Thursday, April 05, 2012

சூரிய நகரம் - சினிமா விமர்சனம்

http://www.mysixer.com/wp-content/gallery/suriya-nagaram-gallery/suriya-nagaram.jpg

யூ சர்ட்டிஃபிகேட் வாங்கியாச்சுங்கறதை சிம்பாலிக்கா சொல்ற மாதிரி படம் பூரா ஹீரோயினுக்கு யு நெக் ஜாக்கெட், நல்ல வேளை பேக் யூ நெக்..ஹீரோயின் புதுமுகம்.. லட்சணமான, லட்சுமிகரமான முக அமைப்பு. படம் பூரா பாந்தமா பாவாடை தாவணில  சொக்க வைக்கிறார்.. ஆனா ஒரு முழுப்படத்தை ஹீரோயின் மட்டுமே காப்பாத்த முடியாதே?


இதுல செம காமெடியான சீன் என்னான்னா வேலை வெட்டியே இல்லாத ஹீரோ ரோட்ல நிக்கறப்ப ஒரு கார் அங்கே வந்து நிக்குது.. கார்க்கதவு வழியா ஒரே ஒரு கை மட்டும் வெளீல வந்து பூ வாங்குது.. பிக்காலிப்பையன் இதுவரை பொம்பளை கையையே பார்த்தது இல்லை போல..  உடனே அந்த காரை ஃபாலோ பண்ணி கண்டு பிடிச்சு ஹீரோயினை பார்த்து நெக்ஸ்ட் செகண்ட்டே ஐ லவ் யூ சொல்லிடறான்..

 அதைக்கூட ஜீரணீச்சுக்கலாம்.. கோயில் வாசல்ல உக்காந்து பிச்சை எடுக்கற ஆளுக்கு அவ போட்ட ஒரு ரூபா காசை 100 ரூபா குடுத்து வாங்கறான். அவனோட இந்த வெட்டி வேலையை பார்த்து நமக்கு ஆத்திரம் வருது.. ஆனா ஹீரோயினுக்கு காதல் வருது

 ஹீரோயின் அவனுக்கும் மேல.. ஆம்பளையையே பார்த்ததில்லை போல. உடனே அவளும் ஈ ஈ ந்னு பல்லை காட்டி லவ்க்கு ஓக்கே சொல்றா. 2 தத்திங்களும் ஜாலியா டூயட் பாடி லவ்வுதுங்க. நிற்க..


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEirs7VhVIK1gQzDNHJJRnpTjayHm4eh5SaQmVRrFREr0zc4pDjT6Q-JwVZfryzOlpkIp9OBYqKcy0ZftoGRXZ528H4-coo7XJ7c3YNR9DTTcnWZzrPMBXtww9ID-4ZdZ1NpBKOHKOw4m80/

 ஹீரோயின் அப்பா தான் வில்லன்.. டைரக்டர் ஆர் வி உதய குமார்.. அவர் என்னமோ விஜய குமார்க்கு வாரிசு மாதிரி ஜாதி வெறி பிடிச்ச பெரிய மனுஷனா வந்து லவ்வை எதிர்க்கறார்.

வேற மாப்ளை பொண்ணுக்கு பார்க்கறார்.. இப்போ தான் அடுத்த காமெடி.. ஹீரோவுக்கு தில் இருந்தா ஹீரோயினை கூட்டிட்டு ஓடனும்.. தில் இல்லைன்னா கிராமத்தை விட்டே அவர் மட்டும் தனியா ஓடனும்.. அவர் 2ம் பண்ணலை.. இன்னா பண்றார்னா சீப்பை ஒளிச்சு வெச்சா கல்யாணம் நின்னுடும்கற மாதிரி மாப்ளையை கொலை பண்ணிடறார்..

 திரைக்கதையில் செம கேனத்தனம் இதுதான். ஹீரோ புள்ள பூச்சி மாதிரி இருந்துக்கிட்டு எதுக்கு சம்பந்தமே இல்லாம அந்தாளை கொல்லனும்?அப்படியே ஹீரோ அந்த மாப்ளையை கொலை பண்ணனும்னா வில்லன் ஹீரோயினை ரேப் பண்ற மாதிரி காட்டி இருந்தா சீனுக்கு சீனும் ஆச்சு. லாஜிக்கு  லாஜிக்கும் ஆச்சுன்னா அமைதியா இருந்துருப்போம்..


ஹீரோ ஜெயில்ல . ஹீரோயின் எத்தனை வருஷம் ஆனாலும் ஹீரோவைத்தான் கட்டுவேன்னு ஒரே அடம்..

 வில்லன் ஆர் வி உதய குமார்க்கும் பட டைரக்டர்க்கும் ஏதோ சண்டை போல. அவசர அவசரமா திரைக்கதைக்கு சம்பந்தமே இல்லாம வில்லனை பாதிலயே ஒரு கோஷ்டி தாதா சண்டைல கொலை பண்ணிடறார்.

ஹீரோயினுக்கு ஒரு தம்பி.. அவன் 12  வயசுல இருந்து 23 வயசு இளைஞன் ஆகறவரை ஹீரோ ஜெயில்லயே களி சாப்பிட்டு இருக்கான்..

இனிமே என்ன ஆகுதுங்கறதை யாரும் பார்க்கவே வேணாம்.. ஹி ஹி

http://middaytimes.com/wp-content/uploads/2012/01/meera-nandan-suriya-nagaram00-1-640x424.jpg
படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்


1. இவர் தான் எங்க ஊர் புரூஸ்லீ

 என்னது பெருச்சாளியா?


2. டேய்.. எதுக்காக நீ இப்போ சிரசாசனம் பண்றே?

 நம்ம சாதி சனத்தை காப்பாத்த தலைகீழா நின்னாவது பாடுபடனும்னு நீங்கதானே சொன்னீங்க?

3.  கண் உறுத்துது


என்ன விழுந்துச்சு?

 ம். நயன் தாரா

4.  குத்து விளக்கு மாதிரி ஃபிகர் வேணும்னா கோயில்ல தான் அதை பிடிக்கனும்.


5. ஏண்டி அவனை லவ் பண்ணலை?

 போடி. அவன் கிட்டே ஒரு கார், பைக் எதுவும் இல்லை.. எல்லா இடங்களுக்கும் நடந்து தான் போறான்.. அவனை லவ் பண்ணுனா பாத யாத்திரை தான் போகனும்.

6.  புள்ளையை பெத்துப்போடச்சொன்னா எமனைப்பெத்துப்போட்டிருக்கு பக்கிக. இவனால என்னென்ன நடக்கப்போகுதோ.




7.  நீ ஐ ஐ டி ஃபெயிலா?

 ஆமா.. எப்படி கண்டு பிடிச்சே?

 பழைய கவிதையா சொல்லி அறுக்கறியே?

http://3.bp.blogspot.com/-ixJsAdQweQc/TgjeIj4r3-I/AAAAAAAABZo/TD0S187f8ag/s1600/MeeraChandhan281210_014.jpg


8. அவங்க மாலையை போட்டுட்டாங்க.. வில்லன் ஆளூங்க அடுத்து உங்களை போடப்போறாங்க./.

9. நமக்கு நாமளே தீயை வைக்கற மாதிரி இருக்கு.


10.  உன் கல்யாண பத்திரிக்கையை பார்த்தேனே?

 அச்சடிச்ச பேப்பரை நம்பறே.. உசுரோட இருக்கற என்னை நம்ப மாட்டேங்கறே..


11. நான் ஒரு மரத்தடி ஜோசியர்ங்க.. யார் யார் கையையோ பிடிச்சு பலன் சொன்ன எனக்கு என் கையை பிடிச்சவ பற்றி தெரியாம போச்சு.. அவ கையை எவனோ பிடிச்சு கூட்டிட்டு போய்ட்டான்.. அவனைப்போட்டுத்தள்ளிட்டு ஜெயிலுக்கு வந்து இருக்கேன்..


12. இந்த ரேகைப்படி நாம 2 பேரும் 1 சேர முடியாது டியர்


 அப்போ இந்த ரேகையே வேணாம்

 அடிப்பாவி.. எதுக்கு கத்தியால கையை கிழிச்சே?

உன்னையும், என்னையும் சேர்க்காத இந்தக்கை ரேகை எதுக்கு?

13.  ஒரு ஆம்பளை கடைசி வரை தனியா வாழ்ந்துடலாம், ஆனா ஒரு பொம்பளையால அப்படி வாழ முடியாது..


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4J-eSFH4kgKzyf1tOC6RyyhBjI1gkchleXK9WglLnGmqjjb6I5bZPIvZLkM5jUL1XfsO9GhccgDFbpV1pia18OZ2KfksV49N1KJ3lZ5tonEt7PUkEIYjeioBXmuwGNLmkEFF7SzZj9yQ/s1600/oridathoru-postman-22.jpg


 இயக்குநரிடம் சில கேள்விகள்


1.  படத்துல காமெடியனாவும், ஹீரோ ஃபிரண்டாவும் வர்றவர் கோயிலுக்குள்ள லுங்கியோட வர்றாரே? எந்த ஹிந்துக்கோயில்ல அலோ பண்றாங்க?


2. ஹீரோயின் ஊர்லயே பெரிய பணக்காரர் வீட்டுப்பொண்ணு.. எதுக்கு சம்பந்தமே இல்லாம ஹீரோ வேலை செய்யற ஒர்க்‌ஷாப்க்கு வருது?அதுவும் நடந்து வருது?

3. வில்லனோட ஆட்கள்ல ஒருத்தன் ஹீரோயினை பார்த்துடறான்.. உடனே கோயில் திருவிழாவுல விற்கற முகமூடியை ஹீரோயின்  மாட்டிக்கறா.. ஃபேஸ் மட்டும் தானே அது மறைக்குது? 18 வருஷமா வேலை செஞ்ச அடியாளுக்கு அந்த ஹீரோயின் உடம்பு ஞாபகம் இருக்காதா?அல்லது டவுட்னா முகமூடியை கழட்டி பார்க்க மாட்டானா?

4.  ஹீரோ ஹீரோயின் 2 பேரும் மெக்கானிக் ஷாப்ல சைக்கிள் டியூப்பை மாலையா மாத்தி கல்யாணம் பண்ணீக்கறது செம காமெடி.. ஏன் சார் ஏன்?

5.  சின்னப்பையன் அதாவது ஹீரோயின் தம்பி வேணும்னே கீழே விழுந்து காயத்தை வாங்கி நிச்சய தார்த்தத்தை நிறுத்துறது எல்லாம் ரொம்ப ஓவரு..

6.  ஹீரோ, ஹீரோயின் 2 பேரும் ஊரை விட்டு ஓடிப்போக கிளம்பிட்டாங்க.. 2 பேரும் வெறுங்கையை வீசுட்டு வர்றாங்க? ஒரு பேக் கூட இல்லாம கிளம்ப அவங்க என்ன பேக்கா?

7. கொலைக்குற்றவாளி எப்படி பிரைவேட் ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகறார்? அவருக்கு செக்யூரிட்டியாய் நியமிக்கப்படும் 2 கான்ஸ்டபிள்ஸ்-ம் ஒரே டைமில் டீ குடிக்க வெளீல போறாங்களே. அது எப்படி?

8. ரிலீஸ் ஆகி வர்ற ஹீரோவை வரவேற்க ஹீரோயின் தம்பியோ. ஹீரோவின் நண்பர்கள் யாரும் போகலை.. ஆனா வில்லன்கள்க்கு மட்டும் தகவல் தெரிஞ்சு போறாங்களே?

9. கிராமம் பூரா காதலுக்கு எதிர்ப்புன்னு தெரிஞ்சும் ஏன் அந்த ஊர்க்கோயில்ல மேரேஜ் பண்ண லூசு த்தனமா முடிவு பண்றாங்க? ஊரை விட்டு ஓட வேண்டியதுதானே?

10 . க்ளைமாக்ஸ் மகா அபத்தம்.. ஊர்மக்களிடம் இருந்து காதல் ஜோடியை காப்பாற்ற ஹீரோயினின் தம்பியே அந்த ஜோடியை வெட்டி கொலை செய்து கருணைக்கொலை செய்யறார்.. அடங்கோ


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3VpTxSMb9BlA5pTn7jWaofrqthXaVqlxICT8SehQKqnVpxlj54mR7D-NfTaQSN7sEHm_cxmzybHhJMxKh1nPZVMD4O6LHPQtsF3-5vUK8XHGpYrqZf9ydM3Z8VQbEZz8w0yEcEOnw0viE/s1600/Meera+Nandan+at+prithviraj+marriage+reception+_6_.jpg

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் -  35

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - சுமார்

 சி.பி கமெண்ட் - அய்யய்யோ வேணாண்டா வேணாண்டா இதுல ஒண்ணுமே இல்லை.. படம் போட்ட நொடில இருந்து ஒரே தொல்லை.  


 ஈரோடு சங்கீதா தியேட்டர்ல படம் பார்த்தேன்.. சங்கூதற வயசுல சங்கீதா கேட்குதா? ராஸ்கல்ஸ்

 டிஸ்கி - டைட்டிலுக்கும் படத்துக்கும் சம்பந்தம் இல்லை.. சூரியன் ஹிட், சூரிய வம்சம் ஹிட்.. அந்த செண்ட்டிமெண்ட்ல வெச்சிருப்பார் போல.. ஆனானப்பட்ட உதய சூரியனுக்கே இப்போ நேரம் சரி இல்லைன்னு அவருக்கு தெரியல போல..

யு நெக் ஜாக்கெட்டுக்கும் , யு சர்ட்டிஃபிகேட்டும் இன்னா சம்பந்தம்? ( ஜோக்ஸ்)

ஆண்கள் கவனிங்கப்பா !
1.சூர்யா - நீங்க ஒரு கோடி ஜெயிச்சா என்ன செய்வீங்க? 


ஸ்ருதி -கேடி தனுஷ்க்கு பாதி, ஏமாந்த சோணகிரி லேடி ஐஸ்வர்யாவுக்கு மீதி ஷேர்


----------------------------

2. உலகின் லக்கி கேர்ள் ஏவாள் - நோ மாமியார், உலகின் அன் லக்கி ஆண் ஆதாம் - நோ மச்சினி


---------------------------------

3. அத்தான், நீங்க என் சொந்தங்களைக்கண்டுக்கறதே இல்லை..


 எவன் சொன்னான்?உன் தங்கச்சியை கேட்டுப்பாரு.# மச்சினி ராக்ஸ்

---------------------------

4.பெண்களுக்குப்பொதுவாவே நோய் எதிர்ப்பு சக்தி ஜாஸ்தி.. மேரேஜ் ஆன ஆம்பளைங்களுக்கு பொதுவாவே எதிர்ப்பு சக்தி நெம்ப நெம்ப கம்மி  ( நியர் ஒயிஃப்)


----------------------------------

5. ஆம்பளைங்க தொப்பையா இருந்தா லூஸ் சர்ட் போட்டு மறைச்சுடுவோம், பெண்கள் சப்பை ஃபிகரா இருந்தா பர்தாவோடயா வர முடியும்?


-------------------------------


சின்ன பசங்களா இவங்க,ஹிம் http://pic.twitter.com/rqZFbv3l - பை புரோட்டா புவனா


6. ரியாஸ் - ஒரே இடத்துல உக்காந்து ரொம்ப நேரம் வேலை செஞ்சா தொப்பை வரும்..


பயாஸ் - டாக்டர், நான் தான் வேலையே செய்யறதில்லையே?எப்படி வந்தது?


-------------------------------

7. சமையல் பற்றி பீற்றிக்கொள்ளும் பெண்களே.. 99% ஹோட்டல்களில், திருமண மண்டபங்களில் ஆண்கள் தான் சமையல் மாஸ்டர்கள் என்பதை அறிக!


-------------------------------------

8. வீட்ல சம்சாரம் சமைக்கறதை புருஷன் வேற வழி இல்லாம சகிச்சுக்கறான், பணம் கொடுத்து ஹோட்டல்ல சாப்பிடறவனுக்கு தலை எழுத்தா? ஹோட்டலில் ஆண் சமையல்


------------------------------------

9. 3 படத்தில் ஸ்ருதி உருவில் என்னைப் பார்த்தேன் - கமல் பெருமிதம் # ஜாக்கிரதை, ஆல்ரெடி தனுஷ் சைக்கோ வேற


---------------------------

10. அன்புள்ள டேமேஜர், பெண்கள்க்கு தனி மீட்டிங்க், ஆண்களுக்கு தனி மீட்டிங்க்னு வெச்சு ஏன் எங்க வயிற்றெரிச்சலை கொட்டிக்கறீங்க?



 --------------------------------



11. ஆபீசில்பல பெண்கள் வேலை செய்வதே இல்லை,.வீட்டில் பல ஆண்கள் வீட்டுவேலை  செய்யாமல் இல்லை # எ கீ


--------------------------------


12. யூ சர்ட்டிஃபிகேட் வாங்கியாச்சுங்கறதை சிம்பாலிக்கா சொல்ற மாதிரி படம் பூரா ஹீரோயினுக்கு யு நெக் ஜாக்கெட், நல்ல வேளை பேக் யூ நெக் # சூரிய நகரம்


-------------------------------


13. வித்யா - மைண்ட் பிளாங்க்கா இருக்கு :(


பிருந்தா -  மேல் மாடி காலியா இருந்தாத்தான் கவலைப்படனும் :0


-----------------------------

14. பல படைகள் கொண்டிருப்பதால் பவர் ஸ்டார் ராணுவத்தளபதி  என பட்டப்பெயர் வெச்சுக்கலாம் # ஆலோசனை

------------------------------

15. மின் பிரச்னைக்கு மூல காரணம் யார்? முதல்வர் விளக்கம் # தாமஸ் ஆல்வா எடிசன் தான்னு சொல்லாம விட்டா சரி


-------------------------


Veerabaghu Ramalingamபதிவிட்டது:Chitra Solomon
16. வாரம் ஒரு நாள் 2 மணி நேரம் ஸ்விம்மிங்க் போங்க, தொப்பை வராது.


போங்க DR, திமிங்கலம், சுறா எல்லாம் வாழ்நாள் பூரா ஸ்விம்மிங்!ஆனா குண்டு


--------------------------------

17. வாயாடிப்பையனின் அதிகப்பிரசிங்கித்தன விரலு # வாலு -சிம்புவின் புதுப்பட டைட்டில் விளக்கம்


------------------------------


18. மக்கள் நல பணியாளர்கள் : பணி நியமனம் செய்ய இடைக்கால தடை # அதானே, மக்களுக்கு நல்லது நடந்துட்டா என்னாகறது? அது பொறுக்காதே?


-----------------------------

19.உடையை ஊடுருவி உடலைப்பார்ப்பது ஆணின் பழக்கம்,விழியை ஊடுருவி   உள்ளத்தைப்பார்ப்பது பெண்ணின் வழக்கம்


-----------------------------------

20. அசைவப்பட்சிணியான  நரி வடைக்கும், திராட்சைக்கும் ஆசைப்பட்டதாக சொல்லப்பட்ட கதைகள் சந்தேகத்தை கிளப்புதே!


------------------
 

குமுதம் - கிருஷ்ணா டாவின்ஸி மரணம் -பாலை இயக்குநர் பகிரும் சில நினைவுகள்

தமிழ் பத்திரிகை உலகில் நன்கு அறியப்பட்ட பிரபல தமிழ்ப் பத்திரிகையாளர் கிருஷ்ணா டாவின்ஸிகாலமாகிவிட்டதாகச் சென்னைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


லேப்டோ பைரோஸிஸ் எனப்படும் எலிக்காய்ச்சலால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கிருஷ்ணா நேற்று மாலை 5 மணி அளவில் மரணமடைந்ததாகத் தெரிய வருகிறது.


அவரது உடல் போரூரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக  வைக்கப்பட்டுள்ளது. இன்று பகல் 12 மணி அளவில் அவரது இறுதி ஊர்வலம் நடைபெறவுள்ளதாக மேலும் அறியப்படுகிறது.


கிருஷ்ணா டாவின்ஸிக்கு அஞ்ச  ஆளுமையான தனிப்பட்ட சித்திரத்தை பிரத்தியேகமான நினைவுக் கட்டுரையாக நமக்குத் தருகிறார், அவருடன் குமுதம் வார இதழில் பணிபுரிந்த பாலை படத்தின் இயக்குனர் ம.செந்தமிழன்.


கிருஷ்ணா டாவின்சியை அறிவீர்களா?


கிருஷ்ணா டாவின்சி என்ற பெயரை உங்களில் பலர் அறிந்திருக்கலாம். குமுதம் எனும் வணிக இதழின் மிகச் சில அறிவுசார் பக்கங்களையும், பல்வேறு வணிக நோக்குப் பக்கங்களையும் நிரப்பிய பெயர் அது. கின்ஸி என்ற புனைப் பெயரில் வெளியான அரசியல் கேலிச் சித்திர வசனங்களின் சொந்தக்காரரும் கிருஷ்ணா டாவின்சியே.


2001 ஆம் ஆண்டு, ஈழத்தில் தலைவர் பிரபாகரன் சர்வதேசச் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, குமுதம் சார்பில் சென்றவர். புலிகளுக்கு எதிரான மனநிலையில் இருந்த கிருஷ்ணா, ஆச்சர்யப்படத்தக்க விதத்தில், புலிகள் ஆதரவாளராக மாறினார். நான் குமுதம் இதழில் செய்தியாளராக இணைந்தபோது எனக்கான ஆலமரம் கிருஷ்ணா. சிநேகாவின் அழகு பற்றியும் க்யூபாவின் பொருளாதாரம் பற்றியும் ஒரே கோல்ட் பில்டர் கிங்சை இழுத்தவாறு அவரால் பேச முடியும்.


நான் பணியாற்றிய காலத்தில், குமுதம் இதழ் எடிட்டோரியலில் அவ்வப்போது ஏற்பட்ட குழுக்களில் சில நல்லவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். மீதமிருந்த நல்லவர்களில் கிருஷ்ணா ஒருவர். யாரும் எந்தக் குழுவினருடனும் அடையாளப்பட அஞ்சிய நாட்கள் அவை. தேநீர் குடிக்க யார் யாருடன் போகிறார்களோ, அவர்கள் ஒரு குழு என காங்கிரசுக்குச் சற்றும் சளைக்காமல் வம்பு பேசிய காலம்.


‘நான் கிருஷ்ணா சார் ஆள்’ என நான் மார்தட்டுவேன். இப்போதும் குமுதம் இதழில் பணியாற்றும் பலருக்கு இது தெரியும். அவருடைய ’ஆளாக’ இருப்பதில் எனக்கு மட்டில்லா மகிழ்ச்சி. தத்துவம், கோட்பாடு, இதழியல், நடைமுறை அரசியல், பெண்கள், பாலியல், பெண்ணியம், குடும்பம் இன்னும் எவ்வளவோ பேசும் வல்லமை அவருக்கு உண்டு. எனக்கு இதுவே போதும்

.
குமுதம்.காம் இணையத்தைக் கட்டி எழுப்பிய சிலரில் கிருஷ்ணா குழுவினராகிய நாங்களும் உண்டு. அதிகாலை 4 மணி வரை நானும் ஆனந்தும் கிருஷ்ணாவுடன் இணையதளத்துடன் முண்டிக் கிடப்போம். விஜயன் எனும் எளிய தட்டச்சுப் பணியாளனை, ‘விஜயன் நீங்க நல்ல டிசைனரா வருவீங்க’ என வளர்த்தெடுத்தார் அவர். சென்னையின் தலைசிறந்த வடிவமைப்பாளர்களில் இன்று விஜயன் ஒருவர்.


குமுதம்.காமில் ‘நிகழ்காலம்’ எனும் பத்திரிகையைத் தொடங்கியபோது, என்னுடைய அரசியல் ஆர்வத்தைக் கண்டு, என்னை அந்த இதழுக்குப் பொறுப்பாளராக்கினார் அவர். அவுட்லுக் எனும் துணிச்சல் மிகு ஆங்கில இதழை எனக்கு அவர்தான் அறிமுகப்படுத்தினார். அந்த இதழில் வெளியான நல்ல கட்டுரைகளை நான் மொழி பெயர்த்து எழுதிக் குவித்தேன்.


விரல்கள் வலிக்குமளவு எழுதுவேன். கிருஷ்ணா மெல்லிய புன்னகையுடன், ‘தம் போடப் போலாமா?’ எனக் கேட்டால் அந்த வலி மரத்துப் போகும். தேநீர்க் கடையில் என்னுடன் நின்றபடி சாலையில் கடக்கும் இளம் பெண்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு எனக்கும் அவர்களில் அழகிகளை கண்ஜாடையால் காட்டுபவர் குமுதம் இதழின் துணை ஆசிரியர் என்பதை என்னால் நம்ப முடிந்ததில்லை.


குமுதம் இதழின் தர்க்கங்களுக்கு உட்படாத செய்திகளையெல்லாம் நான் எழுதக் கேட்டபோது, பொறுப்பில் இருந்த பலர் கேலியாக என்னை ஓரங்கட்டுவதுண்டு. கிருஷ்ணா தலைமை நிர்வாகியிடமே என்னை அழைத்துச் செல்வார். ’சத்தியமங்கலம் காட்டுக்குள்ள மலைவாழ் மக்கள் காட்டை விட்டு வெளியேறிக்கிட்டு இருக்காங்களாம் சார்…சென்சேஷனல் ஸ்டோரி…செந்தமிழன் போறேங்கறார்’ என்பார். அனுமதி கிடைக்கும்.


’கல்பாக்கம் அணு உலையைப் பத்தி நம்ம பத்திரிகை உலகம் நெகடிவா எழுத மாட்டேங்குது செந்தமிழன்…நாம் எழுதணும்…’ என்றார்.


‘நான் எழுதறேன் சார்…


’ஓகே ஆனால்…உங்களுக்கு சில க்ரைசிஸ் வரும்…சமாளிக்கணும்’


‘பரவால்ல சார்…’


ஏறத்தாழ உயிரைப் பணயம் வைத்து அலைந்து நான் எழுதிய கட்டுரையை, ’எதுக்கும் அட்டாமிக் அதாரிடில வெர்சன் வாங்கிடுங்க’ என வழக்கம்போல் கூறி, சிலர் அந்தக் கட்டுரையைப் புதைக்க முற்பட்டபோது, மெல்லிய புன்னகை மாறாமல்,


’செந்தமிழன்…இன்னும் ரெண்டு வாரத்துக்கு இதைப் பத்திப் பேசாதீங்க…என்னோட இஷ்யூ வரட்டும்….நான் பார்த்துக்கறேன்’ என்றார்.


அவர் பொறுப்பில் வந்த அந்த இதழில் ’கொல்பாக்கம்’ என்ற தலைப்பில், என் கட்டுரை கவர் ஸ்டோரி. எட்டுப் பக்கங்கள், நான் எடுத்த புகைப்படங்களுடன் வந்தது.


‘சிக்கன் எமன்’ என்னும் கவர் ஸ்டோரி நான் எழுதியது. ப்ராய்லர் கோழிக் கறியை உண்ண வேண்டாம் என்பது கருத்து. கறி விலை கிலோ 18 ரூபாயாகச் சரிந்தது. எனக்குக் கொலை மிரட்டல். எனது வீட்டுத் தொலைபேசி எண்ணை குமுதம் அலுவலகத்திலேயே யாரோ கோழிப் பண்ணை உரிமையாளர்களிடம் கொடுத்து விட்டனர். நள்ளிரவு மணி அடிக்கும். சகல கெட்ட வார்த்தைகளையும் கேட்டுக் கொண்டு தூக்கமின்றிக் கிடப்பேன்.


கிருஷ்ணா அதே மெல்லிய புன்னகையுடன், ‘செந்தமிழன் பேசாம ஒரு வாரத்துக்கு என் வீட்ல தங்கிக்கங்க’ என்றார். அதன் பிறகு, என் அறைக்குப் போவதே அரிது என்றாகிவிட்டது.


மேற்கு தாம்பரம் அருகே, ஒரு தி.மு.க பிரமுகர் தன் ஊருக்குள் தாழ்த்தபட்ட மக்கள் வாழும் பகுதிக்கு ரேசன் கடை வர விடாமல் தடுத்தார். நான் புகைப்படத்துடன் எழுதிவிட்டேன். வாக்குமூலங்களை திருட்டுத்தனமாக பதிவும் செய்துவிட்டேன். கட்டுரை வந்ததும், அந்தத் தேர்தலில் மேற்படிப் பிரமுகருக்கு சட்டமன்ற உறுப்பினர் போட்டி வாய்ப்பு பறி போனது.


அடியாட்களுடன் அலுவலகம் வந்துவிட்டார். கீழே உட்கார்ந்து கொண்டு, ’எழுதினவனை வரச் சொல்லு’’ என்று கத்துகிறார். அப்போது பொறுப்பில் இருந்த ஒருவர் என்னிடம், ‘நீதானய்யா எழுதின…? நீயே போய் பேசி அனுப்பு’ என்றார். என் நிலையை நீங்கள் உணரலாம். முகத்தைப் பார்த்துவிட்டால், தனியே செல்லும்போது வண்டியை மோதினால் போதும்.


கிருஷ்ணாவிடம் ’சார் என்னைப் போகச் சொல்றார் சார்…கொஞ்சம் பேசிப் பாருங்க’ எனக் கெஞ்சினேன்.


கிருஷ்ணா என் தோளில் கைபோட்டபடி, ‘செந்தமிழன்…இவன் கிட்ட சொன்னா கேக்க மாட்டான்…நீங்க கீழே போங்க…செந்தமிழன் வேலையா இருக்காரு… என்ன விஷயம்னு கேளுங்க…’நீங்க யாருன்னு கேட்டா நான் தான் கிருஷ்ணா டாவின்சின்னு சொல்லுங்க’ என்றார் அதே புன்னகையுடன்.


நான் அவ்வாறு செய்துதான் தப்பினேன்.


அவர் ரயில்வே அதிகாரியாகப் பணியாற்றியவர். சினிமா இயக்குனர் ஆவதுதான் அவர் லட்சியம். அதற்காகத்தான் குமுதம் இதழில் சேர்ந்ததாகச் சொல்வார். ‘செந்தமிழன் சினிமாவுல சேர, பத்திரிகை ஒரு நல்ல எண்ட்ரி’ என்பார்.


என்னிடம் அடிக்கடி, ‘உங்க ஆம்பிஷன் என்ன?’ எனக் கேட்பார்

. ‘அப்படி எதுவும் இல்ல சார்…இப்ப இந்த வேலை பிடிக்குது…செய்றேன்…’ என்பேன்.


’தப்பு…நீங்க சினிமாவுக்குப் போனா நல்லா வருவீங்க..’என்பார். அவர்தான் முதன் முதலாக என்னைச் சினிமாவுக்குத் தகுதியானவனாகப் பார்த்தார். அவருடைய கதை ஒன்றை நானும் அவரும் சீன் சீனாகப் பேசி எழுதினோம்.


’செந்தமிழன் முதல்ல நான் படம் பண்றேன்…அடுத்து நீங்க’ என்பார்.


அவர் குடியிருந்த வீட்டுக்கு நள்ளிரவில் நான் போய் கதவைத் தட்டி, என்னை எதிர்த்துக் கேள்வி கேட்ட பெண் உரிமையாளரைக் கண்டபடித் திட்டிவிட்டேன். மறுநாள் காலை, அந்த வீட்டைக் காலி செய்யும்படி உத்தரவு வந்தது.


‘சாரி சார்…’ என்றேன். ‘அட நீங்க வேற செந்தமிழன்…இந்த ஹவுஸ் ஓனர் பெரிய இவளா…? நீங்க என்ன அவ கையப் பிடிச்சா இழுத்தீங்க…? வீ ஆர் ஜர்னலிஸ்ட்ஸ்… லேட் நைட் வருவோம்.. தே ஹவ் டூ அண்டர்ஸ்டேண்ட்’ என்றார் அதே புன்னகையுடன்.


இதுபோல் அவர் மூன்று வீடுகளை மாற்ற வேண்டி இருந்தது.


என்னை அவரே, சுபா வெங்கட்டிடம் அறிமுகம் செய்து வைத்தார். மின் பிம்பங்கள் நிறுவனத்தில் நான் நுழைவதற்கு முழுக் காரணமாகவும் கிருஷ்ணா இருந்தார்.


என் திருமணத்தை நடத்தியதில் கிருஷ்ணா – ரேவதி தம்பதியினரின் பங்குதான் மிக அதிகம்.


2001 ஜூன் மாத்தில் ஒரு நாள் தேநீர்க் கடையில் நின்று கொண்டிருந்தோம். என்னை கிருஷ்ணாவின் பொறுப்பில் இருந்து வேறு ஒரு நபரின் பொறுப்புக்கு மாற்றும்படி உத்தரவு வந்திருந்தது. மழை தூவிக் கொண்டிருந்தது. ’சார் அந்தாள்கிட்ட என்னால வேலை பாக்க முடியாது சார்…அவன் ஒரு இடியட்…’ என்றேன்.


’கொஞ்சம் பொறுத்துக்கங்க’ என்றார்.


‘வேணாம் சார்…நான் ரிசைன் பண்றேன்’ என்றேன்.


அதே புன்னகையுடன், ’இங்கேருந்து யாராவது ரிசைன் பண்ணினா எனக்கு சந்தோஷம்தான் செந்தமிழன்…’ என்றார். நான் அடுத்த பத்தாவது நிமிடம் விலகல் கடிதம் கொடுத்துவிட்டேன்.


’கிருஷ்ணா சார் இருக்கார்ல…பாத்துக்குவார்’ என்று, அடுத்த மாசம் வாடகைக்கு என்னப்பா பண்றது என ஊரிலிருந்து கேட்ட என் அம்மாவிடம் தொலைபேசியில் சொன்னேன்.


’கிருஷ்ணா சார்’ அதேபோல் பார்த்துக் கொண்டார். மின்பிம்பங்களில் சுபாவெங்கட் வழியே குமுதம் இதழில் வாங்கியது போல் மூன்று மடங்கு சம்பளம் பெற்றேன்.


சென்னையின் மத்தியதர வர்க்கத்து உறுப்பினராக நான் மாறியது அந்த தேநீர்க் கடையில் எடுத்த முடிவினால்தான். கிருஷ்ணா எனும் மனிதனின் நம்பிக்கையே செந்தமிழன் எனும் எளியவனின் வளர்ச்சி.


அந்த கிருஷ்ணா டாவின்சி இன்று இல்லை.


பத்திரிகையாளர், என் நண்பர் நா.கதிர்வேலன் ‘krishna davinci expired’ எனக் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். கதிர்வேலனும் குமுதம் இதழில் எங்களுடன் பணியாற்றியவர்.


எப்படி இறந்தார்? ஏன் இறந்தார்? என எதையும் விசாரிக்கவில்லை இன்னும்.

எனக்கும் கிருஷ்ணாவுக்கும் இடையில் இருந்த ஒருவரால், எங்கள் உறவில் விரிசல் விழுந்தது. அவர் என்னோடு பேசுவதைக் குறைத்துக் கொண்டார். எனக்குக் குழந்தை பிறந்தது, நான் கார் வாங்கியது, நான் ஊரோடு போய் விவசாயம் பார்க்கத் தொடங்கியது, திரைப்படம் தொடங்கியது, படம் முடித்தது என என் வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் அவருக்குத் தொலைபேசியில் சொல்லிக் கொண்டுதான் இருந்தேன்.


ஆனாலும், எனக்கும் அவருக்குமான விரிசலில் நியாயமே இல்லை என்பதைத்தான் தாங்கிக் கொள்ள இயலவில்லை.


ஒரு வேண்டுகோள் நண்பர்களே, ஆழமான உறவுகளை ஒதுக்குவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஒதுக்கக் கூடாது என்பதற்கு ஒரே ஒரு காரணம் இருந்தாலும், ஆயிரத்தை விட ஒன்று பெரிது எனக் கருதுங்கள்.


நான் இப்போது அனுபவிக்கும் வலி உங்களுக்கு ஒருபோதும் ஏற்பட வேண்டாம்!


கிருஷ்ணாவுக்கு அஞ்சலி! அவரை இழந்து நிற்கும் குடும்பத்தினரினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ! THANX TO THAMIZMEDIA


Wednesday, April 04, 2012

ஒத்தை வீடு - பெண் குழந்தை பெற்றவர்களுக்கான பாடம் - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2SR34QdcyeyiBYUQqo79aqMfGIKbjta9uzNrqUVM0S1wOGDx_IwwvyB4foUP1Z0x0_ds32BWm1uMuxLbRUJyxx395JwK_4ct9130ffCHQp-Lbzqt-QTkVSLYI2Npw1Rmi76siolX0fDA/s1600/Oththaveedu.jpg 

கூட இருக்கறவங்களே குழி பறிக்கற மாதிரி நம்ம நெருங்கிய சொந்தங்களே சந்தர்ப்பங்களுக்கு காத்திருக்கும் கழுகுகளாய் பெண்ணை சீரழிக்க திட்டம் போடறாங்க.. நாம கவனமா நம்ம பெண் குழந்தைகளை கண்காணிச்சுக்கனும், பாதுகாப்பா பார்த்துக்கனும்.. இது தான் படத்தோட ஒன் லைன்.. இந்த கால கட்டத்துல மக்களுக்குத்தேவையான  சமூக விழிப்புணர்வு படம் தான்.. 

ஹீரோவோட ஃபேமிலில அம்மா, ஒரு தங்கச்சி.. ஹீரோவோட தாய் மாமன் அதாவது அம்மாவோடதம்பி  ஒர்ஸ்ட்  கலெக்டர் ஆஃப் லேடீஸ் அதாவது மோசமான பொம்பள பொறுக்கி.. வீட்ல ஆள் இல்லாதப்ப ஹீரோவோட  தங்கையை அதாவது தன் சொந்த  அக்கா பொண்ணையே  பாலியல் பலாத்காரம் பண்ன ட்ரை பண்றாரு.. 

 அந்த அதிர்ச்சில அந்தப்பொண்ணு உறைஞ்சு போய்க்கிடக்கு.. மேட்டர் நடக்கலை.. தப்பிச்சுடுது.. ஆனாலும் அந்த பாதிப்பு திக் பிரமை அடைஞ்ச மாதிரி ஆக்கிடுது.. வெளில சொல்லவும் முடில.. தன் மகளூக்கு பேய் பிடிச்சுடுச்சு.. சாமி வந்து இறங்கிடுச்சுன்னு அவங்கம்மா கோயில் கோயிலா சுத்தறாங்க.. 

ஹீரோவோட முறைப்பொண்ணு தான் ஹீரோயின்.. அந்த வில்லனோட பொண்ணு.. இவங்க 2 பேரும் லவ்வறாங்க.. திடீர்னு ஹீரோ தங்கச்சி செத்துடுது.. 

தங்கச்சி சாவுக்கு யார் காரணம்? வில்லன் என்ன ஆனான்? ஹீரோ லவ் நிறைவேச்சா? என்பது தான் மிச்ச கதை.. 


http://www.cinespot.net/gallery/d/646897-1/Oththa+Veedu+Photos+_7_.jpg

உண்மையில் எங்கோ நடந்த சம்பவம் போல.. திரைக்கதை நகர்த்தப்பட்ட விதம் அதைத்தான் சொல்லுது.. இடை வேளை வரை கதை சரியான திசைல தான் பயணிக்குது.. ஆனா ஹீரோ தங்கை இறந்த பின் இயக்குநருக்கு ஒரு குழப்பம்.. படத்தை எப்படி கொண்டு போறதுன்னு... 

மன்னித்தல் தான் சிறந்த குணம்.. பழசை பழைய பகையை எல்லாம் மறக்கனும் அப்டிங்கற கருத்தை சொல்ல வந்திருக்கார்.. ஆனா ராஜ பக்சே செஞ்ச கொடுமையை  மன்னிச்சு மறக்க முடியுமா? அதனால வில்லனை மன்னிச்சு விட்டுடறதை ஜீரணிக்க முடியலை.. கடைசி வரை ஹீரோ அல்லது ஹீரோயினிக்கு வில்லனோட சுய ரூபம் தெரியாமயே இருக்கு என்பதையும் ஏத்துக்க முடியல.. 

ஹீரோ ஆழ்கடல் நீச்சல் வீரர் திலீப் குமார்.. ஓக்கே ரகம்.. அவர் ஏன் படம் பூரா தாடியோட வர்றார்?லவ் ஃபெயிலியரும் இல்லை.. டூயட் காட்சிகளில் இன்னும் முகத்தில் ரொமான்ஸ் கொண்டு வரனும்.. 

 ஹீரோயின் பளிச் அக்மார்க் வில்லேஜ் கேர்ள்.. இந்த இடத்துல ஒரு கேள்வி.. வடிவுக்கரசி கேரக்டர்  தவிர படத்துல வர்ற எல்லா லேடீஸ் கேரக்டரும் லிப்ஸ்டிக் போட்டிருக்காங்களே ஏன்? ஹீரோயின், ஹீரோ தங்கச்சி போட்டிருந்தாக்கூட ஓக்கே வில்லனோட மனைவியா வர்ற  40 வயசு லேடியும் லிப்ஸ்டிக் .. எந்த கிராமத்துல அப்படி இருக்கு? 

ஹீரோவின் தங்கை கேரக்டர் சோனியா கர்வால் மாதிரி எப்பவும் சோகத்தை கண்களில் தேக்கி வைக்கும் முகம்.. நல்லா பண்ணி இருக்கார்.. 

வில்லன் நடிப்பு கன கச்சிதம்.. வடிவுக்கரசி நடிப்பில் அனுபவம் தென்படுது.. 

http://chennai365.com/wp-content/uploads/movies/Oththa-Veedu/Oththa-Veedu-Movie-Stills-050.jpg

மனம் கவர்ந்த வசனங்கள்


1.  வில்லன் - ஏம்மா என்னைப்பார்த்ததும் பட்டுன்னு எந்திரிச்சுட்டே..?நீ பாட்டுக்கு சாமான் கழுவு.. மரியாதை மனசுல இருந்தா போதும்.. 

2. எல்லா அம்மாக்களும் தன் புள்ளைங்க தன் பக்கத்துல இருக்கனும்னு தான் ஆசைப்படுவாங்க.. 

3.  ஒரு வேப்ப மரத்தையே புடுங்கி சாப்பிட்ட மாதிரி வாய் கசக்குது  ( ஆஹா.. என்ன ஒரு உவமானம்.. சபாஷ் வசனகர்த்தா)

4.  கண்ணுக்கு முன்னால இருக்கற ஆளை கட்டுறதுதான் பெஸ்ட்.. ஆள் எப்படி? என்னென்ன நல்ல பழக்கம் இருக்கு.. எப்படிப்பட்ட ஆள்னு தெரிஞ்சுக்கலாம்.. முன்னே பின்னே  பார்த்தே இராத ஆளை கட்டறது ரிஸ்க்.. 

5. வயசானாலும் மாமனுக்கு நக்கல் குறையலை..

 அது என் உடன் பிறந்தது.. 


 http://123tamilgallery.com/images/2011/07/Oththa-Veedu-Movie-Launch-834.jpg


6. சாமி எப்படிங்க மனுஷனை அடிக்கும்? அது நம்மளை காப்பாத்தும்.. 

7. பெண்களோட மனசு ரொம்ப சாஃப்ட்.. ஒரு சின்ன டம்ளர் விழுந்தாக்கூட அதிர்ந்துடுது.. 

8. இந்த உலகத்துல மாத்த முடியாதது எதுவுமே இல்லை.. அது ஆண் பால்., பெண் பால் அனைவருக்கும் பொது.. 

9. வாழ்றது கொஞ்ச நாள்.. அதுல போய் நான் பெரியவனா? நீ பெரியவனா? என்ர ஈகோ எதுக்கு?

10. மன்னிக்கத்தெரிஞ்சவன் தான் மனுஷன்.. முரண்பாடுங்கறது மனுஷனோட வாழ்க்கைல வந்துட்டே தான் இருக்கும்.. 


11. பத்து விரல்ல பாடுபடறோம் .. 5 விரல்ல சாப்பிடறோம்

http://g.ahan.in/tamil/Oththa%20Veedu/Oththa%20Veedu%20(19).jpg
 இயக்குநர் மற்றும் சக பதிவர் நண்பர் பாலு மலர் வண்னன் அவர்களிடம் சில கேள்விகள்


1.  கிராமங்களில் உள்ள பழக்கப்படி பெரிய  காரியத்துக்குப்போய்ட்டு வர்றவங்க அதாவது இழவு வீட்டில் பொய் துக்கம் விசாரிச்சுட்டு வர்றவங்க ரிட்டர்ன் வர்றப்ப எதுவும்  கடைலயோ, நண்பர்கள் உறவினர்கள் வீட்லயோ வாங்கிட்டு வரக்கூடாது.. வெறும் கைல தான் வரனும்னு ஒரு சாங்கியம் இருக்கு.. ஆனா ஹீரோவின் அம்மா வடிவுக்கரசி மருமகளுக்கு  பலகாரம் எல்லாம் வாங்கிட்டு வர்றார்..


2.  கிராமங்களில் வயசுக்கு வந்த பொண்ணை தனியா விட்டுட்டு போக மாட்டாங்க.. பக்கத்து வீட்டில் ஏதாவது வயசான பாட்டியை கர்டியனா விட்டுட்டு தான் போவாங்க.. ஆனா வடிவுக்கரசி அதெல்லாம் கண்டுக்கவே இல்லை.. 

3. வில்லன் வேலைக்காரியிடம் ஓப்பனிங்க் ஷாட்லயே ஜொள் விடறார்.. அவரோட சபல குணத்தை பயன் படுத்தி அந்த பணிப்பெண்ணும்  அப்பப்ப பணத்தை கறந்துக்குது.. ஆனா மேட்டர் மட்டும் நடக்கலை.. ஓக்கே.. ஆனா செகண்ட் ஆஃப்ல ஹீரோ ஒளிஞ்சு இருந்து பார்க்கும்போது வில்லன் வேலைக்காரியை கட்டிப்பிடிக்கறப்ப அது என்னமோ  பதி விரதை மாதிரி சீன் போடுதே ஏன்?


4. அண்ணன் ஒரு ரவுடி.. மேட்டரை வெளீல சொன்னா அவன் மாமாவை கொலை பண்ணி ஜெயிலுக்கு போயிடுவான்கறதால மறைச்சாச்சு ஓக்கே ஆனா  ஹீரோயின் கிட்டே கூட ஏன் சொல்லலை? அவ கிட்டே சொல்லி அவங்கப்பாவை கண்டிக்கச்சொல்லலாம் அல்லது வில்லனின் மனைவியை அதாவது அத்தையை சந்திச்சு ஒழுங்கா இருக்கச்சொல்லுங்கன்னு சொல்லி இருக்கலாமே?

5. தனது பெண் குழந்தையிடன் சின்ன மாற்றம் வந்தாலும் ஒரு தாய் டக்னு கண்டு பிடிச்சுடுவா .. ஆனா வடிவுக்கரசிக்கு அது எல்லாம் ஒண்ணும் தெரியலை.. 

6. ஹீரோவின் தங்கைக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி இருக்கு என்ற பாயிண்ட்  திரைக்கதைல யாரும் கே:ள்வி கேட்கக்கூடாது என்பதற்காகவே சாமார்த்தியமா சொன்ன மாதிரி இருக்கு.. 

7. செகண்ட் ஆஃப்ல வில்லன் வேலைக்காரியை பலாத்காரம் பண்றப்ப அந்த வீட்டில் இருக்கும் நாய் சும்மா குலைச்சுட்டுதான் இருக்கு.. கட்டி வைக்கவும் இல்லை.. ஏன் நாய் பாயவே இல்லை?

8. படம் போட்ட முதல் 26 நிமிஷங்களில் 3 பாட்டு.. ஒரு ஓப்பனிங்க் சாங்க், அப்புறம் கோயில் பாட்டு.. டூயட் பாட்டு.. ஏன்? ஏன்?

9. ஹீரோ திடீர்னு சிங்கப்பூர் போறதும் டக்னு ரிட்டர்ன் வர்றதும் செயற்கை..

10.  இடைவேளைக்குப்பின் அழுகை காட்சிகள், சோகக்காட்சிகள் அதிகம்.. கொஞ்சம் எடிட் பண்ணி இருக்கலாம்.. ஆடியன்ஸ் சோக சிச்சுவேஷன் உணர்ற அளவுக்கு இருந்தா போதும்.. போட்டு புழிஞ்சு எடுக்க தேவை இல்லை..

11. திரைக்கதைல ஆடியன்ஸ் எல்லாரும் வில்லன் எப்படி மாட்டப்போறான்? அவனுக்கு என்ன தண்டனை?ன்னு பார்க்கறப்ப அவனை மன்னிச்சு விட்றதும்.. அவருக்கு ஒரு கால் போயிடுது இயற்கையாகவே என்பது செயற்கை.. 

12. இயக்குநரோட பார்வை  எப்டி இருக்குன்னா ஹீரோ ஹீரோயின் சேர்வாங்களா? மாட்டாங்களா?ன்னு பர பரப்பை காட்டலாம்னு.. ஆனா ஆடியன்ஸ் என்ன நினைக்கறாங்கன்னா வில்லன்க்கு தண்டனை கிடைக்குமா? கிடைக்காதா?ன்னு.. 

http://chennai365.com/wp-content/uploads/movies/Oththa-Veedu/Oththa-Veedu-Movie-Stills-002.jpg


 திரைக்கதையில் சில ஆலோசனைகள் ( நண்பர் என்பதால்)


1. ஹீரோ சிங்கப்பூர் போற மாதிரி காட்டி இருக்கவே தேவை இல்லை.. ஹீரோ அருகில் இருக்கும்போது இந்த சம்பவம் நடந்த மாதிரி காட்டினால் தான் பரபரப்பு , டெம்ப்போ ஏத்த முடியும்.. 

2. ஹீரோவுக்கு வில்லன் செஞ்ச வேலைகள் தெரிஞ்சு இருக்கனும்.. கடைசி வரை தன் தங்கயை மாமா பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்தார் என்பதும் தன் தன் தங்கையின் சாவுக்கு மாமா தான் காரணம் என்பதும் தெரியாமல் போவதும் திரைக்கதையின் மைனஸ்.. தெரிய வந்து வில்லனை ஒரு புரட்டு புரட்டி இருக்க வேண்டும்.. 

3. வேலைக்காரியை வில்லன் ட்ரை பண்றப்ப ஹீரோ மறைஞ்சு இருந்து கல்  எடுத்து அடிக்கறார்.. அதுல டெப்த் இல்லை.. மக்களுக்கு அதாவது ஆடியன்ஸ்க்கு வில்லன் சரியான தண்டனை பெற வில்லை என்ற மன வருத்தம் கடைசி வரை இருக்கு.. 

4. இந்தக்கதைக்கு பாடல் காட்சிகளே தேவை இல்லை.. ஆடியோ சி டி மார்க்கெட்டுக்காக பாட்டு வெச்சாலும்  படத்துல குறைச்சிருக்கலாம்..


5. படத்தில் சோகம் அதிகம் என்பதால் காமெடி டிராக் வெச்சிருக்கலாம்.. 


http://g.ahan.in/tamil/Otha%20Veedu%20Movie/Otha%20Veedu%20Movie%20(46).jpg


 எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 38

 எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே 

சி.பி கமெண்ட் -  ஏ  செண்ட்டர்களில் சுமாராத்தான் ஓடும்.. பி சி செண்ட்டர்களில் படத்தின் விளம்பரம் ரீச் ஆகும் விதம் பொறுத்து ஓடலாம்..

வாராய் என் தோழி வாராயோ!நாட்டைக்குட்டிச்சுவர் பண்ண ஐடியா தாராயோ!



‎''இந்த பொழப்பு பொழைக்கறதுக்கு இவரு கேரளாவுல அடி மாடா போகலாம்''

1.ஊருக்கே பிக் ஷாட்டா இருக்கற மிஸ்டர் ராஜா ( ஆ ராசா அல்ல)வை ஏன் பெரும்”புள்ளி ராஜா”-ன்னு கூப்பிடக்கூடாது?


----------------------------------


2. டியர், நாளைக்கு காலேஜ் கட் அடிக்கலாமா? 

சீரியஸாவா சொல்றீங்க? 

இல்லை, சிரிச்சுக்கிட்டேதான் சொல்றேன் :) 


---------------------------------


3. லவ் பண்ற ஃபிகருங்க செல்போன்ல பேசி நடக்க தொடங்கிட்டா எதிர்ல அவளோட எந்தக் காதலன் வந்தாலும் கண்ணுக்கு தெரியாது போல ! # எ கீ


--------------------------------------


4. மனைவி ஊருக்குப் போயிருக்கையில் அவள் நியமித்த கண்காணிப்பு ஏஜெண்ட்கள் என்னை நல்லவனாய் வைத்திருக்கிறார்கள் # எ கீ



--------------------------------

5. புதிதாய் பணியில் சேரும் ஊழியர்கள் நிறுவனத்தில் முதல் ஒரு வருடமும், புதிதாக மணம் ஆனவர்கள் முதல் 3 மாதங்கள் நன்கு உழைப்பார்கள்


------------------------------
 
சுவர் புகைப்படங்கள்

வறுமை காரணமாக , வில்வித்தை வீராங்கனை நிஷா ராணி தத்தா, உலகத்தரம் வாய்ந்த தனது "வில்லை' விற்ற சம்பவம் அதிர்ச்சியை

ஏற்படுத்தியுள்ளது. இது துரதிருஷ்டவசமானது என, விளையாட்டு அமைச்சர் அஜய் மேகன் தெரிவித்தார்.

6.ஜெ சீரியல்களில் நடித்திருந்தால் பெண்களை மட்டும் அழ வைத்திருப்பார், இப்போ அரசியலில் இருப்பதால் தான் மொத்த தமிழ்நாட்டையே அழ வைக்கிறார்


-----------------------------------

7.துடை என்பது வினைச்சொல்லா? பெயர்ச்சொல்லா? 


 அது சரியா தெரிலைங்க.. ஆனா தொடை என்பது வினையை ஏற்படுத்தும் சொல் பை ரம்பா ரசிகன்

------------------------------------

8.ஆஞ்சநேயனை விரட்டியடித்த அனன்யா குடும்பத்தினர்...! # அடடா.. வடை போச்சே!! ஆஞ்சநேயர் புலம்பல்.


--------------------------------

9. முருகா! வள்ளி உன் 2 வது சம்சாரம் தானே? ஏன் வள்ளி தெய்வானைன்னு எல்லாரும் சொல்றாங்க? 


பக்தா! லேட்டஸ்ட்டா யாரை செட் பண்றமோ அந்த பேரு முதல்ல 


---------------------------------

10. டாக்டர், போதைல இருந்து மீள நான் என்ன பண்ணனும்? 


தம்பி.. இது டாஸ்மாக்.. சரக்கு அடிக்கறப்ப மூடு அவுட் பண்ணாதே, கிளினிக் வா, பேசிக்கலாம் 


--------------------------------------



11 நையாண்டி -பஸ்ஸில் ஜன்னலோர பயணம்;பல பிரச்சனைகளை வீசிவிடுகிறேன்! # அட , நல்ல ஐடியாவா இருக்கே,சங்கட சம்சாரத்துடன் பயணம் செய்வோர்.கவனத்துக்கு


-----------------------------------


12. ஒல்லியா இருக்கிறவங்க எதுக்கு வாக்கிங் போவணும்? 


உடல் ஆரோக்கியத்தில் இன்னும் கில்லியா ஆக.

---------------------------

13. ஒசாமாவின் மனைவிகளை நாடு கடத்துவதுபோல் நயன் தாராவின் காதலர்களையும் நாடு கடத்த ஆலோசனை - ஜெ அறிவிப்பு


--------------------------


14. நான் எப்போதும் விசுவாசமாய்த்தான் இருப்பேன், ஆனா வருஷா வருஷம் வாடகை வீட்டை மட்டும் மாத்திக்குவேன் ஹி ஹி - 9 தாரா


---------------------------------

15. எண்ட்ரி என பில்டப் கொடுத்து உள்ளே வருபவர்கள் ( ஹீரோக்கள்) போறப்ப டிஸ் எண்ட்ரி என்பார்களா? நோ எண்ட்ரி என்பார்களா? ஹி ஹி


------------------------------------


Low hip jeans! Fashion freak donkey! ;)


16. சில ஜிகிடிங்களுக்கு லிப்ஸ்டிக்தான் பியூட்டி.ஆனா பசங்களுக்கு அதை அழிக்கறதுதான் டியூட்டி, சோ (so) கிஸ் அடிப்போம், கிளுகிளுப்பாய் இருப்போம்


------------------------------------

17. வாராய் என் தோழி வாராயோ!நாட்டைக்குட்டிச்சுவர் பண்ண ஐடியா தாராயோ!என்னைத்தவிர வேறு யார் கூடவும் நீ சேராயோ -ஜெ

--------------------------

18. காதலி -வாழ்ந்தா ஒண்னா வாழ்வோம், இல்லைன்னா சேர்ந்தே சாவோம்


 வாங்க


 காதலன் - நீ முன்னால போனா நான் பின்னால ( 20 வருஷம் கழிச்சு) வாரேன்


--------------------------------------

19. அரட்டை -சாஃப்ட்வேர் துறை ஃபிகர்ஸ் செமயா இருக்காங்களே?


பரட்டை - திருப்பூர் பனியன் கம்பெனில ஆல் @டு ஃபிகர்ஸ்

-----------------------------------

20. அத்தான், என்னை ஆஃபீஸ்ல டிராப் பண்றேன்னு சொல்லிட்டு s ஆகிட்டீங்களே? ஏன்?


 நீ வெச்ச ரசம் சாப்பிட்டு என் எண்ணத்தை டிராப் பண்ணிட்டேன்


-----------------------------------------


Tuesday, April 03, 2012

BLOOD MONEY - பாலிவுட் சினிமா விமர்சனம்

http://www.bollygraph.com/wp-content/uploads/2012/03/Blood_Money_Is_794.jpgவாழ்க்கையில் முன்னேறத்துடிக்கும் எம் பி ஏ கேண்டிடேட் தன்னோட சம்சாரத்தை கூட்டிக்கிட்டு  அந்த ஊருக்கு வர்றான். கம்பெனி அவங்களூக்கு குடுத்த பங்களாவை பார்த்தா சசிகலா மயக்கம் போட்டு விழுந்துடுவாங்க.. அவ்ளவ் படோடகம்.. ஆடம்பரம்..  கிட்டத்தட்ட ஃபாரீன் தூதர் தங்கற மாதிரி ஒரு பில்டிங்க்.. 

அப்படி என்ன அப்பாடக்கர் வேலைன்னா அந்த கம்பெனி டைமண்ட் பிஸ்னெஸ் பண்ணுது.. ஹீரோ தன்னோட வாய் சாமார்த்தியத்தால ( இதுக்கு இங்க்லீஷ்ல ஓரல் டேலண்ட்னு சொல்லலாமா? ஹி ஹி ) ஒரு வைரக்கல்லை 7 கோடிக்கு வித்துடறார்.. எந்த கேனயனும் அப்படி வாங்க மாட்டான்.. ஆனாலும் டைரக்டர் சொன்னதுக்காக ஒரு சேட்டு ஜி வாங்கிடுது. 

 அந்த பிஸ்னெஸை டீலை முடிச்சதுக்கு கம்ப்பெனி ஹீரோவுக்கு கமிஷனா 25 லட்சம் கொடுக்குது.. படம் பார்த்துட்டு இருக்கறவங்க, தியேட்டர் ஆபரேட்டர் உட்பட என்ன நினைக்கறாங்கன்னா வருஷம் பூரா  கஷடப்பட்டு வேலை செய்யறதுக்கு இந்த மாதிரி ஒரு நாள் மட்டும் வேலை செஞ்சா போதும்னு நினைக்கறாங்க.. 

 ஹீரோ அந்த 25 லட்சத்தை டெபாசிட் பண்ணி சேமிக்காம சம்சாரத்துக்கு அதுவும் அவனோட சம்சாரத்துக்கு நகை வாங்கித்தர்றான்.. அந்த நெக் லசை பார்த்து ஹீரோ நெக்குருகிடறா.. 


http://www.firstpost.com/wp-content/uploads/2012/03/blood-money.jpg

ஹீரோ ஒர்க் பண்ற கம்பெனில ஒரு வில்லன்.. அவனைப்பற்றி சொல்றதுக்கு  முன்னால ஆஃபீஸ் பற்றி பொதுவா ஒண்ணு சொல்லிக்கறேன்.. சின்ன ஆஃபீசோ, பெரிய ஆஃபீசோ, கவர்மெண்ட் ஆஃபீசோ, பிரைவேட் ஆஃபீசோ எல்லா பக்கமும்  ஓனருக்கோ அல்லது மேனேஜருக்கோ கூட்டிக்கொடுத்து அல்லது சக ஊழியர்களை காட்டிக்கொடுத்து அல்லது போட்டுக்குடுத்து வாழும் ஜென்மங்கள் இருப்பாங்க..


 அந்த மாதிரி இந்த வில்லன்க்கு ஹீரோவை பிடிக்கலை. என்ன காரணம்னா வந்த உடனேயே ஓனரை இம்ப்ரஸ் பண்ணிடறானே?ஹீரோ வில்லன் செய்யற ஒரு தில்லு முல்லு வேலையை கண்டு பிடிச்சு அதை பற்றி ஓனர்ட்ட எச்சரிக்கிறான். 

 ஓனர் ஒரு ஆடம்பரமான ஹோட்டல்க்கு கூட்டிட்டு போய் லஞ்ச் சாப்பிட வைக்கிறார். சாப்பிடறப்போ ஹீரோட்ட கேட்கறாரு.. உன் கிட்டே இப்போ 2 ஆப்ஷன் தான் இருக்கு  1. அட்டகசமான இந்த விருந்தை ரசிச்சு ருசிச்சு சாப்பிடனும் 2. கிச்சன் ரூம்க்கு போய் இந்த சமையல் எப்படி செய்யறாங்கன்னு பார்க்கனும்.. 2ல எதை நீ செலக்ட் பண்ணுவே? சமையல் செய்யறதை பார்த்தா ரசனையோட சாப்பிட முடியாது..

 அந்த மாதிரிதான் நம்ம தொழிலும். சிலதை எல்லாம் கண்டுக்கக்கூடாது.. அப்டிங்கறார்.

ஒரு பார்ட்டி கம்ப்பெனில நடக்குது. அதுல ஓனரோட பி ஏ ஹீரோவுக்கு ரூட் விடறா.. தானா வந்த கில்மா சான்ஸை வீணா போக விடலாமா? என்ற சித்தாந்தப்படி ஹீரோ தப்பு பண்ணிடறார்.. 

அதை வில்லன் செல் ஃபோன்ல படம் எடுத்து  வெச்சு ஹீரோவை மிரட்றான்.. அவன் ஹீரோவின் மனைவி கிட்டே சொல்லிட்டா என்ன பண்றது?ங்கற பயத்துல ஹீரோவே தன் மனைவிட்ட மேட்டரை சொல்லிடறான்.. 

 2 பேருக்கும் ஃபைட்..  அப்புறம் ஹீரோ என்ன பண்றான்? வில்லன் என்ன ஆகறான்கறது தான் மிச்ச சொச்ச கதை.


 ஹீரோ ஆள் ஜம்முன்னுதான் இருக்கார்.. டைட்டானிக் ஹீரோ கணக்கா..அவர் பிஸ்னெஸ் பண்றதுல காட்டுற லாவகத்தை விட கமல் மாதிரி பாடியை எக்ஸ் போஸ் பண்றதுல தான் அதிக கவனம்.. 

 ஹீரோவோட டிரஸிங்க் நீட் . ஹீரோயின் ஒரு அட்டு ஃபிகர் ( @டு ஃபிகர்)
ஆனா பி ஏ வா வர்ற வில்லி செம கட்டை.. கலைஞர் விஜயாந்த்துக்கு குடுத்த எழுச்சிக்கலைஞர் பட்டத்தை இவருக்கு குடுக்கலாம்.. 

 http://www.bollywood-stars.net/wp-content/uploads/2012/02/Mia-Uyeda-kissing-kunal-khemu1.jpg

படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்



1.  நான் கனவு தான் காண்கிறேனா?ன்னு டவுட்டா இருக்கு.. 

ம்ச் ம்ச்

 இப்போ எதுக்கு எனக்கு கிஸ் பண்ணீங்க?


இது கனவு இல்லைன்னு நிரூபிக்க ஹி ஹி 


2. ஏய்.. நீ லேட்டா ஆஃபீஸ் ல இருந்து வர்றதுக்கும், நீ பண்ற தப்பை மறைக்கறதுக்கும் தான் , அல்லது அதுக்கு பரிகாரமாத்தான் அந்த நெக்லஸா? ஃபுல் ஷிட். 


3. சார். எனக்கு ஒரு டவுட். நாம கவர்மெண்ட்டை ஏமாத்தறோமா? 

 நாம பிஸ்னெஸ் பண்றோம்.. அவ்ளவ் தான்.. 


4.  சார்.. அவனைப்பற்றி குறை சொல்றதால என்னை பொறாமை பிடிச்சவன்னு சொல்றிங்களா?

 ச்சே ச்சே. எனக்கு மனித மனம் அத்துபடி . ஐ நோ சைக்காலஜி.. 


5. நான் அதிகமா பேசறதா நீங்க நினைச்சா இத்தோட நிறுத்திக்கறேன்

நோ நோ. யூ கண்ட்டிநியூ


http://i.ytimg.com/vi/F7W1D59JZbo/hqdefault.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள் , மற்றும் லாஜிக் மிஸ்டேக்ஸ் சுட்டிக்காட்டல்கள்



1. ஹீரோ ஹீரோயினோட அதாவது அவர் சம்சாரத்தோட ஆஃபீஸ் பார்ட்டிக்கு போறார்.. அங்கே ஹீரோவை மட்டும் தனியா கூட்டிட்டு போயிடறாங்க.. ஹீரோயின் தனியா இருக்கா. அப்போ ஒரு பொண்ணு வந்து அவர் வர லேட் ஆகும் .. நீங்க வீட்டுக்குப்போறதுன்னா கிளம்புங்க அப்டிங்கறாங்க.. எந்த சம்சாரமாவது இதுக்கு ஒத்துக்குவாளா? விடிஞ்சாலும் சரி புருஷன் கூட தான் வந்தேன். புருஷன் வந்த பின் போறேன்னு தானே சொல்வா? தனிக்குடித்தனம் இருக்கற அவங்க தனியாப்போய் என்ன பண்ணப்போறாங்க. யாருக்கு சமைச்சு வைக்கனும்?


2. பார்ட்டிக்கு வந்த ஹீரோ எதுக்கு செல் ஃபோனை பாக்கெட்ல வைக்காம டேபிள்ல வைக்கறார்.. மனைவி கிட்டே இருந்து கால் வருது.. அப்போ ரிங்க் டோன் சத்தம் கேட்கலை.. ஆனா வில்லி மட்டும் கரெக்ட்டா எடுத்துப்பேசறா .. அது எப்படி? சைலண்ட் மோடுல ஹீரோவுக்கும், வைப்ரேஷன் மோடுல வில்லிக்கும் இருக்கா?

3. ராமன் மாதிரி உத்தமனா வாழ்ற ஹீரோ வில்லி ஜால்ஸ்  சாரி ஹால்ஸ் மிட்டாயை வாய்ல போட்டுக்கிட்டு அதை எடுன்னு சொல்றப்ப பளார்னு ஒரு அறை விட்டா விழுது.. எதுக்கு லிப் கிஸ் பண்ணி அதை எடுக்கனும்? அப்புறம் அய்யய்யோ கற்பு போச்சேன்னு புலம்பனும்// ( எல்லாம் ஒரு ஆற்றாமைல தான் ஹி ஹி )

4.  அந்த பார்ட்டில ஹீரோயின் , வில்லி 2 பேரும் ஒரே கலர் டிரஸ் போட்டுட்டு வர்றாங்க.. 2 பேரும் ரெட் கலர் டிரஸ்ல வந்தா ஆடியன்ஸ் குழம்ப மாட்டாங்களா?

5.  ஹீரோயினுக்கு பர்த்டே.. அன்னைக்கு ஆஃபீஸ்ல இருந்து லேட்டா ஹீரோ வர்றார்.. வந்து ஹேப்பி பர்த்டே சொல்றார்.. அப்போ மணி நைட் 10... உடனே ஹீரோயின் கோவிச்சுக்கறா.. என் பர்த்டே அன்னைக்கு கூட நேரத்துலயே வர மாட்டீங்களா?ன்னு கேட்கறா.. என் கேள்வி இன்னான்னா காலைல தானே வழக்கமா ஹேப்பி பர்த்டே சொல்வாங்க? ஏன் காலைல ஹீரோ அதை சொல்லலை?

http://static.ibnlive.in.com/ibnlive/pix/slideshow/03-2012/arth-to-blood/bhat-march27-25.jpg

  கதை ஆப்பிரிக்கா ஆங்களூர்ல நடக்கறதால லொக்கேஷன்ஸ் எல்லாம் செம பிரம்மாண்டம்.. ஆனா கதைல அழுத்தம் இல்லை.. படத்துல ஒரே ஒரு கில்மா சீனுக்கான லீடு இருக்கு.. ஆனா அது யானைப்பசிக்கு சோளப்பொறி தான் .. 


சி.பி கமெண்ட் - இந்தியாவுல எப்படியோ தெரில தமிழ்நாட்ல இந்தப்படம் ஓடாது.. பார்த்தே தீர வேண்டும் என்ற அவசியம் இல்லாத படம்.. 

ஈரோடு ஸ்ரீநிவசாவில் படம் பார்த்தேன்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDf0J4m_ZhxPxrQ3eUlrW9jjiTCFzH-xB1sNyy3Q7OcZ25d5HqIdT65Ybl3JCpieYO4xFXK8jwNwVsJ50DCk8dGlHYVhN221w-5JZh_s2SYpX2FQIi0DO3oZa23AtgXtFZNEW_YHgVPPM/s1600/blood-money+(2).jpg


ஒத்தைக்குதிரை -கொஞ்சம் திகில், கொஞ்சம் டஹில் - சினிமா விமர்சனம்

http://www.nanbargal.com/images/movies/tamil/othakuthirai.jpg

ஒரு கிராமம்.. அதுல வரிசையா சிலர் கொலை செய்யப்படறாங்க. கிராமத்து ஜனங்க எல்லாம் அது பேய் வேலைன்னு சொல்லிக்கறாங்க.. ஒரு பிரைவேட் டி வி சேனல் ஒரு குரூப்பை அனுப்பி நிலைமையை கண்டறிய ட்ரை பண்ணுது.. 

கிராமத்துல பஞ்சாயத்து தலைவர் அவங்களுக்கு தங்க உதவி பண்றார். டி வி டிடெக்டிவ் குரூப் 4 பேரு. 3 பசங்க, ஒரு பொண்ணு. கிராமங்கள்ள சந்தேகப்படும்படி தெரியற இடங்கள்ல ஹிடன் கேமரா வைக்கறாங்க ( எந்த குரங்கும் தூக்கிட்டு போகல)

ஹீரோவோட ஆள் ஆல்ரெடி இதே கிராமத்துல இதே டிடெக்டிவ் வேலைக்காக இங்கே வந்து மாயம் ஆகிட்டா .. ஹீரோ உடனே ஒரு ஐடியா பண்றாரு.. தன் ஆளோட தங்கச்சி அதாவது வருங்கால கொழுந்தியா அதே சாயல் பொண்ணு.. கிராமத்துக்கு வர வைக்கிறார்.. 

வில்லன் பஞ்சாயத்து தலைவன் தான்.. நைட் டைம் வில்லன் கார்ல வெளீல போறப்ப ஹீரோவோட கொழுந்தியாவை அவன் பார்வைல பட வைக்கிறாங்க.. வில்லன் திகில்ல உறைஞ்சிடறான்..


http://600024.com/gallery/cache/movies/2012/othakuthirai/othakuthirai_09_w800_h537_600024.jpg

 இன்னா மேட்டர்னா வில்லன்க்கு ஜாதி வெறி ஜாஸ்தி.. வில்லனோட பொண்ணு யாரையோ கீழ் ஜாதி ஆளை லவ் பண்ணி இருக்கு. 2 பேரும் ஊரை விட்டு ஓடிப்போறப்ப வில்லன் வழி மறைச்சு பளார்னு ஒரு அறை விட்டாரு.. அதுல அவர் மகள் க்ளோஸ். 

எதேச்சையா நடந்த இந்த விபத்தை  வில்லன் பேய் அடிச்சதா கிளப்பி விட்டு எஸ் ஆகிடறாரு.. தன் மகளே போய்ட்டா.. என்னமோ ஆகட்டும்னு விட்டுட வேண்டியதுதானே.. அவ காதலனையும் அடிச்சே கொலை பண்றாரு.. அந்த கொலையை ஹீரோவோட ஆள் பார்த்துடறா,. அதனால  அவளையும் போட்டுத்தள்ளிடறாரு.. 

 இப்போ ஹீரோ தன் கொழுந்தியாவை வர வெச்சதும் வில்லனுக்கு குழப்பம். 

என்ன நடக்குது.?  என்பது  மீதி திரைக்கதை ( இப்போ நான் சொன்னதே முக்கா வாசி திரைக்கதை ஹி ஹி )

 அம்புலி படத்தை நினைவு படுத்தினாலும் இதுவும் நல்லதொரு திகில் பட முயற்சியே.. 

 ஆனா புது முகங்கள் செலக்‌ஷன் தான் சுமார் ரகம். ஹீரோ சுமாரா இருந்தா எப்படியோ போகட்டும். அதைப்பற்றி நமக்கென்ன கவலை.. லட்சக்கணக்குல செலவு பண்ணி படம் எடுக்கறவங்க கதைக்கு அடுத்ததா முக்கியத்துவம் தர வேண்டியது ஹீரோயின் செலக்‌ஷனுக்குத்தான்.. சுமார் ஃபிகரை ஹீரோயினா போட்டா எப்படி?

படத்துல  2  ஹீரோயின். டி வி டிடெக்டிவ் குரூப்ல ஒரு பொண்ணு அது 50 மார் ஃபிகர்.. ஹீரோவோட லவ்வர் 54 மார்க் ஃபிகர். செம போர் ஹி ஹி

http://600024.com/gallery/cache/movies/2012/othakuthirai/othakuthirai_32_w800_h537_600024.jpg


படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்


1. எப்படி எல்லா ஆண்களால் ராமனா இருக்க முடியாதோ, எப்படி எல்லா பொண்ணுங்களும் கண்ணகியா இருக்க முடியாதோ ,அதே மாதிரி எல்லா அரசியல்வாதிகளூம் நேர்மையா இருக்க முடியாது

2. XQS மீ



நான் ஒண்ணும் எச்சக்கலை மூர்த்தி இல்லை.. என் பேரு ஆறுச்சாமி

3. தண்ணியைப்போட்டாலும் குடிகாரங்க எப்பவும் உண்மையைத்தான் சொல்வாங்க.. 

4. பேய், பிசாசுல உங்களூக்கு நம்பிக்கை இருக்கா? பெரியவரே. 

 உங்க அனுபவத்துல இல்லாத ஒரு விஷயத்தை ப்பற்றி பேசுனா நீங்க நம்பப்போறதில்லை... 

5. பேய் இருக்கறது உண்மைன்னா அது இன்னொரு பேயை கொல்ல வேண்டியதுதானே , ஏன் மனுஷனை கொல்லனும்? ( தன் இனத்தை கொல்லாத இனமோ என்னவோ?)


6. அவன் நடந்து வர்றப்ப பேய் நடந்து வர்ற மாதிரியே இருக்கு

 இருடி உன்னை வந்து வெச்சுக்கறேன்

 அதுக்கு வேற ஆள் இருக்கு.. 

7. ம்.. சொல்லுப்பா... 

 என்னது? அப்பாவா?


 அது வேற அப்பா... 

8. பொண்ணுங்க இருக்காங்களே மேரேஜ்க்கு முன்னே நாமளா வலிய போய் பேசுனாலும் கண்டுக்க மாட்டாங்க.. மேரேஜ்க்குப்பிறகு அவங்களா நம்ம கிட்டே வந்து வந்து பேசி தொந்தரவு பண்ணுவாங்க.. 

9.  இந்த மூஞ்சிக்கே ஒருத்தன் சிக்கி இருக்கான்.. எனக்கு ஒருத்தன் சிக்காமயா போயிடுவான்.. 

10. அறிவாளி, புத்திசாலின்னு சொல்றீங்களே, அதுக்கெல்லாம் என்ன அர்த்தம்?

டியர்.. அது அந்த பேருக்கும் தான் தெரியும்.. நமக்கென்ன அதை பற்றி


http://600024.com/gallery/cache/movies/2012/othakuthirai/othakuthirai_25_w800_h537_600024.jpg


11. பெத்தவங்களை பாரமா நினைக்கக்கூடாது.. நம்ம உடம்புல ஒரு பாகமா நினைக்கனும்..

12. நான் போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்துடறேன்

எந்த டிரஸ் போட்டாலும் உனக்கு  நல்லாத்தான் இருக்கும்.. 

 அப்போ டிரஸ்சே போடலைன்னா?

13. என் பொண்டாட்டி என்ன காரியம் பண்ணிட்டா தெரியுமா?

 என்னய்யா பிரச்சனை? எவன் கூடயாவது தப்பு பண்ணிட்டாளா?

 அப்படி பண்ணி இருந்தாக்கூட பரவாயில்லையே?

 அடப்பாவி. நீ  எல்லாம் ஒரு புருஷனா? என்ன தான் பண்ணித்தொலைச்சா?

 எனக்குன்னு வாங்கி வெச்சிருந்த குவாட்டரை ஒரு சொட்டுக்கூட எனக்கு மிச்சம் வைக்காம அவளே  எடுத்துக்குடிச்சுட்டா..

14. என்ன ஒரு விசித்திரம்னா இந்த உலகத்துல காதலை நம்பறதில்லை, ஆனா சாமியை நம்பறாங்க

15. ஒண்ணா வாழ்ந்தோம்னு பேர் எடுப்போம், இல்லைன்னா ஒண்ணா செத்தோம்னு பேர் எடுப்போம்..


http://600024.com/gallery/cache/movies/2012/othakuthirai/othakuthirai_08_w800_h537_600024.jpg

இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1. முழுக்க முழுக்க ஒரே ஒரு கிராமத்திலேயே முழுப்படத்தையும் எடுத்து காசை மிச்சம் பண்ணியது.. ஸ்க்ரிப்ட்டில் நம்பிக்கை வைத்து பெரிய நடிக நடிகைகள் யாரும் இல்லாமல் படம் எடுத்தது

2. ஹீரோயின் இருவரும்  படம் பூரா திருப்பூர் பனியன் அல்லது டி சர்ட் மட்டும் அணிந்து வருவது..  அதிலும் 42 சைஸ் அணீய  வேண்டிய இருவரையும் 40 எனும் எல் சைஸ் கொடுத்து அணீய வைத்தது .. ஹி ஹி

3. தோளோடு தோளாய் சேரும் கைகள், என் காதல் என 2 பாடல்களை கண்ணியமாக எடுத்தது.. ஆனால் இந்தப்படத்துக்கு பாடல்களோ, டூயட்டோ தேவை இல்லை என்பது வேறு விஷயம்

4. பின்னணி இசை பிரமாதப்படுத்தாவிட்டாலும் ஓக்கே தான்.. பயப்படுத்த வேண்டிய இடத்தில் பயப்படுத்தி விறு விறுப்பை கூட்டும் இடத்தில் திரில்லிங் மியூசிக் ..


http://600024.com/gallery/cache/movies/2012/othakuthirai/othakuthirai_06_w800_h537_600024.jpg


 இயக்குநரிடம் சில கேள்விகள்


1.கதை நடக்கற இடம் ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் அருகே உள்ள ஒத்திக்குதிரை எனும் கிராமம்.. அங்கே கார்ல வர்ற  ஆள் கிட்டே போலீஸ் லைசன்ஸ் , ஆர் சி புக் எல்லாம் கேட்குது.. கார் தமிழ் நாடு ரிஜெஸ்டரேஷன்... ஆனா அவர் ஆர் சி புக் காட்டாம ஏதோ அட்டை ஒண்ணை காட்றாரு.. கர்நாடகா ஸ்டேட் ல தானே அட்டை வந்துச்சு? தமிழ் நாட்ல இன்னும் புக் சிஸ்டம் தானே?

2. ஒரு டிராஃபிக் கான்ஸ்டபிள் 10 நிமிஷம் ஒரு ஆளை சும்மா விசாரிச்சுட்டு இருக்கார்.. அப்போ தான் ஜஸ்ட் லைக் வந்த எஸ் ஐ “ என்னப்பா ரொம்ப நேரமா அவன் கிட்டே விசாரிச்சுட்டு இருக்கே?” அப்டினு கேட்கறாரே? அது எப்படி?

3. வில்லன் தன் மகளை ஓங்கி ஒரு அறை விட்டதும் மக செத்துடறா.. உடம்புல எந்த காயமும் இல்லை... பார்க்க ஆள் தூங்கிட்டு இருக்கற மாதிரியோ, மயக்கம் அடைஞ்ச மாதிரியோதான் இருக்கு.. ஆனா அப்போ அந்த வழியா வர்ற நெல்லை சிவா  “ ஆள் அவுட்”னு உடனே எப்படி முடிவு பண்றார்? ரத்தம் பார்த்தாரா? மூக்குல கை வெச்சு மூச்சு நின்னுடுச்சா?ன்னு பார்த்தாரா?

4. ஹீரோவோட லவ்வரை வில்லன் கொலை பண்ணி புதைச்சுடறார்.. 9 நாட்களுக்குப்பின் ஹீரோ அண்ட் கோ அந்த டெட் பாடியை  குழி தோண்டி எடுக்கறாங்க.. அப்போதான் புதைச்ச மாதிரி ஃபிரஷ்ஷா இருக்கே? அது எப்படி? ( குமட்டும் வாசம் அல்லது அழுகிய உடல் தானே காட்டனும்?)

5.  க்ளைமாக்ஸ் வரை நீட்டா போன  கதைல திடீர்னு சம்பந்தமே இல்லாம ஆவியை எதுக்கு கொண்டு வந்தீங்க?

6. கொலையாளியா ஊர்ப்பெரிய மனுஷரே இருக்கறப்ப அவரே அந்த டீம்க்கு ஏன் எல்லா வசதியும் பண்ணித்தரனும்?அவர் மேல சந்தேகம் வரக்கூடாதுன்னா? தேவையே இல்லையே..


http://600024.com/gallery/cache/movies/2012/othakuthirai/othakuthirai_35_w800_h537_600024.jpg


 எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 40

 எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே

 சி.பி  கமெண்ட் - த்ரில்லர் ரசிகர்கள் பார்க்கலாம், பெண்களும்

 ஈரோடு தேவி அபிராமியில் படம் பார்த்தேன்

குங்குமம் பத்திரிக்கையை கிண்டல் அடித்ததன் மூலம் சன் டி வி யை பகைத்துக்கொண்ட சாரு நிவேதிதா

 புலம்பல் திலகம் சாரு நிவேதிதா அவர்கள் எக்செல் நாவலில் எழுத்தாளர்களுக்கு மரியாதை கிடைக்கவில்லை என 30 பக்கங்கள் புலம்பியது அனைவருக்கும் ( அதாவது அந்த நாவலை வாசித்த  3800 பேருக்கும்) தெரிந்ததே.. அந்த நாவல் வெளியான சமயத்தில் குங்குமம் இதழுக்கு ஒரு பேட்டி கொடுத்திருந்தார்.. அந்த பேட்டிக்கு சன்மானமாக ரூ 500 அனுப்பி இருக்காங்க.. இப்போ அவர் வெப்சைட்ல வாசகர்கள் கலந்துரையாடலில் நைஸா அதை சொல்லி காட்டி இருக்கார்.. 


ஜோஸஃப் சுகானந்த்: நான் சில நாட்களாக தலயிடம் கேட்க வேண்டும் என்று நினைக்கிற ஒரு கேள்வி.   தல, நீங்கள் அன்று முதல் இன்று வரை தமிழகத்தில் எழுத்தாளர்களுக்கு சரியான மரியாதை கொடுக்கப்படவில்லை என்று கூறி வருகிறீர்கள். ஒரு விதத்தில் அது சரியானதாகத் தோன்றினாலும் இன்னொரு வகையில் பார்த்தால் இன்று இவ்விஷயத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று படுகிறது. இன்று உங்களுக்கு இரண்டாயிரம் பேர் கொண்ட வாசகர் வட்டம் உள்ளது. உங்களையும் உங்கள் எழுத்தையும் கொண்டாடுகிறோம். உங்கள் இணையதளத்தை லட்சக்கணக்கானவர்கள் படிக்கிறார்கள், கருத்து சொல்கிறார்கள். நீங்கள் மீடியாவில் அடிக்கடி தென்படுகிறீர்கள். உங்களை எல்லாருக்கும் தெரிந்திருக்கிறது. நீங்கள் உட்பட அனைத்து நல்ல எழுத்தாளர்களுக்கும் ஒரு fan following உருவாகியுள்ளது. இன்னும் ‘தமிழத்தில் எழுத்தாளனை யாரும் பெரிதாய் மதிபதில்லை’ என்ற கருத்தில் உறுதியாய் உள்ளீர்களா? இல்லை அதில் ஏதேனும் மாற்றம் உள்ளதா?   நீங்கள் பதில் கூறினால் மகிழ்வேன்.

 சி.பி - யாரும் குழம்ப வேணாம்.. ஜோசப் தலன்னு சொல்றது அண்ணன் சாருவைத்தான்..தறுதல என்பதை சுருக்கி தலன்னு கூப்பிடறார் போல.. ஒரிஜினல் தல அஜித் மன்னிக்க

ராஜ ராஜேந்திரன்: தமிழ்நாட்டில் மக்கள் தொகை ஏழு கோடி, அதில் தமிழர் மட்டுமே ஐந்து கோடி என்று வைப்போம், அதில் படிக்கத் தெரிந்தவர்கள் மூன்று கோடி, அதில் சாரு போன்ற இலக்கியவாதிகளை படிக்குமளவு தமிழ் கற்றவர்கள் குறைந்தது 20 சதவிகிதம் என்று வைத்தாலும் அறுபது லட்சம் பேர் வருகிறார்கள். இதை குடும்பத்திற்கு பத்து பேர் என்று பிரிப்போம், அப்படி பார்த்தால் ஆறுலட்சம் குடும்பம் வரும், இதில் புத்தகம் வாங்கி படிக்குமளவு சக்தி கொண்ட குடும்பங்கள் ஐம்பது சதவிகிதம் எனில் அது மூன்று லட்சம் குடும்பம் ! ஆக, ஒரு தரமான படைப்பு வந்தவுடன் மூன்று லட்சம் பிரதிகளாவது ஒரே வருடத்தில் விற்கவேண்டும். சரி, சாருவுடையது பின்நவீனத்துவமானது என்றால் ஒரு லட்சமாவது விற்க வேண்டும், எக்சைல் இதுவரை ஐந்தாயிரம் விற்றிருக்கும் (?) இப்போது சொல்லுங்கள், சாரு கோபப்பட வேண்டுமா, தேவையில்லையா ? (நான் சொன்னது தோராயக் கணக்கு, மிகவும் குறைவான சதவிகித கணக்கையே சொல்லியிருக்கிறேன், இதில் வெளிநாட்டுத் தமிழர்களை வேறு சேர்க்கவில்லை)

சி.பி - ஒரு விஷயம் ஓப்பனா சொல்றேன்.. அது எல்லா எழுத்தாளர்களுக்கும் பொருந்தும்.. இங்கே லெண்டிங்க் லைப்ரரி இருக்கு.. ஒரே புக்கை பலர் பகிர்ந்துக்கற சிஸ்டம் இருக்கு.. சித்தோடு கே சதீஷ்குமார் நல்ல நேரம் பிளாக் ஓனர்க்கு கிஃப்ட்டா அந்த புக் வந்தது.. அவர் சித்தோட்ல இருக்கற 12 பேருக்கு அதை பகிர்ந்தார்.. நான் வாங்கி என் நண்பர்கள் 34 பேருக்கு ஷேர் பண்ணேன்.. இந்த மாதிரி படிக்கப்படறதுதான் அதிகம். ரூ 250 புக்குக்காக செலவு பண்ண தமிழன் யோசிப்பான்.. 


சாரு நிவேதிதாவின் பதில்:  ஜோஸஃப். என்னிடம் ஒரு பழக்கம் உள்ளது.  யாராவது என்னிடம் கேள்வி கேட்டால் பதில் சொல்ல ஆரம்பித்து விடுவேன்.  அப்படித்தான் உங்கள் கேள்வியையும் சாரு ஆன்லைனில் போட்டு நாலு பக்கம் பதில் எழுத ஆரம்பித்தேன்.  உடனே நான் எழுதிக் கொண்டிருக்கும் – இன்னும் ஒரு வாரத்தில் முடிக்கப்பட வேண்டிய ஆங்கில குறுநாவல் – gothic – ஞாபகம் வந்து உடனே பதில் சொல்வதை நிறுத்தி விட்டேன்.

சி.பி - அண்ணன் எழுதுன தமிழ் நாவல்ல 17 பக்கங்களுக்கு ஆங்கில கலப்பு இருந்தது.. அப்போ ஆங்கில நாவல்ல தமிழ் கலப்பு இருக்குமா? டவுட்டு..  டைட்டில் தான் சரி இல்லை GOMADHI THICK ,GOPAALAA THIN அப்படி ஏதாவது வெச்சிருக்கலாம்


 யாராவது ஒரு குப்பை படம் எடுத்தால் அந்தப் படத்தை 2000 பேரா பார்க்கிறார்கள்?  அந்தப் படத்தை எடுத்த  இயக்குனர் தெருமுனையில் வந்து நின்று கொண்டு துண்டா விரிக்கிறார்?  அடுத்த படத்துக்கு லொகேஷன் பார்க்க அமெரிக்கா பறந்து விடுகிறார் இல்லையா?  இங்கே நான் சிங்கப்பூர் சென்று வரவே ஐந்து வருடம் யோசித்துக் கொண்டிருக்கிறேனே, பணம் இல்லாமல்?


சி.பி - அண்ணே, சிங்கப்பூர் போய்ட்டா மட்டும் அமர காவியமா எழுதப்போறீங்க? எழுதற குப்பையை லோக்கல்ல இருந்தே எழுதுங்கண்ணே.. லோக்கல் நாவல்க்கு லோக்கல் லொக்கேஷன் போதாதா? ஹி ஹி 


 இங்கே என் கொல்லைப்புறத்தில் இருக்கும் சிங்கப்பூருக்கே ஐந்து வருட யோசனை என்றால், எப்போது நான் சிலே, க்யூபா, ஃப்ரான்ஸ் எல்லாம் போய் வருவது?  ராஜ ராஜேந்திரன் சரியாகப் பிடித்திருக்கிறார்.   என் புத்தகம் 50,000 பிரதி விற்றால் தான் இதெல்லாம் சாத்தியமாகும்.  ஆனால் இன்னும் எக்ஸைல் விற்பனை 5000 ஐக் கூட தாண்டவில்லை.


சி.பி - அந்த புக் 3800 விற்றதே பெருசு.. அண்ணனுக்கு ஆசை ஜாஸ்தி.. தமிழ்நாட்டு லைப்ரரிக்கு எல்லாம் தானம் பண்ணிடுங்க. சும்மா வீட்ல ஸ்டாக் வெச்சு வாட் யூஸ்?



மேலும் ஜோஸஃப், நீங்கள் ரொம்ப வெகுளியாக இப்படி ஒரு கேள்வியைக் கேட்டாலும் உங்கள் மீது நான் கோபம் கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.  ஏனென்றால், உங்கள் கேள்விக்குப் பதிலையே எக்ஸைல் நாவலில் 30 பக்கம் எழுதி விட்டேன்.  அந்த நாவலைப் படித்தீர்களா இல்லையா?

சி.பி - நாங்க பிளாக் படிக்காமயே ஆஹா அபாரம், சூப்பர் தல பின்னீட்டிங்க அப்டினு கமெண்ட் போடற பரம்பரைல வந்தவங்க.. அந்த நாவலை ஒரு வரி விடாம ஃபுல்லா படிச்சவங்க  யாருமே இல்லையாம் , நான் அடிச்சு சொல்றேன் ஹி ஹி 

ஒரு மாணவன் 4 வருடம் எஞ்ஜினிரியரிங் முடித்து விட்டு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குகிறான்.  நான் 40 வருடமாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.  நேற்று ஒரு பத்திரிகையிலிருந்து நான் எழுதிய கட்டுரைக்கு சன்மானமாக 500 ரூ செக் வந்தது.  இப்போது இதை இங்கே எழுதி விட்டேனா?  இனிமேல், 50 வருடத்துக்கு என்னை அந்தப் பத்திரிகையிலிருந்து boycott செய்து விடுவார்கள்.


சி.பி -குங்குமம் புக்ல ஒரு பக்கக்கதைக்கு ரூ 200 சன்மானம் தர்றாங்க.. உங்க பேட்டி 3 பக்கம் வந்தது.. அதுல படங்கள் மட்டும் ஒன்றரை பக்கம் இருக்கும்.. அதனால பேட்டி குங்குமம் கணக்குக்கு ஒன்றரை பக்கம் தான்.. அவங்க ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்படி உங்களூக்கு ரூ 300 தான் தந்திருக்கனும்.. ஏதோ கவனக்குறைவால அல்லது ரவுண்ட் ஃபிகரா தரலாம்னு ரூ 500 தந்துட்டாங்க. இப்படி எல்லாம் குறை சொன்னா நெக்ஸ்ட் டைம் தர்ற சன்மானத்துல அந்த எக்ஸ்ட்ரா ரூ 200 ம் கட் பண்ணி அதாவது கழிச்சுத்தான் தருவாங்க.. பி கேர் ப்= ஃபுல் ஹி ஹி 


 எப்படி எனக்கு வேட்டு வைக்கிறீர்கள் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.  சில விஷயங்களை நான் வெளிப்படையாகப் பேசினாலே எனக்கு ஆபத்து.  நீங்கள் ஒரு ஆபத்தான கேள்வியைக் கேட்டு விட்டீர்கள்.   500 ரூ. செக்கை வைத்துக் கொண்டு நான் பிச்சைதான் எடுக்க வேண்டும் ஜோஸஃப்.  அதைத்தான் நான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன்.  பல உயிர் நண்பர்களும் என்னை இண்டர்நெட் பிச்சைக்காரன் என்று ஆதங்கத்துடன் எழுதி வருகிறார்கள்.

சி.பி - என்னப்பா இது?ஒரு இண்டர்நேசனல் எழுத்தாளரைப்போய் இப்படி சொல்லீட்டீங்களே. 


  50000 பிரதிகள் எல்லாம் விற்க வேண்டாம்; 40 புத்தகங்கள் எழுதி இருக்கிறேன்.  ஒவ்வொன்றும் 5000 விற்றால் போதுமே?  விற்பதில்லையே?  கட்டுரைகளாவது போகட்டும், நாவலாவது 50,000 பிரதிகள் விற்றால்தான் ஒரு எழுத்தாளன் கௌரவத்தோடு வாழ முடியும்.  ஆனால் உலகில் எல்லா நாடுகளிலும் நாவல்கள் 50,000 பிரதிகள் விற்பதில்லை.  அப்படியும் எழுத்தாளர்கள் கௌரவமாக வாழ்வது எப்படி என்றால், intelligentia-வின் ஆதரவு.


சி.பி -  எழுத்தாளர்கள் கௌரவமாக வாழ்வது எப்படி என்றால் அவங்க எழுத்து கண்ணீயமா, பெண்ணியமா இருக்கனும்னே.. கண்ட படி கெட்ட வார்த்தைல பலரை திட்டக்கூடாது..


 உதாரணமாக, எழுத்தாளர்களை பல்கலைக்கழகங்கள் creative writing துறையில் பேராசிரியர்களாக நியமித்து ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் கொடுக்கிறது.  இதுதான் உலகம் பூராவும் இருக்கும் நடைமுறை.  ஆனால் இங்கே பல்கலைக்கழகத்தில் போய் விரிவுரை ஆற்றினால் ஒரு பூங்கொத்தைக் கொடுத்து அனுப்புகிறார்கள்.  இண்டெலிஜென்ஷியா என்றால் பத்திரிகைகளும்தான்.  தமிழில் கட்டுரைக்கு சன்மானம் 500 ரூ.  இல்லாவிட்டால் அதிகபட்சம் 1000 ரூ.

சி.பி - அதுவும் ஜனரஞ்சகப்பத்திரிக்கைகளீல் தான். காலச்சுவடு, கணையாளி, அமிர்தா, உயிர் எழுத்து போன்ற இலக்கியப்பத்திரிக்கைகள்னா சன்மானம், காம்ப்ளிமெண்ட்ரி காப்பி கூட நோ தான் 




ஆனால் என்னுடைய எஞ்ஜினியர் நண்பர் ஒருநாள் என்னோடு பீட்ஸா சாப்பிட்டு விட்டு 500 ரூ. பில்லை வாங்கி பாக்கெட்டில் வைத்துக் கொண்டார்.


சி.பி - பில்லை வாங்கி பாக்கெட்ல வெச்சுட்டு நைஸா போய்ட்டாரா? பில் பே பண்ணலையா>?

 கம்பெனி reimburse செய்து விடுமாம்.  இதேபோல் மருத்துவ செலவுக்கும், பெட்ரோல் செலவுக்கும் கம்பெனியே கொடுத்து விடும்.  அவ்வளவு ஏன், காண்டம் செலவுக்குக் கூட கம்பெனிதான் பணம் கொடுக்கிறது.

 சி.பி - அவ்ளவ் பணக்கஷ்டத்துலயும் அண்ணனோட இஷ்ட தெய்வம் பற்றித்தான் பேசறாரு.. அண்ணனை கண்டம் துண்டமா வெட்டுனாக்கூட காண்டம்க்கு எதும் ஆகாம பார்த்துக்குவார் போல. அண்ணன் வாழ்வில் சுந்தர காண்டம் மலர வாழ்த்துகள்


 சம்பளப் பணம் தனி.  அதை இதில் சேர்க்கக் கூடாது.  ஆனால் எழுத்தாளனின் சம்பளம் 500 ரூ.  உணவு கிடைக்காத தெருநாய்கள் காய்ந்து போன மனித மலத்தைச் சாப்பிடுவதை என் கண் கொண்டு பார்த்திருக்கிறேன்.  தமிழ் எழுத்தாளனின் நிலைக்கும் அந்த நாயின் நிலைக்கும் அதிக வித்தியாசம் இல்லை.  இப்படி சீரழியா விட்டால் சினிமாக்காரர்களுக்கு கால் கழுவி விட்டு லட்சம் லட்சமாக சம்பாதிக்கலாம்.  நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை.  60 வயது வரை விட்டுக் கொடுக்காத சுய கௌரவத்தை இனிமேலும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.

சி.பி - ஆமாண்ணே.. உங்க சுய கவுரவத்தை யுத்தம் செய் படத்துல மிஸ்கின் கூட வெச்சிருந்த ஃபிரண்ட்ஷிப்ல பார்த்தோம்..  ஒரே ஒரு சீன் வெறும் கையை காட்டிட்டு போனதுக்கே சம்பளம் ஒரு லட்சம் தந்தாங்கன்னு ஜிங்க் ஜக் அடிச்சீங்களே.. உங்க கிட்ட இருக்கற எல்லா திறமையையும் காட்டி பல லட்சம் சம்பாதிக்கலாமெ சினி ஃபீல்டுல ஏன் மிஸ் பண்றீங்க? 

மேற்கண்ட காரணங்களினால்தான், நான் தமிழில் எழுதுவதை நிறுத்தி விட்டேன் என்று ஒரு ஆங்கிலப் பேட்டியில் குறிப்பிட்டேன்.  இதைத் தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை.  என்னுடைய 2000 வாசகர்களை அப்படிச் சொல்லவில்லை.  அந்த 2000 பேரும் என் குடும்ப உறுப்பினர்களைப் போல.  நீங்களும் அதில் ஒருவர் என்பதையும் நான் அறிவேன்.  இந்த 2000 பேரில் 20 பேர் தான் என்னை போஷிக்கிறார்கள்.  சட்டை வாங்கிக் கொடுக்கிறார்கள்; மோதிரம் போடுகிறார்கள்; ரெமி மார்ட்டின் வாங்கிக் கொடுக்கிறார்கள்.

சி.பி - அட.. இப்படி ஒரு ரூட் இருக்கா? ஓ சில கேட்க கூச்சமா இருக்காதா? அது சரி. நாம தான் எப்பவும் சரக்கு அடிச்சுட்டு மப்புலயோ கிடக்கறமே.. எதுக்கு நமக்கு கூச்ச நாச்சம் எல்லாம்?




 அப்படிப்பட்ட நண்பர் ஒருவர் நேற்று என்னிடம் “உங்களுக்குக் க்யூபாவுக்கு ஒரு டிக்கட் வாங்கிக் கொடுக்கிறேன்; போய் வாருங்கள்” என்று சொல்லி இருக்கிறார்.  கச்சி ஏகாம்பரன் என் குரலை செவி மடுத்து விட்டான் என்று நினைத்துக் கொண்டேன்.

சி.பி - கியூபாக்கு டிக்கெட் எடுத்தவர் கூட ஒரு டிக்கெட்டையும் அனுப்பி இருந்தா அண்ணன் ஒரு வேளை போய் இருப்பார்.. 

கலைஞர் , ஜெ இருவரும் கூட்டணி அமைத்தால்? ஹி ஹி ஹி ( ஜோக்ஸ்)

தமிழகமெங்கும் வெற்றி நடை போடுகிறது http://pic.twitter.com/NEP9N3IA
1.ஆல் ஆஃப் த லேடி ட்வீட்டர்ஸ், யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்! ஒவ்வொரு டைமும் டி எம் அனுப்பிட்டு டைம் லைன்ல டி எம்னு போட முடியாது, அடிக்கடி யூ செக்


--------------------------


2. ஜட்ஜ் - நீ ஒழுக்கம் கெட்டவன்,உனக்கு 6 வருஷம் தண்டனை..


 கைதி - அட போங்கய்யா..ஒழுங்கு நடவடிக்கையை ரத்து பண்ற சீஸன் இது...


----------------------------------

3. கேப்டன் - மன்னிப்பு , தமிழ்ல எனக்குப்பிடிக்காத ஒரே வார்த்தை.


 ஜெ - சால்ஜாப்பு,எனக்குப்பிடிச்ச ஒரே நன்னடத்தை

--------------------------------

4. மேடம், நீங்களும் சசியும் சேர்ந்துட்டிங்களே, நம்பவே முடியலையே? 

ஜெ- அவசியம் ஏற்பட்டா கலைஞர் கூட கூட்டணி வைக்கவும் தயங்க மாட்டேன்


-------------------------------------

5.நான் உனக்காக உன் ஆள்ட்ட பேசறேன்.நீ எனக்காக என் ஆள்ட்ட பேசு.ஒத்து வர்லைன்னா நாம 2 பேரும் கடலை ஸ்டார்ட் பண்ணலாம் :)


----------------------------------------



6. பன்றிக்காய்ச்சல் பரவிட்டு இருக்காம். உஷாரா இருக்கனுமாம். அதுங்களுக்கு காய்ச்சல்னா நாம ஏன் உஷாரா இருக்கனும்?


------------------------------------

7. கொலை செய்யப்பட்ட எம் எல் ஏ முத்துக்குமரன் அதிக கேள்விகள் கேட்டவராம். இங்கே கேள்வியா கேட்டு கொலை பண்ணுவோர் கவனத்துக்கு .....


------------------------------------------

8. பிருந்தா - உன் தனித்துவத்தை இழக்காதே, ஏனென்றால் உன்னை விட இன்னொருவரால் உன் வீட்டு சமையல் பாத்திரத்தை சிறப்பாக துலக்க முடியாது.# எ கீ

----------------------------------

9. பொண்ணோட ஃபோட்டோ கேட்டா அவங்க ட்விட்டர் ஐ டி தர்றீங்க?


 அதுல இருக்கற புரொஃபைல்ல பொண்ணோட சரித்திரமே இருக்கு, ஃபோட்டோ, கடலை போட்ட விபரம்

-----------------------------

10. நான் தமிழ்ல மட்டும் தான் ட்வீட் போடுவேன்.. ஏன்னா 1. நான் ஒரு பச்சைத்தமிழன் 2. எனக்கு வேற எந்த மொழியும் தெரியாது # விதி விலக்கு -கனிமொழி


------------------------





11.ஐஸ்வர்யா தனுஷ், செல்வராகவன்,தனுஷ்  மூவரும் மன நல மருத்துவமனையில் அனுமதி!இனி சைக்கோ கேரக்டர் பண்ண மாட்டோம் என கதறல்!


-----------------------------------------

12.  குழந்தையை பார்க்க வருபவர்கள் குழந்தையை மட்டும் பார்ப்பதில்லை, நர்ஸ், லேடி டாக்டர் எல்லாரும் நல்ல ஃபிகரா? என்றே பார்க்கிறார்கள்.# எகீ


---------------------------------

13. உன் காதலை எண்ணிப்பார்.. ஒருமையில் இருந்தால் அருமை.. பன்மையில் இருந்தால் நீ எருமை

----------------------------

14. கண்ணம்மாவும், தாளம் எஃப் எம் மும் விடிகாலைல 4 மணீல இருந்து இங்கிலீஷ்ல என்னமோ பேசிக்கறாங்க, 1ம் புரியலை# வீட்டா ட்யூஷன் போகனும் போல :)


-----------------------------------

15. கேர்ள்ஸ் மனசு பிளேட்ல கழுவுன வாட்டர் மாதிரி, அங்கே இங்கே அலை பாயும், பாய்ஸ் ,மனசு சீல் வெச்ச குவாட்டர் பாட்டில்ல இருக்கற சரக்கு போல ,நிலையா நிக்கும்


---------------------------


Thangasivam பகிர்ந்துள்ளார்.

16. ராமதாஸை நெருங்கும் சி.பி.ஐ.? # ம்க்கும் அவர் பெரிய ஹீரோயின், ரேப் பண்ண வில்லன் நெருங்கறரு போய்யாங்க்


------------------------------

17. கே.என்.நேரு குடும்பத்துக்கு பாதுகாப்பு: டிஜிபிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் # போங்கண்ணே, ஜவஹர்லால் நேரு குடும்பத்தையே பாதுக்காக்க முடியல

--------------------------

18. என்னை கொல்ல முயற்சி..` கமிஷனிரிடம் நடிகை அல்போன்சா புகார்# நீங்க கொலை செஞ்ச உங்க புருஷன் தான் ஆவியா வந்திருப்பார் மேடம்


------------------------------

19.  குரு -பசலை நோய் என்பது தலைவன், தலைவிக்கு தானே.தோழிகளுக்குமா வரும்?

சிஷ்யன் - சாதா தோழிகள்னா வராது, பல வருஷம் பழகினா வரும், ஹி ஹி

--------------------------------

20. எப்போதும் பொதுவுடைமை மற்றும் கம்யூனிசம் பேசும் பிரபல ட்வீட்டர் ரைட்டர்  சி எஸ் கே நம்ம ஃபிகர் என சொல்லாமல் என் ஃபிகர் என பிரித்துப்பேசுகிறாரே. அது ஏன்?

--------------------------------------

thil Anand R மற்றும் 43 பிறர் பேர்களுடன்





Monday, April 02, 2012

நல்ல தங்காள் நயன் தாரா நற நற பேட்டி - காமெடி கும்மி





Nayanthara
பிரபுதேவாவுடனான காதல் முறிந்ததற்கான காரணத்தை முதல் முறையாக வாய் திறந்து கூறியுள்ளார் நயன் தாரா ஒரு பேட்டியில்.( அநேகமா தினத்தந்தின்னு நினைக்கறேன்)


சி.பி - வாயை திறக்காம எப்படிங்க்ணே சொல்ல முடியும்? ஹி ஹி 

பிரவுதேவாவைப் பிரிவேன் என்று தான் ஒருபோதும் நினைத்ததே இல்லை. நான் அவருக்கு உண்மையாக, விசுவாசமாகத்தான் இருந்தேன், ஆனால் அவர் இல்லை

 சி.பி - என்னது? நீங்க ரொம்ப வாசமா இருந்தீங்களா? 24 மணீ நேரமும் செண்ட் போட்டா குப்பன் கூட வாசமாத்தான் இருப்பான்.. என்னது..? விசுவாசமா? போங்க.. கோபம் வர்ற மாதிரி காமெடி பண்ணாதீங்கன்னு எத்தனை டைம் சொல்றது?





இந்தப் பேட்டியில் பிரபு தேவாவுடான காதல் முறிய காரணம் என்ன என்பதை அவர் சொல்லியுள்ளார். இதுகுறித்து நயனதாரா கூறுகையில்,



சி.பி - அதென்ன வண்டிச்சக்கரமா? அச்சா? முறிஞ்சு போக.. 

http://img.bollywoodsargam.com/albumsbolly/Nayanthara/Nayanthara_BollywoodSargam_hot_422476.jpg

காதலுக்காக எதையும் செய்யத் தயாராக இருந்தேன். பிரபுதேவாவுக்காக சிலவற்றை விட்டுக் கொடுத்தேன். இருப்பினும் திருமணம் வரை சென்ற எங்கள் காதல் இறுதியில் முறிந்தவிட்டது. எங்கள் விஷயத்தில் மட்டுமல்ல எத்தைனையோ பேரின் காதல் அல்லது திருமணம் முறிவது நடக்கத் தான் செய்கிறது.


சி.பி - சரி விடுங்க.. நமக்கு இது புதுசா என்ன? வருஷத்துக்கு வருஷம் வித்தியாசம் அது தான் நயன் தாரா

பொதுவாக காதலிலும் சரி, திருமணத்திலும் சரி ஒருவரையொருவர் முழுமையாக புரிந்துகொள்ளாமல் இருப்பது இருக்கத் தான் செய்யும். அதனால் பிரச்சனை ஏற்படத் தான் செய்யும். இது ஒரு அளவோடு நிற்க வேண்டும். எல்லை மீறும் போது காதல் முறிவு, திருமண முறிவு ஏற்படுகின்றது. என் விஷயத்திலும் அப்படித் தான் நடந்திருக்கிறது.


சி.பி - அதாவது மேரேஜ்க்கு முன்னாலயே 2 பேரும் ஹோட்டல்ல தங்கி அடிக்கடி முழுசா புரிஞ்சுக்கிட்டீங்க.. உங்களூக்கு எப்படியோ , அண்னனுக்கு அது போர் அடிச்சுடுச்சு.

சில விஷயங்களை என்னால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை.


சி.பி - ஐயா படத்துல கும்முன்னு பார்த்துட்டு பாஸ் எ  பாஸ்கரன் படத்துல மொக்கையா பார்க்கறப்ப லாங்க் ஷாட்ல இருக்கற எங்களாலயே சகிச்சுக்க முடிய;ல.. க்ளோசப்ல  பார்த்த அண்ணனால எப்படி சகிச்சுக்க முடியும்?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9I8-hroWjSJv2mpwpNuJLavYZzQQzTyUA8D_4Nwn54RlwPB2HbVPLlNw0xAO4wCcj6PwVsNBbD6PCijvVfBQaCfyTk9fWsCPw518baCHte-DLdYOjj73uglLaJ5r4x76VaqPp6j4npsgf/s1600/aac.jpg


 பிரச்சனைகளை சமாளிக்க முடியவில்லை அல்லது தெரியவில்லை என்று கூறலாம். உலகில் நிலையானது என்று எதுவும் இல்லை. மக்கள் மாறுகின்றனர், சூழ்நிலைகள் மாறுகின்றன, செயல்பாடுகள் மாறுகின்றன. அது போன்ற ஒரு மாற்றம் தான் என்னை பிரியச் செய்தது.


சி.பி - மாற்றம் ஒன்று தான் உலகில் மாறாதது.. ஆனா அடிக்கடி ஆள் மாத்தக்கூடாது/

நான் பிரிந்ததற்கு பல காரணங்கள் இருக்கலாம். அது என் சொந்த விஷயம். அது பற்றி இனியும் பேச விரும்பவில்லை. என் சொந்த விஷயத்தை உலகிற்கு வெளிச்சம்போட்டுக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.

சி.பி - ம்க்கும்.. எதை எல்லாம் காட்டக்கூடாதோ அதை எல்லாம் வெளிச்சம் போட்டு ஜூம் பண்ணி காட்டியாச்சு.. சொந்தக்காரணம் என்ன? அண்ணன் தன் முதல் மனைவியை உங்க பேச்சை மீறி பார்க்கப்போயிருக்கார்.. அது உங்களுக்குப்பொறுக்கலை.. அதானே?

என்னைப் பற்றி பத்திரிக்கைகள் ஏதேதோ எழுதி வதந்திகளைப் பரப்பின. ஆனால் நான் எதற்கும் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தேன். தற்போது நிலைமை மாறிவிட்டது. காதல் முறிந்துவிட்டது. ஒரு உறவு சரியில்லை என்றால், அப்போது எல்லாமே மாறுவது இயற்கை தானே?

உறவு முறிவுக்கு 100 காரணங்கள் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். நான் பிரபுதேவாவுடன் பழகியபோது 100 சதவீதம் உண்மையாக இருந்தேன். ஆனால் அதற்கு மதிப்பில்லை என்கிற போது உறவை முறி்ததுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

பிரபுதேவாவுடனான காதல் இப்படி பாதியிலேயே முறிந்துவிடும் என்று ஒருபோதும் நினைத்ததே இல்லை. ஆனால் வாழ்க்கையில் எது வேண்டுமானாலும் நடக்கும் என்பதை இது உறுதிபடுத்தியுள்ளது. காதலோ, திருமணமோ இருவரும் பரஸ்பரம் புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் அது வெற்றிகரமாகவும், மகிழ்ச்சிகரமாகவும் இருக்கும்


சி.பி - மேடம்.. போனதெல்லாம் போகட்டும்.. இனிமே யாரையாவது லவ் பண்றப்ப பச்சை குத்திக்காதீங்க.. ரொம்ப சிரமம்.. எத்தனை தடவை தான் அதை அழிச்சு அழிச்சு மாத்திட்டு இருப்பீங்க? ஹி ஹி 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhSTRtciVxGY1SC-rn2MVpuNZ7Wqt7PPuSOnFpIFZGFon-zbTQw6YxeSEEcyQXJKyhfcHIbZVUq18aNn2UeBkzdJrtA2vbkXaR3vE0Z9g9agWReF3uoNpZHhcQQv4LFXbj5q5OUmTPmILxA/s1600/nayanthara29.jpg


டிஸ்கி -1   கடைசி ஸ்டில் நயன் தாராவின் மறுபக்கம் ஹி ஹி 


டிஸ்கி 2 - டைட்டிலுக்கான விளக்கம்.. இப்போ எல்லாம் தங்கத்தின் விலை தாறுமாறா ஏறுது.. அந்த மாதிரிதான் நயன் தாராவின் மார்க்கெட்டும்.. சொம்பு இவ்வளவு அடி வாங்கியும் கூட ஒரு படத்துக்கு ஒன்னே கால் கோடி சம்பளம் தர பல லூசுங்க ரெடியா இருக்காங்க்ளாம்.. அதுதான் நல்ல தங்காள் பட்டம்.. மற்றபடி மேடம் யார் கூடவும் ரெகுலரா தங்க மாட்டாங்க , ஆனா நல்லவங்க அப்டிங்கற அர்த்தத்துல நல்ல தங்காள்னு நினைக்கத்தேவை  இல்லை ஹி ஹி ( தவளை தவளை)