Showing posts with label jeniliya. Show all posts
Showing posts with label jeniliya. Show all posts

Wednesday, May 30, 2012

உருமி - சினிமா விமர்சனம்

http://kakakiki.aneeska.com/wp-content/uploads/2011/04/urumi_malayalam_movie_1.jpgஇந்தியாவை கண்டுபிடிச்சது வாஸ்கோடகாமான்னு ஏழாம் கிளாஸ்ல படிச்சது நினைவு இருக்கு. 15ஆம் நூற்றாண்டுல நடந்த சரித்திர உண்மைக்கதையை சுவராஸ்யமா சொல்ல முயற்சி பண்ணி இருக்காங்க..

மிளகு இங்கே அதிகம் விளையறதை பார்த்த அண்ணன் வாஸ்கோடகாமா நம்மாளுங்க எப்படி மணல் கொள்ளை அடிச்சாங்களோ அந்த மாதிரி மிளகு டூ பிரிட்டிஷ் உலகு கடத்தறாரு.. பார்த்தாரு.. ஒரு பய கண்டுக்கலை, எதிர்க்கலை/.இந்தியாவில் இயற்கை வளங்கள் பிரமாதமா இருப்பதை பார்த்து ஒட்டு மொத்தமா இந்தியாவை ஆட்டையைப்போட்டுடலாம்னு பிளான் பண்றாரு.


சேரநாட்டில் அதாவது கேரளாவில் சிறைக்கல் அப்டினு ஒரு ஊரு, அங்கே வர்றாரு.. அங்கே இருக்கும் மன்னர் ஆங்கிலேயரை கேப்டன் ஜெவை எதிர்க்கற மாதிரி ஆவேசமா பல்லை, நாக்கை கடிச்சு எதிர்க்கறார்.. தமிழன் எங்கே போனாலும் ஒரு துரோகியும் அவன் பின்னாலயே வந்து அவன் கூடவே இருந்து குழி பறிக்க காத்திருப்பான். இது அவன் தலை விதி.. அமைச்சர் ஓ பி எஸ் மாதிரி ஆங்கிலேயர் கால்ல விழுந்து  மன்னருக்கு எதிரா சதி பண்றார்..


அப்போதான் 2 பேர் அதாங்க ஹீரோஸ்  பிருத்வி ராஜும் ,பிரபு தேவாவும் வர்றாங்க.. அவங்களோட வீர தீரத்தை பார்த்து மன்னர் அவங்களை  தளபதி ஆக்கிறார்.. கூடப்பிறந்த தம்பியை  சி எம் ஆக்க அப்பா ட்ரை பண்ணாலே அண்ணனுக்கு பொறுக்காத உலகம் இது. அமைச்சர் விடுவாரா? சதி பண்ணி மன்னரை போட்டுத்தள்ளிடறாரு..


இதுதான் சாக்குன்னு ஆங்கிலேயர்  படை எடுத்து வர்றாங்க.. வாஸ்கோடகாமாவின் சோப்ளாங்கி மகன் ஒருத்தன் மைதா மாவு அப்பாஸ் மாதிரி அவனை ஹீரோஸ் 2 பேரும் சிறைப்படுத்தறாங்க.. இப்போ போர் நடக்குது.. என்ன நடக்குது? அவங்க வாரிசுகள் என்ன ஆகறாங்க? இதுதான் கதை.. 

 அங்கங்கே மானே தேனே பொன் மானே போட்டுக்குங்க மாதிரி ஒவ்வொரு ஹீரோவுக்கும் ஒரு ஹீரோயின் ஜோடி ..


http://1.bp.blogspot.com/_eewr1b1LpYA/TJwok3biwuI/AAAAAAAAGyk/Z4IhAJSfFxI/s1600/urumi_malayalam_movie_stills_pics_03.jpg


படத்துல  முதல் பாராட்டு அமைச்சரா வர்ற அந்த மலையாள நடிகருக்குத்தான். இப்படிக்கு ரோஸ் மாதிரி திருநங்கை போல் அவரது நளினம், வில்லத்தனம், பார்வை எல்லாமே அபாரம்.. ( jஜெகதி ஸ்ரீகுமார்)

 ஹீரோவாக வரும் பிருத்விராஜ் அமர்த்தலான நடிப்பு.. பொதுவா நம்மாளுங்க வீரம்னாலே முறுக்கு மீசை தான் அப்டினு ஒரு எழுதப்படாத நியதி வெச்சிருப்பாங்க. அதை எல்லாம் பொடியாக்கி அவரது உடல் மொழி, கம்பீரம், குரல் ஆவேசம் எல்லாம் கன கச்சிதம்.. தளபதி படத்தில் ரஜினி எப்படி படம் பூரா ஒரு இறுக்கமான முகத்தோட வந்து கலக்குனாரோ அந்த மாதிரி பின்னிப்பெடல் எடுக்கும் நடிப்பு 


ஜெனீலியாவின் பாத்திரபடைப்பு, அவரது உடல் மொழி, ஆக்ரோஷ கண்கள் எல்லாம் அட்டகாசம்.. சந்தோஷ் சுப்ரமணீயம், பாய்ஸ் படத்தில் கிட்டத்தட்ட ஜாலி லூஸ் கேர்ள் போல் வரும் இவர் இந்தப்பத்தில் விஜயசாந்திக்கே சவால் விட்டிருக்கிறார்.. இவரது ஆடை வடிவமைப்பு செம கிளுகிளுப்பு ஹி ஹி 


அடுத்து அண்ணன் பிரபு தேவா.. படத்துல வர்ற எல்லா ஆண் கேரக்டர்களும் அவனவனுக்கு யார் ஜோடியோ அந்த ஃபிகரை மட்டும் பார்க்கறாங்க, பேசறாங்க.. நம்ம அண்ணன் மட்டும் படத்துல கூட பொம்பளைன்னு வந்துட்டா போதும் வாயை ஆ-ன்னு பார்க்கறாரு. யோவ் யோவ்!அண்ணன் வர்ற சீன்ல எல்லாம் ஃபிகர் போற இடம் எல்லாம்  அவர் கண் போகுது.. சூரிய காந்திப்பூ சூரியன் போற திசையை நோக்கி திரும்பிக்கற மாதிரி.. அவர் சில சீன்ல காமெடிங்கற பேர்ல சில லூஸ்தனம் பண்றாரு.. திடீர்னு அழகிரி மாதிரி ஆவேசம் ஆகி சண்டை போடறாரு. ஹூம்.. 

கேரளத்துக்கன்னியாக  ( ஒரு உத்தேசமா சொல்றதுதான்) நித்யா மேனன்..  காதல் காட்சிகளில் நல்ல நெருக்கம்.. நமக்கு அதானே வேணும்? அப்புறம் தொட்டுக்க ஊறுகாய் மாதிரி வித்யா பாலன் .. நமக்கில்லை டைரக்டருக்கு


http://www.bollyketchup.com/wp-content/uploads/2011/03/Urumi-Malayalam-Movie.jpg


இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1. ஆர்ட் டைரக்‌ஷன் தான் இந்த மாதிரி பீரியட் ஃபிலிம்க்கு ரொம்ப முக்க்கியம்.. பிரமாதமா பண்ணி இருக்காங்க.. ஒளிப்பதிவும் செம அழகு.. அருவி , காடு , கடல் என காமிரா கலக்கல்.. சந்தோஷ் சிவன் அடிப்படையில் ஒரு ஒளிப்பதிவாளர் என்றாலும் இயக்குநரே ஆளுமைப்படுத்துகிறார்


2. வாஸ்கோடகாமாவாக நடிப்பவர், அவரது மகனாக நடிப்பவர் இருவரும் மிக லாவகமாக, பக்குவமாக அண்டர் ப்ளே ஆக்ட் செய்து நடித்தது அழகு.. ஏன்னா நம்மாளுங்க வாஸ்கோடகாமா பற்றி அதிகம் தெரியாதவங்க.. அதனால வீரபாண்டியக்கட்டபொம்மன் ரேஞ்சுக்கு ரீல் எல்லாம் விடாம கரெக்டா வரலாற்றுக்குறிப்பில் இருப்பது போல் காட்சிப்படுத்தியது சபாஷ்


3. உருமி என்பது பொதுவா ஒரு இசைக்கருவியைத்தான் குறிக்குதுன்னு நினச்சோம்.. அது அந்தக்கால சுருள் வாள் மாதிரி ஒரு ஆயுதம். கிட்டத்தட்ட பட்டாக்கத்தி அல்லது சுருள் கத்தி .. அதை கனகச்சிதமா வடிவமைச்சு பயன்படுத்தி இருக்கும் விதம்..

 
 jagathi sreekumaar 
http://www.zonkerala.com/movies/gallery/urumi/jagathy-sreekumar-in-urumi.jpg


4.படத்தில் ஏகப்பட்ட கேரக்டர்கள், எல்லாருக்கும் அந்தக்கால உடைகள், நகைகள் எல்லாம் ஏற்பாடு பண்ணி சாப்பாடு எல்லாம் கொடுத்து படம் எடுக்கறது சாதாரண விஷயம் இல்லை.. வெல்டன் டைரக்டர்


5. சண்டைக்காட்சிகளை வடிவமைத்தவர்க்கு தனி பாராட்டு. பல காட்சிகள் பிரமாதப்படுத்துகின்றன. குறிப்பா ஜெனிலியா சுழன்று சுழன்று எகிறும் காட்சியில் டூப்பே போடாமல் கலக்கலான ஃபைட் சீன்ஸ்.. இசை அழகு. பின்னணி இசை  நேர்த்தி.


6.படத்துல ஆர்யாவுக்கு கெஸ்ட் ரோல்னாக்கூட அவர் தான் ஹீரோ என்பது போல் போஸ்டர்களில் விளம்பரங்களீல் காட்டிக்கொண்டது


http://im.rediff.com/movies/2011/mar/29sd3.jpg


இயக்குநரிடம் சில கேள்விகள்,லாஜிக் மிஸ்டேக்ஸ், திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1. இளவரசி ஜெனீலியா பயங்கரமான ஃபைட்டர்னு தெரிஞ்சும் அவரை சுத்தி நிக்கும் 17 அடி ஆட்களும் ஒன் பை ஒன்னா ஃபைட்டுக்கு போறாங்க.. ஏன்? குரூப் ஸ்டடி சார் குரூப் அடி அவங்களுக்கு முடியாதா?


2. பிருத்விராஜ் கதைப்படி சீரியஸ் கேரக்டர் என்பதால் பிரபுதேவா காமெடி கேரக்டர் ஆக்கி பேலன்ஸ் செஞ்சது ஓக்கே.. ஆனா அப்பப்ப அவர் பண்ற அலப்பரைகள் சகிக்கலை.. அடிப்படையில் பயந்த சுபாவம் உள்ளவரா காட்டப்படும் அவர் அப்பப்ப வீராவேசம் வந்தவர் போல் ஃபைட் போடறது சறுக்கல்

3. ஜெனிலியாவை வில்லன் கில்மாக்கு ரெடி பண்ண பெட்ரூம்ல  தள்ளி விடறாரு.. அப்போ நைட் மணி 8..  ஆனா அதை ஒளிஞ்சிருந்து பார்க்கறப்ப பிருத்விராஜ் முகத்துல ஜன்னல் பேக்டிராப்ல சூரிய வெளிச்சம் மஞ்சள் வண்ண மயம்.. மறுபடி ஹீரோயினைக்காட்டறப்ப இருட்டு, ஹீரோவைக்காட்டறப்ப பகல்..


4. ஜெனிலியா அதுக்குப்பிறகு பிரித்விராஜ்  கூட சரசம் பண்றப்ப என்னமோ ஓட்டுக்கேட்க வார்டு மெம்பர்ஸ் சுதந்திரமா வீட்டுக்குள்ளே வர்ற மாதிரி 27 பேர் வர்றாங்க? என்னய்யா அக்கிரம் இது? பெட்ரூமை தாழ் போடற பழக்கம் தமிழனுக்கு இல்லையா? அவன் ரொம்ப விபரமானவன் ஆச்சே?


5. ஒரு சீன்ல ஆங்கிலேயர் மேல இருக்கற எதிர்ப்பை காட்ட நடு வீதியில் இருக்கும் நட்ட வைத்த தூக்குமரத்தை 78 பேரு சேர்ந்து தம் கட்டி தள்ளறாங்க.. இதுல காமெடி என்னன்னா ஹீரோ தனி ஆளா முதல்ல அதை ட்ரை பண்றாரு
அவரால முடியாத போனதும் மத்தவங்க எல்லாம் வர்றாங்க.. 2 பேரு கடப்பாரை  எடுத்து தோண்டினா 1 அடி ஆழம் வந்ததும் ஈசியா அதை பேர்த்து எடுக்கலாம்..


6. தனது தந்தையை கொலை செய்ய ஒருத்தன் முடிவு பண்ணுனா அவர் தூங்கறப்போ தலையணையை  வெச்சு அமுக்கி அல்லது சாப்பாட்ல விஷம் வெச்சுதான் கொல்வான்.. அப்போதான் டவுட் வராது.. ஆனா ஒரு மன்னரா இருக்கற தன் தந்தையை சர்வ சாதாரணமா மக்கள் சந்தேகப்படும் அளவுக்கா படுகொலை செய்வாங்க?


7. இளவரசர் திருநங்கை போல கேரக்டர்.. ரொம்ப அப்பாவி, பயந்த சுபாவம் உள்ளவர். படம் பூரா இப்படி காட்டிட்டு திடீர்னு பி எஸ் வீரப்பா மாதிரி சிரிச்சுக்கிட்டே நூறாவது நாள் சத்யராஜ் ஆகி கொலை பண்றது ஓவர்..


8. படத்தோட முதல் பாதில எடிட்டிங்க்ல இயக்குநர் தலையீடு இருந்திருக்கு , ஏகப்பட்ட குழப்பங்கள்.. இடைவேளைக்குப்பிறகி எடிட்டிங்க் பக்கா.. இன்னும் தெளிவா  எடிட் பண்ணி இருக்கலாம் முதல் பாதில ..


9. வாஸ்கோடகாமாவின் மகன் ஆக்சுவலி  வில்லன்.. ஆனா அவர் மேல ஆடியன்ஸ்க்கு பரிதாபம் வர்ற மாதிரி எப்போ பாரு அவரை  அடிச்சு உதைச்சு ஒரு கைதி மாதிரி நடத்தறதை  அவ்ளவ் விலா வாரியாக்காட்ட வேண்டியதில்லை.. இதனால வில்லன் மேல நமக்கு அனுதாபம் தான் வருது.. பொதுவா இயக்குநர்கள் கத்துக்க வேண்டிய பாடம் வில்லன் மேல மக்கள்க்கு அதாவது ஆடிய்ன்ஸ்க்கு பரிதாபமோ, பச்சாதாபமோ வராம பார்த்துக்கறதுதான்.


10 . படத்துல வர்ற  பெண் கேரக்டர்கள் எல்லாம் ஆண்களையே பார்க்காதது மாதிரி எவன் கிடைச்சாலும் லவ்விடறாங்க.. கொஞ்சம் கேப் விட்டு லவ்வி இருக்கலாம்.. எட்டாக்கனிக்குத்தான் மதிப்பு அதிகம்


http://www.cinespot.net/gallery/d/429427-1/Urumi+Malayalam+movie+photos+_3_.jpg


மனதில் நின்ற வசனங்கள்


1, எந்த தருணத்திலும் பகைவன் முன் தலை குனிந்து விடாதே.. இதுதான் அரச தர்மம் ( பகைவன் டி பி கஜேந்திரன் மாதிரி இருந்தா?)


2. நஷ்டம் எப்பவும் நம்ம பக்கமே வரகூடாது. டீலிங்கை லாபத்துல முடி.


3. சந்தன மணம் வீசும் இந்தப்பெண்  பின் போனால் உன் சங்கை அறுத்து சங்கு ஊதி விடுவார்கள்


ஊதட்டும் ஊதட்டும், ஊதிக்கொண்டே இருக்கட்டும்..


4. அகம்பாவி மரியாதையை கேட்டுப்பெறுகிறான்


5. கண்ணில் கள்ளமும், கையில் கத்தியும் வைத்திருப்பவனே என் விரோதி


6. என்னை யாரும் விலைக்கு வாங்க முடியாது.. எனக்காகத்தோன்றினால் அதை நான் செய்வேன்


7. பூட்டி வைத்திருக்கும் மலர்களில் பொத்தி வைத்த மல்லிகை நீ பெண்ணே! ( இதை எங்க பாரதிராஜா, வைர முத்து எல்லாம் அப்பவே “ பொத்தி வெச்ச மல்லிகை மொட்டு பூத்திருக்கு வெட்கத்தை விட்டு அப்டி பாடியாச்சுங்க்ணா.. )


8. ஆராதிப்பதற்கு ஆயுதம் எதற்கு? நான் ஆரியன்..


9. இந்த சபித்த நாட்கள் இனி ஒரு போதும்  திரும்பி வராது


10. அடுத்த பிறந்த நாளை நான் காணக்கூடாது, அதுதானே உன் நோக்கம்?

11. இனி நாம் போகவேண்டிய வழி போர்த்துக்கீசியர்கள் வழி..


12.  படுக்கையிலாவது நீ தலைவன் ஆக முயற்சி செய் பேடியே!


http://img.stillgalaxy.com/public/04-29-2011/vidya%20balan/vidya-balan-hot-stills-in-urumi-movie-0.jpgஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 44 ( இது டப்பிங்க் ப்டம் என்பதால் விகடன் விமர்சனம் வராது)


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - நன்று


 சி.பி கமெண்ட் - பீரியட் ஃபிலிம் பார்ப்பவர்கள், சரித்திரப்படங்களில் ஆர்வம் உள்ளோர், ஒளிப்பதிவு ரசிப்பவர்கள், வித்யாபாலன்,ஜெனீலியா,நித்யா மேனன் என 3 ஃபிகர்ஸ் இருக்கு, இது போதாதா? என நினைக்கும் யூத் உள்ளங்கள்  பார்க்கலாம்..

 ஈரோடு ஸ்ரீசண்டிகா, ஸ்ரீகிருஷ்ணாவில் படம் ஓடுது. நான் சண்டிகாவில் பார்த்தேன்


http://3.bp.blogspot.com/-ibvr9UQnKaI/TWzt0041lWI/AAAAAAAADfs/rdf8ruNX-_c/s1600/Urumi+On+Location7.jpg

Wednesday, August 10, 2011

மலையாள டப் உருமி கில்மா படமா?- சந்தோஷ் சிவன் பேட்டி

 http://tamilwire.com/images/2011/02/urumi-genelia-e1298716227829-625x447.jpg

இந்தியா இன்னும் அடிமை தேசம்தான்!


''சுதந்திர இந்தியா வின் எல்லாப் பலன்களையும் நலன்களையும் எந்தக் கஷ்டமும் இல்லாமல் அனுபவித்துக்கொண்டு இருக்கிறோம் நாம். ஆனால், நம் முன்னோர்கள், தம் வாழ்க்கை, இளமை, சுகம் அனைத்தும் இழந்து பெற்ற சுதந்திரம் இது.

இந்திய சுதந்திரத்துக்குப் போராடிய அனைத்துத் தியாகிகளுக்கும் என்னுடைய அன்புக் காணிக்கைதான், 'உருமி’. கேரள மக்கள் கொண்டாடிய சினிமாவைத் தமிழில் கொண்டுவந்து இருக்கிறேன்!''-

நிதானமாகப் பேசுகிறார் இயக்குநர் சந்தோஷ் சிவன். இந்தியாவே தேடுகிற ஒளிப்பதிவுக் கலைஞன்.

 http://1.bp.blogspot.com/-6owIlUGIYAE/Tg925Zbr-vI/AAAAAAAAT_0/wEkp1F3kgNY/s1600/urumi-hot-stills+_18_.jpg


1.  ''இந்திய இளைஞர்கள் கிட்டத்தட்ட இந்திய சுதந்திரத்தின் மதிப்பை உணராத இந்தச் சமயத்தில் 'உருமி’ சொல்ல வரும் செய்தி என்ன?''

 சி.பி - ஓப்பனிங்க் கேள்வியே தப்பு,இந்திய சுதந்திரத்தின் மதிப்பை உணராதவர்கள் அரசியல்வாதிகள் தான்,இளைஞர்கள் அல்ல.


'' 'உருமி’ என்பது அருள் வாள். பிடிப்பவன் கை அசைவில் மட்டும் அல்லாமல், உருமியே உயிரோடு அசையும். தென்னிந்தியாவே தமிழைத் தாய்மொழியாகக்கொண்டு இருந்த காலகட்டம் அது. இந்து சமுத்திரத்தின் கரையில் அமைந்து இருந்த சேர தேசத்தில்தான் போர்ச்சுக்கீசிய கப்பலோட்டி வாஸ்கோடகாமா வந்து சேர்ந்தார்.

காவிய நாயகனாகவும், கடல் வழி மார்க்கம் கண்டுபிடித்த மகானாகவும் நாம் போற்றும் வாஸ்கோடகாமாவின் உண்மையான முகம் வேறு மாதிரியானது. அவரது நோக்கம், ஆரம்பத்தில் வாணிபம்தான். அரேபியர்களும் சீனர்களும் நம்மிடம் கையேந்தி நின்ற காலம் அது.

http://www.southdreamz.com/wp-content/uploads/2011/03/Urumi-Vidya-Balan-Stills00-5.jpg

இன்று வளைகுடா தேசத்தில் எண்ணெய்க்கு என்ன மதிப்போ, அதுபோல அன்று நம் தேசத்தின் மிளகுக்கு மதிப்பு இருந்தது. ஒரு பிடி மிளகுக்காக இந்தியா அடிமை தேசம் ஆன வரலாறுதான் இந்த 'உருமி’. 15-ம் நூற்றாண்டில் நாம் எதிர்கொண்ட அடக்குமுறை இன்றும் நடைமுறையில் உள்ளது. அன்று இருந்த அந்நியர் வடிவில் இன்று பல இந்தியர்களே இருக்கிறார்கள்.

அந்நிய முதலீடுகளுக்காக நாட்டைக் காவு கொடுக்கிறோம். நாடு அந்நிய சக்திகளுக்கு அடைக்கலமாகிவிட்டது. இந்த நேரம்தான் இந்த சினிமாவுக்கான அவசியம் என்று நினைத்தேன். மாற்றம் தேடும் இளைஞர்கள் அதிகமாகிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்குத் தான் இந்த 'உருமி’!''


http://farm5.static.flickr.com/4027/4603851294_c7bb3e5510.jpg


2. ''ஆர்யா, பிரபுதேவா, பிரித்விராஜ், ஜெனிலியா, வித்யாபாலன்னு பெரிய கூட்டணியை எப்படிப் பிடிச்சீங்க?''


சி.பி - சம்பளம் கொடுத்தா சினிமாக்கூட்டணி,கிம்பளம் கொடுத்தா அரசியல் கூட்ஸ் அணி...

''எல்லோருமே என் நண்பர்கள். எனக்காக எல்லாரும் பொறுத்துக்கிட்டாங்க. அடர்ந்த காடுகளில், வசதி இல்லாத இடங்களில் தங்கினாங்க. ஜாலியா வந்துட்டுப் போற ஜெனிலியா, நாலு வாரம் குதிரைஏற்றம், வாள் பயிற்சி கத்துக்கிட்டார். இப்படி எல்லாருமே படத்துக்காகக் கஷ்டப்பட்டு இருக்காங்க. தமிழ் சினிமாவுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கு. அதன் முதல்கட்டம்தான் 'உருமி’!''http://www.chitramala.in/photogallery/d/561338-1/urumi-hot-stills+_17_.jpg
3. ''நீங்கள் 'சிலோன்’ படத்தை இயக்குவது எந்த அளவில் இருக்கிறது?''

 சி.பி - ஸ்லோவா....
''நிச்சயமாக 'சிலோன்’ படத்தை இயக்குவேன். எனக்கான கனவுப் படம். இது போராளிக் குழுக்களின் கதையோ, புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பதிவோ அல்ல; மூன்று சிவிலியன்கள்பற்றிய எனது பார்வை. அந்த சினிமாவுக்காக நீண்ட காலமா உழைச்சுட்டு இருக்கேன்!''

http://farm7.static.flickr.com/6148/5960265005_107f0ec546.jpg

டிஸ்கி -1. டைட்டிலுக்கான விளக்கம் -மலையாள டப் உருமி  கில்மா படமா? இந்த கேள்வி நாம் பட ஸ்டில்களைப்பார்த்ததும்  நம் மனதில் எழும் கேள்வி,மற்றபடி பதிவின் டைட்டில்  சந்தோஷ் சிவன் பேட்டி தான் , ஹி ஹி  பை சமாளிஃபிகேஷன்  சண்முக ராஜ்.

டிஸ்கி 2 - வித்யாபாலன் சில்க்ஸ்மிதாவாக நடிக்கும் இந்த ஸ்டில்லை பார்த்துத்தான் உருமியில் செலக்ட் ஆனாராம், ஜெனரல் நாலெட்ஜ் ரொம்ப முக்கியம்  நமக்கு..
http://actresshotpictures.files.wordpress.com/2011/01/vidya-balan-sexy-saree-maxim-photo-shoot-wallpapers.jpg