Monday, June 04, 2012

எல்லாத்தையும் மேல இருக்குறவன் பார்த்துக்குவாண்டா ....( ஜோக்ஸ்)



The Largest Water Lily In The Word. Victoria amazornica is the world’s largest genus of water lilies. Its leaves reach up to 3m in diameter. It floats in the shallow waters of the Amazon River basin. These water lilies support up to 70 pounds. This giant water lily was called Victoria regia after Queen Victoria of the UK when it was discovered by explorer Robert Schomburgk in 1836.


1. அத்தான், என்னில் நீங்க பாதி!


 நிஜம் தான் , நான் 52 கிலோ, நீ 104 கிலோ வெயிட்


------------------------------


2. கடவுளே!3ஆம் உலகப்போர் வராமல் காப்பாற்று!

 பக்தா! உலக அமைதி மேல் உனக்கு அவ்ளவ் நாட்டமா?


நோ காட், சரித்திரம் எனக்கு தரித்திரம், சிலபஸ்ல சேர்ந்துடுமே


--------------------------------

3. எனக்கு அதிகாரம் பிடிச்சவங்களை கண்டா பிடிக்காது..


ஓஹோ , திருவள்ளுவர் 133 அதிகாரம் படைச்சாரே, அவரையுமா?


------------------------------------

4. கூழுக்கும் ஆசை ,மீசைக்கும் ஆசை என்றால் கவ்விக்குடிக்காமல் அண்ணாந்து குடிச்சா போதும்


------------------------

5.ஃபேஷன்  டிரஸ் அப்டேட்ஸ்க்காக மட்டுமே நான் F TV பார்க்கிறேன் என்பதும், தமிழர்களின் நலனுக்காகவே வாழ்கிறேன் என கலைஞர் சொல்வதும் ஒன்றே


------------------------------




6.  என்னை விட உனக்கு தான் நல்ல ரசனை என்றேன்.. புரிந்த என் சம்சாரம் என்னை பட்டினி போட்டாள் ஹி ஹி



----------------------------

7. ஜட்ஜ் - எதுக்காக உன் சம்சாரத்தை ஆத்துல தள்ளி விட்டே?



கைதி - அவ தான் ரொம்ப கோபமா இருந்தா, கொஞ்சம் கூல் ஆகட்டும்னு..


---------------------------

8.  புரிந்துகொள்ளாதவரை தான் பெண் இனிக்கிறாள் என்றால் சுகர் பேஷண்ட்ஸ் எல்லாம் பொண்ணுங்களை கண்டுக்கவே கூடாதா?


----------------------

9. மனைவி - கடைசியா நீங்க எப்போ சேலை எடுத்து குடுத்தது, ஞாபகமிருக்கா?

 கணவன் - 8 வருஷங்களுக்கு முன்னால மேரேஜ் அன்னைக்கு முகூர்த்த சேலை


-----------------------

10. மக் அடித்து அப்படியே எழுதுவது விரதம் இருந்து சாமி கும்பிடுவதுபோல , காப்பி அடிப்பது நோகாம நோம்பி கும்பிடறது போல # தேவ புத்திரி


--------------------------






11. அத்தான், ஆளாளுக்கு பெட் கட்டறாங்க.. நாமும் பெட் கட்டலாமா?


 போடி லூசு.. அதான் பெட்ல கட்றேனே? ( உதிரிப்பூவை)


------------------------

12. உன் புருஷனை ஏன் வெந்தியத்தேவன்னு கூப்பிடறே?



இந்த ஜில்லாவுலயே இட்லி மாவுக்கு அரிசி-வெந்தயக்கலவை அவரை மாதிரி கலக்க ஆள் இல்லை



-------------------------


13. டியர், எதுக்கு கதவை தாழ் போடறே? மணி 8 தானே ஆகுது? 


ம்க்கும், நான் சமையல் பண்ணப்போறேன், நீங்க எஸ் ஆகக்கூடாதில்ல?



----------------------------



14. அத்தான், என் பட்டுக்கூந்தலை ஏன் கட் பண்ணச்சொல்றீங்க? யூ லைக் பாப் கட்டிங்க்?



மேட்சுக்கு மேட்சா பட்டுச்சேலை வேணும்னு கேட்டுத்தொலைப்பியே? ?

-----------------------------


15. திமுகவில் கட்சிக் கட்டுப்பாட்டை காப்பாற்றுவதற்கு 'அறுவை சிகிச்சை' தேவை - கி.வீரமணி # பொதுக்குழுவைக்கூட்டி இளைஞன் படத்தை ஓட்டிடுவோம்

-------------------------






திராணி இருந்தா... திறந்து பாரும் ;)))) ஹே டிஷ்யும்..;)) pic.twitter.com/dYo6NdWK

16. அவதானிப்புன்னா என்னன்னு எனக்கு தெரியாது. ஆனா ஆஃபீஸ்ல இருந்து வீட்டுக்கு லேட்டா போனா என் சம்சாரம் தாளிச்சுடுவா # அவதானிப்பு அவ தாளிப்பு


------------------------


17.உள்ளசுத்தியோடும், நேர்மையுடனும், பழகும் விகல்பம் இல்லாத பெண்கள் அதே போல் தான் ஆண்களும் பழகுவார்கள் என தவறாக நினைத்துக்கொள்கிறார்கள்


---------------------------




18. இரவு 11மணிக்கு முன்னதாக டர்ட்டி பிக்சர்ஸ் டி.வி.யில் ஒளிப்பரப்ப தடை:  # ஓஹோ, இதை படிச்சுட்டு எல்லாரும் 7 மணிக்கு தூங்கி 11க்கு எழுவாங்க



--------------------------







19. ஆண் பெண் நட்பு பற்றிய பார்வை ஆண், பெண் இருவருக்கும் முற்றிலும் வேறானதாக இருக்கிறது # அவதானிப்பு


-----------------------------




20.  சந்தர்ப்பங்கள் சாதகம் ஆகும்போது ஆண் என்றும் ஆணாகவே நடந்து கொள்வான்


-----------------------------



எல்லாத்தையும் மேல இருக்குறவன் பார்த்துகுவாண்டா கண்ணு ;))))(பயில்வான் ரங்கநாதன் வாய்ஸ்) # லொள்ளு ;))P

Sunday, June 03, 2012

நடிகை காஜல் இணையத்தில் அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் - ஜூ வி கட்டுரை



க்கபூர்வமான காரியங்களைவிட, அழிவுபூர்வ​மான விவகாரங்களுக்குத்தான் இணையதளம் அதிகம் பயன்படுத்தப்படுகிறதோ? 

சி.பி - ஆவதும் நெட்டாலே, அழிவதும் நெட்டாலே?


ஒரு பெண்ணை எந்த அளவுக்கு அவமானப்படுத்த முடியும் என்பதற்கு, நடிகை காஜலுக்கு நேர்ந்த கொடுமையே சாட்சி.


'கோ’, 'மௌன குரு’ உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்திருப்பவர் காஜல். இவர் சென்னை, போலீஸ் கமிஷனரிடம் கொடுத்திருக்கும் புகாரைக் கண்டு யாரும் அதிர்ச்சி அடையாமல் இருக்க முடியாது. .


''கடந்த 23-ம் தேதி மாலை 3 மணியில் இருந்து என்னுடைய செல்போனுக்குத் தொடர்ந்து அழைப்பு வந்துகொண்டே இருந்தது. பேசியவர்கள் அனைவரும், 'எங்கே வர்ற? ரேட் எல்லாம் பிரச்னை இல்லை, எந்த ஹோட்டல்ல ரூம் போடலாம்?’ என்ற ரேஞ்சிலேயே பேசினார்கள்.


 திடீரென இப்படிப்பட்ட அழைப்புக்கள் ஏன் வருகிறது என்று புரியவில்லை. ஆபாசமாகப் பேசியவர்களை திட்டித் தீர்த்தேன். அப்படி ஒருவரைத் திட்டியபோது, அவர்தான் நிதானமாக, 'உங்களின் போட்டோவும் மொபைல் நம்பரும் போட்டு ஒரு வெப்சைட்டில் நீங்கள் ஒரு கால் கேர்ள் என்பதுபோல் விளம்பரம் செய்யப்பட்டு உள்ளது. அதனால்தான் உங்களைத் தொடர்பு கொண்டேன்’ என்றார். 


அவரிடம் இருந்து வெப்சைட் அட்ரஸைப் பெற்றேன். இலவசமாக விளம்பரங்கள் தருவதற்குப் பயன்படும் வெளிநாட்டு வெப்சைட்  அது. அதைப் பார்த்து கதறி அழுதேன். உடனே, அந்த வெப்சைட் முகவரிக்கு, 'என்னைப் பற்றி தவறான விளம்பரம் வெளியாகி உள்ளது. அதை உடனே நீக்க வேண்டும். அதை வெளியிட்டவர் யார் என்பதையும் தெரிவிக்க வேண்டும்’ என்று இ-மெயில் அனுப்பினேன்.



'உங்களைப்பற்றிய விளம்பரம் 72 மணி நேரத்தில் நீக்கப்படும். விளம்பரத்தை வெளியிட்டவர்பற்றிய தகவலைத் தர முடியாது’ என்று பதில் வந்தது. இதையடுத்தே சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தேன். உடனே நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட குற்றவாளியைக் கடுமையாகத் தண்டித்தால்தான், எதிர்காலத்தில் மற்ற பெண்களுக்கும் இதுபோன்ற பிரச்னைகள் வராது'' என்றார் கவலையுடன்.


சி.பி - எதுக்கு 72 மணி நேரம்? வெப்சைட் ஓனர் 3 நாள் லீவ்ல இருக்காரா? அதை எடுக்க 3 நிமிஷம் போதாதா? அந்த விளம்பரம் அட்லீஸ்ட் 5 நாளாவது விளம்பரத்தில் இருக்க ஆல்ரெடி ஒப்பந்த அடிப்படைல காசு வாங்கி இருப்பாரு.



புகாரை விசாரித்து வரும் சைபர் க்ரைம் கூடுதல் உதவி ஆணையர் சுதாகரிடம் பேசினோம். ''இதுகுறித்து விசாரித்து வருகிறோம். அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி விவாதிக்க எங்கள் டீம் மீட்டிங் நடக்கிறது. அதன் பிறகுதான் மற்ற விவரங்களைத் தர முடியும்'' என்றார்.


பெண்ணைக் கேவலப்படுத்தும் இதுபோன்ற அற்பத்தனமான ஆயுதங்களைக் கையில் எடுப்பவர்கள் கடுமையாகத் தண்டிக்கப் பட வேண்டும்.


காடு வெட்டி குரு கன்னா பின்னா பேட்டி @ விகடன் - கிடாவெட்டு

''மாநாட்டுக்காக நாலு நாள் மகாபலிபுரத்துல தங்கி இருந்தேன். அங்கே பீச்ல நடக்குறதை எல்லாம் நானும் பார்த்துட்டுத்தான் இருந்தேன். சவட்டிஎடுக்கிற மொட்டை வெயில்ல யாரைப்பத்தியும் கவலைப்படாம கட்டிப்புடிச்சிட்டு மோந்துட்டு இருக்குதுங்க.


சி.பி - யூத்னா அப்டி இப்டித்தான் இருக்குமாம், கேட்டா அப்படி சமாளிக்கறாங்கண்ணே,.. அண்ணே, நிஜமா காத்து வாங்கத்தான் போனீங்களா?இல்லை, ஓ சி ல லைவ் ஷோ பார்க்கப்போனீங்களா?


இதுவாங்க காதல்? அந்தக் காலத்துலயே தமிழனுக்கு வீரமும் காதலும் இருந்ததா, இலக்கியங்கள்ல சொல்லி இருக்காங்களே. அதுதான் காதல்!'' - எடுத்த எடுப்பிலேயே ஆவேசம் காட்டுகிறார் காடுவெட்டி குரு. அவரது சொந்த கிராமமான காடுவெட்டியிலேயே நடந்தது இந்தச் சந்திப்பு

http://kilakarainews.files.wordpress.com/2012/01/wr_540716.jpeg


.
1. ''ஆயிரம் சமாதானம் சொல்லுங்கள்... வன்னியர் சமுதாயத்துப் பெண்களை வேறு சாதிப் பையன்கள் காதலித்துத் திருமணம் செய்தால், அவர்களின் கையை வெட்டுவேன்’ என்று நீங்கள் பேசியது சரியா?''


சி.பி - அண்ணன் காடு வெட்டி குரு இனி லவ்வர்ஸ் கை வெட்டி குரு என அன்போடு அழைக்கப்படுவார், ஆனா ஒரு டவுட், கையை வெட்டுனா அவங்க லவ் பண்ணாம அமைதி ஆகிடுவாங்களா?




''காதல் திருமணமோ... கலப்புத் திருமணமோ செய்யக் கூடாதுனு நான் சொல்லவே இல்லை. அது என் கொள்கையும் கிடையாது. காதல்ங்கிற பேர்ல பொண்ணுங்களை ஏமாத்துறதைத்தான் என்னால ஏத்துக்க முடியலை. கடலூர், அரியலூர் மாவட்டங்கள்ல வசதியாக இருக்கும் வன்னியர் சாதியைச் சேர்ந்த பெண்களைத் தேர்ந்தெடுத்து, அவங்களைக் காதலிக்கிற மாதிரி நடிச்சுச் சீரழிச்சுடுறாங்க.


 ஆறு மாசம் அந்தப் புள்ளையைக் கூட வெச்சு நாசம் பண்ணிட்டு, அப்புறம் அடிச்சுத் துரத்திடுறானுங்க. அதுக்குப் பிறகு அந்தப் பொண்ணுங்க எங்கே போகும்? தற்கொலைதான் பண்ணிக்குதுங்க. எங்க வன்னியர் சாதிப் பொண்ணுங்களைக் குறிவெச்சு மட்டும்தான் இது நடந்துட்டே இருக்கு. கடலூர், அரியலூர் மாவட்டத்துல புள்ளைங்களைப் பெத்த எத்தனை பேரு கண்ணீரும் கம்பலையுமா நிக்கிறாங்கனு ஒரு சர்வே எடுத்துப் பாருங்க...



சி.பி - ஏமாத்தற நாய்ங்களுக்கு ஜாதி என்ன குலம் என்ன? கோத்திரம் என்ன? கிடைச்சதை மடக்கறாங்க... டி வி சீரியல், சினிமா பார்த்தும் பொண்ணுங்கதான் ஜாக்கிரதையா இருக்கனும்.. குறிப்பிட்ட ஜாதிப்பெண்களைத்தான் ஏமாத்தறாங்கன்னு சொல்லிட முடியாது



நான் சொல்றது எந்த அளவுக்கு உண்மைனு உங்களுக்கே தெரியும். ஏன்... அதே தெய்வீகக் காதல் ஒரு ஏழை வீட்டுப் பெண் மேல வர மாட்டேங்குது? அதான் ஒரு ஆவேசத்துல 'காதல்ங்கிற பேர்ல எங்கக் குடும்பத்துப் பொண்ணுங்களை ஏமாத்துறவங்க கையை வெட்டுங்க’னு சொன்னேன்



. எங்க சாதிப் பையனே அப்படி ஒரு தப்பு பண்ணி இருந்தா, அவனையும் வெட்டுங்கனுதான் சொல்றேன். ஒரு பொண்ணைப் பெத்த அப்பா ஸ்தானத்துல இருந்து பாருங்க... நான் சொல்றதோட அர்த்தமும் வலியும் புரியும்!''



http://www.writermugil.com/wp-content/uploads/2009/03/election-cartoon-11.jpg


'2. 'அப்போ உங்க சாதியைச் சேர்ந்த பசங்க மத்த சாதிப் பொண்ணுங்களைக் காதலிக்கிறதை ஏத்துக்குறீங்களா?''


''காட்டுமன்னார்குடி, அரியலூர் பகுதியில் எங்க சாதிப் பசங்க நிறைய பேரு தாழ்த்தப் பட்ட சமூகத்துப் பெண்களைக் காதலிச்சிக் கல்யாணம் பண்ணி இருக்காங்க. ஆனா, அவங்க யாரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு அந்தப் பெண்ணை அடிச்சுத் துரத்தினது கிடையாது. 


சந்தோஷமா வெச்சிக் குடும்பம் நடத்திட்டு இருக்காங்க. எங்க சுத்து வட்டாரத்துல யாராவது காதலிச்சு வீட்ல சம்மதம் கிடைக்கலைன்னா, நேரா இதே காடுவெட்டி கிராமத்துக்குத்தான் ஓடி வருவாங்க. 'காடுவெட்டி கிராமத்துக்குப் போயிட்டா, குரு அண்ணன் சேர்த்துவெச்சிடுவாரு’னு அவங்களுக்கு ஒரு நம்பிக்க


அப்படி நானே இதுவரை ஆயிரத்துக்கும் மேல காதல் கல்யா ணங்களைச் செஞ்சிவெச்சிருக்கேன். பெத்தவங்ககிட்டயும் பேசி சமாதானப் படுத்திவெச்சிருக்கேன். உண்மையான காதல்னா, உயிரைக் கொடுத்தாவது சேர்த்துவைப்பான் இந்த குரு!''


3. ''பா.ம.க. மீண்டும் சாதி அரசியலைக் கையில் எடுத்திருச்சே?''


சி.பி - பா ம க எப்போ ஜாதி அரசியலை விட்டுச்சு? இப்போ மறுபடி கையில எடுக்க? ஜாதிக்கட்சி ஜாதியை கையில எடுக்கறதுல என்ன தப்பு?



''தமிழ்நாட்டுல சாதி இல்லாம என்ன நடந்திருக்கு சொல்லுங்க? இங்கே இரண்டரைக் கோடி வன்னியர்கள் இருக் கோம். ஆனா, எங்க வாழ்க்கை நிலை இன்னைக்கு வரைக்கும் உயரலையே?


 எங்க பாட்டன் காலத்துல விவசாய நிலக் கிழார்களா இருந்தவுங்க, இன்னைக்கு விவசாயக் கூலிகளா இருக்கோம்.எங்க உரிமைக்காக நாங்க போராடும்போது சாதியைச் சொல்லித்தான் போராட வேண்டி இருக்குது. சாதியை ஒழிச் சிட்டோம்னு சொல்றீங்க...


 சரி, இன்னும் சிதம்பரம் நடராஜர் கோயில்ல நந்தன் போன வாசலை எதுக்கு மூடி வெச்சிருக்காங்க? ஸ்ரீரங்கம் பெருமாளை நாங்க போய்ப் பார்க்க எதுக்கு நடுவுல ஒரு இடைத்தரகர்? தி.மு.க., அ.தி.மு.க. ரெண்டுமே சாதி இல்லைனு சொல்லிட்டு, ஊருக்குள்ள சாதியை வளர்த்துக்கிட்டுதான் இருக்கு.


 'நாங்க சாதி இருக்கு’னு சொல்லிட்டு, சாதிக் கொடுமையை ஒழிக்கப் போராடிட்டு இருக்கோம். வடநாட்டுப் பக்கம் போனா, நடிகையில இருந்து கிரிக்கெட் ஆடுறவன் வரைக்கும் அத்தனை பேரும் பேரோடு சாதியையும் சேர்த்துதான் வெச்சிருக்கான். இதெல்லாம் எப்போ மாறி, இந்தியன், தமிழன்கிற நிலை வருதோ... அப்ப நாங்க சாதியைப் பத்திப் பேசினா எங்களை வந்து கேளுங்க!''


4. ''அப்போ 2011-ல் தமிழகத்தில் பா.ம.க-வின் ஆட்சினு சொன்னீங்க.. இப்ப என்ன... 2016-ல் அன்புமணி தமிழக முதல்வர்ங்கிறதுதான் உங்க திட்டமா?''


''கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலின் - அழகிரி, ஜெயலலிதாவுக்குப் பிறகு சசிகலா, விஜயகாந்துக்குப் பிறகு அவரு பொண்டாட்டினு ஆளாளுக்குச் சொல்லிட்டு இருக்காங்க. எங்க கட்சியை வழி நடத்தும் சின்னய்யாதான் அடுத்த முதல்வர்னு நாங்க சொல்றதுல என்ன தப்பு? வெள்ளைக்காரன் அவ்வளவு சீக்கிரம் யாரையும் பாராட்ட மாட்டான். அப்படிப்பட்டவனே எங்க சின்னய்யா வைப் பார்த்து, எழுந்து நின்னு கை தட்டி இருக்கான். அப்படிப்பட்ட திறமை சாலியை 'முதல்வர்’னு சொல்றதில் என்ன தப்பு?''


சி.பி - வாரிசு அரசியலால தான் தமிழ் நாடு குட்டிச்சுவராகி இருக்கு, மதுவிலக்கு, சினிமா, புகைப்பழக்கம் இப்படி பல நல்ல விஷயங்களில் எல்லாருக்கும் புத்தி சொல்ற தலைவரு இந்த விஷயத்துல மட்டும் தன் மகனை ஏன் முன்னிலைப்படுத்தி பத்தோட 11 ஆகறாரு?என் குடும்பத்தை சேர்ந்தவங்க யாராவது அரசியலுக்கு வந்தா என்னை செருப்பால அடிங்கன்னு ஏன் சொன்னாரு?


http://snapjudge.files.wordpress.com/2008/03/pmk_dmk_ramdoss_mp_rajya_sabha_kalainjar_kalki.jpg


5. ''ஜெயலலிதாவின் ஒரு வருட ஆட்சி?''


''எங்கே கோயில் திருவிழா நடந்தாலும் அங்கே ஒரு புது டாஸ்மாக் கடை திறக்கிறதுனு ஒரு புது திட்டம் கொண்டு வந்திருக்காங்க அவங்க. எல்லோரும் குடிச்சிட்டுப் போய் சாமி கும்பிடுங்கனு சொல்றாங்கபோல!


உலகத்துலயே இப்படி ஒரு கேவலம் எங்கேயும் நடக்காது. சாமி கும்பிடுற இடத்துல சாராயத்துக்கு என்னங்க வேலை? குடிகாரங்களை உருவாக்குவதில் தமிழ்நாட்டை முதல் மாநிலம் ஆக்கணும்னு திட்டம் போட்டு வேலை செய்றதைத் தான் ஜெயலலிதாவின் ஒரு வருடச் சாதனைனு சொல்ல லாம்!'


சி.பி - சாராயம்  சாப்பிற சாமி தான் தமிழன்க அதிகம் கும்பிடற கருப்பண்ண சாமி, மாடசாமி இப்படி.. அரசாங்கத்துக்கு முக்கிய வருமானமே டாஸ்மாக் தான்.. குஜராத் மட்டும் எப்படி டாஸ்மாக் இல்லாமயே சமாளிக்குதுன்னு போய் பாடம் கத்துட்டு வரச்சொல்லனும் மேடமை.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhyWDabmTF4POj8IkzO7WZMsXgl2uehp4-jAsxvGYZQw81mmJrfSiUVyUA-Y_MEwd1xHUj2eQE2hoHa3E54Oy6ZZjkyQ4WlPVd9Ton8IPhVrZM9AnmZwm-jwhmFYxqWk-zXogWmPLkDz0Uy/s1600/ramadoss_jayalalitha1.jpg


6. ''எதிர்க் கட்சித் தலைவராக விஜயகாந்த்?''


''அவரு இன்னும் தெளியவே இல்லையே! தலைவருக்கு உண்டான தகுதி எதுவுமே அவருக்குக் கிடையாது. ஏதோ ஒரு அலையில மக்கள் ஓட்டுப் போட்டாங்க. ஜெயிச்சு வந்துட்டாங்க.



'நான் ஆஃப் அடிச்சேன். என் தொண்டர்கள் ஃபுல் அடிப்பாங்க. எல்லோரும் குடிப்போம்’கிங்றதுதான் அவரோட கொள்கை. எம்.ஜி.ஆர். வந்தாரு, குடிக்கச் சொன்னாரு. கலைஞரும் குடிக்கச் சொன்னாரு. ஜெயலலிதாவும் குடிக்கச் சொன்னாங்க. நாளைக்கு இவரு வந்தாருன்னா, 'என்னைப் போல எல்லோரும் நிதானம் இல்லாம குடிச்சிக்கிட்டே இருங்க’னு சொல்லு வாரு.



நிதானம் இல்லாம குடிச்சிட்டே இருந்தா, குடும்பத்தையே நடத்த முடியாது. அப்புறம் எப்ப டிங்க நாட்டை ஆள முடியும்? அவரு எந்த நேரத்துல குடிக்காம இருப்பாருனு யாருக்குமே தெரியலயே. சட்டமன்றத்துக்கே அப்படித்தானே வராரு. ஏதோ வந்துட் டாரு... இதோடு அவரு அரசியல் முடிஞ்சிடும். அதனால அவரைப் பத்தி இனி பேச வேண்டியதே இல்லை!''

http://mmimages.mmnews.in/Articles/2011/Feb/2075eacd-69e3-4238-b0de-46a34db1771a_S_secvpf.gif


பில்லா 2 - ஓவர் கிளாமர் ஓவர் ஓவர் - பார்வதி ஓமனக்குட்டன் பேட்டி - கிடாவெட்டு

http://www.kerala9.com/gallery3/var/albums/Kerala%20Events%20Photos/Parvathi%20Omanakuttan%20Attukal%20Temple%20Pongala%20Photos%20Pictures/Parvathi%20Omanakuttan%20at%20Attukal%20Temple%20Pongala%20Pictures_%20_9_.jpg?m=1292335553 


ல்லிக்குச்சியாய் இருந்தாலும் பஞ்சு மிட்டாய்போலப் பளபளக்கிறார் பார்வதி ஓமனக்குட்டன். இடம் ரேடிசன் ப்ளூ ஹோட்டல். 'பில்லா-2’வில் அஜீத்துடன் கிளாமர் அட்டகாசம் செய்து முடித்த திருப்தி தெரிகிறது முகத்தில்.



1.  '' 'பில்லா-2’க்கு முன்னாடி என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க?''


சி.பி -  பில்லா -2 படத்துல நடிக்க சான்ஸ் கேட்டுட்டு இருந்தாங்க



''மும்பையில் நிறைய மாடலிங் பண்ணிக்கிட்டு இருந்தேன். 'யுனைடெட் சிக்ஸ்’னு இந்தியில ஒரு ஆக்ஷன் படத்துல நடிச்சேன். அப்புறம் 'மதன் கொள்ளி’னு ஒரு மலையாள பேய் படத்துல நடிச்சேன். அந்தப் படத்துல பேயாகவும் போலீஸ் அதிகாரியாகவும் டபுள் ரோல் பண்ணேன். 


நான் நடிச்ச ரெண்டு படங்களுமே டெரரான ஆக்ஷன் படங்கள். அதனால இந்தப் பொண்ணுக்கு ஆக்ஷன்தான் சரிப்பட்டு வரும்னு அடிதடி கதைகளோட வர ஆரம்பிச்சுட்டாங்க. அப்போ வந்ததுதான் பில்லா வாய்ப்பு. படத்துல அஜீத்கூட கொஞ்சமா ஆக்ஷனும் நிறைய ரொமான்ஸும் பண்ணி இருக்கேன்!''



2. ''அஜீத் என்ன சொல்லிக் கொடுத்தார்?''


சி.பி - அவர் என்ன டைரக்டரா?  ஷூட்டிங்க் ஸ்பாட் வந்தா தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருக்கறவர்.. அண்ணன் பிரபு தேவா மாதிரி இருந்தா ஏதாவது சொல்லிக்குடுத்திருப்பாரு.. 



''மத்தவங்க மேல எடுத்துக்கிற அக்கறை அஜீத் ஸ்பெஷல். லைட்பாய்ல ஆரம்பிச்சு கூட நடிக்கிறவங்க வரை ஒரே மாதிரிதான் ட்ரீட் பண்ணுறார். அவர் கோபப்பட்டு பார்த்ததே இல்லை. எல்லோருக்கும் அவர் கையால டீ போட்டுக் கொடுக்கிறது வரை இறங்கி செய்றார். ஷூட்டிங் பிரேக்ல கேரவனுக்குள்ள போய் உட்கார்ந்துக்க மாட்டார். சாதாரணமா யூனிட் ஆளுங்களோட அவர் நிக்கிறதைப் பார்க்கவே ஆச்சர்யமா இருக்கும்!''




'3. ' 'பில்லா-2’ படத்துல உங்க கேரக்டர் என்னனு சொல்லுங்களேன்?''


சி.பி - ஆக்‌ஷன் படத்துல ஹீரோயின்னா என்ன பெரிசா இருந்திடப்போகுது?2 டூயட், ஒரு குத்தாட்டம், அது போக  4 காமெடி சீன்  மொத்தமே பாப்பா வர்றது 4 ரீல் தானாம்


''டேவிட் பில்லாங்கிற கேங்ஸ்டர்க்கு நான்தான் ஜோடி... லேடி கேங்ஸ்டர் கேரக்டர் தான். படத்துல என் பேர் ஜாஸ்மின். நீங்க எதிர்பார்க்கிறதுக்கு மேல கிளாமர் இருக்கும். போதுமா?''

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhh2FhrYsawdEd52uz_LgvSKA0hFVJ_g2raCxGidIH0JEFtcqJcjBmU5O7jIT93ZrBz64pnAmANzm3Lzw-H5z-bSkaDoSwMQzikpxMgWmFpeWRvXv2bpi3i-9liWPZgnq4RUBkBNtFoZVSG/s400/parvathy-omanakuttan-16.jpg



4. ''நீங்க நயன்தாராவோட நல்ல ஃப்ரெண்ட்ஷிப்ல இருக்கீங்களாமே...'


சி.பி - ஆமா 9 தாராவோட ஃபிரண்ட்ஸ் எல்லாம் இவருக்கு ஃபிரண்ட்ஸ், இவரோட ஃபிரண்ட்ஸ் எல்லாம் அவருக்கு ஃபிரன்ட்ஸ்.. 2 பேரும் மாத்திக்குவாங்க 

'
''ஆமா... நான் நயன்தாராவோட தீவிர ரசிகை. மும்பைல என் வீட்டுக்கு வந்திருக்காங்க. கிறிஸ்டியனா இருந்தாலும், என் அம்மா கொடுக்குற பிரசாதத்தை நெற்றியில் வெச்சுக்குவாங்க. எனக்குள் சினிமா பற்றிய ஆசையை முதலில் விதைத்ததே நயன்தாராதான். அவங்க அளவுக்கு இங்கே வளரணும். அதுதான் என் கனவு!''


5. ''2008-ல் மில்லி மீட்டர் கேப்பில் உலக அழகி டைட்டிலை மிஸ் பண்ணிய வருத்தம் இன்னும் இருக்கா?''


''இல்லவே இல்லைனு சொன்னா அது பொய். அந்த நேரத்துல வெடிச்சு அழணும்போல இருந்துச்சு. இப்போ நினைச்சா அது குழந்தைத்தனமான விஷயமா இருக்கு. ஃபைனல் வரை வந்து 'ஃபர்ஸ்ட் ரன்னர் அப்’ வந்ததே சந்தோஷமான அனுபவம்தான். வாழ்க்கையில நமக்கு நடக்குற சம்பவங்கள் எல்லாமே நல்லதா இருக்கும்னு சொல்ல முடியாது. ஆனா, நல்ல அனுபவங்களைக் கொடுக்கும்னு உறுதியா சொல்வேன்!''

http://nimg.sulekha.com/others/thumbnailfull/parvathy-omanakuttan-2008-12-4-1-12-13.jpg

 நன்றி - விகடன்

சென்னை மெட்ரோ ரயில் திட்டம்

சென்னை நகர வளர்ச்சியில் முதல் பாய்ச்சல் நடந்தது 1670-களில். சென்னை கோட்டையில் இருந்து பரங்கிமலை வரை மவுன்ட் ரோடு அமைக்கும் பணி தொடங்கிய காலகட்டம் அது. இன்றைய முழு வடிவத்தை மவுன்ட் ரோடு அடைய கிட்டத்தட்ட 130 வருடங்கள் பிடித்தன.


அந்தச் சாலையையட்டிதான் வளர்ந்தது சென்னை. இரண்டாவது பாய்ச்சல் 1856-ல் நடந்தது, ராயபுரத்துக்கும் ஆற்காட்டுக்கும் இடையே ரயில் பாதை அமைக்கப்பட்டு, ரயில் ஓடத் தொடங்கியபோது. 1875-ல் தொடங்கிய துறைமுக மேம்பாட்டுப் பணியை மூன்றாவது பாய்ச்சல் என்று சொல்லலாம். இப்போது நான்காவது பாய்ச்சலுக்குத் தயாராகிக்கொண்டு இருக்கிறது சென்னை!

பெருநகரத்தின் பெரும் சவால்!

16 நகராட்சிகள், 20 நகரப் பஞ்சாயத்துகள், 214 கிராமங்கள் என 1,189 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு விரிந்துகிடக்கும் சென்னைப் பெருநகரின் மிகப் பெரிய சவால் அதன் போக்குவரத்து. சென்னையைச் சுற்றி 732 தடங்களில் 3,500 பஸ்களை இயக்குகிறது மாநகரப் போக்குவரத்துக் கழகம். சென்னை கடற்கரை - தாம்பரம்; சென்ட்ரல் - அரக்கோணம்; சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ஆகிய மூன்று பாதைகளில் 450 ரயில் சேவைகளை அளிக்கின்றன புறநகர் ரயில்கள்.


சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே 62 ரயில் சேவைகளை அளிக்கின்றன பறக்கும் ரயில்கள். ஆனால், 50 சதவிகிதத்தினருக்குக்கூட இவை போதுமானவையாக இல்லை.


 பெருகும் லட்சக் கணக்கான கார்களாலும் மோட்டார் சைக்கிள்களாலும் சென்னையின் சாலைகள் நிரம்பி வழிகின்றன. துறைமுகத்துக்குள் செல்ல வாரக்கணக்கில் லாரிகள் அணிவகுத்துக் காத்திருக்கும் எண்ணூர் துறைமுகச் சாலையும் வண்டலூர் தொட்டதுமே வாகனங்கள் முக்கிமுக்கி நகரும் திருச்சி நெடுஞ்சாலையும் உதாரணங்கள். போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க பொதுப்போக்கு வரத்தும் முக்கியமான நடவடிக்கை களில் ஒன்று.


 ஆனால், சென்னையில் அது பெரிய அளவில் வெற்றி அடைய வில்லை. இதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று, ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்குக் குறித்த நேரத்துக்குள் செல்ல வசதியாக ரயில் - பஸ் போக்குவரத்து இணைப்பு இல்லாதது. இந்தக் குறையைக் களையப்போகும் முதல் நடவடிக்கையாக மெட்ரோ ரயில் சேவையைக் குறிப்பிட லாம்.


மெட்ரோ நல்ல மெட்ரோ!

14,600 கோடியில் நிர்மாணிக்கப்படும் மெட்ரோ ரயில் பாதை இரு தடங்களைக்கொண்டது. முதல் தடம், வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரையிலானது.

23.1 கி.மீ. நீளம் உடைய இந்தப் பாதையில், வண்ணாரப்பேட்டையில் இருந்து மண்ணடி - உயர் நீதிமன்றம் - சென்ட்ரல் ரயில் நிலையம் - தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை வரையிலான 14.3 கி.மீ. பாதை நிலத்துக்கு அடியில் சுரங்கப்பாதை யாக அமைக்கப்படுகிறது. சின்னமலை முதல் கிண்டி - ஆலந்தூர் - விமான நிலை யம் வரையிலான 8.7 கி.மீ. பாதை உயர் நிலைப் பாலத்தில் அமைக்கப்படுகிறது.


 இதேபோல, சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் பரங்கிமலை வரையிலானது இரண்டாவது தடம். 22 கி.மீ. நீளம் உடைய இந்தப் பாதையில், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து எழும்பூர் - கீழ்ப்பாக்கம் - ஷெனாய் நகர் - திருமங்கலம் வரையி லான 9.7 கி.மீ. பாதை சுரங்கப் பாதையாக அமைக்கப்படுகிறது. கோயம்பேடு முதல் அரும்பாக்கம் - வடபழனி - ஆலந்தூர் - பரங்கிமலை வரையிலான 12.3 கி.மீ. பாதை உயர்நிலைப் பாலத்தில் அமைக்கப்படு கிறது.


உயர்நிலைப் பாலத்தில், தரையில் இருந்து சுமார் 12 மீட்டர் உயரத்திலும் சுரங்கப் பாதையில் 17 மீட்டர் ஆழத்திலும் ரயில்கள் ஓடவிருக்கின்றன.

''முதல் கட்டமாக கோயம்பேடு - பரங்கிமலை வரையிலான பணிகள் 2013 டிசம்பருக்குள் முடியும்; முழுப் பணியும் 2015 டிசம்பருக்குள் முடியும்!'' என்கிறார் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனப் பொது மேலாளரான க.ராஜாராமன்.


ஒரு ரயில் = 600 மோட்டார் சைக்கிள்கள்!


ஆறு பெட்டிகள் இணைக்கப்பட்ட ஒரு மெட்ரோ ரயிலில் 1,580 பேர் பயணிக்கலாம். ஒரு தடத்தில் மூன்று நிமிடங்களுக்கு ஒரு ரயிலை இயக்கத் திட்டமிட்டு இருக்கிறார் கள். எனில், அலுவலக நேரத்தில் ஒரு மணிக்கு இரு தடங்களிலும் 54,162 பேர் பயணிக்கலாம்.


அதிகபட்சம் 80 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும் மெட்ரோ ரயிலின் சராசரி வேகம் 35 கி.மீ. நீங்கள் விமான நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டைக்கு 45 நிமிடங்களில் வந்துவிட முடியும் (இதே பயணத்தை பஸ்ஸில் மேற்கொள்ள ஒன்றரை மணி நேரம் ஆகும்). மெட்ரோ ரயில் சேவை தொடங்கும்போது, ஒரே டிக்கெட்டில் ரயில்களிலும் பஸ்களிலும் பயணம் செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டு உள்ளதால், ஒரு மெட்ரோ ரயில் 16 பஸ்கள் அல்லது 300 கார்கள் அல்லது 600 மோட்டார் சைக்கிள்களின் பயன்பாட்டைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!


விசேஷமான 2016

சென்னைக்கு 2016 விசேஷமான ஆண்டாக அமையலாம். டெல்லிக்கோ, பெங்களூருக்கோ அமைந்ததுபோல, மெட்ரோ ரயில் திட்டம் இங்கு மேலும் ஒரு வசதியாக மட்டும் அமையப்போவது இல்லை. அது இன்னொரு பெரிய அடித்தளமும் ஆகும்.



 தமிழக அரசு ஒரு பிரமாண்ட திட்டத்தில் இருக்கிறது. மேற்கில் ஸ்ரீபெரும்புதூர், தெற்கில் காஞ்சிபுரம், வடக்கில் திருவள்ளூர் என மூன்று மாவட்டங்களின் பகுதிகளையும் இணைத்து 2016-க்குள் 8 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவைக்கொண்ட நகரமாக சென்னையை விரிவாக்க விரும்புகிறது அரசு.


 இப்போது இருப்பதைப் போல, கிட்டத்தட்ட ஏழு மடங்கு பெரிய நகரமாக சென்னை உருவாகும்போது, அதற்கான முக்கியமான அடித்தளமாக மெட்ரோ ரயில் பாதை அமையும். பறக்கும் ரயில் திட்ட விரிவாக்கப் பணி முடிந்து வேளச்சேரி - பரங்கிமலை இடையே ரயில் இயங்கும்போது மெட்ரோ ரயில் சேவைக்கும் பறக்கும் ரயில் சேவைக் கும் புறநகர் ரயில் சேவைக்கும் இடையே முழுத் தொடர்பு உருவாகும்.

அப்போ மோனோ?

இதற்கிடையே, மோனோ ரயில் திட்டம் நான்கு வழித்தடங்களில் கொண்டுவரப்பட உள்ளது. வண்டலூர் - வேளச்சேரி,  பூந்த மல்லி - கிண்டி, பூந்தமல்லி - வடபழனி,வண்ட லூர் - புழல் என நான்கு வழித் தடங்கள். 'மோனோ வெற்றிகரமான திட்டமா’ என்ற விவாதங்களைக் கண்டுகொள்ளாமல், அரசு அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் முழு முனைப்போடு இருக்கிறது.


தொடரவிருக்கும் திட்டங்கள்

சென்னையின் இரண்டாவது விமான நிலையம் ஸ்ரீபெரும்புதூரில் அமைக்கப்பட உள்ள நிலையில், அங்கு தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளும் வகையில் புதிய ரயில் பாதைகளை அமைக்கவும் திட்டங்கள் தீட்டப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. இவற்றில் பல திட்டங்கள் மெட்ரோ ரயில் ஓடும் பாதைகளாக அமையலாம். 2025 வாக்கில் திட்டமிட்டபடி இந்தப் பணிகள் எல்லாம் படிப்படியாக நிறைவேறினால், அப்போது உலகின் பெரிய நகரங்களில் ஒன்றான 'கிரேட்டர் சென்னை’யை நெருக்கடி இல்லாமல் நாம் பார்க்கலாம்!


நன்றி - விகடன்

ஃபாரீன் மாப்ளைதான் வேணும்னு அடம் பிடிச்ச பல ஃபிகருங்க.... ( ஜோக்ஸ்)

அழகிற்கு அழகு சேர்த்துள்ளது இந்த் புகைபடம்
1.பவர்ஸ்டாருக்கே செம ஃபிகர் மாட்டும்போது நமக்கு எதுவும் மாட்டமாட்டேங்குதே என எண்ணும்போதுதான் தீக்குளிக்கும் எண்ணம் பிறக்கிறது # எ கீ
-----------------------------


2. 1 ம் தேதி நெருங்க நெருங்க  சம்சாரத்தின் முகம் களை கூடுகிறது # சம்பள நாள்
---------------------


3. யாமறிந்த மொழிகளிலே கனி மொழிபோல்  கடிதான , புதிரான மொழி எங்கும் காணோம்!!
-----------------------------


4. போபர்ஸ் ஊழல்லே ராஜீவுக்கு தொடர்பில்லை.# அதானே, மிஸஸ் மவுண்ட்பேட்டன் பிரபு கோவிச்சுக்க  மாட்டாரா?

------------------------------




5. சுடுநீர்ல குளிக்கலாமா? குளிர்ந்த நீரில் குளீக்கலாமா? என குழப்பம், எனவே 10 நிமிஷம் சுடுநீரிலும், 10 நிமிஷம் குளிர்ந்த நீரிலும் குளித்தேன்

----------------------------




அபசாரம் ,,அபசாரம் ,,# சாதிகள் இல்லையடி பாப்பா"னு...படிக்கவேண்டிய வயசுல ....
6. தமிழ் ஈழம் கிடைக்க காந்தி வழியில் போராடுவேன்- கலைஞர் # அப்போ கடல்ல குதிச்சு உப்புலயும் ஊழல் பண்ணுவீங்களா?தலைவா!

----------------------------


7. அஜித் படத்தில் அறிமுகமாக கொடுத்து வைத்திருக்கிறேன் : பார்வதி ஓமணக்குட்டன்!  # யார் கிட்டே எவ்வளவு கொடுத்து வெச்சீங்க?

-----------------------

8.   மனுவை பிரித்துப்படித்துப்பார்க்காத விஜயகாந்த் # படிக்கக்கூடாதுன்னு எதுவும் இல்லீங்கோவ், படிக்கத்தெரியாதுங்க


----------------------------

9. சிங்கம் 2: சூர்யாவுக்கு அனுஷ்கா - ஹன்ஸிகா  2 ஜோடி # அப்போ சிங்கம் 42 -னு டைட்டில் வெச்சா 42 ஜோடியா? அனுபவி ராஜா அனுபவி


-------------


10.டியர், எதுக்காக உங்க வீட்ல இருக்கற மல்லிகைப்பூ செடியை வெட்டுறே?


ஜெகன், நீங்க மோப்பம் பிடிச்சே ஆப்பம் சாப்பிடும் ஆள், எதுக்கு வம்பு?

-----------------------------


மதுரையில் இடைவிடாது நல்ல மழை பெய்கிறது http://pic.twitter.com/CpRvsMKZ


11. பேபி - டாடி, ஒரு கதை சொல்லுங்க.


 மீ - ஒரு ஊர்ல ஒரு ஃபிகரு..


மனைவி - யோவ்!!

------------------------------------

12. மனசு சரியில்லைனா பாய் ஃபிரண்டோட ஷாப்பிங் பண்ண போயிடனும். நம்ம பர்சும் காலி ஆகாது, அவனையும் மொட்டை அடிக்கலாம் - ஹி ஹி பை எ க்ரேசி கேர்ள்


--------------------------------

13. மிடி மேல  பிளேடு பட்டாலும், பிளேடு மேல மிடி பட்டாலும் கிழியப்போறதென்னவோ மிடிதான் # புது மொழி


-----------------------------

14.டி எம் ல கடலை போட்டாலும் சரி, டைம் லைன்ல கடலை போட்டாலும் சரி 2 பேருக்கு நல்லது நடந்தா எதுவுமே தப்பு இல்லை # ட்வீட்டுத்துவம்


-----------------------------

15. ஹோம்லியான ஃபிகர் என்பது வீட்டு வேலைகளை எல்லாம் பார்த்து கணவன் சொல்படி கேட்டு அடக்கமாக இருப்பதே ( 1980)


--------------------------------


நாங்கள் கூட்டணியிலிருந்து வெளியேறினால் மத்திய அரசு பலவீனமடைந்துவிடும்.அதனை நாங்கள் விரும்பவில்லை.

# சொல்ல மறந்த கதை

பலவீனமடைந்துவிட்டால் ஆட்சி கவிழ்ந்துவிடும். ஆட்சி கவிழ்ந்து விட்டால் ராசாவும்,கனிமொழியும் திரும்பவும் களி தின்ன வேண்டி வரும். புரிந்து கொள்ளுங்க மாக்களே நான் அப்படி சொல்ல முடியமா என்று.-k r vijayan


16.  ஃபாரீன் மாப்ளைதான் வேணும்னு அடம் பிடிச்ச பல ஃபிகருங்க வெளிநாடு போய் சக்களத்திங்க கூட சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க


---------------------------


17. ஆண்கள் எங்களுக்குள்ள எவ்ளவ் வேணாலும் கேவலமா பேசிக்குவோம், அடிச்சுக்குவோம், ஆனா ஒரு பொண்ணு  கிண்டலிங்க்னா ஒண்ணு கூடிடுவோம்


------------------------------


18. பொய்கள் பல அழகான பெண்களால் மெய்யென நம்ப வைக்க படுகின்றன.


-

----------------------------

19. டியர், டைம் பாஸ்க்காகவா என்னை லவ் பண்றீங்க ?

 போடி லூசு, அதுக்கு சினிமாக்கே போய்க்குவேனே? வேற ஒரு பர்ப்பஸ் இருக்கு ஹி ஹி


----------------------------------

20./ டியர், நீங்க பேசறது எதுவும் புரியவே மாட்டேங்குது, எப்படி உங்களை லவ் பண்ண?


மேரேஜ்க்குப்பிறகு நமக்குள்ள சண்டையே வராது, ஏன்னா எனக்கும் நீ பேசறது புரியலை

---------------------------------


Saturday, June 02, 2012

தடையறத்தாக்க - பர பர ஆக்‌ஷன் வித் ஓவர் வயலன்ஸ் - சினிமா விமர்சனம்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiK3T3ZT7NpoMg6zVjzdKysMaTYdQxeV_2rc5TTWZkiQ5ueK4Vc5LA1eewD4zws7YEsXFmS61fvvaTrNPYHp8nihbpKb_B_O4rOV2CjxF5kw1ZPxnRbsXsTKW9zAqLM5eEaIF53EL4xTA4/s640/thadaiyara-thaakka-latest-wallpapers-and-posters-1.jpg 

உதயம்,சத்யா வரிசைல ரொம்ப நாளுக்குப்பிறகு தமிழுக்கு வந்திருக்கும் ஆக்‌ஷன் படம் தான் இது. அருண்க்கு ஜாக்பாட் அடிச்சிருக்கு.. படத்தோட விமர்சனத்துக்கு போறதுக்கு முன்னால மென்மையான மனம் கொண்ட பெண்கள், கர்ப்பிணிப்பெண்கள் இந்தப்படத்தை பார்க்க முடியாத அளவு அதிக பட்ச வன்முறைக்காட்சிகளும், அந்த வன்முறைக்காகவே ஏ சர்ட்டிஃபிகேட் வாங்குன படம் என்ற எச்சரிக்கையோடு...... 


அண்ணன் , தம்பி 2 பேரு வில்லன்க..இவங்க பூர்வீகக்கதையே கொடூரம்,அம்மா நடத்தைல சந்தேகப்பட்டு அப்பாவே அம்மிக்கல்லால கொலை செய்ய மகனே அப்பாவை கொலை செய்யறார். அப்படி சின்ன வயசுலயே ரத்தம் பார்த்தவங்க பெரிய ஆள் ஆனா காந்தி கொள்கையா வளர்ப்பாங்க..? தாதா கம் ரவுடிங்க ஆகறாங்க.. 

இந்தியாவுலயே பெரிய கோடீஸ்வரரோட பெண்ணை கிட்நாப் பண்ணி பணம் பறிக்க செய்யும் முயற்சில அண்ணன் அந்த பெண்ணை ரேப் பண்ணிடறான்..அப்போ தம்பியோட அட்வைஸ் “அண்ணே, போதும் அவளை கொன்னுடலாம்”.. அண்ணனோட பதில்..”ஒரு டைம் பத்தாது, இவளை ஒரு பங்களாவுல வெச்சிருந்து அப்பப்ப யூஸ் பண்ணிக்கறேன்.. 


 இப்போ ஹீரோ.. அறிமுகம்.. அவர் தன் லவ்வரோட ரொமான்டிக்கா  இருந்தது பத்தாதுன்னு தன் ஏரியா லேடிக்கு ஒரு கந்து வட்டி தகறாருல உதவறாரு.. வில்லன் குரூப்க்கும் அவருக்கும் ஆகலை.. 1008 விஷால், விஜய் படங்கள்ல பார்த்த மாதிரி  தனி ஆளா 67 பேரை அடிக்கறாரு.. 



http://andhramasala.in/data/media/166/thadaiyara-thaakka-movie-stills-9.jpg



ஆரம்பத்துல அண்ணன்கார வில்லன் ஒரு ஃபிகரை ரேப்புனானே அவன்  யாரோலோ படு பயங்கரமா தாக்கப்பட்டு கோமா ஸ்டேஜ்ல ஹாஸ்பிடல்ல இருக்கான், தம்பிக்காரன் ஹீரோ மேல டவுட் பட்டு சேஸ் பண்றான். பரபரப்பான ஆக்‌ஷன் சீக்குவன்ஸ்ல  உலகத்துக்கே 3 வது ரீலில் தெரிஞ்ச சஸ்பென்சான கொலையை செஞ்சது ரேப் செய்யப்பட்ட ஃபிகர் தான் என்பது க்ளைமாக்ஸ்ல இயக்குநர் நமக்கு சொல்றார்..  அவ்ளவ் தான் கதை. 


ஆரண்ய காண்டம்க்குப்பிறகு ஆண்களால் அதிகம் ரசிக்கும் ஒரு விறுவிறுப்பான ஆக்‌ஷன் படம் கொடுத்தத்தற்கும், திறமை இருந்தும் அதிர்ஷ்டம் இல்லாத காரணத்தால் சூப்பர் ஹிட்டே கொடுக்காத  அருண்விஜய்க்கு இது நிச்சயம் ஒரு  ஹிட் படம் ஆக்கிய இயக்குநருக்கு வாழ்த்துகள். ( பாண்டவர் பூமி நல்ல படம் தான் ஆனால் வசூல் ரீதியா பெரிய அளவில் ஹிட் இல்லை)


ஹீரோ அருண் விஜய்க்கு ஆகிருதியான  உடம்பு என்பதாலும், அவர் முகமே இறுகிய நிலையில் இருப்பதாலும் ரொம்ப  ஈசியா கேரக்டர்;ல  ஃபிட் ஆகிடறார்.. ரொமான்ஸ், ஆக்‌ஷன், ஃபைட் , சேசிங்க் என படம் பூரா இவருக்கு வேலை அதிகம்.. நிறைவான நடிப்பு.. வெல்டன் அருண்..


ஹீரோயின் மம்தா மோஹன் தாஸ். பொட்டு வைக்காத ஃபிகர்ல ஒருவர். இந்தியாவுல பிறந்த பெண் இண்ட்டர்நேஷனல் ஃபிகரா ஆனாலும் நெற்றில ஒரு குங்குமப்பொட்டு வெச்சாத்தான் மங்களகரமா இருக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து என்பதால் அதை விடுங்க.. ,மற்றபடி பாப்பாவுக்கு கொடுக்கப்பட்ட கவர்ச்சி காட்டும் பணியில் இயக்குநர் சொன்னபடி செய்து காஆஆட்டி இருக்கிறார்.. அவர் வரும் காட்சிகளில் எல்லாம் காட்சி ரீதியாகவோ, வசன ரீதியாகவோ கிளு கிளு நிச்சயம்.. ( இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா./)

ரேப் செய்யப்பட்ட பெண்ணாக வரும் ரகுல் ப்ரீத்தியும் பொட்டு வைக்காத ஃபிகர் தான், ஆனா அவருக்கு அதிகம் காட்சிகள் இல்லை என்பதாலும், பெரும்பாலும் அவர் வரும் காட்சிகள் எல்லாம் இருட்டாவே இருப்பதாலும் அவர் பொட்டு வெச்சா என்ன? வைக்காட்டி என்ன என்ற எண்ணமே ஏற்படுது.. 

படத்தில் காமெடி மருந்துக்குக்கூட இல்லை. சீட்டின் நுனியில் அமர வைக்கும் அதிரடிகள்.  இருப்பதால் அது தேவையும் இல்லை




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbgbi59DYkcs9EA9dD6OH7E3_Qi4Sx1Bek4VDxKxmIa9WhSXexsYqGO8FwD0TglOqwmTfWUEK5K8LUQ4PfvanBcBm6M2MNH_CIFHaFagqNli4blYNGgS6WLX8McXLGoRj0F6ywCh1DjT0/s1600/Thadaiyara+Thaakka+Movie+Stills+Mycineworld+Com+(7).jpg


இயக்குநர் பாராட்டு பெறும் காட்சிகள்


1. ஹீரோ, ஹீரோயின்  2 பேரும் ஹோட்டல்ல சாப்பிட வர்றாங்க.. ஹீரோ ஆர்டர் பண்ணிட்டு ஹீரோயின் கிட்டே பாத்ரூம்  போறேன்னு சொல்லிட்டு பாத்ரூம் வந்து அங்கே இருந்து  ஜம்ப் பண்ணி பின்பக்கம் வந்து முகத்தை மறைச்சு வில்லன் ஆள்ங்களை அடிச்சு துவம்சம் பண்ணி பின் நல்ல பிள்ளை மாதிரி ஹீரோயின் கூட உக்காந்து பேசுவது செம சீன்.. தீனா படத்தில் தல ஆக்‌ஷன் நினைவு படுத்துத்து


2. ஹீரோயினை அல்ட்ரா மாடர்ன் கேர்ளாக காட்டவோ, அல்லது வித்தியாசமான பெண்ணாக காட்டவோ இயக்குநர் அவரை வெட்கத்தை கேட்டால் கவர்ச்சியைத்தருவேன் என்று சொல்வது மாதிரி கேரக்டராக பயன்படுத்திட்டார்.. ஹீரோ படம் பூரா கம்முன்னு இருந்தாலும் ஹீரோயின் அப்பப்ப ஹீரோவை கில்மாக்கு  தூண்டி விட்டுட்டே இருப்பது புதுசு.. சொகுசு ரவுசு.. 


3. ஹீரோயினுக்கு ஹீரோ அழகிய கலர் கலரான பட்டர்ஃபிளை டிசைடு பாண்ட்டீஸ் கிஃப்ட் பார்சல் வாங்கித்தருவதும், ஊடலான பொழுதுகளில் ஃபோன் பண்ணி இன்னைக்கு என்ன கலர் பட்டர்ஃபிளை எனக்கேட்டு கிளுகிளுக்க வைப்பதும் செம. ( காதலிக்கு ரோஸ், வாட்ச், கர்ச்சீஃப் வாங்கித்தர்ற காலம் மலை ஏறிப்போச்சுங்கோவ்)


4. காதலிக்கு முன் ஃபிரண்ட்சை விட்டுத்தராத ஹீரோவின் குணமும், அதைக்கண்டும் காணாமல் இருப்பது போன்ற ஹீரோயினின் அனுசரிப்புத்தனமும், அண்டர்ஸ்டேண்டிங்கும் கவிதை.. அது சம்பந்தமான காட்சிகளில் இயக்குநரின் தொடுகை.. ( அதான்பா டைரக்‌ஷன் டச்)


5. பல காட்சிகளில் விறுவிறுப்பான பதை பதைப்பு .. டெம்போ கூட்டுவதில் இயக்குநர் கை தேர்ந்தவரா இருக்கார்.. 


6. பூந்த,மல்லி புஷ்ப வல்லி டப்பாங்குத்து பாட்டு செம கலக்கல் டேன்ஸ் 





https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjghg8mqWyqcsOSvCbrub3KI6gJEJIZJpGBfQ3bU_2c12Dzj28mbr6JeVjUffZkY03IrSXiqSOXYofcVFnnXYws3s1AArOm5kiz2csi_CKCxW9SzoZUuwxx2aDBBouPTFKL66ZCxtkYtfc/s1600/Mamta+Mohandas+In+Thadaiyara+Thaakka+Stills+Mycineworld+Com+%252815%2529.jpg


இயக்குநரிடம் சில கேள்விகள்



1. வில்லன்க தண்ணி அடிக்கற சீன்ல லாங்க் ஷாட் யூஸ் பண்ணக்கூடாதா? க்ளோசப்ல சரக்கை காட்றதும், மிக்சிங்கை விலாவாரியா காட்றதும் உவ்வே.. 


2. படத்துல எதுக்கு அதிக பட்ச இருட்டும், வலிய திணிக்கப்பட்ட மணிரத்னம் டைப் உள்வாங்கும் வசனங்களும்,.. சராசரி ரசிகனுக்கு புரியாது ( அந்த சராசரி ரசிகன் நான் தான் )


3. ஹீரோயின் வீட்ல யாரும் இல்லை, அம்மா மார்க்கெட் போயிருக்காங்க.. ஹீரோயின் ஹால், வாசல் கதவை பெப்பெரப்பேன்னு திறந்து போட்டுட்டு பாத்ரூம்ல குளிக்குது./. எந்த ஊர்ல அப்படி குளிக்கறாங்க? ( ஒரு ஜெனரல் நாலெட்ஜ்க்காக கேட்கறோம் ஏட்டய்யா )ஹீரோ நேரா உள்ளே வந்துடறாரு
( காட்சி கிளுகிளுப்பா இருந்தாலும் தமிழன் லாஜிக் பார்ப்பான் ஹி ஹி )


4. ஹீரோ 2 சீன்ல ஹோட்டல்ல ஒரு இங்க்லீஷ் ஃபார்ம் ஃபில்லப் பண்றாரு.. அவர் சாஃப்ட் வேர் கம்பெனி  டீலிங்க் எல்லாம் பண்றாரு. அப்படிப்பட்டவர்க்கு சாதாரண இங்க்லீஷ் வார்த்தையான சாரி (SORRY) என்பதற்குக்கூட ஸ்பெல்லிங்க் தெரியாதா? ஒரு சீன்ல தன் ஃபிரண்ட்ஸ் 5 பேர்ட்ட சாரிக்கு ஸ்பெல்லிங்க் என்ன?னு கேனத்தனமா கேட்கறார். அந்த லூசுங்களும் தெரியாதுன்னு சொல்லுது.. ஹய்யோ அய்யோ ( காமெடி சீன்னு நினச்சுட்டார் போல )


5. இடது கைப்பழக்கம் உள்ள ஹீரோ படத்துல பல காட்சிகளில் அதை மெயிண்டெயின் பண்றார்.. அவர் வாட்ச் கட்டறது கூட வலது கைல தான். ஆனா ஒரு சீன்ல அதாவது படம் போட்ட 57 வது நிமிஷத்துல அந்த போலீஸ் ஸ்டேஷன் சீன்ல , அப்புறம் ஒரு ஃபைட் சீன்ல  எல்லாரையும் போல இடது கைல தான் கட்டி இருக்கார்



http://www.teluguone.com/photos/uploads/Tamil%20Movies/Thadaiyara%20Thaakka%20Movie%20Stills/Thadaiyara_Thaakka_Movie_Stills17.jpg


6. வில்லன்க ஆள்ங்க ஒரு பாருக்கு வர்றாங்க, அங்கே ஒருத்தனை அடையாளம் காட்டனும்.. அதோ அந்த தாடி வெச்சவன் தான்னு சொன்னா வேலை முடிஞ்சது.. அவன் ஏன் கை நீட்டி காட்டிக்கொடுக்கனும்? அவன் பார்த்தா எஸ் ஆக மாட்டானா? 


7. ஒரு கிரிட்டிகலான சிச்சுவேஷன், ஹீரோ ஆட்டோல ஹீரோயின் கூட மிட் நைட்ல போறார்.. அவனுங்க வில்லன்க இருக்கற இடத்துல ஆட்டோவை ஓட்டி ஒரு சந்துல ஆட்டோவை நிறுத்தி ஓடுறாங்க.. இப்போ 24 பேர் வர்றாங்க .. ஆல்ரெடி ஹீரோ ஃபைட் எல்லாம் போட்டு வீரன்னு நிரூபிச்சாச்சு, இப்போ கூட காதலி. இந்த டைம்ல அவர் எவ்ளவ் முன் ஜாக்கிரதையா , வேகமா ஜாக்கிசான் மாதிரி சுறுசுறுப்பா ஃபைட் போடனும்? அதை விட்டுட்டு வில்லன் அடியாளுங்க கிட்டே வந்து 12 தடவை அடிச்சு பின் எம் ஜி ஆர் மாதிரி உதட்டுல ரத்தம் பார்த்த பின் ஃபைட் போடுவது ஓவர்


8. ஒரு சீன்ல ஹீரோ, ஹீரோயின் கார்னர் பண்ணப்படறாங்க, வில்லன் ஆளுங்க 64 பேர் இருக்காங்க , எல்லாரும் அரிவாளோட , தனி ஆளா ஹீரோ எந்த பாதிப்பும் இல்லாம ஃபைட் போட்டு ஜெயிக்கிறார், ஓக்கே ஹீரோயிஷம் தான். ஆனா வில்லன் ஆளூங்க அவ்ளவ் தத்தியா? ஹீரோயின் தேமேன்னு நிக்குது. 64 பேர்ல 4 பேரு ஹீரோயினை பணயப்பொண்ணா பிடிச்சா ஹீரோவை அடக்கலாமே? ரமணா டயலாக் மாதிரி இங்கே அடிச்சா அங்கே வலிக்கும் பாலிஸி.. அதை ஏன் யாரும் ட்ரை பண்ணலை?


9. கொலை செய்ய உபயோகப்படுத்துன கிரிக்கெட் பேட்டை  ஓடும் காரில் பார்க்கும் அந்த பெண் சாதாரணமா ஜன்னல் வழியா வெளில வீசினா மேட்டர் ஓவர்.. அவர் ஏன் மெனக்கெட்டு கார் பேனட்டுக்குள்ள வைக்கனும்? ஹீரோவை மாட்டி விடனும்கற எண்ணம் எல்லாம் இல்லை. ஏன் ரிஸ்க் எடுக்கறார்?



10. க்ளைமாக்ஸ்ல எல்லாம் சுபம்கற வேளைல அந்த பொண்ணு ஏன் தற்கொலை பண்ணிக்குது?  வில்லனை கொலை செய்யும் துணிவு உள்ள பெண், கோடீஸ்வரி  ஏன் அந்த முடிவை எடுக்கனும்? கதைக்கு அந்த முடிவு எந்த அளவில் யூஸ்?



http://3.bp.blogspot.com/_0vmsnzIJ81w/SwJBqbe9gpI/AAAAAAAADhE/rsos0mnOf7g/s1600/bodies21.jpg


மனதில் நின்ற வசனங்களில் நினைவில் நின்றவை 


1. சார்.. ஓப்பனா சொல்றேன், எனக்கு சுத்தி வளைச்சுப்பேசத்தெரியாது,உங்க பொண்ணை லவ் பண்றேன்,ஓக்கேன்னா சொல்லுங்க, இல்லைன்னா வேற பெண்ணை நான் மேரேஜ் பண்ணிக்கறேன், ஐ ஆம் பிராக்டிகல்


2.  எல்லாருக்கும் பார்ட்டி அரேஞ்ச் பண்ணி இருக்கேன்..


 ரொம்ப தாங்க்ஸ் டா..


 ஆனா செலவு உன்னுது



3. அவன் ஒரு பொம்பளையை வெச்சிருக்கானாமே? நீ அவளை பார்த்திருக்கியா?


யா யா, இந்த ஏரியாவுலயே அப்படி ஒரு ஃபிகரை பார்த்திருக்கவே முடியாது


4. நல்ல ஜோசியரா பார்த்து ஜாதகம் ரெடி பண்ணுடா, அப்பா கேட்கறார்


நாம பண்றதே ஃபிராடுத்தனம்.. இதுல நல்ல ஜோசியர் வேற வேணுமாக்கும்?


5. நான் பாத்ரூம்ல இருந்து வெளில வந்து அரைகுறையா நிக்கறேன், அவன் என்னை சுத்தமா கண்டுக்கவே இல்லைடி.. நான் என்ன அவ்லவ் சப்பை ஃபிகரா?நம்ம ஊரு பசங்க சுத்த சடையனுங்க டி. அவ்ளவ் கிளுகிளுப்பான போஸ்ல ஆலை பார்த்தும் ஏதும் தோண மாட்டேங்குதே ?

 ஓ, உன் பிரச்சனை  இப்போ புரிஞ்சுடுச்சு, அவன் உன்னை சீன் பார்த்தது கூட தேவலை, ஆனா அவன் உன்னை ஏதும் செய்யலை.. அதானே உன் ஆதங்கம்?



6. டியர், இந்த ஊர்லயே அவ மாதிரி ஃபிகர் யாரும் இல்லைனு பேசிக்கறாங்க, ஆனா அவளை பார்க்கவே முடியறதில்லை, எங்கே அவ வெளில வந்தாத்தானே?

அப்போ நீ ட்ரை பண்ணி இருக்கே?


7. சரி.. லட்டு எப்படி?

 உன்னை விட டேஸ்ட் கம்மிதான்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgsqdb3nAdDeiHetCCgE9JcTewTXxAAUSez8BRdySjyKzwOgZMt8uAhzBXWGcszy8ORRz8EnPEJBmg2RslQp4VeltOvOQfIXtnevtFZEviSTu7tgjPKM8kqm3DMv76AW3_FIOjvJPXJDpA/s1600/Thadaiyara+Thaakka+Movie+First+Look+Mycineworld+Com+(3).jpg

8. இன்னைக்கு பச்சைக்கலர் பட்டர் ஃபிளைடா..

 வாட்? புரியலை?

 மண்டு, நீ கிஃப்டா குடுத்தியே பாண்ட்டீஸ்..





9. என்னடா அரை மணீ நேரமா அந்த பங்களாவை வாட்ச் பண்ணிட்டு இருக்கோம். அவ வெளில வந்த பாட்டைக்காணோம்?

அட..ச்சே இவ வேலைக்காரிடா..

 இவ கூட 10 வருஷம் முன்னே  செம ஃபிகரா நல்லா தான் இருந்திருப்பா..


10. டேய்.. இந்த லட்டை எந்தகக்டைல வாங்குனே? கேவலமா இருக்கு.. லாலா கடைல வாங்கி இருக்கலாம்.

 ஹி ஹி அடப்பாவி, என் ஆள் செஞ்சதுடா..

 பொய் சொல்லாத.. ஏதோ மட்டமான கடைல வாங்கி இருப்பே..


11. அவ அப்பன் முகம் மாதிரி இருக்கு.. அவ செஞ்ச லட்டும்

 நான் என்ன இல்லைன்னா சொன்னேன்.. அவ இருக்கறப்ப அப்படி சொல்லலாமா?

 சுத்தம் , கண்ணா கொஞ்சம் திருபிப்பாரு, உன் ஆள் நிக்கறா


12. ஸாரிக்கு உனக்கு ஸ்பெல்லிங்க் தெரியுமா?

 சாரி தெரியாது


13. பாய் ஃபிரண்ட்ஸ் கூட நாம ஃபைட் போட்டா நாமா வலியனா போய் பேசக்கூடாது, கெத்து போயிடும்..


14. டேய், இங்கே பாரு, நாம 2 பேரும் பெட்ரூம்ல இருக்கோம், அம்மா கிச்சன்ல இட்லி ஊத்தறாங்க, அவங்க இங்கே வர 20 நிமிஷம் ஆகும், வேணூம்னா என்னை யூஸ் பண்ணிக்கோ, எனக்குத்தேவை இல்லை.. ஹி ஹி உனக்கு வேணும்னா......


15. உன் ஃபிரண்ட் எங்கே?ன்னு சொல்லிடு.. இல்ல.. உன்னை ஒரு பொம்பள கூட யூஸ் பண்ண முடியாதபடி பண்ணிடுவோம்..

 ஆல்ரெடி நான் அப்படித்தாங்க இருக்கேன் ஹி ஹி 



6.


எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 43


எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - நன்று 




http://masscinema.in/wp-content/gallery/thadaiyara-thaakka-movie-stills/thadaiyara-thaakka-movie-stills-43.jpg


 சி.பி கமெண்ட் - ஆக்‌ஷன் ரசிகர்கள், ஆண்கள், த்ரில்லர் பிரியர்கள் பார்க்கலாம். 18 வயதுக்கு உட்பட்டவர்கள், மாணவ மாணவிகள், குழந்தைகள் மன ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் காட்சிகள் அதிகம் என்பதால் தவிர்க்கவும்

 ஈரோடு தேவி அபிராமி, ஸ்ரீகிருஷ்ணா, ஸ்ரீநிவசா என 3 தியேட்டரில் ஓடுது..

50 நாள் கேரண்டி..  ஏ , பி, சி என எல்லா செண்ட்டர்களிலும் வசூலை அள்ளிடும். 

 நான் தேவி அபிராமில படம் பார்த்தேன்





http://media.onsugar.com/files/2011/02/08/3/1440/14400286/f4/mamta-01.jpg


டிஸ்கி -

மனம் கொத்திப்பறவை - சினிமா விமர்சனம் http://www.adrasaka.com/2012/06/blog-post_01.html

லேடீஸை அதிகம் கலாய்ப்பது ஏன்? சந்தானம் பேட்டி @ விகடன்

1.  ''ஓ.கே... தியேட்டர்ல நீங்க வர்றப்ப எல்லாரும் சிரிக்கிறாங்க. ஆனா, நாகேஷ், சந்திரபாபு மாதிரி உங்க காமெடி காலாகாலத்துக்கும் நிலைச்சு நிக்குமா?'' 


''அட! என்னங்க குரு... இப்படி கோக்குமாக்கா மாட்டிவிடுறீங்க? வெல்... இதுக்கு நான் என்ன சொல்ல? ஆங்... எனக்கு அப்புறம் வரப்போற காமெடியன்கள் பின்னிப் பெடலெடுத்தா, நம்ம காமெடி மொக்க தட்டிரும். வர்ற பார்ட்டிங்க கொஞ்சம் மொக்கையா இருந்தாங்கன்னா, நம்மளது அப்படியே தூக்கலா நிக்கும்... கிரேட் எஸ்கேப். அதனால, அடுத்த ஜெனரேஷனைப் பொறுத்துதான் நம்ம காமெடி ஜெனரேட்டரோட லைஃப் இருக்கு. அதனால, அதுவரைக்கும் வொர்ரி பண்ணிக்காம, இந்தத் தலை முறையைச் சிரிக்கவெச்சுட்டுப் போயிருவோமே.''




2. ''இப்போதைக்கு காமெடியில் உச்சக்கட்ட கலைஞன் வடிவேலு என்பேன். உங்கள் கருத்து என்ன?'' 


 ''எனக்குத் தெரிஞ்சு வடிவேலு, விவேக் ரெண்டு பேருமே உச்சக்கட்ட கலைஞர்கள்தாங்ணா.''



3.  ''சில சமயம் பெண்களைப் பற்றி சற்று ஓவராக கமென்ட் அடிக்கிறீர்கள். ஏற்றுக்கொள்கிறீர்களா?'' 


''அக்காவா, தங்கச்சியானு தெரியலை...  கோபத்துல எதுனா சாபம் கீபம் விட்ராதீங்க. அப்புறம் அடுத்த பிறவியில் கழுதையா பொறந்திரப்போறேன். 'சில சமயம்’னு சொல்றதைவிட, 'சில பெண்களை’ கமென்ட் அடிக்கிறேன்னு சொல்லலாம். படத்துல ஹீரோயின், அம்மானு நிறைய கேரக்டர்கள் இருப்பாங்க. அவங்க எல்லாரையும் மரியாதையாத்தான் பேசுவேன். கூட நடிக்கிற சில கேரக்டர்களை மட்டும்தான்  கலாய்ப்பேன்.


 அதை அந்த இடத்துல செஞ்சே ஆகணும். இல்லைன்னா, அது சாமி குத்தம் ஆகி, ஏவி.எம். ஸ்டுடியோ பிள்ளையார் கண்ணைக் குத்திருவாரு. அதையும் இயக்குநர்கள் வேண்டி விரும்பிக் கேட்டுக்கிறதாலதான் செய்றேனே தவிர, தனிப்பட்ட விருப்பம்லாம் கிடையாது. பெண்களை என் கண்களைப் போல மதிக்கிறவன்ங்க நான்!''



4. ''உங்கள் திரை வாழ்க்கைக்கு உதவியவர்களில் மறக்க முடியாதவர் யார்... ஏன்?'' 


''முதல்ல என் அம்மா. எனக்கு புத்தி தெரியாத வயசுலயே சின்னக் குழந்தையா இருக்கும்போது, டான்ஸ் எல்லாம் ஆடுவேன்னு சொல்வாங்க. ஏதாவது வேணும்னு அடம்பிடிச்சு அழுதிருப்பேன். அதை டான்ஸுனு நினைச்சுட்டாங்கனு நினைக்கிறேன். என்னை ஸ்கூல் ஆண்டு விழா டான்ஸ்ல சேர்த்துக்கணும்னு ரொம்ப கஷ்டப் பட்டு மிஸ்கிட்டல்லாம் சொன்னாங்க.


 அப்ப சூர்யானு ஒரு மிஸ்தான் எனக்கு ஸ்கூல்ல டான்ஸ் ஆட வாய்ப்பு தந்தாங்க. எப்படி ஆடணும்னு சொல்லியும் தந்தாங்க. டிராமா எழுதிக்கொடுத்து நடிக்கவெச்சாங்க. அடுத்து, சின்னத்திரைக்கு அதாவது, விஜய் டி.வி-யில் வாய்ப்பு வாங்கித் தந்த பாலாஜி, ராம்பாலா. என் டி.வி. ஷோக்களைப் பார்த்துட்டு, பெரிய திரைக்கு என்னை அழைச்சுட்டு வந்த சிம்பு. இவங்க எல்லாருமே என் வாழ்க்கையில முக்கியமானவங்க, மறக்க முடியாதவங்க.''



5. ''லொள்ளு சபா ஷூட்டிங் காமெடி ஏதாவது சொல்லுங்களேன்?'' 


''லொள்ளு சபாவுல எடுத்ததைவிட, நீங்க பார்த்ததைவிட, ஷூட்டிங் ஸ்பாட்ல நடந்த காமெடி அள்ளும். ஒரு தடவை மனோகருக்கு என்னை எதிர்த்துப் பேசுற மாதிரி ஒரு டயலாக். 'உன்னை எப்படி எல்லாம் உயிருக்குயிரா நான் வளர்த்தேன். எல்லாத்தையும் மறந்து என்னைத் தூக்கிப்போட்டுட்டுப் போயிட்டியே... ஏன்?’ இவ்ளோதான் டயலாக். எவ்வளவோ சொல்லிக்கொடுத்தும், அரை நாள் ரிகர்சல் பார்த்தும் அந்த டயலாக்கை அவர் பேசவே இல்லை. 'சரஸ்வதி சூலத்தை எடுத்து நாக்குல குத்தி னாக்கூட இவரால பேச முடியாது. 


அவருக்கு அவ்வளவு எல்லாம் வேணாம். டயலாக்கைக் கம்மி பண்ணுங்கப்பா’னு சொல்லிட்டார் டைரக்டர். 'உன்னை எப்படி எல்லாம் வளர்த் தேன், இருந்தாலும் தூக்கிப்போட்டுட்டீயே, ஏன்?’னு வசனத்தைக் குறைச்ச£ங்க. ஹூம்... அதுவும் வரலை. 'என்னை மதிக்காமத் தூக்கிப்போட்டுட்டீயே... ஏன்?’னு அதையும் கம்மி பண்ணினாங்க.


 முன்னாடியை விட ரொம்பத் திணற ஆரம்பிச்சுட்டார் மனுஷன். எல்லாரும் கொலவெறி ஆயிட் டோம். 'சரி விடு, வெறும் 'ஏன்?’னு மட்டும் கேக்கச் சொல்லு’னு சொல்லிட்டு டைரக்டர், 'ஆக்ஷன்’ சொன்னார். நான் திரும்பி நின்ன தும், 'ஏன்?’னு கேக்குறதுக்குப் பதிலா... 'எதுக்கு?’ன்னார் மனோகர். டைரக்டர் சேரைத் தூக்கி அடிச்சுட்டார். அவங்கவங்க கையில எதையெதை வெச்சிருந்தாங்களோ, அதாலயே அவரை அடிக்க வந்துட்டாங்க.


 'யோவ்... காலையில இருந்து ஏன்... ஏன்னு ஆயிரத் தெட்டு வாட்டி சொல்லியாச்சு. கடைசியில 'எதுக்கு?’னு கேக்குறியே... உனக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதாய்யா?’னு நாள் முழுக்கப் பரேடு. இந்த மாதிரி நிறைய இருக்கு. அடுத்தடுத்த எபிசோடுல பார்ப் போம்.''



6. ''உங்கள் குரல் உங்களுக்கு ப்ளஸ் பாயின்ட்டா... மைனஸ் பாயின்ட்டா?'' 


''கண்டிப்பா ப்ளஸ் பாயின்ட்தாங்க. வாயுள்ள புள்ள பொழச்சிக்கும்னு அப்போ சொல்வாங்க. ஆனா, இப்போலாம் வாய்ல ஆம்ப்ளிஃபயர் வெச்சு முக்குக்கு முக்கு லவுட் ஸ்பீக்கர் கட்டிக் கதறுனாத்தான், அந்தப் புள்ளைக்குக் குடிக்கத் தண்ணிகூடக் கிடைக்கும். அப்படி இருக்கு இப்போ டிரெண்ட். 'ஒரு கல் ஒரு கண்ணாடி’ல 'ஹாய் டியூட்’னு என் ஒரு போன் வாய்ஸுக்கே தியேட்டர்ல கிளாப்ஸ் அள்ளுச்சே தலைவா! 'வாய்ஸுக்கு கிளாப்ஸ் வர்றதை இப்பதான் பாக்குறோம்’னாங்க. அந்த அளவுக்கு என் வாய்ஸ் ரீச் ஆகியிருந்தா, அது ப்ளஸ்தானே சரவணன்?''




7. '' 'நண்பன்’ படத்தின் மூணு ஹீரோவில் ஒருத்தரா உங்களை நடிக்கக் கூப்பிட்டு இருந்தா, யாரோட ரோல் உங்க சாய்ஸ்?'' 


''ஜீவா கேரக்டர்! அந்தப் படத்தை இந்தியில பார்த்தப்பவும் சரி, இப்ப தமிழ்ல பார்த்தப்பவும் சரி, அந்த கேரக்டர்தான் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. சென்டிமென்ட் ப்ளஸ் காமெடி ரெண்டுமே கலகல காக்டெய்லா இருக்கும் அந்த கேரக்டர்!''




8.''உங்களுக்குப் பிடித்த தமிழ் காமெடி நடிகர்கள் யார் யார்?'' 


 ''நல்ல காமெடி சென்ஸ் உள்ள காமெடி நடிகர்கள் மத்த லாங்குவேஜைவிட தமிழ்லதான் அதிகம். அதனால, இவங்க யாரையும் ஸ்கிப் பண்ண முடியாது. பட், என்னையும் மதிச்சு நீங்க இந்தக் கேள்வி கேட்டுட்டீங்க... தங்கவேல் சார், கவுண்டமணி சார் காமெடி ரொம்பப் பிடிக்கும். அவங்க டயலாக் டெலிவரி, டைமிங் சென்ஸ் எல்லாம்... மக்கா சான்ஸே இல்ல! அதுலயும் 'கல்யாணப் பரிசு’ படத்துல தங்கவேலு சாரோட ஒவ்வொரு சேட்டையும் எக்ஸ்பிரஷனும்... எக்ஸ்பிரஸ் ரயில்ல ஏறித் துரத்தினாக்கூட அவர்கிட்ட நெருங்க முடியாது!''




9.''தமிழ் சினிமாவில் உங்களுக்குப் பிடித்த ஹீரோ, ஹீரோயின் யார்?''



''பிடிச்ச ஹீரோ... ரஜினி சார். பிடிச்ச ஹீரோயின்... சிம்ரன்.''



10. ''உங்கள் முன்னோடிகள்?'' 


''என் உறவினர்கள்தான். தெருவுல இருக்குற சித்தப்பா, பெரியப்பா, அண்ணன்னு என் முன்னோர்கள்தான் என் முன்னோடிகள். இவங்ககிட்ட இருந்துதான் நிறைய புதுப்புது வா£த்தைகள், கேரக்டர்களைப் பிடிச்சுருக்கேன் நான். 'அப்பாடக்கர்’னு சொன்னது என் மாமா ஒருத்தர்தான். ஒருமுறை ஒரு நாய் அவரைப் பார்த்து குறைச்சப்ப, அந்த நாயைப் பார்த்து அவர் கேட்டதுதான், 'நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா’ங்கிறது. இந்த மாதிரி புதுப்புது விஷயங்கள் எல்லாம் அவங்கள்ட்ட இருந்துதான் எடுப்பேன்.


 'என்னை என்ன அகாதுகானு நினைச்சியா?’னு நான் பேசினதுக்கூட அப்படித்தான். 'எப்பப் பார்த்தாலும் சித்தப்பாவைக் கூப்பிட்டு சபையில அசிங்கப்படுத்துறதையே வேலையா வெச்சிருக்கீங்களே, என்னை என்ன அகாதுகானு நினைச்சிங்களாடா?’னு ஒருவாட்டி மாமா சொன்னதை ஞாபகம் வெச்சு டயலாக் ஆக்கினேன். 'நம்ம தம்பியைப் பேட்டி எடுக்க வர்றாங்க. ரோடெல்லாம் ஒரே குப்பையா இருக்கே’னு மப்பு ஏத்திக்கிட்டு ரோட்டையே கூட்டினார் இன்னொரு சித்தப்பா. இவங்கள்லாம்தான் என் முன்னோர்கள்; முன்னோடிகள்.''


- அடுத்த வாரம் 


''ஏன் பாஸ் ஃபேமிலியைக் கண்ணுலயே காட்ட மாட்டீங்குறீங்க? பேச்சுலர்னு இமேஜ் மெயின்டெய்ன் பண்ணணும்னு நினைப்பா? அவ்வளவு பெரிய அப்பாடக்கரா நீங்க?'' 


' ''அறை எண் 305-ல் கடவுள்’ படத் தில் ஹீரோ ரோலில் நடித்தீர்கள். ஏன் அதைத் தொடரவில்லை?'' 


''எனக்கு என்னமோ உங்களை ஸ்க்ரீன்ல பார்க்குறப்போ பஜனைக் கோயில் தெரு முக்குல அடகுக் கடை வெச்சிருக்கிற பஜன் லால் சேட்டாட்டமே இருக்குது. யாரும் அப்படி உங்களைச் சொல்லி இருக்காங்களா?'' 


டிஸ்கி - 1 


- சந்தானம் பேட்டி பாகம் 1 படிக்க  http://www.adrasaka.com/2012/05/blog-post_2192.html

 சந்தானம் பேட்டி பாகம் 2 படிக்க http://www.adrasaka.com/2012/05/blog-post_4450.html


சந்தானம் பேட்டி பாகம் 3 படிக்க http://www.adrasaka.com/2012/05/2.html

சந்தானம் பேட்டி பாகம் 4 படிக்க -http://www.adrasaka.com/2012/06/blog-post_8565.html
 



Friday, June 01, 2012

மனம் கொத்திப்பறவை - சினிமா விமர்சனம்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgS3g5l6f9OQaFyb5wAegsrJLqEjCu2lA52mz8iZDvCC9MiYXP1vlMNy_fMgQ7qHBsqvQL4zc1LViGLQdwjLZHQu6GErrMeHq7R34UvrKW2E2-I63Hv7Vo0Wa1FWtdaKgv9sfzgyIDEf-4/s1600/Manam+Kothi+Paravai+Mp3+Songs+1.jpgபடத்தோட விமர்சனத்துக்குள்ளே போறதுக்கு முன்னே தன்மானம் உள்ள எந்த ஆணும் செய்யத்தயங்கும் ஒரு காரியத்தை படத்துல செஞ்ச ஹீரோவின் செயலுக்கு ஹீரோவையும், இயக்குநரையும் நறுக்னு ஒரு கேள்வி கேட்டுக்கறேன்.. காதல், அல்லது அன்பு என்பது ஒரு பெண்ணிடம் இருந்து தானா வரனும், கெஞ்சியோ ,அவ கால்ல விழுந்தோ வரக்கூடாது.. ஒரு சீன்ல ஹீரோ ஹீரோயின் கால்ல விழறாரு.. காதலிக்க சொல்லி.. உஷ் அப்பா முடியல..சரி கதைக்கு வருவோம்


ஹீரோவும் , ஹீரோயினும் சின்ன வயசுலயே க்ளாஸ்மேட்ஸ்.. பிளஸ்டூ முடிஞ்சு லீவ்ல ஊருக்குப்போறப்ப தான் ஹீரோவுக்கு அவ மேல காதல் இருக்குன்னே தெரியுது.. அப்புறம்  அவ ரிட்டர்ன் வந்ததும் பம்மறார். பழகறார்.. ஃபிரண்ட்ஸ் கிட்டே 2 பேரும் லவ்வறதா கலர் கலரா ரீல் விடறார்.. இது சகஜம் தான்... நம்மாளுங்க ஃபிகர்ட்ட சும்மா கடலை தான் போட்டிருப்பாங்க.. அதுவும் நீ எத்தனாவதும்மா படிக்கறே?அப்டித்தான் கேட்டிருப்பாங்க, ஆனா ஃபிரண்ட்ஸ் கிட்டே  எல்லாமே முடிச்சுட்ட மாதிரி பீலா விட்டுக்குவாங்க.. 


ஹீரோயினுக்கு சின்னத்தம்பி படத்துல வர்ற மாதிரி கேவலமான முரட்டு அண்ணன்க இருக்காங்க.. ஹீரோயினுக்கு மேரேஜ் வேற பக்கம் ஃபிக்ஸ் ஆகுது.. ஃபிரண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து ஹீரோயினுக்கு மயக்க மருந்து கொடுத்து மண்டபத்துல இருந்து கடத்திட்டு கார்ல ஹீரோவோட எஸ் ஆகறாங்க..இடைவேளை.. 

 மயக்கம் தெளிஞ்சு எழுந்த ஹீரோயின் ஆர்ப்பாட்டம் பண்றாங்க, நான் உன்னை லவ்வே பண்ணலை, எங்க வீட்டுக்கு போகனும்கறாங்க.. அதுக்குப்பிறகு என்ன நடக்குது? யாரெல்லாம் மாத்து வாங்கறாங்க... தியேட்டர் ஏன் ரிலீஸ் அன்னைக்கும் காத்து வாங்குது இதெல்லாம் படம் பார்த்து தெரிஞ்சுக்குங்க.. 



http://www.tamilactresspics.com/new-gallery/plog-content/images/tamil-movies/manam-kothi-paravai/manam_kothi_paravai_movie_stills-17.jpg

 ஹீரோ சிவகார்த்திகேயன்க்கு இதுதான் முழு ஹீரோவா நடிக்கும் முதல் படம், அட்டர் ஃபிளாப் ஆன 3 படத்துல ஜஸ்ட் காமெடி தான்.வியாபார ரீதியா சரியா போகலைன்னாலும் மேக்கிங்க்ல நல்ல பேர் வாங்கின மெரீனா வில் சைடு ஹீரோ மாதிரி.. இவரோட ஆக்டிங்க் பற்றி சொல்லும்போது எஸ் வி சேகர் பற்றி சொல்லனும்.. அவர் போடும் நாடகங்களில் அவரது ஆளூமை பிரமாதமா இருக்கும்.. டைமிங்க் காமெடி பின்னி எடுக்கும்.. ஆனா படத்துல ஹீரோவா நடிக்கறப்ப ஏனோ பொம்பள சிலுக்கு அப்டினு பேர் எடுத்து கொஞ்சம் பம்முவாரு.. 

 அந்த மாதிரி சிவ கார்த்திகேயன் அது இது எது புரோகிராம்ல அலப்பறை பண்றதையும், ஸ்டேஜ்ல தொகுப்பாளரா வர்றப்ப பட்டாசைக்கிளப்பும் அவர் ஆளுமையையும் பார்த்துட்டு  படத்துல ஹீரோவா பார்க்கறப்ப ஒரு மாற்று கமி தான்.. தேவையே இல்லாம வழியறது, பம்மறது  இதெல்லாம் குறைச்சுக்கனும்..மற்றபடி யதார்த்தமான நடிப்புக்கான சாத்தியக்கூறுகள் இவரிடம் அதிகமாவே இருக்கு.. நல்ல எதிர்காலம் அமைய வாழ்த்துகள்.. 

 ஹீரோயின் ஆத்மியா ஒரு கேரளா ஃபிகர் என்று பட்சி சொல்லுது, 70 மார்க் ஃபிகர். மீரா ஜாஸ்மின் முகம், உதடு, பூ விழி வாசலிலே ஹீரோயின் கார்த்திகா புருவம், கூந்தல் ரெண்டையும் மிக்ஸ் பண்ணினா பாப்பா தான்.. நல்ல கலர் தான்.. ஆனா பாப்பா அழும்போதும், கோபப்படும்போதும் சுத்தமா எடுபடலை.. பாப்பா எப்போ லவ் பண்ணுது? எப்போ  கோபமா இருக்குன்னே தெரியலை.. லோ கட் சீன் ஒரே ஒரு இடத்துல மின்னல் மாதிரியும், லோ ஹிப் சீன் பெட்ரோல் விலை ஏற்றம் போல் பரவலாவும் இருக்கு, பார்த்து பயன் பெறுங்கள்... 


படத்துல களை கட்டும் காமெடி சிங்கம்புலி, புரோட்டா சூரி,  இவங்க 2 பேரும் தான்.. வெண்ணிற ஆடை மூர்த்தியும் உண்டு.. அவர் வர்ற காட்சிகள் எல்லாம் காதலுக்கு மரியாதை பட க்ளைமாக்ஸ் நினைவு வருது..  



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhL35IggbEqecJtw83cBOKtxip13J4xIpUBFsOCFPZTZz_xfNgTPl_LuVxIY1V4-HRg3hqYVf7xY52l_8O7AtW4bcDFfSaELVoS1SokaqiKhl7XpZ5_tBvM-M4dVovLFQjrCWoh4jZT8nI/s1600/Manam-Kothi-Paravai-Tamil+Movie-Stills1+(7).jpg 



இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. ஹீரோ புரோட்டா சூரியிடம் சொல்லும் கற்பனையான காதல் காட்சி கலகலப்பு .. 

2. ஹீரோவும், ஹீரோயினும் லாங்க் ஷாட்ல வேற என்னமோ பேச அவங்க நண்பர்கள் அவங்களா ஒரு அர்த்தம் எடுத்துக்கிட்டு ட்ரான்ஸ் லேட் பண்றது


3. கல்யாண மண்டபத்தில் ஹீரோயினை நைஸா தள்ளிட்டு வர சிங்கம்புலி செய்யும் சேஷ்டைகள் செம சிரிப்பு .. 

4. செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல், மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும் பாடல்களை புத்திசாலித்தனமாக பயன்படுத்திய விதம் அப்ளாஸ்  அள்ளுது.. 


5. அய்யய்யோ வாடி புள்ள வீட்டுக்குள்ள யாரும் இல்ல.. சல் சல் ஓசை, போ போ போ நீ எங்கே வேணாலும் போ , ஊரான ஊருக்குள்ளே என்னைப்போல யாரும் இல்ல...  என்ன சொல்ல ஏது சொல்ல  என படத்தில் மொத்தம் 5 பாட்டும் கேட்கற மாதிரி இருக்கு. ஆனா இன்னும் மெனக்கெட்டிருந்தா 2 சூப்பர் ஹிட் பாட்டு கிடைச்சிருக்கும்.. ஐ மீன் அந்த 5ல 2 செம ஹிட் ஆக வேண்டியது.. ஜஸ்ட் மிஸ்.. 




http://3.bp.blogspot.com/-RRKgoPiOS4k/TyQxyPRlwhI/AAAAAAAAkYQ/ZnhoVUy4iN0/s1600/Manam+Kothi+Paravai+Actress+Athmiya+Stills+(1).jpg


இயக்குநரிடம் சில கேள்விகள்


1. ஹீரோயின் சம்மதம் இல்லாம ஹீரோ ஃபிரண்ட்ஸ் கடத்திட்டு வர்றாங்க , ஓக்கே , நினைவு திரும்பியதும் ஹீரோயின் தன் வீட்டுக்கு ஃபோன் பண்றார்.. பாட்டி எடுக்கறாங்க திட்டி வெச்சுடறாங்க.. அப்புறம் ஹீரோயின் அத்தோட விட்டுடறாங்க.. ஏன் தன் அப்பா, சித்தப்பா, அண்ணன் எல்லாம் இருக்காங்களே.. செல் ஃபோன் இருக்கே ட்ரை பண்ணி மேட்டர் சொல்லலாம்.. தான் இருக்கும் இடத்தை எஸ் எம் எஸ் பண்ணலாம்.. அதை எல்லாம் செய்யாம அருவில போய் துணி துவைச்சுட்டு இருக்கு.. 


2. ஹீரோயின் பாட்டி ஃபோனை அட்டெண்ட் பண்றப்ப சித்தப்பா பாட்டிக்கு பக்கத்துலயே நிக்கறாரு.. அப்போ எல்லாம் கம்முன்னு இருந்துட்டு ஃபோனை பாட்டி வெச்ச பின் சண்டைக்கு போறார்.. அப்பவே அவர் ரிசீவர் வாங்கி பேசறதுக்கு என்ன?


3. ஹீரோயின் தங்கி இருக்கறது கேரளாவுல இருக்கற பெரிய பங்களா... அங்கேயே 12  பாத்ரூம் இருக்கு.. 12 பேர் குடி இருக்கற அவ்வளவு பெரிய பங்களாவுல துவைக்காம துணி எடுத்துட்டு ஆத்துக்கு துவைக்க வர்றார்.. 


4. ஹீரோயினோட சொந்த பந்தங்கள்க்கோ, யாருக்குமோ ஹீரோயின் இருக்கற இடமே தெரியாது.. எப்படி கரெக்டா தமிழ் நாட்ல இருந்து  கேரளா  வந்து கன கச்சிதமா அந்த பங்களா வந்தாங்க ..?


5. ஹீரோ க்லைமாக்ஸ்ல ஹீரோயின் கிட்டே உனக்கு என் மேல லவ் இருக்குன்னு எனக்கு முன்னமே தெரியும்கறார்.. அப்ப என்ன இதுக்கோசரம் கோயில்ல பப்ளிக்கா ஹீரோயின் கால்ல விழுந்து என்னை லவ் பண்ணு?னு கெஞ்சறார்?


6. ஹீரோயின் கேரக்டர் தான் புடி படவே இல்லை.. ஹீரோ மேல காதல் இருக்கு , ஆனா  வீட்ல சண்டைன்னா என்ன பண்ண அதனால அவன் கிட்டே லவ்வை சொல்லலை ஓக்கே , ஆனா ஹீரோ ஸ்கூட்டில வர்றப்போ  அவ இடுப்பை தொடறப்போ, ஆஃபீஸ்ல அவளை கட்டிப்பிடிச்சு தூக்கறப்போ எல்லாம் சீறாம ரசிக்கறார்.. திடீர்னு ஹீரோ மேல எரிஞ்சு விழறார்..


7. சிங்கம் புலி வேனில்  வில்லன்களிடம் அடி வாங்கும் காமெடி டிராக் அப்படியே அப்பட்டமாக பதினெட்டான் குடி படத்தில் இருந்து சுடப்படவை.. அதிலும் சிங்கம்புலியே தான் காமெடியன்.. ஒய் ஒய்?


7 . க்ளைமாக்ஸ்ல அவ்வளவு பிரச்சனை நடந்தும் ஹீரோயின் அப்பா ஒண்ணா 2 பேரையும் பிரிக்கனும், அல்லது சேர்த்து வைக்கனும், ஐ மீன் அவரே மேரேஜ் பண்ணி வைக்கனும், அதை எல்லாம் விட்டுடு என் பொண்ணை கூட்டிட்டு எங்கேயாவது போயிடுங்கறார்.. நிஜமாவே அவர் அப்பா தானா?



http://images.south365.in/2011/12/Manam-Kothi-Paravai-Tamil-Movie-HQ-Stills-13.jpg


 படத்தில் ரசித்த வசனங்கள்


1. உன் கடைல டீ குடிக்கவும் ஆள் இருக்கா?


நீ கட்டற பில்டிங்க்ல குடி இருக்கவே ஆள் இருக்குதே?


2. நீ உங்கப்பாவையும், எங்கப்பாவையும் ஏமாத்தலாம், ஆனா என்னை ஏமாத்த முடியாது..  டென் த் படிக்கறப்ப வாங்குன 500 ரூபாயையே இன்னும் திருப்பித்தராதவன் தானே நீ?


3. டேய்.. அந்த ஃபைலை எடுக்க ஹெல்ப் பண்ணுன்னு தான் சொன்னேன்.. எதுக்கு  என்னை இடுப்பை பிடிச்சு தூக்கறே?


4.  ஏண்டா லேட்?

 ரெண்டு லவ்வர்ஸ் பேசிட்டு வந்தா  லேட் ஆகத்தாண்டா செய்யும். 

 அதான் நீ ஏன் லேட்னு கேட்டேன்...


5. இந்த குயீன் உனக்கு சேரவே சேராது 


என் கிட்டே 4 ஜோக்கர்ஸ் கைவசம் இருக்கறப்ப கவலை எதுக்கு?


6.  எனக்கு பட்சி என்ன சொல்லுதுன்னா.... 

 பஜ்ஜி வடை எல்லாம் உன் கிட்டே பேசுமா?


7.  ஏம்மா.. உன் கர்ச்சீப் அழுக்கானா சலவைக்கு போடு.. கண்டவன் கிட்டே எல்லாம் தராதே.. 


8. அந்த ஃபிகரை டெயிலி ஒரு ஆள் வந்து டிராப் பண்ணிட்டு பிக்கப் பண்ணிட்டு போறாங்க.. நாம போய் அதை கரெக்ட் பண்ண்லாமா? 

 ஹாட் மிஸ்.. அவன் யாரு?

 எங்கண்ணன்.. 


 நேத்து வந்தவன்?

 அவனும் என் அண்ணன் தான். எனக்கு மொத்தம் 8 அண்ணன்க.. 

 அய்யய்யோ.. 9 வது ஆள் ஐ மீன் 9 வது அண்ணன் உனக்கு நான் தான்மா .. டேய்.. குல சாமிக்கு ஒரு கெடா வெட்டுடா..


9.  உன் பொண்டாட்டி எல்லாம் எப்படிடா உன்னை மதிக்கறா?

 விட்றா,.. ஊர்ல எந்த பொண்டாட்டி புருஷனை மதிச்சிருக்கு?


10. நீயே வண்டி ஓட்டுடா...


 ஓக்கே , நீ வேணா என் இடுப்பை பிடிச்சுக்கோ.. நான் ஏதும் சொல்ல மாட்டேன்.. பேசிக்கலி ஐ ஆம் டீசண்ட் யூ நோ?


11. எவண்டா அவன் குறுக்கே பேசறது?

 டேய், நான் தாண்டா உங்கப்பன்.. 

 சாரிப்பா.. 


12. மச்சான் மச்சான்னு அவனை கூப்பிடறியே, அதுக்கு என்ன அர்த்தம்னு சபைல சொல்லிட்டு  உக்காரு.. 


13.  டேய், 3 டீ போடு

 4 டீ போடு

நாம 3 பேருதானே இருக்கோம்

 எனக்கு மட்டும் 2 டீ ஹி ஹி 


14. சந்திரபாபு மேரேஜ் லைஃப்ல கூட இப்படித்தான், மேரேஜ் முடிஞ்ச அன்னைக்கு நைட் மனைவி வேற ஒரு லவ்வர் இருக்கறதா சொன்னதும் சேர்த்து வெச்சார்டா.. அதனால கடைசி வரை நமக்கு சான்ஸ் இருக்கு 


15.  என்னடா 10 பேர் வந்து நின்னாலும் நின்னு அடிப்பான்னு சொன்னே?

 ஐ மீன் ஒண்ணுக்கு அடிப்பான்னு சொன்னேன் .. மீ எஸ்கேப்


16. எனக்கு என் காதல் தாண்டா முக்கியம். 

 எங்களுக்கு உயிர் தாண்டா முக்கியம்



17. டேய்.. உனக்கும், அவளுக்கும் லவ்னு எல்லாரும் சொல்றாங்களே, அது பொய் தானே?

 அம்மா, நீயே பொய்னு சொன்ன பிறகு அது எப்படிம்மா உண்மையாகும்?நாம அவங்க கிட்டே சம்பளம் வாங்கறவங்க, எப்படி ஒத்துக்குவாங்க?


18.  ஒரு காதலி காதலனுக்காக என்ன எல்லாம் பண்ணுவா?

 ரூம் போட்டா ஓக்கே சொல்வா.. 

 அது உங்க ஊர்ல மும்பைல, இது கிராமம்


19. டேய், மேரேஜ்க்கு இன்னும் 2 நாள் தாண்டா இருக்கு

 48 மணி நேரம் இருக்குன்னு பாசிட்டிவா சொல்லுங்க 


20. கோயிலை  இப்படித்தானே சுத்தனும், எங்களை ஏன் டைவர்ட் பண்ணி விடறே?

 சிலபஸ் மாத்தியாச்சு



21. மனசுக்குப்பிடிச்சவனோட வாழ்க்கை நடத்த எவ்ளவ் போராட வேண்டி இருக்கு?

22. பாதில ஓடறவன் தான் பாம்பே ஃபிரண்ட், கடைசி வரை அடி வாங்குனாலும், உதை வாங்குனாலும்  சப்போர்ட்டா நிக்கறது தமிழ் நாட்டு ஃபிரண்ட்..


23.  ரேவதி.. நான் தான் உன் அண்ணன் பேசறேன்..

 ஹாய் , மச்சான், நான் தான் கண்ணன் பேசறேன்


24. டேய், நாம எல்லாம் அடி வாங்கிட்டு இருக்கோம். சொந்தத்தை மென்ஷன் பண்ற நேரமாடா இது?


25. இது என்ன லவ் பேர்ட்ஸா?

 ஆமா..

 உங்க வீட்ல லவ் பேர்ட்ஸ் வளர்க்கலாம், ஆனா உங்க வீட்டு பொண்ணுங்க லவ் பண்ணக்கூடாதா?


26. ஊரை விட்டு ஓடி வந்த ஜோடி மாதிரியாடா இருக்கீங்க? என்னமோ மூணாறுக்கு ஹனிமூன் வந்த மாதிரி இருக்கிங்க?


27. மார்ச்சுவரிக்குப்போற நிலைமைல இருந்தாலும் செஞ்சுரி டீட்டெயில்ஸ் கேட்காம போக மாட்டாண்டா இந்த தமிழன்


28.  உங்க ஊர் ஆளூங்க அடிச்சா ரத்தம் வராதா? உனக்கு எந்த காயமுமே இல்லையே?

 ஆல் உள்காயம் ஸ்


29.  அவ என் சிஸ்டர்டா.. ஆண்ட்டின்னு நினைச்சீங்களா?


30. நான் எப்படி மானங்கெட்டத்தனமா உங்க லவ்வுக்கு ஹெல்ப் பண்ணுனனோ அதே மாதிரி கேரளாவுல எனக்கு நீங்க ஹெல்ப் பண்ணனும், ஹி ஹி


31. ஏண்டி. என் சமையல் எப்படி?


 உங்கம்மா சமையல் மாதிரியே இருக்கு..


32. உன் ஹேண்ட் பேக்கை திறந்து பார்த்ததுக்கே இப்படி குதிக்கறியே..... ( டபுள் மீனிங்க்.. )


33. தண்ணி அடிக்கறாங்க மீன்ஸ் அவங்க தண்ணி போட்டுட்டு வந்து எங்களை அடிக்கறாங்க



http://thamilan.lk/news_images/298809848film2.jpg


 எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 41

  எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே 

 சி.பி கமெண்ட் - காதலர்கள், பெண்கள் ஃபேமிலியோட பார்க்கற மாதிரி தான் கண்ணியமான நெறியாள்கையில் தான் படம் இருக்கு.. படம் செம ஹிட் எல்லாம் ஆகாது, ஃபிளாப்பும் ஆகாது, மீடியமா ஓடிடும்.. எழில் ஜெயிச்சுட்டார்.. 

 ஈரோடு அபிராமியில் படம் பார்த்தேன்




டிஸ்கி -

தடையறத்தாக்க - பர பர ஆக்‌ஷன் வித் ஓவர் வயலன்ஸ் - சினிமா விமர்சனம்