Showing posts with label அதிமுக. Show all posts
Showing posts with label அதிமுக. Show all posts

Monday, April 21, 2014

ஜெ.வின் திடீர் மோடி எதிர்ப்பு பிரச்சாரம் ஏன்?: தனியார் ஏஜென்ஸியின் சர்வே ரிசல்ட் காரணமா?


இதுவரை மோடியை விமர்சிக்காமல் இருந்த முதல்வர் ஜெயலலிதா, தற்போது கடுமையாக விமர்சிக்கத் தொடங்கி இருக்கிறார். இதற்குக் காரணம், தனியார் நிறுவனம் எடுத்துக் கொடுத்த சர்வே ரிசல்ட்தான் என்கிறது அதிமுக வட்டாரம்.
ஜெயலலிதா பாஜக-வை விமர் சிக்கவில்லை என்று சொல்லி அதிமுக-வுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்ட தவ்ஹீத் ஜமாஅத், தற்போது திமுக-வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்தே ஜெயலலிதா பாஜக-வை கடுமை யாக எதிர்த்து பேசி வருகிறார். இதற்குக் காரணம் தவ்ஹீத் ஜமா அத் விலகியது மட்டும் அல்ல; தனியார் உளவு நிறுவனம் கொடுத்த ஓர் அறிக்கையும் காரணம் என்று அதிமுக-வினர் தெரிவிக்கின்றனர்.
அந்த அறிக்கையில், ‘மத்தியில் பாஜக கூட்டணி சுமார் 275 இடங்களைப் பெறும்; இவை தவிர, ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங் கிரஸ், சந்திரசேகர் ராவின் டி.ஆர்.எஸ்., ராஜ்தாக்ரேவின் மகாராஷ்டிரா நிர்மாண் சமிதி, ஹரியாணாவில் ஓம்பிரகாஷ் சவுதாலாவின் இந்திய தேசிய லோக் தள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சுயேச்சைகள் என சுமார் 30 எம்.பி-க்களின் ஆதரவு பாஜக-வுக்கு கிடைக்கும். இதனால், தேர்தலுக்குப் பின்பு தமிழகத்தில் அதிமுக அல்லது திமுக-வின் தயவு பாஜக-வுக்கு தேவைப்படாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.
ஜெயலலிதா ஆரம்பத்தில் இளைஞர்களின் ஓட்டுக்கள் அதிமுக-வுக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால், ரஜினியை மோடி சந்தித்த காட் சியின் முகநூல் பக்கத்தின் ‘லைக்’ குகள் 10 லட்சத்தை தாண்டி விட்டது. நடிகர் விஜய் மோடியைச் சந்தித்த காட்சிகளுக்கான முகநூல் ‘லைக்’குக்கள் இரண்டு லட்சத்தை தாண்டி போய்க்கொண்டிருக் கிறது. இதனால், சுமார் ஏழு சதவீத அளவிலான இளைஞர்கள் கூட்டம் மோடி பக்கம் சாயலாம் என அதிமுக-வுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், அதிமுக-வுக்கு வரவேண்டிய ஓட்டுகளுக்கும் சேர்த்து பாதிப்பு எழுந்துள்ளது.
தேர்தலுக்கு பிறகு அதிமுக-வின் தயவு பாஜக-வுக்கு தேவைப்படாது. அதேபோல் அவர்களின் தயவில் ஜெய லலிதா பிரதமர் ஆவதும் சாத்திய மில்லை.
திமுக ஆரம்பத்தில் இருந்தே பாஜக-வை கடுமையாக எதிர்த்து பிரச்சாரம் செய்து வருவதால் நாம் அமைதியாக இருந்தாலும் மதச்சார்பற்றோர் மற்றும் சிறு பான்மையினர் ஓட்டுகள் கைவிட் டுப் போகும் என்று அதிமுக கருதுகிறது.
இதனாலேயே பாஜக-வையும் மோடியையும் கடுமையாக எதிர்த்து பிரச்சாரம் செய்ய ஆரம்பித்திருக்கிறது அதிமுக.

  • too late admk பார்ட்டி.
    about 8 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
    •  rengavaasi Rengarajan  from Chennai
      போக போக தெரியும் ?
      about 8 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
      •  srirag  
        politics always politics
        about 11 hours ago ·   (1) ·   (0) ·  reply (0)
        •  vsankar Sankar  from Chennai
          incompetent and ill advising think tank
          about 14 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
          •  mohan  from Bangalore
            திமுக, அதிமுக தமிழகத்தில் இருந்து ஒழிந்தால் சரி.
            about 23 hours ago ·   (9) ·   (3) ·  reply (0)
            •  ச்வாம்ஜி  from Riyadh
              எதாவது பணம் பிரச்சனையாக இருக்கும்.அதுதான் இந்த மாற்றத்திற்கு காரணம்.எல்லாம் ஒரே குட்டையில் உறிய மட்டைகள் தான்
              a day ago ·   (4) ·   (0) ·  reply (0)
              •  YA.JABBAR  from Pondicherry
                எப்டியோ....பிரதமர் கனவு பலிக்குமா?
                a day ago ·   (0) ·   (0) ·  reply (0)
                •  thirumalaidasan Dasan  from Bangalore
                  சோ வை மீறி அந்தளவுக்கு சசிகலா ஆலோசனை சொல்லியிரக்கமுடியுமா என்பது சந்தேகமே.
                  2 days ago ·   (5) ·   (0) ·  reply (0)
                  •  N.Dhandapaani Dhandapaani  from Chennai
                    நண்பர்களே, மோடி அலை வீசுது என்று சொல்லுகிறார்கள், பின் எதற்கு இந்த ரஜினி சந்திப்பு மற்றும் விஜய் சந்திப்பு, தமிழக பிஜேபி மோடி அவர்களை கேவலம் செய்துவிட்டது. இப்போதே, அவசரப்பட்டு ஜெயலலிதா மேடம் ஆதரவு வேண்டாம் என்று சொன்னால் பின்னர் வருதப்படவேன்றும். எனவே பிஜேபி நா காக்க வேண்டும்
                    2 days ago ·   (12) ·   (4) ·  reply (0)
                    saam  Down Voted
                    •  navis  
                      வர வர .... எங்களுக்கு நியூஸ் கன்டென்ட் விட கமெண்ட் படிக்கச் தான் தோணுது. எல்லாருக்கும் எப்படி என்று தெரியவில்லை. பேஷ் பேஷ் ...அருமை அருமை. எல்லா கட்சிகளும் ஒரு ஆள்ல அமர்த்தி கமெண்ட் கொடுத்தா கூட ஆச்சரிய படுவதற்கு இல்லை.
                      2 days ago ·   (16) ·   (1) ·  reply (0)
                      navis  Up Voted
                      •  Muthusamy  from Karur
                        சிறுபான்மையினர் ஓட்டுக்காக ப.ஜ.காவை விமர்சிப்பதனாலேயே மோடியின் வெற்றியை யாராலும் இனி தடுக்க முடியாது திராவிட கட்சிகளின் பிடியில் இருந்து தமிழ்நாடு விடுதலை அடைவதை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்
                        2 days ago ·   (14) ·   (11) ·  reply (1)
                        saam · mohan  Up Voted
                        SAK · dhiravidan  Down Voted
                        •  dhiravidan  
                          ஹாஹாஹாஹ இவர் வேற ஜோக்கடிசிகிட்டு
                          about 22 hours ago ·   (2) ·   (1) ·  reply (0)
                        •  SANDIRAN  from Chennai
                          எதுக்கும் அன்சா தலைவி அம்மா ஜெ ஜெ 40==40
                          2 days ago ·   (1) ·   (1) ·  reply (0)
                          •  Tediyur  
                            தி மு க ,அ தி மு க போன்ற கட்சிகள் முஸ்லிம் ,கிறித்துவ கட்சிகளுடன் உறவாடினால் அவர்களும் மதவாத கட்சிகள் .இந்த இரண்டு கட்சிகளும் மதத்தின் பேரில் ஒட்டு கேட்டால் தமிழகத்தில் உள்ள அனைத்து இந்துக்களும் என் டி எ க்கு ஒட்டு போடவேண்டும் தங்கள் மதத்தை பாதுகாக்க
                            2 days ago ·   (7) ·   (7) ·  reply (0)
                            kvjayan  Up Voted
                            •  R.Murali  from Kumar
                              எது எப்படியோ .ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன எல்லாருமே வேஸ்ட் . இது என்னோட தனி பட்ட கருத்து
                              2 days ago ·   (2) ·   (0) ·  reply (0)
                              •  RAJENDRAN  
                                May be சரியானவை
                                2 days ago ·   (0) ·   (0) ·  reply (0)
                                •  RAJENDRAN  
                                  சரியானவை.
                                  2 days ago ·   (0) ·   (0) ·  reply (0)
                                  • பேஸ் புக்கில் பி ஜே பியினர் ஒவ்வருவரும் 200 போலி IDயில் உள்ளனர் அதுவும் இல்லாமல் இனைய தலத்தில் அவர்கள் செய்யும் வேலை பற்றி கோப்ர போஸ்ட் மற்றும் ஸ்டிங் ஆபரேசன் தெளிவாக கூறி உள்ளது ....அவர்கள் நினைத்தாள் பலகோடி லைக் வரை போடலாம் .....
                                    2 days ago ·   (55) ·   (6) ·  reply (0)
                                    saam  Down Voted
                                    •  Prabakaran  
                                      ப ஜ க வெற்றி உறுதி ...
                                      2 days ago ·   (8) ·   (10) ·  reply (0)
                                      saam  Up Voted
                                      •  Ravi  from Dubai
                                        வெற்றிப் பாதையில் செல்லும் அம்மாவிற்கு 40/40 கிடைக்க இது ஒரு அருமையான வாய்ப்பு..இதை அம்மா நழுவ விட மாட்டார்கள்!
                                        2 days ago ·   (2) ·   (13) ·  reply (0)
                                        •  Ramamurthy janakiraman  from Chennai
                                          தங்கமான அம்மாவிற்கு நீங்கள் பித்தளையாக மாறாமல் இருக்க வேண்டுமானால், உடனடியாக மோடி எதிர்ப்பை பெயர் சொல்லி தீவிர படுத்துங்கள்.
                                          2 days ago ·   (0) ·   (1) ·  reply (0)
                                          prathiv  Down Voted
                                          •  suresh  from Salem
                                            கை புண்ணுக்கு கண்ணாடி எதற்கு ? பிஜேபி தான் 275-300 இடங்களில் வெற்றி பெற போகிறது என்று எல்லோருக்கும் நன்கு தெரியும்.இந்த கருத்து தீவிரவாதிகள் முடிந்த வரை சொல்லி மக்களை குழப்புவோம்/ தம் தம் நிறைவேறாத ஆசைகளை தீர்த்து கொள்ளுவோம் என நினைத்து பிஜேபி இப்படி ஜெயிக்காது அப்படி ஜெயிக்காது , என்று உளறி வருகின்றனர். விடுங்கள் மே 16 ஆம் தேதி தெரிகிறது. என்ன நடக்க போகிறது என்று
                                            2 days ago ·   (0) ·   (5) ·  reply (0)
                                            •  hasan kalifa  from Chennai
                                              முஸ்லிம்களின் உண்மை நிலையை ஒரு ஹிந்து(தி ஹிந்து தமிழ் பத்திரிகை)தான் வெளிக்கொண்டு வருகிறது #மதச்சார்பின்மை
                                              2 days ago ·   (1) ·   (3) ·  reply (0)
                                              saam  Down Voted
                                              •  kannan  
                                                Tamilagathil b.j.p varavey varathu... gujarath valarchi adaiyamaley adainthu vitathaga koorrum modi avargal poimaiyin mottha uruvam... current mattum than angu irukirathu....
                                                2 days ago ·   (15) ·   (11) ·  reply (0)
                                                •  Elangovan  from Bangalore
                                                  இதை முதலிலேயே செய்திருந்தால் அம்மாவை நம்பி இருக்கலாம்,ஆனால் இப்போது வேஸ்டு .
                                                  2 days ago ·   (7) ·   (1) ·  reply (0)
                                                  Prabakaran  Up Voted
                                                  •  சேரமான் nadunilai  from Bry-sur-marne
                                                    தனியார் அமைப்பும் மோடியிடம் வாங்கிவிட்டதோ !
                                                    2 days ago ·   (5) ·   (2) ·  reply (0)
                                                    •  S.Govindarajan Govindarajan  from Chennai
                                                      யார் எப்படி விமர்சித்தாலும் ,பி.ஜே.பி கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் ,ஆட்சி அமைக்கும். பெரும்பான்மை மக்களின் முடிவு இது. சிறுபான்மை என்று சொல்லி இனி ஏமாற்ற முடியாது.
                                                      2 days ago ·   (26) ·   (29) ·  reply (1)
                                                      •  தீர்ப்பு  from Dubai
                                                        பெரும்பான்மை எனபது வெறும் மதத்தின் அடையாளத்தின் அடிப்படையை விட அந்த மதம் கற்றுகொடுத்த நல்ல பண்புகளும் சமுதாயத்தில் மக்கள் வேற்றுமையிலும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்ற கோட்பாட்டில் தான் பெரும்பான்மையாக இருகிறார்கள் என்பதை மறந்து விட கூடாது. ஆனால் பாஜக போன்ற அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி முன்னேற்றதிற்காக அமைதியாக வாழும் இப்படிப்பட்ட மக்களை மதத்தின் பெயரால் சீண்டி விட்டு அதன் மூலம் அரசியல் லாபத்தை ஈட்ட முடியும் என்ற அவர்களின் குறுகிய மனப்பான்மையான எண்ணம் ஒரு போதும் நிறைவேறாது. இது தான் வேற்றுமையில் ஒற்றமையாக வாழும் நாடு இந்திய திருநாடு என்று உலகிற்கு அடையாளம் சொல்லும் பெரும்பான்மை மக்களின் நிலை பாடும் கூட. மதத்தின் மேல் உள்ள அதீத மோகத்தால் ஆனால் அந்த மதம் என்ன சொல்லுகிறது என்பதை எல்லாம் மறந்து விட்டு பிழைப்பு நடதுவதட்க்காக தவிர்க்க கூடிய எண்ணிகையில் பின்பற்றும் ஒரு சிலரின் வெறித்தனமான முயற்சிகள் எல்லாம் ஒருபோதும் நிறைவேறாது. அமைதி விரும்பிகள் பெரும்பானமியில் இருக்கும் காரணத்தினால் அந்த குறிப்பிட்ட சிலரின் எண்ணம் தொடர்ந்து இருந்தாலும் ஒரு போதும் நிறைவேறாது.
                                                        2 days ago ·   (4) ·   (2) ·  reply (0)
                                                      • இப்படி அபத்தமான தனியார் நிறுவன அறிக்கையை அவர் வேண்டுமானால் நம்பலாம். மக்கள் நம்பத் தயாரில்லை. பா ஜ கா வினரே 250 வரை தான் கோட்டை கட்டியிருக்கிறார்கள். உங்கள் கட்டுரையாளர் சஞ்சீவ் குமார் இந்த நேரத்தில் இப்படி சாய்வாக எழுத வேண்டுமா ?
                                                        2 days ago ·   (11) ·   (7) ·  reply (0)
                                                        •  தீர்ப்பு  from Dubai
                                                          இங்கு நான் ஒன்றை குறிப்பிட்டு சொல்ல வேண்டியது அவசியம். 275 தொகுதிகளை கைப்பற்றும் என்று கூசாமல் சொல்லி இருகிறார்கள். யாராவது இந்த நிகழ்ச்சியை நேரில் பார்தீர்கள் என்றால் உங்களுக்கு தெரிந்திருக்கும் முடிவில் இந்த எண்ணிக்கை என்பது வழக்கம் போல மதவாத கூட்டணிக்கு மிக சாதகமாக ஊதி விடப்பட்டுள்ளது என்பதை. எப்படிஎல்லாம் என்றால் சில மாதங்களே தேர்தல் முடிந்த கர்நாடகத்தில் பாஜக எப்படி மண்ணை கவ்வியது எனபது எல்லோருக்கும் தெரியும். அப்படி இருந்தும் கூட பாஜக அங்கே 50 சதவிகித தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என்று கூசாமல் சொல்லி இருகிறார்கள் எதன் அடிப்படையில் ?? கேட்டால் அலை என்று பதில் வருகிறது. உத்தர் பிரதேசத்தில் 51 இடம் வருமாம் இதை அந்த நிகழ்ச்சியில் உட்காந்து ரசித்து கொண்டு இருந்த பாஜக வின் சுதின்ற குல்கர்னி தாங்களே 35 தான் தேறும் என்று ஒரு நம்பிக்கையில் இருப்பதாகவும் ஆனால் 51 எனபது அளவுக்கு மீறிய எண்ணிக்கை என்றும் சிறுது கஷ்டபட்டும் சொன்னார். உண்மையில் பாராட்ட தக்க பதிலை தான் இந்து ராம் அவர்கள் நிறைவில் கூறினார் என்பதையும் நாம் மறுக்க முடியாது.
                                                          2 days ago ·   (14) ·   (14) ·  reply (1)
                                                          Tamil · samy  Up Voted
                                                          •  selvakumar Raman Scientist (Agricultral Research Service) at Indian council of agricultural research from New Delhi
                                                            ஓஹோ துபாயில் இருந்து கொண்டு உட்டரப்ரதேஷதில் 51 இடங்கள் வருவது கஷ்டம் என்று கூறி இருகிறார்கள் கொஞ்சம் மே 16 வரைக்கும் வெயிட் பண்ணுங்க உங்களுகே தெரிய வரும். உங்க ஒரிஜினல் போடவே பயப்படும் நீங்கள் ஒரு கருத்தை கூறுவது நகைப்புக்கு உரியது இந்த தேர்தல் ஊழலுக்கு எதிரான தேர்தல் அவ்வளவே
                                                            2 days ago ·   (1) ·   (3) ·  reply (2)
                                                            •  தீர்ப்பு  from Dubai
                                                              உத்தர் பரதேஸ் மட்டும் இல்ல தமிழ்நாட்டில் பாஜக மொத்தத்தில் அதிக பட்சமாக 3 தொகுதிகளை வெல்வதே கடினம் உங்கள் டைரியில் குறித்து வைத்து கொள்ளுங்கள். ஊழலுக்கு எதிரான போர் என்று சொல்லி கொண்டே ஊழலையும் மதவாதத்தையும் தாங்கி சுமக்கும் ஒரு கட்ட்சிக்கு இந்திய மக்கள் அதரவு கொடுக்க மாட்டார்கள். பாஜக ஒரு வேளை 200 தொட்டு விட்டால் மீதி உள்ள தொகுதிகளுக்கு மோடியின் முகதையை வைத்து கொண்டு மற்ற கட்சிகள் ஆதரவை ஒருபோதும் பெறவே முடியாது இதையும் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். மோடி மீண்டும் குஜராத்துக்கு முழு நேர முதல்வராக பணியேற்கும் நாள் தான் மே 16. லட்ச கணக்கில் ஒரிஜினல் போடாமலேயே போலிகளால் ஊத்தி விட பட்ட பலூனை மோடியை விட நான் பிரபலமானவன் கிடையாது.
                                                              a day ago ·   (6) ·   (0) ·  reply (0)
                                                              k.p.subramanian  Up Voted
                                                              •  sheik  
                                                                பிறகு எடியூரப்பா எப்படி ????
                                                                2 days ago ·   (0) ·   (0) ·  reply (0)
                                                            •  தீர்ப்பு  from Dubai
                                                              இன்னும் சொல்ல போனால் ஏதோ பாஜகவை விமர்சித்து விட்டால் மட்டும் வாக்குகள் எல்லாம் அதிமுகவின் பக்கம் சாய்ந்து விடும் என்பதெல்லாம் இனிமேல் ஒரு குருட்டு தனமான நம்பிக்கை. முகநூலில் லட்சம் லட்சமாக லைக் தான் ஜனநாயகத்தை தீர்மானிக்க போகிறது என்பதும் குருட்டு தனமான நம்பிக்கை. இது மோடி வித்தைகளில் ஒன்று அவர் ஆரம்ப கால முதலே தன் விசிறிகளை அந்த மாதிரி செதுக்கி வைத்து இருக்கிறார்.அவரை பற்றிய எந்த செய்திக்கும் நீங்கள் சென்று பார்த்தால் ஆயிர கணக்கில் தான் லைகுகள் இருக்கும். உப்பு சப்பு இல்லாத விவரங்களுக்கும் பொருந்தும். ஜெயலலிதாவை பொறுத்தவரையில் இன்னும் அவர் பொத்தாம் பொதுவாக தான் பாஜகவை காவிரி பிரச்னை முன்வைத்து காங்கிரஸ் உடன் சமமான பொது எதிர்ப்பை காட்டி வருகிறாரே தவிர அவரது பாணியில் திமுகவை காட்டமாக விமர்சித்து இருப்பதை போல துளியும் பாஜகவையோ அல்லது பொய் பிரசாரத்தை பரப்பி கொண்டிருக்கும் மோடி மீதோ எதுவுமே சொல்லவில்லை எனபது தான் உண்மை.அவர் எழுதி வைத்து வாசிப்பதை ஒரே ஒரு முறை படித்து பார்த்தாலே நமக்கு நன்கு புரியும். உதாரணதிற்கு மோடியின் பெயர் எங்குமே இருக்காது தேடினாலும் கிடைக்காது!!!
                                                              2 days ago ·   (3) ·   (2) ·  reply (0)
                                                              •  tamil  
                                                                ரஜினியை மோடி சந்தித்த காட் சியின் முகநூல் பக்கத்தின் ‘லைக்’ குகள் 10 லட்சத்தை தாண்டி விட்டது. நடிகர் விஜய் மோடியைச் சந்தித்த காட்சிகளுக்கான முகநூல் ‘லைக்’குக்கள் இரண்டு லட்சத்தை தாண்டி போய்க்கொண்டிருக் கிறது. நான் போட்ட சன்னி லியோன் போட்டாவிக்கு லைக் 15 லட்சத்தை தாண்டி விட்டது .........அப்ப நான்தான் அடுத்த எம்பி
                                                                2 days ago ·   (38) ·   (4) ·  reply (1)
                                                                Sampathkumar  Down Voted
                                                                •  pallavan  from Chennai
                                                                  அமெரிக்க தேர்தலின்போது புஷ்ஷுக்கு எதிராக, we don"t like "BUSH", என்று லியோன் வெளியிட்ட படமா???

                                                              thanx  - the  hindu