Thursday, June 21, 2012

அசோகமித்திரனும், வைஜயந்திமாலாவும்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGqJklJ22eGWlqijyNxZPyD9yKg8cm8if8d72nRffYUr0N3DEIo1Sey84xT-qASiCPovXg-WNGBbu8P7vAZfZcwgtG06Kn23pwv7iTnZ66nOHJJ4epLL5JhTD-CpDmzvD1OlGCi5PmTnM/s1600/8.jpgவைஜயந்திமாலா


ஒரு தமிழ் நட்சத்திர நடிகையாக வைஜயந்தி மாலா அதிகம் எழுதப் படவில்லை.


அவருடைய சமகாலத்திய நடிகைகளாக லலிதா, பத்மினி, ராகினி, பானுமதி, சாவித்திரி போன்றவர்களைக் கூறலாம். ஒரு வியக்கத்தக்க தகவல், வைஜயந்திமாலா ஒருத்திதான் தமிழ்ப் பெண். மற்றவர்கள் வேற்று மொழிக்காரர்கள். இன்றும் தமிழ்ப் படங்களில் கதாநாயகிகளாக நடிப்பவர்கள், அநேகமாக நூற்றுக்கு நூறு சதவிகிதம் வேறு மொழிக் காரர்கள். இன்று குரல் கொடுப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது.


 ஆனால் பானுமதியும் பத்மினியும் சாவித்திரியும் பக்கம் பக்கமாகத் தமிழ் வசனங்களை அவரவர்கள் மொழியில் எழுதி மனப்பாடம் செய்தார்கள். மிக நன்றாகவே நடித்தார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு உச்சத்தில் இருந்த ஒரு தமிழ் டைரக்டர் தமிழ் மூச்சு, தமிழ் உயிர், தமிழ் மண் என்று ஒரு திரைப் படத்தில் அவராகவே பேசியிருக் கிறார். ஆனால் அவருடைய கதாநாயகிகள் பெரும்பாலும் வேறு மொழிக்காரர்கள். அவருடைய கதாநாயகர்களில் ஒருவர் தெலுங்கர்; இன்னொருவர் மலையாளம்.



இந்தச் சூழ்நிலையில் வைஜயந்திமாலா தமிழ்ப் பெண்ணாக இருந்தும் அதிகத் தமிழ்ப் படங்களில் நடிக்கவில்லை. அவரை அணுகவே பயப்படுவது போல தமிழ்த் தயாரிப்பாளர்கள் அவரை அமர்த்தவில்லை. ஏவிஎம், ஜெமினி தவிர்த்து மூன்று வேறு படங்களில் மட்டும் நடித்தார். ஒன்று, ‘பாக்தாத் திருடன்’, இன்னொன்று ‘பார்த்திபன் கனவு’. ஜெமினியுடன் தேன்நிலவு. ‘பாக்தாத் திருடன்’ படத்தில் எம்ஜிஆர் நடித்தார்.. ஏன் அது இன்று யார் நினைவிலும் இல்லை? எம்ஜிஆர் நடித்த சுவடே இல்லாமல்போன வேறு படங்களும் உள்ளன. அதில் ஒன்று கண்ணாம்பா எடுத்தது. ‘தாலி பாக்கியம்’ கண்ணாம்பா அவர்களுக்கு தாலி, வீடு, வாசல் எல்லாம் போய் திடீரென்று இறந்தும் விட்டார்.

என்னுடைய நண்பர்  ‘பாக்தாத் திருடன்’ படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றினார். திரைப்பட சாதனத்தின் எல்லாப் பிரிவுகள் பற்றியும் மிகத் தெளிவாக அறிந்தவர். அவர் ‘திருடன்’ பற்றியும் பேசமாட்டார். கதாநாயகி வைஜயந்திமாலா பற்றியும் பேசமாட்டார்.


வைஜயந்திமாலா இன்று எழுபது வயதைத் தாண்டியும் ஆண்டுக்கு ஒரு நடன நிகழ்ச்சியாவது அவரே பங்குபெற்று நடத்தி வருகிறார். அவர் வேறு மொழிகளில் நடித்த ஒரு படமும் சோடை போகவில்லை. திலீப்குமார், ராஜ்கபூர், தேவ் ஆனந்த், ராஜேந்திர குமார், பிரதீப் குமார், பால்ராஜ் சகானி, அசோக்குமார் என பலதரப்பட்ட நட்சத்திர நடிகர்களோடு நடித்து அப்படங்களில் முக்கியத்துவமும் பெற்றார். ஒரு கட்டத்தில் கதாநாயகியாக நடிக்கமுடியாது என்று ஏற்பட்டவுடன் அவர் நடிப்பிலிருந்து விலகி, நாட்டிய நிகழ்ச்சிகள் மட்டும் அவ்வப்போது நடத்தினார்.

வைஜயந்திமாலா தோற்றம், நடன ஆற்றல் ஆகியவற்றுக்கே முன்னணி நடிகையாக இருந்தார். இந்தியில் அவருடைய சமகாலத்தைய நடிகைகளாக விளங்கிய நர்கிஸ், மதுபாலா, வஹிதா ரஹ்மான், நூதன் போன்றோர் பலமுறை ஆண்டின் சிறந்த நடிகையாக முன்மொழியப்பட்டு இருமுறை மூன்று முறை தேர்வும் பெற்றார்கள்.


வைஜயந்திமாலா ஒரே ஒருமுறை துணைக் கதாநாயகி விருதுக்காக முன்மொழியப்பட்டுத் தேர்வும் பெற்றார். ஆனால் அவர் அவ்விருதை ஏற்கவில்லை. ‘தேவதாஸ்' படத்தில் சந்திரமுகி வேடத்தில் நடித்த அவர், தானே கதாநாயகி என்று வலியுறுத்தினார். ஆனால் நடுவர்கள் அப்படிக் கருதவில்லை. சங்கடந்தான். தமிழ் ‘தேவதாஸ்' படத்தில் கூடப் பார்வதி வேடத்தில் நடித்த சாவித்திரியைத் தான் அனைவரும் கதாநாயகியாக ஏற்றுக்கொண்டார்கள். சந்திரமுகி வேடத்தில் நடித்த லலிதாவை அல்ல.

தமிழ் வரையில் ‘வாழ்க்கை’ என்ற படம் அடைந்த வெற்றியை ‘பெண்’, ‘அதிசயப்பெண்’ ஆகிய படங்கள் பெறவில்லை. ‘வாழ்க்கை’ படத்தில் பலர் சிறப்பாக நடித்திருந்தார்கள். டி.ஆர். ராமச்சந்திரன், சகஸ்ரநாமம், சாரங்கபாணி தவிர மிகச்சிறிய பாத்திரங்களில் நடித்தவர்களும் விசேஷ கவனம் பெற்றார்கள். இசை இன்னொரு வெற்றி அம்சம். பல பாடல்கள் இந்திப் பாடல்களின் கலப்படமற்ற பிரதிகள்.


ஆனால் அந்தப் பாடல்களுக்காக ரசிகர்கள் பலமுறை படத்தைப் பார்த்தார்கள். அந்த நாளில் (1949&ல்) பாடல்கள் திரைப்படம் வெளியாகிச் சிலகாலம் கழித்தே வெளியிடப்படும். இசைத் தட்டுத் துறையிலும் ஏவிஎம் முதன்மை நிறுவனமாக இருந்தது. வர்த்தகரீதியாக அவர்கள் ஏகபோகமாக நடந்துகொண்டார்கள் என்று சில இசைத்தட்டு நிறுவனங்கள் கூறின. ஆனால் திரைப்படங்களில் பல வெவ்வேறு அம்சங்களை இணைத்து வெற்றி ‘ஃபார்முலா’ கண்ட ஏவிஎம் சட்டரீதியாக இசைத்தட்டு வெளியிடுதலிலும் நல்ல திறமையை வெளிக்காட்டியது.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhSZmSmAWFFOpj7K6wV_e-1wGDEpQnfzJXfZOQlm8LuQuCpIpEAXfUcs8qDMsd-jUdXflklWpo8TBFSyMhwOhuSpsoiWg_ho8gvWvyau7ptVO3DrhODc9GvuZihCbC3QAhDWLWjKllTYOGU/s1600/vaijayanti-mala.jpg


வைஜயந்திமாலா, ஒரு தமிழ் நட்சத்திர நடிகையாக விளங்காத தற்கு ஒரு காரணம் பம்பாய்த் திரைப்படத்துறை அவருக்குக் கொடுத்த முக்கியத்துவம் தெற்கே கிடைக்கவில்லை. பத்மினி ஓரிரு இந்திப் படங்களில் நடித்தாலும் பிரதானமாகத் தமிழில்தான் இயங்கினார். சரோஜாதேவி, ஜமுனா போன்றோர்கூடச் சென்னையில் தயாரிக்கப்பட்ட ஓரிரு இந்திப் படங்களில் நடித்திருக்கிறார்கள். ஜெமினி ஸ்டூடியோ வைஜயந்திமாலாவுக்கென்றே விசேஷ நடனக் காட்சிகளை ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தில் சேர்த்திருந்தது.


‘ஜிந்தகி’ என்ற இந்திப் படத்தில் கதாநாயகிப் பாத்திரமே ஒரு நடன நாடகப் பெண்தான். இப்படம் தமிழில் ‘வாழ்க்கைப் படகு’ என்ற தலைப்பில் வேறு நடிக நடிகையரோடு தயாரிக்கப்பட்டது. இந்திப் படத்தில் வைஜயந்திமாலா சிறப்பாக நடித்திருந்தாலும், படம் வெற்றியடையாததால் வைஜயந்திமாலாவுக்கு பாராட்டுகள் கிட்டவில்லை. அவருடைய நடிப்புக்கென்று விருதும் பாராட்டும் கிடைத்தது பிமல்ராய் டைரக்ட் செய்த ‘தேவதாஸ்’ படத்துக்குத்தான். அதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை!



வைஜயந்திமாலாவின் இளமைப்பருவம், அவ்வளவு மகிழ்ச்சிகரமாக அமையவில்லை. தாய், தந்தையர் பிரிந்துவிட்டனர். வைஜயந்திமாலாவின் பாட்டியாகிய யதுகிரி அம்மாள்தான் அவளை வளர்த்து, நடனம் பயிற்றுவித்து, முதல் திரைப்படப் பிரவேசமே கதாநாயகியாக நடிக்க வழி செய்தவர் என்பார்கள். வைஜயந்தி மாலாவின் காவலராக யதுகிரி அம்மாளைத்தான் பலகாலம் மக்கள் அறிந்தார்கள்.

ஆனால் ஒருகட்டத்தில் வைஜயந்திமாலா அவருடைய பாட்டியையும் பிரிய நேர்ந்தது. அதன் பின்னர்தான் அவருடைய திருமணம் நடந்தது. மணமகன் ஒரு மருத்துவர். டாக்டர் பாலி. அந்நிய மொழிக்காரர். முதல் மனைவி இறந்துபோனதாகக் கூறுவார்கள். வைஜயந்திமாலா -&பாலி திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவே இருந்திருக்க வேண்டும். பாலி மறைந்துவிட்டார். ஒரு மகன் இருக்கிறான். எம்ஜிஆரைக் கடைசிவரை கதாநாயகனாகவே விளங்கியவர் என்று கூறுவார்கள். வைஜயந்திமாலா கதாநாயகியாகவே திரையில் பிரவேசித்து கதாநாயகியாகவே இறுதிப்படம் வரை தோன்றினார்.

http://www.cineradham.com/news/wp-content/uploads/2011/12/hema-malini-cineradham-270x300.jpg

திரைப்படங்கள் போல மனித அனுபவத்தில் வேறெதுவும் பரபரப்பூட்டுவதில்லை. அதேபோல நினைவிலிருந்து விலகிவிடுவதும் இல்லை. இன்று பழைய படங்களைப் பார்க்க நிறைய வசதி இருக்கிறது. ஆனால் பழைய படங்களைப் பார்ப்பவர்கள் அவர்கள் இளமைக் காலத்தில் அப்படங்களைப் பார்த்துப் பரவசமடைந்தவர்கள். இது நடிக நடிகைகளுக்கும் பொருந்தும். வைஜயந்திமாலா அவருடைய தமிழ்த் திரைப்படங்களை விட ஒரே ஒரு நடன நிகழ்ச்சிக்காகச் சிறிது காலம் நினைவில் இருப்பார். அது ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ என்ற படத்தில் அமைந்த போட்டி நடனம். அதில் பத்மினி அவர்கள் தோற்றுப் போகும் நிலையில் இருக்கும்போது போட்டி தடைப்படுகிறது. போட்டியில் வைஜயந்திமாலா சிறப்பாகத்தான் நடனமாடினார். அப்படத்தில் அவருடைய நடிப்பும் வசன உச்சரிப்பும் மிகவும் விசேஷமாக இருக்கும்.

சமீபத்தில் வைஜயந்திமாலா அவருடைய மகனுடன் முதலமைச்சர் அவர்களைச் சந்தித்தது புகைப்படத்துடன்கூடிய செய்தியாக வந்தது. முதலமைச்சரும் நடனமாடிய படிதான் திரைப்படத்தில் கதாநாயகியாகப் பிரவேசித்துக் கதாநாயகியாகவே விலகினார். இருவரின் சந்திப்பு மரியாதை நிமித்தம் என்றாலும், இருவருக்கும் பல பழைய நினைவுகள் வந்திருக்கும். அவர்களுடைய இளமைக்காலத் திரைப்படங்களைப் பார்த்தவர்களுக்கும் பல நினைவுகள் தோன்றியிருக்கும்.


நன்றி - த சண்டே இந்தியன்

DUBAI SEENU -நயன் தாரா வின் தெலுங்கு சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWDJwiOThIT9EpMT5Bw9UVTwcipVw2fukJIMpUf-z6fccjU6mrN4cZSdinxX0Nl8UPm23AI6_QH92cGeAiH_sZKYqXVv1wa8WrUQi23b_8RlGqcAJR1mm9mbSVBQxvOoayTqykxIy5Mkdq/s1600/wall_800x600_2.jpg கதைக்களம் ஹைதராபாத்ல , ஹீரோ வழக்கம் போல வெட்டாஃபீஸ்.. துபாய் போனா  பாய்ல சும்மா படுத்துக்கிட்டே சம்பாதிக்கலாம்னு கனவோட மும்பை போறார்.. அங்கே ஏஜெண்ட் பணத்தை எல்லாம் சுருட்டி ஏமாத்திடறான்.. விக்ரமன் படத்துல வர்ற மாதிரி ஹீரோ தன் கேங்க்கோட பிளாட்ஃபார்ம் கடை வெச்சு பொழப்பை ஓட்டறார்.. 

ஹீரோயின் தன் அண்ணனைத்தேடி அங்கே வர்றார்.. அண்ணன், அண்ணி 2 பேரும் ஹீரோவுக்கு ஃபிரண்ட்.. செம க்ளோஸ்,.. ஆனா பாருங்க அந்த மேட்டர் டைரக்டரைத்தவிர யாருக்கும் தெரியாது.

 படத்தோட கதை இடைவேளைக்குப்பிறகுதான் ஆரம்பிக்குதுங்கறதால  ஹீரோவும், ஹீரோயினும் கேனம் மாதிரி பேசிக்கிட்டு, லவ் பண்ணிக்கிட்டு, மொக்கை ஜோக்கா சொல்லி கடுப்பேத்திட்டு திரியுதுங்க.. இந்த லட்சணத்துல டூயட் வேற ..


ஹீரோயின் ஒரு ரேடியோ ஜாக்கி, அவருக்கு ஒரு நாய் மாமன் . அதாவது அவரையே நாய் மாதிரி சுத்திட்டு இருக்கும் தாய் மாமன்.. அவன் கண்ல மண்ணைத்தூவி லவ் பண்ணும் ஹீரோ..


ஹீரோயினோட அண்ணன் வேலை செய்யறது மாறு வேஷத்தில் இருக்கும் ஒரு தாதா.. போலீஸால் என்கவுண்ட்டருக்காக தேடப்படும் ஆள்.. 

ஹீரோயினோட அண்ணன் அதை கண்டு பிடிக்கறாரு.. அதை வில்லன் கண்டு பிடிச்சு போட்டுத்தள்ளிடறாரு 2 பேரையும்.. உடனே வில்லனை கொன்னுட்டா படம் 8 ரீல்லயே முடிஞ்சுடுமே. அதனால ஹீரோ டைரக்டர் சொல்லிக்குடுத்த மாதிரி வில்லனோட தம்பியை போட்டுத்தள்ளறார்.. 

ஹீரோ - வில்லன் மோதல்ல ஹீரோதான் ஜெயிப்பார்னு உலகத்துக்கே தெரிஞ்சாலும் எப்படி எல்லாம் கேவலமா பஞ்ச் டயலாக் பேசி கொலையா கொல்லப்போறார் என்பது தான் மிச்ச சொச்ச கதை


ஹீரோ ரவி தேஜா.. ஆள் நல்ல சுறு சுறுப்பு ... முகம் தான் முற்றலா இருக்கு.. வாய்ஸ் மாடுலேஷனில் ரஜினியையும், சீண்டல்களில், குறும்புகளில் விஜயையும் ட்ரை பண்றார்.. படத்துல நயன் தாராவை ட்ரை பண்றார்.. க்ளைமாக்ஸ் பாடல் காட்சி அதகள டான்ஸ்.. 



 ஹீரோயின் நயன் தாரா அதிகம் வேலை இல்லை.. 3 டூயட்..  24 காட்சிகள்ல தலையை , லோ கட்டை, லோ ஹிப்பை காட்டிட்டு போறார்.. அவ்ளவ் தான்

படத்தில் 2 காமெடியன்ஸ்.. 1 . எப்பவும் போல் பிரம்மானந்தம்.. நம்ம ஊர் வடிவேல் மாதிரி .. ஆள் வந்தாலே சிரிப்புத்தான்.. 


 இன்னொருவர் சியாஜி ஷிண்டே. பாரதியாருக்கு நேர்ந்த கொடுமை பாருங்க.. இவர் காமெடி பண்ண ட்ரை பண்றது கூட ஓக்கே, ஆனா சர்க்கிள் இன்ஸ்பெக்டர் கேரக்டர் பண்றப்போ அந்த பதவிக்குண்டான மரியாதையை தூக்கி போட்டுட்டு ஏதோ வாட்ச் மேன் மாதிரி கூத்து அடிப்பது மகா கேவலம்.. 

http://www.extramirchi.com/gallery/albums/south/movies/DubaiRani/dubai-rani_(24).gif


மனம் கவர்ந்த வசனங்கள்



1. முகத்துல சுருக்கம் வராம இருக்க  நான் சில ஃபேஸ் எக்சசைஸ் பண்றேன்..

 ஓஹோ,அதை எல்லாம் செஞ்சா சுருக்கம் வராதா?

 புதுசா வராது


அப்போ பழசு?

 அது அப்படியேதான் இருக்கும்



2. புள்ளி ராஜா கோஷ்டில வந்த ஒல்லி ராஜா நீ , மறந்துடாதே


3. எனக்கு பசிக்குது, ஆனா சாப்பிட முடியல, தாகம் எடுக்குது, ஆனா எதையும்  குடிக்க முடியலை..இதுதான் காதலா?

 இல்லை, இது சிக்குன் குன்யா.. 



4. துபாய் ஃபிளைட்  லேட்.. வர 2 மணி நேரம் லேட் ஆகும்னு சொன்னாங்க, நீ எப்படி வந்தே?

 ஹி ஹி வேற ஃபிளைட் பிடிச்சு வந்துட்டேன்

 காது குத்தாதே.. அதெப்பிடி.. நடு வானில் விமானம் மாத்த முடியும்?



5.  நீ ஏம்மா இங்கே நிக்கறே..?

 பைக் ரிப்பேர் மாமா

 அடடா.. ஜஸ்ட் ஒரு ஃபோன் பண்ணி இருந்தா நான் பிக்கப் பண்ண வந்திருப்பேனே?

 ஏன்?

 வேற எவனும் உனை பிக்கப் பண்ணிடக்கூடாது பாரு.. அதான். 


6. அவ பிறந்ததே எனக்குத்தான்.. 

 உங்க ஊர்ல குழந்தை  பிறந்தா மேரேஜ் பண்ணி வெச்சுடுவாங்களா? எங்க ஊர்ல எல்லாம் லவ் பிறந்தாதான் மேரேஜ் பண்ணி வைப்பாங்க


7.  மதுவுக்காக நான் சாக ரெடி.. நீ சுடுறீயா?.. இப்போ நான் உன்னை சுடறேன்.. நீ சாக ரெடியா? 


8. எந்த உண்மையை சொல்றே?

 அவர் சொன்ன பொய்யை..

 குழப்பாதே.. 

 அதாவது அவர்  என்னை லவ் பண்றதா பொய் சொன்னதா சொன்னாரே அது பொய் இல்லை, உண்மை

 தெளிவா குழப்பிட்டே.. 


9. சார்.. துபாய் போற ஃப்ளைட்ல உக்கார சீட் கிடைக்குமா? ஸ்டேண்டிங்க் தானா?


ஃப்ளைட்ல ஏ சி இருக்குமா? 

 அட்சிஸ்டென்ட் கமிஷனர் வேணா இருப்பார்.. அவரும் ஏ சி தானே?


10. என்னது? இதுதான் வீடா? என்னமோ கூடாரம் மாதிரி இருக்கு?



நீங்க எல்லாரும் இங்கே உக்காந்து பேசிட்டு இருந்தா அது ஹால், சமையல் செஞ்சா அது கிச்சன் ரூம், படுத்தா அது பெட் ரூம், 


அப்போ மழை வந்தா..?

 ஹி ஹி ஸ்விம்மிங்க் பூல்.. ஏன்னா கூரை ஒழுகும்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhIeGkEpdFo9xQD-_kC5HrwKsL1n2eqYn8iNJ_jtOp-Xxk1srjOZ3qdj-fd0mjMfE4jzStBG8klMUBd5n9fygK4gdOwKzQBhS06sEafSdA94PZAJh3v_y0bj25_wQoESEkD4d8hsI-V5ii8/s1600/Dubai+seenu+2007+-+DVDRIP+movie+torrent+free+download+by+www.tellwtuwant.blogspot.com+(5).png

11.  நீ என்ன செய்வே..?

 கீழே வைக்காம ஒரு ஃபுல் அடிப்பேன்.. 

 கீழே வெச்சா?

 அவன் எடுத்து குடிச்சுடுவான்.. 



12. நீங்க எங்கே வேலை செய்யறிங்க?

சாஃப்ட்வேர் கம்ப்பெனில


எந்த கம்பெனில வேலை?

 ம்.HP  கம்ப்பெனில 

 அது கேஸ் கம்ப்பெனி ஆச்சே?

 ஹி ஹி .. அவங்க பேரை ஃபேமஸ்க்காக இவங்க எடுத்துக்கிட்டாங்க


13.  அவ ஏன் என் கண்ல அடிக்கடி படனும்..? இதை எல்லாம் வெச்சுப்பார்க்கறப்போ , நடந்த சம்பவங்களை கூட்டிக்கழிச்சு வகுத்து, பெருக்கி பார்த்தா ... 

 குப்பை தான் வரும்.. காதல் வராது.. 



14. உங்களை திருமானி அம்பாய் ஆக்கலாம்னு பார்த்தா பீர் பாய் அம்பானி ஆகாம போக மாட்டீங்க போல.. எப்போ பாரு சரக்குத்தானா?



15. இவன் மாமூலா இருக்கும்போது  எம் ஜி ஆர்.. சரக்கு அடிச்சுட்டா நம்பியார்.. 


16.  உன் ஃபிளாஸ்பேக் ஏண்டா இவ்ளவ் கேவலமா இருக்கு? உன் லவ் ஸ்டோரில ஒரு கிஸ் இல்லை.. ஒரு கில்மா இல்லை.. செம போர்



17.  மாப்பிள்ளை ராஜா லெவல்ல இருந்தவராம்

 ம்க்கும். நல்லா விசாரிங்க ராஜா டிராவல் ல இருந்திருக்கப்போறார்


18.  என் தண்ணியை அடிச்சுட்டு என்னையே அடிக்கறியா? சரக்கு ஓசில வாங்குனா நன்றி உணர்ச்சி வேணாமா?



19.  அவன் கிட்டே என்ன இருக்கு? என் கிட்டே என்ன இல்லை?

 என் கிட்டே கேட்டா? போய் அவ கிட்டே கேளுங்க.. 




20.  நாம எந்த பொண்னையும் லவ் பண்ணதே இல்ல


நம்மை எந்த பொண்ணும் லவ் பண்ணலைனு சொல்லுங்க 

http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-3496.jpg



21. பர்சனலாவும் சரி , புரொஃபசனலாவும் சரி  நான் மெண்டல் ஆகிட்டே வர்றேன், காரணம் அவ தான்


22.  டென்ஷனும் பயமும் எப்பவும் நமக்கு வரக்கூடாது, நம்ம எதிரிங்களுக்கு வரனும்


23.. இவனெல்லாம் ஒரு ஆர்ட்டிஸ்ட். நாம சொல்றதை இவன் செய்ய மாட்டான், இவன் ஆடறதை அட்ஜஸ்ட் பண்ணி நாம ஷூட் பண்ணிக்க வேண்டியதுதான்

 சுவத்துல பல்லி ஊறுதே அது போல ஸ்டெப் சொல்லிக்குடுங்க, பக்கி கரெக்ட்டா செய்யும்.. 


24.. இன்னொரு டைம் இங்கே வந்தே கு க ஆபரேஷன்  பண்ணி விட்டுடுவேன்


25. இன்ஸ்பெக்டர், இவன் மும்பைல எங்களை சீட்டிங்க் பண்ணினான்.. 

 அங்கே தானே சீட் பண்ணினான்.. இங்கே சொன்னா எப்படி? ஏன் இங்கே வந்து கலாட்டா பண்றீங்க? 


26. உங்க கையை பார்த்தா தரித்திரம் பிடிச்ச ஜாதகமா இருக்கே?

 நான் கையை பார்க்காமயே சொல்வேன். இது என்ன பெரிய ஜோசியம்?

http://2.bp.blogspot.com/-JIYES52Hm3Q/TcwdtdyWXsI/AAAAAAAAAJw/n65_GrtSg-c/s1600/nayanthara-hot.jpg



இயக்குநரிடம் சில கேள்விகள்



1. பிரம்மானந்தம் மும்பை ஏஜண்ட் கிட்டே ஃபோன்ல தான் பேசி இருக்கேன், ஆனா ஆளை நேர்ல பார்த்ததில்லைன்னு ஒரு ஆள்ட்ட ஏமாறும்போது சொல்றார்.. அவர் ஏன் நேர்ல பார்க்காத நபரை சந்திக்கும்போது அவருக்கு ஃபோன் பண்ணி அதே நபரா?ன்னு கேட்கலை?


2. பொதுவா இந்த மாதிரி பண பரிவர்த்தனை எல்லாம் ஆஃபீஸ்ல தான் பண்ணுவாங்க.. ஆனா சும்மா நடு ரோட்ல ஏமாறுவது நம்ப்ற மாதிரி இல்லை.. லட்சக்கணக்குல பணம் குடுத்துட்டு அதுக்கு ரசீது கூடவா கேட்கமாட்டாங்க?


3. நயன் தாரா தன் அண்ணனை தேடி மும்பை போறார். அவர் ஃபோட்டோவை ஏதோ லைப்ரரில கொடுத்து ஆள் வந்தா தகவல் கொடுங்கறார்.. அவர் ஏன் பேப்பர்ல, மீடியாக்கள்ல விளம்பரம் தர்லை?


4. வில்லன் தன் ஆஃபீஸ்ல வேலை செய்ய்ற ஆள் தான் தான் தாதா என்பதை கண்டு பிடிச்சுட்டாங்கனு தெரிஞ்சதும் அங்கேயே, ஸ்பாட்லயே போட்டுத்தள்ளாம நல்ல நேரம் ராகு காலம் பார்த்துட்டு 4 நாள் கழிச்சி தேடுவது காமெடி


5. படத்தோட திரைக்கதைல நேரா கதையை சொல்லாம எதுக்கு தேவை இல்லாம இத்தனை ஃபிளாஸ்பேக், திருப்பங்கள்? இது என்ன பெரிய சஸ்பென்ஸ் த்ரில்லரா? மாமூல் மசாலாக்குப்பைதானே?

6. நயன் தாராவின் அண்ணன் தன் உயிர் நண்பன் கிட்டே கடைசி வரை தன் தங்கை ஃபோட்டோவை காட்ட்ட்லை, அதே போல் நயன் தாராவும் இவர் தான் எங்க அண்ணன் என தன் காதலன் கிட்டே ஃபோட்டோ காட்டலை.. ஏன்?

7. ஹீரோயின் நயன் தாராவின் கூடவே வரும் தோழி நல்ல ஃபிகர் தான்  ஆனா அதுக்காக ஹீரோ ஹீரோயின் கிட்டே பேசறப்போ, சிரிக்கறப்போ, லவ்வறப்போ எல்லாம் என்னமோ அவர் தான் ஹீரோயின் மாதிரி ஓவர் எக்ஸ்பிரஷன் குடுக்கறாரே? ஏன்?


8. படத்துல வெட்டியா பானுச்சந்தர் உட்பட பலர் வீனடிக்கப்பட்டிருக்காங்களே? ஏன்?


9. எல்லாரும் அஞ்சி  நடுங்கும் ஜின்னா பாய் வில்லன் மாதிரியே இல்லை, காமெடி பீஸ் மாதிரி இருக்கார்.. 


http://www.tamilactresspics.com/new-gallery/plog-content/images/tamil-actress/nayantara/nayanthara_cute_blue_half_saree_photos_stills_super_movie_4300.jpg i

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. சாயாஜி ஷிண்டே கூட வரும் காமெடி நடிகர் அடிக்கும் கவுண்ட்டர் டயலாக்  ஒவ்வொன்றும் நச் ரகம்.. காமெடி கலக்கல்


2.  துபாய் கூட்டிப்போவதாக சொல்லி ஏமாற்றி தானும் ஏஜென்ட்டிடம் ஏமாந்து பின் ஹீரோ அண்ட் கோவிடம் வடிவேல் போல் அடி வாங்கி பின் எடுபுடி வேலைக்கு சேருவது


3. ரேடியோ ஜாக்கியாக வரும் நயன் தாரா தன் மாமாவை லவ் வர வெயிட் பண்ணனும் என சொல்லிக்கொண்டே அவர் கண் முன் ஹீரோவை லவ் பண்ணுவதும் அவரை கலாய்ப்பதும் ஜாலி பட்டாசு


4. பாடல் காட்சிகள் பிரம்மாண்டம்.. அதுவும் அந்த கடைசி பாடலும், அதற்கு முந்திய பாடலும் ஆரவாரம்.. நடன வடிவமைப்பு செம..


5. பல வருடங்களுக்கு முன் ரிலீஸ் ஆன இந்த தெலுங்குப்படத்தை  புதுப்படம் போல் துபாய் ராணி என டைட்டில் வெச்சு நயன் தாரா படம் போல் போஸ்டர் ஒட்டிய டெக்னிக் 


சி.பி கமெண்ட் - படம் ஓவர் மொக்கை எல்லாம் இல்லை, விஜய் படம் மாதிரி கொஞ்சம் ஜாலியா, ஆக்‌ஷன் மசாலா எல்லாம் கலந்து போகுது.. டி வி ல போட்டா பார்க்கலாம்.. ஈரோடு ஸ்டாரில் படம் பார்த்தேன்

ஃபுல் படமும் பார்க்க - http://www.youtube.com/watch?v=8_nUQEMjFY0

நாளைய இயக்குநர் - செமி ஃபைனல் - விமர்சனம் ( 17 .6.2012)

வாரா வாரம் ஞாயிறு அன்று கலைஞர் டி வி ல காலை 10.30 மணிக்கு  3 குறும்படங்கள் ஒளிப்பரப்பறாங்க.. மிஸ் பண்ணாம பாருங்க.. 

இந்த வாரம் நடுவர்களா இயக்குநர் விக்ரமன், மைனா இயக்குநர் பிரபு சாலமன்..

பிரபு சாலமன்...  -. எங்களுக்கு நாளைய இயக்குநர்  மாதிரி ஒரு பிளாட் கிடைச்சிருந்தா 12 வருஷங்கள் கஷ்டப்பட்டிருக்க மாட்டோம்.என்னோட அடுத்த படம் கும்கி. அதாவது பயிற்சி கொடுக்கப்பட்ட யானைகள் வாழ்க்கை பற்றி. பின்னணில ஒரு காதல் கதை .. கிராமத்துல நடக்கும் பிரச்சனைகள்.. இப்படி போகும்.. 


விக்ரமன் - இந்த வாரம் டாபிக் போலீஸ் ஸ்டோரிஸ், சயின்ஸ் ஃபிக்சன்



#
என்னடா பிரச்சனை உங்களுக்கு ?-kovai mani



1. இயக்குநர் பெயர் - பாரதி பாலா , குறும்படத்தின் பெயர் - சத்தியப்பிரமாணம்


1960 களில் வந்த பழைய படங்களை கிண்டல் பண்ற மாதிரியும், புதிய தலைமுறை இளைஞர்களுக்கு ஒரு ஞாபகமூட்டலுமா இந்தப்படம் எடுத்திருக்காரு.. பின்னணி இசை , உடை வடிவமைபு, உடல் மொழி, வசனம் எல்லாமே அப்படியே அந்தக்காலம்.. ஐ திங்க்.... இதுதான் முதல் பழைய கால பிரதிபலிப்பு முதல் குறும் படம்./.

போலீஸ் உயர் அதிகாரி அண்ணன் தம்பி 2 பேரையும் கூப்பிட்டு ஒரு பொறுப்பை ஒப்படைக்குது.. அவங்க 2 பேரும் போலீஸ் தான்.. ஒரு கடத்தல் கும்பலை பிடிக்கும் வேலை.. 

 இப்போ ஒரு ஃபிளாஸ்பேக்.. ஸ்கூல்ல படிக்கும்போதே டீச்சர் “ நீங்க என்னவாகனும்னு ஆசைப்படறீங்கன்னு கேட்டப்பவே 2 பேரும் ஒரே மாதிரி போலீஸ் ஆகனும்னு ஆசைப்பட்டவங்க,.. 

பழைய பட சஸ்பென்ஸ் மாதிரியே அண்ணன் தம்பி ராமு- குமார்ல ராமுதான் வில்லன்.. ஆனாலும் அவனை பிடிச்சு போலீஸ்ல ஒப்படைக்கறதுதான் கதை.. 

 மேலோட்டமா பார்த்தா அல்லது எழுத்து வடிவில் இதை படிக்கும்போது அரைச்ச மாவுதானே என்ர சலிப்பு வரும்.. ஆனாலும் இந்த 8 நிமிட குறும்படத்துக்காக எடுத்துக்கொண்ட உழைப்பு அதிகம்.. 

 ஆனாலும் உழைப்பு அதிகம் என்பதற்காக யாரும் படங்களை ரசிப்பதில்லை.. அப்படி ரசிச்சிருந்தா கமல் ஹாசன் ரஜினியை பீட் பண்ணி இருப்பாரே?



விக்ரமன்  கமெண்ட் பண்றப்போ  “ ஸ்பூஃப் ட்ரை பண்ணி இருக்கீங்க. ஆனா அதிகம் ஒர்க் அவுட் ஆகலை.. 1960 டூ 75 அப்படியே கண் முன்னால் நிறுத்தினீங்க அப்டினு பாராட்னாரு.. 

சாலமன் - ஈஸ்ட்மென் கலர், டைட்டில் டிசைன்,  பின்னணி இசை எல்லாம் அபாரம்.. ஏன்னா அந்தக்காலத்துல ஈஸ்ட்மென் கலர்ல படம் எடுக்கறது அபூர்வம்.. அதனால அதை பெருமையா டைட்டில்ல போட்டுக்குவாங்க , அதைக்கூட மிஸ் பண்ணாம  கரெக்டா நோட் பண்ணி டைட்டில்ல யூஸ் பண்ணி இருக்கீங்க.. குட்.. நேர்த்தியான, உண்மையான உழைப்பு.. 


ஒளிப்பதிவுக்கு  பரிசு வாங்குச்சு.. 



Prime Minister Manmohan Singh today left for Rio De Janeiro to attend the Rio+20 summit, the three-day meeting to be attended by 193 nations.

Singh was here in this Mexican resort to participate in the seventh summit of the Group of developed and developing countries(G-20).


2,இயக்குநர் பெயர் -ஸ்ரீகணேஷ் , குறும்படத்தின் பெயர் - ஒரு கோப்பை தேநீர்

 எஸ் ராம கிருஷ்ணனின் சிறுகதையை பேஸ் பண்ணி  மகேந்திரன் பாணில அழகிய படம்.. 
ஒரு போலீஸ் கான்ஸ்டபிள், ஒரு கைதி .. 2 பேரும் லேடீஸ்.. கோர்ட்டுக்கு போற வழில அவங்களுக்கு இடையில் நடக்கும் சம்பாஷனைகள் தான் படம்.. 

 படத்தோட கதைப்போக்கு அன்பே சிவம் டைப் தான்.. அதாவது மாறுபட்ட 2 கேரக்டர்களை வெச்சு இயக்குநர் தான் சொல்ல விரும்பும் கருத்தை மக்களுக்கு சொல்வது ..

கைதி சின்ன விஷயத்துக்காக திருடி மாட்டிக்கறா.. அவளை கோர்ட்ல ஒப்படைக்க லேடி போலீஸ் கூட்டிட்டு போறாங்க,.,. அவங்க அன் மேரீடு.. வழில அவங்க மாமா கிட்டே பேசும்போது அந்த மேட்டர் தெரிய வருது.. போலீஸ்னாலே மாப்பிள்ளைங்க பயப்படறாங்க. அதனால லேடி போலீஸ்க்கு வருத்தம்.. 

 இதுல என்ன காண்ட்ரவர்சின்னா போலீஸ் வேலைல இருந்தும் அந்த லேடி டென்ஷனா இருக்காங்க, கைதியா இருந்தும் அந்த லேடி ஜாலியா , எதைப்பற்றியும் கவலை இல்லாம இருக்காங்க.. வழி பூரா தொண தொணனு பேசிட்டே வர்றா.. 

 திடீர்னு அந்த லேடிக்கு மென்சஸ் ஆகிடுது. போலீஸ் கிட்டே மெடிக்கல் ஷாப்ல நாப்கின் வாங்கித்தாங்கனு கேட்கறா.. போலீஸும் வாங்கித்தருது.. இதே ஒரு ஆண் போலீஸா இருந்தா கிண்டல் தான் பண்ணுவாங்க.. ஒரு பொண்ணா  இருப்பதால் தான் வலி உங்களுக்கும் தெரியுதுன்னு சொல்லி படத்தை செண்ட்டிமெண்ட்டா முடிக்கறாங்க

 இதுல முக்கியமான 2 கேரக்டர் நடிப்பும் கிளாஸ்.. போலீஸா வரும் நடிகை முகத்தில் கவலைச்சுருக்கங்கள் அப்படியே கண் முன் ... கைதியின் தெனாவெட்டுப்பேச்சு கலக்கல்.. 

மனம் கவர்ந்த வசனங்கள்


1. கில்மா லேடி - போற வர்றவங்க எல்லாம் யூஸ் பண்ண நான் என்ன குப்பைத்தொட்டியா? 


2. இங்கே பாருங்க மேடம், போலீஸா இருந்தாலும், திருடியா இருந்தாலும் ஆம்பளைங்களுக்கு பொண்ணுங்கன்னா ஒரே பார்வை தான் ( எவன் சொன்னது? யூனிஃபார்ம்ல இருந்தா பம்முவோம் ஹி ஹி )


3. சாஃப்ட்வேர் கம்ப்பெனில ஒர்க் பண்றவன் எதுக்கு போலீஸ் லேடி மேரேஜ் பண்ணனும்னு இருக்கு? அவனுக்கு தோசை சுட்டுப்போடும் மனைவி போதாதா?


4. போலீஸ் - யார்டி அவன், உனக்கு ஹாய் சொல்லிட்டுப்போறான்?

 சும்மா. இப்போ ஜெயிலுக்கு போனா வெளில வர எப்படியும் 6 மாசம் ஆகும்.. அதான் அனுபவிக்கலாம்னு.. 


5. லீஸா இருந்தாலும், திருடியா இருந்தாலும் பெண்களுக்கு இந்த மாதாந்திர வலி பொதுவானது.. எல்லாருக்கும் வலிக்கும். 

6. நான் 1 கேட்பேன், பதில் சொல்லு.. நீ ஏன் திருடி ஆனே?


 நீங்க ஏன் போலீஸ் ஆனீங்க? 


7. உங்களை அக்கான்னு கூப்பிடவா?

 வேணாம்.. 

சரி ஏட்டம்மான்னு கூப்பிட்டுக்கறேன்.. 


ஒளிப்பதிவும் , பின்னணி இசையும் நல்லா இருந்தது.. 


சாலமன் - டைட்டில் சரி இல்லை, இன்னும் கிரிப்பா வெச்சிருக்கலாம் ( எப்படி? ஸ்ட்ராங்க் டீ 1 அப்டின்னா? )


விக்ரமன்  - மணிரத்னம் இயக்கிய பம்பாய் படத்துல ஒரு தீம் மியூசிக் வரும்.. படம் முடிஞ்ச பின்னாலும் நம்ம மனசுல தங்கும் இசை அது.. அதே மாதிரி இந்தப்பட தீம் மியூசிக்கும் இருந்துச்சு வெல்டன். 



இந்தப்படம் இந்த வாரத்தின் சிறந்த படமா செலக்ட் ஆச்சு. சிறந்த நடிப்புக்கு 2  ஹீரோயின்ஸ்க்கும் கிடைச்சுது


ரெடி....1....2.....



3. இயக்குநர் பெயர் -செந்தில்   , குறும்படத்தின் பெயர் -ரெட்டைக்குழல்

 ரிட்டயர் ஆகப்போகும் ஒரு போலீஸ்காரரின் கடைசி பணி நாள் தான் கதை.. 
எல்லாரும் 5 வருஷத்துல அமோகமா சம்பாதிச்சு செட்டில் ஆகறாங்க.. ஆனா 58 வயசு வரை வேலை பார்த்தும் உருப்படியா ஒண்ணும் சேர்த்து வைக்கலை..அப்டின்னு மனைவி புலம்பறாங்க.. பொதுவா இந்த சம்சாரங்களே புலம்பல் பார்ட்டிங்க தான்.. போலீஸ்காரர் ஸ்டேஷன் போறாரு./..அவரோட துப்பாக்கியை மிஸ் பண்ணிடறாரு.. கடைசி நாள் எல்லாம் ஒப்படைக்கனும்

 யார் எடுத்திருப்பாங்க? அவர் லிஸ்ட் அவுட் பண்ணி பார்க்கறார்.. அவரோட எதிரிகள் யார் எல்லாம் இருக்காங்க.? சமீபத்திய கேஸ்கள்ல மாட்டுனது யார்? ஒவ்வொருவரா விசாரனை பண்றாரு.. யாரும் எடுக்கலை.. 

 கடைசில பார்த்தா ஒரு லேடி கான்ஸ்டபிளே  அதை எடுத்து ஒளிச்சு வெச்சு அதுவே கண்டு பிடிச்சுத்தர்ற மாதிரி ஷோ காட்டி நல்ல பேர் வாங்குது.. என்ன ட்விஸ்ட்னா  அவர் பையன்  இந்த லேடியை லவ்விங்க். மாமனார்ட்ட நல்ல பேர் எடுக்க இப்படி ஒரு டிராமா...


மலைக்கிராமம் அப்படியே கண் முன் காட்டிய ஒளிப்பதிவாளருக்கு ஒரு சபாஷ்.. 


லாஜிக் மிஸ்டேக்கா  சாலமன் சொன்னது -நானும் சினி இண்டஸ்ட்ரில பல தடைகளை தாண்டி வந்ததால உங்க மனசை புண்படுத்த விரும்பலை, அதனால . சில குறைகளை சாஃப்ட்டா சொல்றேன்.


1.  ஒரு ரைபிளை இப்படி அசால்ட்டா ஒரு போலீஸ் வெச்சுட்டு போக மாட்டார். அதை வைக்க ஒரு லாக்கர் இருக்கு.. அதுல தான் வைப்பாங்க


2. துப்பாக்கியை காணோம்னா ஒரு பதட்டம், பரபரப்பு வேணும்.. எதையும் அந்த போலீஸ் காட்டலை. மெத்தனமா இருந்தா பார்க்கும் ஆடியன்ஸ்க்கு மட்டும் எப்படி ஒரு ஆர்வம் வரும் ?





 பாராட்டு பெறும் வசனங்கள்

1.  என் 33 வருஷ சர்வீசை வெறும் 7 மணி நேரம் மாத்திடும் போல இருக்கே?


2. எல்லாரும் 5 வருஷத்துல அமோகமா சம்பாதிச்சு செட்டில் ஆகறாங்க.. ஆனா 58 வயசு வரை வேலை பார்த்தும் உருப்படியா ஒண்ணும் சேர்த்து வைக்கலை.




நிகழ்ச்சித்தொகுப்பாளர் கீர்த்தி கிட்டே ஒரு முன்னேற்றம்.. முதல்ல எல்லாம் ரொம்ப  கேவலமான நைட்டியை போட்டுட்டு வருவார்.. இப்போ கொஞ்சம் டீசண்ட்டா நைட் கவுன் போட்டுட்டு வர்றார்.. ( ஒரு வேளை ஷூட்டிங்க் நைட்ல நடக்கறதால  மேட்சுக்கு மேட்சா நைட் டிரஸ்ல வர்றாரோ?)

பொண்டாட்டிங்க கேள்வி கேட்கறப்போ நாம என்ன செய்யனும்?

முயல் குட்டி so cute ,,,:) # உங்கள முயல் குட்டியதான் பார்க்க சொன்னேன் :)))
1.தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை மாதிரி ஒரு புருஷன் சிக்குனா போதும், ஜாலியா பொண்ணுங்க அவனை மிரட்டி வேலை வாங்கிக்குவாங்க


------------------------


2. நீ கவிதை எல்லாம் சொல்லி கிழிக்க வேண்டாம், உம்முனு இருக்காம உன் முகத்தை கொஞ்சம் சிரிச்ச மாதிரி வைக்க ட்ரை பண்ணா போதும் ஹி ஹி


--------------------------------

3. தயிர் சாதம் தான் உடம்புக்கு நல்லதுன்னு எந்த வீட்டிலாவது எந்த சம்சாரமாவது சொன்னா நம்பிடாதீங்க # ஓ பி ஒலகநாயகி


--------------------------------

4. காதலிக்கும்போது கவிதையாய் எழுதித்தள்ள 1000 பேர் இருக்கிறார்கள்,மனைவியை போற்றி கவிதை எழுத ? # சண்டை போடவே நேரம் சரியா இருக்கு


----------------------------------

5. ஒரு பெண் எப்பவுமே உங்களுக்குத் தேவதையாக தெரியவேண்டுமென்றால் அவளை க்ளோசப்பில் பார்க்காமல் லாங்க் ஷாட்டில் மட்டும்பார்க்க!


----------------------------

6.  முற்பகல் செயின், பிற்பகல் நெக்லஸ் # அடமானம்


--------------------


இன்னும்கொஞ்சம் காதுபெருசா இருந்தா இழுத்துபோதிடு தூங்குவேன்ல;)பாரு மூஞ்சில வெளிச்சம் அடிக்குது :))

7. அமலா ”பா”ல் உடன் மோகன்”லா”ல் ஜோடி சேருகிறார் ! # டைரக்‌ஷன் பாலா?


--------------------------

8. பஸ்ஸில் ஒரு பெண்ணைப் பார்க்கும் அயோக்யமான ஆண் முதலில் அவள்  புருஷன் உடன் இருக்கிறனா? என்று பார்க்கிறான் # எ கீ 


----------------------------------

9. என் நிலைமையே சிரிப்பா சிரிச்சு கிடக்கு இதுல நான் எங்கே சிரிக்க # எ கீ


---------------------------

10./ டியர், இந்த உலகத்துல நான், நீ 2 பேர் மட்டும் இருந்தா எப்படி இருக்கும்? 


கேவலமா இருக்கும், டைவர்ஸ் வாங்க  வக்கீல் வேணாமா?


------------------------------------


11. நிலக்கரி பற்றாக்குறையால் குறைகிறது மின் உற்பத்தி # இப்படி எதையாவது சொல்லி பப்ளிக் முகத்துல கரியை பூசிடுங்க 


------------------------------


என்னடா நடக்குது இங்க ,,நான் வந்துட்டேன்டா :))

12. 2020 -ல் 2 கோடி பேருக்கு மறதி நோய் வரும்! # ஐ ஜாலி, 2 கோடி லவ்வர்ஸ் ஜோடி மாத்திக்குவாங்க 


------------------------

13. கைக்காசைப் போட்டு சொந்த தொகுதிக்கு தண்ணீர் சப்ளை -கேப்டன் #கைக்காசுன்னா காங்கிரஸ் காசா? எச்சைக்கைல காக்கா ஓட்டாத ஆள் ஆச்சே



--------------------

14. பைக்கு வெச்சிருந்தா பொண்ணு பின்னால வருதுன்னா அது கிராக்கு இல்லைன்னா பேக்கு



------------------

15.ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தை பார்த்தார் கருணாநிதி. # ஹன்சிகாவை கடலில் தூக்கிப்போட்டாலும் செம கட்டையாகத்தான் மிதப்பார் போல


---------------------------

16. ஆஃபீஸ்ல பெண்களோட அடிக்கடி பேசிட்டு இருக்கறதால எனக்கு அப்ரைசல் கிடையாதாம், அடங்கோ, அப்போ மேனேஜர்க்கு மட்டும் எப்படி?


-----------------------------



யார் அடிச்சாரோ ,,,,யார் அடிச்சாரோ ,, தென்பாண்டி சீமையிலே ...தேரோடும் வீதியலே :)) # nice still


17. வெற்றி மாறன் - தனுஷ் கூட்டணியில் புது படம் - தயாநிதி அழகிரி # சைக்கோ ஸ்டார் + ஹெட் வெயிட் டைரக்டர் =அரோகரா


-------------------------------

18. தவிர்க்க இயலாத காரணங்களால் “வட சென்னை” படம் தள்ளிப்போடப்பட்டு விட்டது - தயாநிதி அழகிரி # அடடா, வட போச்சே


--------------------------

19. மாநில அரசுகளை மத்திய அரசு மதிப்பதில்லை:ஜெ. குற்றச்சாட்டு # ஆமா, அம்மா கால்ல பிரதமர் விழுந்து ஆசீர்வாதம் வாங்கனுமோ?


-----------------------

20. பொதுவா பொண்டாட்டிங்க என்ன கேள்வி கேட்கறாங்களோ அதுக்கு ஆமா , இல்லைன்னு மட்டும் பதில் சொல்லி கமுக்கமா இருங்கப்பா # சக்சஸ் ஆஃப் லைஃப்


---------------------------------



LOL RT நானெல்லாம் அப்பவே அப்படி?

Wednesday, June 20, 2012

எழுத்தாளர் ஜெயமோகனும் , தண்ணீர் தண்ணீர் சரிதாவும்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUzSQ4o4SYZXI3tQTjqH_cXl9awTwXYKVCD9PVW21RHvdzytSL9dplCO0SgKKrNX-wZosqpDzUnyzWj9hSdLrKgxWfX3CIvfTrxtwM6I_FjiPAD3d0TjFa_DAhFwyCPQAwHv-cTWHn2Ys/
இரு தருணங்களிலாக நான் ஒரு திரைப் படத்தைப் பார்த்தேன். கே.பாலசந்தர் இயக்கிய ‘தண்ணீர் தண்ணீர்’. முதல்முறை பார்க்கும்போது  எனக்கு 19 வயது. கல்லூரி இறுதிவகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். வகுப்பை வெட்டிவிட்டு கையில் புத்தகங்களுடன் நாகர்கோயில் பயோனியர் முத்து திரையரங்குக்குச் சென்று சொட்டிக்கொண்டிருந்த மழையில் நனைந்துகொண்டு வரிசையில் நின்று, ஈரஉடலில் மின்விசிறிக்காற்று குளிரக் குளிர, அரங்கெங்கும் ஈர உடைகள் நீராவியை உமிழ,  தென்தமிழ்நாட் டின் கடும் வறட்சியைப் பற்றிய அந்தப் படத்தைப் பார்த்தேன்.

ஆரம்பித்த சில கணங்களுக்குள் பாலைநிலம் வழியாக வெக்கையில் உடல் எரிய சென்று கொண்டிருந்தேன். தலையில் தண்ணீர்க்குடங்களுடன் வெறும் கால்களுடன் சரிதா, அந்த முள்பரவிய வெற்று நிலத்தில் நடந்துகொண்டே இருந்தார். அவர் நடந்து நடந்து கண்முன் விரித்த அந்த நிலத்தில் வெடிப்புகள் வாய்திறந்து தண்ணீர் தண்ணீர் என்று முனகிக்கொண்டிருப்பதைக் கேட்டேன். வழியில் ஒருவன் சாக்கடை நீரை அள்ளிக்குடிக்க முற்படுகையில் சரிதா அவனைத் தடுத்து, சின்னமூக்கைச் சுளித்துச் சிரித்து, ‘இந்தா குடி' என நீரை அவனுக்கு ஊற்றுவார்.

என்னை நெகிழச்செய்த அந்தக் காட்சியை எத்தனையோ ஆண்டுகளாக நினைவில் வைத்திருக்கிறேன். எந்த வறட்சியிலும் வறளாத கருணை ஒன்றை அது அடையாளம் காட்டியது. உண்மையில் படத்தின் மையமே அதுதான். வறண்ட மண்ணுக்கும் வறட்சியை அறியாத மனங்களுக்கும் இடையேயான போராட்டம்.


 அந்தப் படம் முழுக்க சரிதா தென்தமிழ்நாட்டின் கிராமத்துப் பெண்ணாகவே தெரிந்துகொண்டிருந்தார். கொசுவத்தை சுழற்றிச் செருகும் அழகு, கையை கண்மேல் வைத்து வானை நோக்கி ஏங்கும் துயரம், கண்ணீர் படர்ந்த பெரிய கண்களில் தெரிந்த சீற்றம். அன்று சரிதாவுக்காகவே அந்தப் படத்தை ஏழு முறைக்குமேல் பார்த்தேன்.


இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் கோவை பி.எஸ்.ஜி கல்லூரி ஊடகவியல்துறை கே.பாலசந்தரின் ஆக்கங்கள் பற்றி ஒரு கருத்தரங்கை ஏற்பாடுசெய்தது. அதில் நான் அவரைப் பற்றி பேசவேண்டும் என்று நண்பர் வசந்த் கேட்டுக்கொண்டார். நான் மீண்டும் எனக்குப் பிடித்த கே.பாலசந்தரின் படங்களைப் பார்த்தேன்.


என் மனதில் முதலிடத்தில் இருந்த 'தண்ணீர் தண்ணீர்'தான் முதலில். பழைய குறுவட்டு ஓடி சிவந்த காட்சிகள் தெளிந்து சரிதா, அந்த காய்ந்த மண்ணில் நடக்க ஆரம்பித்ததும் நான் மீண்டும் அதே உணர்ச்சிகளுக்கு ஆளானேன். அந்தப் படத்தின் எவ்வளவோ விஷயங்கள் பழைமையாகிவிட்டன. இசை, ஒளிப்பதிவு, காட்சியமைப்புகள்... ஆனால் சரிதாவின் அந்த கனிவும் ஏக்கமும் சீற்றமும் அதே நுட்பங்களுடன் அதே உத்வேகத்துடன் இருந்தது.


அது என் கடந்தகால ஏக்கமா என்ற ஐயம் ஏற்பட்டது. நாற்பது தாண்டும்போது இளமைக்கால கட்டம் தனி ஒளிகொள்ள ஆரம்பிக்கிறது. நான் அருகே அமர்ந்து படம்பார்த்த என் மகனையே பார்த்துக் கொண்டிருந்தேன். பொதுவாக தமிழ்ப் படங்களை ரசிக்காதவர்கள் என் பிள்ளைகள். படம் முடிந்ததும் மகன் உணர்வெழுச்சியுடன் சொன்னான் ‘நல்ல படமா இல்லையான்னு சொல்லத் தெரியல்ல அப்பா. ஆனா பாத்து முடிக்கிறப்ப ஒரு பயங்கரமான ஆவேசம் வருது' நான் சொன்னேன் ‘அதான் நல்ல படத்துக்கு இலக்கணம். அது நினைச்ச உணர்ச்சிய உண்டுபண்ணுதே'

அவனே சரிதா பற்றி ஏதாவது சொல்வான் என எதிர்பார்த்தேன். அவன் நல்ல மலையாளப் படங் களில் ஏற்கெனவே சரிதாவைப் பார்த்திருந்தான். படத்தைப் பற்றி மேலும் பேசும்போது அவன் சொன்னான் ‘அந்தக் கிராமத்துப் பொண்ணு நல்லா நடிச்சிருக்கா அப்பா... நான் புன்னகையுடன் அது சரிதா.. என்றேன். ‘யாரு? காதோடு காதோரம் படத்திலே நடிச்சாங்களே அவங்களா? மீண்டும் படத்தின் குறுவட்டை எடுத்துப்பார்த்து ‘அட ஆமா’ என்றான் ‘தெரியவே இல்ல அப்பா...அப்டியே அந்த மண்ணில நிக்கிற முள்ளுசெடி மாதிரி இருந்தாங்க அவங்களும்'

http://cine-talkies.com/movies/malayalam-actress/saritha/saritha-102.jpg

கடும் விமர்சனங்கள் கொண்ட அடுத்த தலைமுறையிடமிருந்து வரும் பாராட்டு. ஒருவேளை சரிதாவுக்குக் கிடைக்கச் சாத்தியமான அதிகபட்ச அங்கீகாரமும் அதுவாக இருக்கலாம். இருபத்தைந் தாண்டுகளுக்கு முன் நான் சரிதாவின் ரசிகனாக இருந்தேன் என்று சொன்னேன். தனிப்பட்ட முறையில் நான் இரண்டே நடிகர்களுக்குத்தான் ரசிகன் என்று சொல்லிக்கொள்வேன். அவர்கள் என்ன நடித்தாலும் அது எனக்குப் பிடிக்கும். சரிதாவை விட்டால் மலையாள நடிகர் திலகன். அவர்கள் நடிப்பதையறியாத நடிகர்கள். எந்த கதாபாத்திரத்திலும் மிகச்சாதாரணமாக கலந்துவிடும் ஆன்மா கொண்டவர்கள். அக்கதாபாத்திரத்துக்கு வெளியே கொஞ்சம்கூட நீட்டிநிற்கும் அகந்தையோ ஆளுமையோ இல்லாதவர்கள்.

சரிதாவின் முந்தைய படங்களை உண்மையில், நான் அதன்பின்னர் தான் பார்த்தேன். தப்புத்தாளங்கள், பொண்ணு ஊருக்குப் புதுசு, மௌனகீதங்கள், வண்டிச்சக்கரம், மலையூர் மம்பட்டியான் போன்ற பல படங்களை சரிதாவுக்காக பலமுறை பார்த்திருக்கிறேன். பிற்காலப்படங்களில் சரிதாவின் நடிப்பை மிகைப்படுத்தும் காட்சிகளை இயக்குநர்கள் அளித்து மிகையாகவே நடிக்கவும் செய்திருந்தார்கள். ஆனால் அவற்றையும் மீறி அப்படங்களில்கூட அவரது நடிப்பு நுட்பங்களும் மெருகும் கொண்டதாக இருந்தது


நடுவே சில ஆண்டுகள் நான் திரைப்படங்கள் பார்க்கவில்லை. மீண்டும் எண்பதுகளின் இறுதியில் மலையாளப் படங்களில் புதியதாக சரிதாவின் நடிப்பைக் கண்டு கொண்டேன். இன்னும் முதிர்ச்சியும், இன்னும் அடக்கமும், இன்னும் நுட்பங்களும் செறிந்த சரிதா. இன்னும் ஆழமான, இன்னும் யதார்த்தமான கதாபாத்திரங்கள். ஜோஷி இயக்கிய ‘சம்பவம்’ சிபி மலையில் இயக்கிய ‘தனியாவர்த்தனம்’ பரதன் இயக்கிய ‘காதோடு காதோரம்’ போன்ற படங்களில் தெரிந்த சரிதா நான் மறக்கமுடியாத முகம்.


வழக்கமான பார்வையில் ஒரு கதாநாயகிக்கான தோற்றம் கொண்டவர் அல்ல சரிதா; குள்ளமான, குண்டான, கரிய பெண். நடிப்பை வெளிப்படுத்துவதற்கு ஒத்துவராத சின்ன உதடுகளும் சின்ன மூக்கும் கொண்ட வட்டப் ‘பம்ளிமாஸ்’ முகம். ஆனால் சரிதா அளவுக்கு எந்த நடிகையும் துல்லியமான முகபாவங்கள் வழியாக கதாபாத்திரத்தின் அகத்தைக் காட்சிப்படுத்தியதில்லை.


எந்த அம்சம் சரிதாமேல் அத்தனை பெரிய ஈர்ப்பை உருவாக்கியது? நான் அன்றுவரை திரையில் கண்டிருந்த எல்லா நடிகைகளும் செயற்கையான நளினங்களையும், செயற்கையான உணர்ச்சிகரத்தையும் வெளிப்படுத்துபவர்களாகவே இருந்தார்கள். சரிதாவின் அசைவுகளும் சிரிப்பும் பேச்சும் எல்லாமே மிகமிக சகஜமானவையாக இருந்தன. அது உருவாக்கிய ஆச்சரியத்தை இன்று சொல்லிப் புரியவைப்பது கடினம்.



அன்றைய கதைகள் பெண்களைச் சார்ந்தவை. பெண்கள் உணர்ச்சிக் கொந்தளிப்பாக நடிப்பதற்கானவை. சரிதா, அத்தகைய கதாபாத்திரங் களைக்கூட மிக அடக்கமாகவும் நுட்பமாகவும்தான் வெளிப்படுத்தி யிருந்தார். மிகையாக நடித்தார் என்று அவரைப் பற்றிச் சொல்வதற்கான சந்தர்ப்பங்கள் மிகமிகக் குறைவானவை. மிக அசட்டுத்தனமான, சம்பிரதாயமான கதாபாத்திரங்களில்கூட முகபாவனைகளின் நுட்பங்கள் வழியாக தனி அழகை சரிதாவால் உருவாக்க முடிந்திருக்கிறது என இப்போது தோன்றுகிறது.


பலவகையிலும் சரிதாவை எஸ்.ஜானகியிடம்தான் ஒப்பிடவேண்டும். திரைப்பாடலுக்குரிய கணீர்க்குரல் இல்லாத ஜானகி, கடும் முயற்சியால் தனக்கென இனிய குரலை உருவாக்கிக்கொண்டார் என்பார்கள். சரிதாவும் அப்படியே, தோற்றத்தின் எதிர்மறை அம்சத்தை நடிப்பால் வென்றவர் அவர்.


மலையாளத்தின் எல்லா வகையான வட்டார உச்சரிப்புகளையும், சாதிய வேறுபாடுகளையும் துல்லியமாக தன் பாடல்களில் கொண்டுவர முடிந்த பாடகி என எஸ்.ஜானகி யைச் சொல்லலாம். சரிதாவும் அப்படியே. இந்த அளவுக்கு நுட்பமாக மலையாளப்பெண்களின் வெவ்வேறு வகையான உடல்மொழியை முகபாவனை களை நடித்துக்காட்ட சரிதாவால் முடிந்ததை சாதனை என்றே சொல்லவேண்டும். அதேசமயம் தமிழில் மலையாளச்சாயலே இல்லாமல் அப்பட்டமான தமிழ்ப் பெண்ணாகவே அவர் காட்சியளித்தார். ஆனால் எஸ்.ஜானகியைப்போலவே சரிதாவும் தெலுங்கர்.



வேறெந்த கலைஞர்களைவிடவும் தமிழில் திரைக்கலைஞர்கள்தான் அதிகம் கொண்டாடப்படுகிறார்கள். ஆனால் சாதனையாளர்கள் எளிதில் மறக்கப்படுவதும் திரைத்துறையிலேயே. சரிதா தமிழ்த் திரையின் சாதனைக் கலைஞர்களில் ஒருவர்.

அந்த அங்கீகாரத்தை அவருக்கு அளித்து எழுதப்பட்ட குறிப்புகளை நான் கண்டதில்லை.  சரிதாவின் நடிப்பு அவருக்குப் பின்னால் வந்த எல்லா கதாநாயகிகளிலும் ஒரு பாதிப்பைச் செலுத்தியிருக்கிற தென்றே நினைக்கிறேன். இயல்பான சரளமான நடிப்பே உண்மையான நடிப்பு என்பதை தமிழ்த் திரைப்படத்தின் திருப்புமுனைக் காலகட்டத்தில் வந்து தமிழ் ரசனைக்கு முன்னால் நிறுவிக்காட்டியவர் அவர்.


திரைச்சீலைகளை நடனமிடச் செய்தபடி கடந்து செல்லும் மெல்லிய பூங்காற்றுபோல தமிழ்த் திரை வழியாக கடந்து சென்றவர்.


நன்றி - த சண்டே இந்தியன்

ட்விட்டர் கேங்கின் அலப்பறை - உடன்பிறப்புகளே! - குறும்பட விமர்சனம்

டைட்டிலே இது தி மு க வுக்கு எதிரானதுன்னு சொல்லிடுது.. இந்த கதைக்கு போறதுக்கு முன்னே நீங்க மனதளவில் ஸ்டாலினை அண்ணனாவும், அழகிரியை தம்பியாவும் கற்பனை பண்ணிக்குங்க. ஏன்னா நிஜ வாழ்வில் அண்ணன் அழகிரி, தம்பி ஸ்டாலின் .. ஆனா இந்தக்கதைல கொஞ்சம் மாத்தி இருக்காங்க.. 


ஓப்பனிங்க் ஷாட்ல ஒரு அரசியல் தலைவரை ஒரு கும்பல் ஃபோன்ல மிரட்டுது . உங்களை கொலை பண்ணப்போறோம். உங்க கூட இருக்கறவங்க தான் அதை செய்யப்போறாங்க..  அப்டினு..


அதே மாதிரி அவரை ஒரு ரூம்ல அடைச்சு வெச்சுட்டு பாஸ்க்கு ஃபோனை போடறாங்க.. அந்த பாஸ் வேற யாருமில்லை. அந்த அரசியல் தலைவரோட  தம்பி தான். அண்ணனோட  அரசியல் செல்வாக்கு பிடிக்காம அவருக்கு பிறகு தான் தான் வாரிசு ஆகனும்கற வெறில  இந்த பிளான். 

இப்போ அரசியல்வாதி தன் சாணக்கியத்தனத்தை காட்ட தன்னை கொலை வந்த ஆட்கள்ட்டயே பேரம் பேசறார்.. ஒரு கோடி வாங்குன ஆட்கள் 10 கோடிக்கு ஆசைப்பட்டு பிளேட்டை திருப்பி போட்டுடறாங்க. 

 அரசியல் தலைவர்  தன் தம்பியை போலீஸ்ல மாட்டி விட்டுடறார்.. அவ்ளவ் தான் கதை,.,. 


இயக்குநர்  பாராட்டு பெறும் இடங்கள்


 படத்தில் பாராட்டுக்குரிய முதல் அம்சம் பின்னணி இசை. மிகச்சிறப்பா வந்திருக்கு..  படத்தோட விறு விறுப்புக்கு அது ரொம்ப உதவியா இருக்கு. 

 2 வது அம்சம் அண்ணன் , தம்பி கேரக்டர்ல நடிச்சிருக்கற 2 பேரும். 

 அண்ணனா  வர்றவர் ட்விட்டர் நண்பர் டி பி கேடி பெங்களூர்.. ஆள் நல்ல பாடியா இருக்கறதால அரசியல் தலைவர் கெட்டப் நல்லா சூட் ஆகுது.. அவரோட பாடி லேங்குவேஜ், வசன உச்சரிப்புகள் எல்லாம் கன கச்சிதம் 

தம்பியா வர்றவர் படத்தோட இயக்குநர். சிங்கம் சூர்யா மாதிரி கெட்டப்.. ஆள் நல்ல கலர்..  ஹீரோவா நடிக்க முயற்சி செஞ்சா கோடம்பாக்கத்தில் சான்ஸ் உண்டு..  ஆனா வசனம் பேசும்போது ,மட்டும் பல்லை கடிச்ச மாதிரி பேசறார்.. பல இடங்கள்ல செயற்கை தட்டுது.. 


 மனம் கவர்ந்த வசனங்கள்


1.  இவனுங்க பேச்சே இன்னைக்கு சரி இல்லையே? ஒருத்தன் முடிச்சுட்டுத்தான் போவேன்கறான்.. இன்னொருத்தன் இனி பார்ப்போமா? மாட்டோமா? அப்டினு சொல்றான்.. ம் .. 


2. ஒரு கல்லுல 3 மாங்கா அடிச்சே எனக்கு பழக்கம்


3. நாளைக்கு தலைப்புச்செய்தி,.. நாளான்னைக்கு தலைவர் பதவி.. 


4. என்னது? 10 கோடியா? ஒரு கோடிதானே பேசுனது?

 மாத்தி மாத்தி பேசறது அரசியல்வாதி நீங்க மட்டும் தானா? நாங்க பண்ணக்கூடாதா?

இயக்குநரிடம் சில கேள்விகள்


1. படத்துல வசன உச்சரிப்புல ஒரு நாடகத்தனம் தெரியுது.. எல்லாருமே தயங்கித்தயங்கித்தான் பேசறாங்க..


2. மஞ்சள் பனியன் போட்டு வர்றவர் ஆள் வில்லன் மாதிரி ஜைஜாண்டிக்கா இருந்தாலும் வில்லனுக்குரிய சீரியஸ்னெஸ் மிஸ்சிங்க்,.. போதாததுக்கு ஜோக் எல்லாம் அடிக்கறார். வில்லன்க்கு டார்க் கலர்ல தான் டிரஸ் போட வைக்கனும். காமெடி ஆள் தான் மஞ்சள் டிரஸ் போடனும்


3. கூலிங்க் கிளாஸ் கழட்டறது, அப்புறம் போடறது பஞ்ச் டயலாக் பேசறது எல்லாம் உயிர் பயத்துல இருக்கற ஆள் செய்ய மாட்டார்.. அவருக்கு உயிரை காப்பாத்தனும்கற டென்ஷன் தான் இருக்கும்.. ஸ்டைல் பண்றதுக்கோ, பந்தா காட்டவோ அப்போ தோணாது..


4.  சி பி ஐ ஆ ஃபீசர் தம்பி கேரக்டர் கிட்டே பேசிட்டு அப்புறம் இப்போ இன்னொரு ஆஃபீசர் வருவார் பாருங்க , அப்டினு வர வைக்கறதும் நாடகத்தனமே.. ஏன் 2 பேரும் ஒண்ணா வர மாட்டாங்களா?


5. தன் தம்பி தான் தன்னை கொலை பண்ண ஆள் ரெடி பண்ணான் என்பது தெரிந்ததும் அண்ணன் ஷாக் ஆகறார், ஓக்கே அதை ஏன் 3 கட் ஷாட்ல  காட்டனும்?முதல் டைம் காட்டறப்போ ஓக்கே, 3 டைமும் காட்டுவது போர்


6. கொலை முயற்சிக்கே கைதா? அப்டினு நக்கலா ஒரு வசனம் வருது. ஏன்? அட்டெம்ப்ட் மர்டர், அட்டெம்ப்ட் ரேப் எல்லா க்ரைம்க்கும் தனி தனி செக்‌ஷன் இருக்கே..


7. போதை மருந்து கடத்தல் ஐ விட்னசா வர்றவர் கிராமத்து தமிழ்ல பேசறது ரொம்பவே செயற்கை.. அதே போல் அவர் தன் முதலாளியை பார்த்ததுமே பணியாமல் அவரிடம் பேசும்போது தான் மடிச்சுக்கட்டிய லுங்கியை கீழே இறக்கி வசனம் பேசறார்.. 

8. க்ளைமாக்ஸ் ல பணத்துக்காக கொலை செய்யும் கும்பல்ட்ட அண்ணனா வர்ற டி பி கே டி பேசற செண்ட்டிமெண்ட் டயலாக்கும் தேவை இல்லாதது.. 


9. ஒரு சீன்ல இன்ஸ்பெக்டர் இளமாறன் அப்டினு கூப்பிடற மாதிரி ஒரு ஷாட் வருது.. அந்த சீன்ல 4 இன்ஸ்பெக்டர் இருந்தா அது ஓக்கே. இருக்கறதே ஒரு இன்ஸ்பெக்டர் தான்.. இன்ஸ்பெக்டர்னு தான் கூப்பிடுவாங்க..


10. பொண்டாட்டி சீரியஸ்னு ஒரே ஒரு பொய் தான் சொன்னேன், உடனே கபிலன் ஊருக்கு ஓடிட்டான்னு ஒரு டயலாக் வருது.. கபிலனோட பொண்டாட்டி சீரியசா இருக்கறது  கபிலனுக்கே தெரியாம இவருக்கு எப்படி தெரியும்? அப்படியே இவர் சொன்னாலும் கபிலன் ஊருக்கு ஃபோன் பண்ணி விசாரிக்க மாட்டாரா?


11. கூலிங்க் கிளாஸ்ங்கறது பைக்ல வேகமா போறப்போ, வெய்யில்ல நடக்கறப்போ போடறது.. வீட்ல ஹால்ல தனிமைல இருக்கறப்போக்கூட கூலிங்க் கிளாஸா?


12. கதைல வர்ற அண்ணன்க்கு வயசு மீறி மீறிப்போனா அல்லது மீறாம போனா 40 தான் இருக்கும், ஆனா அவர் அரசியல் வாரிசை அறிவிக்கறாரு.. 89 வயசான கலைஞரே அதை இன்னும் செய்யலை... அவர் உடம்புக்கு எதுவும் ஆகலை.. அப்புறம் என்ன அவசரம்?



இப்போ கீழே உள்ள விபரங்கள் இயக்குநரின் வலைப்பூவில் இருந்து எடுக்கபட்டவை 


நடிகர்கள்:
அரவிந்த்
பலராமன்
சந்தோஷ்
ராஜேஷ்
லலிதா ராம்
மொகம்மெத் கஃபில்
தனசேகர்
சுப்பிரமணியன்
சரவணகுமார்
ஜெய் சங்கர்
கார்த்திக் அருள்

தொழில்நுட்ப வல்லுனர்கள்:



இசை, விளம்பரப்படம் வடிவமைப்பு – சாய் சுதர்ஷன்


ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு – சரவண ராம் குமார்


ஒளிப்படங்கள் – கார்த்திகேயன்


ஒப்பனை – ஹரிஷ்


ஆங்கில அடிவரிகள் – அரவிந்த்


நட்புக்காக: கார்க்கியின் குரல்

அதிகாரம் 92 -கிளு கிளு அதிரசம் - சினிமா விமர்சனம்


வில்லன் ஒரு மொள்ளமாரி.. டிராவல்ஸ் கம்ப்பெனி, சினிமா டிஸ்ட்ரிபியூஷன் அப்டினு அண்ணனுக்கு பல வேலை.. ஹீரோ வில்லன் கிட்டே தான் வேலை செய்யறார்.. ஓனர் ஒரு மொள்ளமாரின்னா லேபர் ஒரு முடிச்சவுக்கி.. அதாவது ஆண்ட்டி ஹீரோ.. ANTI-HERO -ன்னா எதிர் மறை நாயகன்.. AUNTY HERO-ன்னா ஆண்டிகளை கரெக்ட் பண்ற நாயகன்.

வில்லனோட மெயின் வேலை என்னான்னா ரோடு ரோடா அலைஞ்சு முக்கு சந்துல நின்னு நோட்டம் போடறது.. மனசுக்குப்பிடிச்ச டிக்கெட் வந்தா கார்ல கூட்டிட்டுப்போய் மேட்டரை முடிக்கறது.. மிச்சம் மீதி இருந்தா ஹீரோவுக்கு ஷேர் பண்ணிக்கறது. இப்படி ஒரு கேவலமான வாழ்க்கை 2 பேரும் வாழ்ந்துட்டு  வர்றாங்க..


ஹீரோயின் ஒரு ரெடிமேடு ஷோ ரூம்ல சேல்ஸ் கேர்ள்.. ஆனா வசனத்துல சூப்பர்வைசர்னு ஜம்பமா சொல்லிக்குது.. 45 மார்க் தேறும்.. ஹீரோ எதேச்சையா அந்த ஷோ ரூம்க்க்கு வர்றான்.. 2 பேரும் பார்வையாலேயே பேசிக்கறாங்க..  2 வது சந்திப்புல ஹீரோயின் அவ தோழி கிட்டே தகவல் சொல்ற , மாதிரி நைசா அவங்க வீட்டுக்கு எதிரே ஒரு வீடு வாடகைக்கு காலியா இருக்குன்னு தகவல் சொல்லி வீட்டு அட்ரஸையும் சொல்றா..

அடுத்த நாளே ஹீரோ அங்கே குடி வந்துடறான்..அப்புறம் என்ன? டெயிலி  பார்வைப்பரிமாறல்கள், ரொமான்ஸ் தான்.. ஆடியன்ஸ் எல்லாம் என்னா நினைக்கறாங்கன்னா ஹீரோ ஹீரோயினை பத்தோட 11 ஆக  மேட்டரை முடிச்சுட்டு கழட்டி விட்டுடுவான்னு.. ஆனா பாருங்க காதல் ஒரு அபூர்வமான சக்தி.. கெட்டவனைக்கூட நல்லவன் ஆக்கும்.. உருக வைக்கும்,.. ஹீரோ ஹீரோயினை சின்சியராதான் லவ் பண்றான்..

 ஒரு டைம் ஹீரோயின் ஹீரோ பீச்ல லவ்வறப்போ வில்லன் அதாவது ஹீரோவோட ஓனர் பார்த்துடறான்.. ஹீரோயின் மேல அவனுக்கு ஒரு கண்ணு..ஹீரோ வில்லனைப்பற்றி புரிஞ்சுக்காம ஹீரோயின் வீட்டுல வந்து நீங்க தான் பொண்ணு கேட்கனும்னு ஹெல்ப் கேட்கறான்..

 வில்லன் ஹீரோவை வெளியூர்க்கு ஒரு வேலை விஷயமா வேணும்னே அனுப்பிட்டு ஹீரோயின் வீட்டுக்கு போய் பொண்ணு கேட்கறான்.. ஆனா அவனுக்கு.. ஹீரோவுக்காக இல்லை.. ஹீரோயின் அம்மா கிட்டே தன் சொத்து பத்து லொட்டு லொசுக்கு செல்வாக்கு எல்லாத்தையும் எடுத்து சொல்லி பொண்ணு கேக்கறான்.. மிடில் கிளாஸ் ஃபேமிலிக்கு ராஜ யோகம்.. அம்மா ஓக்கே சொல்லிடறா.. ஹீரோயின் எதிர்ப்பான்னு பார்த்தா ஒரு ஷாக்.. உன்னை நினைத்து லைலா கேரக்டர் மாதிரி சடார்னு அவ மனசு மாறி வில்லனுக்கு ஓக்கே சொல்லிடறா.. இடைவேளை..

 இதுவரை  படம் விறு விறுப்பா, சுவராஸ்யமாத்தான் போகுது.. இடைவேளைக்குப்பிறகு கதை அப்டியே ஜம்ப் ஆகுது.. வில்லன் இந்த மாதிரி பண்ணிட்டான்னு தெரிஞ்சதும் ஹீரோ வில்லன், ஹீரோயின் 2 பேர் சகவாசமே வேணாம்னு உதறி இருக்கனும்.. ஆனா அந்த லூசு ஹீரோ வில்லன் கிட்டேயே வேலை செஞ்சு பின் சீட்ல வில்லன், ஹீரோயினை உக்கார வெச்சு ஓட்டிட்டு போறார்.. முடியல..

ஹீரோயின்  மாடலிங்க் கேர்ள் ஆகி, நடிகை ஆகறா... அப்போ ஒருத்தி அட்வைஸ் பண்றா.. நமக்காக உருகக்கூடிய ஒரு இளிச்சவாயன் லவ்வரை மேரேஜ் பண்ணிக்கிட்டாதான் சவுகர்யம்னு.. உடனே ஹீரோயின் பல்டி அடிச்சு ஹீரோவை மேரேஜ் பண்ணிக்க ஓக்கே சொல்றா.. ஹீரோ நைஸா ஹோட்டல்ல ரூம் புக் பண்ணி மேட்டரை முடிச்சுட்டு என்னை ஏமாத்துனே இல்லை.. உன்னை நான் ஏமாத்துறேன்னு குட் பை சொல்றான்.. அவ்ளவ் தான் கதை..


 ஹீரோ புதுமுகம்.. ஆள் டீசண்ட்டாதான் இருக்கார்.. புது முகம் என்ற எண்ணமே வராத அளவு அவர் நடிப்பு கன கச்சிதம்.. வில்லன் நடிப்பு டாப்.. நய வஞ்சகம்.. கோபம், குள்ள நரித்தனம் எல்லாவற்றையும் பார்வையாலேயே வெளிப்படுத்தும் கேரக்டர்..

 ஹீரோயின் முகம் சுமார் என்றாலும் மேற்படி விஷயங்கள் எல்லாம் சராசரிக்கும் மேலே.. பாப்பாவுக்கு நடிப்புதான் வர மாட்டேங்குது..
அல்வா வாசுவின் காமெடி சுமார் ரகம்..


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1.  படத்துல முக்கியமான கேரக்டர்ஸ்னு பார்த்தா ஹீரோ, ஹீரோயின், வில்லன் என 3 பேர் தான்.. ஆனா நாடகம் பார்க்கும் உணர்ச்சி இல்லாமல் விறு விறுப்பாக இடைவெளை வரை கொண்டு சென்றது..

2. கதை , திரைக்கதை அனுமதித்தும் மோசமான காட்சிகள் ஏதும் வைக்காமல் கண்ணியமான காட்சிகள் வைத்து பெண்களூம் பார்க்கும்படி படம் எடுத்தது

3. ஹீரோவிடம் ஃபோனை இரவல் வாங்கி அல்வா வாசு  பேசி பேலன்சை தீர்த்து, ஃபோனை முடிச்சுக்கட்டும் காமெடி கலகலப்பு

4. ஹீரோயின் மொட்டை மாடியில் நின்று ஹீரோவிடம் கண்களாலேயே ஹீரோ தம் அடிப்பதை கண்டிப்பதும், அப்போ ஹீரோ சிகரெட்டை தூக்கிப்போட்டுவிட்டு அவர் வீட்டுக்குள் சென்றதும், மீண்டும் தம் அடிப்பதும், பின் திரும்பி வந்த ஹீரோயின் செல்ல முறை முறைப்பது, பார்த்துப்பழகிய காட்சி என்றாலும் ரசிக்க முடிகிறது..

5. ஹீரோ ஹீரோயின் அவரவர் வீட்டு மொட்டை மாடியில் நின்று கொண்டு சைகை பாஷையில் பேசிக்கொள்ளும் அந்த 6 நிமிட லாங்க் ஷாட் அழகுக்கவிதை..அப்போது ஹீரோயின் காட்டும் எக்ஸ்பிரஷண்ஸ் கச்சிதம்

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. ஹீரோவுக்காக பெண் கேட்டு வர வேண்டிய வில்லன் அவனுக்காக தன்னை பெண் கேட்கும்போது ஹீரோயின் முகத்தில் ஒரு அதிர்ச்சியே தெரியலை.. அப்போ ஒரு ஷாக் காட்டி 2 நாள் யோசனை பண்ணி ஓக்கே சொல்லி இருந்தா கொஞ்சம் நம்பற மாதிரி இருக்கும்..

2. பல களம் கண்ட  டே நைட் ஒர்க்கர் டேவிட் மாதிரி இருக்கும் வில்லன் ஒரு சப்பை சில்ஃபான்சியை கண்டு மயங்குவதும், மேரேஜ் பண்ணிக்க ஆசைப்படுவதும் நம்பற மாதிரியே இல்லை..

3. நிச்சயிக்கப்பட்ட ஹீரோயினுடன் காரில் செல்லும் வில்லன் அவ தோள்ல கை போடும்போது அவ வேணாம்கறா.. உடனே ஜுவல்ஸ் கடைல ஒரு நெக்லஸ் வாங்கிக்குடுத்ததும் ஓக்கே சொல்லிடறா.. இது பெண்களை ரொம்ப கேவலப்படுத்தற மாதிரி இருக்கு..

4. வில்லன் ஹீரோயினை மேட்டர் முடிச்சுட்டானா? இல்லையா? என்பது  தெளிவா சொல்லப்படலை.. அதை சொல்லலாமா? வேணாமா?ன்னு குழப்பமா திரைக்கதை, காட்சிகளை வடிவமைச்சது நல்லா தெரியுது.. தேங்கா உடைச்ச மாதிரி சொல்லிடனும்.. அது பிளசோ மைனஸோ.. அப்புறம்..

5. சினிமா சான்ஸ், மாடலிங்க் இவற்றுக்காக ஹீரோயின் தன் கற்பை இழக்கிறாளா? இல்லையா? என்பதை தெளிவா சொல்லலை. அது ஏன் தேவைப்படுதுன்னா க்ளைமாக்ஸ்ல ஹீரோ ஹீரோயினை  மேட்டர் முடிச்சதும் அழறா.. அதனால டீட்டெயில்ஸ் தேவை.. 


6. படத்தோட டைட்டிலும் சரி இல்லை.. அதிகாரம் 92ன்னா ஏதோ மாஃபியா கேங்க் படம் மாதிரி இருக்கு ..




மனதில் நின்ற வசனங்கள்


1. ஸாரிக்கா.. சேலை கன்ஃபியூசன் ஆகிடுச்சு.. பார்ட்டி மஞ்சள் கலர் சேலைல வரும்னாங்க... நீங்களும் அதே கலரா... அதான்..

 பரவால்ல தம்பி.. நானும் பார்ட்டிக்குத்தான் வெயிட்டிங்க்..



2. ஏய்யா என்னை ஃபோட்டோ எடுக்கறே?


ம்.. அரவிந்தனும் 1001 நைட்டும் அப்டினு புக் எழுத.. 


3. பொம்பளைங்க கிட்டே அப்படி என்ன இருக்கு? ஆம்பளைங்க ஏண்டா அப்படி அலையறீங்க?


4. ஏம்மா..15 நாள் கேம்ப்.. வந்துடறியா?


 சாரி சார்.. டெஸ்ட் மேட்ச் உடம்புக்கு ஒத்துக்காது..ஒன் டே மேட்ச்னா ஓக்கே.. ட்வெண்ட்டி ட்வெண்ட்டின்னா இன்னும் பெஸ்ட்.. 



5. டேய்.. உனக்கு 27 வயசா..? பார்த்தா அப்படி தெரியலையே?


 மிஸ்.. பாத்தா தெரியாது............ 



6. டேய்... இந்த வண்டி ஸ்டார்ட் ஆகலை.. இதை ஸ்டார்ட் பண்ணிக்குடு.. உனக்கு 27 வயசுன்னு நம்பறேன்.. 


 அய்யய்யோ , ஸ்டார்ட் பண்ண முடியலையே?

 ம்க்கும்.. இந்த வண்டியையே உன்னால ஸ்டார்ட் பண்ண முடியலையே........?



7. டேய். அவ கிட்டே போய் ஃபோன் நெம்பர் வாங்கிட்டு வா

 மொதலாளி.. ரோட்ல போற யாரோ ஒரு லேடி கிட்டே போய் ஃபோன் நெம்பர் கேட்டா செருப்பை கழட்டி அடிப்பா.. 


 போடா போ.. கண்ணை பார்த்தே கரெக்ட்டா ஜட்ஜ் பண்ணிடுவேன்.. நீ போய் கேளு.. தருவா பாரு




8. மொதலாளி.. நீங்க நினைச்சது சரிதான்.. எப்படி ஒரு பொண்னோட முகத்தை பார்த்தே கண்டு பிடிச்சுடறீங்க?


முகத்தை மட்டும் பார்த்து கண்டு பிடிச்சிட முடியாது.........



9. லேடி- எங்க வீட்ல பெட் இல்லை .. பரவாயில்லையா?
\

 நோ பிராப்ளம்.. நாங்க தரை டிக்கெட்டுங்கதான்


10. ஒருத்தரோட வாழ்க்கையை பணம் எவ்ளவ் தூரம் உயர்த்தும்கறதை உணர்ந்தவன்  நான்.. அதனால பணத்தை என்னைக்கும் அலட்சியம் பண்ண மாட்டேன்


11. முதல் காதலை யாராலும் மறக்கவே முடியாது, எதுக்கு மறக்கனும்? அது பாட்டுக்கு ஒரு ஓரத்துல இருந்துட்டு போகுது 


12.  அவ எனக்கு எத்தனை டெஸ்ட் வெச்சா தெரியுமா?நான் எதுலயும் ஃபெயில் ஆகலை.. 

 அப்புறம் ஏன் அவ அமெரிக்க , மாப்ளைக்கு ஓக்கே சொல்லிட்டா?

 அதை அவ கிட்டே தான் கேட்கனும்


13. சின்சியரா லவ் பண்றவனை இப்போவெல்லாம் பெண்களுக்குப்பிடிக்கறதே இல்லை.. 


14. மேரேஜ்க்குப்பிறகு ஒரு பொண்ணு மனசு மாற சான்ஸ் இருக்கு 


15.. ஆடு எப்பவும் கசாப்புக்கடைக்காரனைத்தான் நம்பும்.. அது அவ தலை விதி விடு.. எப்படியோ போகட்டும்..


16. பொண்ணு எதை வேணாலும் விட்டுக்கொடுப்பா, ஆனா தன் படுக்கையை மட்டும் விட்டுத்தர மாட்டா.. 


17.. உன் ஆள் சரி இல்லைடா.. பெண் கேட்டுப்போனப்போ வேணுவுக்கு நான் என்ன பதில் சொல்ல? அப்டினு அவ கேட்கலை.. வேணு ஏதாவது தகராறு செஞ்சா என்ன செய்ய? அப்டினு தான் கேட்டா.. 


18.. இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்.. 


கவர்மெண்ட் பஸ் பக்கம் எல்லாம் அடிக்கடி போகாதேனு சொன்னா கேட்டாத்தானே.. ஏதாவது குறளை படிச்சுட்டு வந்து இப்படி பிளேடு போடறான் பாரு


19.  ஆஹா.. அடுத்தவன் லைஃபை கெடுக்கறதுல தான் எவ்லவ் ஆனந்தம்?


20. ஹூம்.. நீ இன்னும் நடிகை ஆகலை.. ஷூட்டிங்கும் ஆரம்பிக்கலை. ஆனாலும் நல்லா நடிக்கறியே?


21. உன்னை விட சின்ன வயசா.. உன்னை மட்டுமே லவ் பண்றவனை மேரேஜ் பண்ணிக்கோ.. அவன் நாய்க்குட்டி மாதிரி உன்னை சுத்தி சுத்தி வருவான்.. பாதுகாப்புக்கு பாதுகாப்பு


22. நீ தான் உலகம்னு யார் மனசார நினைக்கறாங்களோ அவனை கண்டு பிடிச்சு உன் கைக்குள்ளே போட்டுக்கோ


23. சொந்த டயலாக் பேசி நடிக்கறது எவ்ளவ் கஷ்டம் தெரியுமா? இனி ஒன்லி ஆக்‌ஷன் தான்



எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 38


எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே



 சி.பி கமெண்ட் - இடைவேளை வரை ஜாலியா போகுது.. மோசம் இல்லை.. 18+ எல்லாரும் பார்க்கலாம்..  ஈரோடு ஸ்ரீநிவாசாவில் படம் பார்த்தேன்


டிஸ்கி - இந்தப்படத்தின்  ஸ்டில்கள் கூட கூகுள்ல கிடைக்கலை.. =மார்க்கெட்டிங்க் ரொம்ப மோசம்.. மலையாள அதிகாரம் படம் தான் காட்டுது

டிஸ்கி 3 , அதிகாரம் 92 டைட்டில்க்கான விளக்கம்.. தகவல் உதவி -




   This page presents the text of Tirukkural in the Tamil Script with translation in English. One Adhikaram consisting of ten couplets is shown at a time. The text is displayed as an image, to allow direct viewing on most Browsers. The contents being an image, it may take a while to download the page.

Text of Tirukkural: Adhikaram 92

Text of Adhikaram 92
.

பூனம் சேலைக்கும் பூனம் பாண்டேவுக்கும் இன்னா ரிலேஷன்ஷிப்பு?

கேட்டா கிடைக்காது......பொழுது போனா வராது.....அதனால் இப்பவே பார்த்து படிச்சிருங்க............!!!!!!!!
1. பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்க வேண்டும்: ராமதாஸ் பேட்டி # அப்போ நான் வீட்லயே இருந்துக்கவா? - ஸ்ரீதேவி கேள்வி


-------------------------------


2. என் அதீதமான அன்பால் உன் உடல் எடை கூடிவிட்டது என்று அங்கலாய்க்கும் உனக்கு அளிக்கப்படும் ஷாக் ட்ரீட்மெண்ட் தான் என் முத்தங்கள்



--------------


3. மக்களை கருணாநிதி ஏமாற்றுகிறார்: டி.ராஜேந்தர் # ஆமா, அவர் மனைவி, மகன்கள், மகள் மக்களையும் தான் - அழகிரி



------------------------


4.மேடம், கடல் படத்துல இருந்து ஏன் விலகிட்டீங்க?



சமந்தா - சுறா கூட ஃபைட் போடற மாதிரி ஒரு சீன்,டைரக்டர் சார் விஜய்யின் சுறாவை 2 டைம் பார்க்கச்சொன்னார்


------------------------


5. இன்னும் ஏன் ராமர் பிள்ளைன்னே சொல்றாரு? லவன் அல்லது குசன்னு சொல்லிக்கலாமே?



---------------------------------





6. சில்லி புரோட்டா சாப்பிட்டா சில்லித்தனமானவன்னு நினைச்சுக்குவாங்கன்னு சின்ன வயசுல நினைச்சுட்டு இருந்தேன்



----------------------------------


7. நான் வித்யாபாலன் அளவுக்குத் தயாராகவில்லை. 'டர்ட்டி பிக்ச’ரில் நடிக்கவில்லை!''  - அசின் # அவருக்கும்,உங்களுக்கும் பேடு வெச்சாலும் எட்டாது


----------------------------------

8. புதுக்கோட்டை இடைத்தேர் தலில் என்னை நிற்கச்சொல்லி வற்புறுத்தினார்கள். - டி ஆர் #  ”இடை”த்தேர்தல்னா சிம்பு தான் குட் சாய்ஸ்



-----------------------------------

9. மூக்குத்தி அணிவது பெண்ணுக்கும், கூலிங்க் கிளாஸ் அணிவது ஆணுக்கும் கூடுதல் அழகு


----------------


10. பூனம் சேலைக்கும் பூனம் பாண்டேவுக்கும் சம்பந்தம் இல்லை, அவ்ளவ் ஏன்? பூனம் பாண்டேவுக்கும் சேலைக்குமே சம்பந்தம் இல்லை


------------------------------


Ponna Kaiya PiDiChu ILuThIyA . . . .'s photo.



11. பட்டுச்சேலை பெண்ணுக்கு கம்பீரத்தையும், காட்டன் சேலை மரியாதையையும், பூனம் சேலை கிளுகிளுப்பையும் தருகிறது # டிரஸ்சாலஜி


------------------------------------------


 12. வெளியில் அழைத்துச்செல்லும்போது தன் மனைவியை சுடிதாரிலும், மற்ற பெண்களை சேலையிலும் எதிர்பார்க்கிறான் சராசரித்தமிழன்



------------------------------------

13. மேனேஜர் சார், எனக்கு புதுசா கல்யாணம் ஆகிடுச்சு, வேலை கம்மியா குடுங்க



...சாரி மேடம், நீங்க பழசான பின்னால வந்து ஜாயின் பண்ணிக்குங்க


--------------------------------


14. மருதாணியை உள்ளங்கைகளில் மட்டும் இடும் பெண்களே அழகு,சிலர் முழுக்கை சட்டை போல் கை முழுவதும் இட்டுக்கடுப்பேற்றுகிறார்கள் யுவர் ஆனர்


-----------


15. அழகு நிலையம் = அவள் வீடு


----------------------------

Incredible !ndia

16. மண வாழ்க்கையின் மைனஸ் பாயிண்ட்களை மட்டும் பட்டியல் இட்டு புலம்பும் சிலர் பிளஸ் களை பற்றி மூச்சு விடாமல் கமுக்கமாய் இருப்பது ஏனோ?


------------------------


17. கருணாநிதியை யாராலும் வீழ்த்த முடியாது: ஆ.ராசா # கண்ணா, அப்போ  நீ என்னை இன்னும் நேர்ல பார்க்கல? - ஜெ


-------------------------


18. எனக்குப்பூனை என்றால் பிடிக்கும், உன் மேல் உதட்டின் மேல் உள்ள பூனை ரோமங்களை ரசித்த பின்னர்



---------------------


19. திருமணம் ஆன பெண்கள் தாங்கள் வைக்கும் டி பி யில் கூட  நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்த பெண் படத்தை கவனமாய் தேர்ந்தெடுக்கிறார்கள்


-------------------------


20.தேவைப்பட்டால் பிளாஸ்டிக் சர்ஜரி கூட செய்து கொள்வேன் - கமல் # அப்போ விஸ்வரூபம் பிளாஸ்டிக்ரூபமா?ட்ரெய்லர்லயே தெரியுது




--------------------------------------


yanka Rajan and 37 others.