Showing posts with label தலைவா. Show all posts
Showing posts with label தலைவா. Show all posts

Saturday, October 19, 2013

வணக்கம் சென்னை , தலைவா -வரிவிலக்கு மறுப்பு ஏன் ? - உதயநிதி ஸ்டாலின் கார சார பேட்டி @ த தமிழ் ஹிந்து

தனது மனைவியை இயக்குநராக்கிய சந்தோஷத்தில் இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். படத்தின் வசூல், மக்களிடையே கிடைத்திருக்கும் வரவேற்பு என பிஸியாகக் கணக்கிட்டுக் கொண்டிருந்தவரிடம் பேட்டி என்றதும் ஆவிபறக்கும் காபி கோப்பையொன்றைக் கையில் கொடுத்தபடியே 'கேளுங்க' என்று உற்சாகமானார்...
'வணக்கம் சென்னை' படத்தின் வசூல் எப்படி இருக்கு?
எதிர்பார்த்த அளவுக்கு ஒப்பனிங் இல்ல. ஆனா டீசென்ட்டான ஓப்பனிங் இருந்துச்சு. விமர்சனங்கள் ரொம்ப பாசிட்டிவ்வா வந்திச்சு. ஒவ்வொரு ஷோவுக்கும் மக்கள் வர்றது அதிகமாகிட்டே இருக்கு. கண்டிப்பா லாபமா அமையும்னு நம்பறேன். ஏன்னா இது பெரிய பட்ஜெட் படம் கிடையாது. பப்ளிசிட்டிக்கு நிறைய செலவு பண்ணினேன். இந்த ஓப்பனிங் வந்ததுக்கு காரணமே அனிருத்தோட இசைக்கும், படத்தோட டிரெய்லருக்கு யூட்யூப்ல கிடைச்ச வரவேற்பும்தான்.
நீங்க இப்போ நடிக்கிற 'இது கதிர்வேலன் காதல்' எப்போ வெளியாகப் போகுது ?
இன்னும் 2 பாடல் காட்சிகள் படம் பிடிக்க வேண்டியிருக்கு. அவ்வளவுதான். அதன் பிறகு பின்தயாரிப்பு வேலைகள் முடிஞ்சுட்டா நவம்பர் கடைசில இசை வெளியீட்டுக்கு திட்டமிடுறேன். கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியிடுற திட்டம் வச்சிருக்கேன். பார்க்கலாம்.நயன்தாரா - உதயநிதி ஸ்டாலின் ஜோடியின் கூட்டணி திரையில் எப்படி வந்திருக்கு?
அதைச் சொன்னா சுவாரஸ்யம் போயிடலாம். எனக்கும் அவங்களுக்கும் காம்பினேஷன் ரொம்ப கம்மியாதான் இருக்கும். எனக்கும் சந்தானத்துக்கும்தான் அதிகம் காட்சிகள் இருக்கும். பாடல் காட்சிகள்லதான் நயன்கூட முழுசா இருப்பேன்.
சந்தானம் இருந்தாதான் படம் நடிக்கவே ஒப்புக்குவீங்க போல?
நீங்க இப்படி கேட்கக் காரணம் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' தான். மக்களும் எங்களை ஏத்துக்கிட்டாங்க. 'வணக்கம் சென்னை' படத்துல ஒரு சீன் அவரோட நடிச்சதுக்கே மக்கள் பயங்கரமா கைத்தட்டுறாங்க. 'இது கதிர்வேலன் காதல்' படத்துல 'ஒரு கல் ஒரு கண்ணாடி' சாயல் வந்திரக் கூடாதுனு ரொம்ப தெளிவா இருந்தார் சந்தானம். படத்தோட கதையை நகர்த்துற மாதிரி ஒரு முக்கியமான கதாபாத்தித்தில் வர்றாரு. இப்போ மூணாவதாக நடிக்கப்போற 'நண்பேன்டா' படத்துல, நானும் சந்தானமும் படம் முழுக்க ஒன்றாகவே இருக்குற மாதிரி கதை ரெடி பண்ணிருக்கார் ஜெகதீஷ். ஒரு அளவுக்கு சினிமாவுல ஹீரோவா நிலைச்சுட்டேன்னா, அதுக்கு அப்புறம் நடிக்கிற படங்கள்ல ஏதாவது புதுசா ட்ரை பண்ணுவேன்.
கதிர்வேலன் காதலும் இன்னோரு காமெடி படம் தானா..?
'ஒரு கல் ஒரு கண்ணாடி' எல்லாரும் குடும்பத்தோட ரசிச்ச படம்தானே. ஆனா 'இது கதிர்வேலன் காதல்' ஒரு குடும்பபடம். ஆனா, முழுக்க காமெடி படமும் கிடையாது. நான் கூட ஒரு சீன்ல கிளசிரின் போட்டு அழணும் அப்படினு இயக்குனர் சொன்னாரு. எனக்கு ஷாக்! ‘ ஏங்க நான் எல்லாம் அழுதா காமெடியா ஆயிடும் விட்டுருங்கனு’ சொன்னேன். இதுல புதுசா இல்லன்னா இன்னொரு 'ஒரு கல் ஒரு கண்ணாடி'னு சொல்லிடுவாங்க. நீங்க டிரைப் பண்ணுங்கன்னு சொன்னார். நான் முதல்தடவையாக அழுதுருக்கேன். கண்டிப்பா பிடிக்கும்னு சொன்னாரு. இந்தப் படத்துல அப்பா, அக்கா சென்டிமென்ட் இருக்கு. கண்டிப்பா எல்லாருக்கும் பிடிக்கும்.


அடுத்து மனைவி இயக்கத்தில் நடிப்பீர்கள்தானே?
'வணக்கம் சென்னை' படத்துக்கே கேட்டாங்க. இல்ல நீங்க சிவாவை வைச்சே பண்ணுங்கன்னு சொன்னேன். இப்ப இயக்குநரா ஜெயிச்சுட்டாங்க. முதல் படம் மாதிரியே தெரியல அப்படினு எல்லாரும் சொல்றப்ப சந்தோஷமா இருக்கு. அடுத்து என்ன பண்ணப் போறாங்க அப்படினு அவங்க இன்னும் முடிவு பண்ணல. இப்போதைக்கு அவங்க நினைப்பு எல்லாம் இன்னைக்கு கலெக்‌ஷன் எவ்வளவு. செலவு பண்ண காசு வந்திருமா லாபம் கிடைக்குமானு டென்ஷனா கேட்டுகிட்டே இருக்காங்க... அவங்க அடுத்த கதை ரெடி பண்ணிட்டு, அந்த கதை எனக்கு பொருத்தமா இருந்தா, கண்டிப்பா பண்ணுவேன்.
உங்களை திரையில முதல்ல கொண்டு வந்தவர் கே.எஸ்.ரவிக்குமார். அவர் நடிக்க கூப்பிடலையா?
பெரிய டைரக்டர். அவருதான் என்னை வற்புறுத்தி 'ஆதவன்'ல நடிக்க வைச்சாரு. 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படப்பிடிப்பு சமயத்துல ஒரு கதை சொன்னாரு. அது ஒரு பழைய படத்தோட ரீமேக். ரெண்டு மூணு ஹீரோக்கள் கூட சேர்ந்து பண்ற மாதிரியிருக்கும். நீங்க ரெடி பண்ணிட்டு சொல்லுங்க. கண்டிப்பா பண்ணலாம்னு சொல்லிருக்கேன். அவர் சொன்ன கதை ஜீவா, ஆர்யா மாதிரி நடிகர்கள் சேர்ந்து நடிக்க வேண்டிய ஒரு பெரிய பட்ஜெட் காமெடி படம். அவர் கூப்பிட்டா கண்டிப்பா நடிப்பேன்.

உங்கள தயாரிப்பாளரா அறிமுகப்படுத்தியவர் விஜய். நீங்க நினைச்சா 'தலைவா' படத்த ரிலீஸ் பண்ணிருக்க முடியுமே?
அந்தப் படத்துக்கு ஏற்கனவே பிரச்சினை. நான் வேற போனா பிரச்சினை இன்னும் கூடியிருக்கும்.. அந்த பிரச்சினையின்போது நான் விஜய் சார்கிட்ட பேசவே இல்ல. அவரோட நண்பர்கள் கிட்ட பேசினேன். சினிமால ரொம்ப தப்பான விஷயங்கள் நடக்குதுன்னு சொன்னேன்.
அதாவது மாணவர் புரட்சி படைன்னு சொன்னாங்க. அவங்களுக்கு என்ன சம்பந்தம் சொல்லுங்க. சந்தானத்தோட 'நீ அரசியலுக்கு ரெடியாயிட்ட'னு ஒரு டயலாக். இதுக்கும் மாணவர் புரட்சி படைக்கும் என்ன சம்பந்தம் சொல்லுங்க. தயாரிப்பாளரே இதைப்பத்தி கேள்வி கேட்காதப்போ நமக்கு எதுக்கு அப்படினு விட்டுட்டேன்.
அந்த சமயத்துல என்னால முடிஞ்ச உதவிய பண்றேன்னு அவரோட நண்பர்கள்கிட்ட சொன்னேன். எனக்கு விஜய் சார்கிட்ட என்ன பேசுறதுன்னு தெரியல. ஏன்னா அவரே ரொம்ப டென்ஷன்ல இருந்திருப்பார். ஒரு பெரிய ஹீரோ, பெரிய பட்ஜெட் படத்துக்கே இவ்வளவு கஷ்டமான்னு நினைச்சு வருத்தப்பட்டேன்.


வணக்கம் சென்னை உட்பட நீங்க தயாரிக்கிற படங்களுக்கு வரிவிலக்கு ரத்து ஆக என்ன காரணம்?
ஊருக்கே தெரிஞ்ச காரணம்தான். பேசாம அவங்க ஒரு சட்டமே போட்றலாம். ரெட் ஜெயன்ட் தயாரிக்கிற படங்களுக்கு வரிவிலக்கு கிடையாது அப்டினு. நீதிமன்றத்திற்கு கண்டிப்பா போய் போராடுவேன். நிறைய ஆதாரங்கள் எடுத்து வச்சிருக்கேன். இப்போ ஒரு கமிட்டி ஒண்ணு போட்டுருக்க்காங்க இல்ல.. அந்தமாதிரி ஒரு காமெடி கமிட்டியே கிடையாதுங்க.
மத்திய அரசு நடத்துற சென்சார் போர்டு அவ்வளவு சின்சியரா நடத்துறாங்க. ஒரு படத்துக்கு சம்பந்தமில்லாம பாக்குற முதல் ஆளுங்க அவங்கதான். அதுக்கு அவ்வளவு ரூல்ஸ் இருக்கு. 5 பேர் பாக்கணும். அதுல 2 லேடீஸ் இருக்கணும். படம் புரொஜக்‌ஷன் ரூம்லகூட தயாரிப்பாளர், இயக்குநர் இருக்கக் கூடாது.
ஆனா, ரிலீஸ் முன்னாடித்தான் இவங்களுக்கும் (வரிவிலக்கு குழு) படம் போட்டு காட்றோம். அவங்க வீட்டு வேலைக்காரன்ல இருந்து, தோட்டக்காரன் வரைக்கும் வந்து படம் பாக்குறாங்க. இவங்க இப்படி பாத்தா ஒரு தயாரிப்பாளருக்கு என்ன பாதுகாப்பு இருக்கு சொல்லுங்க. என்கிட்ட எல்லாத்துக்கும் ஆதாரமிருக்கு. அதுவும் ஒரு பெரிய ஸ்டார் படம்னா ஒரு பிக்னிக் மாதிரி வீட்டுல சொந்தக்காரங்கள்ல இருந்து எல்லாத்தையும் கூட்டிட்டு வந்திராங்க.

'தலைவா' படத்துக்கே வரிவிலக்கு கிடையாதே. அப்படின்னா, முதல்லயே தெரியுது இந்த படத்துக்கு எல்லாம் வரிவிலக்கு குடுக்கணும், இதுக்கு எல்லாம் கொடுக்கக் கூடாதுன்னு. நான் தயாரிப்பாளர் சங்கம், பிலிம் சேம்பர்ல புகார் கொடுக்கப் போறேன்.
வரி தானே கட்டுங்கன்னு சொல்றாங்க. நான் கேட்குறது ஒரே விஷயம்தான். மத்த படங்களுக்கு கிடைக்குறது ஏன் என்னோட படங்களுக்கு கிடைக்கல. ஏன்னா என்னோட அரசியல் பின்னணி. எல்லாத்துக்கும் போதுவா ஒரு சட்டம் போடுங்க. உடனே உங்க ஆட்சில நடக்கலயானு கேட்பாங்க.
என்னால ஒரு படம் வெளிவர முடியாமலோ, தள்ளிப் போச்சுன்னோ சொன்னாங்கன்னா நான் சினிமாவை விட்டே போகத் தயார். வரி விஷயத்தை பொறுத்த வரைக்கும் இந்த விஷயத்தை நான் சும்மா விடப்போவதில்லை.


தயாரிப்பாளர், நடிகர் அடுத்து அரசியல்தானே?
அப்படில்லாம் ஒண்ணும் கிடையாதுங்க. இப்போதைக்கு 'இது கதிர்வேலன் காதல்' என்னோட இலக்கு. என்னுடைய தயாரிப்பு, வெளியீடு அப்படினு பிஸியாக இருக்கேன். அரசியல் எல்லாம் நினைச்சு பாக்கக்கூட நேரமில்லை. எனக்கு அரசியல் தேவையில்லாதது. சினிமாதான் என்னோட ஃபாஷன்

thanx - the tamil hindu

Saturday, August 10, 2013

தலைவா - தமிழக அரசின் வணிக வரித் துறை விளக்கம்

A

A


A

சமுதாயத்தை திசைதிருப்பும் வண்ணம் சட்டத்தை கையில் எடுக்கும் கதாநாயகன்'' - தலைவா படத்துக்கு வரிவிலக்கு ஏன் இல்லை? தமிழக அரசின் வணிக வரித் துறை விளக்கம்.A
விஜய்யின் தலைவா பிற மாநிலங்கள் - வெளிநாடுகளில் ரிலீஸானது - தமிழகத்தில் 22ம் தேதி ரிலீஸாக வாய்ப்பு!

Thalaivaa released in other states and Foreign country - Tamilnadu may be 22 release
நடிகர் விஜய் நடித்த, "தலைவா படம், தமிழகத்தை தவிர, தென் மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் நேற்று வெளியிடப்பட்டது. தமிழகத்தில் வரும், 22ம் தேதி வெளியிடப்பட வாய்ப்புள்ளது என, தகவல் வெளியாகியுள்ளது. "படம் வெளியிட ஏற்பட்ட தாமதத்திற்கு, தமிழக போலீசிற்கு பங்கில்லை என்று, டி.ஜி.பி., ராமானுஜம் தெரிவித்துள்ளார்.

விஜய் - அமலாபால் நடித்த, "தலைவா படம், நேற்று (9ம் தேதி) தமிழகம் உட்பட, உலகம் முழுவதும், 2,000 தியேட்டர்களில் வெளியாக இருந்தது. படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு தாமதமானதாலும், அரசியல் கலந்த வசனங்கள் இருப்பதாக தகவல் வெளியானதாலும், இப்படத்தை திரையிடும், தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாலும், "தலைவா படம், நேற்று தமிழகத்தில் வெளியிடப்படவில்லை.ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மும்பை மற்றும் வெளிநாடுகளில், நேற்று படம் வெளியிடப்பட்டது. தமிழகத்தில், நேற்று காலை தியேட்டர்களுக்கு வந்த விஜய் ரசிகர்கள், ஏமாற்றமடைந்தனர்.

போலீஸ் காரணமில்லை: டி.ஜி.பி., தகவல்

டி.ஜி.பி., ராமானுஜம் வெளியிட்ட அறிக்கை:"தலைவா என்ற படம் வெளியாவதை, பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, தமிழக காவல்துறை தள்ளி வைத்துள்ளதாக ஒரு சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன; இச்செய்தியில் உண்மையில்லை. பட வெளியீட்டை தள்ளி வைக்குமாறு, தமிழக காவல்துறை கோரவோ அல்லது ஆலோசனை கூறவோ இல்லை. இத்திரைப்படம் வெளியிடப்படுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் எதிலும், காவல்துறைக்கு பங்கில்லை. படம் வெளியிடப்படுவது பற்றிய முடிவுகள் திரைப்படத் துறையை சார்ந்தது.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

22ம் தேதி ரிலீஸாக வாய்ப்பு

இந்நிலையில், படம் வெளியீடு குறித்து, நேற்று இரவு வரை, தயாரிப்பாளர் நேரடியாக ஏதும் பதில் கூறவில்லை. படத்தை, வரும் 15ம் தேதி வெளியிட, மாற்று ஏற்பாடு நடந்ததாகவும், அன்று சுதந்திர தினம் என்பதால், தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு முழுவதுமாக கிடைக்காது என்பதால், வரும், 22ம் தேதி, படம் வெளியாக வாய்ப்புள்ளது எனவும் தகவல் வெளியானது.

ரசிகர்கள் கலாட்டா!

"தலைவா படம் நேற்று வெளியிடப்படும் என, நினைத்த விஜய் ரசிகர்கள், தியேட்டர்களுக்கு நேற்று காலை வந்தனர். சென்னையில் உள்ள தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. தியேட்டர் உரிமையாளர்கள், "படம் இன்று வெளியாகாது என, ரசிகர்களை திரும்ப அனுப்பினர். தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் உள்ள விஜய் ரசிகர்கள், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் உள்ள தியேட்டர்களுக்குச் சென்று பார்த்தனர்.புதுக்கோட்டையில், சாலை மறியலில் ஈடுபட்ட நடிகர் விஜய் ரசிகர்கள், 49 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம், இடைப்பாடியில், 200க்கும் மேற்பட்ட ரசிகர்கள், இடைப்பாடி - சேலம் சாலையில், மறியலில் ஈடுபட்டனர். போலீசார், அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பினர். ஆத்தூரில், விஜய் ரசிகர்கள் மறியலில் ஈடுபட முயன்றதோடு, தியேட்டர்களை முற்றுகையிட்டனர். அதனால், தியேட்டர்களுக்கு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.வேலூர், திருவண்ணாமலையில், விஜய் ரசிகர்கள், சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். போலீசார், அவர்களை கலைத்து அனுப்பினர்.

அலைக்கழிக்கப்பட்ட ரசிகர்கள்

மதுரையில் நேற்று இரண்டு தியேட்டர்களில் தலைவா படம் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டு ரசிகர்க‌ளும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அடுத்த சில நிமிடங்களி‌லே‌யே படம் வெளிவரவில்லை அதனால் ரசிகர்களை வெளியேறும்படி ‌அறிவுறுத்தப்பட்டனர். இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றமும், அதேசமயம், தங்களை இப்படி அலைக்கழிப்பதாகவும் வேதனை தெரிவித்தனர்.

வெளிமாநிலங்களுக்கு படையெடுக்கும் ரசிகர்கள்

விஸ்வரூபம் படம் தமிழகத்தில் தடை செய்யப்பட்டபோது வெளிமாநிலங்களில் சென்று படம் பார்க்க தொடங்கினர் ரசிர்கள். அதேப்போல் தலைவா படமும் தமிழகத்தில் ரிலீஸ் ஆவதில் தாமதமாகி வருவதால் விஜய்யின் ரசிகர்கள் வெளிமாநிலங்களில் சென்று படம் பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக கேரளா மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு அதிகளவு ரசிகர்கள் சென்று படம் பார்க்க தொடங்கியுள்ளனர்
 
 
 
.THANX-DINAMALAR
 
 
DISKI -

CHENNAI EXPRESS - சினிமா விமர்சனம்

 

http://www.adrasaka.com/2013/08/chennai-express.html 

 

தலைவா - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2013/08/blog-post_5337.html

 

Thursday, March 28, 2013

தலைவா துப்பாக்கியை தாண்டிடுமா? - இயக்குநர் விஜய் பேட்டி

http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQDLezW28cuvlB5MXx6q9XysBBYAdhBxZU3iI8cfxUDLJXe43-2 
 
"குட் பேபி அமலா பால்!”
 
 
எம். குணா
 
முதன்முதலா காலேஜ் கட் அடிச்சுட்டுப் பார்த்த படம் 'காதலுக்கு மரியாதை’. என் பேரும் விஜய்ங்கிறதால அப்ப அந்தப் படத்துல விஜய் போட்டிருந்த மாதிரியே டி-ஷர்ட், கூலர்ஸ் போட்டுக்கிட்டு அலம்பல் பண்ணுவேன். இப்போ அதே விஜயை வெச்சு, 'தலைவா’ படம் இயக்குறேன். காலம் ரொம்ப வேகமா ஓடுது!'' - சிலிர்ப்பும் சிரிப்புமாகப் பேசத் தொடங்கினார் விஜய்... இயக்குநர் விஜய்!
 
 
 
''இயக்குநர் விஜய், நடிகர் விஜயை எப்படிப் பிடிச்சார்?''  


''தனிப்பட்ட முறையில் அவர் எனக்குப் பழக்கம் இல்லை. முன்னாடி 'மதராசபட்டினம்’ பார்த்துட்டு வாழ்த்தினப்போ, 'நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம்’னு சொன்னார். இப்போ சமீபத்தில் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் 'விஜய் கால்ஷீட் என்கிட்ட இருக்கு. நீங்க போய் அவருக்குக் கதை சொல்லுங்க’னு சொன்னார்.


அவரைப் போய்ப் பார்த்தேன். 'தலைவன்கிற பட்டத்தை நாம தேடிப் போகக் கூடாது. அது தானா நம்மளைத் தேடி வரணும்’னு ஒன் லைன் சொல்லிட்டுக் கதை சொன்னேன். கால் மணி நேரத்துல சிரிச்சுட்டே கைகொடுத்து கன்ஃபர்ம் செய்தார்!''
''நீங்க இயக்கின 'கிரீடம்’, 'மதராசபட்டினம்’, 'தெய்வத்திருமகள்’ எல்லாமே சோகமான முடிவுகொண்ட க்ளாஸிக் வரிசைப் படங்கள். ஆனா, 'துப்பாக்கி’ ஹிட்டுக்கு அப்புறம் அதைவிட அதிரடியா எதிர்பார்ப் பாங்களே விஜய் ரசிகர்கள்?!''   


''நீங்க குறிப்பிடும் எல்லாப் படங்களிலும் க்ளைமாக்ஸ் சோகமா இருக்கும். ஆனா, படம் முழுக்க ட்ராவல் செய்யும் கேரக்டரின் தேடலுக்கு அதுதான் தேவை. 'தலைவா’ சீனுக்கு சீன் ஆர்.டி.எக்ஸ். பட்டாசு வெடிக்கும் படம். இன்னைக்கு 'தலைவர்’னு அடையாளப் படுத்தப்படுற எல்லாரும் அந்த இடத்துக்கு எப்படி வந்தாங்கனு ஒரு ஃப்ளாஷ்பேக் இருக்கும். அப்படியொரு ஃப்ளாஷ்பேக்தான் படம். 'துப்பாக்கி’ சக்சஸுக்குப் பிறகான எதிர்பார்ப்பு நிச்சயம் பூர்த்தியாகும் அளவுக்குத் திரைக்கதை பிடிச்சிருக்கோம். ஸ்டைல், டான்ஸ் போக சின்னச் சின்ன நுணுக்கமான எக்ஸ்பிரஷன்களுக்குக்கூட ரொம்ப மெனக்கெட்டு நடிச்சிருக்கார் விஜய்!''''சத்யராஜுக்குப் படத்தில் என்ன ரோல்?'' 


''மிக முக்கியமான ரோல். அது விஜயின் காட்ஃபாதரா இல்லை வில்லானாங்கிறது சஸ்பென்ஸ். நான் டவுசர் போட்ட காலத்துல இருந்து இப்போ வரை அவரோட உயரத்தையும் நடிப்பையும் அண்ணாந்து பார்க்குறவன். ஆனா, அவர்கூட வேலை பார்க்கும்போது சினிமா மீது அவர் வெச்சிருக்கிற டெடிகேஷன் பார்த்து ஆச்சர்யமா இருக்கு. மும்பையில் 'தலைவா’ ஷூட்டிங் நடந்துட்டு இருந்தப்போ, பால் தாக்கரே உடம்பு சரியில்லாம மருத்துவமனையில் இருந்தார்.


 நான் ஸ்பாட்ல இல்லாதப்போ, சிவசேனா கட்சிக்காரங்க வந்து சத்யராஜ் சார்கிட்ட படப்பிடிப்பை நிறுத்தச் சொல்லியிருக்காங்க. 'நோ... நோ... டைரக்டர் வந்து பேக்கப் சொல்லாம நான் இடத்தைவிட்டு நகர மாட்டேன்’னு சொல்லி அவங்களை தில்லா எதிர்த்திருக்கார். அந்த அர்ப்பணிப்பும் துணிச்சலும் எங்களைப் போன்ற ஜூனியர்கள் எல்லாரும் கத்துக்க வேண்டிய பாடம்!''


'' 'என்கிட்ட நூறு பேருக்கு மேல உதவி இயக்குநர்களா வேலை பார்த்திருந்தாலும் விஜயை என் அசிஸ்டென்ட்னு சொல்லிக்கிறதில் பெருமைப்படுறேன்’னு இயக்குநர் ப்ரியதர்ஷன் சொல்லியிருக்காரே?'' ''ப்ரியதர்ஷன் சார் என் கலைக் கடவுள். என்னைப் பத்தி அவர் அப்படிச் சொல்றதுக்கு நான் ரொம்பக் கொடுத்துவெச்சிருக்கணும். இன்னிக்கு நான் இருக்கும் இடத்துக்குக் காரணம் அவர் கத்துக்கொடுத்த பாடம்தான். எனக்கு ஒரு ஆசை இருக்கு. இதுவரை ப்ரியதர்ஷன் சார் 92 படம் இயக்கியிருக்கார். அவரோட 100-வது படத்துல மறுபடி நான் அவர்கிட்ட அசிஸ்டென்ட்டா வேலை பார்க்கணும்!''


''உங்களுக்கும் அமலா பாலுக்கும் நத்திங் நத்திங்னு சொல்றீங்க. ஆனா, 'தலைவா’வில் அவர் எப்படி ஹீரோயின் ஆனார்?'' 


''இளைமைத் துடிப்பும் பெர்ஃபார்மென்ஸ் நடிப்பும் காட்ட வேண்டிய ஹீரோயின் கதைக்குத் தேவை. சோனம் கபூர், தீபிகா படுகோன் எல்லாம் கேட்டுப் பார்த்தோம். உடனடியா கால்ஷீட் இல்லைனு சொன்னாங்க. இடையில ஒரு நாள் விஜய் சார், 'மோகன்லால், அமலா பால் நடிச்ச 'ரன் பேபி ரன்’ படம் பார்த்தேன். அமலா நடிப்பு நல்லா இருந்துச்சு. நம்ம படத்துக்குப் பொருத்தமா இருப்பாங்கனு தோணுது’னு சொன்னார். 'நானும் படம் பார்த்தேன். உங்களுக்கு ஓ.கே-ன்னா எனக்கும் ஓ.கே’னு சொன்னேன். இப்படித்தான் அமலா பால் புராஜெக்ட்டுக்குள் வந்தாங்க. அந்த நிமிஷத்துல இருந்து இந்தக் கேள்வியையும் நான் எதிர்பார்த்தேன்!''


''சரி... உங்க கல்யாணம் எப்போ? காதல் கல்யாணமா... நிச்சயிக்கப்பட்ட திருமணமா?'' 


''நான், நீரவ் ஷா, ஜி.வி.பிரகாஷ் மூணு பேரும் சேர்ந்து ஒரு ரூபாகூடச் சம்பளம் வாங்காம ஒரு படம் எடுக்கணும்னு ஆசைப்படுறோம். காரைக்குடிதான் படத்தோட மொத்த லொகேஷனும். அந்தப் படம் தமிழகக் கலாசாரத்தின் பிரதிபலிப்பா இருக்கணும். அப்புறம்தான் கல்யாணம் பத்தின நினைப்பே. அதுவும் அம்மா, அப்பா பார்த்து செலெக்ட் செய்ற பொண்ணுதான். போதுமா?''


ஒருவேளை... அப்பா-அம்மாவே அமலா பாலை செலெக்ட் பண்ணுவாங்களோ?! 

நன்றி - விகடன்