித்தவர்).பேயாக வரும் பானு ஆரம்பத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும் பின்னர் ஏனோ வாய்ப்பு இல்லாமல் போய் விடுகிறது. முகம் நிறைய பவுடரும் மைய்யும் பூசீட்டா அதுக்கு பேர் பேயாம் (அப்படி பாத்தா ஊர்ல இருக்கற பாதி பொண்ணுங்க பேய்தான்....) . ப்ளாஷ் பேக்கில் வந்த வரை அவரது நடிப்பு ஓக்கே... பேயாக வரும்போது முகத்தை வடிவேலு போல் வாய், மூஞ்சியை கண்ட படி கோணித்து.... பயம் காட்டுவதற்கு பதில் சிரிப்பு காட்டுகிறார்.

                                             

                                                   பானு,  ஜெயராமின் காதலியான பூனம் பஜ்வா வின் உள்ளே புகுந்த பின் பூனம் பஜ்வா காட்டும் முக பாவனைகள் மிக அருமை. ஏன் முக பாவனைகளே தேவை இல்லை... அவரது கண்களே போதும்.. குட் .. நல்ல முயற்சி..அவரது அப்பாவித்தனம் கலந்த எக்ஸ்பிரஸன்கள் படத்திற்கு வலிமை. பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. ரியாஸ்கான் வந்த வரை ஓக்கே.. மற்ற கதாப்பாத்திரங்கள் ஏதும் மனதில் ஒட்டவில்லை.


 


மண்ணை கவ்விய ... ச் சீ... மனம் கவர்ந்த வசனங்கள்:

1. பேய் கிட்ட இருந்து என்னய காப்பாத்திக்கதான் நான் உங்க கிட்ட            வந்தேன்

    அதுக்கு ஏண்டா பேய் மாதிரி கத்தற?


2. ஏய்... மாந்திரீகா..... என்ன பாத்து ஏண்டா ஒடற? உன் சக்தி அவ்ளோதானா?
      
       நா உன்ன பாத்து ஓடல... உன்ன இந்த இடத்துக்கு ப்ளான் பண்ணி வர வெச்சேன்...

3. பேய் பேசும் கேவலமான ப்ஞ்ச் : 
           
               நாங்க யாரையும் கொல்ல மாட்டோம்....ஆனா வெறி வந்தா ஒருத்தர கூட உயிரோட விடமாட்டோம்... (இங்க ஆல்ரெடி எல்லார்க்கும் வெறி வந்துருச்சு)

4.ஆஆஆஆ..........ஊஊ........ஏஏஏய்ய்.... விட்ரு.... உங்கள் பழி வாங்காம விட மாட்டேன்.(பானு 6 முறை)

5.உங்கள் பழி வாங்காம விட மாட்டேன்.ஆஆஆஆ..........ஊஊ....... ஏஏஏய்ய்.... விட்ரு.... வேண்டாம்.... ஏஏஈஇ (பூனம் பஜ்வா 5 முறை)


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் :

1. இரண்ட ஹீரோயின்களை புக் பண்ணியது... அதிலும் தாமிரபரணி தாம்பூலம் பானு மற்றும் பூக்காடு  பூனம் பஜ்வாவை புக் செய்தது.

2. ஹீரோவாக ஜெயராமை புக் பண்ணியது.( சம்பளம் தர்லைன்னாலும் கண்டுக்க மாட்டாராம் )

3. பேய் படமாக இருந்தாலும் படத்திற்கு U சான்றிதழ் பெற்று மகளிர் அணியை கவர செய்த யுக்தி .

4. ஆரம்பத்தில் வரும் கொலையை காட்சிப்படுத்தி எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியது.

5.தமிழ் படம் போன்றும், ஹைபட்ஜெட் படம் போன்ற போஸ்டர் டிசைன்.

6. பானுவின் ப்ளாஷ்பேக் காட்சியை 3 நிமிடத்தில் முடித்தது. 

7. மந்திரம் தெரியாத ஜெயராம் பேய் ஓட்டுவதாக சமாளிக்கும் காட்சிகள்.


8.முதல் கொலை கண்ணாடி முன் பேய் கழுத்தை அறுக்கும் போது வில்லனும் தன் கழுத்தை அறுத்துக்கொள்ளும் காட்சி மிரர்ஸ் படத்தில் இருந்து சுடப்பட்டாலும்... அது வெளியில் தெரியாதவாறு சமாளித்தது.

இயக்குநரிடம் சில கேள்விகள்:

1. பல மந்திரங்கள் தெரிந்தவர்களே அடக்க முடியாத துர்மாத்வாவை ஒன்றும் தெரியாத ஜெயராம் பிஸ்கட் சாப்பிடுவ்து போல அடக்குகிறார்.

2. படத்தில் மூன்று வில்லன்கள்... அதாவது அண்ணண்கள்.... இருவர் முதல் காட்சியிலேயே காலி.. மூன்றாமவரையும் அப்பொழுதே போட்டிருந்தால் படம் அப்பவே முடிஞ்சிருக்குமே....

3. வில்லனைத் தவிர படம் பூரா யாரையாவது ஆவி பானு கொன்று கொண்டே இருக்கிறார்.  இதுல லாஜிக் வசனம் “எனக்கு கிடைக்காத காதல் வாழ்க்கை யாருக்கும் கிடைக்க கூடாது” னு.... படு கேவலமா இருக்கு

4.ஜெய்ராம் தன் காதலுக்காக தன் உயிரை பணயம் வைக்கிறார்... ஓக்கே.. அதுக்காக 50 நொடில எல்லா ஓலைச்சுவடியயும் படிச்சு கத்துகிட்டு அடக்கறதுலாம் ஓவர். ( எந்திரன் ரஜினிக்கே 2 நிமிஷம் ஆகும் )

5.க்ளைமேக்ஸ்தான் செம காமெடி.. ஹீரொ ஆத்மாவோட பறந்து பறந்து சண்ட போடுறார்... அத கத்தியால குத்தி இரத்தம் வர வைக்கறார்... ஆத்மாவ தொட முடியுமா? அதுக்கு உருவம் இருக்கா?

6. இசை , ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு  சுமார் ரகம். கிராப்பிக்ஸ் மகா மட்டம்.

படம் ரிலீஸ் ஆகி மூணு நாள் ஆச்சு... இவ்ளோ நாள் ஓடுனதே பெரிய ஆச்சர்யம்.. அத நான் பொய் பாத்தது அத விட ஆச்சர்யம்... வெள்ளிக்கிழமை வரை ஓடுமாம்... ஏன்னா சென்னையில் ஒரு நாள் ரிலீஸ் அங்கதான் ஆகுதாம்... பெருந்துறை முருகன் தியேட்டரில் படம் பார்த்தேன்

 




டிஸ்கி - மேலே உள்ள விமர்சனத்தை உங்களுக்கு வழங்கியவர் என் அக்கா பையன் கார்த்திக் .  எடிட்டிங்க் , டைரக்சன் மேற்பார்வை மட்டும் நான் - சி பி. அட்ரா சக்க தி மு க கட்சி மாதிரி , குடும்ப உறுப்பினர்கள் யார் வேணும்னாலும்  ஆக்ரமிப்பாங்க , தமிழர்கள் அதை சகிச்சிக்கனும் ஹி ஹி , மார்ச் மாச ஒர்க் லோடு , நல்ல படங்களுக்குப்போகவே நேரம் இல்லை , குப்பைப்படத்துக்கு எங்கே போக ?


ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 36 ( டப்பிங்க் படத்துக்கு நோ விமர்சனம் )


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - சுமார்



ரேட்டிங்க் - 2 /5

 


ஈழ நலனுக்கு நாம் செய்ய வேண்டியது என்ன? பிரபல எழுத்தாளர்கள் பேட்டி

ஈழ நலனுக்கு நாம் செய்ய வேண்டியது என்ன?
டி.அருள் எழிலன், ஓவியம்: மருது
இலங்கையைப் பாதுகாக்கும் அமெரிக்கத் தீர்மானத்தை ஒரு சடங்காக நிறைவேற்றிவிட்டது ஐ.நா. ஆனாலும், உலகத் தமிழர்களுக்கு இப்போது உற்சாகம் அளிக்கும் ஒரே விஷயம்... தமிழகம். இப்போது ஈழ மக்களும் நம்பியிருப்பது தமிழர்களின் அழுத்தங்களைத்தான். உலகத்தின் மனசாட்சியை உலுக்கியெடுக்க, வீதி வீதியாகக் களம் இறங்கி இருக்கிறார்கள் தமிழக மாணவர்கள்.


இந்த நிலையில் தமிழ்ச் சமூகத்தின் முக்கியமான ஆளுமைகள் சிலரிடம் ஈழத் தமிழர்களின் நலனுக்காக இனி என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியை முன்வைத்தோம்.


புனிதப்பாண்டியன், ஆசிரியர், தலித் முரசு


''இனப் படுகொலைக்கு ஆளான போஸ்னிய மக்களுக்கு நியாயம் கிடைக்கப் பெரும் பங்காற்றிய பேராசிரியர் பிரான்சிஸ் பாய்ல் மிக முக்கியமான கருத்து ஒன்றைச் சொன்னார். உலக அளவில் இனப் படுகொலை ஒப்பந்தம் ஒன்று உள்ளது. உலகெங்கிலும் சுமார் 140 அரசுகள் அந்தச் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு கையெழுத்திட்டிருக்கின்றன. அதில் கையெழுத்திட்டுள்ள நாடுகள் இனப் படுகொலை எங்காவது நடந்தால், ஹேக் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியும். 



அந்த வகையில் ஹேக் நீதிமன்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நாடு ஒன்று, இலங்கைக்கு எதிராக வழக்கு தொடர்ந்தால், அது ஈழப் பிரச்னையில் முக்கியமானதொரு நகர்வாக இருக்கும். அந்த வழக்கின் அடிப்படையில், ஈழ மக்களுக்கான சில உரிமைகளை நாம் கோர முடியும். இனப் படுகொலைக் குற்றவாளிகளைத் தண்டிக்கும் வகையில் சட்ட விசாரணை நடத்தி தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனக் கோரலாம். காணாமல்போதல், கொலைகள் என்று இனப் பாகுபாடு தொடர்ந்து நீடிக்கும் நிலையில், தற்காலிகத் தடுப்பு ஆணையம் ஒன்றை உருவாக்கும் அதிகாரம் இந்தச் சட்டத்துக்கு உண்டு. கம்போடியா, ருவாண்டா, கொசாவா போன்ற நாடுகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தச் சட்டத்தின் அடிப்படையில் நீதி வழங்கப்பட்டிருக்கிறது!''  



சுப.உதயகுமாரன்- ஒருங்கிணைப்பாளர், அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்



''ஈழப் படுகொலைகள் நடந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இப்போதுதான் அது முழுமையான மக்கள் போராட்டமாக மாறிக்கொண்டிருக்கிறது. ஐ.நா-வில் மனித உரிமை அமர்வுகள் முடிந்துவிட்ட நிலையில், போராட்டங்களும் முடிந்துபோனால் அது பின்னடைவாகிவிடும் என்னும் நிலையில், மாணவர்கள் ஈழ மக்களுக்காகக் கிராமங் களுக்குச் செல்ல வேண்டும். ஈழ மக்களின் விடிவுக்காகச் சர்வதேசச் சமூகத்தை நம்பியிருக்கும் நிலையில், தமிழகத்தில் இருந்து உருவாகும் அழுத்தங்களே இந்திய அரசுக்கு நெருக்கடியை உருவாக்கும். இது ஒரு தொடக்கம்தான். இன்னும் எட்ட வேண்டிய இலக்கை மனதில் வைத்துக்கொண்டு, சாத்வீகமான போராட்டங்களை மாணவர்கள் தொடர வேண்டும்!''


திருமுருகன்- ஒருங்கிணைப்பாளர், மே-17 இயக்கம்


''இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையில் சர்வதேசச் சமாதான ஒப்பந்தம் கையெழுத்தாகி, அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்தபோது, புலிகளின் ஆளுகைக்குள் இருந்த பிரதேசங்களைத் தமிழர்களின் நிர்வாக சபையாக இலங்கை அரசும் சர்வதேசச் சமூகங்களும் ஏற்றுக்கொண்டு தான் பேச்சுவார்த்தைக்கு வந்தன. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் தமிழீழக் குடிமக்கள் அல்லாத பிறர் அனுமதி இன்றி நுழைய முடியாது என்பதைச் சர்வதேசச் சமூகம் ஏற்றுக்கொண்டுஇருந்தது.


 இன்னமும் அந்த அங்கீகாரம் அப்படியேதான் இருக்கிறது. மூன்று தரப்பினர் ஈடுபட்ட அந்தப் பேச்சுவார்த்தையிலிருந்து இலங்கை விலகி, போர் தொடுத்து இனப் படுகொலையை நடத்தி முடித்துவிட்டது. போருக்குப் பின்னர், டப்ளின் தீர்ப்பாயம் 2010 ஜனவரி 15-ல் சொன்னது மிக முக்கியமான விஷயம். பேச்சுவார்த்தை மேஜையில் அமர்ந்திருக்கும் ஒரு குழுவை எப்படிப் பயங்கரவாத இயக்கம் என்று தடை செய்யலாம் என அமெரிக் காவை நோக்கியும், ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கியும் கேள்வி எழுப்பியது டப்ளின் தீர்ப்பாயம். 



ஆக, பயங்கரவாதம் என்ற பொருந்தாத ஒன்றைச் சொல்லி புலிகள் அமைப்பினரை அழித்திருக்கும் நிலையில்... நார்வே, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வடக்குப் பகுதி நிர்வாக சபைக்கான உரிமையைச் சர்வதேசக் கண்காணிப்பின் கீழ் தற்காலிகத் தீர்வாகவும், தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பு என்னும் நிரந்தரத் தீர்வை நோக்கிய தொடக்கமாகவும் நமது போராட்டப் பாதையை அமைத்துக்கொள்ளலாம்!''


சரஸ்வதி- அமைப்பாளர், நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தோழமை மையம்



''குறிப்பிட்ட ஓர் இனத்தைச் சார்ந்த மக்களை ஓர் அரசு கூட்டுக் கொலை செய்யும்போது, அந்த மக்கள் தங்களுக்கான ஓர் அரசை அமைத்துக்கொள்வதற்கான சுதந்திரத்தை, உரிமையைச் சர்வதேசச் சட்டங்கள் வழங்கிஉள்ளன. இந்தச் சட்டத்தின் உதவியோடு இதற்கு முன் பல நாடுகளும் பொது வாக்கெடுப்பு உரிமையின் கீழ் சுதந்திரமான நாடுகளாகவும் ஆகியுள்ளன. ஆனால், தொடர்ச்சியான போராட்டங்களும் அழுத்தங்களும் மட்டுமே இதைச் சாதிக்கும்.


 ஐ.நா-வில் பொது வாக்கெடுப்பு, இனப் படுகொலை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னெ டுப்பது உலகின் வேறெந்த நாடுகளைவிடவும் இந்தியாவுக்கே அதிக உரிமையுள்ளது. ஆக, இந்திய அரசாங்கத்தை அந்தத் திருப்பத்தை நோக்கி நகர்த்துவதே நமது போராட்டங்களின் நோக்கமாக இருக்க வேண்டும்!''



சுரேஷ், பொதுச் செயலாளர், மக்கள் சிவில் உரிமைக் கழகம்


''தமிழகத்தில் இருந்து இலங்கைக்குச் சென்றவர்கள் அங்கு சென்று தனி நாடு கேட்கிறார்கள் என்றுதான் தமிழகத்துக்கு வெளியில் உள்ளவர்கள் நினைக்கிறார்கள். தமிழகத் துக்கு என்று சில பிரச்னைகள் இருக்கின்றன என்று ஆங்கில ஊடகங்களோ, வட இந்திய அரசியல்வாதிகளோ நினைப்ப தில்லை. அவர்களுக்கு நமது நியாயங்கள் புரியும் வகையில் தமிழகம் தொடங்கி டெல்லி வரை அனைத்து மாநிலங்களுக்கும் சென்று ஈழத் தமிழர்களின் நியாயங்களைப் பேச வேண்டும். இன்று தமிழகத்தில் உருவான அழுத்தம் வட இந்தியாவிலும் உருவானால் மட்டுமே, இந்திய அரசு இந்தப் பிரச்னையைக் காது கொடுத்துக் கேட்கும். இப்போது நமது போராட்டம் இந்திய அரசோடு அல்ல, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையோடு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்!''


புகழேந்தி - செயலாளர், தமிழக மக்கள் உரிமைக் கழகம்


''ராஜபக்ஷேவைத் தண்டிக்க வேண்டும் என்பது ஒரு கோரிக்கைதான். ஆனால், இனி மேல் இலங்கையில் தமிழ் மக்கள் சுதந்திரம் பெற்ற குடிமக்களாக இருக்க வேண்டும் என்ற முடிவுதான் அரசியல்ரீதியாக அந்த மக்களைப் பாதுகாக்கும். இனப் படுகொலை முடிந்து இந்த நான்கு ஆண்டுகளில் இப்போதுதான் முதன்முதலாக தமிழக மக்களிடம் ஈழப் பிரச்னை அதன் வீரியத்துடன் கொண்டுசேர்க்கப்பட்டு இருக்கிறது. இதுதான் இந்தத் தருணத்தில் மிகவும் சாதகமான அம்சம். தேர்தல் அரசியல் கட்சிகளைப் புறந்தள்ளிவிட்டு, மாணவர்கள் தலைமையில் திட்டமிட்டு இந்திய அளவிலான அழுத்தம் ஏற்படுத்த வேண்டும். அதே நேரத்தில், புகலிடத் தமிழர்கள் உலகளாவிய அளவில் இதற்கான அழுத்தங்களை ஏற்படுத்தினால், நிச்சயம் அரசியல்ரீதியாக ஈழத் தமிழ் மக்களுக்கு விடிவு கிடைக்கும். ஆனால், அது தொடர்ச்சியான போராட்டங்களாலும் அழுத்தங்களாலும் மட்டுமே கிடைக்கும்!''


மனுஷ்யபுத்திரன் - எழுத்தாளர்


''இனப் படுகொலை என்பது ஒரு கூட்டுக் கொலை என்கிற நிலையில், அந்த நினைவுகளில் இருந்தும் பாதிப்புகளில் இருந்தும் ஒரு சமூகம் மீண்டு வரப் பல ஆண்டுகள் ஆகும். சில தலைமுறைகள் கடந்தும்கூட அந்த நினைவுகள் பாதிப்பை ஏற்படுத்தும். அந்த வகையில், நேரடி யாக ஈழ மக்களும் அதன் பண்பாட்டுத் தொடர் புகளால் தமிழக மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். இவற்றைக் கணக்கில்கொண்டு ஈழத் தமிழர் குழந்தைகள் மற்றும் இளந் தலைமுறையினருக்கு மன நிலையைச் சாந்தப்படுத்தும் பயிற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும். இப்போது எழுச்சியோடு நடைபெறும் மாணவர் போராட்டங்கள் எந்த அரசியல் அமைப்பாலும் கைப்பற்ற முடியாத போராட்டமாக உள்ளதோடு, அரசியல் கட்சிகளுக்கு அழுத்தங்களை ஏற்படுத்தவும் செய்திருக்கிறது. ஆகவே, இப்போது தமிழகத்தில் உடனடித் தேவை ஈழ மக்களுக்கான அரசியல் முன்னெடுப்புகளைச் சீராய்ந்து செய்யும் ஓர் ஒருங்கிணைப்பு!''


ஜோதிமணி - காங்கிரஸ் கட்சி


''சமீபத்தில் தனிப்பட்ட முறையில் இலங்கை சென்று போரால் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்த்து வந்தேன். கடந்த 30 ஆண்டு காலப் போரால் ஈழத் தமிழர்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். போர்த் தாக்குதலில் உயிர் மட்டுமே மிஞ்சியிருக்கும் மக்களை ராணுவத்தின் இறுக்கமான கண்ணிகள் இறுக்கியபடியே இருக்கின்றன. வட இலங்கையின் அனைத்துப் பிரதேசங்களுமே முழுமையான ராணுவக் கட்டுப்பாட்டில் இருப்பதால்,  பொதுமக்கள் ஒரு வார்த்தை நலம் விசாரிக்கக்கூட அஞ்சுகிறார்கள்.


 உடனடியாக யாழ்ப்பாணத்தில் இருந்து ராணுவத்தை வெளி யேற்ற வேண்டும். போரில் சிதிலம் அடைந்த பாடசாலைகளைப் புதுப்பித்து நல்ல கல்வியை அந்தக் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். இழந்த நிலங்களை மீட்டுக்கொடுப்பதும், பொருளாதாரரீதியாக அந்த மக்களை முன்னேற்று வதும், இயல்பு வாழ்வை அங்கு கொண்டுவருவதும் ஈழத்தின் உடனடித் தேவை கள். நிச்சயமாக ஈழப் பிரச்னைக்கு அரசியல் தீர்வு ஒன்றே இறுதித் தீர்வாக இருக்க முடியும். ஆனால், அது  தமிழீழமா, அதிகாரப் பகிர்வா அல்லது பொது வாக்கெடுப்பா... எது என்பதைத் தீர்மானிக்க வேண்டியவர்கள் நாம் அல்ல... ஈழத் தமிழர்கள். ஆனால், அந்தத் தெளிவை அவர்கள் எட்டுவதற்கான புனரமைப்புகளும் இழந்த வாழ்க்கைக்கான நிவாரணங்களையும் அவர்களுக்கு அளிக்கச் செய்ய வேண்டியது நமது கடமையாகும்!''


அ.மார்க்ஸ் - அமைப்பாளர், மனித உரிமைக்கான மக்கள் கழகம்


''ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் நவநீதம்பிள்ளை மனித உரிமை கவுன்சிலுக்கு அளித்த அறிக்கையில், சுதந்திரமான பன்னாட்டு விசாரணை, ராணுவ நீக்கம், அதிகாரப் பகிர்வு முதலியன பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.


ராஜபக்ஷேக்களின் குடும்ப சர்வாதிகாரத்தைக் கண்டித்து, இன்று குமார் டேவிட், திசராணி குணரத்ன முதலிய சிங்கள அறிவு ஜீவிகளும் பேசத் தொடங்கிஉள்ளனர். இந்தப் பின்னணியில் இருந்துதான் நாம் எதிர்கால நடவடிக்கைகளை அமைக்க வேண்டும். போர்க் குற்றங்கள் தொடர்பான சுதந்திரமான பன்னாட்டு விசாரணை, வடக்கு, கிழக்கில் ராணுவ நீக்கம், முறையான அதிகாரப் பகிர்வு ஆகியவற்றை உடனடிக் கோரிக்கைகளாக முன்வைத்துப் போராட்டங்களைத் தொடர்வதும், பொது வாக்கெடுப்பு என்பதை நோக்கி இந்திய அளவிலும், உலக அளவிலும் ஆதரவைத் திரட்டுவதும்தான் ஈழத் தமிழரின் எதிர்காலத்துக்கான சீரிய செயற்பாடுகளாக அமையும்!''

 நன்றி - விகடன்

தலைவா துப்பாக்கியை தாண்டிடுமா? - இயக்குநர் விஜய் பேட்டி

http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQDLezW28cuvlB5MXx6q9XysBBYAdhBxZU3iI8cfxUDLJXe43-2 
 
"குட் பேபி அமலா பால்!”
 
 
எம். குணா
 
முதன்முதலா காலேஜ் கட் அடிச்சுட்டுப் பார்த்த படம் 'காதலுக்கு மரியாதை’. என் பேரும் விஜய்ங்கிறதால அப்ப அந்தப் படத்துல விஜய் போட்டிருந்த மாதிரியே டி-ஷர்ட், கூலர்ஸ் போட்டுக்கிட்டு அலம்பல் பண்ணுவேன். இப்போ அதே விஜயை வெச்சு, 'தலைவா’ படம் இயக்குறேன். காலம் ரொம்ப வேகமா ஓடுது!'' - சிலிர்ப்பும் சிரிப்புமாகப் பேசத் தொடங்கினார் விஜய்... இயக்குநர் விஜய்!
 
 
 
''இயக்குநர் விஜய், நடிகர் விஜயை எப்படிப் பிடிச்சார்?''  


''தனிப்பட்ட முறையில் அவர் எனக்குப் பழக்கம் இல்லை. முன்னாடி 'மதராசபட்டினம்’ பார்த்துட்டு வாழ்த்தினப்போ, 'நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம்’னு சொன்னார். இப்போ சமீபத்தில் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் 'விஜய் கால்ஷீட் என்கிட்ட இருக்கு. நீங்க போய் அவருக்குக் கதை சொல்லுங்க’னு சொன்னார்.


அவரைப் போய்ப் பார்த்தேன். 'தலைவன்கிற பட்டத்தை நாம தேடிப் போகக் கூடாது. அது தானா நம்மளைத் தேடி வரணும்’னு ஒன் லைன் சொல்லிட்டுக் கதை சொன்னேன். கால் மணி நேரத்துல சிரிச்சுட்டே கைகொடுத்து கன்ஃபர்ம் செய்தார்!''




''நீங்க இயக்கின 'கிரீடம்’, 'மதராசபட்டினம்’, 'தெய்வத்திருமகள்’ எல்லாமே சோகமான முடிவுகொண்ட க்ளாஸிக் வரிசைப் படங்கள். ஆனா, 'துப்பாக்கி’ ஹிட்டுக்கு அப்புறம் அதைவிட அதிரடியா எதிர்பார்ப் பாங்களே விஜய் ரசிகர்கள்?!''   


''நீங்க குறிப்பிடும் எல்லாப் படங்களிலும் க்ளைமாக்ஸ் சோகமா இருக்கும். ஆனா, படம் முழுக்க ட்ராவல் செய்யும் கேரக்டரின் தேடலுக்கு அதுதான் தேவை. 'தலைவா’ சீனுக்கு சீன் ஆர்.டி.எக்ஸ். பட்டாசு வெடிக்கும் படம். இன்னைக்கு 'தலைவர்’னு அடையாளப் படுத்தப்படுற எல்லாரும் அந்த இடத்துக்கு எப்படி வந்தாங்கனு ஒரு ஃப்ளாஷ்பேக் இருக்கும். அப்படியொரு ஃப்ளாஷ்பேக்தான் படம். 'துப்பாக்கி’ சக்சஸுக்குப் பிறகான எதிர்பார்ப்பு நிச்சயம் பூர்த்தியாகும் அளவுக்குத் திரைக்கதை பிடிச்சிருக்கோம். ஸ்டைல், டான்ஸ் போக சின்னச் சின்ன நுணுக்கமான எக்ஸ்பிரஷன்களுக்குக்கூட ரொம்ப மெனக்கெட்டு நடிச்சிருக்கார் விஜய்!''



''சத்யராஜுக்குப் படத்தில் என்ன ரோல்?'' 


''மிக முக்கியமான ரோல். அது விஜயின் காட்ஃபாதரா இல்லை வில்லானாங்கிறது சஸ்பென்ஸ். நான் டவுசர் போட்ட காலத்துல இருந்து இப்போ வரை அவரோட உயரத்தையும் நடிப்பையும் அண்ணாந்து பார்க்குறவன். ஆனா, அவர்கூட வேலை பார்க்கும்போது சினிமா மீது அவர் வெச்சிருக்கிற டெடிகேஷன் பார்த்து ஆச்சர்யமா இருக்கு. மும்பையில் 'தலைவா’ ஷூட்டிங் நடந்துட்டு இருந்தப்போ, பால் தாக்கரே உடம்பு சரியில்லாம மருத்துவமனையில் இருந்தார்.


 நான் ஸ்பாட்ல இல்லாதப்போ, சிவசேனா கட்சிக்காரங்க வந்து சத்யராஜ் சார்கிட்ட படப்பிடிப்பை நிறுத்தச் சொல்லியிருக்காங்க. 'நோ... நோ... டைரக்டர் வந்து பேக்கப் சொல்லாம நான் இடத்தைவிட்டு நகர மாட்டேன்’னு சொல்லி அவங்களை தில்லா எதிர்த்திருக்கார். அந்த அர்ப்பணிப்பும் துணிச்சலும் எங்களைப் போன்ற ஜூனியர்கள் எல்லாரும் கத்துக்க வேண்டிய பாடம்!''


'' 'என்கிட்ட நூறு பேருக்கு மேல உதவி இயக்குநர்களா வேலை பார்த்திருந்தாலும் விஜயை என் அசிஸ்டென்ட்னு சொல்லிக்கிறதில் பெருமைப்படுறேன்’னு இயக்குநர் ப்ரியதர்ஷன் சொல்லியிருக்காரே?'' 



''ப்ரியதர்ஷன் சார் என் கலைக் கடவுள். என்னைப் பத்தி அவர் அப்படிச் சொல்றதுக்கு நான் ரொம்பக் கொடுத்துவெச்சிருக்கணும். இன்னிக்கு நான் இருக்கும் இடத்துக்குக் காரணம் அவர் கத்துக்கொடுத்த பாடம்தான். எனக்கு ஒரு ஆசை இருக்கு. இதுவரை ப்ரியதர்ஷன் சார் 92 படம் இயக்கியிருக்கார். அவரோட 100-வது படத்துல மறுபடி நான் அவர்கிட்ட அசிஸ்டென்ட்டா வேலை பார்க்கணும்!''


''உங்களுக்கும் அமலா பாலுக்கும் நத்திங் நத்திங்னு சொல்றீங்க. ஆனா, 'தலைவா’வில் அவர் எப்படி ஹீரோயின் ஆனார்?'' 


''இளைமைத் துடிப்பும் பெர்ஃபார்மென்ஸ் நடிப்பும் காட்ட வேண்டிய ஹீரோயின் கதைக்குத் தேவை. சோனம் கபூர், தீபிகா படுகோன் எல்லாம் கேட்டுப் பார்த்தோம். உடனடியா கால்ஷீட் இல்லைனு சொன்னாங்க. இடையில ஒரு நாள் விஜய் சார், 'மோகன்லால், அமலா பால் நடிச்ச 'ரன் பேபி ரன்’ படம் பார்த்தேன். அமலா நடிப்பு நல்லா இருந்துச்சு. நம்ம படத்துக்குப் பொருத்தமா இருப்பாங்கனு தோணுது’னு சொன்னார். 'நானும் படம் பார்த்தேன். உங்களுக்கு ஓ.கே-ன்னா எனக்கும் ஓ.கே’னு சொன்னேன். இப்படித்தான் அமலா பால் புராஜெக்ட்டுக்குள் வந்தாங்க. அந்த நிமிஷத்துல இருந்து இந்தக் கேள்வியையும் நான் எதிர்பார்த்தேன்!''


''சரி... உங்க கல்யாணம் எப்போ? காதல் கல்யாணமா... நிச்சயிக்கப்பட்ட திருமணமா?'' 


''நான், நீரவ் ஷா, ஜி.வி.பிரகாஷ் மூணு பேரும் சேர்ந்து ஒரு ரூபாகூடச் சம்பளம் வாங்காம ஒரு படம் எடுக்கணும்னு ஆசைப்படுறோம். காரைக்குடிதான் படத்தோட மொத்த லொகேஷனும். அந்தப் படம் தமிழகக் கலாசாரத்தின் பிரதிபலிப்பா இருக்கணும். அப்புறம்தான் கல்யாணம் பத்தின நினைப்பே. அதுவும் அம்மா, அப்பா பார்த்து செலெக்ட் செய்ற பொண்ணுதான். போதுமா?''


ஒருவேளை... அப்பா-அம்மாவே அமலா பாலை செலெக்ட் பண்ணுவாங்களோ?! 

நன்றி - விகடன் 
 
 
 
 

நீங்கள் செலவாளியா,சேமிப்பவரா ?ஷோக்குப் பேர்வழியா?

நீங்கள் செலவாளியா,சேமிப்பவரா ?
படங்கள்: ஸ்டீவ் சு.இராட்ரிக்ஸ்,தே.தீட்ஷித், எஸ்.கேசவசுதன்.

இந்த இரு குணாதிசயம் கொண்டவர்கள் பணம் செலவு செய்யும் விதத்தை மாற்றிக்கொண்டுதான் ஆகவேண்டும். வாழ்க்கையில் அத்தியாவசியமான தேவைகளை அங்கீகரித்து நிறைவேற்றுவதன் மூலம் நீங்களும் உங்களைச் சுற்றி இருப்பவர்களும் மகிழ்ச்சி அடைவீர்கள். பணத்தைச் செலவு செய்யாமலே வைத்திருந்து எந்த பயனும் இல்லை. எனவே, நல்ல வருமானம் தரும் திட்டங்களில் முதலீடு செய்யுங்கள். வங்கி ஆர்.டி., அஞ்சலகச் சேமிப்பு பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் போன்ற திட்டங்களில் பணத்தைச் சேமிப்பதன் மூலம் 8 சதவிகிதத்துக்கு மேல் வருமானம் கிடைக்கும்.

சேமிப்பவர் :  நீங்கள் இன்றைய உலக நிலையைப் புரிந்துகொண்டு, வாழ்க்கையைக் கொஞ்சம் அனுபவிக்கிற அதேநேரத்தில், நாளைக்கும் கொஞ்சம் சேர்த்து வைக்கவேண்டும் என்று நினைப்பவர். இந்த கேட்டகிரியில் இருக்கும் நீங்கள் ஏற்கெனவே வங்கி எஃப்.டி., அஞ்சலகச் சேமிப்பு போன்றவற்றில் ஒரு தொகையைச் சேமித்து வந்தாலும், ஓரளவுக்கு ரிஸ்க் உள்ள மியூச்சுவல் ஃபண்டுகளிலும் ஒரு குறிப்பிட்ட தொகையை எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்யத் தொடங்கலாம்.


தாராள மனமுடையவர் : சேமிக்கும் நற்குணங்கள் உங்களிடம் இருந்தாலும், சற்று இளகிய மனமுடையவர் நீங்கள். உங்களால் எப்போதும் மறுத்துச் சொல்ல முடியாது. நீங்கள் கொஞ்சம் முயற்சித்தால், சேமிக்கும் கேட்டகிரியில் வந்துவிடலாம். அப்படி வந்தபின் சேமிப்பவர் கேட்டகிரியினருக்குச் சொன்னதுபோல் முதலீடு செய்யலாம்.


செலவாளி :  25 வயதுக்குள் இருக்கும் திருமணமாகாத பலர் இந்த கேட்டகிரியில் இருப்பார்கள். அளவுக்கதிகமான வருமானம் உங்களை இப்படி மாற்றி இருக்கும். திட்டமிட்டு பணத்தைச் செலவழிக்கும் எண்ணம் உங்களிடம் இருக்காது. அடிக்கடி செல்போனை மாற்றுவீர்கள். பிராண்டட் பொருட்களையே வாங்குவீர்கள். சம்பளம் வந்ததும் சேமித்துவிடுவது என்கிற பழக்கத்தை நீங்கள் கொண்டுவந்தால்தான் தப்புவீர்கள். ஆர்.டி., அஞ்சலகச் சேமிப்பு., பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட், மியூச்சுவல் ஃபண்ட் என எதில் வேண்டுமானாலும் நீங்கள் சேர்ந்து சேமித்தே ஆகவேண்டும்.


ஷோக்குப் பேர்வழி : கழுத்தில் மைனர் செயின், புதிதாக வாங்கிய டூவீலர், பிராண்டட் ஜீன்ஸ், சட்டை, கறுப்புக் கண்ணாடி, செல்போன் என மற்றவர்களை அசத்தவேண்டும் என்பதற்காகவே அலைபவர் நீங்கள். இதற்காக ஆகும் செலவுகளைப் பற்றி நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள். இதேபோக்கு தொடர்ந்தால் எதிர்காலத்தில் பல சிக்கல்களை சந்திப்பீர்கள்.  இப்போதே செலவைக் குறைத்து, சேமிப்பில் கவனம் செலுத்துவது கட்டாயம்.


ஊதாரி : நீங்கள்தான் ஆபத்தின் விளிம்பில் இருப்பவர்கள். உங்கள் குடும்பத்தினர் எல்லோரையும் வருத்தப்பட வைப்பீர்கள். வரவைப் பற்றி கொஞ்சம்கூட கவலைப்படாமல் செலவு செய்வீர்கள். தாராளமாக நன்கொடை தருவீர்கள். பெரிய பார்ட்டி/ விருந்துகளை அடிக்கடி ஏற்பாடு செய்வீர்கள். நீங்கள் உங்கள் பழக்கத்தை மாற்றிக்கொள்ளாவிட்டால், கடுமையான விளைவுகளைச் சந்திக்கவேண்டியிருக்கும்.


செலவாளி, ஷோக்குப் பேர்வழி, ஊதாரி - இந்த மூன்று கேட்டகிரியில் வருபவர்களும் சம்பளம் வந்தவுடன் அதில் ஒருபகுதியை கையில் வாங்காமலே அப்படியே சேமிப்புக்கும் முதலீட்டுக்கும் கொண்டு சென்றுவிடுவது கட்டாயம். ஏற்கெனவே சொல்லப்பட்டுள்ள வழிகளில் இவர்கள் பணத்தைச் சேமிப்பது அவசியம்.


இனியாவது சேமிப்பு மற்றும் முதலீட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ளுங்கள். உன்னதமான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளுங்கள்.

thanx - vikatan

Wednesday, March 27, 2013

ஸ்டூடன்ட் பவர்! - கிடுகிடுக்கும் தமிழகம்


ஸ்டூடன்ட் பவர்!

கிடுகிடுக்கும் தமிழகம்

டி.எல்.சஞ்சீவிகுமார், படங்கள்: உசேன், ஜெ.வேங்கடராஜ்

தமிழகத்தின் வீதிகள் போர்க்கோலம் பூண்டிருக்கின்றன. இரண்டு தலைமுறைகளுக்கு முன் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் எரிந்த நெருப்பு, ஒரு தலைமுறைக்கு முன்பு 'கறுப்பு ஜூலை’யில் பற்றிய தீ, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு முத்துக்குமார் தியாகத்தில் சுடர்விட்ட கனல்...  இப்போது பெருந்தீயாக வெடித்திருக்கிறது. 'இனப்படுகொலை செய்த ராஜபக்ஷேவைத் தண்டிக்க வேண்டும்!’ என ஒற்றைக் குரலில் பெரும் சக்தியாகத் திரண்டு நிற்கிறார்கள் தமிழக மாணவர்கள். வழக்கமாக மாணவர்களைப் பயன்படுத்திக்கொள்ளும் அரசியல் கட்சிகளின் சூழ்ச்சி இந்த முறை எடுபடவில்லை. தங்களுக்குத் தாங்களே ஒரு கூட்டமைப்பை உருவாக்கிக்கொண்டு மேலும் உத்வேகத்துடன் போராடுகிறார்கள் மாணவர்கள்.
கடந்த 8-ம் தேதி, சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் எட்டுப் பேர் அமைதியாக உண்ணாவிரதம் இருந்ததுதான் இதற்கான முதல் பொறி. மூன்று நாளாக உண்ணாவிரதம் இருந்தவர்களை அரசு மருத்துவமனையில் 'அடைத்து’ உருட்டி மிரட்டிய அரசு இயந்திரங்கள், இன்று அகதிகள் முகாம் தொடங்கி ஆட்டோ ஓட்டுநர்கள் வரை வெகுண்டு எழுந்த மக்கள் சக்திக்கு முன்பாகச் செய்வது அறியாது திகைத்து நிற்கின்றன. போராட்டத்தை முடக்குவதற்காக தமிழக அரசும் புதுவை அரசும் கல்லூரிகளுக்குக் காலவரையற்ற விடுமுறை அறிவித்தன.


 ஆனால், அதன் பிறகுதான் போராட்டம் உக்கிரமானது. அதுவரை சட்டம் மற்றும் கலைக் கல்லூரிகள் மட்டுமே போராட்டங்களில் ஈடுபட்ட நிலையில், மருத்துவக் கல்லூரி மாணவர்களும், பொறியியல் படிக்கும் மாணவர்களும், மகளிர் கல்லூரி மாணவிகளும் திரண்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், பேரணி, சாலை மறியல், முற்றுகை என தமிழ்நாடு தணலாகச் சுடுகிறது. போராட்டங்களை ஒருங்கிணைக்கும் விதமாக 'தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்ட மைப்பு’ என்ற பெயரில் மாநிலம் தழுவிய கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள் மாணவர்கள். இணையதளங்களில் இதற்கென சிறப்புப் பக்கங்கள், குழுக்கள் உருவாக்கப்பட்டு, ஒரு துளி ஆதரவும் சிந்தாமல் சிதறாமல் சேகரிக்கப்படுகின்றன!


கல்லூரிகளைத் தாண்டி போராட்டம் பள்ளிக்கூடங்கள் அளவிலும் விரிவடைந்தது யாருமே எதிர்பார்க்காத ஆச்சர்யம். கோவை ஒண்டிபுதூர் அரசுப் பள்ளி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து சாலை மறியலில் ஈடு பட்டார்கள். 38 பேரைக் கைது செய்தது போலீஸ். தொடர்ந்து கோவை வேளாண்மைக் கல்லூரி, பாரதியார் பல்கலைக்கழகம், சென்னை ஐ.ஐ.டி., சென்னை அண்ணா பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் என மொத்த மாணவர்களும் வரிசை யாகக் களம் இறங்கினார்கள்.


இவ்வளவு போராட்டங்கள் நடந்தும் எங்குமே துளியும் வன்முறை இல்லை. பல இடங்களில் மாணவர்களின் பெற்றோர்களும் உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்து தங்கள் பிள்ளைகளுக்கு வாழ்த்து தெரிவித்தது ஆரோக்கியமான போக்கு!

மாணவர்களால் துவங்கிய எழுச்சி என்றபோதிலும்,  இது அவர்களுடன் நின்றுவிடவில்லை. திருவண்ணாமலை, பவானி, புதுக்கோட்டை ஆகிய ஊர்களில் அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்கள் சுமார் 100 பேர் தங்கள் குழந்தைகளுடன் உண்ணாவிரதம் தொடங்கினார்கள். சென்னை மயிலாப்பூரில் கடந்த ஞாயிறு அன்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு போலீஸாரிடம் தடியடிபட்டார்கள்.

 தேனி மாவட்டம் கம்பத்தில் திராட்சைத் தோட்டத் தொழிலாளர்கள் பேரணி நடத்தி, உண்ணாவிரதம் இருந்தார்கள். நாமக்கல்லில் தமிழ்நாடு லாரி சம்மேளன ஊழியர்கள் தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மியான்மரைச் சேர்ந்த மூன்று தமிழர்கள் சென்னையிலும், காஞ்சிபுரம் மாவட்டம், ஆனூர் கிராம பொதுமக்கள் சுமார் 1,000 பேரும், அரியலூர் அருகே செந்துறையில் ஆட்டோ ஓட்டுநர்களும் உண்ணாவிரதம் தொடங்கினார்கள். 'மே 17’ இயக்கத்தினர் மெரினாவில் கூட்டிய மக்கள் கூட்டத்துக்கு யாரும் அழைக்காமலேயே 'சுயேச்சை’யாக வந்தார் பீகாரின் சுயேச்சை எம்.எல்.ஏ-வான சோம்பிரகாஷ்.

 மும்பை வரலாற்றில் முதல் முறையாக ஈழத் தமிழருக்காக மாணவர்கள் போராட்டக் களத்தில் இறங்கினார்கள். டெல்லி பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவர் கூட்டமைப்பு வீதிக்கு வந்தது. இதில் வட இந்திய மாணவர்களும் அடக்கம். அதே நாளில் சென்னையில் திரண்ட மாணவர்கள் இலங்கைத் தூதரகம், விமான நிலையத்தை முற்றுகையிட்டார்கள். ஆளுநர் மாளிகையை நோக்கி அமைதி ஊர்வலம் சென்ற மாணவர்களைத் தடுத்து நிறுத்தி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அடைத்தது போலீஸ்.

போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுப்பெற்றன. மாநில அரசால் இதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஏற்கெனவே இலங்கை விளையாட்டு வீரர்களைத் திருப்பி அனுப்பிய நடவடிக்கை, சட்டசபைத் தீர்மானம் போன்றவற்றால் தனக்கு உருவாகியிருக்கும் 'இமேஜ்’ கெட்டுவிடக் கூடாது எனக் கருதும் ஜெயலலிதா, இந்தப் போராட்டங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பை மத்திய அரசை நோக்கித் தள்ளிவிடுகிறார். 'இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு மௌனமாக இருப்பது அதிருப்தி அளிக்கிறது’ என்று பிரதமருக்குக் கடிதம் எழுதுகிறார். 


ஆனால், மாநில அரசின் உளவுத் துறையோ, உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களை 'அரசு வேலை கிடைக்காது. பாஸ்போர்ட் கிடைக்காது’ எனத் தந்திரமாக அச்சுறுத்துகிறது. ஆனால், இது தனது கை மீறுகிறது என ஜெயலலிதா கருதும்போது போலீஸ் வெறியாட்டம் நிகழக்கூடும். அதை எதிர்கொள்ள மாணவர்கள் ஒருங்கிணைக்கப்பட்ட சக்தியாகத் திரள வேண்டியது அவசியம்.


இந்த விவகாரத்தில் கவனிக்கத்தக்க விஷயம், அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் தீர்மானத்தில் திருத்தம் கேட்கின்றன. ஆனால், மாணவர்களின் பெரும் பகுதியினர் தீர்மானமே கபட நாடகம் என்கிறார்கள். ''ஆடு நனைவதாக ஓநாய் கண்ணீர் விடும் கதைதான் அமெரிக்காவின் தீர்மானம். 2009-ம் ஆண்டு மே மாதத்தில் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின்போது அங்கு பல்லாயிரம் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பது அமெரிக்காவுக்குத் தெரியாதா?


 அப்போது வேடிக்கை பார்த்த அமெரிக்கா, இப்போது ஏதோ நியாயவான்போலத் தீர்மானம் கொண்டுவருகிறது. எனில், இலங்கையை வைத்து தெற்காசியாவில் ஏதோ காரியம் சாதித்துக் கொள்ள அமெரிக்கா முயல்கிறது. அதற்காக இலங்கையைத் தன்னிடம் பணியவைக்க இதை ஒரு நல்வாய்ப்பாகப் பயன்படுத்துகிறது. அதையும் தாண்டி, ஈராக், பாலஸ்தீன், ஆப்கானிஸ்தான் இப்போது சிரியா என உலகம் முழுவதும் அமெரிக்கா நிகழ்த்திவரும் இனப்படுகொலைகளும், போர்க் குற்றங்களும் நமக்குத் தெரியும்.

 ஆகவே, இலங்கையைத் தண்டிக்கக் கோரும் அமெரிக்காவின் தீர்மானத்தை நாங்கள் ஏற்கவில்லை. எங்கள் கோரிக்கை எல்லாம் தனி ஈழம் அமைப்பதற்கு பொது வாக்கெடுப்பு ஒன்றை நடத்த வேண்டும். அங்கு நடந்தவை வெறும் போர்க் குற்றங்கள் அல்ல. அவை முன்கூட்டியே திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலை. இந்த அடிப்படையில் ராஜபக்ஷேவை இனப்படுகொலையாளன் என அறிவித்து தண்டனை வழங்க வேண்டும். ராஜபக்ஷே மட்டுமல்ல... அந்த இன அழிப்புப் போரில் பங்கேற்ற இலங்கை அதிகார வர்க்கம் அனைத்தும் முழுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்!'' என்கிறார்கள்.  

இந்தக் கோரிக்கைகளை மாணவர்கள் வென்றெடுப்பார்களா, இல்லையா என்பது ஒரு பக்கம் இருக்க... இந்த மாணவர் எழுச்சியை முன்னணி அரசியல் கட்சிகள் விரும்பவில்லை என்பதே வெளிப்படையான உண்மை.

ஏனெனில், இந்தப் போராட்டங்கள் அவர்களின் நிகழ்ச்சிநிரலில் நடைபெறவில்லை. இந்தப் போராட்டங்களால் அவர்களின் கட்சிகளுக்கு எந்த வகையிலும் லாபம் இல்லை. அதைவிட வும், மாணவர்கள் இப்படி அரசியல் ரீதியில் விழிப்படைவது அவர்களின் லாப அரசியலுக்கு ஆப்புவைக்கும். ஆகவே, மாணவர்கள் முதலில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது, தங்கள் போராட்டத்தின் பலனை அறுவடை செய்வதற்காக நாக்கில் எச்சில் ஊற சுற்றிவரும் ஓட்டுக் கட்சிகளிடம்தான்!

thanx - vikatan

ராஜபக்சேவை அமெரிக்கா, இந்தியா ஆதரிக்கும் மர்மம் - பழ நெடுமாறன் ஜூ வி கட்டுரை

கண்டனமா? கண்துடைப்பா?
'தமிழர் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள ராணுவத்​தினரைத் திரும்பப் பெற வேண்டும்


; இலங்கை நடத்திய போர்க் குற்றங்கள், மனித உரிமைகள் மீறல்கள் குறித்து நம்பகமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்’ - இப்படி முக்கியமான கோரிக்கைகளை ஐ.நா. மனித உரிமைகள் குழுவின் ஆணையர் நவநீதம் பிள்ளை, ஜெனிவாவில் கூடிய கூட்டத்தில் 38 பக்கங்கள் கொண்ட அறிக்கையாக முன்​வைத்தார். இந்தச் செய்தி வெளியானபோது உலகெங்கும் உள்ள தமிழர்களின் உள்ளங்களில் நம்பிக்கை ஒளி படர்ந்தது.



அந்த அறிக்கையில் வேறு முக்கியமான அம்சங்கள் என்ன இருந்தது தெரியுமா?


இலங்கையில் போர் நடைபெற்ற வேளையில் வயதானவர்களும் சிறுமிகளுமாக ஆயிரக்கணக்கான​வர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க எந்த நடவடிக்கையையும் இலங்கை மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில் போருக்குப் பிறகும் ஆள் கடத்தல் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடக்கின்றன.



தமிழர்கள் வசிக்கும் பகுதியில் சிங்கள ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சிவில் நிர்வாகத்திலும் ஆதிக்கம் செலுத்தி வருகி​றார்கள். இதன் விளைவாக அங்கு வாழும் தமிழ்ப் பெண்களுக்கு பாலியல் வன்முறை அச்சம் நிலவுகிறது.


போருக்குப் பின் செய்ய வேண்டிய நிவாரணப் பணிகள், மீள் குடியமர்த்தல் போன்​றவை நிறைவேற்றப்படவில்லை. இலங்கை அரசின் தேசிய செயல்திட்டத்திலும் அவை புறக்​கணிக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் போர் நினைவுச் சின்னங்கள் அழிக்கப்பட்டுள்ளன.



மனித உரிமை மீறல்கள் குறித்து விசா​ரணை நடத்துவதாகக் கூறிய இலங்கை அரசு முழுமையான விசாரணை எதுவும் நடத்தவில்லை. இடம்பெயர்ந்த மக்களைக் குடியமர்த்தும் பணியையும் செவ்வனே செய்ய​வில்லை. 2006-ம் ஆண்டு அதிபர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை இன்னும் வெளியிடவில்லை. சிறுபான்மையினரான தமிழர்​களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க வேண்டும்.


தமிழர்களின் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள ராணு​வத்தினரைத் திரும்பப் பெறவேண்டும். இலங்கை நடத்திய போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்​கள் குறித்து நம்பகத்தன்மை வாய்ந்த சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்கிறது அந்த அறிக்கை.


ஆணையர் நவநீதம் பிள்ளையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள ஆலோசனைகளை உள்ளடக்கிய தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்வதற்கு அமெரிக்கா தவறிவிட்டது.


அமெரிக்காவின் வரைவுத் தீர்மானத்தில் ஆணையரால் குறிப்பிடப்பட்ட முக்கியமான ஆலோசனைகள் இடம்பெறவில்லை. நீர்த்துப்போன தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவந்தது. இதற்கு இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்பு இருந்தது.


அமெரிக்கத் தீர்மானத்தின் முக்கிய அம்சங்கள் இதுதான்... 'இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் உள்ள ராணுவத்தினரை உடனே அகற்ற வேண்டும். போரின்போது தமிழர்கள் பலர் காணாமல்போனது கவலை அளிக்கிறது. இலங்கை அரசு நியமித்த நல்லிணக்கக் குழுவின் பரிந்துரைகளை முழுமை​யாக நிறைவேற்றும் திட்டம் இலங்​கைக்கு இல்லை. இலங்கைத் தமிழர்களுக்கு வாழ்வாதாரம், நீதி, நல்லிணக்கம் முழுமையாகச் செய்யப்படவில்லை. போர்க் குற்றம் தொடர்பாக இலங்கை அரசே விசாரணை நடத்த வேண்டும்.’ - இவைதான் அமெரிக்கத் தீர்மானத்தின் சாராம்சம்.


உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் சார்பில் இரண்டு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஈழத் தமிழர்கள் இனப்படுகொலைக்கு ஆளாகி வருவது குறித்தும் போர்க் குற்றங்கள் குறித்தும் சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்ற கோரிக்கைகள் முக்கியமாக வலியுறுத்தப்பட்டன. ஆனால் இந்த இரண்டு கோரிக்கைகளையும் அமெரிக்கத் தீர்மானம் புறந்தள்ளிவிட்டதுடன், அதற்கு எதிராகவும் அமைந்துவிட்டது.


அமெரிக்கத் தீர்மானம் போர்க் குற்றங்கள் குறித்த சுதந்திரமான சர்வதேச நீதி விசாரணை என்பதை ஏற்கவில்லை. மாறாக இலங்கையே அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்கிறது.


இலங்கையின் வடக்கு மாநிலத்தில் சீர்திருத்த நடவடிக்கைகளும் மனித உரிமைகளும் நிலை​நிறுத்தப்பட வேண்டும் என அமெரிக்கத் தீர்மானம் வலியுறுத்துகிறதே தவிர, கிழக்கு மாநிலத்தைப் பற்றி எதுவும் கூறவில்லை. இதன் மூலம் கிழக்கு மாநிலம் சிங்களவர்களுக்குச் சொந்தமானது என மறைமுகமாக அமெரிக்கத் தீர்மானம் கூறுகிறது.


வடக்கு மாநிலத்தில் மாகாண சபைக்கான தேர்தல் சுயாதீனமாக நடத்தப்பட வேண்டும் என அமெரிக்கத் தீர்மானம் கூறுவது கொடுமையான வேடிக்கை. ஏனெனில் வடக்கு மாநிலத்தில் வாழ்ந்த 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் சொந்த வீடுகளில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு இன்னமும் அகதிகளாக அலைந்து திரிகிறார்கள். தமிழர் பகுதிகளில் வேகமாகவும் தங்குதடையில்லாமலும் சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறுகின்றன. வடக்குப் பகுதி ராணுவமயமாகிவிட்டது. இந்தச் சூழ்நிலையில் சுதந்திரமான தேர்தல் எப்படிச் சாத்தியமாகும்? ஒரு போலியான தேர்தலை நடத்துவதற்கு சிங்கள அரசுக்கு அமெரிக்கத் தீர்மானம் உதவுகிறது.



வெற்று வாக்குறுதிகள் நிறைந்த இந்தத் தீர்மானத்​தில் கூறப்பட்டவற்றை நிறைவேற்றுவதற்கு சிங்கள அரசுக்கு ஓர் ஆண்டு கால அவகாசத்தை அமெரிக்கத் தீர்மானம் அளித்திருப்பது அவல நகைச்சுவையின் உச்சக்கட்டம். கடந்த ஆண்டு நடந்த மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் இதைப் போல ஓர் ஆண்டு கால அவகாசம் சிங்கள அரசுக்கு அளிக்கப்பட்டபோது எத்தகைய நிவாரண நடவடிக்கைகளும் அங்கு நடைபெற​வில்லை.


கடந்த ஆண்டு இலங்கை அரசுக்குக் கொடுக்கப்பட்ட அவகாசத்தில் மேலும் மேலும் தமிழர்களுக்குக் கொடுமைகள் இழைக்கப்​பட்டனவே தவிர, நிலைமை சிறிதளவுகூட மாறவில்லை. இப்போது இன்னும் ஓர் ஆண்டு கால அவகாசம் அளிப்பது எஞ்சியுள்ள தமிழர்களை முற்றிலுமாக அழிப்பதற்கே உதவும். அமெரிக்கத் தீர்மானத்தை இலங்கை எதிர்ப்புத் தீர்மானம் என அழைப்பது மிகத் தவறானதாகும். உலகக் கண்டனத்தில் இருந்து இலங்கையைக் காப்பாற்றும் தீர்மானமே அது.



அமெரிக்கத் தீர்மானம் குறித்து நடைபெற்ற விவாதத்தில் இந்தியாவின் பங்கு என்பது சூழ்ச்சிகர​மானது. தான் நேரடியாக சம்பந்தப்படாமல் பின்னணியில் இருந்து இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்காவின் தீர்மானத்தை வடிவமைத்தது இந்தியாதான். இலங்கைப் பிரச்னை சம்பந்தமாக இலங்கை அரசுடன் பேசுவதற்கு வழக்கமாக அனுப்பப்படும் பிரதமரின் ஆலோசகர் சிவசங்கர​மேனன் இம்முறை அனுப்பப்படவில்லை


. மாறாக அரசாங்கத்துடனோ காங்கிரஸ் கட்சியுடனோ எந்தவிதத்திலும் சம்பந்தப்படாத சுப்பிரமணியன் சுவாமியை, இந்திய அரசு தனது தூதுவராக இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் அனுப்பியது. அவர் சென்று இந்தியாவின் கருத்தோட்டத்துக்கு ஏற்ப அமெரிக்கா தனது தீர்மானத்தை உருவாக்குவதற்குக் காரணமாக இருந்தார். சுப்பிரமணியன் சுவாமி ஒரு தனி நபர். 


 ஆனால் இலங்கை அதிபர் ராஜபக்ஷே, அமெரிக்காவின் வெளியுறவுத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் ஆகியோரை அவர் சந்தித்துப் பேசிய விவரங்கள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. ஒரு தனி நபருக்கு இவ்வளவு செல்வாக்கு அரசு வட்டாரங்களில் இருக்க முடியாது. இந்தியாவின் சார்பில் அவர் சென்றார் என்பதினால்தான் அவரைச் சந்தித்துப் பேச, இலங்கை, அமெரிக்க அரசு உயர் மட்டத்தினர் முன்வந்தனர்.



அது மட்டுமா? நாடாளுமன்றத்தில் முலாயம்சிங் யாதவ் போன்றவர்கள் இந்திய அரசின் இலங்கைக் கொள்கையைக் கடுமையாக விமர்சனம் செய்தார்கள். ஆனால், இப்போது அவர்கள் மாறிவிட்டனர். இதற்குப் பின்னணி என்ன? இந்தியாவில் இலங்கைத் தூதுவராக இருக்கும் பிரசாத் கரியவாசம், முலாயம் சிங் மற்றும் பல்வேறு வட மாநில முதல்வர்களை எல்லாம் சந்தித்துப் பேசி சிங்கள அரசின் நிலைக்கு ஆதரவாக அவர்களை மாற்றியிருக்கிறார். வெளிநாட்டுத் தூதுவர் ஒருவர் டெல்லியைவிட்டு வெளியேச் செல்ல வேண்டுமானால்கூட இந்திய அரசின் அனுமதி தேவை. மாநில முதலமைச்சர்களைச் சந்திப்பதற்கும் இந்திய அரசு அனுமதிக்க வேண்டும். ஆக, இந்திய அரசுதான் அவருக்கு இத்தகைய ஆலோசனைகளை வழங்கி, எதிர்க்கட்சித் தலைவர்களையும் முதல்வர்களையும் சந்தித்துப் பேசச் செய்திருக்கிறது.



    ஒட்டுமொத்தத் தமிழகத்தின் கடும் எதிர்ப்பும், இதுவரை கூட்டணிக் கட்சியாக இருந்த தி.மு.க. வெளியேறியதும் மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படுத்தவில்லை. அதைப்போல, உதட்டளவில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசும் அமெரிக்காவும் இந்தப் பிரச்னையில் இரட்டை வேடம் போடுகிறது. அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளின் நிலைப்பாடு என்பது ஈழத் தமிழர் பிரச்னையைப் பயன்படுத்தி இலங்கை அரசை மிரட்டி சீனாவிடமிருந்து பிரிக்க நினைக்கிறது.



இலங்கையிலும், குறிப்பாக இந்துமாக்​கடலிலும் சீனாவின் ஆதிக்கம்  ஏற்படுவது தன்னுடைய உலகளாவிய நலன்களுக்கு எதிரானது என அமெரிக்கா கருதுகிறது. இந்தியாவும் தனது தென்னாசிய நலன்​களைப் பொறுத்தவரையில் சீனாவின் தலையீட்டை விரும்பவில்லை. எனவே, அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து இந்தப் பிரச்னையைப் பயன்படுத்தி ராஜபக்ஷே அரசுக்கு நெருக்குதல் கொடுத்து, சீனாவின் பிடியிலிருந்து அவரை மீட்பது ஒன்றே அவர்களது நோக்கம். ஏனெனில், அமெரிக்காவின் இந்துமாக் கடலின் நலன்களும் இந்தியாவின் பிராந்திய அரசியல் பொருளாதார நலன்களும் முக்கி​யமே தவிர, ஈழத் தமிழர்களின் வாழ்வு அவர்களுக்கு முக்கியமல்ல.



ஈழத்தில் நடக்கும் இனப்படுகொலை, போர்க் குற்றம், மனித உரிமை மீறல் ஆகியவை குறித்து எவ்வளவோ உண்மைகளை வெளிப்படுத்தியும்கூட, அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் தங்களின் அரசியல், பொரு​ளாதார நலன்களை மட்டுமே மனதில்கொண்டு ராஜபக்ஷேவின் ரத்த வெறிக்கு ஈழத் தமிழர்களைக் காவு கொடுக்கத் துணிந்துவிட்டன என்பதைத்தான் அமெரிக்கத் தீர்மானம் எடுத்துக்காட்டுகிறது.


எனவே, இது கண்டனத் தீர்மானம் அல்ல... கண்துடைப்புத் தீர்மானம்!


நன்றி - ஜூ வி

இலங்கைப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு?’ - ஜூ.வி. சர்வே அதிரடி ரிசல்ட்

மக்கள் மனசு - ஜூ.வி. சர்வே அதிரடி ரிசல்ட்


ஈழம், ஐ.நா. தீர்மானம், மாணவர் போராட்டம், மீனவர்கள் மீது தாக்குதல் என இலங்கைப் பிரச்னை சர்வதேச அளவில் பேசப்படுகிறது. மத்திய அரசின் பாராமுகத்துக்கு எதிராக தமிழகமே கொந்தளிக்கிறது. இன்னொரு பக்கம் மத்திய அரசில் இருந்து தி.மு.க. விலகி இருக்கிறது. தமிழ்நாட்டு அரசியல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில் மக்களின் பல்ஸ் பார்க்கக் களம் இறங்கியது ஜூ.வி. 


'மக்கள் மனசு’ என்ற தலைப்பில், சர்வே எடுக்க நமது நிருபர்கள் தமிழகம் முழுக்க வலம் வந்தனர். 3,083 பேரை நேரடியாகச் சந்தித்தது நமது சர்வே டீம். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். விகடன் இணைய தளத்தின் வழியாகவும் சர்வே எடுக்கப்பட்டது. அதில் பங்கேற்றவர்கள் 2,286 பேர். மொத்தமாக 5,369 பேரிடம் எடுக்கப்பட்ட இந்த மெகா சர்வே மூலமாக தமிழ் மக்களின் மன ஓட்டத்தை அறியமுடிகிறது.


''சரியான நேரத்தில் சர்வே எடுக்க முடிவு செய்திருக்கீங்க'' என்று ஆர்வத்துடன் கேள்விகளை எதிர்கொண்டனர் மக்கள். ஈழ விவகாரத்தை மாணவர்கள் போராட்டமாக முன்னெடுத்ததற்கு ஏகோபித்த வரவேற்பு இவர்களிடம் உள்ளது. பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொடூரமாகக் கொல்லப்பட்ட புகைப்படத்தைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். மத்திய அரசு மீதும் தி.மு.க- மீதும் மக்கள் மத்தியில் இருந்த கோபம், நமது சர்வே டீமிடம் வார்த்தைகளாக வந்து விழுந்தன.


'இலங்கைப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு?’ என்கிற கேள்விக்கு பொட்டில் அடித்தாற் போல 'தனி ஈழம்தான்’ என பெரும்பாலானவர்கள் கருத்துச் சொல்லி இருக்கின்றனர். இந்தியாவின் துணையோடுதான் இலங்கையில் இறுதிப் போர் நடந்தது என்று 71 சதவிகிதம் கருத்து தெரிவித்தனர். ராஜபக்ஷேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று சொன்னவர்கள் 88 சதவிகிதம் பேர். ஈழ விவகாரத்தில் கருணாநிதி எடுக்கும் முடிவுகள் தேர்தல் அரசியல் சார்ந்தது என 64 சதவிகிதம் பேர் டிக் அடித்துள்ளனர். அதே சமயம் ஜெயலலிதாவுக்கும் ஈழ விவகாரத்தில் பெரிதாக ஆதரவு இல்லை. இலங்கைத் தமிழர்களை ஆதரிப்பதில் உறுதியாக இருக்கும் கட்சி என்கிற கேள்விக்கு ம.தி.மு.க-தான் முதல் இடத்தில் இருக்கிறது.


ஆச்சர்ய சர்வே முடிவுகள் உங்களின் பார்வைக்கு....


ன்றி - ஜூ வி