Friday, November 09, 2012

Cameraman Gangatho Rambabu - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSDEj5MBh4HouCKP-SSHXdXpYK1nRv-tWCjzFOiLi0i__9z1zYBIsCW77VTQpp6gJd4Qqqqv429u6Is1BICRHVNPmhgGu_fge0CcYe-pwBcqMCPUYb368cz8bc8J_v9u7xh6YrRN6mad4/s1600/Cameraman-Gangatho-Rambabu-New-Posters-1048.jpgஹீரோ ஒரு மெக்கானிக், ஆனா ஒரு சீன்ல கூட அவர் அந்த வேலையை செய்யவே இல்லை. அநியாயம் எங்கே அஜித்தினாலும் ( நடந்தாலும்) அதை தட்டி கேட்பார்.யாருக்காகவும், எதுக்காகவும் அஞ்சாதவர். ஹீரோயின் டி வி மீடியாவில் கேமராவிமன். ஹீரோவை பார்த்து அவரையும் மீடியாவுல சேர்த்து விட்டுடறார். 


 இப்போ ஹீரோ சேனல் ரிப்போர்ட்டர்.வில்லன் கலைஞர் மாதிரி கெட்டப்ல எதிர்க்கட்சித்தலைவர். அவருக்கு அழகிரி மாதிரி ஒரு பையன் . நல்ல வேளை ஸ்டாலின் மாதிரி இன்னொரு பையனை காட்டலை. இவங்க 2 பேர் பண்ற அநியாயங்களை ஹீரோ சேனல் மூலம் வெட்ட வெளிச்சம் ஆக்கறார். ஒரு நாளுக்கு 18 மணி நேரம் மின்வெட்டு இருந்தும் இப்படி நம்ம ஊழலை எல்லாம் வெட்ட வெளிச்சம் ஆக்கறானேன்னு வில்லன் க்ரூப்புக்கு கோபம். இரு தரப்புக்கும் ஏற்படும் மோதலை கிட்டத்தட்ட ஷங்கரின் முதல்வன் போல் பரபரப்பா கொண்டு போக முயற்சி ( அண்டர் லைன் முயற்சி மட்டும் )  பண்ணி இருக்காங்க,.. 


 பவன் கல்யாண்க்கு என்ன நினைப்புன்னா எப்படியாவது அரசியல்ல புகுந்துடனும் , பெரிய ஆள் ஆகிடனும்னு.. அதுக்கு தக்க படி கதை.. இந்த மாதிரி கதை எல்லாம் ரஜினி மாதிரி பவர் ஃபுல் ஹீரோ அல்லது 100 படங்கள் ஹீரோவா நடிச்ச அனுபவம் மிக்க ஆட்கள் பண்ண வேண்டிய கதை.. ஆனாலும் சமாளிக்கறார்.. ஆந்திரா கேப்டனா மாறி ஏ 4 ஷீட்ல பக்கம் பக்கமா வசனம் பேசறார். 2 ஜோடி கூட டூயட், குத்தாட்டம் எல்லாம் போடறார். நம்ம ஊர் அஜித், விஜய் மாதிரி ஃபைட் , டான்ஸ் மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்தறார். 


 ஹீரோயின் லெமனா அவதாரம் எடுத்திருக்கும் தமனா.எலுமிச்சை கலர் தேகம். ஆனா வாய் தான் என்னமோ மாதிரி இருக்கும், தொட்டு விடத்தூண்டும் இடை அழகி. கேமராமேனுக்கு என்ன கோபமோ இவரை மிக மோசமா காட்டி இருக்காரு. ஹேர் ஸ்டைல் மகா மட்டம். அடிக்கடி க்ளோசப் ல உதட்டை சுளிச்சு வசனம் பேசும்பேது ஓங்கி நாலு அப்பு அப்பலாம் போல உள்ளது . டூயட் காட்சி 2 தவிர வேறு ஒரு சீனில் கூட இவரை பார்த்தால் கிக் வரவில்லை. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgdWAVEng8JRid8txExPMpso4NRIwiPEMyjtsyIKiUDAyoOEHNsetlvzXOUoZwE19UUhtmYsnh9ioOHf0w6UhdT34_zQZI73kfGdo9Pr_qVCN5C5Hro6aSGIPr1OXvJfIMiRwMCB8yCdPQ/s1600/gabriela-bertante-hot-stills-7.jpg
 2 வது ஹீரோயின் Gabriela Bertante. நாசூக்கா இருப்பது எப்படின்னு 365 நாள் டியூசன் வெச்சு சொல்லிக்குடுத்தாலும் கத்துக்க முடியாத விளைஞ்ச கட்டை.. பார்வையே சரி இல்லை.. டைரக்டர் உக்காருன்னா பாப்பா படுத்துக்கும் போல.. ஆண்டவா.. என்னை ஏன் இந்த மாதிரி பொண்ணுங்களை எல்லாம் பார்க்க வைக்கறே?அய்யோ ராமா!!  இவர் போட்டு வரும் லோ லோ லோ வெரி லோ கட் ஜாக்கெட்கள்  பிரம்மாச்சாரிகளை வெறி ஏற்றும்.செம டப்பாங்குத்து பாட்டு இருக்கு இவருக்கு 


வில்லன்  கோட்டா சீனிவாச ராவ். இயக்குநருக்கு செம நக்கல், அச்சு அசல் கலைஞர் மாதிரியே மேக்கப், கெடப், கண்னாடி, ஹேர்ஸ்டைல் எல்லாம். அவர் நீலிக்கண்ணீர் வடிக்கும்போது தமிழ் இனத்தலைவரையே நேரில் பார்த்தது போல் இருக்கு. 


 அவர் பையனாக வரும் பிரகாஷ் ராஜ்க்கு அப்படியே அழகிரி பாத்திரம். பட்டாசு. அவர் நடிப்பு பிரமாதம் என்றாலும் நமக்கு வெரைட்டி இல்லாததால் சலிக்கிறது. ஒரே மாதிரி நடிப்பை பல படங்கள்ல காட்டிட்டாரு..


காமெடிக்கு பிரம்மானந்தம். இன்னும் நல்லா வாய்ப்பு கொடுத்திருக்கலாம். அதிக காட்சிகள் இல்லை.. வந்த வரை ஓக்கே. 

 நாசர் அமைதியா வந்து போறார். சொல்லிக்கொள்ளும்படி பெரிசா இல்லை..


http://www.tupaki.com//twdata/2012/0912/news/Cameraman-Gangatho-Rambabu-New-Photos-14.jpg


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1. கரண்ட் பாலிடிக்ஸ் ,மேட்டரை சாமார்த்தியமாக திரைக்கதையில் நுழைத்தது. கலைஞர் , அழகிரி, தெலுங்கானா, மீடியாக்கள் டி ஆர் பி ரேட்டிங்க் ஏற்றிக்கொள்ள செய்யும்  தகிடு தித்தங்கள் எல்லாம் வெட்ட வெளிச்சம் ஆக்குவது 


2. நடைப்பயணம் செல்லும் பிரகாஷ் ராஜை ஹீரோ மடக்கி கேள்வி கேட்டு தரமசங்கடப்படுத்துவது  ( வை கோ வை தாக்கல்? ) 


3. அபாரமான வசனங்கள்,  அற்புதமான எடிட்டிங், க்ளைமாக்ஸ் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் ஒர்க்


4.  கொடுத்த காசுக்கு வஞ்சகம் இல்லாம 2 ஹீரோயினையும் காட்டு காட்டுன்னு காட்ட வெச்சது


5. பிளாக் டிக்கெட் விற் பவர்கள் ஆன் லைன் புக்கிங்க்க்கால் எப்படி பாதிக்கப்படறாங்க? என பிரமானந்தம் விளக்கும் காமெடி காட்சி


http://powerofandhra.com/wp-content/gallery/pawan-kalyan-movie-cameraman-ganga-tho-rambabu-latest-stills/pawan-kalyan-movie-cameraman-ganga-tho-rambabu-latest-stills-2.jpg


இயக்குநரிடம் சில கேள்விகள்


1. மீடியாவில் ஒர்க் பண்ணும் ஹீரோவுக்கு சி எம்  லேண்ட் லைன்ல ஃபோன் பண்றார். ஏன்? அவர் செல்லுக்கே கூப்பிடலாமே? அட்லீஸ்ட் இண்டர் காம் மூலம் கனெக்‌ஷன் குடுத்திருக்கலாம். என்னமோ கதை 1980ல நடப்பது போல் ஃபோன் வந்திருக்கு என்றதும் ஹீரோ தன் கேபினில் இருந்து 1 பர்லாங் தூரம் ந்டந்து எடிட்டர் ரூம்க்குப்போய் ஃபோன் அட்டெண்ட் பண்றார்


2. ஹீரோ வேல்யூ காட்ட பிரகாஷ் ராஜை தர தர என நடு ரோட்டில் இதுதாண்டா போலீஸ் டாக்டர் ராஜசேகர் மாதிரி இழுத்துட்டு வர்ற சீன் எல்லாம் ஓவரோ ஓவர், இவர் என்ன போலீஸா? பிரகாஷ் ராஜ் கேரக்டர் ஏன் ஒரு கேல்வி கூட கேட்கலை? தம்பி நீ யாரு?  என்னை இழுக்க? என கேட்டிருக்கனும். அட்லீஸ்ட் பிரகாஷ் ராஜ் டைரக்டர் கிட்டயாவது இது பற்றி ஆட்சேபம் தெரிவிச்சிருக்கனும் 


3. மாசம் 35,000 சம்பளம் வாங்கும் மீடியாவிமன் தமனா அடிக்கடி அழும்போது சகிக்கலை,. அட்லீஸ்ட் அஞ்சு ரூபாய்க்கு கர்ச்சீஃப் கூட வெச்சிருக்க மாட்டாரா? கஷ்டகாலம்டா சாமி 


4. பரத நாட்டிய உடைக்கு மரியாதை செய்யாட்டி பரவாயில்லை. அதை இப்படி கேவலப்படுத்தி இருக்க வேணாம்.  பரத நாட்டிய உடை அணிந்து ஹீரோயின் அண்ட் 17 பேர் குரூப் டேன்சர்ஸ் குத்தாட்டம் ஆடுவது அன்சகிக்கபிள் அட்டகாசம்


5,.ஹீரோ அடிக்கடி மீடியாவில் தன்னை விட ஹையர் ஆஃபீசரை பளார் பளார் என அறைவது ஏன்?காமெடியா? முடியல


6. தன்னை ஊரே வேடிக்கை பார்க்க அடிச்சு இழுத்து வந்த ஹீரோவை பழி வாங்க வில்லன் பிரகாஷ் ராஜ் அடியாளுங்க 65 பேரை அடிக்க விட்டு  16 பேரை வீடியோ ஷூட் எடுக்க வைக்கும் காட்சி செம காமெடி. அது என்ன ப்ளூ ஃபிலிமா? பல கோணங்கள்ல படம் எடுத்து வெட்டி ஒட்ட? 3 பேர் வீட்யோ ஷூட் பண்ணா பத்தாதா? ஏன்னா அந்த 65 பேரும் ஒன் பை ஒன்னாத்தான் ஹீரோ கிட்டே போய் ஃபைட் போடறாங்க .


7. பிரகாஷ் ராஜ் கூட ஃபைட் சீனில் ஹீரோவுக்கு உதடு, கன்னம் எல்லாம் ரத்தக்காயம், ஆனா அடுத்து அவர் டயலாக் பேசும் காட்சியில் ஒரு காயமும் இல்லை. பேசி முடிச்ச பின் உதட்டில் மட்டும் காயம். எடிட்டிங்க் ஃபால்ட்டா? அசிஸ்டெண்ட் டைரக்டர்ஸ் எல்லாம் என்னப்பா பண்றீங்க?  


http://www.indiancinemagallery.com/Gallery2/d/910058-1/Tamanna+in+Cameraman+Ganga+Tho+Rambabu+movie+stills+26_09_12+_14_.JPG


8. இடைவேளை வரை கதை ஒழுங்கா போச்சு, இடைவேளைக்குப்பிறகு கதை சம்பந்தம் இல்லாம 2 ஹீரோயின் கிட்டே மாட்டி தவிக்கும் ஆயுத  பூஜை அர்ஜூன் கணக்கா கேவலமா போகுதே ஏன்? 


9. இத்தனை நாளா திருநங்கைகளை நடனக்காட்சிகளில், பாடல் காட்சிகளில் தான் கிண்டல் பண்ணி அவங்க  மனம் புண் படி சினிமா உலகம் ந்டந்தது, இதுல கோரமான ஃபைட் சீன். 45 அரவாணிகள் ஹீரோ கூட ஃபைட் போடுவது கொடூரம், ஆபாசம் , அருவெறுப்பு 



10. அந்த அரவாணிகள் ஃபைட் சீன் முடிஞ்சதும் 2 போலீஸ் ஆஃபீசர்ஸ் வர்றாங்க. அதுல ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் லைட் கலர் காக்கி யூனிஃபார்மும், டார்க் கலர் கேப்பும் போட்டிருக்காரு, செம காமெடி 



11. பொதுவா அரசியல்வாதிங்க ஒயிட் அண்ட் ஒயிட் தான் போட்டிருப்பாங்க. இதுல பிரகாஷ் ராஜ் மட்டும் பி:ளாக்  அண்ட் பிளாக் போட்டுட்டு அச்சு அசல் தாதா மாதிரி வர்றார். எடுபடலை. டிரஸ்ஸிங்க் சென்ஸ் மகா மட்டம் . அவர் என்ன தி க கட்சி ஆளா? 


12. வில்லியாக மாறும் 2 வது ஹீரோயின் ரிவால்வரில் ஒரே ஒரு முறை ஹீரோவை சுடறார். உடனே புல்லட்ஸ் காலி. மீதி 5 புல்லட்ஸ் காக்கா தூக்கிட்டு போயிடுச்சா? இவர் பிளான் பண்ணித்தானே தாக்க வர்றார்? அதைக்கூட செக் பண்ணி வர மாட்டாரா? 


13. க்ளை8மாக்ஸ்ல பாரதிராஜா  படம் மாதிரி பொது ஜனங்கள் கூடி வில்லனை பழி வாங்கும் காட்சி சி ஜி ஒர்க் என சொல்ல்ப்படும் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் சீன் கலக்கல் தான். ஆனா அவங்க வர்றப்ப பில்டிங்கே அதிர்றது ரொம்ப ஓவர்.. 


14. பாடல் காட்சிகளில் தூம் தூம் பாட்டில் அச்சு அசல் அந்நியன் பாட்டான ரண்டக்க ரண்டக்க உல்டா பின்னணி இசை 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiAvs02daDiJhLx9a1mgjJ3w2TnJSddxggjAAfq7xai1x8WiNhgK38yyZdQDlnW6I1X-j1u0h1IaGbmzUHW5LB79-thrE_x19u0xJexHILwlKec4v0J-Z3oyplDGiNt9K8RVqBkJuLMp7tn/s1600/Tamanna958.jpg


 சி.பி கமெண்ட்  - தமிழ்ப்படங்கள் அதிகம் பார்க்காத ஜனங்கள், தெலுங்குப்பட ரசிகர்கள் மட்டும் பார்க்கலாம். மற்றபடி இது அரைச்ச மாவுதான் . மீறிப்போனா சாவு தான் . இந்த மாமூல் மசாலாக்குப்பையை  ஈரோடு அண்னாவில் பார்த்தேன்

http://telugu.way2movies.com/wp-content/uploads/2012/03/Puri-ropes-in-Gabriela-Bertante-for-hot-item-song.jpg

சைபர் க்ரைம் கேசில் மாட்டிய சிந்துஜா பர பரப்பு வாக்குமூலம்

கால் கேர்ள்' என்று சொன்னதற்காக மன்னிச்சுரு ஹேமா... தப்பு செய்த பின்னர் கதறியழுத பிரியதர்ஷினி!

 

சென்னை: தான் காதலித்து வந்த நபர், தனது தோழியிடமும் சகஜமாக பேசி நட்பு பாராட்டி வந்ததால் பொறாமை ஏற்பட்டு, தனது தோழியின் புகைப்படத்தையும், செல்போன் எண்ணையும் பேஸ்புக்கில் போட்டு இவர் விபச்சாரம் செய்கிறார் என்று அவதூறு பரப்பிக் கைதான பெண் என்ஜீனியர், தான் தப்பு செய்து விட்டதாகவும், தனது தோழி தன்னை மன்னிக்க வேண்டும் என்றும் தற்போது அழுது புலம்பி வருகிறார்.




சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜீனியராக வேலை பார்த்து வருபவர் ஹேமா. இவர் சென்னை காவல்துறை ஆணையரை அணுகி ஒரு புகார் கொடுத்தார்.
அதில், நான் கெளரவமான குடும்பத்தை சேர்ந்தவள். கடந்த வாரம் பேஸ்புக்கில் என்னைப்பற்றி தவறான தகவல் ஒன்றை பரப்பிவிட்டனர். என்னை ஒரு விபச்சார அழகியாக சித்தரித்து, எனது புகைப்படத்தையும், செல்போன் நம்பரையும் வெளியிட்டுவிட்டனர். உல்லாச விரும்பிகள் என்னை தொடர்பு கொண்டால், இரவை இன்பமாக கழிக்கலாம் என்று நான் அழைப்பது போலவே, வாசகங்களையும் வெளியிட்டுவிட்டனர்.




இதைப்பார்த்து எனது செல்போனில் ஏராளமான ஆண்கள், என்னை உல்லாசத்துக்கு அழைத்தனர். என்னால் பதில் சொல்ல முடியவில்லை. நான் அப்படிப்பட்ட பெண் அல்ல. தவறான தகவலை, பேஸ்புக்கில் வெளியிட்டுவிட்டனர் என்று நானும், பதில் சொல்லி முடியவில்லை. ஒரு கட்டத்தில் எனது செல்போனை ஸ்விட்ச் ஆப்செய்து விட்டேன். தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் கூட வந்தது. அலுவலகத்திலும் என்னை ஒரு மாதிரியாக பார்த்ததால் வேலைக்கும் போக முடியவில்லை.




இந்த இழிவான செயலில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். மேலும் தனது அலுவலகத்தைச் சேர்ந்த யாரோதான் இந்த செயலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று சந்தேகிப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.




இதையடுத்து இணை ஆணையர் சேஷசாயி தலைமையில் சைபர் கிரைம் போலீஸார் களத்தில் குதித்தனர். தீவிர விசாரணையில் ஹேமா குறித்து அவதூறாகத் தகவல் பரப்பியவர் அதே அலுவலகத்தில் பணியாற்றி வருபவரும், ஹேமாவின் நெருங்கிய தோழியுமான 26 வயது சிந்துஜா பிரியதர்ஷினி என்று தெரிய வந்து அனைவரும் அதிர்ந்தனர். குறிப்பாக ஹேமா பெரும் அதிர்ச்சி அடைந்தார்.



ஏன் இப்படிச் செய்தார் சிந்துஜா?



சிந்துஜாவும், ஹேமாவும் நெருங்கிய தோழிகள். அதே அலுவலகத்தில் சாப்ட்வேர் என்ஜீனியராக பணியாற்றிய அருண்குமார் இவர்கள் இருவருக்கும் நல்ல நண்பராக இருந்தார். இதில் சிந்துஜாவும், அருண்குமாரும் காதலித்துள்ளனர். அதேசமயம், ஹேமாவுடனும் நல்ல நட்புடன் பழகி வந்துள்ளார் அருண்குமார். அது சிந்துஜாவுக்குப் பிடிக்கவில்லை. தன்னிடமிருந்து அருண்குமாரை ஹேமா பிரித்து விடுவாரோ என்று பயந்துள்ளார். இதனால்தான் ஹேமாவைப் பற்றி அவதூறாக செய்தி போட்டு விட்டார்.




கைது செய்யப்பட்ட சிந்துஜா போலீஸில் கொடுத்த வாக்குமூலத்தில்,



ஹேமா எனது உயிர்த்தோழி. ஆனால் நான், அவருக்கு துரோகம் செய்து மன்னிக்க முடியாத குற்றத்தை செய்துவிட்டேன். எங்களுடன் வேலைபார்த்த என்ஜினீயர் அருண்குமாரை, நான் காதலித்தேன். ஹேமாவுக்கும் அவர் நன்கு அறிமுகமானவர்தான். நாங்கள் 3 பேரும், ஒன்றாக சுற்றுவோம். ஹோட்டலில் சாப்பிடுவோம்.



என்னை, அருண்குமாரும் காதலித்தார். எனக்கும், அவருக்கும் அடுத்த மாதம் திருமணம் நடக்க உள்ளது. நிச்சயதார்த்தம் கூட நடந்துவிட்டது. இந்த நேரத்தில்தான் விபரீத சந்தேகம் என்னுள் முளைத்தது. எனக்கு கணவராக வரப்போகிறவர் எனக்கு மட்டும்தான் சொந்தமாக இருக்க வேண்டும், அவர் என்னோடு மட்டும்தான் பேசி, பழக வேண்டும் என்று நினைத்தேன்.ஆனால் அவர் ஹேமாவோடும் வழக்கமான நட்போடு பேசி பழகினார். இது எனக்கு பிடிக்கவில்லை.



பேசுவதை நிறுத்திக்கொள்ளுமாறு ஹேமாவிடம் மறைமுகமாக சொல்லிப் பார்த்தேன். ஆனால் ஹேமா அதை கேட்கவில்லை. எனக்கு தெரியாமலேயே ஹேமா, அருண்குமாரோடு சென்று ஹோட்டலில் சாப்பிட்டாள். இது எனக்கு கோபத்தை உண்டாக்கியது. எனக்கு உரியவரை ஹேமா அபகரித்து கொள்வாளோ என்று நான் பயந்தேன்.



ஹேமாவோடு பழகுவதை நிறுத்த வேண்டும் என்று எனது வருங்கால கணவரிடமும் நான் சொன்னேன். ஆனால் அவரும் அதை பொருட்படுத்தவில்லை. மாறாக ஹேமாவின் அழகை வர்ணித்து, என்னிடம் வெறுப்பேற்றினார். ஒரு கட்டத்தில் ஹேமாவை திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறினார். அவர் விளையாட்டாகத்தான் அவ்வாறு சொன்னார் என்பது பின்னால்தான் தெரிந்தது. ஆனால் அதற்குள் ஹேமாவை பேஸ்புக்கில் இழிவுபடுத்தி தகவல்களை வெளியிட்டு விட்டேன்.




எனது தவறை ஹேமா மன்னிக்க வேண்டும். எனது வருங்கால கணவரும், என்னை மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். ஆனால் ஹேமா, சிந்துஜாவை மன்னிக்க முடியாது என்று கூறி விட்டார், புகாரையும் திரும்பப் பெற மறுத்து விட்டார். இதையடுத்து சிந்துஜாவைக் கைது செய்த போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.



கதறி அழுது கண்ணீர் விட்டபடி சிந்துஜா சிறைக்குப் போனது பார்க்கவே பரிதாபமாக இருந்தது. ஆனால் விளையாட்டுக்குக் கூட இதுபோன்ற குற்றத்தை யாரும் தயவு செய்து செய்ய வேண்டாம் என்று போலீஸ் இணை ஆணையர் சேஷசாயி அறிவுறுத்தியுள்ளார்.



சிந்துஜா செய்த தவறு நிரூபிக்கப்பட்டால் அவருக்குத் தகவல் தொழில்நுட்பச் சட்டப்படி 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.


நன்றி - தட்ஸ் தமிழ்

 வாசகர் கருத்து



Dinesh 08 Nov 2012 04:44 pm
சிந்துஜா பாவம் ப்ளீஸ் கேசை வாபஸ் வாங்கவும் ஹேமா .......
Reply
mukesh 08 Nov 2012 07:54 am
இதை காதல்னு சொல்லவே முடியாது நம்பிக்கை + சரியாக ஒருவரை ஒருவர் மனதார புரிந்து கொளுத்தல் இதுவே உண்மையான காதல் அதனால் இதை எப்படி காதல்னு சொல்லுவது?? ஒருவரை ஒருவர் சரியாக புரிந்து கொள்ளவில்லை காதலில் சந்தேகம் இருக்க கூடாது இருந்தால் இப்படி தான் ????
Reply
Suman 07 Nov 2012 09:11 pm
சிந்துஜா வ மன்னிக்கலாம் ப்ளீஸ் ......
Reply
jaffar 07 Nov 2012 08:14 pm
தோழிகள் இரண்டுபேரும் ஒருவருக்கொருவர் முகம் பார்த்து பிரச்சனையை பேசி இருந்தால் இந்த அளவுக்கு ஆகியிருக்காது என்பது என் கருத்து
Reply
ram 07 Nov 2012 08:04 pm
இதுவும் ஒரு புது புது அர்த்தங்களே...அதிக காதல் முறிவுக்கு வித்திடும்?
Reply
SATTAM 07 Nov 2012 04:45 pm
உப்பு திண்டவன் தண்ணி குடிக்கணும் ..... ஆனால் உப்பை தின்ன வைத்தவனுக்கு .....???? குற்றம் செய்ய தூண்டிய அந்த கள்ள ....ஆணுக்கும் பெண்ணுக்கும் என்ன தண்டனை ....???
Reply
arulemily 07 Nov 2012 04:39 pm
Priyadharsini செய்தது தவறுதான்.ஆனால் ஒரு maatham தான் உள்ளது அவங்க கல்யாணத்துக்கு ,இப்ப இப்படி ஆனால் அவங்க வாழ்க்கை என்ன ஆகும் .அவங்கதான் வருத்த படுரன்களே,அப்புறம் மன்னிச்சி விடலாம்ல .
Reply
Tamil 07 Nov 2012 04:20 pm
சிந்துஜா செய்தது 100 க்கு 100 சரியே!!! நிச்சயதார்த்தம் ஆனா ஒரு ஆணிடம் கொஞ்சி குலவ சல்லாபிக்க அங்கே என்ன இருக்கிறது??? அதுவும் நிச்சயிக்க பட்ட பெண் அதே அலுவலகத்தில் பணி புரிகிறாள் என்று தெரிந்தும் ஹேமா செய்தது சிந்துஜா குறிப்பிட்டது போல் "............." செய்வதற்கு சமமாகும்... ஹேமாவும், அந்த ஒம்போது broker அருண்குமாரும் செய்த plan போலவே தெரிகிறது...இப்போ இவர்களுக்கு route clear !! பாவம் சிந்துஜா....
Reply
Super Appu 07 Nov 2012 01:48 pm
தவறு செய்பவரை மட்டும் இல்லை அதற்கு காரணமாக இருந்தவர்களும் குற்றவாளிகள்தான், அவர்களையும் பிடிச்சி ஜெயில்ல போடுங்க சார்....
Reply
unmayaanavan 07 Nov 2012 12:38 pm
இவளுகளுக்கு பத்து ரூபாய் சம்பாதிக்கிறது எவ்வளவு கஷ்டம்னு தெரிஞ்சா இப்படி கொழுப்பு எடுத்து ஆடுவாளுகன்னு பாருங்க...கேம்பஸ் இன்டர்வியூன்னு வச்சு வெந்தது வேகாதது எல்லாம் எடுத்து போட்டு முப்பதாயிரம் நாற்ப்பதாயிரம்ன்னு சம்பளம் கொடுத்தா இந்த வேலைதான் செயவாலுக. போங்கடா நீங்களும் உங்க வாழ்க்கையும்..
Reply
joe 07 Nov 2012 06:51 pm
பெஸ்ட் கமெண்ட் பாஸ்

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 9.11.2012 ) 3 படங்கள் முன்னோட்ட பார்வை


http://imageshack.us/a/img842/1351/stolen2012frontcover696.jpg
1. STOLEN - தி எக்ஸ்பென்டபிள்-2' படத்தை இயக்கி, ஹாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்திய, சைமன் வெஸ்டின் அடுத்த படைப்பு ஸ்டோலன். இது, ஒரு அதிரடி ஆக்ஷ்ன் த்ரில்லர். வங்கியில் கொள்ளையடித்ததால், "கம்பி' எண்ணி விட்டு திரும்பும், நிக்கோலஸ் கேஜ், தன்னுடைய மகள் காணாமல் போன, தகவல் அறிந்து அதிர்ச்சி அடைகிறார்.



 தன்னுடைய மாஜி நண்பனே, பணத்துக்காக, மகளை கடத்தி வைத்திருப்பது தெரிந்ததும், மகளை மீட்பதற்காக களம் இறங்குகிறார். நண்பரால் கடத்தப்பட்ட மகளை, நிக்கோலஸ் மீட்கிறாரா என்பதை, பரபரப்பாகவும், திருப்பங்களுடனும் விளக்குகிறது, இந்த படம். அமெரிக்காவில் ஏற்கனவே வெளியாகி விட்ட இந்த படம், இந்தியாவில் விரைவில் திரைக்கு வரவுள்ளது. நிக்கோலஸ் கேஜ், டானி ஹஸ்டன், மாலின் அஜெர்மன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.நேற்று  8 11 2012 ரிலீஸ் ஆன இந்தப்படம் இப்போ ராயல் தியேட்டர்ல ஓடிட்டு இருக்கு


 இந்தப்படத்தின் விமர்சனம் படிக்க 

 Stolen (2012) - சினிமா விமர்சனம் - http://www.adrasaka.com/2012/11/stolen-2012.html


http://galleries.celebs.movies.2.pluzmedia.in/albums/abirami/uploads/Kollywood/2012/Sep/30/Ajantha_Movie_Press_Meet_Stills/profile_Ajantha_Movie_Press_Meet_Stillsd9214fac9792b161e0572117d49d7302.jpg


2. அஜந்தா -அஜந்தா படம் பார்க்க டிக்கெட் பத்து ரூபாய்: தயாரிப்பாளர் தாராளம்!


Producer offer Just Rs.10 ticket for Ajantha movieராஜ்பாரவிசங்கர் என்பவர் மருந்து மொத்தவியாபாரி. அவருக்கும் சினிமா தயாரிக்கும் ஆசை வந்தது. சுமார் 3 வருடங்களுக்கு முன்பு அஜந்தா என்ற படத்தை தயாரித்தார். அதை திருமாவளவன் என்பவர் இயக்கினார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் தயாரானது. இளையராஜா இசை அமைத்திருந்தார். 
இந்தப் படத்துக்காக சிறந்த இசை அமைப்பாளர் என்ற தமிழக அரசின் விருதையும் பெற்றார். ஆனால் இந்தப் படம் தயாரிப்பில் இருந்தபோதே தயாரிப்பாளர் ராஜ்பா ரவிசங்கருக்கும், இயக்குனர் திருமாவளவனுக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால் ராஜ்பா ரவிசங்கர் இயக்குனரை நீக்கிவிட்டு தானே இயக்குனர் என்று விளம்பரம் செய்தார். இதனை எதிர்த்து திருமாவளவன் இயக்குனர் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்க்திலும் முறையிட்டார். இரு சங்கமும் பஞ்சாயத்து பேசி இயக்குனர் என்று திருமாவளவன் பெயரைத்தான் போட வேண்டும் என்று தீர்ப்பு கூறியது.

இந்தக் கோபத்தில் தயாரிப்பாளர் ராஜ்பா ரவிசங்கரும் படத்தை வெளியிடாமல் கிடப்பில் போட்டார். பின்னர் தெலுங்கில் வெளியிட்டார். அங்கு படம் பெருசாக போகவில்லை. இப்போது தமிழில் வெளியிடும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். இயக்குனர் என்று தனது பெயரையும் திருமாவளவன் என்ற பெயரை திருமால் என்று சுருக்கி போட்டும் படத்தை வெளியிடுகிறார். 
படம் பார்க்க வருகிறவர்கள் படத்தின் பேப்பர் விளம்பரத்தை கொண்டு வந்தால் அவர்களுக்கு டிக்கெட் விலை 20 ரூபாய் என்றும், சனி ஞாயிற்று கிழமையில் டிக்கெட்டின் விலை வெறும் பத்து ரூபாய் என்றும் அறிவித்திருக்கிறார். அஜந்தாவின் தமிழ் பதிப்பில்  ரமணா நடித்துள்ளார். மற்ற மொழிகளில் அந்தந்த மொழி நடிகர்கள் நடித்துள்ளனர். வந்தனா குப்தா என்ற மும்மை மாடல் ஹீரோயினாக நடித்துள்ளார், சுமார் 5 கோடியில் தயாரன இந்தப் படம் இப்போது வெளிவருகிறது.

படத்தின் கதை இதுதான். ஒரு மேடைப்பாடகனுக்கு சினிமாவில் பாடகராக வேண்டும் என்று ஆசை. ஒரு கோவிலில் பாடும்போது அங்கு ஒரு பாடகியை சந்திக்கிறார். அவள் பேரழகி, நன்றாக பாடுவள் ஆனால் பார்வைதிறன் அற்றவள். அவளுக்கு பார்வை திரும்புவதற்காக இவன் பாடி பாடி சம்பாதிக்கிறான். 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgLektAyyLa0PcOrUjnSVKBJWoDq5CC44Ap5LFotSnEQYcKFTeTE-34FH-YexqcSQhO8oQ2cRc_y-dj4S20HD9yKhwtkFLoRSerFk2cJ1OC-Ev4hhSkRGwBKvlEveFHNUmSt3LaFbXim15o/s1600/Ajantha+Movie+Latest+Hot+Stills+(1).jpg
சினிமாவில் பெரிய பாடகனாகிறான். அவளது கண் ஆபரேஷனுக்கு ஏற்பாடு செய்துவிட்டு வெளிநாட்டுக்கு செல்லும்போது விமான விபத்தில் இறந்து விடுகிறான். பார்வை திரும்பும் இவள் அவனை பார்க்க விரும்புகிறாள். இப்படி 80களில் எல்லோரும் துவைத்து காயப்போட்ட கதைதான் இது. இதன் இயக்குனர் திருமாவளவன் அதன்பிறகு வெண்மணி என்ற படத்தை எடுத்து அதன் தயாரிப்பாளருக்கு பலகோடி நஷ்டத்தை கொடுத்தவர். இந்த தயாரிப்பளர் பத்து ரூபாய் டிக்கெட் கட்டணத்தில் படத்தை வெளியிடுகிறர்.
கார்த்திக் நடிச்ச நிலவே முகம் காட்டு கிட்டத்தட்ட இதே கதை தான்


எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க சாமி...ஈரோடு ஸ்டாரில் ரிலீஸ்


3.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh11JiG3Ub4prR8PkP0SGgyQt_ZXQBnvp0IW2PTN9WCxCzX4paPPe7UiH7auDYy5xnkWrtZVc3HW2U30l_7bSShDdkY8ypYF-8DVMs4oTDpsvmyLCGb4jQfHT2TkseOaiVZuxsfGd6l4iI/s1600/freetelugucomedyclips.blogspot.com-pawan-kalyan-Cameraman-Ganga-Tho-Rambabu.jpg 

3. camera man ganga tho rambabu -பவன் கல்யாண் , தமனா , பிரகாஷ் ராஜ் நடிச்ச தெலுங்கு படம். அக்டோபர் 18 வியாழக்கிழமையே ரிலீஸ் ஆகிடுச்சுஆனா ஈரோட்டில் நேற்று ரிலீஸ் . அங்கேயும் ஜெ போல கூட்டுத்தொகை 9 வந்தா ராசின்னு நினைக்கற ஆட்கள் இருப்பாங்க போல .1600 திரை அரங்குகளில் ரிலீஸ் . ரிலீஸ்க்கு முன்பே பரபரப்பாக பேசப்பட்ட படம் .காமெடிக்கு பிரம்மானந்தம் இருக்காரு. கோட்டா சீனிவாசராவ் வில்லன் போல... .கோவையில் ப்ரூக் ஃபீல்டில், கே ஜி ஆர்ட்சில் ரிலீஸ்

Cameraman Gangatho Rambabu - சினிமா விமர்சனம் | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/11/cameraman-gangatho-rambabu.html

 


ஆல் டிகிரி ஹோல்டர்ஸ் யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்

சுகமான குளியல் ......
1.மின்வெட்டுக்கு மற்றவர்கள் மீதும் குற்றம்சாட்டுவதை நிறுத்த வேண்டும்: கருணாநிதி # ஓஹோ உங்க மேல மட்டும் சுமத்தனுமா? 



-------------------



2. சயின்ஸ் பிக்ஸன் ஸ்டோரி - புதிய ட்வீட்டரின் முதல் ட்வீட் - ரீடு மை லாஸ்ட் ட்வீட்



-------------------


3. வாகனம் ஓட்டும் பெண்களால் அதிக விபத்து நிகழாததற்கு காரணம் விபத்து நடந்தால் செய்தியில் அப்பெண்ணின் வயது வெளி வந்துவிடுமே



----------------------


4. டியர் ,நான் ஒரு திகில் கவிதை சொல்றேன் வெட்கப்படாம கேளு.அதாவது உன் முகத்தை வர்ணிக்கப்போறேன்



=------------------


5. கண்டக்டர் - ஆம்பளைங்க எல்லாம் பின்னால போங்கய்யா.பொம்பளையை உரசிக்கிட்டு, #



யோவ் அது என் சொந்த சம்சாரம்




-------------------------





6. சந்தி சிரித்த பூந்திக்கு நந்தி விருது அடடே # 9 தாரா



-------------------------


7. சில முனிவர்க ள் நிஷ்டையில் அமர்வதே மேனகைகள் வருவார்கள் என்ற நப்பாசையில்தான்்




-----------------------


8. வம்புக்கு நீ அன்புக்கு எங்கம்மா



--------------------

9. கடுப்பில் இருக்கும் போது மனைவியின் முகத்தை பார்ப்பதை தவிர்த்து விடுங்கள். இல்லனா கடுிப்பு அதிகமாகிடும்




------------------------


10. அன்பே ! உன் கூந்தலை விட உன் வாய் தான் நீளம் :-))



---------------------





11. நான் ஏன் சராசரியா சாதாரணமா இருக்கேன்னா ஊரோடு ஒத்து வாழ்னு பெரியவங்க சொன்னதால ''':-)




-----------------------


12. துப்பாக்கி எனது கனவுப் படம்: விஜய்# படம் பூரா தூங்கிட்டு ரசிகர்களையும் தூங்க வெச்சுடுவீங்க்ளோ?:




--------------------------


13. நவ ராத்திரி வர்ற டைமில் முத ராத்திரி கொண்டாடுனா உம்மாச்சி கண்ணை குத்துமா?




-------------------


14. மழைக்காலத்துல துப்பாக்கி ரிலீஸ் ஆகுதே நமுத்துடாது? # சும்மா




-----------------


15. மழை வந்த இரவுகளில் புத்திசாலி கணவர்கள் வாயைத்திறந்து எதிர்க்கருத்து ஏதும் கூறி வம்புச்சண்டையை வளர்த்துக்கொள்ளமாட்டார்கள்




-------------------------



Embedded image permalink

16. பார்வை பரிமாறல் மட்டும் போதும் என நினைக்கும் காதலர்கள் ஹோட்டல் ,ஐஸ்க்ரீம் கடைகளில் எதிர் எதிரே அமர்ந்து கொள்கின்றனர்




-------------------------



17. மழையின் காரணமாக நிறுத்தப்படுவது கிரிக்கெட் போன்ற அவுட்டோர் கேம்ஸ் மட்டுமே :-)




--------------------------


18. அத்தான்.நீங்க சொன்ன சின்ன பொய் எது? பெரிய பொய் எது?



சொல்லிடுவேன்.பெரிய சண்டை வந்துடும்.சின்ன புள்ள மாதிரி அழுவே :-)



----------------------


19. பப்ளிக் நியூசென்ஸ் =பொதுமக்களின் புதிய அறிவு # சபாஷ் துபாஷ்




----------------------


20. அத்தான்.மழை வருது.சமைக்கற் மூடே இல்லை ஹோட்டல் போலாமா?



ம்kகும்.  ,அதான் மழை வருதே.எப்டி போக? நானே சமைச்சு தொலைக்கறேன்



-----------------------

Embedded image permalink



21. கமலா காமேஷ்-ஐ தமிழ் சினிமாவில த்ரிஷாவின் ஓல்டு வெர்ஷனாக உலாவ விட்டதில் விசுவிற்கு பெரும் பங்கு உண்டு



------------------------


22.  ஜெ வுக்கு எமகண்டம் கரண்ட்லதான் எலக்சன் டைம்ல ஷாக் அடிக்கும்




----------------------


23. வீரபாண்டி ஆறுமுகம் விடுதலை, அரசுக்கு பெரிய அடி! - கலைஞர்! # கண்ணா ரெட் காயின் போட்ட பின்னாடி பாலோ காயின் போடனும்.கேரம் விதி - ஜெ



----------------------


24. படிச்சவனுக்கு ஒரு டிகிரி.படிக்காதவனுக்கு ஜூரம் வந்தா 102 டிகிரி




------------------------


25. குத்துப் பாட்டுக்கு ஆடினால் தனி கெளரவம் கிடைக்கிறது... சமீரா ரெட்டி # ஓஹோ ! உங்க ஊர்ல அதுக்கு பேரு கவுரவமா?எங்க ஊர்ல அயிட்டம் கேர்ள்




---------------------------------


 

Thursday, November 08, 2012

கேப்டன் பற்றி நான் சொன்னது நடந்தது - வடிவேல் பேட்டி

http://im.videosearch.rediff.com/thumbImage/videoImages/videoImages1/youtube/rdhash175/20Ju-KjZi_I.gif

ஒரு காமெடியனா விஜயகாந்த்கிட்ட தோத்துட்டேன்!"


சமஸ்
படங்கள் : கே.ராஜசேகரன்
திடீர் என்று நிகழும் சில அற்புதமான சந்திப்புகள். வடிவேலுவை நீண்ட காலத்துக்குப் பின் சந்தித்தது அந்த ரகம்!



 ''சொகமா?''


''நல்லா இருக்கேண்ணே... நல்லா இருக்கேன். நல்லா ஆரோக்கியமா இருக்கேன். பார்த்தீங்களா... ஒடம்பைக் கட்டுக்குள்ள கொண்டுவந்திருக்கேன் (புஜத்தைக் காட்டுகிறார்).''



''ரஜினியே படம் செய்தால்கூட, 'வடிவேலுவிடம் முதலில் தேதி வாங்குங்கள்’ என்று சொல்லும் நிலை இருந்தது. ஆனால், இப்போது நீங்கள் படம் நடித்து ஒன்றரை வருடங்கள் ஆகின்றன. என்ன நடக்கிறது?''



''ஒரு உண்மையைச் சொல்லட்டுங்களா? யாருமே என்கிட்ட பேசுறதே இல்லண்ணே. யாரும் போன்கூடப் பண்றது இல்ல. ஆனா, அதைப் பத்தி நான் கவலைப்படல. மௌனமாக்கவனிச்சுக் கிட்டு இருக்கேன். இது ஒரு காலம். இதையும் தாண்டி வருவோம்னு இருக்கேன்.''




''உங்களை வைத்துப் படம் பண்ணப் பயப்படுகிறார்களா?''




http://www.tamil.haihoi.com/Gallery/Downloads/Tamil-Celebreties-Gallery/Vadivel/Vadivel-0019.jpg



''தெரியலண்ணே... தெரியல.''



''முதல்வருக்கு உங்கள் மீது கோபம் ஏதும் இருப்பதாக நினைக்கிறீர்களா?''



''ம்ஹூம்... சும்மா சொல்லக் கூடாது. அவங்க பாட்டுக்கு அரசாங்க வேலையில கவனத்தைக் காட்டுறாங்க. அவங்களுக்கு இருக்குற வேலைக்கு முன்னால நாம எல்லாம் ஒரு பொருட்டா? அப்புறம், அவங்க என் மேல கோவப்படற மாதிரி நான் நடந்துக்கவும் இல்லையே? அவங்க இன்னைக்குச் சொல்றதைத்தானே நான் அன்னைக்கே சொன்னேன்? இது வேற கதை. நம்மகூடவே திரிஞ்சுக்கிட்டு எப்படா நாம கீழ விழுவோம்னு பார்த்துக்கிட்டு இருப்பாய்ங்க இல்ல... அப்படி ஒரு கூட்டம் இதுக்குப் பின்னாடி இருக்கு.''




''தொழில் போட்டியைச் சொல்கிறீர்களா?''



''இருக்கும். நீங்க கண்ணாலகூட ஒருத்தரைப் பார்த்திருக்க மாட்டீங்க. ஆனா, அவரு உங்களை எதிரியா நெனைச்சுக்கிட்டு இருப்பாரு. ஒருத்தரை நேசிக்க எப்படி நியாயம் வேணாமோ, அதேபோல வெறுக்கவும் நியாயம் வேணாம். பச்சப்புள்ளகூட என்னையப் பார்த்தா, 'வடிவேலு... வடிவேலு’னு குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கும். எவ்வ ளவு பெரிய வரம் இது? ஒருத்தருக்குக் கூட உறுத்தாமலா இருக்கும்?''



''கருணாநிதியையோ, அழகிரியையோ சந்தித்தீர்களா? தேர்தலில் தி.மு.க. உங்களை வைத்து ஆதாயம் அடைந்தது. ஆனால், ஸ்டாலின் மகனும் அழகிரி மகனும் எடுக்கும் படங்களில்கூட உங்களுக்கு நடிக்க வாய்ப்பு அளிக்கவில்லை. இதுபற்றி எல்லாம் எதுவும் பேசினீர்களா?''



''பொதுவா ஒண்ணு சொல் றேண்ணே... இப்போ வீட்டைவிட்டு நான் எங்கேயும் போறது இல்ல. ஒண்ணு சென்னை; இல்லைன்னா அன்னை. எங்க அம்மாவைப் பார்க்க மதுரைக்குப் போவேன். அவ்வளவு தான். எல்லாரும் என்னைய ஒதுக் கிட்டதா நீங்க நெனைக்கலாம். ஆனா, இப்படி ஒரு காலமும் வேணும்னு நான் நெனைக்கிறேன். 1991-ல 'என் ராசாவின் மனசிலே’ வந்துச்சு. 20 வருஷம்...



 ஓடு ஓடுனு ஓடினேன். நிக்கக்கூட நேரம் இல்ல. கடுமையான உழைப்பு. ஒரு நகைச்சுவை நடிகன் கிறவன் வெறும் நடிகன் மட்டும் இல்லை; படத்துல அவன் வர்ற ஒவ்வொரு காட்சியி லயும் அவனுக்கு நேரடிப் பொறுப்பு இருக்கு. ஒரு பக்கம் நடிப்பு; இன்னொரு பக்கம் யோசனை. 'அய்யய்யோ வந்துட் டான்’னு பேசணும். 'ஆஹா! வந்துட்டான்யா... வந்துட் டான்யா’ம்பேன். இன்னைக்குத் தமிழ்நாட்டுல இந்த வசனத்தைப் பேசாத ஆளுங்க யாரையாவது அடையாளம் காட்டுங்க பார்ப்போம்.



சட்டுனு ஒரு நிமிஷத்துல வர யோசனை இல்லண்ணே இதெல்லாம். உழைப்பு... கடினமான உழைப்பு. மனசாலயும் உடம்பாலயும் ஓடுற பொழப்பு. மூச்சு அடைக்குற அளவுக்கு மூச்சிரைக்க ஓடின உங்களுக்கு ஒரு மரத்தடியில உட்கார நாற்காலி போட்டுக்கொடுத்தா, எவ்வளவு இதமா இருக்கும்? எனக்கு இப்போ அப்படித்தான் இருக்கு.



 ரொம்பக் காலத்துக்குப் பின்னால வீட்டுல அம்மா, சம்சாரம், புள்ளைங்ககூட நிறைய நேரம் இருக் கேன். வாழ்க்கையில எதுக்காக ஓடுறோம், புள்ளகுட்டி சந்தோஷத்துக்குத்தானே? இப்ப நான் ஒவ்வொரு நிமிஷமும் அவங்களைச் சந்தோஷப்படுத்திக்கிட்டு இருக்கேன். அதனால, யார் மேலயும் எனக்கு எந்தக் குறையும் இல்ல.''



''ஆனாலும், இது பெரிய இடைவெளி இல்லையா?''



''இல்ல, ஒவ்வொரு படைப்பாளிக்கும் இது மாதிரி ஒரு இடைவெளி வேணும். எனக்கு அந்த இடைவெளி எப்படி ஏற்பட்டுச்சுங்கிறது வேற விஷயம். அதைத் தனியா வெச்சுக்கு வோம். ஆனா, இந்த மாதிரி ஒரு ஓய்வை நம்மளாவாவது உருவாக்கிக்கணும். வேலையில நாம இதுவரைக்கும் என்ன செஞ்சிருக்கோம், எங்கே எல்லாம் தப்பு பண்ணியிருக் கோம், எதை எல்லாம் சரிசெஞ்சுக்கணும்னு யோசிக்க இந்த ஓய்வு முக்கியம்.




இப்போ காலையில ஒரு ஆறு ஆறரைக்கு எழுந்திரிக்கிறேன். மெள்ள மாடியிலயே ஒரு லாந்து. அப்புறம் சாப்பிட்டுட்டு உட்கார்ந்தன்னா, யோசனை ஓடிக் கிட்டே இருக்கும். பக்கத்துல ஒரு பேனாவும் டைரியும் மட்டும் வெச்சுக்குறது. எதெல்லாம் தோணுதோ, அப்பப்ப குறிச்சுவெச்சுக்குறது. ஆயிரக்கணக்குல குறிச்சுவெச்சு இருக்கேண்ணே. நேரம் வரும்போது... உருட்டித் திரட்டி எடுத்துவிடுவேன்.''



''வடிவேலுவுக்கு உள்ளே ஓர் எழுத்தாளரும் இருக்கிறாரா?''



''அய்யய்யே... எழுத்தாளன் மட்டும் இல்ல... பாடகன், இசையமைப்பாளன், இயக்குநரு... எல்லாம் இருக்காய்ங்க. ஆனா, அதெல்லாம் நமக்கே நமக்கு. வெளியே விடுறது இல்ல. நம்ம ஜோலி என்ன? நடிக்கிறது, சிரிக்கவைக்கிறது. அதை மட்டும்தான் வெளியே விடுவோம்.''



''அரசியலில் கால்வைத்தது தவறு என்று உணர்கிறீர்களா?''



''நீங்க ஒண்ணு புரிஞ்சுக்கணும்... நான் யாரு? எங்கே இருந்து வந்தேன்? மதுரைச் சந்தையில திரிஞ்சுக்கிட்டு இருந்தவண்ணே நானு. இன்னைக்குத் தமிழ்நாட்டுல என்னைய அடையாளம் தெரியாத ஆளே கிடையாது. எது இந்த எடத்துக்குக் கொண்டுவந்து உட்காரவெச்சுருக்கு?


காலம். அதோட வெளையாட்டுல இந்த அரசியல் ஆட்டமும் ஒண்ணு. அரசியல் லாப - நஷ்டக் கணக்கை விடுங்க. லட்சோப லட்ச மக்களை நேருக்கு நேராப் பார்க்குற வாய்ப்பு அப்ப கிடைச்சுது. அந்தக் கூட்டத்தை நீங்க பார்க்கணுமே... அப்பாடி! வெறும் தலையாத் தெரிஞ்சுச்சுண்ணே... தலையாத் தெரிஞ்சுச்சு. இந்த சாதாரண மனுஷன் மேல இம்புட்டுப் பாசமானு கெறங்கிப்போனேன்.''

http://cinesouth.com/images/new/03082009-THN10image1.jpg

''ஆனால், கூட்டம் ஓட்டாகவில்லையே? விஜயகாந்த் எதிர்க் கட்சித் தலைவராக உருவெடுத்தாரே?''




''நான் அந்த ஆட்டைக்குள்ள போக வேணாம்னு நெனைக் கிறேன். ஆனா, ஒண்ணு சொல்றேன்... ஒரு காமெடியனா நான் அவருகிட்ட தோத்துட்டேன். என்னா காமெடி, என்னா காமெடி... பெரிய காமெடியர்ணே அவரு. நான் அன்னைக்குச் சொன்னப்ப யாரும் நம்பலை; ஆனா, இன்னைக்கு எல்லாரும் கண்ணாற பாக்குறீங்க. நம்ம அடிச்ச கோடங்கி பலிக்குதுல்ல?


ஒரு படத்துல புரட்சித் தலைவர் சொல்வாரு... 'எனக்கு எதிரியா இருந்தாக்கூட, அதுக்குத் தகுதியா இருந்தாத்தான் நான் ஏத்துக்கிடுவேன்’னு. அதைத் தமிழக முதலமைச்சர் நிறைவேத்திட்டாங்க. ஒரு முதலமைச்சரு, சட்டசபையில எழுந்திருச்சு, 'உங்களோட கூட்டணி வெச்சுக்கிட்டதுக்காக வெட்கப்படுறேன்... வேதனைப் படுறேன்... அசிங்கமா இருக்கு’னு சொல்றாங்கன்னா, அதுக்கு மேல நானெல்லாம் சொல்ல என்ன இருக்கு?''




''தேர்தலுக்குப் பின் தே.மு.தி.க-வினரிடம் இருந்து மிரட்டல்கள் ஏதும் வந்ததா?''  



''ம்... அதெல்லாம் வந்துக்கிட்டுதான் இருக்கு. நான் எதையும் கண்டுக்கிறது இல்ல.''



''இடைப்பட்ட காலத்தில் தமிழ் சினிமாவில் நடக்கும் மாற்றங் களைக் கவனிக்கிறீர்களா?''



''என்ன, இப்படிக் கேட்டுட்டீங்க? நம்ம உசுரு உறைஞ்சு கிடக்குற இடம்ணே அது. படம் பார்க்குறதோட மட்டும் இல்ல. எல்லாம் எப்படி இருக்காங்கன்னுகூட விசாரிச்சுக் கிட்டுதான் இருக்கேன். சமீபத்துல கூட கவுண்டமணி அண்ணனோட அம்மா தவறிப்போனதைப் பத்தி ஒரு நண்பர்கிட்ட பேசிக்கிட்டு இருந்தேன்.''



''தமிழக நகைச்சுவை நடிகர்கள் சாதி சார்ந்து தங்களை அடையாளப்படுத்திக்கொள்வதை எப்படிப் பார்க்கிறீர்கள்?''



''மத்தவங்களைவிடுங்க... என் சாதி நகைச்சுவை சாதி. நாட்டுல இருக்குற ஏகப்பட்ட சாதிகள் மத்தியில இந்த சாதிக்கு ஒரு இடம் கொடுத்தீங்கன்னா, புண்ணியமாப் போகும். நாட்டுல வெட்டுக்குத்து இருக்காது; எல்லோரும் சந்தோஷமா வாழலாம். இப்பவே பாருங்க. நம்மளோட பஞ்ச் டயலாக் ஒவ்வொண்ணும் நாட்டுல மாற்றத்தை உண்டாக்கி இருக்கா, இல்லையா?



ஒருத்தன் ரொம்ப நேரமா பஸ்ஸுக்காக நிக்கிறான். வர்ற கதியா இல்ல. இந்த நேரத்துல அவசர அவசரமா வர்ற இன்னொருத்தன் பொறுமை இல்லாம இவன்கிட்ட கேக்குறான்... 'ஏங்க, பஸ்ஸு எப்போ வரும்?’ இதைக் கேட்டு இம்புட்டு நேரமா நிக்கிறவனுக்கு எவ்வளவு வெறி வரும்? அங்க போடுறான் பாருங்க நம்ம பஞ்ச் டயலாக்கை. 'வரும்... ஆனா, வர்றா££து’. சண்டைக்காரய்ங்க எல்லாரையும் சுமுகமாக்கி விடுதுல்ல இந்த நகைச்சுவை?''




''ஆனால், இப்படியே எல்லாவற்றையும் நகைச் சுவையாகப் பார்க்க, பேச ஆரம்பித்து, மக்களிடம் கொஞ்சம்கூட சொரணையே இல்லாமல் போய்விடும் போல் இருக்கிறதே? ஒருவகையில் நீங்கள் நடித்த காட்சிகளைத் தினமும் டி.வி-யில் போட்டுப்போட்டு முக்கியமான பிரச்னைகளில் இருந்து மக்களைத் திசை திருப்பும் வேலை நடக்கிறதோ என்றுகூடத் தோன்று கிறது. நீங்கள் இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?''




''அய்யய்யோ, நீங்க பயங்கரமா யோசிக்கிறீங்க (சிரிக்கிறார்). நான் அவ்வளவுக்கு யோசிக்கலை. ஆனா, மக்களை நேர்ல பார்க்கும்போது அவங்க மன அழுத்தத்துக்கு நாம ஒரு மருந்தா இருக்கோம்கிறது தெரியுது. என்னைப் பொறுத்த அளவுல, நான் எல்லாத்தையும் கவனிக்கிறேன்.



 எல்லாப் பேரையுமே நடிகனாத்தான் பார்க்குறேன் கைப் புள்ள, வண்டு முருகன், நாய் சேகர், படித்துறை பாண்டி, அலார்ட் ஆறுமுகம், ஸ்னேக் பாபு... இப்படி நான் நடிச்ச ஒட்டுமொத்த கேரக்டரும் நான் கவனிச்ச ஆளுங்கதான். இப்படி நான் கவனிச்சதை எனக்குத் தெரிஞ்ச தமிழ்ல கொடுக்குறேன். அதுல நீங்க என்னென்னவோ கண்டுபிடிக்கிறீங்கண்ணே.''




''எல்லாரும் கவலையை மறக்க உங்கள் படம் பார்க்கிறார்கள். நீங்கள் கவலையை மறக்க என்ன செய்வீர்கள்? உலக சினிமாக்கள் எல்லாம் பார்ப்பீர்களா?''



''கிடையாதுண்ணே... பொழுதுபோக்குன்னா நண்பர்கள்கூட பேசிக்கிட்டு இருப்பேன். டி.வி-ல பழைய பாட்டு பார்ப்பேன். ஆறுதல்னா, தலைவர் பாட்டு கேட்குறதுதான். 'கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்’...'' (பாடுகிறார்).



''சரி, எப்போது திரும்ப வரப்போகிறீர்கள்?''



''ஒரு இடைவெளி விழுந்துடுச்சு. இனி திரும்ப வரும்போது சாதாரணமா வரக் கூடாது. அதிர டிக்கணும்ல? நல்ல காமெடி ஹீரோ சப்ஜெக்ட். பேசிக்கிட்டு இருக்கேன். நாலு அயிட்டம் கையில இருக்கு. மொதல்ல, சிம்புதேவனோட 'புலிகேசி - பார்ட் 2’. பேரு இன்னும் வைக்கலை. கூடிய சீக்கிரம் வேலையை ஆரம்பிச்சுடுவோம். அடுத்தடுத்து, ரவிக்குமார் சாரோட 'ஆப்பிரிக்காவில் வடிவேலு’, யுவராஜோட 'தெனாலிராமன்’, அப்புறம், 25 கேரக்டருல 3-டில பாவாவோட 'உலகம்’. எழுதிக்குங்க... வடிவேலு திரும்பி வந்துட்டான்யா... வந்துட்டான்!''





மக்கள் கருத்து


1.
Gopalan7 Hours ago
"...எனக்கு எதிரியா இருந்தாக்கூட, அதுக்குத் தகுதியா இருந்தாத்தான் நான் ஏத்துக்கிடுவேன்.." -
வடிவேலு.. நீங்கள் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளுங்கள். இதே வசனத்தைத்தான் விஜயகாந்த் சொல்லவில்லை. ஆனால் செயல்படுத்திவிட்டார். அதனால்தான் அவர் பதிலுக்கு உங்களை எதிர்த்து எதுவுமே பேசவில்லை. தேர்த்தலில் அவரை எந்த அளவுக்கு வறுத்தெடுத்தீர்கள். பதிலுக்கு அவர் பெரிதாக ஏதும் சொல்லாதபோதே நீங்கள் சுதாரித்து இருக்கனும். விஜயகாந்த் அரசியலில் எப்படியோ..,ஆனால் சினிமாவில் விஜயகாந்த்துக்கு உண்மையிலேயே நிறைய நண்பர்கள். தேவையில்லாமல் நீங்கள் அதிகமாக விட்ட சவுண்டுதான் உங்களுக்கு இப்போ ஆப்பு வைக்குது..., இப்போதாவது புரிந்து கொண்டு வீண் பிடிவாதத்தை விட்டு விஜயகாந்த்தை பார்த்து சமாதானமாகி விடுங்கள். பிறகு அரசியலையும் விடுங்கள். உங்கள் எதிர்காலம் நன்றாகவே இருக்கும். 
2. Ravi6 Hours ago
இந்த வாழ்க்கையே ஒரு மாயை. பெரும்பாலும் பேர், புகழ், செல்வாக்கு - இதற்க்கு தான் மரியாதை, உபசரணை எல்லாம். சினிமா உலகில் இந்த நிலை இன்னுமே அழுத்தமாக இருக்கும். வடிவேலு அவர்கள் இதை உணர்ந்திருப்பார். இந்த பேட்டியும் சரி, சென்ற வருடம் தேர்தலுக்கு பின் வந்த பேட்டியும் சரி ரொம்ப பக்குவமாக பேசி இருக்கிறார்.

எது எப்படியோ, "வி ரியலி மிஸ் யு வடிவேலு". மிக விரைவில் மீண்டும் வெள்ளி திரையில் தோன்றி, மருபடியும் ஒரு கலக்கு கலக்க வேண்டும். அதற்க்கு அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
3. vinod5 Hours ago
சரி நெசமாவே சொல்லுங்க வடிவேலு..இந்த பேட்டி முடிஞ்சப்புரம்.. உங்க ஃபேமஸ் வசனமான ... " .. எப்புடி எல்லாம் சொல்லி சமாளிக்க வேண்டியிருக்குது ..." ந்னு நீங்க நெனைச்சீங்களா இல்லியா... இந்த திமுக வால் ஏற்பட்ட பல இழப்புகளில் உங்கள் இழப்பும் ஈடு செய்ய இயலாததே.. உங்களை வெற்றிடத்தால் என்னை போல் பல ரசிகர்கள் நிச்சயம் வருந்துவர்.. மீண்டும் வர வாழ்த்துக்கள்..
4. வடிவேலு தேர்தல் சமயத்துல பேசினது கொஞ்சம் நாகரீகக் குறைச்சலாக இருந்தாலும், இப்படிப் பட்ட ஒரு கலைஞனுக்கு இத்தனை பெரிய இடைவெளியை தமிழ் திரைஉலகம் கொடுத்திருக்கக் கூடாது. இவர் காமெடி நடிப்போடு இயல்பாக நடித்தப் படம் எம்-மகன். நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும் நடக்க இருப்பவை நல்லவைகளாக இருக்கட்டும். சீக்கிரமா வாங்கப்பு.
5. Thiyagarajan8 Hours ago
 
வடிவேலு ஒரு சிறந்த காமெடி நடிகர் ! அதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை! என்று அவர் விஜயகாந்தை எதிரி என நினைத்து தி மு க வின் அரசியல் கூட்டங்களில் காமெடி என எண்ணி தரம் கெட்ட பேச்சுக்களை அள்ளி விட்டாரோ அன்றே பிடித்துவிட்டது ஏழரை நாட்டுச் சனி ! மேலும் இவர் மீண்டும் நிச்சயம் வெற்றிகரமாகத் திரையுலகில் பவனி வருவார் ! ஆனால் இவரின் நகைச்சுவைப் பாணி (எல்லோரிடமும் தர்ம அடி வாங்கும் பாணி)புளித்துப் போன பாணி! அதை மாற்றி விட்டு புதுப் புது விதமாக யோசித்து நகைச்சுவைக் காட்சிகளை அமைத்துக் கொள்ள வேண்டும் ! "விஜயகாந்தின் குடிப் பழக்கத்தைக் கிண்டல் செய்தோமே ! நானும் குடித்தால் என்னை இன்னொருவனும் கிண்டல் செய்வானே " என்ற சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்! மீண்டும் பெரு வெற்றி பெற நல்வாழ்த்துக்கள் வடிவேலு சார்!
 நன்றி - விகடன்

ஹீரோ ஹோண்டாவின் சர்ச்சைக்குரிய விளம்பரம்

http://sphotos-a.ak.fbcdn.net/hphotos-ak-prn1/559001_4918286041993_376184851_n.jpg 

இன்று இந்தியா முழுவதும் ஹீரோ ஹோண்டா  நிறுவனம் நாளிதழ்களில்  ஒரு விளம்பரத்தை கொடுத்திருந்தது . அதில் ஹீரோ இருசக்கிர  வாகனத்தை சாதி பெயர்  வைத்து குறிப்பிட்டு அந்த வாகனமும் குடும்பத்தின் அங்கம் என்று கூறியுள்ளது அந்த நிறுவனம். இந்தியாவின்  மற்ற மாநிலங்களில்  இன்னும் சாதியை பெயருக்கு  பின்னால் போடும் இழி நிலை நிலவி வருவது நாம் அறிந்ததே. 



 ஆனால் தமிழ்நாட்டில் நாம் பெயருக்கு பின்னால் சாதியை குறிப்பிடுவது  நிறுத்தி பல  காலம் ஆகிறது. பெரியாரின் சாதி ஒழிப்பு  பரப்புரைக்கு பின் சாதியை குறிப்பிட வேண்டியது இல்லை எனவும் சாதியை பெயருக்கு  பின்னால் போடுவது இழிநிலை என்ற கருத்தியலையும் தமிழக மக்கள் நன்கு உள்வாங்கி உள்ளனர் . இந்நிலையில் ஹீரோ ஹோண்டா  நிறுவனம்  தன்னுடைய விளம்பரத்தில் அய்யர் என்ற சாதிப் பெயரை குறிப்பிட்டு , அந்த வாகனமும் அய்யர் வாகனம் என்று குறிப்பிட்டுள்ளது தமிழர்கள்  நடுவே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது . சமூக வலைத் தளங்களில் இந்த விளம்பரப்படம்  அதிகமாக பகிரப் பட்டு வருகிறது . தமிழர்கள் பலரும் அந்நிறுவனத்தை  கண்டித்து வருகின்றனர் .


அந்நிறுவனத்தின் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர் தமிழர்கள் . சாதித் திணிப்பையும் , இந்தித் திணிப்பையும் தமிழ்நாடு ஏற்றுக் கொள்ளாது என்று அந்நிறுவனத்திற்கு எடுத்துரைத்தனர்  சமூக ஆர்வலர்கள் . இருந்தும் இந்த விளம்பரத்தை இந்நிறுவனம் நீக்குமா என்று தெரியவில்லை ?



 நீக்கும் வரை தமிழர்கள் போராட்டம் செய்வார்கள் எனத்  தெரிகிறது. அய்யருக்கு ஒரு வாகன விளம்பரம் என்றால் , நாடார், சானார் , பள்ளர், பறையர், கவுண்டர் முதலிய சாதிகளுக்கும்  தனித்தனியே விளம்பரம் செய்வார்களா இந்த நிறுவனம் என்ற கேள்வியை எழுப்பி  உள்ளனர் தமிழ் உணர்வாளர்கள்.   வாசகர்கள் நீங்களும் உங்கள் கண்டனத்தை பதிவு செய்யலாமே !

கீழ்க்கண்ட இந்த தொடர்பில் அலைபேசி மற்றும் மின்னஞ்சல் ஊடாக நம் கண்டனத்தை பதிவு செய்யலாம்.

REGIONAL OFFICES Hero MotoCorp Ltd. 18/1(Old No. 30/1) PLN Complex, Third Floor, Coronosmith Road, Gopalapuram, Chennai - 600086, India. Tel: +91-44-28350974 , 28350975, 28350976 Fax: +91-44-28350977 Email: [email protected]

thanx - alai seithikal 

நேற்று வெளியான எதிர்ப்பைத்தொடர்ந்து இன்று வந்த காலைக்கதிர் ,தினமல்ர் நாளிதழ்களில் அய்யர் என்ற வார்த்தையை கட் பண்ணி குமார் ஆக்கி விட்டார்கள், கடவுள் இருக்கான் குமாரு  ( நன்றி - அதிஷா ) 




நேற்று சர்ச்சைக்குள்ளான ஹீரோ ஹோண்டா ஸ்ப்லென்டர் விளம்பரம்  மாற்றப்பட்டது.எதிர்ப்புக்கு கிடைத்த வெற்றி

Stolen (2012) - சினிமா விமர்சனம்

http://www.desktop4ipad.com/wp-content/uploads/2012/09/stolen-locandina-500x500.jpg 

பேங்க்கை கொள்ளை அடிக்கும் கேடி தான் ஹீரோ , அவருக்கு ஒரே ஒரு சம்சாரம், ஒரு பொண்ணு. அதாவது அவரு ஒரு குடும்பப் ”பாங்க்” கான கொள்ளைக்காரர்.ஓப்பனிங்க் ஷாட்ல ஒரு நகைக்கடையை கொள்ளை அடிக்கறதா போலீஸ்க்கு போக்கு காட்டிட்டு ஒரு பேங்க்ல தன் கூட்டாளிகளோட சேர்ந்து 50 கோடி ரூபா கொள்ளை அடிக்கறார்.


 அந்த பிராசஸ்ல  கூட்டாளி ஒரு கொலை பண்ண ட்ரை பண்றான். ஹீரோ அதை தடுக்கறாரு.நம்ம  நோக்கம் கொள்ளை  மட்டும்தான், கொலை அல்ல அப்டினு . அந்த வாக்குவாதம், கைகலப்புல கூட்டாளிக்கு கால்ல துப்பாக்கிக்குண்டு பாய்ஞ்சுடுது.கடுப்பான கூட்டாளி ஹீரோவை அம்போன்னு விட்டுட்டு கார்ல எஸ் ஆகிடறான்.  ஹீரோ போலீஸ்ல மாட்டி 8 வருஷம் ஜெயில்ல இருக்கார். 


 ரிலீஸ் ஆனதும் முதல் வேலையா ஃபேமிலியை தேடிப்போறார். நம்ம ஊரா இருந்தா சம்சாரம் நமக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கும் ,. இது ஃபாரீன்.  புருஷன் ஒரு வாரம்  வர்லைன்னாலே நெக்ஸ்ட் பிராகஜ்ட் என்ன?னு  தேடும் லேடீஸ்தான் அதிகம்,. வேற ஒருத்தன் கூட  இருக்கா. அவர் மகள் அவரை ஏத்துக்கலை.. 


கால்ல அடிபட்டு ஒரு காலை இழந்த ஹீரோவோட கூட்டாளி ஹீரோ மகளை கடத்தி 50 கோடி பணத்துல அவன் பங்கை குடுத்தாத்தான் மக -னு மிரட்டறான்.ஹீரோ கைல பணம் இல்லை. இதனால இன்னொரு பேங்க்கை கொள்ளை அடிச்சு தர்றதா வாக்கு. கால அவகாசம்  12 மணி நேரம். ஒரு பக்கம் போலீஸ் துரத்துது, இன்னொரு பக்கம் ஹீரோ வை விதி துரத்துது. என்ன ஆச்சு என்பதே மிச்ச மீதிக்கதை.. 



http://www.apnatimepass.com/stolen-movie-poster-25.jpg



 படம் போட்ட 90 நிமிஷத்துக்கு எடுத்துக்கிட்ட திரைக்கதைல இருந்து கொஞ்சமும் விலகாம ஒரே நேர்கோட்டுல  கதை பயணிக்குது..  சில இடங்கள்ல  காது வலிக்காத அளவு லைட் வெயிட்டுல கனகாம்பர பூவை சுத்தினாலும் ரசிக்கும்படியா தான் படம் இருக்கு. 


ட்ரெஷர் ஐ லேண்ட் படம் மூலம் பலரைக்கவர்ந்த  நிக்கோலஸ் கேஜ் தான் ஹீரோ. நடிப்பை காட்ட எல்லாம் டைம் இல்லை. ஒரே சேசிங்க்தான். ஆனாலும் தன் மகளுடனான வாக்கு வாதம், பொம்மை வாங்கித்தர்றது, கேர்ள் ஃபிரண்ட் கூட அளவளாவுவது என ஆங்காங்கே நடிப்பில் முத்திரை பதிக்கறார்.


ஹீரோவோட கேர்ள் ஃபிரண்ட்டா வர்ற ஃபிகர் ஒரே ஒரு  ஸ்லீவ் லெஸ் லோகட் பனியன்  , நமீதா ஷார்ட்ஸ் மட்டும் போட்டுக்கிட்டு கிளாமரா வருது. 70 மார்க் போடலாம். காசா? பணமா? மார்க்  தானே? ஊரான் வீட்டு நெய்யா? என் பொண்டாட்டி கையா? 



ஹீரோவுக்கு மகளா வர்ற ஃபிகர் வெண்ணிலா ஐஸ் க்ரீம் மாதிரி  சைல்டிஸ் முகம். ரொம்ப குழந்தைத்தனமான முகமா இருப்பதாலும் , பாய் கட்டிங்க் பண்ணிட்டு பையன் மாதிரி காட்டி இருப்பதாலும் மேற் கொண்டு ரசிக்க முடியலை (  1000 தான் இருந்தாலும் தமிழன் குடும்பப்பாங்கான பொண்ணைத்தான் ரசிப்பான் ) 


வில்லனா வர்ற ஆள் கிட்டே பெரிய கொடூரத்தை எல்லாம் பார்க்க முடியலை . அவன் அளவில் அவன் பண்ணுவது எல்லாமே நியாயமாத்தான் தோணுது. அவர் மாற்றுத்திறனாளியா வர்றதால ஹீரோவுக்கு டஃப் ஃபைட்  குடுப்பார்னு ஆடியன்ஸ் எதிர்பார்க்க முடியாதது பெரிய மைனஸ்.. 


http://www.apnatimepass.com/stolen-movie-poster-6.jpg


இயக்குநரிடம் சில கேள்விகள்



1. வில்லன் கால்ல குண்டு பட்டதும் கோபத்துல ஹீரோவை விட்டுட்டு போறான்  ஓக்கே, பணத்தை கண்டுக்கலையே? அவ்ளவ் கஷ்டப்பட்டு கொள்ளை அடிச்சதுன்னு யோசிக்க மாட்டானா? 


2. கொள்ளை அடிக்கப்பட்ட பணம் 50 கோடி ரூபாய். ஒரே சூட்கேஸ்ல வெச்சு 2 பேரும் சேர்ந்து தூக்க முடியாம தூக்கிட்டு வர்றாங்க.. 2 சூட் கேஸ் எடுத்துட்டு போய் இருந்தா ஆளுக்குப்பாதிப்பணம், தூக்கிட்டு வரவும் ஈசி, யாரோ ஒரு ஆள் போலீஸ்ல மாட்டினாலும் இன்னொரு ஆள் எஸ் ஆகலாம், அப்படி எல்லாம் யோசிக்க மாடாங்களா? 


3. ஹீரோ போலீஸ் கார்ல எஸ் ஆகறார். போலீஸ் ஆஃபீசர்ஸ் நோட் பண்ணி வயர்லெஸ்ல தகவல் தர்றாங்க.. அது ஹீரோவுக்கும் தெரியுது. பின்னும் ஏன் அதே வண்டில போய் தன் லொக்கேஷனை காட்டிக்கொடுக்கறார்? வணடியை ஏன் மாத்தலை? 



4. ஹீரோ வில்லன் கொடுத்த ஃபோனை வில்லனை டைவர்ட் பண்ண ஓடும் ரயிலில் லக்கேஜ் வைக்கும் இடத்தில் சைலண்ட்  மோடுல  வெச்சுட்டு வர்றார். அதாவது ஹீரோ அந்த ரயில்ல போற மாதிரி போக்கு காட்ட.. அது ஓக்கே. ஆனா அப்படி ஒரு புது ஃபோனை அப்படி பெப்பெரப்பேன்னு விட்டுட்டுப்போனா பாசஞ்சர் யாராவது எடுத்து இறங்கிட்டா லொக்கேஷன் மாறாதா? ஏதாவது பேப்பர்ல சுத்தி குப்பை பெட்டி மாதிரி செட் பண்ணி வைக்க வேணாமா? 


5. வில்லன் தான் செத்துட்டதா போலீசை நம்ப வைக்க  க்ரைம் நாவல்ல வர்ற மாதிரி ஆல்ரெடி செத்துப்போன ஒரு டெட் பாடியை எரிச்சு அதுல தன் கை விரல்களை வெட்டி போட்டுடறான்.டெட் பாடியையும் கண்டம் துண்டமா வெட்டிடறான். போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்ல செத்தது அவன் தான்னு போலீஸ் நம்பிடறாங்க.. அது எப்படி?  ஆல்ரெடி இருக்கும் பாடியோட பிளட் க்ரூப், வில்லனோட கை விரல் பிளட் க்ரூப் எல்லாம் வேற வேற. அதை கண்டு பிடிக்க மாட்டாங்களா? போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்ல  வெட்டப்பட்ட கை விரல் ஆயுள், டெடெ பாடியோட செத்துப்போன டைம் இரண்டும் மாறு படுமே? 

http://www.showbizjunkies.com/wp-content/uploads/2012/08/stolen-trailer.jpg



6. வில்லன் வாடைகை டாக்ஸில ஹீரோவோட மகளை கடத்தறான்.அந்த வண்டியோட லொக்கேஷன் எந்த ரூட் என்பதை டாக்ஸி ஓனரை கேட்டா தெரிஞ்சுடும்னு வில்லனுக்கு தெரியாதா? அவன் ஏன் வண்டியை மாத்தாம அதே வண்டில லூஸ் மாதிரி சுத்திட்டு இருக்கான்? 


7. க்ளைமாக்ஸ் ல மணி எக்ஸேஞ்ச் பண்றப்ப வில்லனுக்கு ஹீரோவோட மகளை ஒப்படைக்கும் ஐடியாவே இல்லை. அவளை ஹீரோ கண்ல காட்டவும் இல்லை,.தங்கத்தை வாங்கிட்டு கொல்லப்பார்க்கறான். எதுக்கு அவ்வளவு நேரம் மகளை கூடவே வெச்சிருக்கனும்? 



8. ஹீரோ பேங்க்ல கொள்ளை அடிச்ச தங்கத்தை வில்லன் கிட்டே ஒப்படிக்கும் முன்பே “ என் மகளை கண் ல காட்டு” அப்டினு டிமாண்ட் பண்னவே இல்லையே? அவ உயிரோடதான் இருப்பான்னு என்ன நிச்சயம்? முதல்ல கன்ஃபர்ம் பண்ணிட்டுத்தானே தங்கத்தை குடுக்கனும்? 


9. ஒரு வெல்டிங்க் பட்டறை வெச்சிருக்கும் புத்திசாலி  தனி மனிதனா ரொம்ப ஈசியா பேங்க்கை கொள்ளை அடிக்க முடியும் என்பது மாதிரி காட்டி இருக்கும் பேங்க் கொள்ளை மகா அபத்தம். 



10. பேங்க்கில் வெல்டிங்க் மிஷின் போட்டு உருக்கி தங்கத்தை ஹீரோ கபளீகரம் பண்றான் , ஓக்கே. தங்கத்தோட இருப்பு குறையும்போதே அலாரம் அடிக்காதா? எல்லாம் முடிஞ்ச பின் ஃபயர் சர்வீஸ் வண்டி வருது.. 

http://mimg.sulekha.com/sameera-reddy/stills/1_sameera-reddy-stills01.jpg


 மனம் கவர்ந்த வசனங்கள் 


1. பாட்டை கேட்டுட்டே கொள்ளை அடிக்கப்போறது உன் செண்ட்டிமெண்ட்டா இருக்கலாம், அதுக்காக 6 வருஷமா ஒரே பாட்டா? செம போர். பாட்டை மாத்துப்பா.. 


2. எந்த ஒரு அப்பாவும் தான் தப்பு பண்றதுக்கு முன்னே தன் பொண்ணு கிட்டே ஃபோன் பண்ணி பேசறது சகஜம் தான்


3. இதுக்குத்தான் ஆம்பளைங்களோட சேர்ந்து நான் வேலை செய்யறதில்லை. சுலப்மா செய்ய வேண்டிய வேலையை சிக்கல் ஆக்கி லேட் பண்ணிடுவாங்க.. 



4. நாங்க பணக்காரங்க ஆக் இன்னும் 2 நிமிஷம் தான் இருக்கு.. இலக்கை நெருங்கிட்டோம் 


5. உங்க ஒயிஃப் எப்படி இருக்காங்க.. 

 ரொம்ப நல்லா இருப்பா-னு தோணுது

 யு மீன் டைவர்ஸ்டு? 

 யா


6. குளிர்காலம் முடிஞ்சதும் அணில் எப்படி பொந்துக்குள்ளே போய் பதுங்குதோ அப்படி நீ..  ஜெயில் லைஃப் முடிஞ்சதும் இங்கேதான் வருவேன்னு எதிர்பார்த்தேன் 



7. அன்பு நேரத்தை , காலத்தை மறக்க வைக்கும் , காலமும், நேரமும் அன்பை மறக்க வைக்கும்



8.  விட்டா பார்வையாலயே என்னை சாப்ட்ருவே போல .. 

 எப்போ நாம சேரப்போறோம்? 

 உன் சம்சாரத்துக்கு ஃபோனை போட்டு சொல்லவா? 


 ஆளை விடம்மா. கொஞ்ச நேரம் ஜாலியா பேச விட மாட்டியே? 



9. க்ரிமினல் மாஸ்டர்னு அவனை சொல்றதை நாங்க ஒத்துக்க மாட்டோம். அப்படி மூளைக்காரனா இருந்தா ஏன் ஜெயில்ல மாட்டறான்? 8 வருஷம் களி சாப்பிடறான்?



10. மூளைல சுட்டா நீ டக்குன்னு செத்துடுவே. வயித்துல சுட்டா அவ்ளவ் சீக்கிரம் சாக மாட்டே. 7 நாள் ஆகும்



11. ஆமா, ஜெயில்ல இருக்கும்போதே பேங்க் கொள்ளை பற்றி யோசிச்சியா? 

 ஆமா, வேற வேலை.. அதும் இல்லாம உள்ளே ரொம்ப போர் அடிச்சுது


12. டாடி, ஃபோன் பண்ணி குப்பைக்காரனை வரச்சொல்லவா? 

 எதுக்கு?

 பின்னே, நீங்க சமைச்சா யார் சாப்பிடுவது?





சி.பி கமென்ட் - ஆக்‌ஷன் த்ரில்லர் ரசிகர்கள் பார்க்கலாம். பெண்களும் பார்க்கும் விதத்தில் தான் படம் இருக்கு. ஜேம்ஸ் பாண்டின் ஸ்கை ஃபால் பார்த்து நொந்து போன ஹாலிவுட் பட ரசிகர்களுக்கு இது ஆறுதலான படம்.அதே சமயம் பிரமாதமான படமும் அல்ல.. 


http://www.aceshowbiz.com/images/still/stolen-2012-picture07.jpg



டெக்கான் கிரானிக்கல் எதிர்பார்ப்பு ரேங்க் - 6 / 10 



டைம்ஸ் ஆஃப் இண்டியா - 3 / 5


 ஈரோடு ராயலில் படம் பார்த்தேன்.

சிவப்பு ரோஜாக்கள்,சுவர் இல்லாத சித்திரங்கள் ஷூட்டிங்க் ஸ்பாட் சுவராஸ்யங்கள் - கே பாக்யராஜ் பேட்டி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjTTmRm3dmualMBJTxqI3ZMwIKj8-A7YnuQdgTVf3q4o3rKaDthXAuyX_vftggluBoS8Hd5CulO0FyWi8L6t0D3SR1UYzpK1_gIudw9UujZRZQHErqWwD2h76QEWYqAuBcM5993aaPMZCg/s1600/Vaanga-Cinema-Pathi-Pesalam-on-Vijay-TV.jpg 

'தமிழக எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த் பற்றி உங்கள் கருத்து?'' 


 
 ''தன்னம்பிக்கையோட துணிச்சலா கட்சியை ஆரம்பிச்சாரு... மக்களோட மட்டும்தான் கூட்டணினு சொன்னாரு. அதுவரைக்கும் பரவாயில்லை... பாராட்டலாம்!


ஆனா, அப்புறமா குட்டையில ஊறின மட்டையா ஒரு கூட்டணி வெச்சாரு. ஜெயிச்ச பிறகு, ஆளும் கட்சியைத் திட்டினாத்தான் நமக்கு மவுசு கூடும்னு வம்புச் சண்டை போட்டுட்டு வெளியே வந்துட்டாரு. இது எல்லாத்துக்கும் மகுடமா, 'அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததே என்னாலதான்’னு மிகப் பெரிய ஒரு உண்மையைக் கண்டுபிடிச்சாரு.


 கலைஞர் ஆட்சிக் காலத்திலேயே, 'தடையற்ற மின்சாரத் துக்கு நான் ஒரு வித்தியாசமான ஐடியா வெச்சிருக்கேன்... வெளியில சொன்னா, கலைஞர் காப்பி அடிச்சுடுவாரு’னு சொன்னாரு. அ.தி.மு.க- வோட கூட்டணி வெச்சப்பவாவது அந்த ரகசியம் என்னன்னு சொல்லியிருக்கலாம். அப்பவும் சொல்லலை. இப்ப ஜனங்க இவ்வளவு கஷ்டப்படுறாங்க... இப்பவும் சொல்லாம மின்வெட்டுக்கு எதிராப் போராடுறேன்னு இவரும் கௌம்பி நிக்கிறாரு. இன்னும் தேர்தல் நெருங்க நெருங்க... என்னெல்லாம் காமெடி பண்ணுவாருனு பொறுத்திருந்து பார்க்கத்தானே போறோம்!''


நா.ராஜா, திருத்தங்கல்.
 ''டி.வி. ஷோல ஆரம்பிச்சு கிராமத்து மேடைகள் வரை மிமிக்ரி பண்றவங்க உங்க குரல் இல்லாமப் பண்றதே இல்லை. அதை எப்படி எடுத்துக்குறீங்க?'' 




 ''நாங்க அண்ணன் தம்பிங்க மூணு பேரு. எங்கம்மா முதல் பிரசவ சமயத்துல 'வீட்டுக்கு செல்வம் ரொம்ப அவசியம். அதனால முதல்ல ஆண் குழந்தை பொறந்தா, செல்வராஜ்னு பேர் வைப்போம். பொண்ணா இருந்தா செல்வினு பேர் வைப்போம்’னு நெனச்சாங்க. ஆணா இருந்ததால, செல்வராஜ். பெரிய அண்ணன். அடுத்த முறை குழந்தை உண்டானப்போ, 'செல்வம் இருக்கு... தனம் வேணும். ஆணா இருந்தா தன்ராஜ், பெண்ணுன்னா தனலட்சுமினு நினைச்சாங்க. என் ரெண்டாவது அண்ணன் தன்ராஜ். மூணாவதா நான் உண்டானதும் 'நமக்கு செல்வம், தனம் ரெண்டும் இருக்கு... இனி பாக்யம் ஒண்ணு மட்டும் போதும்’னு பாக்யராஜ், பாக்யலட்சுமினு முடிவுபண்ணி வெச்சிருந்தாங்க. இப்படித்தான் பாக்யராஜ் ஆனேன். 




ஆக,
எங்கம்மாவோட ஆசை, ஆசி காரணமா புரட்சித் தலைவர் வாயால கலையுலக வாரிசுங்கற வரம் வாங்கினேன். அதே பாக்யம்தான்... அமிதாப்ஜி, சிவாஜி சார் போன்றவங்களை இயக்கும் வரை என்னை அழைச்சுட்டுப் போச்சு. அதே பாக்யம்தான் இன்னைக்கும் எல்லா மிமிக்ரி கலைஞர்களோட வாயாலயும் அன்போட அப்பப்ப பேசப்படுறேன். மக்களும் அதை அவ்வளவு ரசனையா ரசிக்கிறாங்க. இதை நான் பெரும் பாக்யமாத்தான் நினைக்கிறேன்!'



'
எம்.ராஜநாராயணன், சென்னை-24.
 ''முருங்கைக்காய் போன்ற சமாசாரங்களை அப்பவே லேடீஸை ரசிக்கவெச்சீங்களே... எப்படி?'' 




 ''ஆதாம் - ஏவாள் காலத்துல இருந்தே ரசிச்சி, ருசிக்கப் போய்தானே... இன்னும் அது தொடர்ந்துட்டு இருக்கு. நாம குழந்தைகளுக்கு ஹார்லிக்ஸ், பூஸ்ட், போர்ன்விட்டா, செரிலாக்னு ஊட்டச்சத்து தர்ற மாதிரி, கடவுள் தன்குழந்தை களுக்குத் தந்த ஒரு ஊட்டச்சத்துதான் - முருங்கைக்காய். அதனால அது கன்னித்தீவு சிந்துபாத் கதையா தொடரும்!''




ஆர்.கீதா, திருச்சி. 

 ''உங்களுக்கு டான்ஸ் கத்துக்கொடுத்த மாஸ்டர் யார்?'' 



 ''ரகசியமா வெச்சுக்கங்க... வெளியே யார்கிட்டயும் சொல்லிடாதீங்க. அவரு பேரு மணி. எங்க ஹை ஸ்கூல் ட்ரில் மாஸ்டர்!''



எம்.ஜி.ராம்குமார், திருநெல்வேலி. 



 ''கதாசிரியர் ஆக வேண்டித்தான் நீங்கள் சினிமாவுக்கு வந்ததாகப் படித்திருக்கிறேன். இயக்குநர் ஆகும் வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?'' 



 ''ஆமாங்க... கதாசிரியர் ஆகணும்னு ஆசைப்பட்டு, கம்பெனி கம்பெனியா ஏறி இறங்கினப்ப, யாருமே நம்மளைக் கண்டுக்கலை. அந்த நேரம்தான் பாலகுரு சார்  '16 வயதினிலே’ படத்துல அசோசியேட்டா சேர்ந்திருந்தாரு. அவர்கிட்ட என்னைப் படத்துல உதவி இயக்குநரா சேர்த்துவிடச் சொல்லி கேட்டுட்டு இருந்தேன். இதுக்காகத் தினமும் அவர் வீட்டுக் குப் போயிருவேன். அப்படி ஒரு தடவை போனப்ப பாலகுரு சார் அம்மன் கிரியேஷன்ஸ் ஆபீஸ் போயிருக்கார்னு சொன்னாங்க. 



அங்கே எனக்கு முன்னாடியே ஒருத்தர் உட்கார்ந்திருந்தார். ஆளைப் பார்த்தா பெரிய படிப்பாளி மாதிரிலாம் தெரியலை. அதனால கொஞ்சம் அல்டாப்பு காமிச்சு அசத்தலாம்னு, 'சார்... எக்ஸ்கியூஸ்மி’னு அவரைக் கூப்பிட்டேன். அவரும் 'சின்னவீடு’ படத்துல எனக்கு அப்பாவா நடிச்ச கே.கே.சௌந்தர் மாதிரி கெத்தா 'யெஸ்ஸ்...’ன்னாரு. 'ஷெல் ஐ மீட் மிஸ்டர் பாலகுரு’ன்னேன். 'ஐ திங் ஹீ வென்ட் அவுட்சைட்’னு பதில் வந்தது. 'ஓ.கே... சார், தேங்க்யூ. ஐ வில் மீட் ஹிம் ஆஃப்டர்வேர்ட்ஸ்’னு சொல்லிட்டு, நான் வெளியே வர திரும்புறேன்.



.. 'ஹலோ... டெல் மீ யுவர் நேம். இஃப் பாலகுரு கம்ஸ் ஐ வில் இன்ஃபார்ம் ஹிம்’னாரு. நான் உடனே, 'நோ நோ சார்... ஐம் நாட் சச் ஏ பிக் ஷாட். ஐ வில் வெயிட் அவுட்சைட் அண்ட் மீட் ஹிம்’னு சொல்ல, அவர் இப்ப சட்டுனு தமிழுக்கு மாறி, 'அதில்லைய்யா... பாலகுரு யாரோ ஒரு பையனுக்கு அசிஸ்டென்ட் டைரக்டர் வேலை வேணும்னு கேட்டுக்கிட்டே இருந்தார். ஐம் திஸ் ஃபிலிம் டைரக்டர் பாரதிராஜா. அதான் கேட்டேன்’னார். 



நான் அதிர்ச்சில உறைஞ்சு, 'சார்... சார்... நான்தான் அந்தப் பையன். எனக்குத்தான் அந்த வேலை வேணும் சார்’னு கெஞ்ச, 'காலேஜ்லாம் படிச்சிருக்கியா?’னு கேட்டாரு. நானும் மொட்டையா, மேலோட்டமா 'காலேஜ் படிச்சிருக்கேன்’னு சொன்னேன். 'நாளைக்குக் காலையில ஏவி.எம். ஸ்டுடியோவுல ஸாங் ரிக்கார்டிங். வந்து ஜாயின் பண்ணிக்க’ன்னாரு. துள்ளிக் குதிச்சேன். இதுதான் என்னை இயக்குநர் ஆக்கிய திருப்புமுனை. அப்புறம் அப்புறம் பேசிக்கிட்டப்ப தெரிஞ்சது, இங்கிலீஷ்ல நாங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் மீறின கில்லாடிகள்னு!''




ஜி.குப்புசாமி, விழுப்புரம். 


 'படப்பிடிப்பு சமயம் உங்கள் குரு பாரதிராஜாவுடன் 'முட்டல்-மோதல்-உரசல்’ ஏதேனும் நிகழ்ந்திருக்கிறதா?'' 



  ''ஐயோ நிறையங்க. ஆனா, அதை முட்டல்-மோதல்னு சொல்ல முடியாது. ஒரு சீன் நல்லா வரணும், வசனத்தை இன்னும் பெட்டர் பண்ணலாம்னு நான் சண்டை போடுவேன். அவர் முதல்ல திட்டிவிட்டுருவாரு. அப்புறம் அதுல நியாயம் இருந்தா ஏத்துக்குவாரு.



 'சிவப்பு ரோஜாக்கள்’ படத்தில் ஸ்ரீதேவி இருக்கிற கவுன்டர்ல கமல் ஒவ்வொரு தடவையும் கர்ச்சீப் கேப்பாரு. ஸ்ரீதேவி எடுத்துத் தருவாங்க. ஒரு தடவை கமல் வர்றதைப் பார்த்ததுமே, ஸ்ரீதேவி கர்ச்சீப் எடுத்துவெச்சிருப்பாங்க. ஆனா, கமல் வம்புக்குனு 'எனக்கு கர்ச்சீப் வேண்டாம்... பனியன்தான் வேணும்’னு சொல்லு வாரு. 'கைவெச்ச பனியன் வேணுமா... கை வைக்காதது வேணுமா’னு ஸ்ரீதேவி கேட்க, கமல் குசும்பா ஸ்ரீதேவி முகத்துல இருந்து கழுத்துக்குக் கீழே கொஞ்சம் லுக்கை டவுன் பண்ணிப் பார்த்துட்டு, 'யூஷ§வலா நான் எப்பவும் கை வைக்காததைத்தான் லைக் பண்ணுவேன்’னு பேசற மாதிரி யோசிச்சு எழுதிஇருந்தேன்.



 ஸ்பாட்ல அந்த ஷாட் எடுக்கும்போது டைரக்டர் ரெண்டு பேரும் நேருக்கு நேரா பார்த்துட்டு நிக்கிற புரொஃபைலா இடுப்பு வரைக்கும் ரேஞ்ச் இருக்கிற மாதிரி லாங் ஷாட்டா வெச்சுட்டாரு. அப்ப நான், 'சார்... இந்த சீன்ல ஸ்ரீதேவி, கமல் ரெண்டு பேர் முகமும் டைட் க்ளோஸப்ல இருக்குற மாதிரி போல்டா வெச்சு எடுப்போம். அப்போதான் கமல் சார் அந்த டயலாக்கை ஸ்ரீதேவியை மேலும் கீழும் பார்த்து ஒரு மாதிரி சில்மிஷமா சொல்றப்போ, ஜனங்க நல்லா என்ஜாய் பண்ணுவாங்க. தியேட்டர்ல க்ளாப்ஸ் பறக்கும்னு சொன்னேன்.




 இதைக் கவனிச்சுட்டு இருந்த கமல் சாரும் குஷி ஆகிட்டாரு. ஆனா, டைரக்டர் 'யோவ்... எல்லாம் புரியுதுய்யா. ஆனா, கடைல 12 மணி வரைதான் ஷூட்டிங் பண்ண பர்மிஷன் கொடுத்திருக்காங்க. அதுக்குள்ள அவ்வளவு கட் ஷாட்ஸ்லாம் வெச்சு எடுக்க முடியாது’னு சொல்லிட்டாரு. எனக்குச் சட்டுனு கோபம் வந்துருச்சு, 'அப்ப நான் எதுக்கு இவ்வளவு மண்டையை உடைச்சு எழுதணும்... சீன் பிடிக்கணும்’னு சொல்லிட்டு கோபமாக் கடையைவிட்டு வெளியே வந்துட்டேன்.



இந்தத் தகவல் புரொடியூஸருக்குத் தெரிஞ்சு, 'பாரதி... இன்னொரு நாள் வேணும்னாலும் கடையை புக் பண்ணிக்கலாம். பொறுமையா நீங்க யோசிச்ச மாதிரியே எடுங்க’னு டைரக்டர்கிட்ட சொல்லிட்டாரு. அப்ப அவர் என்கிட்ட வந்து, 'தேங்க்ஸ்யா... நீ மூஞ்சியத் தூக்கிவெச்சுக்கிட்டதுனாலதான் இப்போ எனக்கு ரிலாக்ஸா வொர்க் பண்ண வாய்ப்பு கிடைச்சது’ன் னாரு. இப்படித்தான் எங்களுக்குள்ள முட்டல்-மோதல்லாம் வரும்!''



பி.ஆறுமுகம், முசிறி. 


''ஆரவாரமா தனிக் கட்சி ஆரம்பிச்சீங்க. ஆனா, ஏன் அப்படியே பின்வாங்கிட்டீங்க?'' 




 ''எவனாலயும் அவனோட நிழலைவிட்டு எப்பவும் பிரிய முடியாதுனு சொல்லுவாங்க. என் முட்டாள்தனத்துக்கு நான் சப்பைக்கட்டு கட்ட விரும்பல. நான் உசுப்பப்பட்டதைச் சீக்கிரமே உணர்ந்து ஒதுங்கிட்டேன். அவ்வளவுதான்!''

http://1.bp.blogspot.com/_lIsRD3VCy1s/TPjIq4uTp0I/AAAAAAAADig/prKERORBWpQ/s1600/9110_big.jpg


என்.அத்வித், சென்னை-83. 



 ''கமல் மாதிரி நடிக்கவோ, டான்ஸ் ஆடவோ மாட்டீங்க. ரஜினி போல ஸ்டைலும் இல்லை, விஜயகாந்த் போல ஆக்ஷனும் பண்ண மாட்டீங்க, கார்த்திக் போல ரொமான்டிக் அடையாளமும் இல்லை... ஆனா, இவங்கள்லாம் இருந்தப்ப எப்படி தமிழ் சினிமாவுல உங்க 'ஹீரோயிசம் மூலமா’ ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்குனீங்க?'

'
 ''என் கேரக்டரும் சரி, என்னைச் சுத்தி இருக்கிறவங்க கேரக்டர்ஸ் சம்பவங்களும் சரி... மக்களோட யதார்த்த வாழ்க்கை எப்படி இருக்கோ, அங்கே யார் யாரெல்லாம் இருக்காங்களோ, அங்கே என்ன நடக்குதோ... அதைத்தான் பிரதிபலிக்கும். 


'சுவர் இல்லாத சித்திரங்கள்’ல கல்லாப்பெட்டி சிங்காரம் என் அப்பா. வீட்ல யாரும் இல்லைனு தைரியமா உட்கார்ந்து தம் அடிச்சிட்டே ஏதோ எழுதிட்டு இருப்பேன் நான். டக்குனு அப்பா வந்ததும் ஒரு மரியாதைக்காக அவர் கண்ணுல சிகரெட் பட்டுரக் கூடாதுனு பின்னால மறைப்பேன். ஆனா அவரு, 'ஏண்டா அழகு... கேவலம் அஞ்சு காசு சிகரெட்டு. எங்கே நான் கேட்ருவனோனு மறைக்கிறியே... நீ எல்லாம் பெத்த அப்பனுக்கு நாளைக்கு என்னடா செய்யப்போறே?’னு அழ ஆரம்பிச்சிடுவாரு.




 இப்படியான நிஜ வாழ்க்கை சம்பவங்களையும் மனிதர்களையும் என்னைச் சுத்தி வெச்சுக்கிட்டதாலதான், சினிமா ஹீரோயிசம் தாண்டிய ரசிகர் கூட்டம் என்னை  அரவணைச்சுக் கிட்டாங்க!''

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFAGYEdqthlhRp5_55-m7jdSQ6nqAUEhxgNco-WdHOdcj21VSA_6E4t1MUTd2wo5CuN1sb2cChLrby05VHRHEvUuLogidY9pYLwY7dsNLLU29KqWrHZy6xxJS0OUpqYJHlXtPkOfYcmP4/s1600/%25E0%25AE%2595%25E0%25AF%2587.%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%25AF%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%259C%25E0%25AF%258D.jpg




டிஸ்கி - பாகம் 1 படிக்க

கே பாக்யராஜ் பேட்டி @ ஆனந்த விகடன் 

http://www.adrasaka.com/2012/10/blog-post_7561.html

நன்றி - விகடன்

 பாகம் 2

தமிழ் சினிமாவின் டாப் 10 படங்கள் - கே பாக்யராஜ் பேட்டி 

http://www.adrasaka.com/2012/10/10.html

 பாகம் 3

 இந்தியாவின் டாப் 11 திரைக்கதை ஆசிரியர்கள் - கே பாக்யராஜ் பேட்டி @ விகடன்

http://www.adrasaka.com/2012/10/11.html




http://180.179.36.240:82/Articles/2010/Dec/0b737521-c632-4c0b-a5ab-9521e7db4aa5_S_secvpf.gif

பக்கத்து வீட்டு பங்கஜத்தின் டைரிக்குறிப்பு

Embedded image permalink

 அமாவாசை பூஜை @ சென்னிமலை பெருமாள் கோவில்



1. பெண் விரும்புவதால் தான் கற்பழிப்பு நடக்கிறது!': "அரியானா காங்., தரம்வீர் கோயட் #  யோவ்,லூசாய்யா நீ? விரும்புனா அதுக்கு பேரு ரேப்பா?


--------------------


2. கொஞ்சமா சம்பாதிங்க...': கட்சியினருக்கு முலாயம் அறிவுரை # ஆஹா! தலைவர்னா இப்படித்தான் இருக்கனும்



-------------------


3. டியர், லிப் கிஸ் அடிச்சா பல் கூசுமா ?



ச்சே, ச்சே அதை பார்க்கறவங்க கண்ணு தான் கூசும்



------------------------


4. உண்மைக்காதல், கண்மைக்காதல், கண்மாய்க்காதல்  என தனித்தனியே ஏதும் கிடையாது, எல்லாம் மாய்மாலக்காதல் தான்




-----------------------


5. சட்டீஸ்கர்: அதிக கட்டணம் வசூலித்த மூன்று தனியார் பள்ளிகளுக்கு ரூ.76 கோடி அபராதம்# சட்டீஸ்கர் அரசு கோடீஸ்வர் அரசு ஆகி இருக்குமே?




--------------------




Embedded image permalink

6. உண்மைக்காதல் திருமணத்துக்கு முன் “ படியாது”


----------------


7. ஒரு பெண்ணின் முழு ஒத்துழைப்பு இல்லாமல் அவ  தலைல பேன் பார்க்க முடியாது # பக்  வீட்டு  பங்கஜத்தின் டைரிக்குறிப்பு




-------------------------------


8. பால் பவுடர் மோசடிதான் கதைக்கரு என்பதால் ஹீரோயினா அமலா பாலை போட்டிருக்கலாம் # மேட்சுக்கு மேட்ச் @ ,மாற்றான்




-----------------


9.  டியர் எனக்கு காங்கிரஸ்னா அலர்ஜினு எப்படி கண்டுபிடிச்சே?



 அத்தான் பி ஜே பி பார்ட்டிங்க்ளுக்கு காங்க்ரஸ் மேல எப்டி கிரேஸ் வரும்?




----------------------


10. சேலை கட்டிய பெண்ணை நம்பு ஜீன்ஸ் பேன்ட் போட்ட பொண்ணு உனக்கு தருவா சொம்பு




-----------------------
 கலர்புல் குடை .அம்பானிட்ட கூட இந்த மாடல் இல்லை

Embedded image permalink


11. டியர் என்னை கை விட்ர மாட்டீங்களே? மேரேஜ் பண்ணிக்குவீங்கதானே?



ம் ம் மேரேஜ் பண்ணிக்குவேன்.அப்புறம் நீ முதல்ல சொன்னது :-)



-----------------------



12. விஜய் - ஐ ஆம் வெயிட்டிங்க்



 அஜித் - வேஸ்ட் .எப்படியும் கரண்ட் வராது


----------------------



13. காதலி என்பதற்கு எதிர்ச்சொல் கைவிடு



-------------------


14. பெரும்பாலான சம்சாரங்கள் தி மு - தேவதை ,தி பி - தேள் வதை




------------------------


15. திமுக ஆட்சியில் மின்வெட்டு டெம்பரவரி , அதிமுக ஆட்சியில் பர்மனன்ட் # நிலையான அரசு அவல நிலை



-----------------------
 காதல் ஜோடி நம்ம கண்ல சிக்கிடுச்சி.உடனே க்ளிக்

Embedded image permalink


16. 2012 சயின்ஸ் பிக்ஸன் ஸ்டோரி - 24 மணி நேரமும் மின்சாரம் இருக்கும் ஊர் ,தெனாவெட்டு காட்டாத அரசு ஊழியர்கள்,ஊழல் பண்ணாத தலைவர்கள்




-----------------------


17. சார்.திராணிக்கு சின்ன ராவா? பெரிய ராவா?



 கேப்டன் - தண்ணீர் கலக்காமல் ராவா அடிப்பதே திராணி



----------------------


18. நகை அணிய மாட்டேன் என அறிவித்த ஜெ நாட்டில் மின் வெட்டு சரி ஆகும் வரை தானும் அதை அனுபவிப்பதாக அறிவிக்க திராணி இருக்கா?




---------------------------


19. சீரான மின்சாரம் வரும் வரை சி எம்க்கு சம்பளம் இல்லை னு சொல்லிடனும்.அடிச்சு பிடிச்சு ரெடி பண்ணுவாங்க



-----------------------


20. சொம்பில் தண்ணியை அண்ணாந்து குடிப்பது கன்னத்தில் இடும் முத்தம் போல.கவ்விக்குடிப்பது உதட்டு முத்தம் போல



------------------------




சென்னிமலை மேலப்பாளையம் அருள் மிகு அலமேலு மங்கைநாச்சியார் ,ஆதி நாராயணப்பெருமாள்




21. இணைய வாசிகள்க்கு தங்கள் இணையை நேசிக்க நேரம் இல்லை





----------------------


22. மிஸ் உங்க கிட்டே 1 சொல்லனும்.எப்படி ஆரம்பிக்கறதுன்னு தெரியலை




. ஒண்ணு சொல்ல ஒ -னு தான் ஆரம்பிக்கனும்



---------------------


23. தேர்க்கடைல 10 ரூபாக்கு பாசிமாலை வாங்கித்தந்தாலே நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும்பாங்க பொண்ணுங்க #1998



---------------------


24. கீரைக்காரம்மாக்கள் ,கோலப்பொடி அரப்பு விற்பவர்களிடம் பேரம் பேசி என்னத்தை மிச்சம் பிடிக்கப்போறாங்க .ஒரு படி அரப்பு 10 ரூபாதான்.ஆனா இந்த பொம்பளைங்க அதுக்கும் பேரம் பேசுறாங்க :-(((


----------------------





25.  பொது இடத்தில் பழகும்போது கண்ணியம் காத்துக்கோ! எல்லை மீறனும்னா கூட்டம் இல்லா தியேட்டர் எதுன்னு கத்துக்கோ்



--------------------




அருகி வரும் பாதுகை சீர் அமைப்பாளர் ( ஈரோடு மாநகரின் 8 கிமீ பரப்பில் 4 பேர் மட்டும்)
Embedded image permalink

Wednesday, November 07, 2012

கிரேசிமோகன் காமெடி கலக்கல்கள், பதில்கள் @ கல்கி

சென்னை : கிரேசிமோகனின், "சாக்லெட் கிருஷ்ணா' நாடகத்தின் 400வது நாடக விழா, வரும் 24ம் தேதி சென்னையில் நடக்கிறது. கடந்த 2008ம் ஆண்டு ஜூலை மாதத்தில் மேடையேற்றப்பட்ட, "சாக்லெட் கிருஷ்ணா' நாடகம், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் நடத்தப்பட்டு, இதன் 400வது நாடக விழா, நாரத கான சபாவில், வரும் 24ம் தேதி நடக்கிறது. நூற்றுக்கணக்கான, "டிவி' சேனல்கள், பட்டிமன்றங்கள், ஷாப்பிங் மால்கள், சினிமா அரங்குகள் என, பொழுதுபோக்குக்கு குறைவில்லாத இந்த காலகட்டத்தில், இவைகளுடன் நாடகங்களும் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன என்பதற்கு உதாரணமாக,"சாக்லெட் கிருஷ்ணா' நாடகம் மேடையேறுகிறது.



இது குறித்து, "சாக்லெட் கிருஷ்ணா' நாடகத்தின் நாயகன் மாது பாலாஜி கூறியதாவது: இந்நாடகத்தின் 300வது விழாவில் நான் பேசும் போது, "எங்கள் நாடகக் குழு 32வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது' என்று சொன்னவுடன், பலத்த கைத்தட்டல் எழுந்தது. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. "இது சாதாரண விஷயம் தானே, இதற்குப் போய் ஏன் கை தட்டுகிறீர்கள்?' எனக் கேட்டேன். பார்வையாளர் ஒருவர், "ஒரு குடும்பமே இத்தனை வருடங்கள் ஒன்றாக இருப்பது பெரிய விஷயம். நீங்க ஒரு குழுவை வைத்துக் கொண்டு சமாளிக்கிறீங்களே...' என்றார். நாங்கள் எங்கள் நாடகக் குழுவினரை, ஒரு கூட்டுக் குடும்பமாகத் தான் பார்க்கிறோம். விவேகானந்தர் கல்லூரியில் நான் படித்த போது, அனைத்துக் கல்லூரி நாடகப் போட்டியில், என் அண்ணன் கிரேசி மோகன் கதை, வசனத்தில் நகைச்சுவை நாடகம் போட்டோம். அதில் பரிசு வாங்கிய பிறகு, தனியாக நாடக கம்பெனி ஆரம்பித்தோம்.

இன்று வரை 5,000க்கும் மேற்பட்ட நாடகங்கள் நடத்தி விட்டோம். இன்றும் என்னுடன் படித்தவர்கள் தான், எங்கள் நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

கிரேசி கிரியேஷனுடைய முந்தைய நாடகங்கள், "மீசையானாலும் மனைவி, ஜுராசிக் பேபி' போன்றவை, 500 முறை நடத்தப்பட்டாலும், "சாக்லெட் கிருஷ்ணா' பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நாடகத்திற்கு, நிறைய குழந்தைகளும் வந்தனர். குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்தியதில் ஆத்ம திருப்தியாக இருக்கிறது. குழந்தைகளின் திருப்தி தான், இந்நாடகத்தை 400வது முறையாக மேடையேற்றச் செய்துள்ளது. இந்நாடகத்தை 100 தடவைக்கு மேல் பார்த்த நான்கு குழந்தைகளை, 400வது நிகழ்ச்சியின் போது கவுரவிக்கிறோம். தமிழ் நாடக உலகில், "சாக்லெட் கிருஷ்ணா' நிறைய வசூல் செய்துள்ளது. மாநகரங்களில் மட்டுமல்லாது, குக்கிராமங்களிலும் நடத்தப்பட்டிருக்கிறது.

யாரையும் புண்படுத்தாத நகைச்சுவை காட்சிகள் நிறைய இடம்பெற்றுள்ளதால், இத்தகைய வெற்றியைப் பெற்றுள்ளது.

நடிகர் கமலஹாசனை சாக்லெட் கிருஷ்ணாவின் 300வது நிகழ்ச்சிக்கு அழைத்த போது, அவரால் வர முடியவில்லை. 400வது நிகழ்ச்சிக்கு வருகிறார். இவ்வாறு மாது பாலாஜி கூறினார்.

நன்றி - கல்கி , தினமலர், யூ டியூப்