Thursday, August 11, 2011

வெளியான ரகசிய ஆடியோ டேப் , காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் நடுக்கம் , மடம் கப் சிப்

ஆடியோ சர்ச்சையில் ஜெயேந்திரர்?

அது யார் குரல்?

ங்கரராமன் கொலை வழக்கில் கைதாகி சர்ச்சைக்குள்ளான  காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் மீது மீண்டும் ஒரு சர்ச்சை கிளம்பி உள்ளது.  ஜெயேந்திரர் பேசியதாக ஒரு ஆடியோ வெளியாகி, அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி கைக்கு முதலில் இந்த ஆடியோ கிடைத்துள்ளது. அவர் இதை  முதல்வரின் தனிப் பிரிவு, டி.ஜி.பி., உயர் நீதிமன்றக் கண்காணிப்புப் பிரிவு பதிவாளர், விழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறை இயக்குநர் ஆகியோருக்கு அனுப்பி உள்ளார். இது தொடர்பாக ஒரு புகாரையும் துரைசாமி அத்து டன் அளித்துள்ளார். அந்த ஆடியோ, நமக்கும் கிடைத்தது.

இரண்டு பாகங்களாக இருக்கும் அந்தப் பதிவில் ஒரு முதியவர், நடுத்தர வயதுக்காரர் மற்றும் ஒரு பெண் மூவரும் கான்ஃபெரன்ஸ் வசதியில் உரையாடுகிறார்கள்.

முதியவர்: ''சௌக்கியமா இருக்கீங்களா..?''

நடுத்தர வயதுக்காரர்: ''ம்...  நல்லா இருக்கேன். நமஸ் காரம்...''

முதியவர்: ''ஒரு வாரத்தில், பாக்கி எல்லாத்தையும் முடிச்சிடுறேன். மொத்தமா முடிச்சிடலாம்... அக்கவுன்ட்ல கொடுக்க முடியலை. பணத்தை எடுத்து மாத்தி, ஒரு வாரம், பத்து நாளில் அனுப்பிடுறேன். கடன் எடுத்துத்தான் கொடுத்திருக்கோம். மொத்தத்தையும் நானே கொடுத்து அனுப்பிடுறேன். அதுவரைக்கும் சிரமம் பாக்காதீங்க. கவலைப்படாதீங்க... ஃபுல்லா வந்துரும். கொஞ்சம் பொறுமையா இருங்க...''

நடுத்தர வயதுக்காரர்: ''அதான் எனக்கும் ஈஸியா இருக்கும்...''

முதியவர் பேச முயல, குறுக்கிட்ட பெண்: ''சார், பெரியவா சொல்லிட்டா. இப்ப இவர் உங்ககிட்ட சொல்றார். இப்பத்தான் என்கிட்ட பேசினார். 'வேர்டு ஹானர்’ (உறுதிமொழி) பண்ணுங்க. பணம் கொடுக்கிறேனு சொல்லுங்க, இல்லே... இல்லைனு சொல்லுங்க...’ன்னார் பெரியவா. இதை கீப்அப் பண்ணிக்குவோம் சார்.''

(இதன் பிறகு, முதியவரும் பெண்ணும் தனியாக...)

முதியவர்: ''அவர்கிட்ட சொல்லிட்டேன்... அக்க வுன்ட்ல பணம் இருக்கு. மாத்தி ஒரு வாரம், பத்து நாளில் கொடுத்துடறேன்னு சொல்லிட்டேன்.''

குறுக்கிட்ட பெண்: ''இல்லை... பெரியவா என்னைத்தான் கேட்டுண்டு இருக்கா... அதான்...''

முதியவர்: ''நீ சொல்லிடு... பெரியவா சொல்லிட்டாங்க. ஒரு வாரத்தில் வந்துடும்னு...''

பெண்: ''ஓகே பெரியவா... வெச்சிடட்டா பெரி யவா..?'' - இப்படியாகப் போய் கட் ஆகிறது அந்த உரையாடல்.

பரபரப்பைக் கிளப்பிய இந்த விவகாரம் தொடர்பாக, தகவல் உரிமை சட்டத்தில் விளக்கம் கேட்டுள்ள வழக் கறிஞர் துரைசாமியிடம் பேசினோம்.

''மூன்று பேர் பேசும் உரையாடலை, யாரோ ஒருவர் என்னுடைய செல்போனுக்கு அனுப்பி இருக்கிறார். அந்த மூன்று குரல்களைக்கொண்டவர்கள் யார் என்று நான் விசாரித்தேன். காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர், அவருக்கு அறிமுகமான கௌரி என்ற பெண் ஆகியோரின் குரல்கள் என்று கூறப்படுகிறது.

இன்னொரு குரல் யாருடையது என்பதை போலீஸாருக்கு கொடுத்த மனுவில் தெளிவுபடுத்தி உள்ளேன். ஏதோ பணம் கொடுக்கல் வாங்கல் பற்றியதாக அது இருக்கிறது. இதுபற்றிய உண்மைகளை விசாரித்துத் தரவேண்டும் என்றுதான் நான் கேட்டி ருக்கிறேன்.

என்னுடைய கேள்விகள் இதுதான்.

1. அந்தக் குரல்கள், குறிப்பிட்ட அந்த மூவருடையதுதானா?

2. பணம் கொடுப்பதாகப் பேசுவது எந்த விஷயத்துக்காக?

3. இந்த உரையாடலை நிகழ்த்தியது அந்த மூவர்தான் என்றால், பணப் பரிமாற்றம் தொடர்பாக என்ன விதமான சட்ட நடவடிக்கை எடுக்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது?

4. அந்த உரையாடலின்படி இதுவரை பணப் பரிவர்த்தனை நடந்துள்ளதா?

5. அந்த உரையாடலில் மறைந்திருக்கும் உண்மை களை ஊருக்குச் சொல்ல வேண்டும்... என வரிசை யாகக் கேட்டு இருக்கிறேன். அரசு மற்றும் நீதித் துறையின் பதில்களுக்காகக் காத்திருக்கிறேன்...''

என்றார் துரைசாமி.
ஜெயேந்திரரின் கருத்தை அறிய காஞ்சிபுரம் மடத்தில் ஆஜரானோம். மடத்தின் அலுவலர்களின் அனுமதியுடன், தியான மண்டபத்துக்கு அருகில் தனி அறையில் பக்தர்களுக்கு ஆசி தந்துகொண்டு இருந்த ஜெயேந்திர சரஸ்வதியைச் சந்தித்து நம் விசிட்டிங் கார்டைக் கொடுத்தோம். சட்டென முகம் சிவந்து நம்மை வெளியே போகுமாறு  சைகையால் சொன்னார்.

உடனே, அவரின் உதவியாளரிடம் விஷயத்தைக் கூற... மடத்தின் நிர்வாகி ஸ்ரீராமசர்மாவைத் தொடர்பு கொள்ளச் சொன்னார்கள். அவரைச் சந்தித்தோம்.  
''ஏதோ புதுக் கதை மாதிரி சொல்றீங்க. இது பழைய கதை. ஒரு வாரமா ஓடிக்கொண்டு இருக்கே. மடத்தின் கருத்தை நீங்க கேட்க வேண்டாம். சட்டமும் நீதிமன்றமும் அதைப் பார்த்துக்கும். நீங்க உங்க வேலையைப் பார்த்தா போதும். மடத்தைப் பத்தியும் பெரியவாளைப்பத்தியும் பக்தர்களுக்குத் தெரியும்.

இப்போதான், மடம் பழைய நிலைக்குத் திரும்பி சந்தோஷமா இருக்கோம். அது பொறுக்காமக் கிளம்பி வந்துட்டீங்களா? தயவுசெஞ்சு, வெளியே போங்க'' என்ற ஸ்ரீராமசர்மா, என்ன நினைத்தாரோ...  மறுபடியும் நம்மை அழைத்து,
''பெரியவா... அதுபோல யாரிடமும் எந்தக் காலத் திலும் பேசியது இல்லைனு வேணும்னா மடத்தோட கருத்தாப் போட்டுக்குங்க!'' என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.

 நன்றி - விகடன்

Wednesday, August 10, 2011

மலையாள டப் உருமி கில்மா படமா?- சந்தோஷ் சிவன் பேட்டி

 http://tamilwire.com/images/2011/02/urumi-genelia-e1298716227829-625x447.jpg

இந்தியா இன்னும் அடிமை தேசம்தான்!


''சுதந்திர இந்தியா வின் எல்லாப் பலன்களையும் நலன்களையும் எந்தக் கஷ்டமும் இல்லாமல் அனுபவித்துக்கொண்டு இருக்கிறோம் நாம். ஆனால், நம் முன்னோர்கள், தம் வாழ்க்கை, இளமை, சுகம் அனைத்தும் இழந்து பெற்ற சுதந்திரம் இது.

இந்திய சுதந்திரத்துக்குப் போராடிய அனைத்துத் தியாகிகளுக்கும் என்னுடைய அன்புக் காணிக்கைதான், 'உருமி’. கேரள மக்கள் கொண்டாடிய சினிமாவைத் தமிழில் கொண்டுவந்து இருக்கிறேன்!''-

நிதானமாகப் பேசுகிறார் இயக்குநர் சந்தோஷ் சிவன். இந்தியாவே தேடுகிற ஒளிப்பதிவுக் கலைஞன்.

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiJXBOupCVMCDWA3wDVWU5oycqzSp7z4h5z6EghOeZUripv64XYMxkurtqTZuo_Az8ZkOjXgRC9hMGwMks3et-OOKWE8IllnRpIe-8utYhyphenhyphen0AmcsHoAy40qwL6Pml6Cq4vdmsZhQfDfoJn/s1600/urumi-hot-stills+_18_.jpg


1.  ''இந்திய இளைஞர்கள் கிட்டத்தட்ட இந்திய சுதந்திரத்தின் மதிப்பை உணராத இந்தச் சமயத்தில் 'உருமி’ சொல்ல வரும் செய்தி என்ன?''

 சி.பி - ஓப்பனிங்க் கேள்வியே தப்பு,இந்திய சுதந்திரத்தின் மதிப்பை உணராதவர்கள் அரசியல்வாதிகள் தான்,இளைஞர்கள் அல்ல.


'' 'உருமி’ என்பது அருள் வாள். பிடிப்பவன் கை அசைவில் மட்டும் அல்லாமல், உருமியே உயிரோடு அசையும். தென்னிந்தியாவே தமிழைத் தாய்மொழியாகக்கொண்டு இருந்த காலகட்டம் அது. இந்து சமுத்திரத்தின் கரையில் அமைந்து இருந்த சேர தேசத்தில்தான் போர்ச்சுக்கீசிய கப்பலோட்டி வாஸ்கோடகாமா வந்து சேர்ந்தார்.

காவிய நாயகனாகவும், கடல் வழி மார்க்கம் கண்டுபிடித்த மகானாகவும் நாம் போற்றும் வாஸ்கோடகாமாவின் உண்மையான முகம் வேறு மாதிரியானது. அவரது நோக்கம், ஆரம்பத்தில் வாணிபம்தான். அரேபியர்களும் சீனர்களும் நம்மிடம் கையேந்தி நின்ற காலம் அது.

http://www.southdreamz.com/wp-content/uploads/2011/03/Urumi-Vidya-Balan-Stills00-5.jpg

இன்று வளைகுடா தேசத்தில் எண்ணெய்க்கு என்ன மதிப்போ, அதுபோல அன்று நம் தேசத்தின் மிளகுக்கு மதிப்பு இருந்தது. ஒரு பிடி மிளகுக்காக இந்தியா அடிமை தேசம் ஆன வரலாறுதான் இந்த 'உருமி’. 15-ம் நூற்றாண்டில் நாம் எதிர்கொண்ட அடக்குமுறை இன்றும் நடைமுறையில் உள்ளது. அன்று இருந்த அந்நியர் வடிவில் இன்று பல இந்தியர்களே இருக்கிறார்கள்.

அந்நிய முதலீடுகளுக்காக நாட்டைக் காவு கொடுக்கிறோம். நாடு அந்நிய சக்திகளுக்கு அடைக்கலமாகிவிட்டது. இந்த நேரம்தான் இந்த சினிமாவுக்கான அவசியம் என்று நினைத்தேன். மாற்றம் தேடும் இளைஞர்கள் அதிகமாகிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்குத் தான் இந்த 'உருமி’!''


http://farm5.static.flickr.com/4027/4603851294_c7bb3e5510.jpg


2. ''ஆர்யா, பிரபுதேவா, பிரித்விராஜ், ஜெனிலியா, வித்யாபாலன்னு பெரிய கூட்டணியை எப்படிப் பிடிச்சீங்க?''


சி.பி - சம்பளம் கொடுத்தா சினிமாக்கூட்டணி,கிம்பளம் கொடுத்தா அரசியல் கூட்ஸ் அணி...





''எல்லோருமே என் நண்பர்கள். எனக்காக எல்லாரும் பொறுத்துக்கிட்டாங்க. அடர்ந்த காடுகளில், வசதி இல்லாத இடங்களில் தங்கினாங்க. ஜாலியா வந்துட்டுப் போற ஜெனிலியா, நாலு வாரம் குதிரைஏற்றம், வாள் பயிற்சி கத்துக்கிட்டார். இப்படி எல்லாருமே படத்துக்காகக் கஷ்டப்பட்டு இருக்காங்க. தமிழ் சினிமாவுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கு. அதன் முதல்கட்டம்தான் 'உருமி’!''



http://www.chitramala.in/photogallery/d/561338-1/urumi-hot-stills+_17_.jpg
3. ''நீங்கள் 'சிலோன்’ படத்தை இயக்குவது எந்த அளவில் இருக்கிறது?''

 சி.பி - ஸ்லோவா....




''நிச்சயமாக 'சிலோன்’ படத்தை இயக்குவேன். எனக்கான கனவுப் படம். இது போராளிக் குழுக்களின் கதையோ, புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பதிவோ அல்ல; மூன்று சிவிலியன்கள்பற்றிய எனது பார்வை. அந்த சினிமாவுக்காக நீண்ட காலமா உழைச்சுட்டு இருக்கேன்!''

http://farm7.static.flickr.com/6148/5960265005_107f0ec546.jpg

டிஸ்கி -1. டைட்டிலுக்கான விளக்கம் -மலையாள டப் உருமி  கில்மா படமா? இந்த கேள்வி நாம் பட ஸ்டில்களைப்பார்த்ததும்  நம் மனதில் எழும் கேள்வி,மற்றபடி பதிவின் டைட்டில்  சந்தோஷ் சிவன் பேட்டி தான் , ஹி ஹி  பை சமாளிஃபிகேஷன்  சண்முக ராஜ்.

டிஸ்கி 2 - வித்யாபாலன் சில்க்ஸ்மிதாவாக நடிக்கும் இந்த ஸ்டில்லை பார்த்துத்தான் உருமியில் செலக்ட் ஆனாராம், ஜெனரல் நாலெட்ஜ் ரொம்ப முக்கியம்  நமக்கு..
http://actresshotpictures.files.wordpress.com/2011/01/vidya-balan-sexy-saree-maxim-photo-shoot-wallpapers.jpg


நாளைய இயக்குநர் - மெகா ஃபைனல் - கலக்கல் கதைகள் - விமர்சனம்

நாளைய இயக்குநர்  ஃபைனல்க்கு போறதுகு முன்னால அதனோட 3ஆம் பாக செலக்‌ஷனுக்கான விளம்பரம் பற்றி சின்னதா ஒரு விமர்சனம். கே பாக்யராஜ் ரெடி ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன் அப்டினு சொல்லி  சில டயலாக் பேசறார்.. இந்தியாவின் சிறந்த திரைக்கதை ஆசிரியரும், பல வெள்ளி விழாப்படங்களின் இயக்குநருமான அவர் இந்த 2 நிமிட விளம்பரப்படத்துல  சோபிக்க முடியலைங்கறதைப்பார்த்தா வருத்தமா இருக்கு, ரொம்ப செயற்கையான முக பாவனைகள்.

ஃபைனல் நிகழ்ச்சிக்கு பல வி ஐ பி கள் எல்லாம் வந்திருந்தாங்க. பாலு மகேந்திரா,பாண்டிராஜ் என பல வி ஐ பி களை பார்க்க முடிந்தது. இவங்க எல்லாம் அந்த நிகழ்ச்சியை பார்க்கறதால படைப்பாளிகளுக்கு இன்னும் படம் எடுக்க ஊக்குவிப்பா அமையும்.

ஹாய் மதன் வந்ததும் சொன்ன ஒரு பஞ்ச் நல்லா இருந்தது. இந்த ஃபைனல்ல யார் வின் பண்ணப்போறாங்கன்னு நிறையப்பேர் கேட்கறாங்க.ஏற்கனவே வின் பண்ணுனவங்க தான் இங்கே வந்திருக்காங்க என்று அவர் சொன்னதும் அனைவரும் ஒரு புத்துணர்ச்சியோடு கிளாப்ஸ்..


1. திருப்பூர் ராம் - சைனா டீ ( காமெடி சப்ஜெக்ட் )

ப்பனிங்க் ஷாட்டே டெர்மினேட்டர் டீக்கடைல ஆரம்பிக்குது. புது வகை டீத்தூள் விற்கும் ஆள் கடைக்கு வர்றான். பணம் எதுவும் வேணாம், ஒரு டீ போட்டு கஸ்டமருக்கு குடுங்கங்கறான்.அது போலவே செஞ்சா டீ குடுத்தவன் ஆள் அவுட். 

பதறிப்போன டீக்கடை ஓனர் டெட்பாடியை வண்டில வெச்சு எடுத்துட்டுப்பொறாரு.. ஒரு மறைவான இடத்துல அவரை டிஸ்போஸ் பண்ணிட்டு அவங்க ரிட்டர்ன் ஆகறப்ப போலீஸ் பார்த்துடுது. டீ குடிச்சு செத்துப்போனதா நம்பப்படும் ஆள் உண்மைல சாகலை. மயக்கம். கடன் தொல்லை தாங்காம விஷம் குடிச்சவர் அந்த டீயை குடிச்சதாலதான் பிழைச்சாரு.. 

இப்போ அந்த டீக்கு ஏக கிராக்கி. 

கேட்க ரொம்ப சாதாரண கதையா தெரியும் ,ஆனா விஷூவலா பார்க்கறப்ப செமயா இருந்தது. 

மனம் கவர்ந்த சில வசனங்கள்

1. நல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்குது

யோவ் , குடுகுடுப்பை,வாத்தியத்துக்கே வக்கில்லாம தானே வாயால வாசிக்கறே.!!?
2. ஊர்ல இருக்கற எல்லாருமே எங்க கடைல தான் டீ குடிப்பாங்க./. 

அடேய், ஊர்ல மொத்தமே 32 பேர்தான். 

3. இந்த பஞ்சாயத்து என்னா சொல்லுதுன்னா போஸ்ட் மார்ட்டம் பண்ணீயே ஆகனும்..

ஆமாமா.. நானும் அதை ஆமோதிக்கிறேன், போஸ்ட் மார்ட்டம் பண்ணீயே ஆகனும்.. யோவ். ஒரு சந்தேகம். போஸ்ட் மார்ட்டம்னா என்ன?

4. விஷத்தை முறியடிக்கும் டீ இது .. விலை ரூ 50

இந்தாய்யா ரூ 500


இதுல நடிச்ச எல்லாருமே ஒரு கிராமத்து ஆளுங்க, நேட்டிவிட்டி இருந்தது.. பார்வையாளர்களிடையே நல்ல வர்வேற்பு பெற்ற இந்தப்படம் ஏனோ ஜட்ஜூங்களை அவ்வளவா கவரலை.. ஆனா அதை ஓப்பனா கமெண்ட்டி இருக்க தேவஃஇ இல்லை. ஏன்னா ஃபைனல் என்பதால் யார் வின்னர் என்ற சஸ்பென்ஸை கடைசி வரை மெயிண்டெயின் பண்ண வேணாமா?



2. . ரவிகுமார் - ஜீரோ கிமீ  ( ஃபேண்ட்டசி)

வேலை வெட்டி இல்லாத ஹீரோ எதேச்சையா திருப்பூர் டூ சென்னை போக ஒரு  மாயாஜால ரூட் கண்டுபிடிக்கறாரு..  அதாவது குறிப்பிட்ட இடத்துல ஆள் உள்ளே போனா அடுத்த செகண்ட் அவர் சென்னைல இருப்பார். உடனே அந்த இடத்தை விலைக்கு வாங்கறார்..

தனது பாரம்பரியம் மிக்க வீட்டை விக்கறார். ஜோசியர் தான் அந்த வீடு ராசி இல்லைன்னு ஐடியா குடுக்கறார். வீட்டை வித்து கிடைச்ச பணத்துல தான் இந்த மேஜிக் இடம் வாங்கறார். வாங்கி ட்ராவல் ஏஜென்சி நடத்தறார்.. செம காசு.. ரூ 500 டிக்கெட்.. திடீர்னு ஹைவெஸ் டிபார்ட்மெண்ட்ல வந்து அந்த இடத்தை அபகரிச்சுக்கறாங்க..

ஹீரோவோட வீட்டை விலைக்கு வாங்குன சேட்டு ராசி இல்லைன்னு ஓ சி ல அதை ரிட்டர்ன் பண்ணிடறாரு. இப்போ தன் வீட்டுக்கு போற ஹீரோ பரண்ல அமெரிக்கா போற மேஜிக் ரூட் கண்டு பிடிக்கறார்..

அப்பாவின் சொத்து விற்கக்கூடாதுங்கற மறைமுகமான நீதியோட ,அட, இப்படி நடந்தா எவ்வலவு நல்லாருக்கும் என பார்வையாளர்களை ஏங்க வைத்த ஒன் லைன் கற்பனை.  வெல்டன் ரவிக்குமார்.

இந்த படம் முதல் பரிசு வாங்கலைன்னாலும் நிச்சயம் 2 வது அல்லது 3 வது பரிசு வாங்குவது நிச்சயம்.. மொத்தம் 9 படம் . இந்த வாரம் 3 படம். இனி 6 படம் வர இருக்குது.




3. தீபக் - ஆசை 

ஒரு தூக்கு தண்டனைக்கைதியின் கடைசி நிமிடங்கள் எப்படி இருக்கும்? என்பதுதான் படத்தோட ஒன்லைன்.. ஆனானப்பட்ட ஆட்டோ சங்கர் ஆகட்டும், வீரப்பன் ஆகட்டும் அவங்களோட கடைசி நிமிடங்களை பார்க்கும்போது நமக்கு இரக்கம் வரத்தான் செய்யுது. அது மனித மன இயல்பு..

சின்ன வயதில் 13 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் பண்ணுன கொடூரமான ஆள் கேஸ் நடந்து தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுகையில் தனது கடைசி ஆசையாக தனது மகளிடம் மன்னிப்பு கேட்டதாக சொல்ல சொல்கிறார்.

இதே போல் 8 தூக்கு தண்டனை களின் கடைசி ஆசையை நிறைவேற்றும் அசைன்மெண்ட் எடுத்துக்கொண்ட ஒருவர் அதை நிறைவேற்றுகிறார். இதான் கதை..

மனம் கவர்ந்த வசனங்கள்

1. சோத்துல உப்பே இல்லையே? சாகப்போறவனுக்கு சொரணை இருக்கக்கூடாதுன்னு போடாம விட்டுட்டீங்களா?

2. மனுஷனுக்கு தோணும் ஆசை தான் அவன் தப்பு பண்ணக்காரணம்.. ஆசைப்படாத மனுஷனே உலகத்துல கிடையாது..




இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1. தூக்குதண்டனைக்கைதிகளின் கடைசி ஆசையை நிறைவேற்றும் கேரக்டர்ல நடிக்கறவர் “ என் பேரு அகிலன்” அப்டின்னு சொல்றப்ப தன் நெஞ்சுல கை வெச்சு சொல்றாரு.. இது 25 வருடங்களுக்கு முன்னால் நாடகங்களில் கையாளப்பட்ட பாணி..  அதுவும் 4 டைம் அதே மாதிரி சொல்றப்ப இயக்குநரின் அனுபவம் இன்மை தெரிகிறது..

2. தூக்கு தண்டனை கைதி தன் மக கிட்டே மன்னிப்பு கேட்கறதா சொன்னது தன்னால் கெடுக்கப்பட்ட பெண் மூலம் பிறந்த வாரிசா? அல்லது இது வேறா? என்பது  தெளிவா சொல்லப்படலை.. ஒரு வேளை தான் கெடுக்கப்பட்டதால் பிறந்த பொண்ணு கிட்டே மன்னிப்பு கேட்பதாக சொல்லி இருந்தால் கதையில் இன்னும் அழுத்தம் கூடி இருக்கும்..

இந்தப்படம் பார்க்க உருக்கமா இருந்தாலும் லாஜிக் மிஸ்டேக்ஸ், கதை கரு ஆகிய விஷயங்களில் சராசரி எனும் நிலை தான்..


மனசாட்சி இல்லாத கலைஞரே! அரசாட்சி செய்யும் ஜெவே! அறிஞர் அண்ணா மகனை சாக விட்டது சரியா?

ஆஸ்பத்திரிக்குப் பணம் கட்டமுடியாமல் செத்துப் போன அண்ணாவின் மகன்!


மிழக அரசியலில் அறிஞர் அண்ணா என்ற பெயர், ஒரு மந்திரம்! ஆனால், அந்த அண்ணாவின் பெயரைச் சொல்லி தங்களை வசதி ஆக்கிக் கொண்ட சில கட்சிக்​காரர்கள் கைவிட்ட நிலையில், கடந்த வெள்ளி அன்று இறந்துபோனார், அவரது வளர்ப்பு மகனான சி.என்.ஏ.இளங்கோவன்! 

இளங்கோவனிடம் பல வருடங்​களாகத் தனி உதவி​யாளராக இருந்த சண்முகராஜ், நெகிழ்வான குரலில் நம்முடன் சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

''பேரறிஞர் அண்ணா அவர்கள் - பரிமளம், இளங்​கோவன், ராஜேந்திரன், கௌதமன் என்று நான்கு பேரைத் தத்தெடுத்து வளர்த்தார். தன் இரண்டாவது வளர்ப்பு மகனான இளங்கோவன் மீது அவ்வளவு பிரியம் அண்ணாவுக்கு. இன்று ஆட்சியிலும், கட்சியிலும் இருக்கும் பல எம்.பி-க்கள், மந்திரிகள் எல்லோரையும் கைதூக்கி​விட்டவர் இளங்கோவன்அய்யாதான்!


தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளில் உள்ள பலர் கோடிகளாக சம்பாதித்த​போது, இந்த அண்ணாவின் வளர்ப்பு மகன் குடும்பத்தாரோ குடியிருக்கக்கூட சொந்த வீடு இல்லாமல் வாழ்ந்தார்கள்.

சிங்கிள் பெட்ரூம் கொண்ட அரசு வாடகைக் குடியிருப்பில் சுமார் 20 ஆண்டு காலம் வாழ்ந்தார். இதோ, இப்போது டபுள் பெட்ரூம் வீட்டுக்கு வந்து ஆறு மாதங்கள்தான் ஆகி இருக்கிறது. இதை வாங்குவதற்கு மூன்று ஆண்டுகள் அவர் கஷ்டப்பட்டதை நேரில் பார்த்து வருந்தியவன் நான்.

அண்ணாவை வெளியீட்டாளராகக்​கொண்டு வெளிவந்த 'காஞ்சி’ எனும் பத்திரிகையின் ஆசிரி​யராக இளங்கோவன் இருந்தார். மூத்த பத்திரிகையாளர் எனும் தகுதியில் மாதம் 3,000 ஓய்வூதியத்துக்கு விண்ணப்பித்தார். 'அண்ணாவின் வளர்ப்பு மகன் 3,000 ஓய்வு ஊதியத்துக்காக விண்ணப்பிக்க வேண்டியிருக்கிறதே... அவரின் துன்ப நிலை என்ன?’ என்பது அப்போதைய முதல்வர் யோசித்திருக்க வேண்டாமா? ஓடி வந்து உதவி செய்திருக்க வேண்டாமா?!


இரண்டு மாதங்களுக்கு முன்பு வழுக்கி விழுந்து விட்டார் இளங்கோவன். மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். சரியாக கவனிக்கப்படவில்லை. அறுவை சிகிச்சைக்குப் பிறகு சீழ் பிடித்து, அது ரத்தத்தில் கலந்து, மரண வாயிலுக்கு அவரை இழுத்துவந்துவிட்டது. அதன் பிறகு இன்னொரு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றோம். 

இரண்டு மருத்துவமனைகளிலும் மருத்துவச் செலவே, இரண்டு மூன்று லட்சங்கள் ஆகிவிட்டது. அங்கே இங்கே என்று அலைந்து, நண்பர்களின் உதவியால்தான் அவரை டிஸ்சார்ஜ் செய்ய முடிந்தது. 'அண்ணாவின் மகன் மருத்துவச் செலவுக்குக்கூட வழியின்றிதான் இறந்துபோனார்’ என்கிற உண்மை, அண்ணாவைத் தங்கள் கொடிகளில் எல்லாம் வைத்திருக்கும் கட்சிக்காரர்களுக்குத் தெரியுமா?


தேவைகளே இல்லாத மனிதர் இளங்கோவன். சட்டையைக்கூட இஸ்திரி போடாமல்தான் அணிவார். அவர்  நினைத்து இருந்தால், அரசியலில் களம் கண்டிருக்க முடியும். ஆனால், வாரிசு அரசியலை ஒருபோதும் ஆதரித்தது இல்லை அண்ணா.

தன்னால் எந்த ஒரு களங்கமும் தன் தந்தை ஆரம்பித்த கட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதில் இவர் மிகவும் கவனமாக இருந்தார். 'தகுதி இருந்தால் தலைவன் ஆகலாம்!’ என்றவர் அண்ணா. அதற்கு ஏற்றபடியே வாழ்ந்தும் காட்டினார்.

அந்தப் பெருமைகொண்ட குடும்பத்தாரின் மாண்பு, 'தனயனாக இருந்தால், தலைவன் ஆகலாம்!’ என்று இன்று வாரிசு அரசியல் நடத்துபவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது!'' என்று வருத்தத்துடன் முடித்தார் சண்முகராஜ்.

தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரை டிஸ்சார்ஜ் செய்யும் போது 30 ஆயிரம் ரூபாய் குறைந்ததாம். உறவினர் ஒருவரின் நண்பர் இந்த பரிதாப நிலையைப் பார்த்து தனது கிரடிட் கார்டு மூலமாகப் பணம் கொடுத்தாராம். இளங்கோவன் மனைவி விஜயாவும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளுவும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்களாம். அந்தத் தொடர்பில் தயாளுவுக்கு போன் செய்து சொல்லி இருக்கிறார்.

10 ஆயிரம் கொண்டுவந்து கொடுத்துப் பார்த்தாராம் தயாளு. சொந்த வீடும் இல்லாமல், சொத்தும் இல்லாமல், பல லட்சம் கடனை வைத்துவிட்டுப் பரிதாபமாகச் செத்துப் போயிருக்கிறார் இளங்கோவன். ''அவர்கள் வாழ்ந்த வறுமையை என் வாயால சொல்ல மாட்டேன்...'' என்று உறவினர் ஒருவர் ஒதுங்கியபடி அழுததைப் பார்த்தபோது....'அண்ணா’ ஒரு செல்லிங் பாயின்ட் என்பதை அவரது குடும்பம் மட்டும் உணரவில்லை.


பகுத்தறிவுக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் குடும்பம் என்பதை நிரூபிக்கும் வகையில், இளங்கோவனின் மகள் கண்மணிதான் இறுதிச் சடங்குகளைச் செய்தார். 'விட்டுட்டுப் போயிட்டீங்களே அய்யா!’ என்று கண்களில் நீர் தளும்பி நிற்கிறார், மனைவி விஜயா இளங்கோவன். இந்த இருவர் கண்ணீரையும் துடைக்க வேண்டியது அந்த இரண்டு கழகங்களும்தான்!


இதயம் கனக்குதே அண்ணா!

நன்றி - விகடன் 

சி.பி கமெண்ட் -  அரசியலில் கலைஞராகடும், ஜெ வாகட்டும் கோடிக்கணக்கில் சம்பாதித்தது ஊருக்கே தெரியும், அவர்கள் அபிமானிகளால் கூட அதை மறுக்க முடியாது.. எப்படியோ சம்பாதிக்கட்டும்,அந்த கோடிகளில் இருந்து சில லட்சங்களை தாராளாமாக தர மனம் வரவில்லையே ஏன்? அண்ணாவின் ஓட்டு வங்கி மட்டும் வேண்டும்..????அவர்கள் இருவருக்கும் மனசாட்சி இனி உறுத்தாதா?


ஆகஸ்ட் மாத ராசிபலன்கள் -பிரபல ஜோதிடர் கட்டுரை

ராசிபலன்! - 'ஜோதிடரத்னா' கே.பி.வித்யாதரன்




a


thanx -vikatan

Tuesday, August 09, 2011

காதல் மோசடி சட்டம்!!!!!!!!!!!!!!!!!???????


1. சமச்சீர் கல்வி யை 10 நாட்களில் செயல்படுத்த வேண்டும்:  தீர்ப்பு:# மேடம் , இனிமேலும் எவனாவது உங்க ராசியான எண் 9 னுசொன்னா அவனை துரத்திடுங்க. ஆகஸ்ட் 9ந்தேதி தீர்ப்பு பாருங்க..

------------------------

2.கோர்ட் தீர்ப்பைக்கேட்டதும் எனக்கு கனிமொழியே ரிலீஸ் ஆனது போல் இருக்கிறது - கலைஞர் குதூகலம் @ இமேஜினேஷன்


--------------------------

3. அழகாக இருக்கும் பெண் நம்மை சலனப்படுத்துகிறாள்.அறிவாக இருக்கும் பெண் நம்மை கேள்வி கேட்டே படுத்துகிறாள்

------------------------

4. மனைவி ஆன பிறகு காதலியாய் இருந்த போது அவளிடம் காட்டி வந்த மிகை அன்பை காட்டத்தேவை இல்லை என்ற திமிர்த்தனம் ஆணுக்கு வந்துவிடுகிறது # ஜெண்ட்ஸாலஜி

---------------------------

5. திருமணத்துக்காக நயன் தாரா  மதம் மாறினார் # பிரபுதேவா கடைசி வரை   மனசு மாறிடாம இருந்தா சந்தோஷம்.

--------------------



6.வாரத்தில் 6 நாட்கள் குடும்பத்தை ஒதுக்குகிறோம், ஞாயிறு மட்டும் குடும்பத்துக்காக ஒதுக்குகிறோம்

--------------------------

7. அயல்மகரந்த சேர்க்கை பற்றி பாடம் டீச்சர் நடத்துகையில் மாணவர்கள் மட்டும் நமுட்டுச்சிரிப்புடன் பாடத்தை கவனிக்கிறார்கள்

---------------------

8. நான் என்ன உனக்கு எதிர்க்கட்சியா? காரணமே கூறாமல் கண்களால் என்னை கைது செய்தது ஏன்?

------------------

9. 5 வருடங்களுக்கு ஒரு முறை ஆட்சி மாறுகிறது, 5 நிமிடங்களுக்கு ஒரு முறை பெண்களுக்கு மனசு மாறுகிறது

---------------------

10. நைட் பார்டியில் பங்கேற்று டைட் ஆக விருப்பமில்லை - டாப்ஸி! # டி ஆர் பேத்தி மாதிரியே பேசறீங்களே? அப்போ பகல் பார்ட்டின்னா ஓக்கேவா?

-------------------------



11. எனக்கு கூச்ச சுபாவம்: கவர்ச்சி நாயகி கத்ரீனா சொல்கிறார்!! # தமாஷ் பண்ணாதீங்க, உங்க ஸ்டில்ஸை பார்க்க எங்களுக்குத்தான் கூச்சமா இருக்கு

------------------------

12. கில்மா படமான கருங்காலி பெண்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம் என அங்காடித்தெரு அஞ்சலியே டி வியில் விளம்பரம் செய்வது செம காமெடி,அடுத்து சாருநிவேதிதாவும் இந்தபடத்தை பாராட்றாராம்.அம்மணி உஷார்... !!!!!!!!!!

--------------

13. எப்போது வேண்டுமானாலும் வெளியேறிக்கொள்ளலாம் என்ற நிபந்தனை அற்ற ஜாமீனில் உன் உள்ளத்தில் என்னை உட்கார வைத்தாய், நான் வெளியேறவே இல்லை

-------------------------

14. உன் மீது அன்பு செலுத்துவது எனக்கு மிக எளிதாக இருக்கிறது,உன்னிடம் இருந்து அன்பை பெறுவது மிக அரிதாக இருக்கிறது

------------------------

15. கோயிலுக்குப்போகும்போதெல்லாம் உனக்காக என் பிரார்த்தனைகள், உன்னிடம் பேசும்போதெல்லாம் எனக்காக உன் பிரயத்தனங்கள்

--------------------------



16. என் கன்னம் வழியே கண்ணீர் வழிந்தோடினாலும் சலனம் அடையாத வன்மையான மனம் உனக்கு,உன் கண்கள் பள பளத்தாலே தாங்க முடியாத மென்மையான மனம் எனக்கு

-----------------------------

17. என்னை நினைக்கையில் உன் இதயத்தில் அன்பு சுரப்பது இயற்கை,என்னைப்பார்க்கையில் உன் கண்ணில் வெறுப்பு தெறிப்பது செயற்கை

----------------------

18. ”உங்க கிட்டே விட முடியாத கெட்ட பழக்கம் ஏதாவது இருக்கா? “

“உன் நினைவுகளை என்னால் விட முடியவில்லை என்ற ஒரே ஒரு  கெட்ட பழக்கம்தான் அன்பே!”

-------------------------------

19. முதல்வர் இருக்கும்போதே துணை முதல்வரை உருவாக்கியது மாதிரி உன் இதயத்திற்கு துணை இதயமாய் என் இதயம்


---------------------

20. என்னைத்தவிர  யாரையும் நீங்க நினைச்சதே இல்லையா? எப்படி நம்பறது?

என் மனதை வெற்றிடம் ஏதும் இன்றி நீயே  நிரப்பிய பின் ஏன் அந்த சந்தேகம் உனக்கு?

--------------------



21. காதல் மோசடி சட்டம் கொண்டு வந்தால் ஜெயில்கள் எல்லாம் ஒயில்களின் இருப்பிடம் ஆகி விடும்

------------------------
22.பூமியின் ஒவ்வொரு மூலைகளிலும் நல்ல பெண்கள் இருக்கிறார்கள்,ஆனால் அதிர்ச்சியான விஷயம் பூமி ஒரு வட்டம்,அதற்கு மூலைகளே இல்லை என்பது தான்

--------------------------


23. வாழ்வில் ஒரே ஒரு  வரி எல்லா கதவுகளையும் திறக்கும் - இழு  & தள்ளு 

---------------------

24. போகும்போதே ரசித்து விட்டுப்போ , திரும்ப வந்தால் இருக்காது, பஸ் ஸ்டாப் ஃபிகர் # நாங்க திருந்த இன்னும் 3 வருஷம் இருக்கு 

-----------------------

25. தனிமையாக இருப்பதாக நீ நினைக்க வேண்டாம்,. ஒவ்வொரு நொடியிலும் யாராவது உன்னை நினைத்திருக்கக்கூடும்,இந்த நொடியில் நான்

-------------------------

RISE OF THE PLANET OF THE APES-தமிழ்ஈழ KNOT டு சுட்டிகளுக்கான ஹிட்டு - சினிமா விமர்சனம்



http://files.g4tv.com/ImageDb3/275828_S/rise-of-the-planet-of-the-apes-uk-trailer.jpgஅனகோண்டா, ஜூராசிக் பார்க்,கோட்சில்லா படங்களுக்குப்பிறகு குழந்தைகளுடன்  தியேட்டரில் போய் பார்க்க நல்லதொரு பொழுதுபோக்குப்படம் வரவில்லையே என ஏங்கிக்கொண்டிருந்தவர்களுக்கு அடிச்சது ஒரு ஜாக்பாட்.. ஜாலியான ,அனைவரும் பார்க்கும் அளவில் ஒரு ரசனையான படம்.

இந்த மாதிரி படங்களை பார்க்கறதுல என்ன ஒரு பெனிஃபிட்னா நாம நேரில் பார்க்க முடியாத , அல்லது பார்க்க சந்தர்ப்பம் கிடைக்காத அழகழகான லொக்கேஷன்ஸ்சை பார்த்துக்கலாம் ஆசை தீர.. 

கொரில்லாக்குரங்கு ஆராய்ச்சி நிலையத்தில் பணி புரியும் ஹீரோ அவங்களோட புத்திசாலித்தனத்தை அதிகப்படுத்தும் ஆராய்ச்சியில் இருக்கிறான்.ஒரு சந்தர்ப்பத்துல ஒரு கொரில்லாக்குட்டியை வீட்டுக்கு எடுத்துட்டு வந்து வளர்க்கிறான். அது 2 வது வயசிலேயே மனிதனின் 8 வது வயதில் பெறும் புத்திசாலித்தனத்துடன் வளருது..

ஹீரோவோட அப்பாவுடன் பக்கத்து வீட்டுக்காரர் சின்ன விஷயத்துக்காக சண்டை போடறப்ப அந்த கொரில்லாக்குட்டி பக்கத்து வீட்டுக்காரரை தாக்கி கடிச்சு வெச்சுடுது. உடனே போலீஸ்ல புகார் சொன்னதால அந்த கொரில்லாக்குட்டியை மறுபடியும் ஆராய்ச்சி நிலையத்துக்கே கொண்டு போய் ஒப்படைக்க வேண்டிய சூழ்நிலை..

சில நாட்கள் கழிச்சு ஹீரோ மேலிடத்துல பர்மிஷன் வாங்கி மீண்டும் அந்த குட்டியை தன் வீட்டுக்கு அழைத்துப்போலாம்னு முடிவு பண்றப்போ அந்த குட்டி வர மாட்டேங்குது.. தன்னோட இனத்தின் வாழ்வுக்காகவும், விடுதலைக்காகவும் பாடுபட முடிவு செய்யுது.. 

அங்கே அடை பட்டுக்கிடக்கும் எல்லா கொரில்லாக்களையும் விடுவிச்சு மனிதர்களுக்கெதிரா எப்படி போராடுது.. என்ன ஆகுது?ங்கறதுதான் கதை..

இந்தக்கதையோட சிறப்பம்சம் என்னான்னா அடிமைப்பட்டு கிடக்கும் சமூகங்கள் தங்கள் கதையை நினைவு படுத்திக்கொள்ள  ஒரு சாதனமா இதை பயன்படுத்தறதுதான். உதாரணமா தமிழர்களுக்கு ஈழத்தமிழர்களின் போராட்டம் நினைவு வரும் .




http://www.daemonsmovies.com/wp-content/uploads/2011/07/rise-of-the-planet-of-the-apes-movie-photo-07-e1310357511951-550x385.jpg

நினைவில் நின்ற வசனங்கள்

1.  நீ நினைச்சா எது வேணாலும் செய்ய முடியும். 

அதுவும் சரிதான், உன்னை வேலையை விட்டுக்கூட தூக்க முடியும், செய்யவா?

2.  எனக்கு இங்கே எல்லாமே தெரியும்.. 

ஆமா, மனித மூளை எப்படி செயல்படுதுங்கறதைத்தவிர எல்லாமே தெரியும்./. 

3.  இந்த கொரில்லாக்குட்டியை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. 

அப்பா, கொஞ்ச நாள் தான் அது நம்ம கூட இருக்கும், அதிகமா பாசம் வெச்சு  அட்டாச்மெண்ட்டை வளர்த்துக்காதீங்க.

4. உங்கப்பா இனி இங்கே இருக்கக்கூடாது.ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிடுங்க, ரொம்ப டிஸ்டர்ப்பா இருக்கு.. 
இது என் வீடு, எப்பவும் நான் இங்கேயே தான் இருப்பேன். 

5.  கொரில்லா - ஜாக்கிரதை, மனிதர்கள் தங்களை விட புத்திசாலிகளாக கொரில்லாக்கள் திகழ்வதை விரும்புவதில்லை. 


6. இயற்கையை உன்னால மாத்திடவே முடியாது.. 


7. ஹீரோயின் ( டாக்டர்) -  கொரில்லாக்குட்டி உங்க கிட்டே என்ன சொல்லுது>?

ஹீரோ - டாக்ரம்மாவை வீட்டுக்கு சாப்பிடக்கூப்பிட சொல்லுது.  ( ஹூம், எப்படி எல்லாம் பிட்டு போடறாங்கப்பா..!@!கேப் கிடைச்சா கிடா)
http://www.123telugu.com/photo_gallery/var/resizes/Bollywood/Movies/R/Rise_of_the_Planet_of_the_Apes/Set_1/Rise_of_the_Planet_of_the_Apes.jpg?m=1312343333


இயக்குநர் சபாஷ் பெறும் இடங்கள்

1. கொரில்லாக்குட்டி தன் அம்மா இறந்த செய்தி , இறந்த இடம் குறித்து ஹீரோ சொல்லும்போது காட்டும் முக பாவனைகள் டாப் க்ளாஸ்.. வெல்டன் டைரக்டர்.. 

2.  கொரில்லாக்குட்டி ஹீரோவின் வீட்டில் வளரும்போது செய்யும் லூட்டிகள் சின்னக்குழந்தைகளை குதூகலப்படுத்தும், நம்மை மீண்டும் சின்னக்குழந்தைகள் ஆக்கும், அந்த அளவு அழகான இயக்கம். 

3.ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கும் காதல் வருவது கூட கொரில்லாக்குட்டியின் சிகிச்சையின்போதுதான் என்பதாக திரைக்கதையில் மூவரையும் சம்பந்தப்படுத்தியது. 

4. தனி ஒரு ஆளாக கொரில்லா தன் இனத்தை தன் கட்டுக்குள் கொண்டு வர செய்யும் நடவடிக்கைகள். 

5. ஹீரோ கொரில்லாக்குட்டியை மீண்டும் தன் வீட்ட்க்கு அழைத்துச்செல்ல வரும்போது அது ஜ்=ஹீரோவுக்கு முதுகைக்காட்டி நின்று தன் கோபத்தை வெளிப்படுத்துவது.

6. க்ளைமாக்ஸில் ஹீரோ கொரில்லாவை மீண்டும் அழைக்கையில் “ இது என் இடம்” என்று வாய் திறந்து வசனம் பேசுவதும், முதல் முறை அது பேசுவதைக்கண்டு தன் ஆராய்ச்சியின் உச்ச பட்ச வெற்றி கண்டு பூரிப்பு, எதிர்பாராத அதிர்ச்சியின் கலவையாக ஹீரோவின் நடிப்பு எல்லாம் டாப் ரகம். 


http://static7.businessinsider.com/image/4e2dd05feab8eac638000000/immortals-freida-pinto.png

 இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1. ஒரு காட்சியில் ஒருவர் இன்னொருவர் மீது இருமுகிறார், ஏதோ தெறித்து அவர் மீது விழுகிறது,.. ஏதோ வைரஸ் பரவியது போல காட்சிப்படுத்தி விட்டு பின் அது பற்றிய சுவடே காணோம்,., எடிட்டிங்க் ஃபால்ட்டா? செகண்ட் ஆஃப்ஃபை வேற மாதிரியும் எடுக்க ட்ரை பண்ணி இருப்பீங்களா?

2. ஹீரோ தான் கண்டு பிடித்த கொரில்லாவுக்கான மருந்தை முதன் முறையாக மனிதர்க்கு சோதனை செய்கையில் தன் அப்பாவுக்கு கொடுக்கிறாரே? அது எப்படி? யாராவது தன் சொந்த அப்பாவை ரிஸ்க்காக சோதனைக்கு உட்படுத்துவார்களா?

3. கொரில்லாக்குட்டியை போலீஸ் வந்து எடுத்துச்செல்லும்போது பக்கத்து வீட்டுக்காரரை தாக்கியதற்காக ஹீரோ மேல் வழக்கு ஏதும் போடவில்லை.இந்த குட்டியை ஆராய்ச்சி கூடத்தில் இருந்து அனுமதி இன்றி அழைத்துசேன்றது ஏன்? என்ற கேள்வியும் கேட்கவில்லை.. அது எப்படி?

4. ஆராய்ச்சிக்கூடத்தில் தன் இனம் முழுவதையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது இன்னும் நம்பும்படி சில சீன்களை காட்டி இருக்கலாம். 

5. க்ளைமாக்சில் திடீர் என்று அதுவரை கொரில்லாக்கள் மேல் இரக்கம் வருவது மாதிரி திரைக்கதை அமைத்டு விட்டு திடீர் என வில்லன் ரேஞ்சுக்கு காட்டி இருக்க வேணாம்.. 

http://www.joblo.com/video/media/screenshot/Rise-of-the-Planet-of-the-Apes-TV-Spot2.jpg



இந்தப்படம் ஏ செண்ட்டர்களில் 50 நாட்கள் , செண்ட்டர்களில் 30 நாட்கள் , சி செண்ட்டர்களில் 20 நாட்கள் ஓடும். 

ஈரோடு வி எஸ் பி தியேட்டரில் படம் பார்த்தேன். 

ஆங்கிலப்படத்துக்கு மார்க்குகள் போடுவதில்லை விகடன்.

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க் - நன்று


http://www.impawards.com/2011/posters/rise_of_the_planet_of_the_apes__ver7.jpg
டிஸ்கி-1 ஹீரோயினைப்பற்றி  ஒரு தகவல், இந்த பதிவுக்கு சம்பந்தமே இல்லாதது. எக்சாம்ல கொஸ்டீன் பேப்பருக்கு சம்பந்தமே இல்லாம ஏதாவது ஒரு பதிலை தருவோமே அது போல.. அதாவது  ஹீரோயின் freida pinto ஹாலிவுட் கில்மா படமான  immortals என்ற படத்தின் ஹீரோயின்.. படம் இன்னும் ரிலீஸ் ஆகலை. ஆனா சுட சுட விமர்சனம் வரும். 


டிஸ்கி 2  - கீழே இருந்து 3 வது ஸ்டில்லா, இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள் டைட்டிலுக்கு மேலே  பல்பு எரிஞ்சா மாதிரி பளிச்னு இருக்கே பாப்பா அந்த ஸ்டில் அந்த கில்மா பட ஸ்டில் தான் .. ரசித்து மகிழவும்.


நான் இப்போ தனியா இருக்கேன் - அசின் அம்சமான பேட்டி -காமெடி துவம்சமான லூட்டி

http://tontenk.files.wordpress.com/2010/11/asin-hot252822529.jpeg

நான் இப்போ சிங்கிள்!


பாலிவுட் கான்களின் செல்ல மான்... அசின்!


 'கஜினி’க்குப் பிறகு சல்மானு டன் அசின் ஜோடி போட்டு ஆடிய 'ரெடி’ பாக்ஸ் ஆபீஸில் வெடி வெடிக்கும் உற்சாகம் அசினிடம் தெரிகிறது...

சி.பி - ஆமா,  தனுஷ் -ன் உத்தம புத்திரன்  ரீமேக் படம் தானே?ஆனா அதுல அசினுக்கு வாய்ப்பு கம்மி தான் ,வசனத்துக்குத்தான் பேரு.. 


1. ''ஹாய்... எப்படி இருக்கீங்க?''


சி.பி - அசினின் மைண்ட் வாய்ஸ் - நிம்மதியா இருக்கேன், நீங்க வர்ற வரை ,இப்போ வந்துட்டீங்க இல்ல..!!!!!!!!!!!!


''சூப்பர்! பாலிவுட்ல ரெக்கார்ட் பிரேக் கலெக்ஷன் சினிமா வரிசையில் 'கஜினி’, 'ரெடி’ ரெண்டு படங்களும் டாப் 5 இடங்களுக்குள் இருக்கு. இந்தியிலும் என் படங்கள் தொடர்ந்து ஹிட் ஆகிறதுக்காக கடவுளுக்கு நன்றி சொல்லிட்டு இருக்கேன்.   அப்புறம், தமிழ்நாடு எப்படிப்பா இருக்கு. ஐ மிஸ் சென்னை!''



சி.பி - என்னது? நீங்க மிஸ் சென்னையா? ஓ! சென்னையை மிஸ் பண்ணறீங்களா? அதானே பார்த்தேன்.. 



http://www.hotbollywoodactress.net/data/media/149/Hot_Asin.JPG
2. ''தமிழ்ல 'காவலன்’ நடிச்சீங்க... சல்மான் உங்க ஃப்ரெண்ட். அவர்கூட இந்தி ரீ-மேக் 'பாடிகார்ட்’லயும் நீங்களே நடிச்சு இருக்கலாமே?''


சி.பி - என்னமோ அவங்க கூப்பிட்டு இவங்க வேணாம்னு ரிஜக்ட் பண்ணுனா  மாதிரியே கேட்கறீங்களே?




''சல்மானோடு 'லண்டன் ட்ரீம்ஸ்’, 'ரெடி’ன்னு ரெண்டு படங்கள் தொடர்ந்து பண்ணியாச்சு. தொடர்ந்து நடிச்சா, ரசிகர்களுக்கு காம்பினேஷன் போர் அடிச்சிரும். அதான் குட்டி பிரேக். திரும்பவும் சேர்ந்து நடிப்போம்!''


சி.பி - ஏம்மா, பிரபு - குஷ்பூ  ஜோடி 28 படங்கள் ஜோடியா நடிச்சாங்க,எங்களுக்கு போர் அடிச்சுதா? தமிழன் எதையும் தாங்குவான், யூ தூள் கிளப்பலாம்.  


http://www.bollywood91.com/wp-content/uploads/2011/06/Bollywood-Hot-Asin-Say-No-To-Bikini-in-Housefull-2.jpg

3. ''இந்தி ஹீரோக்களைப்பத்திச் சொல்லுங்க?''


''இந்தி சினிமாவில் என்னைப் பிரமிக்கவைக்கிறவர் அக்ஷய் குமார். அங்கே எல்லா ஹீரோக்களும் 10 மணிக்கு மேலதான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருவாங்க. ஆனா, அக்ஷய் 4 மணிக்கு எழுந்து, 6 மணிக்கு ஸ்பாட்டில் இருப்பார். அவ்வளவு சின்சியர்!''


சி.பி - நீங்க 3 மணிக்கு எந்திரிச்சு 5 மணிக்குப்போயிருப்பீங்க.. ஹி ஹி 



http://hindi.way2movies.com/wp-content/uploads/2011/01/Asin-Thottumkal.jpg


4. ''தமிழ் சினிமாவுக்குத் தொடர்ந்து தேசிய, சர்வதேச அங்கீகாரங்கள் கிடைச்சுட்டு வருது. ஆனா, நீங்க என்னமோ 'நல்ல கதை அமைஞ்சாதான் நடிப்பேன்’னு சொல்லிட்டே இருக்கீங்க. ஏன், எதுவும் அமையலியா?''


''நல்ல கதை மட்டும் கிடைச்சாப் போதாது. அதில் என் கேரக்டர் எப்படி இருக்குன்னு பார்க்கணும். யார் ஹீரோ,  எந்த புரொடியூசர்ங்கிறதும் முக்கியம். புரொடியூசர் சரி இல்லைன்னா, படம் பாதியிலேயே நின்னுடும். பிரேக் விழுந்திருச்சுங்கிறதுக்காக, ஏதேதோ படங்களில் நடிச்சு, நம்ம இமேஜை டேமேஜ் பண்ணிக்க முடியாது!''


சி.பி - ஆமாமா, புரொடியூசர் பிக் பார்ட்டியா (BIG PARTY)  இருக்கனும்,அப்போதான் சம்பளம் ,பேட்டா எல்லாம் அள்ல முடியும். PIG PARTYயா இருந்தா எப்படி?


5. ''உங்க வாய்ஸ் ரொம்ப ஸ்வீட்டா இருக்கே. நீங்கள் ஏன் பாடக் கூடாது?''

சி.பி - கேள்வி கேட்ட தம்பி, கர கர குரல்ல பேசற பிரியாமணிட்ட பேட்டி எடுத்தப்பக்கூட இதே மாதிரி தான் ஐஸ் வெச்சீங்க. 




''தேங்க்ஸ்! கே.எஸ்.ரவிக்குமார் சார் 'தசாவதாரம்’ படத்துல 'முகுந்தா முகுந்தா’ பாட்டை என்னைத்தான் முதல்ல பாடச் சொன்னார். 'கஜினி’ படத்திலும் 'ரஹத்துல்லா’ பாட்டை முருகதாஸ் பாடச் சொன்னார். ஆனா, இப்போதைக்கு நடிப்பில் மட்டும்தான் கவனம். பாடுறதுல்லாம் அப்புறம்!''


சி.பி - அதுவும் சரிதான், பாடுனா சம்பளம் ரூ 20,000 நடிச்சா 50 லட்சம்.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgKMV8JZO5s6XuOxzObyQ1unDFW9xBQYUDwnod_DyPmr-oGcOLHDT3LC0LEpl4OGgz-2lu1yqu-q9kK-7kyUg9fVT8C6akzRdcD7hiXaXAzhwWOULuVsj3u7jS6eO6YL5oDhBMF1EelRsar/s1600/asin+thottumkal+hot+photo+%25286%2529.jpg

6. ''எப்போ பார்த்தாலும் மொபைல்ல சாட் பண்ணிட்டே இருக்கீங்க. கிட்டத்தட்ட அதுக்கு அடிக்ட் ஆகிட்டீங்கன்னு நியூஸ் வருதே?''


''பாலிவுட்ல பாப்புலரா இருந்தா, தினம் ஒரு கிசுகிசு வரும். ஸோ... நான் பாப்புலரா இருக்கேன்னு அர்த்தம். ரொம்ப சந்தோஷம்!''


சி.பி - மேடம், நீங்க ஒரே மெசேஜை 20 பேருக்கு குரூப் மெசேஜா அனுப்பறீங்களாமே? உண்மையா?

http://www.wowtelugu.com/Gallery/actress/Asin/asin_b.jpg


7. ''அப்புறம் எப்போ கல்யாணம்?''

சி.பி - மார்க்கெட் ஸ்டெடியா உள்ள நடிகைகளுக்கு   தமிழ்ல பிடிக்காத ஒரே வார்த்தை கல்யாணம், கல்யாணம் ஆன நடிகைகள் 6 மாசத்துல பிடிச்ச வார்த்தை டைவர்ஸ்.. 




''நல்லாத்தானே பேசிட்டு இருக்கேன். காதல்பத்தியும் யோசிக்கலை. கல்யாணம்பத்தியும் யோசிக்கலை. நான் இப்போதைக்கு சிங்கிள்!''


சி.பி - மேடம் நீங்க சிங்கிள் தான்,ஆனா தங்கற ஹோட்டல்ல எல்லாம் எப்பவும் டபுள்காட்ல தான் தங்கறீங்களாமே? சிங்கிள் கூட மிங்கிள் ஆகற அங்கிள் யாருங்கோ?

நன்றி - விகடன்
[ Top ]

Monday, August 08, 2011

ஒரு பெண்ணின் உச்ச பட்ச அழகு பொங்கி வழிவது எப்போது?



1. நகையில் பெண்களுக்கு ஆர்வம் அதிகம் என்பதால்தான் ஆண்களின் காதல் தோல்வியை எள்ளி “நகை”யாடுகிறார்களோ, என்னவோ?

-------------------------
2. ”உங்க காதலை நான் நிராகரிச்சும் நீங்க சோகமயம் ஆகலை, எப்டி? 

“ என் அன்பை உணர முடியாத உனக்கு என் வலியை மட்டும் உணர முடியுமா?

------------------------


3. நீ தந்த நிராகரிப்பின் வலிகளை நான் உள் வாங்கிக்கொண்டேன்,சுத்தீகரிக்கப்பட்ட அந்த வலிகள் உன் மீது அன்பாகப்பொழிகின்றன

-------------------------


4. திமுகவை யாராலும் அழிக்க முடியாது - கலைஞர் # தலைவரே! உங்க கட்சி என்ன எய்ட்ஸ் நோயா?

--------------------

5. துணிகளை துவைக்கும் முன் சோப்பு நீரில் அவைகளை ஊற வைப்பது மாதிரி உன்னைப்பிரியும் முன் உன் நினைவுகளை கொஞ்சம் ஊற வைத்துக்கொள்கிறேன் சில கவிதைகளில்

----------------------------




6. கற்பனை என்பது நாலெட்ஜை விட சக்தி வாய்ந்தது, ஏன்னா நாலெட்ஜ் லிமிட்டெட், கற்பனை அன்லிமிட்டட்.

------------------------

7. எப்போது நீ ஃபோன் செஞ்சாலும் முதல் ரிங்கில் நான் எடுத்துடுவேன், கடைசி ரிங்க் வரை  காக்க வைத்து வேண்டும் என்றே லேட் பண்ணி நீ எடுப்பாய்

------------------------------

8. தம்பதிகளுக்கு நடுவே படுத்திருக்கும் குழந்தையை தட்டிக்கொடுக்கும் இரண்டு கைகள் தொட்டுக்கொள்வது கூடலுக்கான அழைப்பின் சமிக்ஞை

--------------------

9. உலகத்தில் 10% ஆண்கள் நல்லவர்கள், மீதி 90% ஆண்கள் நல்லவர்களாய் வெளியே காட்டிக்கொள்ள முக மூடியுடன் சுற்றுகிறார்கள்


--------------

10. ஐ லவ் யூ சொல்றப்ப பொண்ணுங்க கண் கலங்கறாங்களே? ஏன்? வசமா மாட்டிக்கிட்டானே பையன்னு ஒரு இரக்கம் தான்

---------------




11. டியர்,நாம 2 பேரும் சேர்ந்தா பாரம்பரியம் மிக்க கட்சி ஆகிடுவோம்.

என்னடி உளர்றே?

நீங்க கறுப்பு, நான் சிவப்பு # கலாட்டா கடலை

-------------------------------


12. டியர், உன தலைக்கு தேங்காய் எண்ணெய் தடவ வேணாம், நல்லேண்ணெய் தடவு.

ஏன் டார்லிங்க்?

அப்பவாவது உனக்கு நல்ல எண்ணம் வருதா?ன்னு பார்ப்போம்.

------------------------------

13. ஊர்ல 1008 ஃபிகர்ங்க இருந்தும் ஏன் என் கிட்டே மட்டும் ஐ லவ் யூ சொல்றீங்க?

மீதி 1007 பேரும் டேலண்ட் கேர்ள்ஸ், நீ மட்டும் தான் பேக்கு # கலாட்டா கடலை

-----------------------------

14. டியர்,எதுக்காக பர்ஃபியூம் 500 மிலி  பாட்டில் கிஃப்ட்டா தர்றே?

செண்ட் ஆஃப் பார்ட்டின்னு சொன்னியே?

------------------------

15. டியர்,உங்களுக்காக இங்கிலீஷ்ல ஒரு கவிதை எழுதி இருக்கேன்.

நாசமா போச்சு,  நீ எழுதுன தமிழ்க்கவிதையே எனக்கு புரியாது, கோனார் நோட்ஸ் வேணும்

-----------------------



16. டியர்,நீங்க என் நிழல் மாதிரி.

ஹைய்யா, எப்பவும் கூடவே இருக்கனும்னு நினைக்கறியா?

இல்ல ,பகல்ல மட்டும் என் பக்கத்துல  நைட் ஆனா கிளம்பிடனும்.


------------------------

17.  சென்னை யில் தேங்கியுள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற சிறப்பு தூய்மைப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும் ஜெ # அப்போ சாரு நிவேதிதா எங்கே குடி போவாரு?


-------------------------

18. என் காதலை வெளிப்படுத்திய போது ஏன் அழுதீங்க?

உன் அன்புக்கு இணையாக கண்ணீரைத்தவிர வேறு என்ன பரிசை நான் தந்து விட முடியும்? # காதல் கடலை

------------------------

19. தன் அழகுக்கு எல்லா ஆண்களும் அடிமையாக இருக்க வேண்டும் என சுமாரான அழகுள்ள பெண்களும் நினைக்கிறார்கள் #லேடீஸாலஜி


------------------------

20. ஒப்பனை இல்லாமலும் ஆண் போல பெண்ணாலும் மிளிர முடியும், ஆனால் ரிஸ்க் எடுக்க  பெண்கள் விரும்புவதில்லை

----------------------


21. ச்சீய்.போங்க என வெட்கப்படும்போதுதான் ஒரு பெண்ணின் உச்ச பட்ச அழகு முகத்தில் பொங்கி வழிகிறது

-------------------------

22. உலகின் கொடுமையான  வலி நிராகரிப்பு

-------------------


23. ஆணின் இதயம் காதலில் ஊறித்திளைத்திருக்கும், பெண்ணின் இதயம் துரோகத்தில் முளைத்திருக்கும்

-----------------------

24. சோனியா இல்லாததால் காங்கிரஸ் தவிப்பு : அடுத்தடுத்த குழப்பங்களுக்கு தீர்வு என்ன?#யோவ்,மெயின் குழப்பமே சோனியாதான்

-----------------------


25. முறைகேட்டுக்கு பிரதமர் அலுவலகம் பொறுப்பேற்க முடியாது' #சிங்க் எதுக்குத்தான் பொறுப்பேத்துக்கிட்டாரு? இதுக்கு மட்டும் ஏத்துக்க?

-------------------------




Odete Caixa do Bradesco de Aracoiaba - CE